Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரோக்கியோவை கழுவிச்சென்ற பெரும் சுனாமி இன்று அதிகாலை அனர்த்தம்

Featured Replies

ஜப்பான் - டோக்கியோ நகரில் ஏற்பட்ட 8.8 ரிச்டர் அளவான நிலநடுக்கம் காரணமாக அங்கு சுனாமி ஏற்பட்டுள்ளதாக ஜப்பானிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

ஜப்பானிய தொலைக்காட்சி ஒன்றின் தகவலின் படி ஏற்பட்ட சுனாமியினால் கட்டடங்கள் மற்றும் வாகனங்கள் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆயிரக்கணக்கான கார்கள் கடல் நீரில் அடித்து செல்லப்பட்டதனை சற்றலைற் படம் காட்டியதாக கூறப்படுகின்றது.

ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் இலங்கை நேரப்படி இன்று காலை அதிகாலை 12.46 அளவில் 8.8 ரிச்டர் அளவில் நிலநடுக்கமொன்று பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சுமார் 6 மீற்றர் உயரத்திற்கு கடல் நீர் உட்புகுந்துள்ளதாக டோக்கிய நகரிலிருந்து 400 கிலோமீற்றருக்கு அப்பால் 20 மைல் கடலுக்கு அடியில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டுள்ளது.

லைவ் வீடியோ http://www.bbc.co.uk/news/world-asia-pacific-12709598

இந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமியினால் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் மற்றும் ஏனைய பொருட் சேதவிபரங்கள் குறித்து இதுவரை தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இதேவேளை, கடந்த இரு தினங்களாக ஜப்பானில் பாரிய நிலநடுக்கங்கள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.eelanatham.net/node/9681

Edited by உமை

  • Replies 90
  • Views 9.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளி அதிகாலையில் நல்ல செய்தி

அகாசி எத்தனை முறை எம்மை அழிக்க போய் வந்தானோ

அத்தனை முறை அழிவும் வரும். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ஜப்பானில் பயங்கர பூகம்பம்: அடுத்தடுத்து தாக்கிய சுனாமி அலைகள்-மாபெரும் சேதம்

வெள்ளிக்கிழமை, மார்ச் 11, 2011, 12:42[iST]

டோக்கியோ: ஜப்பான் நாட்டின் வட கிழக்குப் பகுதியை இன்று மிக பயங்கரமான பூகம்பம் தாக்கியது. இதையடுத்து உருவான சுனாமி பேரலைகள் ஊர்களுக்குள் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.

லட்சக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. வீடுகளும் லட்சக்கணக்கான வாகனங்களும் அடுத்தடுத்து வரும் சுனாமி அலைகளில் அடித்துச் செல்லப்பட்டுக் கொண்டுள்ளன.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவிலிருந்து 400 கி.மீ. தொலைவில் உள்ள ஒனஹாமா மாகாணத்தில் மியாகி என்ற இடத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலுக்கடியில் 30 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உருவானது.

ரிக்டர் அளவுகோளில் 8.9 புள்ளிகளாகப் பதிவான இந்த நிலநடுக்கத்தையடுத்து

மியாகி கடலோரப் பகுதி உள்பட ஜப்பானின் பெரும்பாலான கடரோலப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து பெரும்பாலான கடலோரப் பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்தனர். அடுத்த சில மணி நேரங்களில் 13 அடி உயரமுள்ள மிக பயங்கர அலைகள் கடலோரப் பகுதிகளில் புகுந்தன.

தப்பியோடக் கூட முடியாத அளவுக்கு கடலோரப் பகுதிகளை சுனாமி அலைகள் அடுத்தடுத்துத் தாக்கி ஊர்களுக்குள் புகுந்து வீடுகளை தரைமட்டமாக்கின. வீடுகளின் இடிபாடுகளையும் லட்சக்கணக்கான வாகனங்களையும் அந்த அலைகள் அடித்துக் கொண்டு சென்றன.

தொடர்ந்து பயங்கர அலைகள் அடுத்தடுத்து வந்து தாக்கிக் கொண்டுள்ளன. இதில் கடலிலிருந்து ஏராளமான கப்பல்கள், படகுகளும் நிலப் பகுதிகளுக்குள் அடித்து வரப்பட்டன.

முன்னதாக இந்த நிலநடுக்கத்தால் டோக்கியோ உள்பட ஜப்பானின் பெரும்பாலான பகுதிகளில் கட்டடங்கள் பயங்கரமாகக் குலுங்கின. இதையடுத்து கடலோரப் பகுதிகளை சுனாமி அலைகள் தாக்கி வருகின்றன.

மேலும் அலைகள் ஊருகளுக்குள் புகுந்தபோது பல எரிவாயு குழாய்கள் உடைந்து தீப் பிடித்துக் கொண்டு ஆங்காங்கே பயங்கர வெடி விபத்துகளும் ஏற்பட்டன. நிலநடுக்கம் ஏற்பட்ட இடத்திலிருந்து 400 கி.மீ. தூரத்திலும் கூட எரிவாயுக் குழாய்கள் சேதமடைந்து வெடி விபத்துகள் ஏற்பட்டு தீ விபத்துகளும் ஏற்பட்டுள்ளன.

இந்த நிலநடுக்கத்தையடுத்து ஜப்பானின் பெரும்பாலான விமான நிலையங்கள் மூடப்பட்டுவிட்டன. ஜப்பானை நோக்கிச் சென்ற அனைத்து கப்பல்களும் நடுக்கடலிலேயே நிறுத்தப்பட்டுவிட்டன. நாடு முழுவதும் ரயில்களும் நிறுத்தப்பட்டுவிட்டன.

சென்டெய் நகர் உள்பட வடக்கு ஜப்பானின் பெரும்பாலான கடலோரப் பகுதிகளும் நீரில் மூழ்கியுள்ளன. சென்டாய் நகர விமான நிலையம் அழிந்தே போய்விட்டது.

இந்த பூகம்பம் மற்றும் சுனாமி அலைகளால் இதுவரை 88 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. ஆனால் பெருமளவில் உயிரிழப்புகளும் இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.

நிவாரணப் பணியில் முப்படையினரும் இறக்கிவிடப்பட்டுள்ளனர். டோக்கியோவில் நாடாளுமன்றமும் பயங்கரமாக குலுங்கியதையடுத்து அங்கிருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

Read: In English

ஜப்பானின் 5 அணு மின் நிலையங்களும் மூடப்பட்டுவிட்டன. இதனால் நாடு முழுவதும் மின் தடையும் ஏற்பட்டுள்ளது.

ஜப்பானைத் தொடர்ந்து ரஷ்யா, பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா, ஹவாய் தீவுகள், தைவான், மெக்சிகோ, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்திய கடரோலப் பகுதிகளை சுனாமி தாக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary

thatstamil

  • கருத்துக்கள உறவுகள்

<_< இது யப்பானியர்களுக்குத் தேவைதான். மேற்குலகு சிங்களத்துக்கு உதவி செய்ய மறுத்தபோது அகாசி ஓடி ஓடி உதவினான். எங்களை அழிக்கச் சிங்களவனுக்கு பன உதவி செய்தவன். இன்றுவரை உதவுபவன்.

இவர்களுக்கு நடந்த அழிவைப்பற்றி நாம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை.

இந்தியா, பாக்கிஸ்த்தான், சீனா...இப்படி கொலையில் பங்கெடுத்தவர்களின் நீண்ட பட்டியலே இருக்கிறது. எல்லோருக்கும் நடக்கும்.

2004 இல் சுனாமி தமிழர்களைத் தாக்கியதற்கும் இவ்வாறு காரணங்கள் உண்டா ?

  • கருத்துக்கள உறவுகள்

காரணங்களைத்தேடுவதல்ல எமது வேலை

தடுத்திருக்கக்கூடிய அழிவை தடுக்கவிடாது செய்தவர்கள் எப்படி அழியினும் சந்தோசமே.

சா வருகுது சா வருகுது என்று இன்று ஜ்ப்பானில் கேட்கும் அழுகுரலும் அபாய சத்தமும் அவர்களாக தேடிக்கொண்டதே.

எம்மை அழித்ததை நாம் மறந்துவிட்டோம்

அல்லது

மன்னித்து அமைதியடைந்துவிட்டோம் என்று யாராவது நினைப்பீர்களாக இருந்தால்.......?

அதற்கான விடையும் எனது இந்த சந்தோசம்தான்.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

2004 இல் சுனாமி தமிழர்களைத் தாக்கியதற்கும் இவ்வாறு காரணங்கள் உண்டா ?

சிங்களவர்கள் சொன்னவங்கள் தமிழன் ஈழம் கேட்டபடியால் தான் என்று....சுனாமி தமிழனை தாக்கினது என்று

அது அகாசி பெரியவர்களே! ... ஜப்பானியர்கள் அல்ல . . .

எங்கட வீரதீரத்தை நிகங்குவில நிகங்கர்களுக்கு விளக்கியிருந்தால் . . . அகாசியை மண்கௌவ வைத்திருப்பார்களோ? :)

உலகின் மிகக்கூடிய வீடற்ற (S.D.F) பிச்சைகாரர், நிகங்கர்கள் வசிக்கும் நகரம் டோக்கியோ . . .! ஃ :(

. . .

இந்த மாதம் 19ம் நாள் நிலா நிலத்திற்கு மிக அருகிலவருகிறதாக புரட்சிகர தமிழ்தேசியன் சொன்னார், அதனால் தானோ . . . ! இங்கே பார்க

நிலம் நடுங்கினால், சூனமி வருகுது ... எண்டால் எப்படி எங்களை பாதுகாக்க வேண்டும் என்று எனககும் தெரியாது ... சனங்களுக்கும் தெரியாது . . .

140_35.gif

இப்பொழுதும் 4 றிஷ்டருக்கும் மேல் நிலம் அதிர்நது கொண்டே இருக்கிறது

டோக்கியோவை நேரடியாக் பார்கலாம் நிலம் அதிரும் சத்தத்தை கேட்கலாம் --> Tokyo in HD earthcam.com .... முடிந்தல் தமிழில் அணுதாபத்தையும் போட்டுவிடலாம்

Edited by ஜெகுமார்

Tsunami Alert for New Zealand, the Philippines, Indonesia, Papua New Guinea, Hawaii, and others. Waves expected over the next few hours, caused by 8.9 earthquake in Japan.

_51632882_japan_earthqk_pacific_ring.gif

நமது இனம் பட்ட துயருடன் ஒப்பிடுகையில் டோக்கியோவில் நடந்தது சாதாரணமாகத் தெரியலாம். பாதிக்கப் பட்டவர்களுக்கு எனது அனுதாபம்.

2004இல் சுனாமி இலங்கையை தாக்கி ஆயிரக்கணக்கான மீனவர்களைக் கொன்றது. கடலை நம்பி தொழில் புரிந்த அனைவரும் கொல்லப்பட்டோ காயமடைந்தோ கஷ்டப்பட்டார்கள். கரையோரத்தில் வாழ்ந்திருந்த அந்தக்காலத்தில் பாதிக்கப்பட்டது எதிரியானாலும் மட்டக்களப்பில், சிங்கள இராணுவத்தினர்க்கு புலிகள் பலவழிகளில் உதவி செய்டிருந்தனர்.

தமிழன் வாயால் வக்கிரமாகக் கதைத்தாலும் மனதால் இளகினவன்.

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண

நன்னயம் செய்து விடல்.

Edited by Small Point

உள்ளுக்குள் ஆத்திரம் இருந்தாலும், நாடு கடந்த அரசு போன்றன அகாசி உட்பட சம்பந்தப்பட அதிகாரிகளை தொடர்பு அனுதாபத்தையும் தார்மீக ஆதரவையும் தெரிவித்தாலே சாணக்கியம் ஆகும்.

to: mission@gv.mofa.go.jp, japan.mission@dn.mofa.go.jp

cc: infocul@embjapan.ca, policjpn@co.mofa.go.jp, econojpn@co.mofa.go.jp, jata@jata-net.or.jp

Subject: Earthquake and Tsunami

His Excellency Mr. Shinichi Kitajima

Ambassador Extraordinary and Plenipotentiary

Permanent Representative

The Permanent Mission of Japan to the United Nations

Chemin des Fins 3

1211 Geneva 19

His Excellency Mr Yukio Takasu

Ambassador Extraordinary and Plenipotentiary

Permanent Representative

The Permanent Mission of Japan to the United Nations

866 U.N. Plaza, 2nd Floor

New York, NY 10017

March 11, 2011.

Your Excellencies;

I would like to express my support and solidarity to the people of Japan and its government at this very difficult moment. As Tamils we too experienced Tsunami where we lost tens of thousands of lives. Japan was great help to us at those difficult times and we shall never forget.

I am sure your nation will overcome this difficult time.

Sincerely,

----------------------------

CC: Embassy in Sri Lanka, Canada

Edited by akootha

யப்பான்காரன் அழிவிலிருந்து நாளையே மீண்டுவிடுவான்.

நாங்கள் இப்படியே எல்லோரையும் திட்டிக்கொண்டு அழிந்துபோய்விடுவோம்.(அதுமாத்திரம் தானே தெரியும்)

)

Edited by arjun

  • கருத்துக்கள உறவுகள்

சுனாமியின் பேரழிவானது இயற்கை அனர்த்தம். இதை மனிதனால் தடுக்க முடியாது. பாதிக்கப் பட்ட இடங்களுக்கு, மக்களுக்கு நிவாரணம் செய்ய முடியும். இதற்கு யப்பானிடம் இல்லாத ஜென்னா!

எமக்கு ஏற்பட்ட அவலம் என்பது செயற்கையாக உலக வல்லரசுகளின் ஆசீர்வாதத்துடன் முள்ளிவாய்க்காலில் வட இந்தியன் இலங்கை ராணுவத்தை உபயோகித்து நிகழ்த்திய கொடூரம்! இதற்கு யாரும், எந்த நாடும் ஈடு செய்ய முடியாது.

என்னுடைய மனம் எமக்கு நடந்த அவலத்திலிருந்து இன்னும் மீளவில்லை. இதற்குப் பின் உலகில் எப்பேர்ப்பட்ட கொடூர சாவுகள் நடந்தாலும் இம்மியளவு கூட மனம் அதற்காக பரிதாபமோ, வருத்தமோ படுவதில்லை. :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

உயிர் இழப்பு என்பது வலிக்கும்........அதற்காக அதில் ச்ந்தோஷபடுவது ஆகாது. அடுத்த வருடம் உலக அழிவு என்றார்கள். இது தான் ஆரம்பமோ? உலகின் பொது சனம் ஒவ்வொரு பக்கத்தால் இயற்கையாலும் போராலும் அழிந்து கொண்டுதான் இருக்கிறார்கள். எல்லாம் இறைவன் செயல். பிறந்த அன்றே இறப்பு நிச்சயிக்க படுகிறது

Massive quake hits Japan, 200-300 bodies found

* Tsunami waves hit Hawaii after massive Japan quake

TOKYO, Japan - A powerful 8.9-magnitude earthquake struck northeastern Japan, Friday, killing over 60 people. The quake -- the strongest the country has ever experienced -- was followed by a powerful tsunami.

* Anyone looking for information about Canadians in Japan can call Deparment of Foreign Affairs (DFAIT) at 1-800-387-3124 or e-mail sos@international.gc.ca.

* Google also launched its Person Finder application following the earthquake in earthquake. It was tracking 3,700 records as of 7:15 a.m.

Japanese police said 200 to 300 bodies have been found in Sendai city, the closest major city to the epicenter.

A massive tsunami hit the northeast coast, with waves coming almost 100 kilometres inland, pushing boats, houses and cars, and sweeping away a ship carrying 100 people and a train.

http://cnn.com/video/?/video/world/2011/03/11/vo.japan.water.fields.nhk

Edited by தமிழினி

ஜப்பானின் அணு ஆயுத நிலையத்தையும் இந்த பூமி அதிர்ச்சி பாதித்துள்ளதாக சொல்லப்படுகின்றது. இதனால் அவசரகால நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

State of emergency, evacuation ordered near Japanese nuclear plant

http://www.theglobeandmail.com/news/world/asia-pacific/state-of-emergency-evacuation-ordered-near-japanese-nuclear-plant/article1938199/

ஜப்பானின் அணு சக்தி நிலையம் தீப்பற்றியது

பொதுவாக சுனாமி வரும்போது தீப்பிடிக்கும் காட்சிகளை காண முடிவதில்லை. ஆனால் இந்தச் சுனாமி பெரும் தீப்பிடிப்புக்களையும், கட்டிடங்களின் தீப்பிடிப்புக்களையும் ஏற்படுத்திச் செல்கிறது. இதில் முக்கியமானது ஜப்பானின் அணுசக்தி சேகரித்து வைக்கப்பட்டுள்ள ஒனாகாவா அணுசக்தி நிலையம் சற்றுமுன் தீப்பிடித்துள்ளது. இருந்தாலும் றேடியோ கதிர்களின் தாக்கம் இல்லை என்று ஜப்பானிய பிரதமர் தெரிவித்தார்.

http://www.alaikal.com/news/?p=60426

சுனாமி 100 பேருடன் ஒரு கப்பலையே காணவில்லை

ஜப்பானில் ஏற்பட்ட சுனாமிக்குள் சுமார் 100 பேருடன் வந்த கப்பல் சிக்குப்பட்டு காணாமல் போய்விட்டதாக அடுத்த செய்தி வந்துள்ளது.

http://www.alaikal.com/news/?p=60446

பசுபிக்கில் பத்து மீட்டர் உயரமான சுனாமி அலைகள்

பசுபிக் சமுத்திரத்தில் சுமார் பத்து மீட்டர் உயரமான சுனாமி அலைகள் பொங்கிக் கொண்டிருப்பதாக பிந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

http://www.alaikal.com/news/?p=60439

பல தீவுகளை விழுங்கப்போகிறது அவசர எச்சரிக்கை

இன்று அதிகாலை புறப்பட்ட சுனாமி பசுபிக் வட்டகையில் உள்ள பல சிறிய தீவுகளை இருந்த இடமே தெரியாமல் கழுவிச் செல்லப்போகிறதென சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் சற்று முன்னர் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

http://www.alaikal.com/news/?p=60453

Edited by akootha

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுனாமியின் பேரழிவானது இயற்கை அனர்த்தம். இதை மனிதனால் தடுக்க முடியாது. பாதிக்கப் பட்ட இடங்களுக்கு, மக்களுக்கு நிவாரணம் செய்ய முடியும். இதற்கு யப்பானிடம் இல்லாத ஜென்னா!

எமக்கு ஏற்பட்ட அவலம் என்பது செயற்கையாக உலக வல்லரசுகளின் ஆசீர்வாதத்துடன் முள்ளிவாய்க்காலில் வட இந்தியன் இலங்கை ராணுவத்தை உபயோகித்து நிகழ்த்திய கொடூரம்! இதற்கு யாரும், எந்த நாடும் ஈடு செய்ய முடியாது.

என்னுடைய மனம் எமக்கு நடந்த அவலத்திலிருந்து இன்னும் மீளவில்லை. இதற்குப் பின் உலகில் எப்பேர்ப்பட்ட கொடூர சாவுகள் நடந்தாலும் இம்மியளவு கூட மனம் அதற்காக பரிதாபமோ, வருத்தமோ படுவதில்லை. :unsure:

எனது கருத்தும் இதுதான்.

யப்பான்காரன் அழிவிலிருந்து நாளையே மீண்டுவிடுவான்.

நாங்கள் இப்படியே எல்லோரையும் திட்டிக்கொண்டு அழிந்துபோய்விடுவோம்.(அதுமாத்திரம் தானே தெரியும்)

உண்மை தான்... நீங்கள் எண்டால் யாரையும் திட்டுறதே இல்லையே.... ! <_<

சுனாமியின் பேரழிவானது இயற்கை அனர்த்தம். இதை மனிதனால் தடுக்க முடியாது. பாதிக்கப் பட்ட இடங்களுக்கு, மக்களுக்கு நிவாரணம் செய்ய முடியும். இதற்கு யப்பானிடம் இல்லாத ஜென்னா!

எமக்கு ஏற்பட்ட அவலம் என்பது செயற்கையாக உலக வல்லரசுகளின் ஆசீர்வாதத்துடன் முள்ளிவாய்க்காலில் வட இந்தியன் இலங்கை ராணுவத்தை உபயோகித்து நிகழ்த்திய கொடூரம்! இதற்கு யாரும், எந்த நாடும் ஈடு செய்ய முடியாது.

என்னுடைய மனம் எமக்கு நடந்த அவலத்திலிருந்து இன்னும் மீளவில்லை. இதற்குப் பின் உலகில் எப்பேர்ப்பட்ட கொடூர சாவுகள் நடந்தாலும் இம்மியளவு கூட மனம் அதற்காக பரிதாபமோ, வருத்தமோ படுவதில்லை. :unsure:

மேலோட்டமாக இப்படி சொன்னாலும், யதார்த்தத்தில் உங்களால் அப்படி இருக்க முடியாது. இதே சுனாமியில் ஒரு குழந்தை இழுத்துச் செல்லப்பட்டு சாகும் போது அதன் தாய் கதறுவதைக் காட்டினால் மனம் பதைபதைக்காமல் இருக்க முடியுமா? அல்லது இவ்வளவு இழப்புக்கும் பின் உங்கள் நெருங்கிய உறவொன்று இறக்கும் போது மனம் கலங்கத் தானே செய்தது?

அவ்வளவு ஏன்....பாடகி சுவர்ணலதாவின் மறைவுக்கு கூட இரங்கல் சொல்லி இருந்தீர்கள் இங்கு

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

குண்டுகளை தொடர்ந்து எறிந்து ஒவ்வொரு அங்கமாக மக்கள் இழந்து கொண்டிருக்க காப்பாற்றுங்கள், சண்டையை நிறுத்தச்சொல்லுங்கள் ஆகக்குறைந்தது குண்டுகளைப்பொழிவதையாவது நிறுத்தச்சொல்லுங்கள்,..... என்று இரத்தம் தோய்ந்த உடலுடன் அந்த மக்களும், அவர்களது படங்களைத்தாங்கிவாறு நாங்களும், கெஞ்சி, காலில் விழுந்து, மனிதன் என்ன எல்லாம் செய்யக்கூடாதோ.................. அவ்வளவையும் செய்து அழுது கொண்டிருக்க, உங்களுக்காக பேசுகின்றோம், உடனே நிறுத்துகின்றோம்,,,,,,,,, என்று எமக்கு படம் காட்டியபடி,

மூடிய கதவுகளுக்குள் விரைவாக முடி, என்ன உதவி வேண்டுமானாலும் நாம் தருகின்றோம் என்றவர்கள்

தடுக்கமுடியாத இயற்கையின் தாக்கத்துக்கு ஆளாகியிருப்பது எப்படி கவலைதரும்.

எனது கருத்தும் இதுதான்.

இவர் அடுத்தவர்.... இப்படி தனது கருத்தும் உது தான் எண்டு போட்டு நடிகர் முரளியின் மரணத்துக்கு வருந்தினார் இங்கு

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை தான்... நீங்கள் எண்டால் யாரையும் திட்டுறதே இல்லையே.... ! <_<

நீங்க வேறு

அவருக்கு தமிழனை திட்டவே நேரம் போதவில்லை.

இந்தப்பிறப்பில் அது மட்டும்தான் அவரது பணி.

குண்டுகளை தொடர்ந்து எறிந்து ஒவ்வொரு அங்கமாக மக்கள் இழந்து கொண்டிருக்க காப்பாற்றுங்கள், சண்டையை நிறுத்தச்சொல்லுங்கள் ஆகக்குறைந்தது குண்டுகளைப்பொழிவதையாவது நிறுத்தச்சொல்லுங்கள்,..... என்று இரத்தம் தோய்ந்த உடலுடன் அந்த மக்களும், அவர்களது படங்களைத்தாங்கிவாறு நாங்களும், கெஞ்சி, காலில் விழுந்து, மனிதன் என்ன எல்லாம் செய்யக்கூடாதோ.................. அவ்வளவையும் செய்து அழுது கொண்டிருக்க, உங்களுக்காக பேசுகின்றோம், உடனே நிறுத்துகின்றோம்,,,,,,,,, என்று எமக்கு படம் காட்டியபடி,

மூடிய கதவுகளுக்குள் விரைவாக முடி, என்ன உதவி வேண்டுமானாலும் நாம் தருகின்றோம் என்றவர்கள்

தடுக்கமுடியாத இயற்கையின் தாக்கத்துக்கு ஆளாகியிருப்பது எப்படி கவலைதரும்.

ஒரு அரசின் முடிவுக்கு அல்லது அதிகாரம் கொண்டவர்களின் முடிவுக்கு மக்கள் துயரம் அனுபவிக்க வேண்டுமென்றால் தமிழ் மக்கள் அனுபவித்த துயரங்கள் கூட ஒரு விதத்தில் சரியானவை என்று படும்

நீங்கள் வாழ்கின்ற பிரான்ஸ் கூட, புலிகளை தடை செய்து போராட்டத்தை பயங்கரவாதமாக்கி, பலத்தை குறைத்த முக்கியமான நாடு. இன்று வரைக்கும் இலங்கை அரசுக்கு சாதகமாக நடந்து புலிகளுக்காக செயல்பட்டவர்களை கைது செய்த நாடு. இதே பிரான்சில் ஒரு அனர்த்தம் நடந்து அதில் உங்கள் உறவுகளுக்கு ஏதேனும் நடந்தால் அதை ஏற்க முடியுமா?

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு அரசின் முடிவுக்கு அல்லது அதிகாரம் கொண்டவர்களின் முடிவுக்கு மக்கள் துயரம் அனுபவிக்க வேண்டுமென்றால் தமிழ் மக்கள் அனுபவித்த துயரங்கள் கூட ஒரு விதத்தில் சரியானவை என்று படும்

நீங்கள் வாழ்கின்ற பிரான்ஸ் கூட, புலிகளை தடை செய்து போராட்டத்தை பயங்கரவாதமாக்கி, பலத்தை குறைத்த முக்கியமான நாடு. இன்று வரைக்கும் இலங்கை அரசுக்கு சாதகமாக நடந்து புலிகளுக்காக செயல்பட்டவர்களை கைது செய்த நாடு

இதே பிரான்சில் ஒரு அனர்த்தம் நடந்து அதில் உங்கள் உறவுகளுக்கு ஏதேனும் நடந்தால் அதை ஏற்க முடியுமா?

ஆமாம்

கனடாவுக்கு அலை வருகிறது என்றரீதியிலான பரிவா இது நிழலி...?

என் மக்களை அழித்தவன் மீதான கோபம் இது.

அப்படி நடந்தால்

இப்படி நடந்தால்

என்பதெல்லாம் வரும்போது...?

Edited by விசுகு

ஆமாம்

கனடாவுக்கு அலை வருகிறது என்றரீதியிலான பரிவா இது நிழலி...?

கனடாவுக்கு வருகுதா?

பரிவு இல்லை யதார்த்தம்... சும்மா வீம்புக்கு எழுதினாலும், எங்கள் எல்லோருக்கும் எவர் இறந்தாலும் மனதில் துயரம் வரத்தான் செய்யும்

எல்லாமே போய்விட்ட பின்னும் எங்களிடம் மிஞ்சி இருப்பது கொஞ்சம் மனிதத் தன்மைதான் அதையாவது மிச்சம் விடுங்கள்

தவிர,

காலம் இப்படியே போகப் போவதும் இல்லை...வருகின்ற தலைமுறைகள் அடிமையாகவே இருந்துவிடப் போவதும் இல்லை.. எமக்கு உதவி செய்யவில்லை என்பதற்காக இன்று எந்த நாடுகளை நாசமாக போகவேண்டும் என்று நினைகின்றோமோ, அந்த நாடுகளின் உதவிகளை மீண்டும் நாட வேண்டி வரும் என்பதை மறக்க வேண்டாம்

  • கருத்துக்கள உறவுகள்

மேலோட்டமாக இப்படி சொன்னாலும், யதார்த்தத்தில் உங்களால் அப்படி இருக்க முடியாது. இதே சுனாமியில் ஒரு குழந்தை இழுத்துச் செல்லப்பட்டு சாகும் போது அதன் தாய் கதறுவதைக் காட்டினால் மனம் பதைபதைக்காமல் இருக்க முடியுமா? அல்லது இவ்வளவு இழப்புக்கும் பின் உங்கள் நெருங்கிய உறவொன்று இறக்கும் போது மனம் கலங்கத் தானே செய்தது?

அவ்வளவு ஏன்....பாடகி சுவர்ணலதாவின் மறைவுக்கு கூட இரங்கல் சொல்லி இருந்தீர்கள் இங்கு

தனிப்பட்ட முறையில் யாழில் முகம் தெரியாத ஒருவர் உறுப்பினராய் வரும் பொது வரவேற்கிறோம், பலருக்கு வாழ்த்துக்கள் கூறுகின்றோம், மற்றும் உறவுகளின் துயர்களில் பங்கு கொள்ளுகின்றோம்.

அனால் எமது அவலம் எப்படியானது! 4 லட்சம் மக்களை பாதுகாப்பு வலயத்துக்கு போங்கோ என்று சொல்லி ஒரே இடத்துக்குள் சேர்த்து வைத்து அதுக்குள்ளேயே எரிகுண்டுகளையும், தடை செய்யப்பட்ட குண்டுகளையும் போட்டு அழித்தது எவ்வளவு கேவலமானது. (ஆபிரிக்காவின் பரந்த காடுகளில் மிருகங்களை விரட்டி ,விரட்டி சேர்த்து பட்டிக்குள் அடைப்பது போல்,) அதை விட கொடுமை அமைச்சரே ராணுவத்திடம் கூறுகின்றார் தமிழ் பெண்களெல்லாம் உங்களுக்கு ஆண்களெல்லாம் கடலுக்கு என்று. இன்று வரை தமிழ் மக்களின் அவலம் சொல்லி முடியாது.

சுனாமி யாரையும் கற்பழிக்கவில்லை , சித்திரவதை செய்ய வில்லை . இயல்பாக வந்து இயல்பாகப் போகின்றது.

நீங்கள் சொன்னதுபோல் யதார்த்தத்தில் என்னால் அப்படி இருக்க முடியவில்லைத்தான் . அனால் அப்படி இருக்க பழக வேணும். ஈழத் தமிழர் எவரும் நடந்து முடிந்த மனித அவலத்தை மனதில் இருந்து இறக்கக் கூடாது, மறக்கக் கூடாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.