Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பயணம் .....................

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆமா சாத்திரி . நீங்கள் போகும் பயனம் முழுவதும் ஒருவர் உங்களை பின் தொடர்ந்து வருகிறார் யார் அவர்? கண்ணாடி எலலம் போட்டுக் கொண்டு வெள்ளை. சிகப்பு என நிற உடுப்பு எல்லாம் போட்டுக் கொண்டு போட்டோ எல்லாம் எடுத்து உங்கள் கட்டுரையில் இடக்கிட வருதே ?

ராஜிவு கொலையை புலிகள் செய்யவில்லை என்று எழுத போறிங்கள் போல? :lol::D கவனமாக எழுதுங்கோ........

ராஜீவ் காந்தியை கொல்லும் திட்டத்தில் புலிகள் அமைப்பை சேர்ந்தவர்கள் இந்தியாவில் மூன்று மானிலங்களில் மூன்று குழுக்களாக திட்டமிடலை மேற்கொண்டனர். மூன்றில் எது மிக சாதகமாக அமைகிறதோ அதனை இறுதித் தெரிவாக்கலாமென புலிகளின் தலைமை முடிவெடுத்திருந்தது.டெல்லியில் ஒரு குழுவும் ஆந்திராவில் ஒரு குழுவும் தமிழ்நாட்டில் ஒரு குழுவும் இயங்கியது. டெல்லியில் இருந்த குழுவை வழிநடத்தியவர் சிறி என்பவர் இவர் புன்னாலைக்கட்டுவனை சேர்ந்தவர் ஒரு சீக்கிய பெண்ணை மணமுடித்திருந்தார் இவரிற்கு டெல்லியில் ஒரு வீடும் இருந்தது. ஆனால் டெல்லியில் புலிகள் அமைப்புடன் சேர்ந்து இந்தத் திட்டத்தில் வேற்று மொழிக்காரர்களும் இயங்கியதால் பொதுவாக ஆங்கிலம் நன்றாக கதைக்கத்தெரிந்த ஒருவர் புலிகள் அமைப்பிற்கு தேவையாக இருந்தது அதற்காக கனகரத்தினம் அவர்களை புலிகள் அமைப்பு டெல்லிக்கு அனுப்பிவைத்தது கனகரத்தினம் புலிகள் அமைப்பின் மூத்த தளபதிகளில் ஒருவரான லெப்.கேணல் ராதாவின் தந்தையாவார். அடுத்ததாக ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் இயங்கிய குழுக்ளைபற்றி அடுத்த தொடரில் பார்ப்தோடு இந்திய இராணுவ வருகையுடன் சம்பந்தமேயில்லாத ஜெயலலிதாவின் பெயரையும் புலிகளின் கொலைப்பட்டியலில் இணைந்தது பற்றியும் எழுதுகிறேன்.
  • Replies 283
  • Views 41k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் சாத்திரியார்! இந்த ராஜீவ் காந்தியின் கொலைப் பழி முழுவதும் புலிகள் தலையிலே போடப்பட்டுள்ளது. அது தான் சிங்களத்தினதும், இந்தியாவினதும் பெரு விருப்பாகும். ஆனால், எனக்கு என்றுமே இந்தக் கருத்தில் உடன் பாடு இருந்ததில்லை.இதனால், யாழ் களத்திலும் பல உறவுகளிடம் வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கின்றேன்! பல பேரிற்கு ராஜீவ் காந்தி ஒரு தொந்தரவாக இருந்தார்.புலிகளுக்கும் இவரை அகற்ற வேண்டிய தேவை இருந்தது! கொலையில் புலிகள் ஒரு பங்காளிகளாக இருந்திருக்கலாம்! ஆனால், இதில் ஈடுபட்ட பலர்,இன்னும் பெரிய மனிதர்களாக வெளியில் நடமாடிக் கொண்டிருக்கின்றார்கள் என்பது எனது பணிவான கருத்து! உங்கள் தொடர், இதை ஓரளவாவது தெளிவு படுத்தும் என எண்ணுகின்றேன்.

இதில் புதிதாக நான் எதையும் எழுதவேண்டிய தேவையில்லை அதனை விசாரணை சம்பந்தப்பட்ட அமிகாரிகள் பலரும் எழுதிவிட்டார்கள். ஆனால் மேலதிகமாக சில விடயங்களை புலிகள் சம்பந்தப்பட்டவையை மட்டுமே இங்கு விபரமாக எழுதுகிறேன் ராஜீவ் கொலையை விசாரிக்க அமைக்கப்பட்ட ஜெயின் கமிஷன் முன்பு, ஷாஹீத் பெருமன் சிரோமணி அகாலிதள் அமைப்பின் தலைவரான மகந்த் சேவா தாஸ் சிங் அளித்த வாக்குமூலம்தான் அது. அதை மட்டும் அப்படியே தருகிறோம்!

மகந்த் சேவா தாஸ் சிங் சொல்கிறார்...

நான் டிசம்பர் 26, 1990 அன்று லண்டன் சென்றேன். அடுத்த நாள் நான் அவர் (ஜக்ஜித் சிங் சௌகான்) வீடு இருந்த 64, வெஸ்டர்ன் கோர்ட், மத்திய லண்டன் முகவரிக்குச் சென்றேன். அங்கு காலிஸ்தானின் அலுவல கமும் இருந்தது. லண்டன் செல்வதற்கு முன்னதாக நான், பிரதம மந்திரி சந்திரசேகரைச் சந்தித்தேன். நான் லண்டனுக்குப் புறப்படுவதாக சந்திரசேகரிடம் தெரி வித்தேன். அவர், என்னிடம் என் நண்பரான ஜக்ஜித் சிங் சௌகானிடம் பேசுமாறு கூறினார். 'பஞ்சாபில் வன்முறையை நிறுத்திவிட்டு, பஞ்சாப் பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும்’ என்று சௌகானிடம் கூறுமாறு என்னிடம் தெரிவித்தார்.

நான் லண்டனில் உள்ள சௌகானின்அடுக்குமாடிக் குடியிருப்புக்குச் சென்றேன். இருவரும் தேநீர் அருந்தி னோம். அந்த இடத்தில் ஏற்கெனவே 10 அல்லது 12 நபர்கள் இருந்தனர். சௌகான் என்னை கீழ்த்தளத்தில் இருந்த காலிஸ்தான் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கு தொலைத் தொடர்புக்குத் தேவை யான அனைத்துக் கருவிகளும் பொருத்தப்பட்டு இருந்தன. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் பிற நாடுகளுடன் தொலைத் தொடர்புகொள்வதற்காகப் பயன்படுத்தப்படும் கருவிகளின் செயல்பாட்டினை அவர் விளக்கினார். சௌகானிடம், மேல்தளத்தில் கூடி இருக்கும் நபர்கள் யார் எனக் கேட்டேன். அவர்கள் பப்பர்கல்சா, காலிஸ்தான் கமண்டோ படை மற்றும் எல்.டி.டி.ஈ-யைச் சேர்ந்தவர்கள் எனக் கூறினார். அதில் எல்.டி.டி.ஈ-யின் ஆர்.எம்.பிரதியும் இருந்தார். நான் பிற நபர்களின் பெயர்களைக் கேட்கவில்லை.

நான் சௌகானிடம், 'எப்படி சந்திரசேகர்ஜி ஐந்து வருடங்களுக்குப் பிரதம மந்திரியாக நீடிப்பார்?’ எனக் கேட்டேன். அதற்கு சௌகான், 'சந்திரசேகர், ராஜீவ் காந்தியை அழிப்பார்’ என என்னிடம் கூறினார். 'ராஜீவ் அழிவுக்குப் பிறகு காங்கிரஸில் முக்கியமான தலை வர்கள் யாரும் இல்லை. அதற்குப் பின்னர், காங்கிரஸ், சந்திரசேகரைப் பிரதமராக ஏற்றுக்கொள்ளும். எனவே சந்திரசேகர் ஐந்து வருடங்கள் பதவியில் இருப்பார்’ என்றார்.

நான் சௌகானிடம் ராஜீவ் எவ்விதம் அழிக்கப்படு வார் எனக் கேட்டேன்... 'சீக்கியர்கள் மட்டும் அல்ல... தன்னுடன் வேறு தீவிரவாதக் குழுக்களும் இருக்கிறார்கள். ஹரியானா ஆட்கள் மற்றும் பிறர் இந்த வேலைக்குத் தயாராக இருக்கலாம்’ என்றார். அப்பொழுது இடைமறித்த சர்தார் பர்வீந்தர் சிங் வர்மா, 'மகந்த்ஜி, ராஜீவ்ஜி து கயா’ (ராஜீவ்ஜி போய்விட்டார்) எனக் கூறினார். நான் அந்தத் திட்டத்தை அறிய விரும்பினேன். ஆனால் அவர்கள், 'அதைக் கேட்கக் கூடாது’ எனக் கூறினர்.

ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியைச் சேர்ந்த நபரும் இடைமறித்து, 'ராஜீவ் அழிக்கப்படுவார்’ என் பதை நான் சந்திரசேகரிடம் கூற வேண்டும் எனத் தெரிவித்தார். சௌகான் என்னிடம், 'புது தில்லி பாராளுமன்ற வளாகத்தில் ராஜீவைக் கொல்வதற்கான திட்டம் அவர்களிடம் இருந்தது’ எனக் கூறினார். நான் அவரிடம், 'இந்திரா காந்தி கொல்லப்பட்டபோது, சீக்கியர்கள் பெருமளவில் கொல்லப்பட்டார்களே? புது தில்லியில் வைத்து ராஜீவ் கொலை செய்யப்பட்டால், இந்தியாவில் உள்ள மூன்று கோடி சீக்கியர்களும் கொல்லப்படுவார்கள். ஒரு சீக்கியர்கூட உயிருடன் தப்ப முடியாது’ என்று சொன்னேன். 'நாங்கள் ஏற்கெனவே அதைப்போன்ற ஒரு தாக்குதலுக்குத் திட்ட மிட்டுவிட்டதால், அந்தப் பாதையில் இருந்து விலக மாட்டேன்’ என்று அவர் சொன்னார்.

நான் சௌகானை கீழ்த் தளத்துக்கு அழைத்துச் சென்று அவருடைய முடிவை மறுபரிசீலனை செய்யும் விதமாக அவர் மனதை மாற்றினேன். 'ராஜீவ் டெல்லியில் வைத்து கொல்லப்படாமல் இருப்பதை தான் பார்த்துக்கொள்வதோடு, வேறு ஏதேனும் ஓர் இடத்தில் கொலையை நிகழ்த்தும்படி பார்த்துக் கொள்வேன்’ என்று அவர் கூறினார். 'எனக்கு சந்திராசாமியிடம் தொடர்பு உள்ளது’ என்றார். சந்திராசாமியிடம் போதுமான அளவு பணமும் திட்டங்களும் உள்ளது. அவரிடமும் இதைப்பற்றிக் கேட்டபோது, தாங்கள் டெல்லியில் வைத்து ராஜீவ்காந்தியைக் கொல்லப் போவது இல்லையென முடிவு செய்து இருப்பதாகத் தெரிவித்தார்.

நான் லண்டனில் இருந்து 1991 ஜனவரி 2 அன்று திரும்பினேன்... சௌகான் என்னிடம் மூன்று கடிதங்கள் கொடுத்தார். அதில் ஒன்று சந்திர சேகருக்கு... நான் அங்கிருந்து கிளம்பும்போது, இந்தியத் தலைவர்களான சரத்பவார், ஓம்பிரகாஷ் சவுதாலா, சந்திராசாமி மற்றும் இண்டியன் எக்ஸ்பிரஸ் கோயங்காவுடன், சர்தார் பல்வீந்தர் சிங் வர்மா ஆகியோர் தன்னை வந்து சந்தித்ததாக சௌகான் என்னிடம் தெரிவித்தார். ஒரு சந்திப்பு பம்பாயில் இந்தியன் எக்ஸ்பிரஸ் அலுவலகம் உள்ள எக்ஸ்பிரஸ் டவரில் நடந்தது. அந்தக் கூட்டம் 'காலிஸ்தான் இயக்கத்தை மீண்டும் அமைப்பது மற்றும் ராஜீவ்காந்தியை அழிப்பது’ ஆகிய விஷயங்கள் சம்பந்தப் பட்டது.

லண்டனில் பேசப்பட்ட விஷயங்களை நான் ராஜீவ் காந்தியிடம் (பிப்ரவரி 10, 1991 அன்று பாராளுமன்ற இல்லத்தில் வைத்து) விளக்கினேன். இந்த விஷயங்களை சந்திரசேகரிடமும் தெரிவித்துவிட்டதாகக் கூறினேன். சிறிது அதிர்ச்சியடைந்த ராஜீவ் காந்திக்கு வியர்த்துக் கொட்ட ஆரம்பித்தது. அவர் கோபமடைந்தது நன்றாகத் தெரிந்தது. நான் ராஜீவை மீண்டும் 1991, பிப்ரவரி 14 அல்லது 15-ல் அவருடைய இல்லத்தில் சந்தித்தேன். அவருடைய இல்லத்தை வேவு பார்த்ததாக, இரண்டு ஹரியானா காவலர்கள் பிடிபட்டனர். ராஜீவே இதை என்னிடம் கூறினார். இதே அளவு ஆபத்தான விஷ யத்தை நான் அவரிடம் தெரிவித்ததாகவும் ராஜீவ் கூறி னார். சௌகானுக்கு சந்திராசாமி மற்றும் சரத்பவார் பணம் அளித்து இருந்தனர்... ராஜீவ்ஜியின் கொலைக்குப் பின்னால் சந்திராசாமி உள்ளார்!'' என்று விலாவாரியாக விவரிக்கிறது அந்த வாக்குமூலம்.

டெல்லியில் இருந்த குழுவை வழிநடத்தியவர் சிறி என்பவர் இவர் புன்னாலைக்கட்டுவனை சேர்ந்தவர் ஒரு சீக்கிய பெண்ணை மணமுடித்திருந்தார் இவரிற்கு டெல்லியில் ஒரு வீடும் இருந்தது.

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

மொத்தத்தில தலை சுத்திது....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மொத்தத்தில தலை சுத்திது....

சுண்டல் இதுக்கே தலை சுத்தினால் எப்படி ?? இங்கு நான் குறிப்பிட்டு எழுதிய சிறி என்பவர் எனக்கு இயக்கத்தில் சேர்ந்த காலமான 84 களில் இருந்து பழக்கமாகி பின்னர் நல்லதொரு நண்பராகியிருந்தார். 85 ம் ஆண்டுகளில் நீர்வேலி முகாம் மற்றும் ஒட்டகப்புலம் முகாம்களில் ஒன்றாக இருந்திருக்pறோம். பின்னர் இவர் வெளிவேலைகளிற்காக 86ம் ஆண்டு இலங்கையை விட்டுவெளியேறியிருந்தர் . இந்தியாவின் காலிஸ்தான் அமைப்பு மாவோயிஸ்டுக்கள்.பாதாள உலகக் குழுக்கள். மாபியாக்கள் என்று அனைத்து தொடர்புகளையும் கொண்டவராக இருந்தார்.98ம் ஆண்டு இந்திய நேபாள எல்லைக்கிராமம் ஒன்றில் துப்பாக்கி சண்டையொன்றில் உயிரிழந்ததாக செய்தி கிடைத்தது. அவரது சகோதரர் வெளிநாட்டில் வாழ்பவர் உறுதிப்படுத்தியிருந்தார்.ஆனால் நடந்த துப்பாக்கி சண்டை இந்திய எல்லைக்காவல் படையினரிடமா?? அல்லது வேறு இந்திய பிரிவினைவாதக்குழுக்களிடமா என்பது குழப்பமாகவே உள்ளது. பலவேறு தகவல்கள் கிடைத்தது. அதுபற்றி அலசவிரும்பவில்லை

Edited by sathiri

பயணம் என்ற உங்களின் அனுபவத்தில் தேவையில்லாமல் ஏன் ராஜீவ் காந்தி கொலை வழக்கினை இங்கே பதிகிறீர்கள் சாத்திரி. விடுதலைப்புலிகள் தான் செய்தார்கள் என்று கருத்தைப் பதியவா? .காலிஸ்தான் அமைப்பு மாவோயிஸ்டுக்கள்.பாதாள உலகக் குழுக்கள். மாபியாக்களுடன் புலிகள் தொடர்பு உண்டு என்ற கருத்தை ஏன் இங்கே தேவையில்லாமல் பதிகிறீர்கள். சாத்திரி நீங்கள் நல்லவரா? கெட்டவரா?

தெரியலையே??? :( :(

இதே நேரம் ஏனது பயண கட்டுரையை முழுவதுமாக படித்தால் நான் ஏன் ராஜீவ்காந்தி கொலைபற்றி எழுதுகிறேன் என்று புரிந்திருக்கும். தேவையில்லாமல் இங்கு இழுக்கவில்லை. அதுமட்டுமல்ல அதற்கான ஆதாரங்களை கேட்டால்கூட என்னால் தரமுடியும். கேள்விகளை நீஙகள் கேட்கலாம்.

Edited by sathiri

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய பயணக்கட்டுரை சில எதிர் மறையான விழைவுகளைக்கொடுத்து பல நல்ல விடயங்களை கெடுத்துவிடலாம் எனவே ராஜீவ் பற்றிய சம்பவத்தை விபரமாக எழுதவேண்டாம் எனவும் அது தங்கள் ஈழத்தமிழர்களிற்கான நடவடிக்கைகளை குழப்பலாம் முடிந்தால் மிகுதி கட்டுரையை நிறுத்தி விடும்படி பல நண்பர்கள் தமிழ்நாட்டிலிருந்து தொடர்பு கொண்டு கேட்தற்கிணங்க எனது பயணக்கட்டுரையை இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன். அதற்குரிய காலம் கனிந்தால் நிச்சயம் எழுதுவேன் நன்றி வணக்கம். :) :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிட்டத்தட்ட உதேமாதிரி கதையோடைதான் முந்தி வேறையொரு பேப்பரிலையும் வந்தது...........முடிவு முடிக்கக்கிடையிலை ஆளை

  • கருத்துக்கள உறவுகள்

பயணம் என்ற உங்களின் அனுபவத்தில் தேவையில்லாமல் ஏன் ராஜீவ் காந்தி கொலை வழக்கினை இங்கே பதிகிறீர்கள் சாத்திரி. விடுதலைப்புலிகள் தான் செய்தார்கள் என்று கருத்தைப் பதியவா? .காலிஸ்தான் அமைப்பு மாவோயிஸ்டுக்கள்.பாதாள உலகக் குழுக்கள். மாபியாக்களுடன் புலிகள் தொடர்பு உண்டு என்ற கருத்தை ஏன் இங்கே தேவையில்லாமல் பதிகிறீர்கள். சாத்திரி நீங்கள் நல்லவரா? கெட்டவரா?

தற்போதைய எம்மவரின் செயற்பாடுகள் இதுதானே????????

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தற்போதைய எம்மவரின் செயற்பாடுகள் இதுதானே????????

என்னுடைய பயணக்கட்டுரை சில எதிர் மறையான விழைவுகளைக்கொடுத்து பல நல்ல விடயங்களை கெடுத்துவிடலாம் எனவே ராஜீவ் பற்றிய சம்பவத்தை விபரமாக எழுதவேண்டாம் எனவும் அது தங்கள் ஈழத்தமிழர்களிற்கான நடவடிக்கைகளை குழப்பலாம் முடிந்தால் மிகுதி கட்டுரையை நிறுத்தி விடும்படி பல நண்பர்கள் தமிழ்நாட்டிலிருந்து தொடர்பு கொண்டு கேட்தற்கிணங்க எனது பயணக்கட்டுரையை இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன். அதற்குரிய காலம் கனிந்தால் நிச்சயம் எழுதுவேன் நன்றி வணக்கம். :) :)

என்னுடைய பயணக்கட்டுரை சில எதிர் மறையான விழைவுகளைக்கொடுத்து பல நல்ல விடயங்களை கெடுத்துவிடலாம் எனவே ராஜீவ் பற்றிய சம்பவத்தை விபரமாக எழுதவேண்டாம் எனவும் அது தங்கள் ஈழத்தமிழர்களிற்கான நடவடிக்கைகளை குழப்பலாம் முடிந்தால் மிகுதி கட்டுரையை நிறுத்தி விடும்படி பல நண்பர்கள் தமிழ்நாட்டிலிருந்து தொடர்பு கொண்டு கேட்தற்கிணங்க எனது பயணக்கட்டுரையை இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன். அதற்குரிய காலம் கனிந்தால் நிச்சயம் எழுதுவேன் நன்றி வணக்கம். :) :)

நல்ல முடிவு

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியார் பயணத்தைப் பற்றி மட்டும் எழுதியிருக்கலாம் ^_^

  • கருத்துக்கள உறவுகள்

கிருபனுக்கு எனது பச்சை...எனது கருத்தும் இது தான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியார் பயணத்தைப் பற்றி மட்டும் எழுதியிருக்கலாம் ^_^

பயணத்தை மட்டும் எழுதுவதென்றால் சென்றேன் வந்தேன் என்றுதான் எழுதியிருக்கவேண்டும்

என்னுடைய பயணக்கட்டுரை சில எதிர் மறையான விழைவுகளைக்கொடுத்து பல நல்ல விடயங்களை கெடுத்துவிடலாம் எனவே ராஜீவ் பற்றிய சம்பவத்தை விபரமாக எழுதவேண்டாம் எனவும் அது தங்கள் ஈழத்தமிழர்களிற்கான நடவடிக்கைகளை குழப்பலாம் முடிந்தால் மிகுதி கட்டுரையை நிறுத்தி விடும்படி பல நண்பர்கள் தமிழ்நாட்டிலிருந்து தொடர்பு கொண்டு கேட்தற்கிணங்க எனது பயணக்கட்டுரையை இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன். அதற்குரிய காலம் கனிந்தால் நிச்சயம் எழுதுவேன் நன்றி வணக்கம். :) :)

விளைவுகளைப் பற்றி உங்களுக்கு அதிகம் தெரிந்திருக்கும் என்பதால் அதிகப்பிரசங்கியாக ஏன் எதற்கு என்று கேட்கவில்லை. ஆனால் என்னைப்போன்ற சிலருக்கு பலவிடயங்கள் /சரித்திரங்கள் தெரிய வந்திருக்கும்.

காலம் கனிந்தால் - எம்மவருக்கு காலம் கனிவது என்பது :mellow: .. பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவ் காந்தி மரணம், இந்தியாவில் உள்ள சில குழுக்களினைத் தவிர்த்து பயணத்தைச் சொல்லியிருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி அண்ணா, நான் விரும்பி வாசிக்கும் எழுத்துக்களில் உங்களுடையதும் ஒன்று. பயணக்கதை இப்பிடி நடுவிலே நிக்கும் என எதிர் பார்க்கவில்லை. சிக்கலான விடயங்களைத் தவிர்த்து எழுத முடியுமாயின் எழுதுங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனது பயணத்தில் ராஜீவ் விடயத்தை தவிர்த்து எழுதமுடியாமல் போய் விட்டது காரணம் இந்தப் பயணத்தில் பெரும்பாலும் நான் சந்தித்தவர்கள் அந்த சம்பவங்களுடன் ஏதோ தொடர்புகளை கொண்டிருந்தவர்கள் அதே நேரம் இந்தத் தொடரை எழுதிக்கொண்டிருக்கும்போதுதான் கே. பத்மநாதன் இந்தியாவிடம் மன்னிப்புக் கேட்டதுடன் புலிகளின் பட்டியலில் ஜெயலலிதாவின் பெயரும் இருந்ததாக தெரிவித்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இராஜீவ் பற்றிய விபரங்கள் மேலோட்டமாகத்தான் பத்மநாதனிற்கும் தெரியும் அது பற்றிய சகல விடயங்களும் அறிந்தவர்கள் சிலர்தான் உயிருடன் வெளிநாடுகளில் வாழ்கிறார்கள் அந்த சம்பவத்தில் அவர்களும் ஒரு பங்காளிகள் மிகுதி விடயங்கள் நிறையவே இருக்கின்றது .அதே நேரம் ஜெயலலிதாவையோ கருணாநியையோ புலிகளின் தலைமை தங்கள் கொலைப்பட்டியலில் சேர்த்திருக்கவில்லை. அதனை நான் சும்மா இப்படி ஒற்றைவரியில் எழுதினால் யாரும் கவனத்திலெடுக்கமாட்டார்கள் ஜெயலலிதாவின் பெயர் அடிபடக்காரணமென்ன என்று அதனை விபரமாக ஆதாரங்களுடன் எழுதமுற்பட்டேன். ஆனால் அதனை யாரும் சரியாக புரிந்கொள்ளவில்லை. இங்கு யாழிலும் சிலர் அவசரப்பட்டு கருத்துக்களை எழுதி இருந்தார்கள். பரவாயில்லை முடிந்தளவு சர்ச்சைக்குரிய விடயங்களை தவிர்த்து பயணகட்டுரையை தொடர்கிறேன்.

உயிருடன் இருக்கும் பலரின் வாழ்வுடன் சம்பந்தப்பட்ட விடயம்,எனவெ அதை தவிர்த்து எழுதுவதே நல்லது.

மற்றது ராதாவின் தந்தையாரின் பெயர் கனகரத்தினம் அல்ல கனகசபாபதி.ஒரு சிறு புல்,பூண்டைக்கூட மிதிக்காத மனுசன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உயிருடன் இருக்கும் பலரின் வாழ்வுடன் சம்பந்தப்பட்ட விடயம்,எனவெ அதை தவிர்த்து எழுதுவதே நல்லது.

மற்றது ராதாவின் தந்தையாரின் பெயர் கனகரத்தினம் அல்ல கனகசபாபதி.ஒரு சிறு புல்,பூண்டைக்கூட மிதிக்காத மனுசன்.

நன்றிகள் அர்ஜீன் வருடங்கள் செல்லச் செல்ல சம்பவங்கள் மட்டுமே நினைவில் நிற்கின்றது பெயர்கள் மறந்து போகின்றது. கனக சபாபதிதான் அவரது பெயர் கனகசபாபதி ஹரிச்சந்திரா என்பததான் ராதாவின் பெயர்.நீங்கள் சொன்னது போல நல்ல மனிதர் ராதாவும் கூடத்தான் நல்லமனிதர் :(

  • கருத்துக்கள உறவுகள்

ஹரிச்சந்திராவுடன் ஒரே கல்லுரியில் படித்தேன். பழகுவதற்கு மிகவும் இனிமையானவர்.

maaveerarltcolraatha5gn.jpgLt-Col-Ratha-189x175.jpg

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

ஹரிச்சந்திராவுடன் ஒரே கல்லுரியில் படித்தேன். பழகுவதற்கு மிகவும் இனிமையானவர்.

maaveerarltcolraatha5gn.jpgLt-Col-Ratha-189x175.jpg

தமிழ்சிறி உங்கள் வயதை சொல்லாமல் சொன்னதிற்கு நன்றி :lol:

தமிழ்சிறி உங்கள் வயதை சொல்லாமல் சொன்னதிற்கு நன்றி :lol:

தான் பெரியவனாக இருக்கும் பொழுது ராதா அண்ணைக்கு அரிவரி படிப்பித்ததாகவும் எங்கோ வாசித்த ஞாபகம். இன்னும் ஒரு 7 , 8 ஐக் கூட்டுங்கள். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தான் பெரியவனாக இருக்கும் பொழுது ராதா அண்ணைக்கு அரிவரி படிப்பித்ததாகவும் எங்கோ வாசித்த ஞாபகம். இன்னும் ஒரு 7 , 8 ஐக் கூட்டுங்கள். :lol:

உண்மையாகவா தப்பிலி அப்படி வயதைக் கூட்டினால் அவருக்கு கிட்ட,தட்ட என்ட அப்பாவின் வயசு வரும்...இனி மேல் தமிழ்சிறியோடு கருத்தாடும் போது மரியாதையாக கருத்தாட வேண்டும் :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.