Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழ விடுதலை பற்றிய உங்களது தற்போதய மனநிலை என்ன?

64 members have voted

  1. 1. தமிழீழ விடுதலை பற்றிய உங்களது தற்போதய மனநிலை என்ன?

    • ஒற்றுமையாக போராடி வெல்வோம்
    • உலகம் எமக்கு ஒரு நீதியை அளிக்கும்
    • நம்பிக்கை போய்விட்டது இனி சான்ஸ் இல்லை
    • பூகோள அரசியல் மாறும் எமக்கு ஒரு சான்ஸ் தரும்
    • மந்திரத்தில் மாங்காய் விழும் எனக்காத்திருக்கிறோம்
    • இந்தியா வெண்டுதரும் கவலையை விடுங்கோ
    • நான் தலைவராகலாமா எண்டு ஜோசிக்கிறேன்

Please sign in or register to vote in this poll.

Featured Replies

தமிழீழ விடுதலை பற்றிய உங்களது தற்போதய மனநிலை என்ன?

31 may 20011

தமிழீழத்தில் ஈடுபாடு உள்ள தமிழர்களின் எண்ணிக்கை = 63

பார்வையாளர்களாக மட்டும் இருக்கவிரும்பும் தமிழர்களின் எண்ணிகை =2,435

:unsure:

Edited by Panangkai

  • Replies 84
  • Views 6.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

1970 களில் தமிழீழ விடுதலையின் தேவையை அன்று தந்தை செல்வா போன்ற ஒரு சிலர் தான் உணர்ந்தார்கள். ஆனால் 2010 இல்.. இன்று மக்களில் அநேகர் உணர்கிறார்கள். அந்த வகையில் தமிழீழ விடுதலையின் தேவையை மக்கள்.. உலகம் உணரச் செய்யும் போது.. அது எம்மை நெருங்கச் செய்ய முடியும்..!

Edited by nedukkalapoovan

அடக்குமுறைகள் தொடரும்பொழுது விடுதலை உணர்வு இருக்கத்தான் செய்யும்.

மாறிவரும் சிங்கள அரசியல், சிங்களத்துக்குள் உருவாகும் பொருளாதார/அரசியல் பிரச்சனைகள் இவற்றுடன் உலக அரசியல் மாற்றங்கள்.

நாம் ஒற்றுமையாகவும் தந்திரோபாயமாகவும் நகர்ந்தால் விடுதலை நிச்சயம் கிடைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

அடக்குமுறைகள் தொடரும்பொழுது விடுதலை உணர்வு இருக்கத்தான் செய்யும்.

மாறிவரும் சிங்கள அரசியல், சிங்களத்துக்குள் உருவாகும் பொருளாதார/அரசியல் பிரச்சனைகள் இவற்றுடன் உலக அரசியல் மாற்றங்கள்.

நாம் ஒற்றுமையாகவும் தந்திரோபாயமாகவும் நகர்ந்தால் விடுதலை நிச்சயம் கிடைக்கும்.

விடுதலைக்கான அடித்தளமாகப் பல்வேறு துணைக்காரணிகள்இருந்தாலும் முதற் காரணியாக இருப்பது ஒற்றுமையே. ஒற்றுமையாக நாம் நிற்கக் கூடாது என்பதில் அரச கூலிகள் முதல் கிந்தியக் கூலிகள்வரை முனைப்போடு செயலாற்றி வருகின்றனர். அதனை நாம் யேர்மனியுட்பட பல்வேறு நாடுகளில் காணலாம். இது பற்றித் தனியாக ஆராய வேண்டிய விடயம். ஆனால் ததமிழர்களின் ஒற்றுமையை சீர்குலைக்க முயலும் சக்திகளை இனங்கண்டு உரியவர்கள், பழைய பகமைநிலைகளை ஒதுக்கி வைத்துவிட்டுப் பேசி ஒரு இணைந்த வேலைத்திட்டத்துள் உள்வாங்குதல்.அல்லது இதுபோன்று செயற்படுவோரை பகிரங்கப்படுத்துதல் போன்றன நிகழும்போது மட்டுமே எமது வெற்றிக்கான வாய்ப்பினை நெருங்க முடியும். இல்லையேல், த.தே.கூட்டமைப்பைப் பார்த்து மகிந்த கூறுவதுபோல் , நாளை உலகம் புலம்பெயர் தமிழரின் அமைப்புகளையும் பார்த்துக் கூறுமளவிற்கு வைக்காது நடக்க முனைய வேண்டியது அனைவரதும் கடமையாகும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீழம் உருவாக வேண்டுமானால் இந்தியா உடைய வேண்டும். அல்லது இந்திய கொள்கையில் பாரியதொரு மாற்றம் நிகழவேண்டும். இவை எல்லாம் நடந்தாலும் எமக்குள்ள மிகப் பெரிய தடைக்கல் எமது சனத்தொகை. போகிற போக்கில் வெகு விரைவில் வடக்கு கிழக்கில் நாம் சிறுபான்மை ஆக்கப்பட்டுவிடுவோம். மற்றது சிஙகள மயமாக்கல். இவற்றை தடுக்கவேண்டுமானல் இலட்சக் கணக்கில் புலத்திலிருந்து நாம் தாயகம் நோக்கி செல்ல வேண்டும். இது நடக்கவா போகிறது? சிலர் இஸ்ரேல் உருவானதை எடுத்துக்காட்டலாம். ஆனால் நாம் ஒன்றும் யூதருமில்லை. எம்மைச் சுற்றியுளள நாடுகளில் எண்ணையும் இல்லை. எனவே தமிழீழம் என்பது நடைமுறை சாத்தியமற்ற தொலைந்து போனதொரு கனவு :( . இன்னும் 20-30 வருடத்தில் நாம் ஒரு முற்று முழுதானதொரு சிங்களத் தீவை அங்கே காண்போம்.

இரண்டு வருடத்திற்கு முன்னர், முள்ளிவாய்க்கால் அவலம் ஏற்பட்டது.

மனம் ஒடிந்து போய் இருந்த நிலையில் ஒரு சிலரின் முயற்சியால் பல போர்க்குற்ற ஆதாரங்கள் வந்தன. அதை தொடர்ந்து ஐ.நா. ஆலோசனைக்குழு அமைக்கப்பட்டது. அறிக்கை வெளியே வநதுள்ளது. இது நாம் தொடர்ந்தும் ஒற்றுமையாக முயற்சித்தால் முடியும் என்பது நிரூபித்தது.

இது பலருக்கும் மீண்டும் நம்பிக்கையை தந்து நிற்கின்றது.

பல மேற்குலக நாடுகளும் ஒரு முழுமையான போர்குற்ற விசாரணை நடத்தவேண்டும் என கோரியுள்ளன. இந்தியா இன்னும் வெளிப்படையாக ஒன்றும் கூறவில்லை. அதேவேளை அண்மைக்காலமாக சில மாற்றங்கள் எமக்கு சாதகமாக ஏற்பட்டுள்ளன. சீனாவின் சிங்களத்துடனான நெருங்கிய உறவு எமக்கு சாதகமாக அமைகின்றது.

தி.மு.க. தோல்வியும் எமக்கு சாதகமாக அமையாவிட்டாலும் பாதகமாக அமையாது என்ற நம்பிக்கை உள்ளது.

தமிழீழம் உருவாக வேண்டுமானால் இந்தியா உடைய வேண்டும். அல்லது இந்திய கொள்கையில் பாரியதொரு மாற்றம் நிகழவேண்டும்.

இவை எல்லாம் நடந்தாலும் எமக்குள்ள மிகப் பெரிய தடைக்கல் எமது சனத்தொகை. போகிற போக்கில் வெகு விரைவில் வடக்கு கிழக்கில் நாம் சிறுபான்மை ஆக்கப்பட்டுவிடுவோம். மற்றது சிஙகள மயமாக்கல். இவற்றை தடுக்கவேண்டுமானல் இலட்சக் கணக்கில் புலத்திலிருந்து நாம் தாயகம் நோக்கி செல்ல வேண்டும். இது நடக்கவா போகிறது? சிலர் இஸ்ரேல் உருவானதை எடுத்துக்காட்டலாம். ஆனால் நாம் ஒன்றும் யூதருமில்லை. எம்மைச் சுற்றியுளள நாடுகளில் எண்ணையும் இல்லை. எனவே தமிழீழம் என்பது நடைமுறை சாத்தியமற்ற தொலைந்து போனதொரு கனவு :( . இன்னும் 20-30 வருடத்தில் நாம் ஒரு முற்று முழுதானதொரு சிங்களத் தீவை அங்கே காண்போம்.

அகதியாக புலம்பெயர் தேசத்தில் கால் வைத்த நாளில் இருந்து அதிகமானோர் உயிருக்கு பாதுகாப்பு இருந்தாலும் ஏதோ ஒன்றை இழந்தவர்கள் போலே வாழ்கிறோம். காரணம் பல நாடுகளில் பிரசாவுரிமை தந்தாலும் அவரகள் எம்மை முழுமையாக ஏற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் இல்லை. பலருக்கும் தம் சந்ததிகளின் எதிர்காலத்தை நிச்சயம் அற்றதாகவே பார்க்கின்றனர்.

எமக்கு என்று ஒரு நாடு இருந்தால், சட்டம் / பாதுகாப்பு உட்பட பல அடிப்படை வசதிகள் இருந்தால் பலரும் தாயகம் திரும்புவார்கள். அதை ஒரு சிங்கப்பூராக கூட மாற்றுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒற்றுமையாக போராடி வெல்வோம்

உலகம் எமக்கு ஒரு நீதியை அளிக்கும்

நம்பிக்கை போய்விட்டது இனி சான்ஸ் இல்லை

பூகோள அரசியல் மாறும் எமக்கு ஒரு சான்ஸ் தரும்

மந்திரத்தில் மாங்காய் விழும் எனக்காத்திருக்கிறோம்

இந்தியா வெண்டுதரும் கவலையை விடுங்கோ

நான் தலைவராகலாமா எண்டு ஜோசிக்கிறேன்

இதில் எதுவுமே இல்லை என் மனதில் தற்போது. ஆனால் காலம் பதில் சொல்லும். நெடுக்ஸ் அகோதா சொன்னதுபோல்

போராடடுத்துக்கான காரணங்கள் முன்பைவிட தற்போது அதிகரித்துள்ளன. சிங்களமே எம்மை விடுதலை நோக்கி தள்ளியபடியுள்ளது.

சேரவேண்டியவர்கள் ஒன்றுசேர்ந்தால் தீர்வை எட்டுவது கஸ்டமல்ல.ஆனால் அது எவ்வளவு சாத்தியம் என்று தெரியவில்லை.

மந்தைக்கூட்டங்கள் மாதிரி எவர் பின்னாலும் அலையநின்றால் ஒன்றும் கிட்டாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போராடடுத்துக்கான காரணங்கள் முன்பைவிட தற்போது அதிகரித்துள்ளன. சிங்களமே எம்மை விடுதலை நோக்கி தள்ளியபடியுள்ளது.

ஆனால் மக்களிடம் போராடினால் வெல்லுவம் என்ற நம்பிக்கை கொஞ்சமும் இல்லை. நாம் எதிரியால் மட்டுமே தோற்கடிக்கப் பட்டிருந்தால் நாளடைவில் அந்த பழிவாங்கும் உணர்வும் உத்வேகமுமே எம்மை வழிநடாத்தியிருக்கும். ஆனால் துரோகத்தனத்தாலும் தோற்கடிக்கப்பட்டது எம்மை சிதைத்து விட்டது என்றே சொல்லுவேன். இந்த துரோகத்தின் ஆழம் என்ன? யார் யார் இந்தியாவின் பிடியில் உள்ளார்கள்? யார் நம்பிக்கைக்கு உரியவர்கள்? இனியோரு போராட்டம் நடந்தாலும் இப்படி கழுத்தறுப்புகள் நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம்? இவை எவற்றிற்குமே விடை தெரியாமல் ஒட்டு மோத்த இனமே தடுமாறி போயிருக்கிறது. சரி எல்லவற்றிற்கும் காலம் ஒரு பதில் சொல்லும் தக்கதொரு தலைமையை காட்டும் என்றாலும் அந்த காலத்துக்குள் முற்று முழு சிங்கள மயமாக்கல் நடந்து முடிந்திருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலையின் தேவை இப்போதே பன்மடங்காக அதிகரித்திருக்கிறது வெளிப்படையாகப் பேசும் துணிவை தாயகம் இழந்து மரண அச்சத்தில் வாழ்விக்கப்படுகிறது.

தமிழகமும் ஈழமும் தாயும் சேயும் போன்றது. தொப்புள் கொடி உறவு என்கின்றோம். நீண்ட காலத்திற்கு முன்பு தமிழகமும் ஈழமும் ஒரே நிலப்பரப்பாகவே இருந்திருக்கின்றது. அந்தவகையில் ஈழம் தமிழகத்துடன் இணைந்து இந்திய ஆட்சியின் கீழ் ஒரு மாநிலமாக இருப்பது நல்லது.

தமிழகமும் ஈழமும் தாயும் சேயும் போன்றது. தொப்புள் கொடி உறவு என்கின்றோம். நீண்ட காலத்திற்கு முன்பு தமிழகமும் ஈழமும் ஒரே நிலப்பரப்பாகவே இருந்திருக்கின்றது. அந்தவகையில் ஈழம் தமிழகத்துடன் இணைந்து இந்திய ஆட்சியின் கீழ் ஒரு மாநிலமாக இருப்பது நல்லது.

இந்தியனோடு சேர்ந்து வாழ்வதை விட சிங்களவனோடு வாழலாமென்று ஊரில் சொல்லுவர்கள்.

அந்தவகையில் ஈழம் தமிழகத்துடன் இணைந்து இந்திய ஆட்சியின் கீழ் ஒரு மாநிலமாக இருப்பது நல்லது.

4_11_12.gif

இந்தியனோடு சேர்ந்து வாழ்வதை விட சிங்களவனோடு வாழலாமென்று ஊரில் சொல்லுவர்கள்.

முதல்ல எங்களோட (புலம் பெயர் தமிழரோட) யார் வாழ விரும்புகிறார்கள் என்று அறியுங்கோ... :rolleyes::D

இரண்டு பேரும் விரும்ப மாட்டாங்கள், அதனால தனிநாடு தான் ஒரு முடிவு... :)

தமிழீழம் உருவாக வேண்டுமானால் இந்தியா உடைய வேண்டும். அல்லது இந்திய கொள்கையில் பாரியதொரு மாற்றம் நிகழவேண்டும்

காட்டாறுக்கு என் இனிய வணக்கம். உங்களது கருத்தை நான் ஆமோதிக்கிறேன். பல வருடங்களிற்கு முன்பிருந்தே என் கருத்தும் இதுதான். பலருடன் இது பற்றி விவாதித்துள்ளேன்.ஏனெனில் எங்கள் பிரச்சனை மட்டுமல்ல இந்திய மக்களின் வறுமையும் ஒழிந்து போகும்.இந்தியாவில் மக்களின் வாழ்க்கையைப்பார்ப்போமானால்........................[...................]

தமிழீழம் உருவாக வேண்டுமானால் இந்தியா உடைய வேண்டும். அல்லது இந்திய கொள்கையில் பாரியதொரு மாற்றம் நிகழவேண்டும்
காட்டாறுக்கு என் இனிய வணக்கம். உங்களது கருத்தை நான் ஆமோதிக்கிறேன். பல வருடங்களிற்கு முன்பிருந்தே என் கருத்தும் இதுதான். பலருடன் இது பற்றி விவாதித்துள்ளேன்.ஏனெனில் எங்கள் பிரச்சனை மட்டுமல்ல இந்திய மக்களின் வறுமையும் ஒழிந்து போகும்.இந்தியாவில் மக்களின் வாழ்க்கையைப்பார்ப்போமானால்........................[...................]
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா என்பது கண்ணாடியல்ல கல்லெறிஞ்சு உடைக்கிறதற்கு. முன்பொருகாலத்தில் இந்தியஉடைவை விரும்பிய ஜரோப்பா அமெரிக்கா கூட தற்சமயம் இந்தியாவில் பிரச்சனைகள் உருவாவதை விரும்பவில்லை. காரணம் அவர்களது பொருளாதார நலன்கள்.இந்தியாவின் கொள்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்தலாம் ஆனால் அதற்காக முனைபவர்கள் இந்திய அரசுடன் தொடர்புகளை ஏற்படுத்துபவர்களை தமிழ்தேசியம் பேசி பிழைப்பவர்கள் உடைனையே றோவின் கூலி என பிரச்சாரம் செய்துவிடுகிறார்கள். எனவே இரண்டுமே உடனடியாக நடப்பதற்கு சாத்தியமில்லை.ஆனால் நான் இங்கு வோட்டு போட்டது நான் தலைவராகலாமா எண்டு யோசிக்கிறன் என்றதற்குதான் காரணம் நான் தலைவரானால் இன்னமும் எங்கள் வாழ்வையும் எங்கள் அவலங்களையும் வைத்து தமிழ்நாட்டில் தலைவர்களாகவும் தங்கள் பிழைப்பை அரசியலை நடத்தும் பலரை போட்டுத்தள்ளலாம் எண்டுதான் .அவர்களை ஒழித்தாலே எங்கடை பாதி பிரச்சனை முடிந்தமாதிரி :lol:

Edited by sathiri

இந்தியாவின் பொருளாதார வளர்சி அங்குள்ள எல்லா மாநிலங்களிலும் பிரதிபலிக்கவில்லை. பொருளாதார வளர்சி குறையும் பொழுது, வளர்ச்சியடைந்த மாநிலங்கள் தமது வளங்கள் தரை வார்க்கப்படுகிறது என குறை கூறி பிரச்சனைகளை உருவாக்கலாம். அதுவே சிலவேளை பிளவுகளுக்கு வழிகோலலாம்.

சீனா உட்பட மேற்குலகம் இன்று இந்தியா பிளவுபடுவதை எவ்வளுவு தூரம் விரும்புகின்றன? அவை பொருளாதார ரீதியில் தம்மை விட பலவீனமான, ஆனால் அரசியல் ரீதியாக ஒரு பலமுள்ள இந்தியாவை விரும்பும் என எண்ணலாம். பலமான பாகிஸ்தான், இந்தியாவில் பாகிஸ்தானை விட கூட முஸ்லீம்கள் என்பனவும் ஒருவித பயம் தரும் காரணிகள்.

அதேவேளை எதுவும் நடக்கலாம். அடுத்த வருடமே இந்தியா பல துண்டுகளாக உடையலாம். ஏனெனில் இன்றைய மத்திய கிழக்கு நிலைமைகள் இப்படி இருக்கும் என யாருமே எண்ணிப்பார்க்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் பொருளாதார வளர்சி அங்குள்ள எல்லா மாநிலங்களிலும் பிரதிபலிக்கவில்லை. பொருளாதார வளர்சி குறையும் பொழுது, வளர்ச்சியடைந்த மாநிலங்கள் தமது வளங்கள் தரை வார்க்கப்படுகிறது என குறை கூறி பிரச்சனைகளை உருவாக்கலாம். அதுவே சிலவேளை பிளவுகளுக்கு வழிகோலலாம்.

சீனா உட்பட மேற்குலகம் இன்று இந்தியா பிளவுபடுவதை எவ்வளுவு தூரம் விரும்புகின்றன? அவை பொருளாதார ரீதியில் தம்மை விட பலவீனமான, ஆனால் அரசியல் ரீதியாக ஒரு பலமுள்ள இந்தியாவை விரும்பும் என எண்ணலாம். பலமான பாகிஸ்தான், இந்தியாவில் பாகிஸ்தானை விட கூட முஸ்லீம்கள் என்பனவும் ஒருவித பயம் தரும் காரணிகள்.

அதேவேளை எதுவும் நடக்கலாம். அடுத்த வருடமே இந்தியா பல துண்டுகளாக உடையலாம். ஏனெனில் இன்றைய மத்திய கிழக்கு நிலைமைகள் இப்படி இருக்கும் என யாருமே எண்ணிப்பார்க்கவில்லை.

அகூதா என்னுடைய பயணத்தெடரில் இந்திய பொருளாதார வளர்ச்சி பற்றியும் எழுதலாமென்றுதான் இருக்கிறேன் அங்கு சீனா கூட இந்தியா உடைவை விரும்பாது காரணம் ஆசியாவின் சீனத்தயாரிப்புக்களின் பெரும் நுகர்வோர்களாக இந்தியாவும் உள்ளது . இந்தியாவின் தொழில் நுட்ப சந்தையிலிலிருந்து சாதாரண் சிறுவர் விழையாட்டு பொருட்கள் வரை எதை புரட்டிப்போட்டாலும் made in china என்கிற வசனம் சிரிக்கின்றது எனவே இந்தியாவிற்குள் பிரச்சனைகனை இவர்கள் விரும்புவாகளே தவிர உடைவை விரும்பமாட்டார்கள்.அதுமட்டுமல்லாது ஆயுத அல்லது மக்கள் புரட்சி என்பது இந்தியாவிற்கு ஏதுவானதல்ல. அதனை வெறும் சினிமாவில் தான் பார்க்கலாம். :lol:

Edited by sathiri

அகூதா என்னுடைய பயணத்தெடரில் இந்திய பொருளாதார வளர்ச்சி பற்றியும் எழுதலாமென்றுதான் இருக்கிறேன் அங்கு சீனா கூட இந்தியா உடைவை விரும்பாது காரணம் ஆசியாவின் சீனத்தயாரிப்புக்களின் பெரும் நுகர்வோர்களாக இந்தியாவும் உள்ளது
இங்கே பிரச்சனை என்னெவென்றால் இந்தியாவில் பணக்காரன் பெரும் பணாக்காரன் ஆகி வருகிறான். ஏழை ஒன்னும் பரம ஏழையாகிக்கொண்டே வருகிறான். இதுவா ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி?????????????????????????

அகூதா என்னுடைய பயணத்தெடரில் இந்திய பொருளாதார வளர்ச்சி பற்றியும் எழுதலாமென்றுதான் இருக்கிறேன்

நல்லது எழுதுங்கள். அதேவேளை எவ்வாறு ' ' வெற்றிகரமாக செயல்படக்கூடியதாக உள்ளது? எவ்வளவு நாளைக்கு இது சாத்தியம் (அங்கும் மக்கள் கூடுதல் வருமானத்தை கேட்கத்தொடங்கியுள்ளர்கள்)? இதனால் வரும் சூழல் பாதிப்புக்கள் என்ன? இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி என்பதில் எந்த துறைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன? பல்வேறு மாநிலங்களையும், பல மொழி பேதங்ககளையும் நீண்ட காலம் சமாளிக்க முடியுமா? ... என்பனவற்றை அறிய ஆவல்.

இந்தியனோடு சேர்ந்து வாழ்வதை விட சிங்களவனோடு வாழலாமென்று ஊரில் சொல்லுவர்கள்.

உங்கள் கருத்தை தொடர்ந்து நெல்லயன் வாந்தி எடுக்கிற முகக் குறியையும் இணைத்துள்ளார் ஆனால் எங்கட வாழ்க்கையில இருந்து இந்தியத்தை பிரித்துப்பார்க்க முடியாது. இந்தக் களத்தில் பொழுதுபோக்கு பாடல்கள் திரைப்படம் நகைச்சுவை என எல்லா இணைப்பும் இந்தியம் தான். 98 வீதம் இந்தியம். மனதுக்கினிய சிங்களப்பாடல்களை கண்ணால் கூட காணமுடியாது. கருத்துக்களம் உதராணம். அன்றாட வாழ்வில் சினிமா சீரியல் மத சம்பிரதாய முறைகள் கலியாணம் சீர்வரிசை என்றும் உண்ணும் உணவு உடை உறக்கத்தில் நாயந்தார திரிசாவை கனவு காணும் வரை இந்தியம் கலந்தே உள்ளது. இதை பிரிக்கமுடியாது. ஆனால் சேர்ந்து வாழமுடியாது என்பது விந்தையானது. உண்மையில் எமது வாழ்வு இந்தியத்துள்ளேதான் கிடக்கின்றது.

இந்தியா உடைவது குறித்த கருத்தும் அதை தனிநாடு அமைவதற்கு சாதகமாக சிந்திப்பதும் யதார்த்தத்துக்கு புறம்பானதும் எதிர்மறையானதும் கூட.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் சாதாரண இந்தியனே வாழ முடியாமல் அல்லாடுகிறான். இந்த லட்சணத்தில் நாங்கள் எப்படி அவர்களோடு சேர்ந்து வாழ்வது??. எப்படி இந்தியாவுடன் சேர்ந்து வாழலாம் என சிறு விளக்கம் தந்தால் நன்றாக இருக்கும்.

திரைப்படப்பாடல்களை சிறுவயது முதல் நாங்கள் கேட்பதும் அதுவும் தமிழ் நாட்டு மக்கள் தமிழ் மொழி பேசுவதாலும் அவர்களின் கலாச்சாரத்துடன் நாமும் பின்னிப் பிணைவதாலும் அவர்களின் படங்களை பார்த்து பாடல்களை கேட்கிறோம்.எமது பொப்பிசை பாடல்கள் பிரபல்யமான போது நாமும் கேட்டோம். தமிழ் நாட்டிலும் கேட்டார்கள்.எனவே அவர்களது வாழ்வு எமக்குள்ளே உள்ளது என்பதும் நம்ப முடியாதவை.கற்பனையானவை.

  • கருத்துக்கள உறவுகள்

உலக ஒழுங்கு மாற்றமடையும்..! :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.