Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என்ன மனுஷரடா நீங்கள்??? :(

Featured Replies

எல்லாமே வீணாய்ப் போச்சு!

இன்னும் என்ன இருக்கு?

இதைச் சொல்லிச்சொல்லியே

சமாதான புறாக்களாக பூரிப்போடு பறக்கின்றோம்!

வேண்டும் என்று எதைக் கேட்டு நின்றோமோ;

இன்னும் ஆரம்பத்திலேதான் நிற்கின்றோம்!

தேவையென்று எதைத் தேடினோமோ;

அதைத் தொலைத்துவிட்டுத்தான் தேடுகின்றோம்!

என்னதான் தேவை எங்களுக்கு....?

ஒன்றுமே தெரியவில்லையா உங்களுக்கு???

என்ன மனுஷரடா நீங்கள்???

அயல்நாடாம் தமிழ்நாட்டின் கொதிநிலை கூட,

உங்கள் கண்ணீரில் இல்லையே!

அச்சச்சோ... தவறாக சொல்லிவிட்டேனோ???

கண்ணீர் வந்தால்தானே...அதைப்பற்றி பேசமுடியும்!

தமிழராய் இல்லாட்டியும் பரவாயில்லை... குறைஞ்சது,

மனுஷராத்தன்னும் ஒருமுறை நினைச்சுப் பாருங்கோ!

நடந்ததை எல்லாம்.... நடக்கின்றவை எல்லாம்... நடக்கப்போவதை எல்லாம்...

தயவுசெய்து ஒருமுறை நினைச்சுப் பாருங்கோ!

நல்லா விளங்கும்! உங்களுக்கு நல்லா விளங்கும்!

எரிபற்றுநிலையில் இருக்கும் தமிழ்நாடு எங்கே...!

எரிசாம்பலில் பலாக்கொட்டை புறக்கும் "கொட்டியாக்கள்" எங்கே!?

எத்தனை உயிர்த்தியாகங்கள்..... எத்தனை அழிவுகள்......

அத்தனைக்கும்....... ஒரே பதில்... ஒரே தீர்வு...

அந்த... வரி தரித்த கல்லறைகள் சொல்லிவிட்டுச் சென்ற

இறுதி ஆசை மட்டுந்தான்!!!!!!!!!!!!!

ஊர்க்கோயில் திருவிழாக்கு உரிமையோடு போங்கோ!-அதற்குமுன்

விடுமுறையென்றால் சுற்றுலா வாங்கோ!

லட்சக் கணக்கில் ஆட்கள் இருக்கு... - ஆனால்

எங்கள் மனநிலை இன்னும் உறைநிலையில்!

இலட்சியங்களும் தியாகங்களும் அங்கேதான் உறைந்து கிடக்கு!

கொஞ்சமேனும் சூடேற்றி... கொதிநிலைக்கு கொண்டு வாங்கோ!!!

கொஞ்சமேனும் சூடேற்றி... கொதிநிலைக்கு கொண்டு வாங்கோ!!!

  • கருத்துக்கள உறவுகள்

நியாயமான கேள்வி .........

  • கருத்துக்கள உறவுகள்

அந்த... வரி தரித்த கல்லறைகள் சொல்லிவிட்டுச் சென்ற

இறுதி ஆசை மட்டுந்தான்!!!!!!!!!!!!!

ஊர்க்கோயில் திருவிழாக்கு உரிமையோடு போங்கோ!-அதற்குமுன்

விடுமுறையென்றால் சுற்றுலா வாங்கோ!

blumen-2191.gif

கவிதையே உங்கள் கவிதைக்கு இந்தப் பூக்கள். சொல்ல வேறு வார்த்தைகள் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

சுயநலவாத மக்களுக்கு கிடைத்த பரிசு யாவரும் அறிந்ததே.எத்தனை பிரபாகரன் வந்தாலும் மக்கள் மாறாத வரை வெற்றி என்ற சொல்லுக்கே இடமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் மனிசரே இல்லை பக்கா சுயநலவாதிகள்

  • கருத்துக்கள உறவுகள்

"வேண்டும் என்று எதைக் கேட்டு நின்றோமோ;

இன்னும் ஆரம்பத்திலேதான் நிற்கின்றோம்!

தேவையென்று எதைத் தேடினோமோ;

அதைத் தொலைத்துவிட்டுத்தான் தேடுகின்றோம்" ............நன்றி கவிதை

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாமே வீணாய்ப் போச்சு!

இன்னும் என்ன இருக்கு?

இதைச் சொல்லிச்சொல்லியே

சமாதான புறாக்களாக பூரிப்போடு பறக்கின்றோம்!

வேண்டும் என்று எதைக் கேட்டு நின்றோமோ;

இன்னும் ஆரம்பத்திலேதான் நிற்கின்றோம்!

தேவையென்று எதைத் தேடினோமோ;

அதைத் தொலைத்துவிட்டுத்தான் தேடுகின்றோம்!

எரிபற்றுநிலையில் இருக்கும் தமிழ்நாடு எங்கே...!

எரிசாம்பலில் பலாக்கொட்டை புறக்கும் "கொட்டியாக்கள்" எங்கே!?

எத்தனை உயிர்த்தியாகங்கள்..... எத்தனை அழிவுகள்......

அத்தனைக்கும்....... ஒரே பதில்... ஒரே தீர்வு...

அந்த... வரி தரித்த கல்லறைகள் சொல்லிவிட்டுச் சென்ற

இறுதி ஆசை மட்டுந்தான்!!!!!!!!!!!!!

லட்சக் கணக்கில் ஆட்கள் இருக்கு... - ஆனால்

எங்கள் மனநிலை இன்னும் உறைநிலையில்!

இலட்சியங்களும் தியாகங்களும் அங்கேதான் உறைந்து கிடக்கு!

கொஞ்சமேனும் சூடேற்றி... கொதிநிலைக்கு கொண்டு வாங்கோ!!!

கொஞ்சமேனும் சூடேற்றி... கொதிநிலைக்கு கொண்டு வாங்கோ!!!

நெஞ்சுக்குள் மருகும் வார்த்தைகள் கனக்க மௌனம் தின்கிறது.

கவிதை சுள்ளெனச் சுடுகிறது.

அண்ணனோ, தம்பியோ, அக்காளோ, தங்கையோ இந்த கவிதையின் பின்னால் எவருள்ளார் என்பதை யானறியேன் உள்ளதைக் கண்டு கொண்டேன் உள்ளத்தையும் கண்டு கொண்டேன்

எழுதுக....

மீண்டும் மீண்டும் நெருப்பிடை தோய்த்து கவிதை வரிகள் தொடர்ந்தே தருக.

நல்ல கவிதை.

லட்சியமும் தியாகங்களும் அப்படி ஒன்று எம்மவர் பலரிடம் இல்லை.ஆனால் அதை வைத்து பிழைப்பு நடாத்தும் கெட்டித்தனம் எப்போதும் உறையாமல் இருக்கு.

நல்ல கவிதை.

லட்சியமும் தியாகங்களும் அப்படி ஒன்று எம்மவர் பலரிடம் இல்லை.ஆனால் அதை வைத்து பிழைப்பு நடாத்தும் கெட்டித்தனம் எப்போதும் உறையாமல் இருக்கு.

அப்புறம் ,உங்களிடமுள்ள தியாகங்கள் , லட்சியங்கள் , எந்த லெவலில இருக்கு அண்ணா? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

வேண்டும் என்று எதைக் கேட்டு நின்றோமோ;

இன்னும் ஆரம்பத்திலேதான் நிற்கின்றோம்!

தேவையென்று எதைத் தேடினோமோ;

அதைத் தொலைத்துவிட்டுத்தான் தேடுகின்றோம்!

நெஞ்சை தொட்டுச் சென்றன வரிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஊர்க்கோயில் திருவிழாக்கு உரிமையோடு போங்கோ!-அதற்குமுன்விடுமுறையென்றால் சுற்றுலா வாங்கோ!போயிட்டு வந்து ஊர் அந்த மாதிரியிருக்கு ...கீறீஸ் பூதம் எல்லாம் சும்மா கட்டுக்கதை என்று சொல்லுங்கோ  ..நாங்கள் எல்லாம் ஒரு மனிசர் எங்களுக்கு வேணும் சுதந்திரம்

Edited by putthan

  • தொடங்கியவர்

நியாயமான கேள்வி .........

இதுதான் இன்றைய நிலை......... என்றுதான் நாம்(என்னையும் சேர்த்து) மாறப் போகின்றோமோ?????

  • தொடங்கியவர்

blumen-2191.gif

கவிதையே உங்கள் கவிதைக்கு இந்தப் பூக்கள். சொல்ல வேறு வார்த்தைகள் இல்லை.

தங்களின் மலர்ச்செண்டு வாழ்த்துக்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் அக்கா!

சுயநலவாத மக்களுக்கு கிடைத்த பரிசு யாவரும் அறிந்ததே.எத்தனை பிரபாகரன் வந்தாலும் மக்கள் மாறாத வரை வெற்றி என்ற சொல்லுக்கே இடமில்லை.

நுணா! நீங்கள் சொன்னது உண்மையிலும் உண்மை! எங்கட சனம் எப்பதான் திருந்தப் போகுதோ தெரியேல............ :(

  • தொடங்கியவர்

நாங்கள் மனிசரே இல்லை பக்கா சுயநலவாதிகள்

ரதி அக்கா! .......... அந்தக் காலத்தில அவனவன் கடவுள் ஆகுறதுக்கும் கடவுளிட்ட மெகா வரம் வாங்குறதுக்கும் தவம் இருந்தான் மனுஷன்! இப்ப நாங்கள் மனுஷன் ஆகுறதுக்கே தவங்கிடக்க வேண்டிய அவல நிலைமை! :unsure:

வானத்தைப் பார்த்தன் பூமியைப் பார்த்தன்.....

மனுஷனை இன்னும்.............. ???? :(

இந்த நிலைமை ஆயிடுச்சு........... என்ன பண்ணுறது?????????????? :lol:

  • தொடங்கியவர்

"வேண்டும் என்று எதைக் கேட்டு நின்றோமோ;

இன்னும் ஆரம்பத்திலேதான் நிற்கின்றோம்!

தேவையென்று எதைத் தேடினோமோ;

அதைத் தொலைத்துவிட்டுத்தான் தேடுகின்றோம்" ............நன்றி கவிதை

புரிந்திருப்பீர்கள்........ தங்களின் புரிந்(த்+உ)ணர்வுக்கு நன்றி உடையார்! :)

  • தொடங்கியவர்

நெஞ்சுக்குள் மருகும் வார்த்தைகள் கனக்க மௌனம் தின்கிறது.

கவிதை சுள்ளெனச் சுடுகிறது.

அண்ணனோ, தம்பியோ, அக்காளோ, தங்கையோ இந்த கவிதையின் பின்னால் எவருள்ளார் என்பதை யானறியேன் உள்ளதைக் கண்டு கொண்டேன் உள்ளத்தையும் கண்டு கொண்டேன்

எழுதுக....

மீண்டும் மீண்டும் நெருப்பிடை தோய்த்து கவிதை வரிகள் தொடர்ந்தே தருக.

யாரையும் குறிப்பிட்டு குற்றம் சொல்லும் எண்ணம் எனக்குக் கிடையாது. பொதுவாகச் சொன்னேன். இந்த விடயத்தில் நானும் திருந்த வேண்டிய விடயங்கள் எவ்வளவோ இருக்கின்றன.

நாங்கள் கொஞ்சமேனும் மாறினால் தான் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது!

அது சரி அக்கா...... கவிதையின் பின்னால் யார்????? கொஞ்சம் சொல்லுங்களேன்! :rolleyes::)

  • தொடங்கியவர்

நல்ல கவிதை.

லட்சியமும் தியாகங்களும் அப்படி ஒன்று எம்மவர் பலரிடம் இல்லை.ஆனால் அதை வைத்து பிழைப்பு நடாத்தும் கெட்டித்தனம் எப்போதும் உறையாமல் இருக்கு.

நன்றி அர்ஜூன்! பலரிடம் அவை இல்லை என்பது உண்மைதான்! ஆனால், அவை அவர்களிடத்தில் வரவேண்டும் என்பதுதான் அனைவரது எதிர்பார்ப்பும் ... இன்றைய தேவையும்!!!!

அப்புறம் ,உங்களிடமுள்ள தியாகங்கள் , லட்சியங்கள் , எந்த லெவலில இருக்கு அண்ணா? :rolleyes:

எல்லோருக்குள்ளும் இருக்கும்...... ஆனால் அதை வெளிக்காட்ட வேண்டிய இடத்தில் வெளிக்காட்ட வேண்டும்!

  • தொடங்கியவர்

நெஞ்சை தொட்டுச் சென்றன வரிகள்.

மிக்க நன்றி கறுப்பி!

அந்த வரிகளை எழுதும் போதே

என் இதயம் கனத்தது!!!!!!!!!!!!!!!!!!!!!!! :(

நல்ல கவிக்கு நன்றிகள் கவிதை. மேலம் பல கவிகள் படைக்க வாழ்த்துக்கள்....!

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கவிதை கவிக்கு...

  • தொடங்கியவர்

நெஞ்சை தொட்டுச் சென்றன வரிகள்.

மிக்க நன்றி கறுப்பி!

அந்த வரிகளை எழுதும் போதே

என் இதயம் கனத்தது!!!!!!!!!!!!!!!!!!!!!!! :(

  • தொடங்கியவர்

ஊர்க்கோயில் திருவிழாக்கு உரிமையோடு போங்கோ!-அதற்குமுன்விடுமுறையென்றால் சுற்றுலா வாங்கோ!போயிட்டு வந்து ஊர் அந்த மாதிரியிருக்கு ...கீறீஸ் பூதம் எல்லாம் சும்மா கட்டுக்கதை என்று சொல்லுங்கோ ..நாங்கள் எல்லாம் ஒரு மனிசர் எங்களுக்கு வேணும் சுதந்திரம்

கட்டுக்கதையா............. கட்டுக் காட்டாய்க் கதைகள் கிடக்கு அந்தப் பூதத்தை பற்றி. நான் கூட ... எங்கட ஆக்கள் சும்மாவே பலூன் உடைக்கிற ஆக்கள் எண்டுதான் நினைச்சனான். ஆனால் எங்கட ஊர் வளவுக்குள்ள இருக்குற ஆக்களையே வந்து பயமுறுத்தியிருக்குறானாம்!

சும்மாவே பேய் பூதம் எண்டால் பீத்தல் பயம் எனக்கு............ அய்யய்யோ......! :lol::blink:

  • தொடங்கியவர்

நல்ல கவிக்கு நன்றிகள் கவிதை. மேலம் பல கவிகள் படைக்க வாழ்த்துக்கள்....!

நன்றி தமிழினி! நிச்சயமாக..... எனக்கு தெரிஞ்சவரைக்கும் கிறுக்குவன்! :)

  • தொடங்கியவர்

நன்றி கவிதை கவிக்கு...

நன்றி சுபேஸ்! :)

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த கருத்துக்களைக்கொண்ட கவிதை

தமிழன் விட்ட இடத்திலிருந்து நகர இவை அவசியம் இன்று

தொடருங்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.