Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சினேகா – பிரசன்னா விரைவில் திருமணம்..!

Featured Replies

சினேகா – பிரசன்னா விரைவில் திருமணம்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

sneha-prasanna.jpg

தமிழ் சினிமாவில் புன்னகை இளவரசி என வர்ணிக்கப்படும் நடிகை சினேகாவுக்கும், நடிகர் பிரசன்னாவுக்கும் பெற்றோர் சம்மதத்துடன் விரைவில் திருமணம் நடக்கிறது. இதனை நடிகர் பிரசன்னாவே இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

நடிகர் பிரசன்னாவும் சினேகாவும் அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் இணைந்து நடித்தனர். அதன் பிறகு இருவரும் நல்ல நண்பர்களாகத் திகழ்ந்தனர். இருவரும் காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. இருவரும் இதுகுறித்து எந்த மறுப்பும் தெரிவித்ததில்லை.

இந்த நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளதாக தங்கள் பிஆர்ஓ ஜான் மூலம் தெரிவித்துள்ளனர்.

இருவீட்டாரின் சம்மதத்துடன் இந்த மாத இறுதிக்குள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடக்கவுள்ளது.

இதுகுறித்து நடிகர் பிரசன்னா கூறியுள்ளதாவது:

சினேகாவுக்கும் எனக்கும் திருமணம் என்பது உண்மைதான். எங்கள் இருவரின் பெற்றோர் சம்மதத்துடன் இந்த மாத இறுதிக்குள் திருமண நிச்சயதார்த்தம் நடக்கும். ஆனால் வரும் மார்ச் மாதம் திருமணம் என்று சிலர் எழுதியுள்ளனர். இதில் உண்மையில்லை. திருமணம் எப்போது என்பதை விரைவில் நாங்களே முறைப்படி அறிவிக்கிறோம்,” என்றார்.

வாழ்த்துக்கள்!

http://www.voicetamil.com/?p=36613

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

சினேகாவின் இந்தக் காதலாவது கல்யாணத்தில் முடியட்டும்...வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

3 ம் நாள் டைவர்ஸ் வாங்க வாழ்த்துக்கள்... :icon_idea: :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

3 ம் நாள் டைவர்ஸ் வாங்க வாழ்த்துக்கள்... :icon_idea: :icon_idea:

3ம் நாளாவது கலியாணம் கட்டினம் என்று ஊருக்கு சொல்ல வாழட்டன்.. வாழ்த்தி விடுங்கோ..! :):D:icon_idea:

என்ன தான் சொன்னாலும்.. இதயத்தின் ஓரமா ஒரு சின்ன வலி.. என் கனவுக் கன்னியை இன்னொருத்தன் சுட்டுக் கொண்டு போறானே என்று. :D:icon_idea:

அப்புறமா.. எல்லாரும் வரிஞ்சு கட்டிக் கொண்டு வாறதில்ல.. அழகான பெண்களைக் கண்டால்.. ஆண்கள் ................ க்கும் கூப்பிடுவினம் என்று. நாங்கள் எல்லாம் அழகை எட்ட இருந்து ரசிக்கிற கூட்டம். எட்ட உள்ள நிலவை பார்த்து பால் நிலவே என்று பாடுற கூட்டம். அங்க நிலவு.. குன்றும் குழியுமா.. தனிமையில் படும் வேதனைகள்.. யார் அறிவார்..! :):D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஆ....ஆ...எங்கயோ சினேகா ஆன்டி என்று அவாவின்ட பிறந்த நாளுக்கு எழுதினது மாதிரி கிடந்திச்சு இப்போ பார்த்தால் கனவு கன்னி என்றாரு ...என்ன கொடுமை சரவணா....:)சரி,சரி பெண்கள் சார்பில் சினேகாவாவது நெடுக் அண்ணாவிடம் திட்டு வாங்காமல் இருக்கட்டும். :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வடையும் போச்சே................

நீங்க தொழில் அதிபராகனும்...அப்பதான் விளம்பர படங்கள் எடுக்க வசதியாயிருக்கும், இப்படி எல்லாம் கவலைப்படத் தேவையில்லை

  • கருத்துக்கள உறவுகள்

ஆ....ஆ...எங்கயோ சினேகா ஆன்டி என்று அவாவின்ட பிறந்த நாளுக்கு எழுதினது மாதிரி கிடந்திச்சு இப்போ பார்த்தால் கனவு கன்னி என்றாரு ...என்ன கொடுமை சரவணா.... :)சரி,சரி பெண்கள் சார்பில் சினேகாவாவது நெடுக் அண்ணாவிடம் திட்டு வாங்காமல் இருக்கட்டும். :lol::lol:

ஒரு காலத்தில கனவுக் கன்னி. இப்போ.. ஆன்ரி அது வேற விசயம். இப்ப எங்க கனவுக் கன்னி என்று சொன்னமா இல்லையே. :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பக்கத்தால் பெண் இனத்தை திட்டிக் கொண்டு மறு பக்கத்தால் பெண்களை ரசிப்பவர்களும் யாழில் இருக்கிறார்கள் :lol::D:icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ரசிக்கத்தான்.. இயற்கை பல அழகுகளை தன்னகத்தே கொண்டுள்ளது. பெண்களும் இயற்கையின் கூறே..! அழகு அங்கிருந்தாலும்.. எங்கிருந்தாலும் ரசிக்கப்படலாம். அது தவறல்ல. அழகை சொந்தமாக்க நினைப்பது தான் தவறு. :):lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் கறுப்பாக இருந்தாலும் காகம் கூட அழகு தான்

குயில் கூட கூவுகையில் அழகு தான்

மயில் கூட தோகை விரித்து ஆடுகையில் அழகு தான்

எல்லா அழகும் பார்க்கும் பார்வையில் ஏற்படும் உணர்வுகளிலும் தான் இருக்கிறது..:)

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் கறுப்பாக இருந்தாலும் காகம் கூட அழகு தான்

குயில் கூட கூவுகையில் அழகு தான்

மயில் கூட தோகை விரித்து ஆடுகையில் அழகு தான்

எல்லா அழகும் பார்க்கும் பார்வையில் ஏற்படும் உணர்வுகளிலும் தான் இருக்கிறது.. :)

கறுப்பு அழகில்லை என்று யார் சொன்னா. கறுப்பும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் அழகு. வெள்ளைத் தோல் உள்ள ஒருவரின் சருமத்தில் உதிக்கும் கறுத்தப் புள்ளிக்கு எவ்வளவு மரியாதை. அதே கறுப்புத் தோல் ஆளின் இடத்தில்.. இல்லை. இந்தப் பிரஞ்சத்தையே கறுப்புத் தான் ஆள்கிறது. :):icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரமின் கதை தெரியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரமின் கதை தெரியுமா?

தகப்பன் சிதம்பரமே... மனோராமா ஆச்சியுடன் சல்லாபம் புரிந்தவர் என்று... கோடம்பாக்கத்தில் கிசு, கிசு உலாவியது.

தகப்பன் எட்டடி பாய்ந்தால்... குட்டி 16 அடி பாயும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரமின் கதை தெரியுமா?

என்ன கதை சொல்லுங்கள்...அவர் சிநேகாவை வைத்து கொண்டு இருந்தாரா என்ன :unsure::lol::D

அச்சமுண்டு அச்சமுண்டு படம் பார்க்கும்போது தோன்றியது நல்ல ஜோடி பொருத்தம் என்று .

திருமண வாழ்த்துக்கள் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சினேகாவின் இந்தக் காதலாவது கல்யாணத்தில் முடியட்டும்...வாழ்த்துக்கள்

நான் என்ன கஸ்ரப்பட்டாலும் பரவாயில்லை....மற்றவையாவது நல்லாயிருக்கட்டும் எண்டு வாழ்த்துற மனப்பக்குவம் எல்லாருக்கும் வராது கண்டியளோ ....இதுக்கு என்ரை தங்கச்சியை கேட்டுத்தான்.......அவளொரு தங்கம்...தங்கப்பவுண்.... :D

  • கருத்துக்கள உறவுகள்

அச்சமுண்டு அச்சமுண்டு படம் பார்க்கும்போது தோன்றியது நல்ல ஜோடி பொருத்தம் என்று .

திருமண வாழ்த்துக்கள் .

மாப்பிள்ளை கொஞ்சம் உயரம் போலை... கிடக்குது.

சிநேகா இனி ஹை கீல்ஸ் சப்பாத்து போட்டால்... அதுவும் தெரியாது.

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

செவ்வாய்க்கிழமை, 6, டிசம்பர் 2011 (16:31 IST)

பிரசன்னாவுடன் காதல் திருமணம்:

நடிகை சினேகா முடிவில் திடீர் மாற்றம்

சினேகாவுக்கும், பிரசன்னாவுக்கும் காதல் மலர்ந்துள்ளது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர். இதனை பிரசன்னா சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்தார். இது குறித்து அவர் கூறும்போது, அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் நடித்தபோது இருவருக்கும் தொழில் ரீதியான நட்பு இருந்தது. அதன் பிறகு சினேகா நடவடிக்கைகளில் ஈர்ப்பானேன். அவர் பெரிய நடிகை ஆனாலும் தலைக்கனமோ, பந்தாவோ இல்லாமல் பழகினார். அந்த குணங்கள் எனக்கு பிடித்தது.

மூன்றரை வருடங்கள் எங்களுக்குள் காதல் இருந்தது. அவசரப்படாமல் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ள கால அவகாசம் எடுத்தோம். நிறைய யோசித்தோம். இறுதியில் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தோம். இரு வீட்டு குடும்பத்தினரும் திருமணத்துக்கு சம்மதித்து விட்டனர். திருமணம் மற்றும் நிச்சயதார்த்த தேதிகளை அவர்கள் முடிவு செய்வார்கள் என்றார்.

திருமணம் குறித்து சினேகா இதுவரை எதுவும் பேசாமல் இருந்தார்.

திருமணம் எப்போது என்று அவரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது உடனடியாக திருமணம் செய்து கொள்ளமாட்டோம் என்றார்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=66530

  • கருத்துக்கள உறவுகள்

கல்யாணம் இப்போதைக்கு இல்லை: சினேகா திடீர் முடிவு

இப்போதைக்கு கல்யாணம் செய்யப்போவதில்லை என்று நடிகை சினேகா கூறினார். ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ படத்தில் நடிகர் பிரசன்னாவும் நடிகை சினேகாவும் ஜோடியாக நடித்தனர். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. பார்ட்டி, விழாக்களில் ஜோடியாக கலந்துகொண்டனர். ஆனால் காதல் பற்றி வெளிப்படையாக சொல்லவில்லை. இந்நிலையில், சினேகாவை காதலிப்பதாக பிரசன்னா கடந்த மாதம் திடீரென்று அறிவித்தார். இது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரசன்னா சொன்னதற்கு சினேகா மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் சினேகா நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: இப்போதைக்கு நான் திருமணம் செய்யப்போவது இல்லை. கோச்சடையான் படத்தில் ரஜினி சாரின் தங்கையாக நடிக்க வாய்ப்பு வந்தது. பேச்சுவார்த்தை நடந்தது. நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளேன். ஆனால் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இதற்கிடையில் தமிழ், தெலுங்கில் மேலும் 2 படங்களில் நடிக்க கேட்டுள்ளனர். இப்படங்களில் நடிப்பது பற்றி இரண்டொரு நாளில் முடிவு செய்வேன். இவ்வாறு சினேகா கூறினார்.

sneka.jpg

http://puthiyaulakam.com/?p=5255

Edited by தமிழ் அரசு

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வடையும் போச்சே................

அட நிழலி பெரீய லட்சியவாதியெண்டு நினைச்சன். :icon_idea:

சிங்கமுத்து ..... ரேஞ்சில நம்மாளு பலரு இருந்துகிட்டு ............

Singamuthu1.jpg சினேகாவுக்கு ஆசைபடுறது ரொம்ப தப்பு!! <_<

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்கமுத்து ..... ரேஞ்சில நம்மாளு பலரு இருந்துகிட்டு ............

Singamuthu1.jpg

சினேகாவுக்கு ஆசைபடுறது ரொம்ப தப்பு!! <_<

தாங்கள் சிங்கமுத்துவிடம் என்ன குறை கண்டீர்கள்?கொஞ்சம் விளக்கம் தருவீர்களா?

:mellow:

பாவம் பிரசன்னாவின் கலியாணம்....ரீவி சீரியல்மாதிரி இழுபடப்போகுதுபோல... :( சீக்கிரம் சினேக யாரையாவது பாத்து மனம்மாறமுன்னம் தாலியைக்கட்டி ஒரு வேலியப்போட்டா பிரசன்னாவிற்க்கு சேப்றி...

தாங்கள் சிங்கமுத்துவிடம் என்ன குறை கண்டீர்கள்?கொஞ்சம் விளக்கம் தருவீர்களா?

:mellow:

அதுதான குமார்சாமி அண்ணை...சிங்கிள்முத்துவில உவர் அப்பிடி என்ன குறைகண்டவராம்.....?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.