Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிணறு வெட்ட கிழம்பிய பூதம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி (ஒரு பேப்பர்)

அண்மையில் சில இணையதளங்களில் ஒரு செய்தி வெளியாகியிருந்தது அதவாது இறுதிப் போரின்போது காயமடைந்த பல போராளிகளை ஒரு பெண் வெளிநாடு அழைத்து செல்வதாக கூறி அவர்களிடம் பெருமளவு பணத்தினை வாங்கிவிட்டு அவர்களை ஆசிய நாடு ஒன்றில் கைவிட்டு விட்டு தலைமறைவாகிவிட்டார் என்கிற செய்தி புகைப்படத்துடன் வெளியாகியிருந்தது. அந்தப் பெண்ணின் படத்தைப் பார்த்ததும் இவரை எங்கேயோ பார்த்தமாதிரி அல்லது அவரைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன் என தோன்றவே அவரைப்பற்றிய மேலதிக தேடல்களை தொடங்கிவிட்டிருந்தேன். கிணறு வெட்டப் பூதம் கிழம்பியது போல தோண்டத் தோண்ட தமிழ் மாணவர் அமைப்பை நடாத்திய ரிசி என்;கிற சிவானந்தன் ரிசாந்தன் அல்லது ரிசாந்தன் சிவராசா (இதில் எந்தப்பெயர் உண்மையானது என்பது தெரியவில்லை). பிரித்தானியத் தமிழர் பேரவையின் முக்கிய உறுப்பினராக இருந்து அண்மையில் அவ்வமைப்பிலிருந்து விலகிய ஸ்கந்தா என்கிற சுப்பிரமணியம் ஸ்கந்ததேவா ஆகியோரின் தொடர்புகள் தெரியவரத் தொடங்கியது. ஆனால் தேடலின் இறுதியில் இந்த வலைப்பின்னலை பின்நின்று இயக்குபவர் ஸ்கந்தாவே என்றும் அறிய முடிந்தது.

ஊரை அடித்து உலையில் போடும் இந்தக்கும்பலைப்பற்றி இனி கொஞ்சம் விபரமாக பார்க்கலாம்.

உதயகலா என்கிற பெண் வன்னிப் பெருநிலம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சமயம் அவர்களால் நடாத்தப்பட்ட வன்னி ரெக் என்கிற தொழில் நுட்பக் கல்லூரியில் படித்துள்ளார். அங்கு அவர் படிக்கசென்ற காலங்களில் அந்த பாடசாலையின் பொறுப்பாளராக இருந்த தயாபரன் அல்லது தயாபரராஜ் என்பவரிற்குமிடையில் காதல் தொடர்பு ஏற்பட்டிருந்தது. உதயகலா ஏற்கனவே ஒரு போராளியை திருமணமுடித்திருந்தவர். விழுப்புண் அடைந்திருந்த அவரது போராளிக்கணவர் தமிழ்நாட்டில் மருத்துவ சிகிச்சைக்காக அனுப்பட்டடிருந்தார். அங்கு அவர் புலிகளின் உறுப்பினர் என அடையாளம் காணப்பட்டு சிறைவைக்கப்பட்டிருந்தார். அதற்கு பின்னர் தயாபரனுடன் தொடர்பு ஏற்படவே வன்னி ரெக்கின் நிதியிலிருந்து பணத்தினை மோசடி செய்த தயாபரன் உதயகலாவிடம் கொடுத்துள்ளார். இவ்விடயம் விடுதலைப்புலிகளின் நிர்வாகத்துக்கு தெரியவரவே தயாபரன்.. அவர்களால் இடைநிறுத்தப்பட்டு தண்டனையும் கொடுத்திருந்தனர். அநே நேரம் இறுதியுத்தம் தொடங்கிவிடவே இவர்கள் இருவருமாக இராணுவத்திடம் சணைடைந்து பின்னர' விடுதலையானார்கள். கொழும்பில் தங்கியிருந்படி முகாம்களில் அடைபட்டிருந்த மற்றும் காயமடைந்திருந்த போராளிகளை வெளியே எடுத்து விடுவதாக அவர்களின் உறவினர்களிடம் பெருமளவு பணத்தினை பெற்று மோசடி செய்தவர்கள் அங்கிருந்து இந்தியாவிற்கு தப்பி சென்றுவிட்டனர். தப்பிச் சென்றவர்கள் தங்களை யாரும் தேடாதிருப்பதற்காக தயாபரன் இறந்து விட்டாரென ஒரு செய்தியை உதயகலா பரப்பினார். அதிலும் பணம் சம்பாதிக்க நினைத்தவர் சமாதான காலத்தில் வன்னிக்கு சென்று வன்னி ரெக்கில் தயாபரனை சந்தித்த அனைவரது விபரங்களையும் திரட்டி அவர்களிடம் தொடர்புகொண்டு தயாபரன் இறந்து விட்டார் எனவே அவரது மரணச்சடங்கிற்கு பணம் வேண்டுமென கேட்டபொழுது பலர் அனுப்பியிருந்தனர். ஆனால் ஒருவர் சந்தேகப்பட்டு அவர் இறந்ததற்கான ஆதாரம் கேட்டபொழுது தயாபரன் கண்ணை மூடியபடி படுத்திருந்த ஒரு படத்தினை அனுப்பிருந்தார்...

இது இப்படியிருக்க, 2008ம் ஆண்டில் ரிசி என்கிற ரிசாந்தன் இலண்டனிற்குள் மாணவர் விசாவில் நுளைகிறார். மாணவர் விசாவில் நுளைந்த ரிசியை வைத்து ஸ்கந்தா (ITSO) அனைத்துலக தமிழ் மாணவர் அமைப்பு என்கிற தொரு அமைப்பினை ரிசியியையும் தனது மகளையும் இணைந்து பதிவு செய்கிறார். (பதிவிலக்கம்: 6993075 பதிவு செய்த திகதி: 20.08.2009)

blREXGJ0017-44349_3-05806546_Seite_1.jpg

. இந்த அமைப்பு உதவி அமைப்பு என வெளியில் சொல்லப்பட்டாலும் அது வியாபார நிறுவனமாகவே பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. அதாவது இந்த அமைப்பிற்கு கிடைக்கும் நிதியை அதன் நிர்வாக இயக்குனர்கள் பகிர்ந்து கொள்ளலாம். அது மட்டுமல்லாது ஸ்கந்தாவே ரிசியை இங்கிலாந்தின் தமிழ் இளையோரமைப்பு. தமிழ் ஊடகங்கள்.. பிரித்தானிய தமிழர் பேரவை. மற்றும் தமிழ் வியாபாரிகள் பிரபலங்கள் என அனைவரிடமும் அறிமுகம் செய்து வைத்தார்.

இதையடுத்து ரிசி தாயகத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களிற்கான உதவி. வடகிழக்கு பல்கலைக்கழக மாணவர்களிற்கான உதவி என தமிழ் இணையத்தளங்கள், ஊடகங்கள், facebook என விளம்பரம் செய்யத் தொடங்கினார். ஸ்கந்தா - ரிசி கூட்டணி எதிர்பார்தத்தை போலவே பலர் மனமிரங்கி பணம் கொடுக்கத் தொங்கினார்கள். இவர்களிற்கு ஊரில் இருந்து உதயகலா .கஸ்தூரி என்கிற இருபெண்களே பாதிக்கப்பட்டவர்களின் படங்களை அனுப்பிவைத்துக்கொண்டிருந்தனர். இவர்கள் பாதிக்கப் பட்டவர்களின் படங்களை வைத்து பணம் சம்பாதிக்கிறார்கள் என அறிந்த கஸ்தூரி இவர்களை விட்டு விலகிவிட்டார்.

இவர்கள் தங்கள் ஏமாற்று வியாபாரத்தினை விருத்தி செய்ய நினைத்து விடுதலைப்புலிகளின் காலத்தில் முல்லைத்தீவில் பெண்கள் பராமரிப்பு இல்லமாக இருந்த பாரதி இல்லத்தினை மீண்டும் தாங்கள் பொறுப்பெடுத்து பாரிஜாதம் என்கிற பெயரில் இயக்கவிருப்பதாக பிரச்சாரம் செய்து பல வியாபாரிகளிடம் பெரும் தொகை பணத்தினை சுருட்டியிருக்கிறார்கள். மறுபுறம் உதயகலாவை வைத்து முன்னைநாள் போராளிகள் காயமடைந்தவர்கள் எனப்பலரையும் வெளிநாடு அழைத்து செல்வதாக அவர்களிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு அவர்களை மலேசியாவிலும். தாய்லாந்திலும் கொண்டு சென்று கைவிட்டுள்ளார்கள். அதே நேரம் காயமடைந்த போராளிகளிற்கு நல்வாழ்வளிப்பதற்கு வெளிநாடு அழைத்து வருகிறோம் என்று வெளிநாடுகளிலும் பணம் சேகரித்துள்ளனர். ITSO அமைப்பின் நடவடிக்கை இப்படியிருக்க, இதே ஸ்கந்தா நம்பிக்கை ஒளி (RAY OF HOPE) என்கிற இன்னொரு அமைப்பையும் பதிவு செய்தார். இவ்வமைப்பிலும் ஒரு இயக்குனராக தனது மனைவியையும் இணைத்துக் கொண்டார். (பதிவிலக்கம் 7192725 பதிவுத் திகதி 17.03.2010)

blREX0L0338-30846_6-06930929_Seite_1.jpg

இதன் மூலமாக லண்டனில் வாழ்ந்த பல முன்னை நாள் போராளிகளை தொடர்புகொண்டு அவர்களின் ஊடாக பாதிக்கப்பட்ட முன்னைநாள் போராளிகளிற்கென நிதி சேகரிக்கத் தொடங்கினார். சிறையிலிருந்து விடுதலையான பல போராளிகளின் தேவைகளை நேரடியாகவே வீடியோ காட்சிகளாக படமெடுத்து அதனை வெளிநாடுகளில் உள்ளவர்களிடம் போட்டுக்காட்டி பணம் சேகரிக்கப் பட்டது. ஆனால் இந்த அமைப்பினை உருவாக்கி அதற்காக தன்னலமற்று பல முன்னைநாள் போராளிகள் உதவிசெய்திருந்தனர். ஆனால் காலப் போக்கில் ஸ்கந்தாவின் குளறுபடி சரியான கணக்கு வழக்கு காட்டாமை என்பவற்றால் பலரும் அதிலிருந்து விலகிப் போய்விட்டனர். ஸ்கந்தாவும் அவருடன் சேர்ந்து சிலரும் தொடர்ந்தும் இந்த நம்பிக்கையொளியை தொடர்ந்தும் இயக்குகின்றனர். (மற்றயவர்களது விபரங்கள் என்னிடமிருந்தாலும் அவர்களது நலன் கருதி அவற்றை இணைக்கவில்லை)

சிறிலங்கா அரசுடன் சேரந்தியங்கும் கே.பி. வன்னியில் தொடக்கியிருக்கும் 'அன்பு இல்லம்' என்னும் சிறுவர் இல்லத்திற்கும் ஸ்கந்தா அவர்கள் ஒரு தொகை நிதியுதவி செய்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. இவரது அண்மைக்கால நடவடிக்கையாக இறுதி யுத்தத்தின் போது தலைவருடன் நின்று தப்பிவந்தவர்கள் எனக்கூறிக்கொண்டு தாங்களே தலைமைச்செயலகம் எனவே நாங்களே மாவீரர்நாள் செய்யும் உரிமையுள்ளவர்கள் என கூறிக்கொண்டு புதிதாக இரண்டாவது மாவீரர் நாளை ஜரோப்பா எங்கும் அரங்கேற்றியவர்களிற்கு பின்னாலிருந்து இயக்கியது மட்டுமல்ல அவர்களிற்கு ஆதரவு கொடுக்கும்படி அனைவரையும் ஸ்கந்தா வேண்டியிருந்தார்.

இனி ITSOஅமைப்புப்பற்றிய அண்மைய தகவல்கள். வருடாவருடம் Company House க்கு அனுப்பப்படவேண்டிய கணக்குவிபரங்கள் அனுப்பப்படாமையால். இந்த நிறுவனத்தின் பதிவினை Company House இரத்துச் செய்துள்ளது. இதற்கான இறுதி அறிவுறுத்தல் கடந்தவருடம் டிசம்பர் மாதம் 14ம் திகதி வழங்கப்பட்டிருந்தது. நிறுவனத்தை கலைத்தவிட்டதான அறிவிப்பினை இவ்வருடம் மார்ச் மாதம் 29ம் திகதி அனுப்பப்பட்டது. ஒரு கணக்காளரான ஸ்கந்தா ஏன் இந்த அமைப்பின் கணக்கு அறிக்ககையை சமர்ப்பிக்கவில்லை என்பதை அவர்தான் விளக்க வேண்டும். இதுவிடயமாக அவரைத் தொடர்புகொள்ள மேற்கொண்ட முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை. Company House இனால் ITSO கலைக்கப்பட்டபோதிலும் இவ்வருடம் ஒகஸ்ட் மாதம் வரை இவ்வமைப்பு செயற்பட்டு வந்துள்ளதாகத் தெரியவருகிறது.

இறுதியாக குழப்பமடைய வைக்கும் சிலகேள்விகள். இதுவரை இவர்கள் வழங்கிய உதவிகளிற்கான சரியான தரவுகளோ வரவு செலவு கணக்குகளோ எங்குமே காண்பிக்கப்படதாது ஏன்? உதவிதேவைப்படும் எத்தனையோ ஆயிரம் பேர் தாயகத்தில் காத்துக்கிடக்க ..பல உதவிகளையும் பெற்றுக்கொள்ளும் வசதியுள்ள கே.பி அவர்களின் அன்பு இல்லத்திற்கு நிதியுதவி செய்யவேண்டிதன் அவசியம் என்ன? ரிசி தன்னை மற்றையவர்களிற்கு அறிமுகம் செய்யும் பொழுது தன்னைப்பற்றிய தகவல்களை மாற்றி மாற்றிக் கொடுப்பது ஏன்? இத்தனை குழப்பங்களும் மோசடிகளும் கொண்டதொரு வலைப்பின்னலை பின்னாலிருந்து இயக்கும் BOSS யாரென்று ஆராய்ந்தால் அவர்தான் மொட்டை BOSS என்கிற ஸ்கந்தா.

Edited by sathiri

இலண்டனில் பணத்தை வேண்டி ஏமாற்றியது குற்றம். எனவே இவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என எண்ணுகிறேன். அவ்வாறு செய்தால் மட்டுமே இப்படியானவர்களுக்கு தண்டனை கிடைப்பதுடன் இவ்வாறு ஏமாற்ற எண்ணுபவர்களுக்கு ஒரு பாடமாகவும் இருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பணம் சம்பாதிக்க நினைத்தவர் சமாதான காலத்தில் வன்னிக்கு சென்று வன்னி ரெக்கில் தயாபரனை சந்தித்த அனைவரது விபரங்களையும் திரட்டி அவர்களிடம் தொடர்புகொண்டு தயாபரன் இறந்து விட்டார் எனவே அவரது மரணச்சடங்கிற்கு பணம் வேண்டுமென கேட்டபொழுது பலர் அனுப்பியிருந்தனர். ஆனால் ஒருவர் சந்தேகப்பட்டு அவர் இறந்ததற்கான ஆதாரம் கேட்டபொழுது தயாபரன் கண்ணை மூடியபடி படுத்திருந்த ஒரு படத்தினை அனுப்பிருந்தார்...

:lol::D :D :D

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது எழுத வாய்ப்புள்ளது..............

வாசிப்பதற்கு கொம்பயுடேரில ஒரு தட்டு.

இதெல்லாம் இல்லாத காலத்தில் இது ஒன்றும் நடக்காத காரியமாக இருக்கவில்லை.

இதெல்லாம் நடந்துகொண்டுதான் இருந்தது................... இதையெல்லாம் தாண்டி தமது உயிர்கொடையின் புனிதத்தாலேயே மாவீரர்கள் இந்த முப்பது வருட போரை நாடத்தி முடித்தனர்.

அவ்வப்போது மண்டையில் போடுதல் என்பது எந்தளவிற்கு தேவையாக இருந்தது என்பது. தமிழனின் ஒரு சாதாரண வீதியில் இருக்கும் கல்லை எடுத்து ஒரு ஓரமாக போட முயன்ற தமிழனுக்கும் தெரிந்த உண்மை.

அது தெரியாத அறனை இப்போது தமிழன் என்று எங்காவது இருந்தால்................? அந்த யந்துக்கு போராட்டம் என்றால் என்ன என்பதை மனிதராக பிறந்தவர்களால் விளக்க முடியாது. மனிதர்கள் மனிதர்களின் பாசையைதான் பேசமுடியும். மிருகங்கள் போல் ஓசை எழுப்பலாம் அனால் அதை அவை புரிந்து கொள்ளும்.

"இறந்ததற்கான ஆதாரம் கேட்டபொழுது தயாபரன் கண்ணை மூடியபடி படுத்திருந்த ஒரு படத்தினை அனுப்பிருந்தார்..."

ஆண்டவா............ கொடுமை மேல் கொடுமை :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

செத்த மாதிரி இருக்கிற படம் எடுக்கும் போது... வெள்ளை வேட்டியை கட்டி, மூக்கிலை பஞ்சு வைச்சிருந்தால், ஒருத்தருக்கும் சந்தேகம் ஏற்பட்டிருக்காது. :lol:

ஸ்கந்தா பற்றி முன்னர் ஒருமுறை பதிந்திருந்தேன் .84 களில் இயக்கங்களை நக்கலடிக்கும் புளிச்சல் ஏவறை கோஷ்டிகள் இவர்கள் ,என்ன மாதிரி பின்னர் வந்து இப்படியான விடயங்களில் ஈடுபட்டர்ர்கள் என்று?

சோழியன் குடுமி சும்மா ஆடாது.இவர் சுரேஷ் பிறேமசந்திரனின் ஒன்றுவிட்ட தம்பி .இவரும் A/L யாழ் இந்துதான்.

  • கருத்துக்கள உறவுகள்

சிறி அண்ணா எப்படி உங்களுக்கும் எனக்கும் இந்த விசயதுல மூளை ஒரேமாதிரி வேலை செய்யுது???? கடவுளாணை நானும் அப்படி தான் நினைச்சேன். நீங்கள் எழுதிப்போட்டிங்கள். :icon_mrgreen:

Wir haben das gleiche Blut JEEVA. :rolleyes:

இதை தமிழில் சொன்னால், எங்களுக்குள் ஓடுவது ஒரே... இரத்தம். சிந்தனையும் அப்படித்தானிக்கும். :):D

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவா எப்ப இருந்து ஜட்ச் ஆனவர்?

  • கருத்துக்கள உறவுகள்

தயாபராஜ் முன்னர் ஒரு போராளி,வன்னி டெக்யில் படிப்பித்தவர் அவர் தற்போது யாருட‌னும் சேர்ந்து இருக்கலாம் ஆனால் அவர் இறந்தது என செய்தி வந்த உடன் இதே யாழில் பல பேர் அஞ்ச‌லி செலுத்தி உள்ளார்கள்...அவர‌து மர‌ணம் குறித்து யாழ் பல்கலை கழகத்தால் வெளியிட‌ப்படும் அறிக்கையிலும் தங்கள் கண்ட‌னத்தை பதிவு செய்து உள்ளார்கள்...அந்த நேர‌த்தில் நீங்கள்,நான் உட்பட‌ அவர் செத்திட்டார் என்டே நினைத்திருப்போம் அதனாலேயே யாழில் அஞ்ச‌லி செலுத்தினார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சிறு தகவல்

இந்தத்திரியில் வரும் அன்புச்செல்வனுடன் அதிகம் திண்ணையில்பேசியுள்ளேன்.

சிலவிடயங்களில் சாந்தியக்காவுடன் ஏற்பட்ட விரிசல் காரணமாகவே அவர் இங்கு எழுதுவதில்லை என எனக்கு தனிமடலில் அறிவித்திருந்ததாக ஞாபகம். அந்த தம்பி மீது நான் மிகவும் மரியாதை வைத்துள்ளேன்.

அண்மையில் இரண்டுபேர் ஒரே செய்தியை புதினப்பகுதியில் இணைத்திருந்தனர். அதை அந்த திரியில் நான் சுட்டிக்காட்டியிருந்தேன். அதற்கு மறுப்புத்தெரிவித்து ஒருவரிடமிருந்து எனக்கு தனிமடலில் காட்டமான அறிவுறுத்தல் வந்திருந்தது. அதை வாசித்துவிட்டு பெரிது பண்ணாமல் விட்டுவிட்டேன். அண்மையில் எனது ஈ மெயிலைச்சுத்தம் செய்தபோது தற்செயலாக அதை எழுதியர் பெயர் கண்ணில் பட்டது. மீண்டும்மீண்டும் பார்த்தபோது அதிர்ச்சி. அந்த ஈ மெயில் அன்புச்செல்வன் என்ற பெயரில் இருந்து வந்திருந்தது.

Edited by விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சிறு தகவல்

இந்தத்திரியில் வரும் அன்புச்செல்வனுடன் அதிகம் திண்ணையில்பேசியுள்ளேன்.

சிலவிடயங்களில் சாந்தியக்காவுடன் ஏற்பட்ட விரிசல் காரணமாகவே அவர் இங்கு எழுதுவதில்லை என எனக்கு தனிமடலில் அறிவித்திருந்ததாக ஞாபகம். அந்த தம்பி மீது நான் மிகவும் மரியாதை வைத்துள்ளேன்.

அண்மையில் இரண்டுபேர் ஒரே செய்தியை புதினப்பகுதியில் இணைத்திருந்தனர். அதை அந்த திரியில் நான் சுட்டிக்காட்டியிருந்தேன். அதற்கு மறுப்புத்தெரிவித்து ஒருவரிடமிருந்து எனக்கு தனிமடலில் காட்டமான அறிவுறுத்தல் வந்திருந்தது. அதை வாசித்துவிட்டு பெரிது பண்ணாமல் விட்டுவிட்டேன். அண்மையில் எனது ஈ மெயிலைச்சுத்தம் செய்தபோது தற்செயலாக அதை எழுதியர் பெயர் கண்ணில் பட்டது. மீண்டும்மீண்டும் பார்த்தபோது அதிர்ச்சி. அந்த ஈ மெயில் அன்புச்செல்வன் என்ற பெயரில் இருந்து வந்திருந்தது.

விசுகு அதை விடுங்கோ ரிசி பற்றியதை எழுதுங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

என்ன உலகமடா, நன்றி பகிர்வுக்கு சாத்திரியண்ணா

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி சாத்திரியண்ணா

ம்ம்ம்... பூதம்தான்!!!!!!!!!!! .. ஆனால் ஆச்சரியப்படவில்லை! .. இவர்கள்தான் (BTFஇனுள் ஊடுருவிய ஓரிரண்டு, நா.க.த.அ உருத்திரா கோஸ்டி, GTV, கேபிக்கள், தலைமைச்செயலகம், ..) எமது போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல இம்முறை மாவீரர் நாளை புலமெங்கும் வியாபாரமாகிய கோஸ்டியினர்!

... இவர்கள் மட்டுமல்ல இன்னும் சிலர், இன்னும் பல ஆதாரங்கள் இருக்கின்றன .. ஆனால் சிலர் இன்னும் நண்பர்களாக இல்லாவிடினும் தெரிந்தவர்களாக இருக்கிறார்கள் ... எழுத முற்பட்டாலும் ... தற்போதைக்கு தேவையற்ற பிரட்சனைகளை தவிர்ப்போம்!

... இவற்றை எவ்வாறு/எப்படி வெளிக்கொணருவது என்றுதான் இதில் தொடங்கினேன் ..

http://www.yarl.com/...showtopic=92404

..முடியவில்லை, ஆனால் இறுதியாக ... நன்றிகள் ... உண்மைகள் வெளிவரட்டும் ...

Edited by Nellaiyan

... இந்த செய்திகளோடு ஆவது BTF ஆனது, அவ்வமைப்பில் இருக்கும் இந்த நச்சுப்பாம்புகளை கழட்டி விடவேண்டும், ஒரே அடியாக!! ஓடியாடி வேலை செய்கிறார்கள் என்பதற்காக பாம்பை மடியினுள் தொடர்ந்து போட்டு வைத்திருக்காதீர்கள்! .. அது உள் வந்ததே ...!

Wir haben das gleiche Blut JEEVA. :rolleyes:

இதை தமிழில் சொன்னால், எங்களுக்குள் ஓடுவது ஒரே... இரத்தம். சிந்தனையும் அப்படித்தானிக்கும். :):D

சிறி அண்ணை அதைச் இலகுவாம மதுராசி பட்டனம் படப்பாட்டில் சொன்னது போல. வீ ஆர் பிரதேர்ஸ் அண்ட் சீஸ்டேர்ஸ் பட் பேரண்ட்ஸ் ஆர் டிவிரேண்ட்ஸ். :lol:

நெல்லையன் பிரிஎஃபில் இருந்து ஸ்கந்தா அண்ணை தானகவே விலகி விட்டார்.ஒருவர் தனது பெயரில் எல்லவற்றையும் வைதிருப்பதும் நம்பிக்கையானவர் கைகளில் அவை வன்னியில் இருந்து நெறிப்படுத்தப்பட்டதும் நீங்களும் நாங்களும் அறிந்த விடயம்.

இன்று பிளவு பட்டிருக்கும் தனம் மற்றும் ஸ்கந்தா ஆகியோரின் கைகளிலையே வன்னித் தலமையால் நம்பிக்கையான பொறுப்புக்கள் ஒப்படைக்கப் பட்டிருந்த்தன என்னும் உண்மையை நீங்கள் ஒப்புக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.இன்று இந்த இருவருக்கும் இடையேயான நம்பிப்பகியீனமே பலராலும் ஊதிப் பெருப்பிக்கப்பட்டு இரண்டு அணிகளாகி பலரும் இனி எமக்கு இதில் நேரத்தைச் செலவைக்க முடியாது என்று ஒதுக்கும் நிலைக்கு வத்திருக்கிறது.இது எம்மையே மேலும் மேலும் பலவீனமாக்கும்.

என்னைப் பொறுத்தவரை துரோகம் என்பது ஒரு நாள் வெளிப்படும்.அப்போது நாம் அவற்றை நிராகரிக்கபதே மேல்.அதுவரை ஆதாராங்கள் எதுவும் இன்றி மாறி மாறித் துரோககிப் பட்டம் கொடுப்பதை நிறுத்தி விட்டு அடுத்த வருடம் மார்ச் மாதாம் வரும் மனிஉரிமைச் சபை கூட்டத் தொடருக்கு முன்னரான பரப்புரை வேலைகளில் எம்மை இணைத்துக் கொள்வதே ஆரோக்கியமான விடயம்.

  • கருத்துக்கள உறவுகள்

.

என்னைப் பொறுத்தவரை துரோகம் என்பது ஒரு நாள் வெளிப்படும்

.அப்போது நாம் அவற்றை நிராகரிக்கபதே மேல்.

அதுவரை ஆதாராங்கள் எதுவும் இன்றி மாறி மாறித் துரோககிப் பட்டம் கொடுப்பதை நிறுத்தி விட்டு அடுத்த வருடம் மார்ச் மாதாம் வரும் மனிஉரிமைச் சபை கூட்டத் தொடருக்கு முன்னரான பரப்புரை வேலைகளில் எம்மை இணைத்துக் கொள்வதே ஆரோக்கியமான விடயம்.

நன்றி நாரதர்

இதுதான் எனது கருத்தும் செயற்பாடும்.

துரோகம் என்பதை பிரான்சில் இதுவரை நான் காணவில்லை என இங்கும் நான் பலமுறை எழுதினேன். அதற்கும் காரணம் இதுதான். துரோகம்செய்பவர்கள் இங்கு மக்கள்முன் வரமுடியாது என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கையுள்ளவன் என்பதால்தான் அப்படி எழுதினேன். இதை இங்கு பலரிடமும் சொல்வேன். சொல்லிக்கொண்டுதானிருப்பேன்.

உண்மையில் எவ்வளவோ வேலைகள் இருக்கின்றன. அவற்றை நாமும் செய்யாமல் செய்பவர்களையும்செய்யவிடாமல் இருப்பதே இன்றைய தமிழரின் பின் தங்கலுக்கான காரணம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தயாபராஜ் முன்னர் ஒரு போராளி,வன்னி டெக்யில் படிப்பித்தவர் அவர் தற்போது யாருட‌னும் சேர்ந்து இருக்கலாம் ஆனால் அவர் இறந்தது என செய்தி வந்த உடன் இதே யாழில் பல பேர் அஞ்ச‌லி செலுத்தி உள்ளார்கள்...அவர‌து மர‌ணம் குறித்து யாழ் பல்கலை கழகத்தால் வெளியிட‌ப்படும் அறிக்கையிலும் தங்கள் கண்ட‌னத்தை பதிவு செய்து உள்ளார்கள்...அந்த நேர‌த்தில் நீங்கள்,நான் உட்பட‌ அவர் செத்திட்டார் என்டே நினைத்திருப்போம் அதனாலேயே யாழில் அஞ்ச‌லி செலுத்தினார்கள்

நேர்மையான துணிச்சலான கருத்தாளர்களில் நான் மதிக்கிற ஒருவர் ரதியக்கா. உங்கள் கருத்தே எனதும். எனது ஊனமுற்ற சகோதரி தயாபரராஜ் போன்றோரால் பாதிக்கப்பட்டவர். தயாபரராஜ்ஜின் நல்ல நண்பரான அன்புச்செல்வனுக்கு இவைபற்றி தெரியும். ஒரு பெண்ணின் வாழ்வு நன்றாக அமைய வேண்டும் என்பதனால் பேசாமல் இருக்கிறேன் ரதியக்கா.

  • கருத்துக்கள உறவுகள்

நான் எவரையும் தப்பாகவோ சரி பிழை பற்றியோ எழுதவில்லை.

எனக்குத்:தெரிந்த எனக்கு தனிமடலில் வந்த ஒரு குறிப்பையே இணைத்தேன். சாந்தியக்கா அது பற்றி விபரமாக எழுதுமாறு கேட்டிருந்தார். நான் இங்கு சாந்தியக்காவைக்குறிப்பிட்டதால் அவாவின் கேள்வி நியாயமானது என்பதை உணர்கின்றேன். ஆனால் தற்போதைக்கு எல்லாமே சந்தேகங்களிலும் இணையங்களின் சோடிப்பாலும் இருப்பதால் எவரையும் நான் சந்தேகித்தோ குற்றம் சாட்டியோ எழுதவிரும்பவில்லை. ஆனால் அவை ஆதாரங்களுடனான நிரூபிப்பில் மக்கள் பார்வைக்கு வந்தால் எனது பக்க நியாயங்களையும் சமர்ப்பிக்க தயங்கமாட்டேன். அதுவரை சாந்தியக்காவிடம் பொறுமையாக இருக்கும்படி கேட்கின்றேன்.

(சயனற் அடித்த பிரச்சினையிலேயே சாந்தியக்காவுக்கும் அன்புச்செல்வனுக்கும் இடையே கருத்துமோதல் வந்ததாக நினைக்கின்றேன். அதை நான் பார்த்ததாக ஞாபகம்)

நாரதர் ... பலதை எழுத முடியவில்லை ... இருப்பினும் ...

... நீங்கள் கூறியது போல் எல்லோரிடமும் வன்னியில் இருந்த தலைமை பொறுப்பை ஒப்படைக்கவில்லை! அப்படி ஒப்படைக்கப்பட்டது என்று கூறப்படுவது சோடிக்கப்பட்ட/திரித்துக்கூறப்பட்ட/புனையப்பட்ட கதையே!!!

உண்மையில் ஸ்கந்தாவை, மேற்கு லண்டனில் காஸ்ரோக்களுக்கு வேலை செய்யும் ஒருவர் 2004ம் ஆண்டில் புலத்து காஸ்ரோக்களுக்கு அறிமுகப்படுத்தி, இவர் கலை பண்பாட்டுக்கழகத்திற்கு உதவக்கூடியவர் என அறிமுகப்படுத்தப்பட்டது ... இவர் மட்டுமல்ல இன்னும் சிலர் யுத்தநிறுத்த காலத்தில் இந்த காஸ்ரோக்களின் தூரநோக்கினால்(??) ... வேலியில் போன ஓணானை மடியில் போட்டு கட்டிய வேலையாக ... அரவணைக்கப்பட்டார்கள்!!! ... ஆனால் வந்தவர்களோ ... எவ்வாறென்று தெரியவில்லை ... காஸ்ரோவை (அறிவற்ற ஜடம்) எப்படியோ தனிய சந்தித்து ... பல அமைப்புக்களை கைப்பற்றினார்கள்!!!

இந்த குமபலின் ... எக்கவுண்டன்மார், டாக்குத்தர்கள், கவுண்ஸிலர்கள் ... இருக்கும் ஒரு டாக்குத்தர் ... இன்றுவரை கோத்தாவிற்கு மாடு பிடித்தனுப்புவது போல் வேலை பார்க்கும் அவர் .... பிரித்தானிய தலைமைப்பூசாரியின் பதவிக்கு கூடஎடுத்த முயற்சிகள் ஏனோ தெரியவில்லை கை கூடவில்லை!!

ஆனால் ஒன்று உண்மை ... உந்த தனம் கும்பல் அன்று தொடக்கம் கதிரைக்கு போட்ட கூத்துக்களை பயன்படுத்தியே, இந்தகும்பல் உள்நுளைந்தது!!!!!!!!!!!!!! ...

Edited by Nellaiyan

நரேந்திரன் ரத்னசபாபதி ஆயுத முகவர் என்று கூகிளில் வருகின்றது .சாத்திரியாருக்கு இவரை தெரியுமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நரேந்திரன் ரத்னசபாபதி ஆயுத முகவர் என்று கூகிளில் வருகின்றது .சாத்திரியாருக்கு இவரை தெரியுமா?

நரேன் தெரியும்.

நரேன் தெரியும்.

தெரியும் என்று ஒற்றை சொல்லில் சொன்னால் என்ன மாதிரி ?.எனது பால்ய நண்பன். 27 வருடங்களுக்கு பின் எனது பெற்றோரை சந்திக்க வந்த இடத்தில் கொழுவலில் முடிந்து விட்டது .இவர் எப்படி உதில் ஈடுபட்டார் /

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.