Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாத்திரிக்கு தடை?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ம்..இப்போது சிறிது விளங்குகிறது.

சாத்து தன்னுடைய பதிவுகளை அகற்றியபின் அவருடைய ஆக்கங்களுக்கு விமர்சனம் எழுதியவர்களின் பதிவுகளைப் பார்க்கப் பரிதாபமாக இருக்கிறது. நல்லகாலம் அதில் நான் அதிகமாக ஒன்றும் எழுதவில்லை.... பதில் எழுதியவர்களை எல்லாம் சாத்து என்ன கேணயர்கள் என்று நினைத்துவிட்டாரா?....அவருடைய ஆக்கத்திற்கு மதிப்பளித்து வாசித்துப் பதிவிட்ட அனைவரையும் ஒரு படைப்பாளியான சாத்து அவமதித்துள்ளார். இத்தகைய செயல் ஒரு கருத்துக்களத்தின் ஆரோக்கியமான சூழலைப்பாதிக்கும் என்பதை சாத்து அறிவார் அப்படியிருந்தும் ஏன் இப்படியான செயலில் இறங்கினார்? மட்டுறுத்தினர்களுடன் முரண்பாடு என்றால் அவர்களுடன் தனிமடலில் விடயத்தை பேசித் தீர்த்திருக்கலாம்..... எனக்கென்னவோ சாத்துவுக்கு ஆத்திரம் கண்ணை மறைக்க அவசரம் செயலில் குதித்திருக்கிறது போல் இருக்கிறது.

  • Replies 91
  • Views 9.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியார், அடித்தால் மொட்டை அல்லது வளர்த்தால் குடுமி, என்ற மாதிரிப் பேசாதீர்கள்!

உங்கள் திரியைத் தேடித் தேடி வாசிக்கும் வாசகனாக உங்களைக் கேட்டுக்கொள்கின்றேன்!

பூக்கள் எவ்வளவு அழகாக இருந்தாலும், பூக்களில் தேன் இல்லாவிட்டால், பூச்சிகளைப் பொறுத்தவரை அவை வெறும் 'பிளாஸ்டிக்' பூக்களே!

சாத்திரி தனது முன்னைய பதிவுகளை நிர்வாகத்தின் அனுமதி இன்றி தொடர்ந்தும் நீக்கி வருவதால் 15 நாட்களுக்கு யாழ் கருத்துக்களத்தில் இருந்து தடை செய்யப்படுகின்றார்.

யாழ் இணையம் ஒரு சமூகத்தளம், ஒவ்வொரு அங்கத்தவரும் எதோ ஒரு விதத்தில் தமது பங்களிப்பை (பணத்தைக் குறிப்பிடவில்லை) தமக்குக் கிடைக்கும் நேரத்தில் எம்மோடு பகிந்து கொள்ளகிறார்கள். இருப்பினும், அவை யாழ் களவிதிகளுக்கு உட்பட வேண்டும் என்பது கள நிர்வாகத்தின் வேண்டுகோள்! முதல் தரம் களவிதியை மீறும் போது மட்டுறுத்தினர்கள் அறியத்தந்தும், தொடர்ந்து களவிதிகளை மீறுபவர்கள் யாராக இருந்தாலும், நிர்வாகம் தமது கடமையச் செய்ய வேண்டும் என்பது சக உறவுகளின் எதிர் பார்ப்பாக இருக்கலாம். களத்தில் ஒருவரைத் தடை செய்தமைக்காக காரணம் கேட்பது பிழை இல்லை, ஆனால் அடுத்தவரைத் தாக்கி/ ஏளனப் படுத்தி எழுத முயற்சிப்பது/ எழுதுவது சரியாகப் படவில்லை.

ஒருவரால் ஆரம்பிக்கப்பட்ட தலைப்பு, 9 பக்கங்களுக்கு மாறி மாறி கருத்துகளை பலர் பதிந்த பின்னர் தலைப்பில் பதிந்த பதிவை முற்றாக நீக்கினால் என்ன அர்த்தம்? ஆரம்பித்தவர் பிழையாக ஆரம்பித்து விட்டார் என்றா? அல்லது அவர் பதிந்த தலைப்பிற்கு அவரிடமே பதில் இல்லை என்றா? அல்லது கருத்துப் பதிந்த சக உறவுகளை, யாழ் களத்தை அவமானப் படுத்துவதா? சாத்திரிக்கும் எனக்கும் எந்த மனத்தாங்கலும் இல்லை, ஆனால் தவறு என்று எனது புத்திக்கு பட்டதை மட்டும் இங்கே குறிப்பிடுள்ளேன்!

  • கருத்துக்கள உறவுகள்

மோகன் அண்ணை, ந்ழலி, இணையவன்..

பதிவுகள் இட்டாற்பிறகு அதை மாற்றும், நீக்கும் உரிமையை எடுத்துவிட்டால் என்ன? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி மீதும் அவரது எழுத்துக்கள் மீதும் (காமம் உட்பட) மதிப்புக் கொண்டே இக்கருத்தை எழுதுகின்றேன்.

யாழின் விதிப்படி ஒரு பதிவுக்கு பதில் கருத்து வைக்கப்பட்ட பின்னர் பதிவை நீக்குவது பிழையானது. சாத்திரி எழுதிய "காமம்" என்ற பகுதியில் எனக்கும் நிறைய விமர்சனங்கள் இருந்தாலும் பதிவைப் பலரின் வேண்டுகோளின் அடிப்படையில் நீக்கியதிலும் விமர்சனம் இருக்கின்றது.

பதிவை நீக்கியதால் ஏற்பட்ட கோபத்தால் சாத்திரி தான் முன்னர் எழுதிய கதைகளை இரகசியமாக அழித்ததும் அடாவடித்தனமே. நீண்ட கால உறுப்பினர் என்ற வகையில் சாத்திரிக்கு விதிகள் தெரிந்ததுதான் இருக்கும். நீக்குவது பற்றிய அறிவித்தல் தனிமடல் மூலம் முன்னரே தரப்படவில்லை என்பது சரியான வாதமாக இருக்காது ஏனெனில் நீக்கப்பட்டதற்கான காரணம் (அது சரியென்று சொல்லவரவில்லை) களத்தில் தெளிவாக உள்ளது. எனவே நிர்வாகம் பாரபட்சம் காட்டாமல் நடவடிக்கை எடுத்தது சரியானது என்பதை சாத்திரி ஏற்றுக்கொண்டு மீண்டும் களத்திற்கு வந்து கதைகள், கருத்துக்கள் பதியவேண்டும் என்று சக கருத்தாளர் என்ற ரீதியில் கேட்டுக்கொள்கின்றேன்.

இங்கு கச்சை கட்டிக்கொண்டு ஆதரவு, எதிர் நிலைப்பாடுகளை எடுப்பதன் மூலம் களவிதிகளை துச்சமாக மதிப்பதும் கவலைக்குரிய விடயமே!

மோகன் அண்ணை, ந்ழலி, இணையவன்..

பதிவுகள் இட்டாற்பிறகு அதை மாற்றும், நீக்கும் உரிமையை எடுத்துவிட்டால் என்ன? :rolleyes:

நீக்கினால் களத்தில் ஒரே தமிழ்க்கொலையாகத்தான் இருக்கும்!

மோகன் அண்ணை, ந்ழலி, இணையவன்..

பதிவுகள் இட்டாற்பிறகு அதை மாற்றும், நீக்கும் உரிமையை எடுத்துவிட்டால் என்ன? :rolleyes:

தப்பித்தவறி ஒரு எழுத்துப் பிழை விட்டால் கூட அதனை மாற்ற முடியாமல் அல்லவா இசை போகும்...? நாம் என்ன சிறுவர்களா? இங்கு பதிந்த உறுப்பினர் எல்லாருக்கும் பதின்மூன்று வயதிற்கு மேல தானே? எடிட் பண்ணும் ஒரு சந்தர்ப்பம் நிர்வாகத்தால் தந்தால் அதை ஏன் எம்மால் சரியான முறையில் மட்டும் பயன் படுத்த முடியாமல் போகிறது? :rolleyes:

மோகன் அண்ணை, ந்ழலி, இணையவன்..

பதிவுகள் இட்டாற்பிறகு அதை மாற்றும், நீக்கும் உரிமையை எடுத்துவிட்டால் என்ன? :rolleyes:

இது நல்லதொரு ஆலோசனை.

எழுத்துப் பிழை விட்டால், திருத்தி அடுத்த பதிவு இடலாம்.

....

நீக்கினால் களத்தில் ஒரே தமிழ்க்கொலையாகத்தான் இருக்கும்!

அதனை வாசித்து பல தற்கொலைகளும் இடம்பெற வாய்ப்புள்ளது... :lol::D

அதனை வாசித்து பல தற்கொலைகளும் இடம்பெற வாய்ப்புள்ளது... :lol::D

சரி. சரி.

ஒரு பிரச்சனையாவது நிர்வாகத்திற்கு குறையும்தானே. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நீக்கினால் களத்தில் ஒரே தமிழ்க்கொலையாகத்தான் இருக்கும்!

அப்ப பிரச்சினையில்லாத ஆக்களுக்கு (என்னை மாதிரி :icon_mrgreen: ) மட்டும், அந்த உரிமையைக் குடுக்கலாம்..! :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு கருத்துக்களத்தில் பிழை நடந்தால் அதை யாரும் கேக்கலாம் அகூதா . சாத்திரி தான் வரவேணுமென்று இல்லை . மேலும் அவர் வரமுடியாத நிலையிலேயே என் மூலம் செய்தியை அனுப்பினார் . ஆக உரிமையுடன் கேட்பது தப்பில்லை என்றே நினைக்கின்றேன் :) :) :) .

கோமகன் அண்ணா,

கருத்துக்களத்தில் விதி முறைகள் தெளிவாகச்சொல்லப்பட்டிருக்கிறது, அதை மதித்து கருத்தெழுதவேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும் அப்படி இருக்கும் போது நிர்வாகம் ஒவ்வொருவருக்கும் சொல்லிவிட்டு செய்ய வேண்டிய அவசியம் இல்லை, அதை விட சாத்திரி அண்ணாவாக இருந்தாலும் சரி நானாக இருந்தாலும் சரி,யாராக இருந்தாலும் நமது படைப்பை நீக்க வேண்டி வந்தால் நிர்வாகத்துக்கு தெரிவித்து விட்டு நீக்கலாம். ரிப்போட் பட்டன் இருக்கு அழுத்து ஒரு தகவல் தெரிவித்திருக்கலாம், அதை விடுத்து பலர் பதில் எழுதிய திரியை தன்னிச்சையாக அகற்றுவது என்பது கருத்தாளர்களையும்,களத்தையும் அவமதிக்கும் செயலே. பலபேர் பல மணிநேரம் செலவழித்து ஒருவருடைய ஆக்கத்திற்கு விமர்சனம்,கருத்தெழுவது அவரை புடம்போடத்தான் அப்படி இருக்கும் போது கருத்தாளர்களை அவமதிப்பது சிறந்த செயலா???

கருத்துக்களத்தில் விதி முறைகள் சொல்லப்படிருக்கும் நிலையில் நிர்வாகம் எடுத்த முடிவு சரியானதே. :icon_idea:

ம்..இப்போது சிறிது விளங்குகிறது.

சாத்து தன்னுடைய பதிவுகளை அகற்றியபின் அவருடைய ஆக்கங்களுக்கு விமர்சனம் எழுதியவர்களின் பதிவுகளைப் பார்க்கப் பரிதாபமாக இருக்கிறது. நல்லகாலம் அதில் நான் அதிகமாக ஒன்றும் எழுதவில்லை.... பதில் எழுதியவர்களை எல்லாம் சாத்து என்ன கேணயர்கள் என்று நினைத்துவிட்டாரா?....அவருடைய ஆக்கத்திற்கு மதிப்பளித்து வாசித்துப் பதிவிட்ட அனைவரையும் ஒரு படைப்பாளியான சாத்து அவமதித்துள்ளார். இத்தகைய செயல் ஒரு கருத்துக்களத்தின் ஆரோக்கியமான சூழலைப்பாதிக்கும் என்பதை சாத்து அறிவார் அப்படியிருந்தும் ஏன் இப்படியான செயலில் இறங்கினார்? மட்டுறுத்தினர்களுடன் முரண்பாடு என்றால் அவர்களுடன் தனிமடலில் விடயத்தை பேசித் தீர்த்திருக்கலாம்..... எனக்கென்னவோ சாத்துவுக்கு ஆத்திரம் கண்ணை மறைக்க அவசரம் செயலில் குதித்திருக்கிறது போல் இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

அல்லது இப்படிச் செய்யலாம்.. :rolleyes:

தடையோ, எச்சரிக்கையோ செய்யமுன்னம் அவர்களின் நட்பு வட்டாரத்தில் கருத்துக்கணிப்பு நடத்தி முடிவெடுக்கலாம்..! :lol:

அல்லது இப்படிச் செய்யலாம்.. :rolleyes:

தடையோ, எச்சரிக்கையோ செய்யமுன்னம் அவர்களின் நட்பு வட்டாரத்தில் கருத்துக்கணிப்பு நடத்தி முடிவெடுக்கலாம்..! :lol:

போகவா நிற்கவா என்று கருத்து கணிப்பு எடுத்த பலரே இங்கு தானே நிக்கிறம். <_< <_<

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போகவா நிற்கவா என்று கருத்து கணிப்பு எடுத்த பலரே இங்கு தானே நிக்கிறம். <_< <_<

என்ன?எல்லாரையும் கலைக்கிற பிளானோ?

  • கருத்துக்கள உறவுகள்

அல்லது இப்படிச் செய்யலாம்.. :rolleyes:

தடையோ, எச்சரிக்கையோ செய்யமுன்னம் அவர்களின் நட்பு வட்டாரத்தில் கருத்துக்கணிப்பு நடத்தி முடிவெடுக்கலாம்..! :lol:

உதிலும் பார்க்க... யாழை பூட்டி விடலாம்.

அதற்குத்தான்... இங்கு பலர் குத்தி முறிகிறார்கள் என்று, சந்தேகப்பட வேண்டி உள்ளது.

அது, நடவாத காரியம். தங்களின் முகத்திலேயே... கரியை அப்பிக் கொள்வார்கள்.

உதிலும் பார்க்க... யாழை பூட்டி விடலாம்.

அதற்குத்தான்... இங்கு பலர் குத்தி முறிகிறார்கள் என்று, சந்தேகப்பட வேண்டி உள்ளது.

அது, நடவாத காரியம். தங்களின் முகத்திலேயே... கரியை அப்பிக் கொள்வார்கள்.

சாத்திரியை தடைசெய்தமா கலைத்தமா என்றில்லாமல் எதற்கு இவ்வளவு விவாதங்கள் புரியவில்லை. இந்த பகுதியையும் பூட்டுவதே நல்லது

  • கருத்துக்கள உறவுகள்

வருத்தமான செய்தி.....

யக்கோ........... என்னாச்சு?(பின்ன அண்ணான்னு எழுதவா முடியும்? தில்லோட விளக்கம் இல்லியே)

ஆமா எதுக்குங்க ஆ..ஊ..ன்னா தடை ,படை ,பெட்டிகடைன்னு போறீங்க?

எங்க அக்கா வல்வை சொன்னதுபோல ,, சாத்திரி செய்தது ஒண்ணும் மன்னிக்க கூடிய குற்றமில்ல,

அவர் பதிவுகள அவரே தூக்கினா,,,,,,, அதுக்கு பதில் எழுதினவங்க என்ன வெட்டி பயலுகளா?

பைதவே... இதென்ன ஐ.நா சபையா... எல்லாமே ...பர்வெக்டா நடக்க?

கருத்துக்களம் !

வெறுமனே உணர்ச்சிவசப்பட்ட பங்காளிங்க தனக்கு தானே முடி சூட்டுறதும்,,

இன்னும் எவனாச்சும் என்ன்னையபத்தி புகழ்வானா என்னு ஏங்கி கிடக்குர ,, &எங்ககிட்டையும் , கம்பியூட்டர் இருக்கு எங்கிறதால ... ஆளாளுக்கு எடுத்து விடுற இடம்!

ஒரு கருத்தாளைனை பப்ளிக்ல அவமானபடுத்த இன்னொரு கருத்தாளனுக்கு ,, எந்த அதிகாரமும் இல்லைனு ,, விதி போடுற யாழ் நிர்வாகம் ,, எப்புடி ,, எப்பவுமே இந்த களத்தோட இணைந்து இருந்த ,,,ஒரு கருத்தாளனுக்கு எதிராய் ...அதே அதிகாரத்தை பயன்படுத்தலாம்?

தப்பு பண்ணினாரு அவர் என்றால்,,, அவரை ஒரு புதிய உறுப்பினர் ரேன்சில வைச்சிருக்கலாம்...

ஐமீன்........ அவரால் கருத்து நீக்கம் செய்யப்படும் இடங்களுக்கு ..அவருக்கு தடை விதிச்சிருக்கலாம்!

இல்ல...இந்த இடத்தில்தான் சாத்திரிக்கு 15 நாட்கள் இனி கருத்து எழுத அனுமதிக்கபடும்னு ... நேரடியா அவர் தடையை உறுதி படுத்தி இருக்கலாம்!

அத விட்டுபுட்டு..... ரொம்ப கப்பிதனமா நடந்துக்குறீங்களே பல்ஸ்!!

யாழு முன்னேற நம்ம “போக்குவரத்து” எவ்ளோ எவ்வோர்ட் எடுக்குறாங்க,,

யாழை பின்னோக்கி தள்ளுறது ...... வேற யாருமே இல்ல ..

யாழு நிர்வாகம்தான் எங்கிறத யாரு புரிஞ்சுக்குவா?

இத சொன்னதால எனக்கும் தடைவரலாம்... பச்சே...(மலையாளமாக்கும்).......

நீங்க தடை போட்டா என்ன ,, இல்ல வடையோட ஒரு டீ ....தந்தா என்ன...

எங்ககிட்டையும் கீ போர்ட் இருக்கு............

நாமளும் நியாயம் பேசுவம்ல!! :)

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான பிரச்சனைகள் வரும் என்று தெரிந்துதான்.......... படைப்புக்கள் ஒன்றையும் படைப்பதில்லை. ( எங்களுக்கெல்லாம் படைக்க தெரியாது என்று சிலர் கேன தனமாக நினைத்திருக்கலாம்). எல்லாம் ஒரு தீர்க்க தரிசனம் என்பது எங்களுக்கு மட்டும்தான் தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியாருக்கு தடை,தண்டனை எல்லாம் ஜுஜூப்பி

இப்படியான பிரச்சனைகள் வரும் என்று தெரிந்துதான்.......... படைப்புக்கள் ஒன்றையும் படைப்பதில்லை. ( எங்களுக்கெல்லாம் படைக்க தெரியாது என்று சிலர் கேன தனமாக நினைத்திருக்கலாம்). எல்லாம் ஒரு தீர்க்க தரிசனம் என்பது எங்களுக்கு மட்டும்தான் தெரியும்.

இப்ப என்ன சொல்லவாறீங்கள் படைக்கிறவன் ,கிறுக்கிறவன் எல்லாம்....கே......என்றோ?கி...கி...

என்னாது சாட்ரீக்குத் தடையா?????? :o

ஏன்?

எதற்கு?

யாரால்?

போற போக்கைப் பாத்தால் ரோயல் பமிலிக்கே தடை வரும்போல.... புத்து சாக்கிரதைப்பா :D

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொறுத்த வரை சாஸ்திரிக்கு 15 நாள் தடை காணாது ஒரு மாதம் தடை செய்ய வேண்டும்...புரட்சி கள விதிகளை மீறினார்,சக பெண் உறவுகளை பற்றி தப்பாக எழுதினார் என அவரை 1 மாதம் தடை செய்தது ஆனால் சாஸ்திரிக்கு மட்டும் ஏன் 15 நாள்?...சாஸ்திரி கூட சக பெண் உறவுகளை கேவலமாக எழுதியுள்ளார் அப்போது அவரை தடை செய்யவில்லை ஆனால் இப்போது 15 நாள் மட்டும் கொடுத்துள்ளார்கள்...புரட்சி தடை செய்ய வேண்டும் என சொன்ன சிலர் சாஸ்திரிக்கு சப்போட் பண்ணுவ்தைப் பார்க்க சிரிப்பாக இருக்கிறது...இவர்கள் எல்லாம் ஆட்களுக்கு ஏற்ற மாதிரித் தான் நியாயம் கதைப்பார்கள் அதிலும் அவர்கள் வயதில் பெரியவர்கள்

நான் பொதுவாக...யாருக்கு பதில் அளிப்பேன் என்றால் .....எப்பா சாமி ஆளை விடுங்கோ எனக்கு தூக்கம் வருது...

டிஸ்கி:

எல்லாருக்கும் ஒரு துன்பமான காலம் வருது .. ஆனா இவா..

என்னோடு பகைத்து என்ன செய்ய போகின்றீர்கள் .உலக மகா கள்வர்களை எல்லாம் இன்னமும் கூட்டு வைத்துக்கொண்டு பச்சைத்தண்ணி அடிக்கும் எங்களை பகைக்க நிற்கின்றீர்கள் .

நீங்களும் உங்கள் கொள்கைகளும் போராட்டங்களும்.

இதிலையும் அரசியலா அர்ஜுன் முடியல :lol:

முடியல ........வயிருநோகுது சிரிச்சு................ :D:icon_idea::icon_mrgreen:

முடியல ........வயிருநோகுது சிரிச்சு................ :D:icon_idea::icon_mrgreen:

வயிறு நோக சிரிக்க வேண்டாம் கோமணம் கழண்டுவிடும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.