Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அறிவித்தல்

Featured Replies

எதிர்வரும் 30ம் திகதி யாழ் 13ம் வருடத்தினை நிறைவு செய்கின்றது. அதுவே யாழின் இறுதி நாளும் ஆகும். இதுவரை யாழின் வளர்ச்சிக்கு ஒத்துழைத்து அனைவருக்கும் நன்றி. அத்துடன் இதுவே யாழில் எனது இறுதிக் கருத்துமாகும்.

மோகன்

  • Replies 79
  • Views 17.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எதிர்வரும் 30ம் திகதி யாழ் 13ம் வருடத்தினை நிறைவு செய்கின்றது. அதுவே யாழின் இறுதி நாளும் ஆகும். இதுவரை யாழின் வளர்ச்சிக்கு ஒத்துழைத்து அனைவருக்கும் நன்றி. அத்துடன் இதுவே யாழில் எனது இறுதிக் கருத்துமாகும்.

மோகன்

:o :o :o

யாழை மூட கடந்த சில தினங்களாக ... சாத்திரியின் கூத்து எனும் பின்னணியில் ... முயற்சித்த அனைவருக்கும் நன்றிகள்! ^_^

  • கருத்துக்கள உறவுகள்

13 என்றால் "லக்கி" இல்லைன்னு சொல்லுறதை நீங்களும் செயற்படுத்தவா போறீங்க மோகன் அண்ணா. தயவுசெய்து.. மாற்றி யோசிங்கோ..! மற்றும்படி உங்கள் தனிப்பட்ட நலன்.. சுமைகள் சார்ந்து நீங்கள் எடுக்கும் முடிவுகளுக்கு நாங்கள் கட்டுப்பட்டுத்தானே ஆகனும். நன்றி அண்ணா. உங்கள் சேவை என்றும் தேவை. ஏதோ ஒரு வடிவில் அது தொடர வாழ்த்துகின்றேன். :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப... கொம்பு சீவி விட்ட... எல்லாருக்கும் சந்தோசமாய் இருக்கும் என, நம்புகின்றேன்.

மூதேவிகளா... வந்தால், வந்த வேலையை பாத்துவிட்டு போவது தானே...

இனிப் போய்... கக்கூஸ் பேப்பரில், உங்கள் படைப்புக்களை படையுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஓநாய் வருகின்றது, வருகின்றது! என்று கூறினோம்!

கடைசியில் வந்தே விட்டது!

உடன் பிறந்த உறவுகளைப் பிரிவது போன்ற 'ஒரு சோகம்' தான் மிஞ்சுகின்றது!

இந்தப் பதின்மூன்று, தனது பெயருக்கேற்ப, மீண்டும் தன்னை அடையாளம் காட்டிக் கொண்டுள்ளது! :( :( :(

உண்மையாகவா யாழின் செயற்பாடுகள் மிக விரைவில் செயலிழக்கப் போகிறதா? உண்மையில் மிகுந்த அதிர்சியாகவும், துயரமும் தருகிறது. ஏனென்றால் நான் இணைந்து சிறிது நாளானாலும் இந்த யாழ் களத்தில் எனது படைப்புக்களை அறுவடை செய்யும் போது மனம் மிக களிப்படையும் தருணங்கள் அதிகம். அதை இனி இழத்தல் என்பது ஒரு வகை வலி... எனினும் மிக்க நன்றிகள் தங்கள் யாழ் களத்தில் சிறிது நாளாயினும் நான் எனது மனப்பாரங்களை இறக்கிவைக்கச் சந்தர்ப்பம் தந்த உங்களிற்கு எனது நன்றிகள் என்றென்றும்....

:(

எதிர்பார்த்த ஒன்றுதான்.

களத்தை வணிக ரீதியாக முன்னேற்றுவதற்கு ஆலோசனை வழங்கியோ முயற்சியோ எடுக்காமல், நிர்வாகத்திற்கு தொடர்ச்சியாக தலையிடி கொடுத்துக் கொண்டிருந்தால் இதுதான் நடக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிலைக்கு கொன்டு வந்த அனைவருக்கும் மிக்க நன்றிகள்.

எதிர்வரும் 30ம் திகதி யாழ் 13ம் வருடத்தினை நிறைவு செய்கின்றது. அதுவே யாழின் இறுதி நாளும் ஆகும். இதுவரை யாழின் வளர்ச்சிக்கு ஒத்துழைத்து அனைவருக்கும் நன்றி. அத்துடன் இதுவே யாழில் எனது இறுதிக் கருத்துமாகும்.

மோகன்

யாழ் ஒரு போதை!

அதவிட்டு போனா...................

நீங்களும் சாவீங்க ...

நாங்களும் சாவோம்!

இது ரெண்டுமே எப்பவும் நடக்காது ,,! :)

  • கருத்துக்கள உறவுகள்

என்ன மூட போறியளோ?தொடர்ந்து 5000 கருத்துகளை எழுதி சாதனை படைப்போம் என்றால் முடியாமல் போய்விட்டது...இவ்வளவு காலமும் எனது கிறுக்கள்களை பிரசுரித்தமைக்கு யாழ் நிர்வாகத்தினருக்கும் மோகனுக்கும் எனது நன்றிகள்....அதை வாசித்து என்னை ஊக்கப்படுத்திய சகல கள உறவுகளுக்கும் நன்றிகள்...6வ்ருடங்களுக்கு மேலாக யாழில் இணைந்திருந்தேன் அந்த 6 வருடமும் பொழுது போக்க யாழ் துணையாக இருந்தது...

எனது கருத்துகள் யாரையாவது காயப்படுத்தியிருந்தால் மன்னித்து கொள்ளும் படி தாழ்மையாக கேட்டுக்கொள்கிறேன்

மீண்டும் நன்றிகள்....தொடர்ந்தால் தொடருவேன் இல்லாவிடின்....Bye Bye...

மீண்டும் சந்திப்பேன் என்ற நம்பிக்கையுடன் வணக்கம் கூறி விடை பெறுகிறேன்...

அன்புடன் யாழ்கள புத்தன்....

  • கருத்துக்கள உறவுகள்

ஜெனிவாவில் நாம் தோற்றாலும், ஸ்ரீலங்காவுக்கு வெற்றியே.

-பேராசிரியர் பீரிஸ்-

சில நாட்கள் வரை 14 ஆவது ஆண்டில் காலடிவைக்கப் போகும் யாழினைப் புதிய வடிவமைப்புடன் மாற்றங்கள் பல செய்ய மோகன் முயன்றார்.

யாழில் யாழில் ஒருவருக்கொருவருடன் மோதும் மனப்பான்மையை மட்டுமே கொண்டவர்களுக்காக மோகன் யாழை நடத்துவது பிரயோசனமற்றது. யாழை மூடிவிட்டு நிம்மதியாக தனது குடும்பத்தினருடன் புதிய பாதையில் மோகன் பயணிக்க மனதார வாழ்த்துகிறேன்.

யாழில் குழப்பம் ஏற்படுத்தியவர்களுக்கு நன்றிகள்.

இதை நான் ஆறு மாததிற்கு முன்னமே எழுதினேன்.எழுதிய என்னை நோக்கி நீங்கள் யார் இப்படி எழுத என்று எழுதினார்களே தவிர, யாழை எப்படி மோகனுக்கு ஆதரவு தந்து தொடர்ந்து நாடாத்துவோம் என சிந்திக்கவில்ல.

உங்களைத் திருத்த முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

சில நாட்கள் வரை 14 ஆவது ஆண்டில் காலடிவைக்கப் போகும் யாழினைப் புதிய வடிவமைப்புடன் மாற்றங்கள் பல செய்ய மோகன் முயன்றார்.

யாழில் யாழில் ஒருவருக்கொருவருடன் மோதும் மனப்பான்மையை மட்டுமே கொண்டவர்களுக்காக மோகன் யாழை நடத்துவது பிரயோசனமற்றது. யாழை மூடிவிட்டு நிம்மதியாக தனது குடும்பத்தினருடன் புதிய பாதையில் மோகன் பயணிக்க மனதார வாழ்த்துகிறேன்.

யாழில் குழப்பம் ஏற்படுத்தியவர்களுக்கு நன்றிகள்.

எல்லோரும் உளமார நாங்கள் ஒற்றுமையாகவும்.. கருத்து வேறுபாடுகளை சிநேகித பூர்வமாகவும் கலந்துரையாடி தீர்ப்போம் என்றும் உறுதி எடுத்து அதன் படி நடந்து கொள்வதும் யாழின் முன்னேற்றத்திற்கு உதவுவதுமே.. பல இடர்களின் மத்தியில் இக்களத்தை கொண்டியக்கும் மோகன் அண்ணாவை சாந்தப்படுத்தும். அதை எம்மால் செய்ய முடியவில்லை எனும் போது.. அவரும் தான் என்ன செய்ய முடியும்.. பாவம்..!

பெரிதாக சொல்வதற்க்கு ஒன்றுமில்லை.....

இருந்தாலும் யாழில் இருவருக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

நடப்பவைகள் எல்லாம் நன்றாகவே நடக்கட்டும்!

33 வருடங்களாகச் சிற்கச் சிறுகக் கட்டி வளர்க்கப்பட்டதும் காணாமல் போனதையும் கண்கூடாகப் பார்த்தவர்களால் 13 வருடங்கள் வெகு சிறப்பாகச் செயற்பட்டு தமிழர்களை தமிழால் இணைக்கும் பாலமாகச் செயற்பட்ட யாழ் செயலிழந்து போவதையும் தாங்கிக்கொள்ள முடியும் என்று நினைக்கின்றேன்.

பொறுமையாக இதுவரை யாழைப் பல சிரமங்களிற்கு மத்தியிலும் வளர்த்தெடுத்த மோகன் அண்ணாவுக்கும் அவருக்கு உறுதுணையாக நின்ற மட்டுறத்தினர்களுக்கும், நேரில் சந்திக்காத/சந்தித்த பல உறவுகளுக்கும் நன்றிகள் கூறி விடைபெறுகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு என்ன அதிர்ச்சி என்றால் சாத்திரியும் சாத்திரியைசார்ந்தவர்களும் யாழில் நிலைமையை மாற்றும் அளவுக்கு பெரிய சக்திகளாக வளர்த்த சாத்திரி கும்பலால் ஒரு இணையம் முடங்கும் என்றால் இவர்கள் ஒருவிதத்தில் யாழின் துரோகிகளே........

மென்போக்கு கொண்ட மோகன் அண்ணாவுக்கு கிடைத்த மிகப்பெரிய அதிர்ச்சியுமாகும் நான் களஉறுப்பினராக சேந்து ஒருவருடங்க்கூட ஆகவில்லை அதற்குள் இந்த துரதிஸ்ரம் ஏற்பட்டுள்ளது

இதுவரைக்கும் களத்தில் இணைந்து செயல் பட அனுமதித்த மோகன் அண்ணாவுக்கு நன்றிகள்.........

மோகன் அண்ணா, என்ன செய்வது என்று தெரியவில்லை ? .என்னை போன்றவர்களுக்கு இது மிக பெரிய அதிர்ச்சி . திரும்பவும் நாங்கள் சூனிய வெளிக்குள் தூக்கி வீசப்பட போகிறோம் . வாழ்க்கை தொடர்ந்து எங்களுக்கு வலிகளையே தருகிறது .

Edited by sudalai maadan

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் எல்லாம் ஒற்றுமையாக ஒத்துழைத்தால் நிச்சயம் மோகன் அண்ணா மனம் மாறுவார். அவர் அவ்வளவு கடும் போக்காளரல்ல. நாம் தான் அவரை அந்த நிலைக்குள் தள்ளிக் கொண்டிருக்கிறோம். அது நமது எல்லோரினதும் தவறும் கூட. இதை.. உணர்வோம்.. தவறுகளை திருத்தி.. நடப்போம்..! அதுவே யாழின் நீண்ட கால இருப்பிற்கு உறுதுணை செய்யும். :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நான் என்றுமே நேசிக்கும் யாழ் என் பிறந்த நாள் அன்று தரப்போகும் பரிசு இதுவா..சரி ஏதோ உங்கள் விருப்பம்..நான் கேட்டு,சொல்லி என்ன நடக்கப்போகிறது..

  • கருத்துக்கள உறவுகள்

மோகன் அண்ணையின் உழைப்பிலும், பணத்திலும் கருத்தெழுதிக்கொண்டு அவரிடமே நியாயம் கேட்டது வேடிக்கை..! ஒருவரது வீட்டுக்குள் சென்று விருந்தாளியாகத் தங்கியிருப்பவர்கள் அங்கே தமக்கு என்னென்ன உரிமைகள் உண்டு என்பதில் தெளிவுள்ளவர்களாக இருக்க வேண்டும்..! வீட்டுக்காரரில் பிழை கண்டால் தாமாக விட்டுவிட்டுச் செல்வதே அழகு. அதைவிடுத்து விட்டை உடைப்பது சரியல்ல. :unsure:

மோகன் அண்ணை மிகவும் மென்போக்கு கொண்டவர் போல் இருக்கிறார்..! குழப்பம் ஏற்படுத்துபவர்களை தொடர்ந்தும் தடை செய்தோ அல்லது உறுப்பினர் அந்தஸ்தில் இருந்து நீக்கியோ இருந்தால் இவ்வளவு பிரச்சினைகள் வந்திராது..! பிரசினைகளை ஏற்படுத்துபவர்கள் ஒரு வீதத்துக்கும் குறைவானவர்கள் என்பது என் எண்ணம்..! இதற்காக மிகுதி 99% உறுப்பினர்களும் பாதிக்கப்படுவது வெட்கத்திற்குரியது..! :rolleyes:

அன்பிற்கும் பெரு மதிப்பிற்கும் உரிய மோகன் அண்ணா,

யாழ் களத்தை வரும் முப்பதாம் திகதியுடன் மூடும் உங்கள் முடிவை கண்டு நான் பெரும் துயரமும் அதிர்ச்சியும் அடைந்தேன். அதனால் இந்த பகிரங்க மடலை உங்கள் முன் வைக்கிறேன்.

மோகன் அண்ணா, இன்றைய உலக அரசியலில், ஐநா தீர்மானத்தை தொடர்ந்து, தொடர்ச்சியான தோல்விக்கு பிறகு, ஒரு சிறிய வெற்றியும், எங்கள் உரிமைகளை ஒற்றுமையாக போராடி வெல்ல முடியும் என்ற சிறு நம்பிக்கையையும் தமிழ் மக்கள் மத்தியில் விளைந்துள்ளதை நீங்கள் நன்கு அறிவீர்கள். இந்த நம்பிக்கையை மக்கள் மத்தியில் கட்டியெழுப்ப, தேசியம் சார்ந்து அயராது உழைத்த பெருமையும் கடமையும் கொண்ட ஒரு இணையமாக யாழ் களமும், அதை நிர்வகிக்கும் நீங்களும் இருந்தீர்கள் என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை.

முப்பதுக்கும் மேற்பட்ட வருடங்களாக, எங்களது உரிமை போராட்டம் ஆயுத போராட்டமாக மக்கள் மத்தியில் விடுதலைக்கான தன்னம்பிக்கையை கொடுத்து, துரோகதனங்களாலும், எம்மினத்தின் சுயநலம் ஒற்றுமை இனமையாலும், உலக வல்லாதிக்க சக்திகளாலும், எதிரியின் ஊடுருவகளாலும் முள்ளிவாய்க்காலில் சிதைக்கப்பட்ட போது இருந்த மனநிலைக்கு ஒப்பான மனநிலையை இன்றைய உங்கள் முடிவு எனக்கு ஏற்படுத்துகிறது.

சாதாரணமாக அவர்கள் மீதே வைக்கப்படும் விமர்சனகளை பொறுக்க முடியாமல், கள விதிகளை மீறுவோரும், தனி மனித தாக்குதல்களை நடாத்துவோரும், கூட்டம் சேர்ந்து பிரிவினைகளை உருவாக்குவோரும், மக்களுக்காக தங்கள் உயிரை கொடுத்து போராடிய மாவீரர்களையும், தேசிய தலைவரையும், தமிழீழ விடுதலை புலிகளையும், விமர்சனம் செய்து கட்டுரைகள் வடிப்பது கேலிக்குரியது.

மோகன் அண்ணா !

தமிழீழ விடுதலைபுலிகளும், எங்களின் உரிமை போராட்டமும் பல்வேறு சந்தர்ப்பங்களில், இவ்வாறான குழப்பங்களுக்கும், விமர்சனகளுக்கும் உள்ளானது நீங்கள் அறிந்ததே. அப்போதெல்லாம் எங்கள் தலைவரும், போராளிகளும் போராட்டத்தை கைவிடவோ, ஒதுங்கவோ இல்லை, மாறாக மக்களுக்கு போராட்டத்திற்கான தேவையையும், ஒற்றுமைக்கான முன்னெடுப்புகளையும் மேற்கொண்டே தங்கள் உரிமை போராட்டத்தை நகர்த்தினார்கள்.

யாழ் களத்திலும், எம்மக்களின் உரிமைபோராட்டமே, தேசிய விடுதலைக்கான போராட்டமே அரசியல் வடிவில் முன்னேடுக்கபடுவதாக நான் கருதுகிறேன். இந்த போராட்டமும், சில விசமிகளாலும், தனிபட்ட நபர்கள் மீதான தங்களின் உணர்வு பூர்வமான உறவின் வெளிப்பாடுகளை காட்டுபவர்களாலும், சிதைக்கபடுவதை நீங்கள் விரும்புகிறீர்களா.?

நாங்கள் ஒற்றுமையாக சிறிலங்கா இனவாத அரசுக்கு எதிராக, தேசியம் சார்ந்து தொழிற்படவேண்டிய இந்த தருணத்தில் உங்கள் முடிவு, தேசிய உணர்வாளர்களின் மனசை பெரிதும் புண்படுத்துவதோடு, சிங்கள இனவாத அரசுக்கு இனிப்பான செய்தியாகவுமே அமையும். ஐநா தீர்மானத்தை தொடர்ந்து சிங்கள அரசுக்கு இனி இடியான செய்திகளையே நாங்கள் தொடர்ந்து கொடுக்க வேண்டிய கடைப்பாடில் இருக்கிறோம். அதற்கு யாழ் களம் தேசிய உணர்வாளர்களை ஒற்றுமைப்படுத்தும் இடமாகவே நான் கருதுகிறேன். அதையும் இல்லாமல் செய்து எங்கள் போராட்டத்தில் இன்னுமொரு பின்னடவை ஏற்படுத்த மாட்டீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

மோகன் அண்ணா !

தேசியத்தை இன்று மக்கள் முன் நிறுத்தும் படைப்புகளை, உண்மையாகவும், மக்களை சிந்திக்க தக்க வைகையிலும் செயற்படுத்தும் முன்னணி இணையத்தின் இழப்பை வேறு ஒரு இணையமும் ஈடு செய்ய முடியாது.

தேசியத்தின் பேராலும், எமக்காக மடிந்த மாவீரர்கள் மக்களின் பேராலும், ஒற்றுமையாகவும், சகோதரத்துவத்துடனும், செயற்பட்டுவோம் என்று கள உறவுகளாகிய நாங்கள் உறுதிபூணுவோம்.

யாழ் களம் நிறுத்தப்படும் முடிவை மோகன் அண்ணா நிச்சயமாக பரிசீலிப்பார் என்று நம்புவோம்.

யார் யாருக்கோ எல்லாம் நன்றி சொல்லி கடிதம் அனுப்பிய நாங்கள் மோகன் அண்ணாவுக்கு நன்றியும், யாழ் களத்தை மூடும் எண்ணத்தை கைவிட சொல்லியும் தனிமடல் மூலமாகவோ, பகிரங்கமடல் மூலமாகவோ தொடர்ச்சியாக கடிதங்கள் அனுப்புவோம்.

எங்களின் மக்களுக்கு உரிமையும் சுதந்திரமும் கிடைக்கும் வரை தொடர்ந்து ஒற்றுமையாக போராடுவோம்.

நன்றி,

தங்கள் உண்மையுள்ள,

பகலவன்

தேசியத்தை நேசிக்கும் கள உறவுகளில் ஒருவன்.

Edited by பகலவன்

  • கருத்துக்கள உறவுகள்

பகலவனின் கருத்தை வழிமொழிகிறேன்..! 2014 வரையிலாவது இக்களத்தை இழுத்து நடத்தினீர்களென்றால் நல்லது..! அதற்கான உதவிகளை நான் உட்பட பலர் செய்யக் காத்திருக்கிறார்கள்..! குழப்பம் விளைவிப்பவர்களை நீக்கிவிடுங்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

நான் என்றுமே நேசிக்கும் யாழ் என் பிறந்த நாள் அன்று தரப்போகும் பரிசு இதுவா..சரி ஏதோ உங்கள் விருப்பம்..நான் கேட்டு,சொல்லி என்ன நடக்கப்போகிறது..

யாயினிக்கு முன்கூட்டிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.