Jump to content

பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்..

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

            பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்..

இந்த  பழமொழி மிளகின் மகத்துவத்தை உணர்த்துவதற்காக கூறப்பட்ட பழமொழி..

அப்படி என்ன மகத்துவம் இந்த நல்ல மிளகில்...?

உலகின் தலைசிறந்த எதிர் மருந்து (Antidote) தான் இந்த மிளகு.  இந்த மிளகு இந்தியாவில் மிக அதிகமாக பயிரிடப்படுகிறது என்று தெரிந்துதான் நம்மீது ஆங்கிலேயர்கள் படையெடுத்து நாட்டைப் பிடித்தார்கள்.  

தென்னிந்தியாவில் முக்கியமாக கேரளா, மைசூர், மற்றும் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும், கிழக்குத் தொடர்ச்சி மலைகளான கொல்லிமலை, சேர்வராயன் மலைகளிலும் நல்லமிளகு அதிகம் விளைகிறது.

உலகிலேயே தலைசிறந்த தரம் வாய்ந்த நல்ல மிளகு தென்னிந்தியாவில் மட்டுமே கிடைக்கிறது என்பது நவீன ஆராய்ச்சி கூறும் தகவல்.  இந்த மிளகு இந்தியாவிற்கு மிகுந்த அன்னிய செலாவணி ஈட்டித் தருகிறது.

மிளகில் உள்ள வேதிப் பொருட்கள் அனைத்தும் நம்மை நோயிலிருந்து காக்கும் வேலையைச் செய்கிறது மேலும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.  

மிளகிற்கு வீக்கத்தைக் குறைக்கும் பண்பும் (Anti-inflamattory) வாதத்தை அடக்கும் பண்பும் (Anti vatha)பசியைத் தூண்டும் பண்பும் (Appetizer), வெப்பத்தைக் குறைக்கும் பண்பும் (Antypyretic), கோழையை அகற்றும் பண்பும் (Expectorant), பூச்சிக்கொல்லியாக செயல்படும் பண்பும் (Anti-helmenthetic) உள்ளது.

நரம்புத்தளர்ச்சி, கை கால் நடுக்கம், உதறல், ஞாபக சக்தி குறைபாடு, முதுமையில் உண்டாகும் மதிமயக்கம், இவற்றிற்கு நல்ல மிளகு சிறந்த மருந்தாகும். வீரியத்தை அதிகரிக்கும் தன்மையும் இதற்குண்டு.

நல்ல மிளகில் பொட்டாசியம், கால்சியம், ஜிங்க், மாங்கனீசு, இரும்புச்சத்து மற்றும் மெக்னீசியம், வைட்டமின் சி, சத்துக்கள் அதிகம் உள்ளது.  வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளதால் ஆண்டி ஆக்ஸிடென்டாக செயல்பட்டு நோய் எதிர்ப்புத் தன்மையை அதிகரிக்கிறது.

நல்ல மிளகில் piperine என்ற ஆல்கலாய்டு இருப்பதால் பசியைத் தூண்டுகிறது.  வயிற்றில்   சுரக்கும் என்ஸைம்களை தூண்டி சுரக்கச் செய்கிறது.  மேலும் உமிழ்நீரை சுரக்கச் செய்கிறது.  இதனால் ஜீரணத் தன்மை அதிகரிக்கப்படுகிறது.  

உணவு சரியான முறையில் செரிக்கப் பட்டால் தான் வாயுத் தொந்தரவு இருக்காது.  மேலும் நச்சுக் கழிவுகள் உடலில் தங்காது.  இந்த நச்சுக் கழிவுகளை வெளியேற்றும் தன்மை மிளகில் அதிகம் இருப்பதால்தான் நம் முன்னோர்கள் இந்த பழமொழியை பயன்படுத்தினார்கள்.

இதனாலேயே நம் முன்னோர்கள் வெளியிடங்களில் சாப்பிட்டு வரும்போது பத்து மிளகை வாயில் போட்டு சுவைத்து சாப்பிட்டுவிடுவார்கள்.  வெளியில் தயாரிக்கப் படும் உணவினால் ஏற்படும் நச்சுத்தன்மை அனைத்தையும் இந்த பத்து மிளகு முறித்து விடும்.http://www.nakkheeran.in/Users/frmArticles.aspx?A=11602</p>

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிளகின் மகிமை அருமையானது

இணைப்பிற்கு நன்றி புலவர்

Link to comment
Share on other sites

இணைப்பிற்கு நன்றி புலவர்!

எமது தாயகத்தில் மிளகு விளைவிக்கப்படுகின்றதா? இதற்கு நல்ல சந்தைவாய்ப்பு இருந்தால் அங்கும் ஊக்குவிக்கலாம்.

Link to comment
Share on other sites

இணைப்பிற்கு நன்றி புலவர்!

எமது தாயகத்தில் மிளகு விளைவிக்கப்படுகின்றதா? இதற்கு நல்ல சந்தைவாய்ப்பு இருந்தால் அங்கும் ஊக்குவிக்கலாம்.

நானறிய மிளகு, மல்லி, உள்ளி போன்றவைகள் அங்கு முன்பு பயிரிடப்படவில்லை. இவற்றிற்கு விலையும் கூடியுள்ளது. பாரம்பரிய பயிர்களையே மாத்திரம் பயிரிடாமல் மற்றைய, பணம் ஈட்டக் கூடிய பயிர்களையும் முயற்சித்துப் பார்த்தால் நல்லது. பணக் கஷ்டத்தில் உள்ள விவசாயிகள் புதிய முயற்சிகளைத் தவிர்க்கிறார்கள்.

முதன் முதலாக யாழ்ப்பாணத்தில், சிறிமா அரசு காலத்தில்தான் உருளைக் கிழங்கு பயிரிட்டு நல்ல இலாபம் ஈட்டினார்கள் என நினைக்கிறேன்.

முக்கியமாக விலை கூடிய 'குங்குமப் பூ' போன்ற பயிர்களை தரிசாகக் கிடக்கும் நிலத்தில் பயிரிட்டுப் பார்க்கலாம். இணைய வசதி உள்ளபடியால், பயிர் வளர்ப்புக்கான தகவல்களைப் பெறுவது இலகுவானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது தாயகத்தில் மிளகு விளைவிக்கப்படுகின்றதா? இதற்கு நல்ல சந்தைவாய்ப்பு இருந்தால் அங்கும் ஊக்குவிக்கலாம்.

மிளகுப் பயிருக்கு, அடிக்கடி மழைபெய்யும் குளிர்ச்சியான காலநிலை தேவை என நினைக்கின்றேன்.

உ+ம்: மலைப்பாங்கான பிரதேசம்.

முதன் முதலாக யாழ்ப்பாணத்தில், சிறிமா அரசு காலத்தில்தான் உருளைக் கிழங்கு பயிரிட்டு நல்ல இலாபம் ஈட்டினார்கள் என நினைக்கிறேன்.

முக்கியமாக விலை கூடிய 'குங்குமப் பூ' போன்ற பயிர்களை தரிசாகக் கிடக்கும் நிலத்தில் பயிரிட்டுப் பார்க்கலாம். இணைய வசதி உள்ளபடியால், பயிர் வளர்ப்புக்கான தகவல்களைப் பெறுவது இலகுவானது.

உருளைக்கிழங்கை விட செத்தல் மிளகாயும், சின்ன வெங்காயமும் பெரிய வருமானத்தை தந்தது.

இப்ப சிங்களவன் அந்தக்காணிகளை ஆக்கிரமித்து, அவனே... யாழ்ப்பாண செத்தல் மிளகாய் விற்கத் தொடங்கி விட்டான்.

குங்குமப் பூ மரத்துக்கும், எமது நாட்டு கால நிலை சரிவராது.

"குங்குமப் பூவை" பாலில் கரைத்துக் குடித்தால்... ஆக்கள் வெள்ளையாய் வருவினமாம்... என்று கேள்விப்பட்டேன். உண்மையா, தப்பிலி.

Link to comment
Share on other sites

"குங்குமப் பூவை" பாலில் கரைத்துக் குடித்தால்... ஆக்கள் வெள்ளையாய் வருவினமாம்... என்று கேள்விப்பட்டேன். உண்மையா, தப்பிலி.

பிள்ளை வயிற்றில் இருக்கும் பொழுது, குங்குமப் பூவை பாலில் கரைத்துக் குடித்தால் குழந்தை வெள்ளையாய் பிறக்கும் என்று ஊரில் சொல்வார்கள். இந்தக் கலவையில் உள்ள மருத்துவ குணங்களால் தாய்க்கும் சேய்க்கும் வரும் நன்மைகளை பிழையாக விளங்கி அப்படிச் சொன்னார்களோ தெரியாது.

இதே போல தங்க பஸ்பம் சாப்பிட்டால் பொன்னிறமாக வரலாம் என்றும், எம்ஜீஆர் சாப்பிடுவார் என்றும் சொல்வார்கள். எல்லாம் ஒரு குத்துமதிப்பான நம்பிக்கை.

Link to comment
Share on other sites

மிளகுப் பயிருக்கு, அடிக்கடி மழைபெய்யும் குளிர்ச்சியான காலநிலை தேவை என நினைக்கின்றேன்.

உ+ம்: மலைப்பாங்கான பிரதேசம்.

மாரிகாலத்தில் செய்யலாம். இல்லை அதற்கேற்ற நிலங்கள், குறிப்பாக கடல்கரையை அண்டியதாக இருக்கக்கூடும். அதேவேளை தமிழகத்தில் விளையும் நிலங்களின் காலநிலையுடன் ஒப்பிட்டு கண்டுபிடிக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெந்தயத்தை முதல் நாள் ஊற வைத்து அடுத்த நாள் காலை சாப்பிட்டால் உடம்பிற்கு நல்லதாமே இது உண்மையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கமுகு இருக்கும் தோட்டங்களில் ஊடு பயிராக பயிரிட்டுப் பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி புலவர், ரேமார்கள் இதை அதிகம் பயன்படுத்தி, இதய நோயின்றி வாழ்ந்ததாக படித்த ஞாபகம்.

http://siththarkal.blogspot.com/2011/11/blog-post_28.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றிகள், புலவர்!

மிளகைத் தேடித் போன பயணமே, கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டு பிடிக்கக் காரணமாக அமைந்தது!

Link to comment
Share on other sites

வெந்தயத்தை முதல் நாள் ஊற வைத்து அடுத்த நாள் காலை சாப்பிட்டால் உடம்பிற்கு நல்லதாமே இது உண்மையா?

ஆண்களுக்கு மிகக் கூடாது..

.தமிழ் மருத்துவத்தில் உடம்பில் வாதம், பித்தம், கபம் போன்ற 3 விடயங்களின் மூலமே நோய் உருவாகின்றன எனபதே அதன் அடிப்படை. கிருமிகள், ஹோர்மோன்கள், மூளையின் செயல்பாடுகள் பற்றிய எந்த அடிப்படை அறிவும் இல்லாது இந்த 3 ஆல் தான் மனுசருக்கு வியாதி வருகின்றது என்கின்றது தமிழ்/சித்த/ ஆயுர்வேத மருத்துவம்

இதை நம்பவேண்டாம்

Link to comment
Share on other sites

"குங்குமப் பூவை" பாலில் கரைத்துக் குடித்தால்... ஆக்கள் வெள்ளையாய் வருவினமாம்... என்று கேள்விப்பட்டேன். உண்மையா, தப்பிலி.

நீங்கள் உருண்டு புரண்டாலும் வெள்ளையாய் வரமுடியாது. உங்கள் மூதாதையர் எம்மை ஆண்ட ஐரோப்பியரோடோ அல்லது, இந்திய /பெர்சிய மனிதர்கலோடோ கலந்திருந்தால் (!) மட்டுமே சாத்தியம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் உருண்டு புரண்டாலும் வெள்ளையாய் வரமுடியாது. உங்கள் மூதாதையர் எம்மை ஆண்ட ஐரோப்பியரோடோ அல்லது, இந்திய /பெர்சிய மனிதர்கலோடோ கலந்திருந்தால் (!) மட்டுமே சாத்தியம்.

காசைக்,காசு எண்டு பார்க்காமல்... இவ்வளவு நாளும், குங்குமப் பூ வாங்கி சாப்பிட்டது எல்லாம் வீணாய்ப்போச்சே.... :lol:

என்னுடைய மூதாதையர், வெள்ளைக்காரனுடன் கலந்திருந்தால்.... அவர்களுடைய மூதாதையர் தலைக்கு தண்ணி தெளித்து, திவசம் செய்து இருப்பார்கள். நான் பிறந்திருக்க சந்தர்ப்பமே.... இருந்திருக்காது. நான் இனி மாநிறமாக இருப்பதே... நல்லது போல் உள்ளது :D.

பிற்குறிப்பு அகராதி; மாநிறம் (கோதுமை மா அல்ல) - பிரவுண் நிறம். :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் பொதுவாக மிளகு அதிகமாக சேர்த்துக்கொள்வேன் நான் உண்ணும் உணவுகளுடன் எனக்கு மிகவும் புடிக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

<p>

ஆண்களுக்கு மிகக் கூடாது..

.தமிழ் மருத்துவத்தில் உடம்பில் வாதம், பித்தம், கபம் போன்ற 3 விடயங்களின் மூலமே நோய் உருவாகின்றன எனபதே அதன் அடிப்படை.  கிருமிகள், ஹோர்மோன்கள், மூளையின் செயல்பாடுகள் பற்றிய எந்த அடிப்படை அறிவும் இல்லாது இந்த 3 ஆல் தான் மனுசருக்கு வியாதி வருகின்றது என்கின்றது தமிழ்/சித்த/ ஆயுர்வேத மருத்துவம்

இதை நம்பவேண்டாம்

ஓஅப்படியா! நன்றீ நிழலி தகவலுக்கு
Link to comment
Share on other sites

காசைக்,காசு எண்டு பார்க்காமல்... இவ்வளவு நாளும், குங்குமப் பூ வாங்கி சாப்பிட்டது எல்லாம் வீணாய்ப்போச்சே.... :lol:

என்னுடைய மூதாதையர், வெள்ளைக்காரனுடன் கலந்திருந்தால்.... அவர்களுடைய மூதாதையர் தலைக்கு தண்ணி தெளித்து, திவசம் செய்து இருப்பார்கள். நான் பிறந்திருக்க சந்தர்ப்பமே.... இருந்திருக்காது. நான் இனி மாநிறமாக இருப்பதே... நல்லது போல் உள்ளது :D.

பிற்குறிப்பு அகராதி; மாநிறம் (கோதுமை மா அல்ல) - பிரவுண் நிறம். :icon_mrgreen:

எகிப்திய இளவரசி கிளியோபட்ரா, இளமையாக இருக்கவும் உடலை மினுமினுப்பாக வைத்திருக்கவும் கழுதைப் பாலில் குளிப்பாராம். அதனை முயற்சித்துப் பார்த்தீர்களா? :blink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எகிப்திய இளவரசி கிளியோபட்ரா, இளமையாக இருக்கவும் உடலை மினுமினுப்பாக வைத்திருக்கவும் கழுதைப் பாலில் குளிப்பாராம். அதனை முயற்சித்துப் பார்த்தீர்களா? :blink:

கழுதைக்கு கிட்டப் போய்... பாலை கறக்க முயற்சிக்க.. பின்னங்காலை தூக்குது. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்களுக்கு மிகக் கூடாது..

.தமிழ் மருத்துவத்தில் உடம்பில் வாதம், பித்தம், கபம் போன்ற 3 விடயங்களின் மூலமே நோய் உருவாகின்றன எனபதே அதன் அடிப்படை.  கிருமிகள், ஹோர்மோன்கள், மூளையின் செயல்பாடுகள் பற்றிய எந்த அடிப்படை அறிவும் இல்லாது இந்த 3 ஆல் தான் மனுசருக்கு வியாதி வருகின்றது என்கின்றது தமிழ்/சித்த/ ஆயுர்வேத மருத்துவம்

இதை நம்பவேண்டாம்

:D :D எப்பா சாமி முடியல....

சித்த மருத்துவம் நோயை விபரிக்கும் முறை நீங்கள் சொன்னது போல் இருந்தாலும், உணவில், அல்லது சில தாவர மூலிகைகளுக்கு நோய் தீர்க்கும் வல்லமை இருப்பதை மறுக்க முடியாது. அவற்றுக்கு கிருமிகளை இறக்க செய்யும் ஆற்றல் உண்டு. நான் சித்த வைத்தியம் படித்தவன் அல்ல, ஆனால் சித்த வைத்தியம் நோயை விபரிக்கும் முறை வேறாக இருக்கலாம். அதற்காக அதை முற்று முழுதாக தகுந்த ஆராய்ச்சி இன்றி போய் என்று சொல்ல முடியாது. மேற்கத்தேய மருத்துவம் கீழை தேய மருத்துவம் முலிகை போன்றவற்றை முன்னர் போய் என்று சொல்லி, இப்போ அவற்றிற்கு மருத்துவ குணம் , நோயாக்கி கிருமிகளை இறக்க செய்யும் ஆற்றல் இருக்கிறது என்று சொல்லி ஆராய்ச்சி செய்யவதில் முனைப்பாக இருக்கிறது.

வெந்தயத்தின், இஞ்சி மருத்துவ குணம்

1. Effect of fenugreek seeds on blood glucose and serum lipids in type I diabetes.

European Journal of Clinical Nutrition [1990, 44(4):301-6]

2. Effect of ginger (Zingiber officinale Rosc.) and fenugreek (Trigonella foenumgraecum L.) on blood lipids, blood sugar and platelet aggregation in patients with

3. Antidiabetic Effects of Subtractions from Fenugreek Seeds in Diabetic Dogs, ENDOCRINOLOGY/METABOLISM, June 1986 vol. 182 no. 2

மஞ்சள் மருத்துவ குணம்

1. Potential anticancer activity of turmeric (Curcuma longa)

2. Curcumin, a Major Constituent of Turmeric, Corrects Cystic Fibrosis Defects, Science 23 April 2004:

Vol. 304 no. 5670 pp. 600-602

3. Antibacterial Activity of Turmeric Oil:  A Byproduct from Curcumin Manufacture. J. Agric. Food Chem., 1999, 47 (10), pp 4297–4300

கடுகு,

1 Effects of spices on growth and survival of Escherichia coli 0157 and Salmonella enterica serovar Enteritidis in broth model systems and mayonnaise

2. Use of mustard flour to inactivate Escherichia coli O157: H7 in ground beef under nitrogen flushed பச்ககிங்

3. Inhibition of Escherichia coli O157: H7 in ripening dry fermented sausage by ground yellow mustard

மேலே சொன்னவை சில உதாரணங்கள்

Link to comment
Share on other sites

இணைப்புக்கு நன்றிகள், புலவர்!

மிளகைத் தேடித் போன பயணமே, கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டு பிடிக்கக் காரணமாக அமைந்தது!

கொலம்பச் ஊரில பெண்ணுகளுகு மிளகு என்டு தமிழ் பெயராய் வச்சார்களோ

ஆசரியம் தான்

Link to comment
Share on other sites

இது பல உடல் உபாதைகளுக்கு மிளகு நல்லது

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.