கதைக் களம்
கள உறுப்பினர்களின் சிறுகதை | மொழியாக்க கதை| தொடர்கதை | பயண அனுபவங்கள் | நாடகம்
கதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, பயண அனுபவங்கள், நாடகம் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
647 topics in this forum
-
எனக்கு இப்பவும் ஞாபகம் இருக்கு நான் முதன் முதலாக அதை பார்த்தது. நந்தாவில் அம்மன் கோயிலுக்கு பின்பக்கமாக அமைச்சிருந்த சொர்ணம் அண்ணை ஆட்களிண்ட தொடர் முகாம்களுக்கு குண்டு வீச எண்டு வந்த சியாமளா செட்டி சீ ..... சியாமா செட்டி எண்டு சொல்லுற, இரண்டாம் உலகமாக யுத்தத்திலே கழிச்சுவிட்ட பொம்மர் பதிஞ்சு குண்டை போட்டுவிட்டு எழும்பும் போது தான் அதை கொண்டு வந்து அடிச்சாங்கள். ஒரு பிக்கப் வாகனத்திலே பின்னுக்கு பூட்டிவைச்சிருந்தாங்கள். அதை அடிச்சு பொம்மருக்கு படுகுதோ இல்லையோ அந்த காலத்திலேயே எப்படியும் படும் என்று நம்பிக்கை என்னை போன்ற "சின்ன பெடியங்களுக்கு" இருந்தது. டட் ..டட் டட் ...டும் டும் டும் .... சத்தம் அப்போ எங்களுக்கு நாடு கிடைச்சிடும்போல இருக்கும். எங்களுக்கு மட்ட…
-
- 27 replies
- 3.5k views
-
-
மலர்ந்தும் மலராத…………………… அதிகாலைவேளை இருளும் வெளிச்சமும் கண்ணாமூச்சி விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தன. பனிப்புகாரும் மல்லுக்கட்டிக்கொண்டிருந்தது. அந்த விசாலமான வீட்டில் அமைதியின் ஆட்சி அட்டகாசமாக இருந்தது .அந்த விசாலமான படுக்கையிலே நிவேதிதா ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள் . அவளது உருள்கின்ற கண்கள அவள் கனவுலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருக்கின்றாள் என்பதைத் தெளிவாகவே காட்டியது . அவளது அறையின் பரந்த ஜன்னல்களின் அருகே நான்கைந்து சிட்டுக்குருவிகளின் கிலுகிலுப்பு அவளை நிஜ உலகத்திற்குக் கொண்டு வந்தது . கண்ணை மூடிக்கொண்டு அவளையறியாது அவளது கைகள் நரேனைத் தேடிப் படுக்கையில் துளாவியது. நித்திரையில் இருந்தவளை எழுப்பாது இதமான முத்தத…
-
-
- 31 replies
- 4.4k views
-
-
கப்டன் லோலா ஈரநினைவாய்..... நிலை: கப்டன் இயக்கப் பெயர்: லோலோ இயற்பெயர்: தம்பிராசா சுரேஸ்குமார் ஊர்: புன்னாலைக்கட்டுவன், யாழ்ப்பாணம். வீரப்பிறப்பு: 16.07.1969 வீரச்சாவு: 29.12.1988 நிகழ்வு: சுன்னாகத்தில் இந்தியப்படை மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ். கும்பலின் முகாம் மீதான தாக்குதலில் விழுப்புண்ணடைந்து பின்னர் வீரச்சாவு. நெடிய தோற்றம். தேவையின்றிக் கதைக்காத சுபாவம். ஆனால் விழிகள் எப்போதும் ஆக்கிரமிப்பாளனின் நடமாட்டத்தை அவதானித்தபடியிருக்கும்.கழுத்தில் சயனைட்டோடு ஒரு சிலுவை அவன் கழுத்தில் எப்போதுமே இருந்தது. குப்பிளான் கேணியடியிலிருக்கும் எங்கள் கடைக்கு அடிக்கடி வருவான். தன் தோழர்களுக்கு உணவுப்பொருட்கள் வாங்குவான். வசாவிளானில் சென்றியிருக்கும் போராளி…
-
- 13 replies
- 2.4k views
-
-
அது ஒரு தனியார் கல்வி நிறுவனம். நான் எட்டாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்த காலம். முதல் வாங்கில் இருக்கும் கூட்டத்தில் நானும் அடக்கம். வாத்தியார்மார் முன்னுக்கு இருகிற படிக்கிற பிள்ளையள் என்று ஒரு நல்லெண்ணத்தில இருக்க, நாங்கள் நசுக்கிடாமல் நல்லாச்சுத்து மாத்து விடுவம். தமிழ் படிப்பித்த ஆசிரியை திடீர் என்று நின்று விட்டார். அன்று புதுசாக யாரோ தமிழுக்கு வரபோகினம் என்று எல்லாருக்கும் டென்சன். அதிபருடன் மெல்லிதாக கருப்பாக கிட்டத்தட்ட நடிகர் நாகேஷ் கருப்பாக இருந்தால் எப்படி இருக்குமோ அப்படி ஒருவர். இவர்தான் இனி உங்கள் தமிழ் ஆசிரியர் என்று அறிமுகம் செய்து விட்டு அதிபர் போய்விட்டார். வந்த உடனே "வேற்றுமை " என்று கரும்பலகையில் எழுதி விட்டு முதலாம் வேற்றுமையில் தொடங்கி முழங்கத…
-
-
- 14 replies
- 2.9k views
-
-
முகத்தார் வீடு நாடகம் வாசித்ததில் இருந்து நானும் ஒன்று எழுத வேண்டும் என்று எண்ணினேன். அதுதான்........... சாத்தர் : முனியம்மா, முனியம்மா முனியம்மா : என்ன இழவுக்கு இப்பிடிக் கத்திறியள். எத்தின தரம் சொல்லிப் போட்டன் முனியம்மா எண்டு கூப்பிட வேண்டாம் எண்டு. நான் மினி எண்டு என்ர பேரை மாத்தி எவ்வளவு நாளாச்சு. சாத்தர் : நீ என்ன தான் மாத்தினாலும் எனக்கு நீ முனிதான். இன்னும் நீ வெளிக்கிடேல்லையே ? முனியம்மா : பொறுங்கோ வாறன் கொஞ்சம் வடிவா வெளிக்கிட்டுக் கொண்டு வரவேண்டாமே. சாத்தர் : அதுசரி. என்ன கலியாணத்துக்கே போறம். கார் வாங்கப் போறமப்பா. முனியம்மா : கொஞ்சம் வடிவா வெளிக்கிட்டுப் போனால் என்னைப் பாத்திட்டாவது காசைக் கொஞ்சம் குறைச்சுசொல்லுவான். சாத்தர்: நீ அடிச்சிருக்…
-
-
- 44 replies
- 5.4k views
-
-
அம்மாளாச்சி என்றவுடனை யாரோ என்ரை குஞ்சியம்மா இல்லாட்டி பாட்டி, பூட்டி என்று நினைச்சிட்டால் அதுக்கு நான் பொறுப்பில்லை. அகிலமெல்லாம் ஆழும் அகிலாண்டேஸ்வரி சிறீ முத்துமாரி அம்மன் தாங்கோ அவா. எனக்கு நினைவு தெரிந்த நாளிலை இருந்து ஆத்தா காலடிச் சந்நிதானம் படாத நாளே இருக்காது, அந்தளவுக்கு லிங் எமக்குள்ளை. கோயிலுக்குக் கிட்டத்தான் வீடு என்பதால் கோயில் மணிதான் எங்களுக்கு நேரம் காட்டும் கடிகாரம், ஏன் அலாரமும் கூட. எந்த மணி எத்தனை மணிக்கு அடிக்கும், எப்ப பூஜை தொடங்கும்,எப்ப முடியும், எப்ப பிரசாதம் குடுப்பங்கள் என்ற வரைக்கும் அத்துப்படி. நான் படிச்ச ஆரம்ப பாடசாலை,வீடு,கடை என்று எல்லாமே கோவிலை அண்டி இருந்ததால் மற்றவர்களை விட எமக்கு நெருக்கம் அதிகம். பத்து வயசிலையே அந்த …
-
-
- 39 replies
- 5k views
- 1 follower
-
-
என்ன நடந்ததென்றால்.. நான் சங்கக்கடைக்கு போனேனா .. ஒரு லீற்றர் தேங்காயெண்ணெய் என்று கேட்டு போட்டு தான் bag ஐ பார்த்தேன்.. ஐயோ போத்திலை விட்டிட்டு வந்திட்டேன்.. சாமானை அங்காலை எடுத்து வையுங்கோ என்று சொல்லிபோட்டு ... வீட்டை ஓடிவந்து கேற்றுக்கு வெளியிலே சைக்கிளை விட்டிட்டு ... இப்ப வாறது தானே என்று பூட்டாமல் வீட்டுக்குள்ளே போய் ... தேங்காயெண்ணெய் போத்திலை எடுத்து கொண்டுவந்து சைக்கிளை பார்த்தால்.. காணவில்லை.. "நடுவிலே கொஞ்ச பக்கத்தை காணோம்" படத்திலே வாற விஜய் சேதுபதி மாதிரி, எங்கட அம்மா ஐந்தாவது தடவையாக பரமேஸ்வரா சந்தி இந்திய ராணுவ முகாம் பொறுப்பதிகாரி சர்மாவுக்கு சொல்லிகொண்டிருந்தா. சர்மாவுக்கு தலை எல்லாம் சுத்தியது. பலாலி வீதியில் இருந்த அந்த அடுக்குமாடி…
-
- 24 replies
- 3.1k views
-
-
அன்பு நண்பர் ஒருவரின் கணணியுனுள் ஒருவித வைரஸ் புகுந்து அட்டகாசம் பண்ணுகிறதாம், இணையத்தினுள் செல்லும் வேளைகளில் ”அந்த மாதிரியான” படம்தான் திரையில் தெரிகிறது என்றும், அதை தர்மபத்தினி கண்டு சந்தேகப்பட்ட போது, தானும் நகைச்சுவையாக ”எத்தனை நாளைக்குத் தான் உன்னைப் பார்க்கிறரது” என்று ஒரு A ஜோக் அடித்தாராம். அதன்பின் தர்மபத்தினியின் பார்வை மதுரையை எரித்த கண்ணகியின் பார்வை போலிருப்பதாகவும், உடனே இந்தப் பிரச்சனையை தீர்ததுவைய்யுங்கள் இல்லை என்றால் உங்களுடன் தான் நான் இனிமேல் தங்கவேண்டும் என்று கூறியபடியே இரவு 9 மணிபோல் கதவைத்தட்டினார், நண்பர். கையோடு கணிணியைக் கமக்கட்டுக்குள் வைத்துக்கொண்டுவந்திருந்தார். எனது இதயம் எதையும் தாங்கும். ஆனால் நண்பரை என்னுடன் தங்கவைப்பதைத்…
-
- 11 replies
- 4.3k views
-
-
கப்டன் ரவி காலம் எழுதிய வரிகளில்...! இந்திய ராணுவம் ஈழமண்ணுக்குத் தந்து சென்ற வடுக்கள் எங்கள் மனங்களில் நூற்றாண்டுகள் போனாலும் கரையாத துயரங்கள்; அவை. ஓவ்வொரு ஊருக்குள்ளும் ஒரு குடும்பமேனும் இந்தியப் படைகளால் சிதைவுற்ற கதைகளைச் சுமந்து கிடக்கிறது வரலாறு. அந்தக் கொடிய நாட்களில் எங்கள் ஊர்களில் தலைமறைவு வாழ்வு வாழ்ந்த புலிவீரர்கள் பலரது கதைகளையும் காலம் மௌனமாகச் சுமந்து கொண்டு நகர்கிறது. 1989ம் ஆண்டின் ஓரிரவு எங்கள் வீடுகளில் அத்துமீறி நுளைந்து நிரந்தரமாய் எங்களோடு உறவாகி நினைவுள்ளவரை தங்கள் ஞாபகங்களைத் தந்து சென்றவர்களுள் கப்டன் றவியண்ணாவும் ஒருவர். ஊரில் உலாவிய போராளிகளுள் றவியண்ணா வித்தியாசமான போராளி. அமைதியென்றால் அது றவியண்ணாதான். அதிகம் கதையில்லை …
-
- 16 replies
- 2k views
-
-
சாயங்காலம் சாயும் நேரம் மின் விளக்குகளின் மிதமான வெளிச்சத்தில் குளித்தபடி மௌனமாய் தவமிருக்கும் தவசிபோல அமைதியும் அழகும் மிகுந்த தூய்மையுடன் தூங்கிக்கொண்டிருந்தது அந்த முதியோர் இல்லம். ஆடி ஓடி ஓய்ந்து தம் இறுதிக்காலத்தை அமைதியுடனும் ஆரோக்கியத்துடனும் கழிக்கும் அம் முதியவர்களின் முகங்களில் மிளிரும் புன்னகையையும் தாண்டி அவர்கள் மனங்களில ;;புதைந்து கிடக்கும் ஏக்கம் ஏமாற்றம், தனிமை, கழிந்த காலங்களின் நினைவுத் தடங்கள், என பல்வேறுபட்ட பரிமாணங்களையும் தாங்கி அங்கு பல இன, மத, மொழி, சார்ந்த பல குண இயல்புகள், கலாச்சாரங்கள், உணவுப் பழக்கங்கள், உடை வேறுபாடுகள், என்று பலதரப்பட்ட முதியவர்களும் அங்கு தங்கி இருந்தனர். அடிவானம் வெளுக்கும் அந்த விடிகாலைப் பொழுதில் வாகனத் தரிப்பிடத்தில் …
-
-
- 14 replies
- 2.1k views
-
-
1989 ஆம் ஆண்டு முற்பகுதியில் ஒரு நாள். கோப்பாய் இந்திய இராணுவத்தின் முகாமுக்கு அந்தோணி அழைக்கப்படிருந்தான். அந்தோணி: காக்கை தீவிலே அல்லது நாவாந்துரையிலே மீன்களை வாங்கி பெட்டியில் கட்டி கொண்டு கொக்குவில், கோண்டாவில், உரும்பிராய், கோப்பாய், இராசபாதை வழியாக நீர்வேலி, சிறுபிட்டி, ஈவினை நவக்கிரி வரை கையிலே ஒரு ஊது குழலியை வைத்து, பா.. பாய்...ப் பாய் என்று ஊதியபடி அன்றாடம் மீன் வியாபாரம் செய்யும் ஒரு குடும்பசுமை மிக்க உழைப்பாளி. அது அவனது பிரதான தொழில், உப தொழிலாக இந்திய இராணுவத்தின் வருகைகளையும், பதுங்கி இருத்தல்களையும், அக்காச்சி தலைமையிலான கெரில்லா போராளிகளுக்கு சங்கேத மொழி மூலம் வழங்கி கொண்டிருந்தான். சில நாட்களில் அரக்குளா, சில நாட்களில் செவ்விளை, சில நாட…
-
- 34 replies
- 5.1k views
-
-
அப்பா போன்” மகனிடம் இருந்து போனை வாங்குகின்றேன். “அண்ணை நான் இங்கு பீட்டர்” “பீட்டர் “ “அண்ணை கொம்பனியில இருந்த காரைநகர் பீட்டர் “ “டேய் எப்படி இருக்கின்றாய்? எங்க இருக்கின்றாய்?” “ அண்ணை நான் கனடா வந்து ஒட்டாவில் படித்துமுடித்துவிட்டு இப்ப டெக்ஸ்சசில் வேலை எடுத்து போய்விட்டன், நீங்கள் எப்படி இருக்கின்றீங்கள் அண்ணை ? ஒட்டாவாவில் இருக்கும் போது நீங்கள் அயன்சின் அக்காவை கலியாணம் கட்டி டொராண்டோவில் இருப்பதாக கேள்விப்பட்டனான் .பிள்ளைகள் இருக்கா அண்ணை?” “ இரண்டு பெடியங்கள்,வளர்ந்துவிட்டார்கள் .இப்ப என்ன இருந்தா போல என்ரை நினைவு” “போன மாதம் டொராண்டோவிற்கு ஒரு செத்த வீட்டிற்கு வந்தனான் ,அங்கு நந்தனை கண்டனான் ,அப்ப பழைய கொம்பனி கதைகள் கதைக்கும் போது உங்க…
-
-
- 43 replies
- 5.7k views
-
-
இரத்மலான விமான நிலையத்திலிருந்து பாணந்துறைப்பக்கம் நாலாவது தரிப்பிடம் அங்குலான சந்தி. ஆடைதொழிற்சாலைகள் நிறைந்த இடம். அங்கு வேலை செய்யும் இளம் சிங்கள பெண்களுக்கும் குறைவில்லை. நானும் நியாஸும் வெள்ளிகிழமை பின்னேரங்களில் அங்குலான சந்தியில் பிற்ற கொட்டுவ போற 101 பஸ் எடுத்தோம் என்றால், வார விடுமுறையில் வீடு திரும்புகின்ற ஆடை தொழிற்சாலை அழகிகள் தான் எங்கள் பொழுதுபோக்கு. பிகர் மடிக்கிறத்துக்கு என்று எங்களிடம் ஒரு டெக்னிக் இருக்கு. நாங்கள் சீட்டிலே இருந்து கொண்டு நிக்கிற பிகருகளின் காலை சுரண்டுவோம், அவை காலை ஏறி மிதிச்சால் இந்த பிகர் மடியாது. அதேவேளை அவளுகளும் திரும்ப சுரண்டினால் பிகர் மடிஞ்சிட்டு என்று அர்த்தம். இதே மாதிரி நாங்கள் நிண்டு கொண்டு, சீட்டிலே இருக்கிற பி…
-
- 31 replies
- 4.8k views
-
-
குறிப்பு. பாதைகள் மூடப்பட்டு, இராணுவத்தால் சூழப்பட்ட பகுதிக்குள் இருந்து வெளியேறுவது என்பது அவ்வளவு இலகுவானதல்ல. இரவுகளில் மட்டுமே பயணங்கள் இருளுக்குள் சன நெரிசல்படும் குளுவன் காடுகளூடாக….. சேறு சகதி என நீர்வழிப்பயணங்களாகவும் 90 களின் ஆரம்பங்களில் யாழ்ப்பாண மக்களின் பயணங்கள் அமைந்தன. பாம்பு “க்வ்”………. முனகலும் இல்லாமல் அழுகையும் இல்லாமல் ஈனசுரத்தில் எழுந்து அடங்கியது குரல். அடிவயிற்றைக் கைகளால் அழுத்தியபடி இருண்ட கொட்டிலுக்குள் அவ்வுருவம் சுருண்டு விழுந்தது. அந்தக்கரையில் இருந்த திடீர் தேனீர் கடையின் முன்னால் டிரம்மில் கிடந்த தண்ணீரில் சேறாகிய பஞ்சாபியைக் கழுவிக் கொண்டாள் சுபாங்கி. ஈரம் சொட்டச்சொட்ட பஞ்சாபி உடலோடு ஒட்டியது. சிறு குடிலான திடீர் த…
-
-
- 60 replies
- 9.3k views
-
-
பகுதி-1 வணக்கம் உறவுகளே.. நீண்டநாட்களின் பின்னர் ஒரு பதிவு போட வேண்டும் என்ற உந்துதலில், அண்மையில் மேற்கொண்ட பயணம் குறித்த சில சுவாரசியமான சம்பவங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ளலாம் என்று இதை எழுதுகிறேன். பத்து நாள் போட்டு வந்து பயணக்கட்டுரை எழுதுறான் என்று பகிடி விடக்கூடாது, ஏழுமலை,ஏழுகடல் தாண்டி .. என்ற புராணக்கதைகள் போல கடல் கடந்து காதலி.......சே.../மனைவியுடன் ஒரு சந்திப்பு என்ற வகைக்குள் அடக்குகிறேன். ஒரு சில சம்பவங்கள் யாரையும் காயப்படுத்தும், அவமதிக்கும் நோக்கில் எழுதப்படவில்லை அப்படி ஏதும் யாரையும் புண்படுத்தி இருக்குமாயின் முன்கூட்டியே அதற்காய் மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறேன். ****************************************************************************…
-
- 276 replies
- 24.6k views
- 1 follower
-
-
கப்டன் றோய் 22 வது வருட நினைவுகளில்....! Posted by சாந்தி ரமேஷ் வவுனியன் Monday, December 31, 2012 comments (0) "ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு நினைவிருக்கு நினைவிலே சுகமிருக்கு நெஞ்சே....இசைநெஞ்சே" இதுவொரு சினிமாப்பாடல். இந்தப்பாடல் போல பலரது நினைவுகளை பல பாடல்களும் அவர்கள் விரும்பிக் கேட்ட அல்லது விரும்பிப் பாடியவையும் நினைவுகளாய் தந்த ஞாபகங்கள் எல்லோருக்குமே இருக்கும். அந்த நினைவுகள் பலரது இழப்புகளை அவர்களது தியாகங்களை வரலாற்றில் பதித்து விட்டுச் சென்ற கதைகள் ஆயிரம். அத்தகையதொரு நினைவைத் தந்து சென்ற ஒரு மாவீரனை நினைவு தருகிற பாடல் :- 'வானுயர்ந்த காட்டிடையே நான் இருந்து பாடுகின்றேன் வயல் வெளிகள் மீது கேட்குமா-இது வல்லை வெளி தாண்டிப் போகுமா வயல் வெளிகள் மீது க…
-
- 25 replies
- 4.2k views
-
-
[size=6]சோத்து சுந்தரி....[/size] நானாக யோசிக்கவில்லை... அம்மாவும் அப்பாவும் ஊட்டி ஊட்டி வளர்த்து எனக்கு இலண்டனுக்கு வருமுன்னரே உடம்பு கொஞ்சம் ஊதித்தான் இருந்திச்சு. இதில அடிக்கடி நொட்டைத்தீன் சாப்பிட்டு வயிறும் வைச்சிருந்தால் சொல்லவே வேணும்! இப்ப கொஞ்ச நாளா காலில நகம் வெட்டலாம் எண்டு குனிஞ்சு நகம்வெட்டியால் வெட்ட வெளிக்கிட்டால் நெஞ்சுக்கும் முழங்காலுக்கும் இடையில ஏதோ பெரிசாக ஒண்டு (பிழையாக யோசிக்காதேயுங்கோ) நிக்குது எண்டு பாத்தால், அது எந்த வஞ்சனையுமில்லாமல் வளந்து முட்டுக்காய் இளநீ மாதிரிக் கிடக்கும் வயிறுதான். இவர் இப்ப பிள்ளைபெற வேண்டாம் எண்டு கவனமாக இருந்தும் ஏதாவது பிசகிச் சிலவேளை வயித்தில பூச்சி, புழு ஏதாச்சும் வந்திட்டுதோ எண்ட பயத்தில சோதிச்சுப் …
-
- 35 replies
- 3.8k views
-
-
எண்ணைவளம் மிக்க சவூதி அரேபியா, அரசராலும் அவரது சொந்த பந்தங்களாலும் ஆளப்படும் ஒரு முடியரசு நாடு. அரச அமைச்சர்களும், முக்கிய அதிகாரிகளும் அரச குடும்பத்தினை சேர்ந்தவர்கள். பல பெண்களை மணக்கும் அரச குடும்ப ஆண்மக்களால் உருவாகப் பட்ட கணக்கு இல்லா வாரிசுகளினால், பெரும்பாலும் அமைச்சர்கள் எல்லோரும் இளவரசர்கள் தான். சவூதியின் மொத்த செல்வமும் இந்த அரச குடும்ப, மற்றும் இளவரசர்கள் வசம் தான் சிக்கி உள்ளது. இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் போல தாய்லாந்திலிருந்தும் மக்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைக்கு செல்வது வழக்கம். இவ்வாறாக இளவரசர் ஒருவரின் வீட்டுக்கு 23 -24 வருடங்களின் முன்னர் சுத்தம் செய்யும் பணியாளர் ஆக வந்து சேர்ந்தார் ஒரு தாய்லாந்து கிராமவாசி. அவரைப் போல் கிட்…
-
- 64 replies
- 14.4k views
-
-
அவனைச்சுற்றி நின்று அனைவரும் கை தட்டி வாழ்த்து சொல்லிக்கொண்டிருந்தனர். அப்பொழுது யாரோ அவனை தள்ளிவிட்டது போல இருந்தது . திடுக்கிட்டு விழித்தான் விமானம் சிங்கப்பூரின் சாங்கிவிமான நிலையத்தில் தரையிறங்கிக்கொண்டிருந்தது. தங்கள் பயணத்தை நல்லபடியாக முடித்தபயணிகள் விமானிக்கு பாராட்டு தெரிவிப்பதற்காக கைதட்டிக்கொண்டிருந்தனர் என்பதது அப்பொழுதான் அவனிற்கு தெரிந்தது 0000000000000000 நானும் விதவைதான் எனக்கு யுத்தத்தின் வலி தெரியும் எனவே சமாதானம் வேண்டும் என்றபடி சமாதான விதவைத் தேவதையாக வாக்கு கேட்டு சந்திரிகா ஆட்சியில் அமர்ந்து பேச்சு வார்தைகளும் தொடங்கி விட்டிருந்த காலகட்டம்.சந்திரிக்கா தேர்தலில் நிற்கும் பொழுதே புலிகளிற்கும் அவரிற்கும் சில இரகசிய பேச…
-
- 55 replies
- 11.9k views
-
-
வரலாறு இப்படித்தான் பதியப்பட்டது 1984 ஒரு காலைப்பொழுது. எவரோ கூப்பிடும் சத்தம் கேட்டது. அத்துடன் மோட்டார் சைக்கிள் சத்தமும். வெளியில் வந்து பார்த்தால் புதிதாக திருமணமான எனது மச்சாளும் அவரது கணவரும் வந்திருந்தனர். வரவேற்று உபசரித்து இன்று மத்தியானம் இங்குதான் சாப்பாடு என்று முடிவெடுத்தபின் நிற்கும் சேவலில் எதுவேண்டும் என்று கேட்டு மச்சாள் புருசன் பூவோடு நிற்கும் சிவப்பு சேவலைக்கைகாட்ட அதை முறித்து உரிக்கும்படி தம்பியிடம் கொடுத்துவிட்டு வந்த எனக்கு ஒரே மன உளைச்சல். மச்சாள் நமக்கு கிடைக்காது வேறு ஒருவரை கட்டிவிட்டாவே என்ற ஆதங்கம் உள்ளிருந்தாலும ஒரு வயது கூடியவர் என்பதால் நாம்தானே பார்க்காது விட்டோம் என்பது புரிந்தது. எனது மன உளைச்சலுக்கு காரணம் அவர்கள் வந்திருந்த ச…
-
- 210 replies
- 24.1k views
- 1 follower
-
-
அருணாண்ணை வீரச்சாவு அதை நம்பவா…..? இணையத்தில் மேய்ந்து ஊரிலுள்ள உறவுகளின் இருப்பை உறுதிப்படுத்துகிறேன். காணும் தளமெங்கும் காயங்கள் சாவுகள் என இணைவலையெங்கும் துயர்முட்டி வழிகிறது....காக்கவும் ஆழின்றி கையொடுக்கவும் நாதியின்றித் தினம் வன்னிப்பெரு நிலப்பரப்பெங்கும் நிறைந்த சாவும் கண்ணீருமாக யாருக்கும் யாருடனும் பேசவோ உறவாடவோ முடியாத பொழுதுகளால் பின்னப்பட்டிருந்தது நாட்கள். பயங்கரமான கனவுகளும் பாதைதெரியாத நினைவுகளுமாக அந்த நாட்கள் ஒவ்வொரு தமிழனின் ஆன்மாவும் அவலப்பட்டபடி அழுதபடி…..அப்படியான ஒருநாள் மதியம்….. வணக்கம்.... தொலைபேசியழைப்பில் வந்த குரலொன்று. யாரெண்டு தெரியுதா? இல்லை... என்ற எனக்குத் தன்னை ஞாபகப்படுத்திய குரல். 3வருடங்கள் மேலாக தொடர்பற்றிருந்த தோழன…
-
- 4 replies
- 3.3k views
- 1 follower
-
-
அவளை இன்று பெண் பார்க்க வந்திருந்தார்கள். அவள் புலம்பெயர் நாடொன்றில் வாழ்பவள். அழகானவள். தாய் தந்தை சொல்லை தட்டாதவள். நவநாகரீக உடைகள் அணிவது அவளுக்கு பிடிக்காது. தமிழ் கலாச்சாரப்படி வாழ்பவள் என்று அவளைப் பற்றி மற்றவர்கள் பேசுவார்கள். இதில் அவளுக்கு பெருமையும் கூட. அவளுக்கு ஒரு நண்பி இருக்கிறாள். இல்லை, இருந்தாள். அந்த நண்பி 16 வயதில் இருந்தே வேற்று இனத்தவன் ஒருவனைக் காதலித்தாள். அவனுடன் நகரம் முழுவதும் சுற்றினாள். 18 வயது ஆனவுடன் அவனுடன் ஒன்றாக வாழவும் சென்று விட்டாள். கடந்த 5 வருடமாக திருமணம் செய்யாமல் அவனுடனேயே வாழ்ந்த வருகிறாள். அந்த நண்பியைப் பற்றி அந்த நகரத்தில் உள்ளவர்கள் பலவாறு பேசுவார்கள். அந்த நண்பி அணிகின்ற உடைகள் பற்றியும், துணைவனுடன் டிஸ்கோ செல்வது பற்றி…
-
- 27 replies
- 5.4k views
-