கதைக் களம்
கள உறுப்பினர்களின் சிறுகதை | மொழியாக்க கதை| தொடர்கதை | பயண அனுபவங்கள் | நாடகம்
கதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, பயண அனுபவங்கள், நாடகம் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
647 topics in this forum
-
ஞாபகங்கள் ஒரு வகையில் விசித்திரமானவை. அண்மையில் நடந்த சம்பவமொன்று மறந்து போகிறது.கடைத்தெருவில் சந்திக்கிற மனிதர் ஒருவர் என்னை ஞாபகமிருக்கிறதா என கேட்கிறபோது அசடு வழியவேண்டிவருகிறது. எங்கேயோ பார்த்த முகம் போல இருக்கும். பெயர் நினைவுக்கு வராமல் அடம் பிடிக்கும். முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்னர் நடந்த சில சம்பவங்கள் இப்போதும் அச்சொட்டாக ஞாபகத்தில் இருக்கிறது. பல நூறு மனிதர்களையும் சில ஆயிரம் சம்பவங்களையும் கடந்திருப்போம். சிலது ஒட்டிக்கொள்கிறது. சிலது தொலைந்து போகிறது. எது தொலையும் எது தங்கிநிற்கும் என்பதற்கு ஏதேனும் எளிய சூத்திரம் இருக்கிறதோ தெரியாது. இது இன்னும் மறையாமல் எங்கையோ ஓரமாக ஒட்டிக்கொண்டிருகிற இரண்டு பள்ளிகால கனவுகள் பற்றியது. சின்ன வயதில்…
-
- 12 replies
- 3.9k views
-
-
நேற்றைய இரவுச் செய்தியில் சொன்னது போலவே இன்று அதிகாலையில் இருந்து பனிப்பொழிவு கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. வழமைக்கு மாறாக எனது கார் மிகவும் மெதுவாக ஊர்ந்தபடி போய்க்கொண்டிருந்தது. காரின் வெப்பமானியில் அப்போதைய வெப்பநிலை -37F எனக் காட்டியது. அமெரிக்காவுக்கு வந்த இந்தப் பத்து வருடத்தில் இருந்து இந்தப் பாதையால்தான் வழமையாக நான் வேலைக்குப் போய் வருவது வழக்கம். தினசரி போய்வரும் பாதை என்பதால் கண்ணை மூடிக்கொண்டு காரை ஓட்டினாலும் வலம் - இடம், சந்திச் சிக்னல், மேடு - பள்ளம் எல்லாம் தாண்டிப் பதினேழு நிமிடங்களில் வேலையில் இருப்பேன். இருந்தாலும் இன்றைய பனிப் பொழிவு இன்னும் கொஞ்சம் கூடிய எச்சரிக்கை தேவை என்பதை என் மண்டைக்குள் அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தது. அந்த…
-
- 15 replies
- 3.9k views
-
-
சம்மருக்கு பீச்சுக்கு போகவேணும் என்பது எங்கன்ட சனத்தின்ட அட்டவணையில் ஒன்று அதற்கு அவனும் விதிவிலக்கல்ல. "அப்பா வீக்கென்ட சரியான நெருப்பு வெய்யிலாம்" "ஏசி யை போட்டு வீட்டுக்குள்ள இருக்கவேண்டியதுதான்,ஒரு இடமும் போகதேவையில்லை" "அது எங்களுக்கு தெரியும் அப்பா, வி வோன்ட் டு கொ டு பீச்" " அங்க சரியான சனமாயிருக்கும் அதுக்குள்ள போய் கார் பார்க் பன்ணுறதெல்லாம் கஸ்ரம்" "கொஞ்சம் எர்லியாக போனால் கார்பார்க் கிடைக்கும்" "உந்த கொழுத்திறவெய்யிலுக்குள்ள போய் கறுத்து போவியளடி" "அதற்கு சன்கீறிம் பூசிக்கொண்டுபோகலாம் ,அப்பா உங்களுக்கு சுவிம் பண்ணதெரியாதபடியால் சும்மா லெம் எஸ்கியுஸ்களை சொல்லாதையுங்கோ" "எனக்கு சுவிம் பண்ணதெரியாதோ! நிலாவரையில் டைவ் அடிச்சனெ…
-
- 15 replies
- 3.9k views
-
-
இரவில் படுக்கும் போது என் இரண்டு குழந்தைகளுக்கும் ஒன்று அல்லது இரண்டு கதைகள் சொல்வது வழக்கம். கதை கேட்பதற்காகவே இரண்டு பேரும் என்னுடன் படுக்க விரும்பி வருவினம். நான் கதை சொல்வதுடன் அவர்களையும் கதை சொல்ல வைப்பதுண்டு. மகனுக்கு 9 வயதாகுது என்பதால் அவன் தான் வாசித்த கதைகளை ஓரளவுக்கு நேர்த்தியாக சொல்வான். மகளுக்கு 4 வயது என்பதால் தனக்கு நடக்கும் சம்பவங்களை கோர்வையின்றி அங்கொன்றும் இங்கொன்றுமாக சொல்லி மெருகேற்றப் பார்ப்பாள். அவள் கதைகளில் அநேகமாக ஒரு Naughty boy வருவான். அது அவளது அண்ணனாகத் தான் இருப்பான். இப்படி, அவர்கள் என்னிடம் கதை கேட்கும் போது என்னால் நான் சின்ன வயதில் வாசித்த கதைகளை நினைவு வைத்து சொல்ல முடிவது இல்லை. என் ஞாபகத்தில் இருந்த சிறுவர் கதைகள் எல்லாம் மறந்த…
-
- 13 replies
- 3.9k views
-
-
அதிசய நகரம் பெற்றா முதல் எம்மாவுஸ் வரை....... எமது ஆன்மீகத்தின் வேர்களைத் தேடி புனித பூமிக்கான திருப்பயணம் -2017 (ஜோர்தான்-- இஸ்ரவேல் -- பலஸ்தீனம்) என் தெய்வம் வாழ்ந்த தெய்வீக பூமி இது. இயற்கை அழகும் செயற்கை நிர்மாணிப்பும் கலந்த அற்புதமான உலகம். மலைப்பாங்கான பிரதேசம். ஜோர்தான் நதிப்பள்ளத்தாக்கு வரட்சியில் வாட அதைத்தாண்டி வனாந்தரம் கண்ணுக்கெட்டிய தூரம் புல் பூண்டுகளற்று பசுமைகளற்று பரந்து விரிந்து பாலைவனமாகக் காட்சியளித்தது. என் நீண்டநாள் கனவு நிறைவேறிய மகிழ்வு மனதுக்குள் மத்தாப்பூவாய் மலர்ந்தது. கார்த்திகை மாதம் 23ம் திகதி. இந்த நாளுக்காய் எத்தனை காலம் ஏங்கித் தவித்திருந்தோம். மாலை 9.40க்கு பியசன் விமானநிலையத்தில் இருந்து எயார்…
-
- 13 replies
- 3.9k views
-
-
வெளியில் பனி கொட்டுகிறது. பதினைந்து cm வரை வந்து சேரலாமென்று செய்தி சொல்கிறது. நாங்கள் பனி பார்காத தேசத்தில் இளமையை கடந்தவர்கள். கண்டியில் படிக்கிற காலத்தில் நூவரெலியாவை எட்டி பார்த்திருக்கிறேன். மிஞ்சி மிஞ்சி போனால் 10 பாகை குளிரை கண்டிருப்பேன். இங்கெல்லாம் அதை குளிரென்றால் ஒரு மாதிரி பார்ப்பார்கள். பனி பொழிய ரம்பாவும் ராதாவும் ஆடுவதை படத்தில் பார்த்திருக்கிறேன். சொர்க்கத்திலும் பனி கொட்டுமென்பது என் சின்ன வயது பிரமை. கனடாவில் கால் பதிக்கிறவரை அந்த பிம்பம் கலையாமல் இருந்தது. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னம். கொழும்பில் குண்டுகள் வெடித்துக்கொண்டிருந்த காலம். படிப்பு முடிந்து வேலை தேடும் படலம் ஆரம்பித…
-
- 12 replies
- 3.8k views
-
-
மலரும் நினைவுகளில் மறக்காத மனிதர்கள் அங்கம் - 1 13வருடங்கள் கழித்து பிறந்த ஊரையடைந்திருந்தாள். பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்ட எல்லைக்குள் யாரையும் அனுமதிக்கமாட்டார்களென்ற உறவினர்களின் சொல்லையும் மீறி தான் பிறந்த வீட்டையும் நடந்த தெருவையும் பார்க்கப் போவதாய் அடம்பிடித்தாள். அவள் நடந்து திரிந்த நிலத்தைப் பிள்ளைகளுக்கு காட்ட வேணுமென்ற கனவோடு போயிருந்தவளுக்கு உறவினர் சொன்ன காரணங்களை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஒற்றையடிப்பாதையளவு தான் போகலாம்...கொஞ்சம் அரக்கினாலும் மிதிவெடியள் ஏன் இந்த வில்லங்கத்தை குழந்தையளோடை ? அம்மா புறுபுறுத்தா. அவள் தனது முடிவை மாற்றுவதாக இல்லை. கட்டாயம் பிறந்த வீட்டைப் பார்க்க வேணுமென்றே நின்றாள். கடைசியில் அவள்தான் வென்றாள். அன்று …
-
- 19 replies
- 3.8k views
-
-
[size=6]சோத்து சுந்தரி....[/size] நானாக யோசிக்கவில்லை... அம்மாவும் அப்பாவும் ஊட்டி ஊட்டி வளர்த்து எனக்கு இலண்டனுக்கு வருமுன்னரே உடம்பு கொஞ்சம் ஊதித்தான் இருந்திச்சு. இதில அடிக்கடி நொட்டைத்தீன் சாப்பிட்டு வயிறும் வைச்சிருந்தால் சொல்லவே வேணும்! இப்ப கொஞ்ச நாளா காலில நகம் வெட்டலாம் எண்டு குனிஞ்சு நகம்வெட்டியால் வெட்ட வெளிக்கிட்டால் நெஞ்சுக்கும் முழங்காலுக்கும் இடையில ஏதோ பெரிசாக ஒண்டு (பிழையாக யோசிக்காதேயுங்கோ) நிக்குது எண்டு பாத்தால், அது எந்த வஞ்சனையுமில்லாமல் வளந்து முட்டுக்காய் இளநீ மாதிரிக் கிடக்கும் வயிறுதான். இவர் இப்ப பிள்ளைபெற வேண்டாம் எண்டு கவனமாக இருந்தும் ஏதாவது பிசகிச் சிலவேளை வயித்தில பூச்சி, புழு ஏதாச்சும் வந்திட்டுதோ எண்ட பயத்தில சோதிச்சுப் …
-
- 35 replies
- 3.8k views
-
-
அவர்கள் வாழட்டும் கலா பாக்யராஜ் தம்பதிகளுக்கு இறைவன் கொடுத்த பிள்ளைச் செல்வங்கள் மூன்று ஆண் குழந்தைகள். புலப்பெயர்ந்து ஜேர்மனி சென்ற இவர்கள் படட கஷ்டங்கள் ஏராளம் குழந்தைகள் இரண்டு வருட இடைவெளியில் பிறந்ததால் மனைவி அவ்ர்களைக் கவனிக்க கணவன் இரண்டு வேலை செய்து பிள்ளைகளை அன்போடும் பன்பொடும் கண்ணுங் கரு த்துமாய் வளர்த்தார். உறவினர்கள் லண்டனில் வாழ்ந்ததால் இவர்களும் அங்கு சென்று குழந்தைகளை வளர்க்க எண்ணினார்கள். இடம் மாறி அங்கு சென்ற பின் இலகுவாக இருக்கவில்லை வாழ்க்கை முறை. மொழிமாற்றம் என குழந்தைகள் கஷ்ட படவே ஒரு வாத்தியாரை ஓழுங்கு செய்து ..அவர்களுக்கு ஆங்கிலத்தில் முழுத்தேர்ச்சி அடைய ஆன மட்டும் முயற்சி செ ய்தார் தந்தை . பிள்ளை கள் வளர…
-
- 12 replies
- 3.8k views
-
-
http://www.shobasakthi.com/shobasakthi/?p=1354 இந்தக் கதையினை வாசித்துமுடித்தபோது, எனது மனதில் எழுந்த முதலாவது கேழ்வி 'மாயோள்' என்ற தலைப்பினை ஏன் சோபாசக்த்தி கதையின் தலைப்பாக இடவில்லை என்பதாவே இருந்தது. அத்தனை அருமையான பெயர் அது. சோபாவின் வாசகர்களிற்கு நன்கு பரிட்சயமான ஒரு சொல்லில் ஒரு எழுத்தினை வேண்டுமென்றே மாற்றி, அது ஒரு விசித்திரமான பெயர், வெளியிடத்தில் இருந்து வந்திருந்தவளின் பெயரென்று ஒரு பெரும் நாவலையே அந்தச் சொல்லிற்குள்ளால் நடத்தி முடித்திருக்கிறார். இந்தக்கதையின் அடி ஆழம் அனைத்தும் அந்தச் சொல்லிற்குள் பொதிந்து கிடக்கிறது. இருந்தும் அதனைத் தலைப்பாக இடாது குழந்தை காயாவின் பெயரினை வைத்திருக்கிறார். யோசிக்கும் போது அதன் தேவை புரிகிறது. இப்பதிவின் கடைசிப் பந்திய…
-
- 20 replies
- 3.8k views
-
-
நாம் கடையை வாங்கியதே விற்றவர் சொன்னார்தான். களவு எடுக்க என்றே ஆட்கள் வருவார்கள் கவனம் என்று. ஒரு மாதத்தின் பின் ஒரு தமிழ் பெடியன் கடைக்கு வந்தான். வந்த உடனேயே அக்கா எப்பிடி இருக்கிறியள் என்று அவன் இயல்பாக நலம் விசாரித்தபடி கதைக்கத் தொடங்கினான். ஆளும் நல்ல ஸ்மாட். பார்க்க நல்ல பெடியன் போல் இருந்தது. அதனால் நானும் இயல்பாகி அவனுடன் கதைக்கத் தொடங்கினேன். என்னுடன் மட்டுமல்ல என் கணவருடனும் மிகவும் நட்பாகிவிட்டான் அவன். அவன் பெற்றோர் சகோதரர்கள் பற்றிச் சொன்னவை அவனை ஒரு பண்பான குடும்பத்துப் பிள்ளை என எண்ண வைத்தது. கடந்த நான்கு ஆண்டுகளாக எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டு இருந்தது. நான்கு மாதங்களின் முன்னர் ஒருநாள் நானும் கணவரும் நிற்கும்போது வந்தவன் கணவரைத் தனியே அழைத்துச்…
-
- 39 replies
- 3.8k views
-
-
எங்கே அவன் தேடுதே சனம் அவரை எல்லோரும் நாட்டாமை என்றுதான் அழைப்பார்கள். மற்றவர்கள் அவரை நாட்டாமை என்று அழைப்பதில் அவருக்கு நிறைந்த மகிழ்ச்சி. கலியாண வீடா? சாமத்தியச் சடங்கா? பிறந்தநாள் விழாவா? இல்லை செத்த வீடா? எங்கள் நகரத்தில் தமிழர்களுடைய எந்த நிகழ்வானாலும் நாட்டாமையே பிரதம விருந்தினர். புலம் பெயர்ந்து யேர்மனிக்கு வந்த காலத்தில் வேலை செய்வதற்கான அனுமதி எங்களுக்குக் கிடையாது. அப்படியான நிலையிலேயே நாட்டாமை, பூ விற்றுக் காசு சேர்த்தவர். பூ விற்பவர் என்பதால் அவரது பெயரோடு ‘பூ’ என்பது அடைமொழியாயிற்று. அதாவது ‘பூ சபா’ என்றாயிற்று. சேர்த்த பணம், அதனால் வந்த அங்கீகாரம் அதோடு இணைந்த ஆணவம் எல்லாம் சேர்ந்ததால் காலம் செல்ல அவர் நாட்டாமை ஆகிப்போனார். அதெப்படி பூ வி…
-
- 24 replies
- 3.8k views
-
-
அஞ்சலி தன் சந்தோசம் என்றாலும் துக்கம் என்றாலும்.... முதலில் இவனோடுதான் பகிர்ந்துகொள்வாள். அன்றும் அப்படித்தான்..... அவள் இந்தியாவிலிருந்து போன் பண்ணியிருந்தாள். வழமைக்கு மாறான அவளது கனமான குரல்... அவள் நன்கு அழுதிருக்கிறாள் என்பதனை உணர்த்தியது. "என்ன அஞ்சு... என்ன ஆச்சு? ஏன் குரல் ஒரு மாதிரி இருக்கு?" என அவன் கனிவாக விசாரிக்க... மறுமுனையில், விம்மத் தொடங்கினாள் அஞ்சலி. "என்ன நடந்தது அஞ்சு....? என்ன ஆச்செண்டு சொன்னாத்தானே தெரியும்.... " என மீண்டும் வினவ, "நான் நாளைக்கே மலேசியா வாறன். எனக்கு இங்க இருக்க விருப்பமில்லை. நான் லண்டனுக்கு திருப்பிப் போகேலடா. உன்னோடயே வந்து இருக்கப்போறன்.... !" சொல்லிவிட்டு மீண்டும் விம்மியழத்தொடங்கினாள். "அஞ்சு.... என் செல…
-
- 4 replies
- 3.7k views
-
-
"லுமாலா" சைக்கிள் ----------------------------------------------------- 1.என்னதான் BMW காரில போனாலும் ஊரில மண் றோட்டில சைக்கிள்ள போற சுகம் கோடி குடுத்தாலும் வராது பாருங்கோ.முதன் முதலா எனக்கு நல்ல ஞாபகம் "சைக்கிள்" எண்டா எங்கட அப்பு வைச்சிருந்த "கீறோ" சைக்கிள்தான் நினைவுக்கு வருது. 2.நான் அறிய எங்கட ஊரில 1985,86 களில் (அப்ப நான் பால்குடி..இருந்தாலும் நினைவு இருக்கு)எங்கட ஊரில விரல் விட்டு எண்ணுற ஆக்கள் தான் சைக்கிள் வைச்சிருந்தவை.அதில எங்கட அப்புவும் ஒருத்தர்.( பெருமை பேசுறன் எண்டு குறை நினையாதையுங்கோ..) 3.அந்த மனிசன் அந்த சைக்கிளை விடியக்காலமை எழும்பினவுடன ஒரு சிரட்டையில மண்ணெண்ணையும் தேங்காய் எண்ணையும் கலந்து , அதை ஒரு சீலத்துணியால கம்பிகள் எல்லாம் துடை துடை எ…
-
- 14 replies
- 3.7k views
-
-
அம்மாவின் அன்பான அழைப்பும் துயில் எழுப்பலும் எதுவும் இல்லை. தங்கையின் அலட்டல் ஆர்ப்பாட்டம் இல்லை. அப்பாவின் கம்பீரக் குரல் இல்லை. எனக்குப் பிடித்த இன்னும் பலதும் இங்கில்லைத்தான். ஆனாலும் அவர்கள் எல்லோருடனும் இருக்கும்போது இல்லாத ஒருவித நிம்மதியும் அதனூடே தெரியும் வெறுமையுமே இப்ப எனக்கு இருந்தாலும் சுவாசக் காற்றில் எதோ ஒரு சுகத்தை கவலையினூடும் என்னால் உணர முடியிது. நான் இரண்டு நாட்களாக என் அறையில் ஒருவித இலயிப்போடு சுருண்டு படுத்திருக்கிறேன். ஏழாம் மாடியின் அறை ஒன்றில் திரைச்சீலையற்ற யன்னலினூடே தெரியும் வானத்தையும் அப்பப்போ கடந்து போகும் மேகங்களையும் சில பறவைகளையும் கூட பல காலத்துக்குப் பின்னர் இப்பிடிப் படுத்தபடியே பார்த்து இரசிக்க முடியும் என்று ஒரு இரு மாதங்களுக்…
-
- 20 replies
- 3.7k views
-
-
23.04.2017 தமிழினி அவர்களின் 45வது பிறந்தநாள்.தமிழினி அவர்கள் பற்றி பல்லாயிரம் கேள்விகள். தமிழினி அவர்களுக்கும் எனக்குமான உறவு பற்றியும் அவளது திருமணம் , ஒரு கூர்வாழின் நிழல் நூல் பற்றிய சர்ச்சைகள் என பெரிய பட்டியல் நீளம். எனது மௌனம் கலைத்து தமிழினி பற்றிய உலகம் அறியாத பலவியடங்களை பகிர்ந்திருக்கிறேன். இது பெரிய பகிர்வு. நேரமெடுத்து வாசியுங்கள். ------------------------------------ Saturday, April 22, 2017 தமிழினி.ஒருமுனை உரையாடல். முன்னரெல்லாம் தூக்கம் தொலையும் இரவுகளில் நீயும் நானும் விடியும்வரை பேசிக்கொண்டிருப்போம். இப்போதும் உன் பற்றிய கனவுகளாலும் உன் தொடர்பாகக் கிழம்பும் புரளிகளாலும் என் தூக்கம் தொலைகிறது.…
-
- 3 replies
- 3.7k views
-
-
அன்றைய பொழுது வழமை போலவே விடிந்தது! பிள்ளைகள் இன்னும் நித்திரையால் எழும்பவில்லை என்பதை உறுதிப் படுத்திக் கொண்ட வாசுகி மனுசன் இன்னும் கிடக்கிறாரா என்று விறாந்தையை எட்டிப்பார்த்தாள்! அவர் குப்புறப்படுத்தபடி ஆழ்ந்த நித்திரையில் இருந்தார்! அவரது சாரம் இடுப்பில் பத்திரமாக இருந்ததைக் கண்டு தனக்குள் சிரித்துக் கொண்டாள்! பிள்ளைகள் நித்திரையால் எழும்ப முன்னம் அவள் செய்ய வேண்டிய தினசரிக் கடமைகளில் இதுவும் ஒன்றாகிப் போனது! மனுஷன் எழும்பிறதுக்கு முந்திக் கோயிலடிக்குப் போய்த் தண்ணி அள்ளிக்கொண்டு வரவேண்டும் என்று நினைத்த படியே, வாசலில் நின்ற வேப்ப மரத்திலிருந்து ஒரு குச்சியை லாவகமாக ஒடித்து..வாய்க்குள் வைத்துக் கடித்தபடியே, குடத்தை எடுத்து இடுப்பில் அணைத்த படி கோயிலடியை நோக்…
-
- 11 replies
- 3.7k views
-
-
15.07.1996 பார்த்திபனின் வரவு. 15.07.1996 பார்த்திபனின் வரவு. 12.07.1996 வெள்ளிக்கிழமை. காலைச்சாப்பாடு செய்து கொண்டிருந்தேன். வளமையைவிட வித்தியாசமாக வயிறு வலித்தது. கொஞ்சநேரம் வலி பிறகு ஏதுமில்லை. மதியத்திற்கு பிறகு என்னால் நிற்க இருக்க முடியாது விட்டுவிட்டு வலித்துக் கொண்டிருந்தது. பின்னேரமாகியது. வலியில் மாற்றமில்லை. என்னை மருத்துவமனைக்கு கூட்டிப்போகும்படி அழுதேன். ஏற்கனவே பலதடவைகள் மருத்துவமனை போய் வந்த அனுபவங்களைச் சொல்லி தாமதித்து போகலாம் என சொல்லப்பட்டது. வெள்ளிக்கிழமை பின்னேரம் நண்பர்களோடு கூடி கிறிக்கெட் விளையாடும் அவசரம் மட்டுமே இருந்ததை அறிவேன். பின்னேரம் வெளிக்கிட்டால் இரவு டிஸ்கோ உலாத்தி வீடு வர விடியப்பறமாகும். அதவர…
-
- 6 replies
- 3.7k views
-
-
1975 - யாழ் மத்திய கல்லூரி யில் அரைமணி நேரம். மூன்றாவது தவணைப்பரீட்சை கடைசி நாள். கணிதப்பரீட்சை அன்று வழமைக்கு மாறாக 12 மணிக்கே அன்றைய நாளின் பாடசாலை முடிவு. புத்தகப்பை கையில் இல்லை. ஏழுத்து உபகரணங்களை வகுப்பில் வைத்துவிட்டு வரும்போது ஏதோ எல்லாப்பாரமும் குறைந்தது போலிருந்தது. அப்பாடா இனி புதிய வருடம் புதிய வகுப்பு மனம் எங்கோ பறந்தது. முதலாம் இரண்டாம் தவணைப் பரீட்சையின் பின் என்றால் மணிக்கூட்டுக்கோபுரத்தில் நேரம் பார்த்தபடி கிரிக்கெட் அல்லது புட்போல் இல்லை யாழ் நூலகத்தில் மித்திரனில் வரும் ஜி நேசனின் தொடர் முதல் அம்புலி மாமாவரை மேய் ந்துவிட்டு 3:30க்கு வீட்டிற்குப் போகலாம். ஆனால் இப்போ மழைக்காலம் மைதானத்தில் வெள்ளம், திங்கட்கிழமை நூலகமும் பூட்டு. மத்தியானத்திற்கும் …
-
- 26 replies
- 3.6k views
-
-
சின்னவளுக்கும் பெரியவளுக்கும் பள்ளிக்கூடம் கிடையாது. எனக்கும் வேலை ஏதும் இல்லை. நீச்சலுக்கும் வேறெந்த வகுப்புக்கும் ஏத்தி இறக்கவேண்டிய தேவையும் கிடையாது. புலம்பெயர் வாழ்வில் வீட்டில் எல்லோரும் சும்மா இருக்க கிடைப்பது எப்போதாவது நடக்கிற குட்டி அதிசயம். கொரோனாவின் புண்ணியத்தில் அது இன்றைக்கு வாய்த்திருக்கிறது. குட்டி அதிசயங்கள் எப்படியும் நிகழலாம். வட்ஸ்அப்பின் புண்ணியத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னம் அது நடந்தது. சின்ன வயதில் பள்ளியில் கூடப் படித்து எண்பதுகளின் மத்தியில் தொலைந்துபோன நண்பர்கள் சிலர் கனடாவில் கிடைத்தார்கள். சின்ன வயது முகங்களும் ஒரு தொகை சம்பவங்களும் பத்திரமாகவே இருந்தது. பார்த்த மனிதர்களோடு பொருத்தி பார்த்தேன். சிலருக்கு சாயல் தெரிந்தது. …
-
- 11 replies
- 3.6k views
-
-
நாங்கள் திருமலைக்காடுகளில் செயற்பட்டுக் கொண்டிருந்த காலம். காட்டு முகாம் ஒன்றில் தங்கியிருந்தோம். காட்டு வாழ்க்கையில் கடினமாக இருப்பது உணவுதான். பசிக்குச் சாப்பிடலாம் ஆனால் சுவைக்கு சாப்பிடுவது என்றால் சற்றுக்கடினம் தான். வேவுக்காகவோ அல்லது வேறு நடவடிக்கைக்காகவோ சிறு அணிகளாகப் பிரிந்து செல்லும் நேரம், இடையில் உடும்பு அகப்பட்டால் அன்றைக்கு நல்ல சாப்பாடுதான். அல்லது, ஆறு, குளம், என தண்ணீர் தேங்கி நின்று ஓடும் இடமாகப் பார்த்து ஓட்டை வலைகளை வைத்து மீன் பிடித்து சாப்பிடமுடியும். அணிகள் தங்கியிருந்த இடத்திலிருந்து சில மைல்களுக்கு அப்பால் சென்றால் பன்றி, மான், மரைகளை வேட்டையாடித் தூக்கி வந்து நல்ல இறைச்சியுடன் சாப்பாடு சாப்பிடலாம் என்ற நிலையும் இருந்தது. ஆனால், அந்த இடங்களில் …
-
- 38 replies
- 3.6k views
-
-
மதி.சுதா மீள்பதிவு- எல்லா இயக்குனர்களிடமும் தாம் ஆசைப்பட்டும் செய்ய முடியாத கதை ஒன்று இருக்கும். அப்படியான ஒரு குறுங்கதை தான் இது. இங்கு இதை படமாக எடுக்க முடியாவிட்டாலும் இந்தியாவில் யாராவது குறும்படமாக எடுத்தாலும் சந்தோசமே.... ஆர்வமுள்ள யாருக்காவது பகிர்ந்து விடுங்கள்.... எந்தளவு வன்மமுள்ள போராளிக்குள்ளும் ஒரு மென் உணர்வு இருக்கும் அதே காதலாக இருந்து விட்டால்.... படியுங்கள்... சில நினைவுகளை மீட்டிப் பார்த்த போது வந்த குறுங்கதை... மன மறைவில் ..... ”சேரா காலமை புலிகளின் குரல் கேட்டனியே” கேசவன் சற்று இழுத்தபடியே சொன்னான். ”இல்ல OPD க்கு வந்திட்டன் இழுக்காமல் சொல்லு” சற்றே தயங்கியவனாக.. ”திருமகள் வீரச்சாவாமடா” அரைவாசியை விழுங்கிக் க…
-
- 2 replies
- 3.6k views
- 1 follower
-
-
போராட்டத்துக்குக் கட்டியங்கூறி பண்டார வன்னியன் நினைவில் அரை நூற்றாண்டுகளின் முன்னம் 1968ல் எழுதபட்ட எனது முதல் கவிதை மொழி பெயர்புடன் . . நகர்கிறதுபாலி ஆறு - வ.ஐ.ச.ஜெயபாலன் அங்கும் இங்குமாய் இடையிடையே வயல் வெளியில் உழவு நடக்கிறது இயந்திரங்கள் ஆங்காங்கு இயங்கு கின்ற ஓசை இருந்தாலும் எங்கும் ஒரே அமைதி ஏது மொரு ஆர்ப்பாட்டம் இல்லாமல் முன் நோக்கி பாலி ஆறு நகர்கிறது. ஆங்காங்கே நாணல் அடங்காமல் காற்றோடு இரகசியம் பேசி ஏதேதோ சலசலக்கும். எண்ணற்ற வகைப் பறவை எழுப்பும் சங்கீதங்கள். துள்ள…
-
- 0 replies
- 3.5k views
-
-
கிராமத்து வீடு சாய்வு நாற்காலியில் சரிந்து உட்க்கார் ந்து கொண்டு இருந்தாள் ராசம்மா டீச்சர் , மாலை மங்குவதற்கு சூரியன் தன கதிர்களை மெல்ல இறக்கி கொண்டிருந்தான் . துணைக்கு இருந்த சிறுமியிடம் கோழிகள் கூடு அடைந்துவி ட டால் , கதவை மூடி விடாம்மா . இன்று மின்சாரம் தடைப்படடாலும் , உதவியாக இருக்கும் .நான் விளக்கு வைக்க போகிறேன் என்றாள். அரிக்கன் லாந்தர் விளக்கின் கண்ணடியை துடைத்து அளவாக எண்ணெய் விட்டு, தயார் படுத்தினாள். பின் மேசை விள க்கினையும் . கண்ணடியை துடைத்து மேசையின் ந டுப்பகுதியில் வைத்தாள். துணைக்கு இருக்கும் சிறுமி குமுதா ...அப்பாவின் காரோட்டி தியாகு வின் மகள் எடடாம் வகுப்பு படிக்கிறாள் வீட்டுப் பாடம் செய்ய உதவி கேட்டு படித…
-
- 11 replies
- 3.5k views
- 1 follower
-
-
என்னடா தம்பி வேலை எப்படி போகுது , பருவாயில்லை அண்ணே சும்மா போகுது.என்ன நீங்க ஒரு மாதிரி இருக்கிறீங்க ராஜா அண்ணே வழமையான முகம் இல்லை ஏதாவது பிரச்சினையா அல்லது முதலாளி பேசிகிசி போட்டானே சொல்லுங்க , ஒன்று இல்லை வேலை வீடு பிள்ளைகள் படிப்பு என நாங்கள் வாழ்க்கையை ஒரு வட்டத்தில் வாழ்த்து தொலைக்கிறது ,ஆனால் இப்ப உள்ள பொடியள் தாங்கள் நினைச்சதை செய்து கொண்டு குடும்பம் உறவு பாசம் என்றால் என்ன என்று தெரியாமல் வாழுதுகள் ,எல்லாம் காலம் மாறி போனதால அல்லது உறவுகள் இடத்தில நெருக்கம் குறைச்சு போனதால என்று தான் எனக்கு விளங்கவில்லை ...... என்னத்த அண்ணே சொல்லுறது நாங்களா வந்து ஒரு பெட்டியில் விழுந்து போனம் ஏறவும் முடியாது வெளிய குதிக்கவும் முடியாது நாலு பக்கமும் மாறி மாறி நடக்கவேண்ட…
-
- 10 replies
- 3.5k views
-