நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3014 topics in this forum
-
பேலியோ! இந்த உணவுமுறையில் ஏதோ உள்ளது. பாடசாலைக்காலத்தில் ஒவ்வொருநாளும் கிரிக்கெட் விளையாடுவேன். பல்கலைக்கழகம் முடியும் வரை சைக்கிளில்தான் பயணம். அந்தக்காலத்தில்கூட ஒருதடவை 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்குபற்றுவோமே என பயிற்சிக்குப்போய் அந்தத்தூரத்தை ஓடிமுடிக்கவே கஸ்டப்பட்டு கடைசியில் அந்த ஆசையைக் கைவிட்டிருந்தேன். இப்போது 37 வயதில் உடல் நிறை குறைக்கவென பேலியோ உணவு முறைக்கு மாறினேன். ஒரு மாதம்முன் உணவு தொடங்கிய புதிதில் 100 மீட்டர் ஓடவே நாக்குத் தள்ளியது. அதிக தூரங்கள் நடந்துதான் பயிற்சி செய்தேன். இப்போது சரியாக ஒரு மாதமாகிவிட்டது. இன்று 5 கிலோமீட்டரை எந்தக் களைப்பும் இல்லாமல் ஓடிவிட்டு வந்தேன். வழமையாக அதிக தூரம் ஓடினால் கால் வலி தொடங்கமுன் மூச்சு முட்டத…
-
- 49 replies
- 5.6k views
- 2 followers
-
-
சருமத்திற்கு ஏற்ற குளியல் சோப் எது? சோப் என்பது அழகை அதிகரிக்க உதவும் சாதனமாக இன்றைக்கு விளம்பரப்படுத்தப்படுகிறது. சந்தையில் தினந்தோறும் புதிது புதிதாய் சோப்புகள் குவிகின்றன. இதில் எந்த சோப் நல்ல சோப் என தேர்வு செய்வதில் குழம்பித்தான் போகின்றனர் அனைவரும். சிலர் ‘பேபி சோப் உபயோகித்தால் சருமம் மிருதுவாகும்’ என்கிறார்கள் சிலர். இன்னும் சிலரோ வாசனையான சோப்பே சிறந்தது என்கிறார்கள். உண்மையில் எதுதான் நல்ல சோப் என்று ஆலோசனை கூறுகின்றனர் அழகியல் நிபுணர்கள். பண்டைய காலங்களில் சோப் என்பது பயன்படுத்தப்படவில்லை. இயற்கையான பொருட்களை பயன்படுத்தியே தேய்த்து குளித்து வந்தனர். பின்னர் சிகைக்காய் அறிமுகமானது. மெல்ல சோப் என்ற பொருள் அழுக்கும் நீக்கும் சாதனமாக அறிமுகப்படுத்தப்பட்டது…
-
- 48 replies
- 45.4k views
-
-
மனச்சோர்விற்கு என்ன காரணம்??? மனச்சோர்வு என்பது ஒவ்வொருவது வாழ்க்கையிலும் ஏதோ ஒரு சமயத்தில் உணரப்படுவது உண்டு. நெருங்கிய நண்பர் அல்லது உறவினர்களின் எதிர்பாராத பிரிவு, இழப்பு போன்ற சந்தர்ப்பங்களில் உடல் மற்றும் உள்ளத்தில் ஏற்படும் மாற்றங்களினால் வராலாம் மற்றும் தோல்வி மன்ப்பான்மை போன்ற உணர்வுகளோடும் மனம் சோர்ந்து மனச்சோர்வு ஏற்படலாம். நிரந்தரமற்ற பல நிகழ்வுகளின் பாதிப்பு பெரிதாக மனச்சோர்வை உண்டாக்குவதில்லை. சில நாட்கள் சிறிய தாக்கம் இருந்து மறைந்து விடும். சில வருத்தங்கள், கஷ்டங்கள் அன்றாடம் மாறி மாறி நம் வாழ்க்கையில் வரும். அவற்றை எல்லாம் நாம் மனச்சோர்வு எனக் கொள்ளக்கூடாது. திடீரென ஏற்படும் இழப்புக்களால் தூக்கமின்மை, பசியின்மை வழக்கமான உற்சா…
-
- 47 replies
- 8.4k views
-
-
அன்புக்கும் எல்லோரையும் ஆசீர்வதிக்கும் எமது நிலாமதியக்காவுக்கு சிறு சத்திரசிகிச்சை. அவர் நலமடைய பிரார்த்திப்போம் உறவுகளே..... நிலாமதிப்பாட்டி நலமாகி நீடூழி வாழ எனது குடும்பம் சார்பில் எல்லோருக்கும் பொதுவான ஆண்டவரை வேண்டுகின்றேன்...
-
- 45 replies
- 2.6k views
-
-
பிறந்ததிலிருந்தே உடம்பில் கவனம் எடுத்த பழக்கமில்லை. அதிலும் கடந்த சில வருடங்களாக சாப்பாட்டில் கவனமில்லை. உடலும் வயிறும் வீஙகத்தொடங்கின. மக்கள் சொல்வார்கள் அப்பா உடம்பைக்கவனியுங்கள் என. அதிலும் எவராவது என் வயதுக்காரர் மோசம் போய்விட்டால் தாங்கவே முடியாது ஆனாலும் 7 நாளும் வேலை அத்துடன் பொது வேலைகள்.................. வேலை அலுப்பு மற்றும் அதிக நேரவேலை இதனால் தூக்கம் குறைவு அதனால் எப்பொழுதும் ஒருவித சோர்வு கண்களுக்குள்.... எங்கு இருந்தாலும் தூக்கம் வரும் கார் ஓடிக்கொண்டிருக்கும் போதும்.... அத்துடன் குறட்டை........ அப்பா உடற்பயிற்சி அல்லது நீச்சலுக்காவது செல்லுங்கள் அல்லது குளிசை வாங்கிப்போடுங்கள்.... இல்லை மாட்டேன் எனக்கு எதுவித வருத்…
-
- 44 replies
- 9.4k views
-
-
ஆணுக்கு அழகு மீசை. சங்க காலத்தில் ஆண்கள் முறுக்கு மீசையுடன் வலம் வந்தனர். நாகரீகம் வளர வளர மனிதனின் நடை, உடை பாவனை மாறியது. முறுக்கு மீசையும் தொங்கு மீசையானது. வெளிநாடுகளில் வசிக்கும் ஆண்களில் பெரும்பாலான பேர் மீசை இல்லாத முகத்தையே விரும்புகின்றனர். தமிழர்களில் பெரும்பாலான பேர் மீசை வைத்துக்கொள்வதை அவசியமாக கருதுகிறார்கள். இன்றைய இளைஞர்கள் கூட அரும்பு மீசையை தடவிப்பார்த்து `நாம பெரிய மனுசனாயிட்டோம்' என்று சந்தோஷப்பட்டுக் கொள்வதுண்டு. இப்படி பலருக்கு பல விதமான ரசனைகள் உண்டு.யாழ் கள உறுப்பினர்கள் இது பற்றி என்ன நினைக்கின்றீர்கள்? (தயவு செய்து நாட்டுக்கு இந்த கருத்து கணிப்பு தேவையா என கேட்காதீர்கள்)
-
- 43 replies
- 14.4k views
-
-
பெண்கள் தமது மார்பகங்களின் அளவுக்கும் அவற்றின் மேல் கீழ் மற்றும் பக்கப்புறமான அசைவுக்கும் தகுந்த அளவு இடமளிக்காது மார்புக் கச்சுக்களை அணிவதால் மார்பகங்களில் உள்ள இணையங்கள் (ligaments) இழுபட்டு சிதைவடைகின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக உடற்பயிற்சிகளின் போது அல்லது விளையாட்டுக்களில் பங்கெடுக்கும் போது அதற்குத் தகுந்த சரியான தயாரிப்புள்ள மார்புக் கச்சுக்களை பெண்கள் அணியத் தவறின் இந்த விளைவு ஏற்படுவது தெளிவாக அவதானிக்கப்பட்டுள்ளது. உடற்பயிற்சியின் போது மார்பகம் கிட்டத்தட்ட 21 சென்ரி மீற்றர்கள் மேல் - கீழ், உள் - வெளி மற்றும் பக்கப்புறம் என்று அசைய இடமளிக்கப்பட வேண்டும். ஆனால் பல வகை மார்புக் கச்சுகளும் நிலைக்குத்தான மார்பக அசைவுக்கு இடமளிப்பதில்லை. இதனால்…
-
- 43 replies
- 8k views
-
-
நிறைய ஆய்வுகளில் தினமும் வாக்கிங் மேற்கொள்வது மிகவும் நல்லது என்று கூறுவதை படித்திருப்பீர்கள். அதில் சிலருக்கு உண்மையான காரணம் தெரிந்தாலும் பலருக்குத் தெரிந்திருக்காது. பொதுவாக வாக்கிங் மேற்கொள்வதாலும், இடுப்பளவு மற்றும் தொப்பை பெருமளவு குறைவதோடு, உடல் ஆரோக்கியம் மேம்பட்டு, வாழ்நாளின் எண்ணிக்கையும் கூடும். தினமும் ஒருவர் 30 நிமிடங்கள் வாக்கிங் செல்வதால் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்துத் தெரிந்து கொண்டு, இனிமேல் வாக்கிங் செல்லுங்கள். * தினமும் வாக்கிங் செல்வதன் மூலம், இதய நோய்கள் மற்றும் பக்கவாதத்தால் அபாயம் குறையும் ஆய்வுகளும் வயதான காலத்தில் வாக்கிங் செல்வதால் இறப்பு சதவீதம் குறைந்துள்ளதாகக் கூறுகின்றன. * நடைப்பயிற்சி இரத்த …
-
- 42 replies
- 4.8k views
- 2 followers
-
-
வெட்கத்தை விட்டு பேச வேண்டிய ஒரு விடயம், ஆனாலும் பலர் முகம் சுழிப்பார்கள் என்று நினைகிறேன். நான் UKல் படிக்கும் போது, ஒரு நாள் ஒரே கடி. ஊரில் வைத்தியரிடம் போனால் மருந்து தருவார். அப்படித்தான் இங்கயும் என்று நினைத்துகொண்டு வெளிகிட்டு போனன். டாக்டர் கேட்டார், கையாலயோ கழுவினனிர் என்று. நானும் வெக்கபடாமல் சொன்னன் வடிவாக துடைச்சு போட்டு குளிக்கேக்கை சோப்பு போட்டு கழுவினனன் என்று. அவர் சொன்னார் தொடுறதை நிப்பாட்டும், கடி தானால் நிக்கும் என்று. அன்று பேப்பர் பாவிக்க தொடங்கின எனக்கு இன்னும் கடி வரவுமில்லை, மருந்து பாவிக்கிறதும் இல்லை. உங்கள் அனுபவங்களை பகிர்ந்தால் மற்றவர்களின் ஆரோக்கியத்துக்கு வளமாக இருக்கும்.
-
- 42 replies
- 5.4k views
-
-
வணக்கம் அனைவருக்கும்... எனக்கு கொஞ்ச நாட்களாக சரியாக நித்திரை வரவில்லை... நித்திரை குளிசை பாவிக்கலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன்... மருத்துவரிடம் இப்படியே சொன்னால் நித்திரை குளிசை தருவரா...இல்லை எப்படி சொன்னால் மருத்துவர் தருவார்.... சீரியஸாக கேட்கும்போது சீரியஸாக எல்லோரும் பதில் சொல்லுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்... இல்லை களவாக லண்டனில் வாங்கலாம்... தெரிந்தவர்கள் சொல்லுங்கள்...
-
- 41 replies
- 3.1k views
-
-
வருடம் 6000 குறோணர் கட்டி ஆலோசகரின் உதவியோடு பயிற்சிகள்.. புலம் பெயர் நாடுகளில் தமிழ் பெண்களிடையே ஏற்படும் புதிய மாற்றங்கள்.. தற்போது நோர்வே ஒஸ்லோ நகரில் வாழும் 30 – 45 வயதுடைய தமிழ் பெண்கள் கடுமையான தேகப்பயிற்சியில் தீவிர நாட்டம் கொண்டுள்ளார்கள். தலைநகரின் நடுவில் அமைந்துள்ள உடற்பயிற்சி நிலையங்களில் நோர்வேஜிய பெண்களுக்கு இணையாக இப்போது தமிழ் பெண்களையும் காண முடிகிறது. கடந்த 2010 ம் ஆண்டு ஜனவரி மாதமளவில் ஆரம்பித்து, இப்போது நன்கு சூடு பிடித்து, பெரும்பாலான பெண்களை உடற்பயிற்சி நிலையங்கள் நோக்கி நகர்த்தியிருக்கிறது. இந்த நிலையில் விபரத்தை அறிய பல தேகப்பயிற்சி நிலையங்களுக்கு போனோம்… அங்குள்ள பல பெண்களிடம் பெற்ற தகவல்கள் இவை.. கேள்வி : நீங்கள் உடற்பயிற்சி நிலையத்த…
-
- 41 replies
- 3.4k views
-
-
வணக்கம் எல்லோருக்கும் இனிய புதுவருட வாழ்த்துக்கள். எதிர்பாராத சிகிச்சை. 1997 கார்த்திகை 27இல் 41 வயதாக இருக்கும் போது மெலிதாக நெஞ்சுவலி என்று போய் அன்ஜியோபிளாஸ்ரி செய்து இரண்டு ஸ்ரென்த் வைத்தார்கள். அதிலிருந்து சாப்பாடு உடற்பயிற்சி எல்லாவற்றிலுமே மிகவும் கவனமாக இருந்தேன்.நான் இருந்தேன் என்பதைவிட துணைவியார் மிகவும் கவனமாக பார்த்துக் கொண்டார். இந்த நெஞ்சுவலிக்கு காரணம் புகைத்தல் தான் என்று டாக்ரர் சொன்னதும் பதின்ம வயதிலேயே பழகிக் கொண்ட புகைத்தலை அன்றிலிருந்தே இன்றுவரை தொட்டதில்லை.என்ன மனைவி மிகவும் அன்பாகவும் பக்குவமாகவும் கேட்டும் நிறுத்த முடியாததை டாக்ரர் சொல்லி நிறுத்தியதை எண்ண இப்போதும் மிகவும் கஸ்டமாகவே உள்ளது. கடந்த மாசி கடைசியில் இருந்து சன்பிரா…
-
- 40 replies
- 4.2k views
- 3 followers
-
-
எனது மகனின் நண்பரின் தகப்பனார் (வயசு 59) கோமா நிலையில் உள்ளார். அவருக்கு இதயக்கோளாறு வந்து 10 நிமிடம் இதயம் இயங்கவில்லை. இதனால் மூளையில் சில செதுள்கள் பழுதாகி (வெடித்து) விட்டன என்கின்றனர் வைத்தியர்கள். நான் நேற்றிரவு போய்ப்பார்த்தேன். அவருக்கு மருந்துகள் மட்டுமே ஏறுகின்றன. செயற்கை சுவாசம் கொடுக்கப்படவில்லை. எல்லாமே இயற்கையாக இருக்கிறது. ஆனால் மூளை மட்டும் வேலை செய்ய மறுக்கிறது என்கிறார்கள். ஆனால் நான் பக்கத்தில் நின்றபோது பல முறை அவரது உடல் சில அதிர்வுகளுக்கு தானாக அசைகிறது. ஆனால் தொடுகையை உணர்ந்து அசைந்தாலே அது சரியான அறிகுறி என்கின்றனர் வைத்தியர்கள். நாளை திங்கட்கிழமை கடைசி பரிசோதனையின் பின கையை விரிப்பார்கள் போலுள்ளது. இது பற்றி தங்களது ஆலோச…
-
- 40 replies
- 2.5k views
-
-
முகம் பளபளக்கும் ஆண்- பெண் இருவருக்கும் சில துளி நல்லெண்ணையோடு அதே அளவு நீர் துளிகளைச் சேர்த்துக் குழைத்தால் வெண்மையாக பசை போல நுரைக்கும். முகத்தில் சுருக்கம் உள்ளவர்கள் இதனைத்தடவி நன்கு உரசித்தேய்த்து வந்தால் சுருக்கம் எல்லாம் நீங்கி பள்பளப்பாய் திகழும்.
-
- 40 replies
- 5.9k views
-
-
முத்தம் சில்லென்று சில குறிப்புகள் * ஒரு முறை முத்தமிடுவதால் நம் முகத்தின் 29 தசைகள் இயங்க வைக்கப்படுகிறது *எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக முத்தமிடுகிறோமோ அதற்கு சமமாக முதுமையால் நமது முகத்தில் சுருக்கம் விழுவது குறையும் . *காதலர்கள் இதழோடு இதழினைத்து முத்தமிடுகையில் பரிமாறிகொள்ளும் எச்சிலில் பல முக்கியமான கொழுப்பு , சில ஊட்டச்சத்துக்கள் , புரதம் என பல வித விடயங்களும் இருப்பதால் , அது முத்தமிடுபவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது . *66% பேர் முத்தமிடுகையில் முகத்தை மூடிக்கொள்கின்றனர் , மீதி பேர் மட்டுமே கண்களை திறந்த படி தனது பார்ட்னரை பார்த்த படி முத்தமிடுகின்றனர் . *அமெரிக்க பெண்கள் தனது திருமணத்திற…
-
- 40 replies
- 7.4k views
-
-
-
- 39 replies
- 5.6k views
-
-
ஆசனங்கள், தியானம், உடற்பயிற்சி என்று எதுவாக இருந்தாலும் வயிற்றில் கழிவுகள் இல்லாமல் சுத்தமாக இருப்பது அவசியம். அதற்கு யோக முத்திரா உதவுகிறது. யோக முத்திராவை தொடர்ந்து செய்து வருபவர்களுக்கு முதுகுதண்டில் உள்ள இறுக்கம் நீங்குகிறது. இளமை ஏற்படுகின்றது. முதுகு தண்டுவடம் வழியாக செல்லும் உடலின் முக்கிய நரம்புகள் எல்லாம் பலம் பெறுகின்றன. நல்ல ஆரோக்கியத்தை எட்டுகின்றன. நாள் முழுவதும் சுறுசுறுப்பு தொடர்கிறது. முகத்தில் பொலிவும், தேஜசும் ஏற்படுகிறது. முக்கியமாக இரண்டு குதிக்கால்களும், பெருங்குடலும் இந்த ஆசனத்தின் போது நன்றாக அழுந்துவதால் நீடித்த மலச்சிக்கலும் நீங்குகிறது. குடலை கழுவினால் மட்டுமே உடலை வளர்க்க முடியும் என்பது தமிழ்வாக்கு. அதற்கேற்ப மலச்சிக்கலை நீங்கி மனச…
-
- 39 replies
- 14.2k views
-
-
உடல் எனும் இயந்திரம்: இதயம் ஓர் இரட்டை மோட்டார்! லப்.. டப்.. லப்.. டப்.. சத்தம் உங்கள் இடது நெஞ்சில் இருந்து வருகிறதா? இதுதான் இதயத் துடிப்பின் அற்புத ஒலி. உங்கள் உள்ளங்கைக்குள் அடங்கிவிடும் அளவுக்குத்தான் இதயம் இருக்கிறது. ஆனால், அதற்குள்தான் எத்தனை அதிசயங்கள்! இதயம் ஒரு தசை வீடு. அதற்குள் எலும்புகளே இல்லை. இதயத்தின் மேலே இரண்டு அறைகள்; கீழே இரண்டு அறைகள். மேல் அறைகளுக்கு வலது ஏட்ரியம், இடது ஏட்ரியம், கீழ் அறைகளுக்கு வலது வென்ட்ரிக்கிள், இடது வென்ட்ரிக்கிள் என்று பெயர். மேல் அறைகளைவிட கீழ் அறைகளின் சுவர் கொஞ்சம் தடித்து இருக்கிறது. நமக்கு மட்டுமில்லை, பற…
-
- 39 replies
- 11.1k views
-
-
உடலுக்கு உகந்த பாகற்காய்! திங்கள், 30 ஜூன் 2008( 12:37 IST ) பாகற்காய் பெரும்பாலும் உடலுக்கு நல்லது என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதன் கசப்புச் சுவைக்காக பலர் அதனை விரும்புவதில்லை. அவ்வாறு இல்லாமல், அறுசுவைகளில் நமது உடலுக்கு நல்லதைத் தரும் இந்த கசப்புச் சுவையிலான பாகற்காயை வாரத்தில் ஒரு முறையாவது உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. பொதுவாக பாகற்காய் உடலுக்கு உஷ்ணத்தைக் கொடுக்கும். பாகற்காயில் இரண்டு வகைகள் உண்டு. பொடியாக இருக்கும் பாகற்காயை மிதி பாகற்காய் என்றும், நன்கு பெரிதாக நீளமாக இருப்பதை கொம்பு பாகற்காய் என்றும் அழைக்கிறார்கள். பாகற்காயை நாம் எப்படி வேண்டுமானாலும் சமைத்து சாப்பிடலாம். புளியுடன் சேர்த்து பாகற்காயை சமைப்பது சிறந்…
-
- 39 replies
- 6.6k views
-
-
. சுய இன்பம் ஆபத்தா? நிறைய பேருக்கு இதில் பெரும் குழப்பமே இருக்கும். ஆனாலும் இது ஒன்றும் தலை போகும் பிரச்சினை அல்ல என்பதே டாக்டர்களின் கருத்து. காலத்தே பயிர் செய் என்பார்கள்.. இது விவசாயத்திற்கு மட்டுமல்ல, வாழ்க்கைக்கும் கூட நிறையவே பொருந்தும். இளம் பிராயத்தில் குறிப்பாக டீன் ஏஜ் பருவத்தில் இந்த சுய இன்பப் பழக்கம் அத்தனை பேரையும் ஆட்டிப்படைத்திருக்கும். இதை யாரும் இல்லை என்று சொல்ல முடியாது. இதுகுறித்து வெட்கப்படவும் தேவையில்லை. அந்த வயதில் டீன் ஏஜினர் சந்திக்கும் பல முக்கியப் பிரச்சினைகளில் இதுவும் ஒன்று. சிலருக்கு 12-15 வயதில் தொடங்கிய சுய இன்பத்தை விட முடியாமல் நீண்ட காலத்திற்கு நீடிக்கும் வழக்கமும் உண்டு. இதனால் அவர்களுக்கு எதிர்கால செக…
-
- 38 replies
- 16.6k views
-
-
இது ஒரு சாதரண சோதனைதான் உங்களைப்பற்றி அறிய. உங்கள் நெஞ்சில் ஒரு கையையும் வயிற்றில் ஒரு கையையும் வைத்து சதரணமாக சுவாசியுங்கள். அப்பொழுது பின் வருவனவற்றில் எவை நடந்தது என்று அறியத் தரவும், அதன் பின் உங்களைப்பற்றி சொல்கிறேன்: 01) நெஞ்சில் உள்ள கை வயிற்றில் உள்ளதைவிட கூட அசைத்தது 02) வயிற்றில் உள்ள கை அதிகமாக அசைத்தது 03) இரண்டுமே சரி சமனாக அசைத்தது 04) இரண்டும் அசையவில்லை (மேலே போய்விட்டீர்கள் நம் முன்னோரை கேட்டதாக கூறவும்) உங்களால் உணர முடியாவிட்டால், உங்கள் அன்புக்குரிய யாரையாவது உதவிக்கு அழைக்கவும்
-
- 38 replies
- 6.5k views
-
-
நாம் உண்ணும் உணவுக்கும் நமக்கு ஏற்படும் உணர்ச்சிகளுக்கும் அதிக தொடர்பு உள்ளது. அதனால்தான் சித்தர்களும், முனிவர்களும் சாத்வீக உணர்வுகளை தரும் உணவுகளை உட்கொண்டு வாழ்ந்தனர். ஆணோ, பெண்ணோ சில நேரங்களில் சில உணர்வுகள் நமக்கு ஏற்பட வேண்டும். அப்பொழுதுதான் மனிதர்கள் என்ற இயல்பான நிலையில் வாழமுடியும். ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பின்னர் பெண்களுக்கு லிபிடோ எனப்படும் பாலுணர்வு சக்தி குறையத் தொடங்கும். இதனால் தாம்பத்ய வாழ்க்கையில் தடுமாற்றங்கள் ஏற்படும். எனவே லிபிடோ சக்தியை உற்சாகம் குறையாமல் வைத்துக்கொள்ள சில உணவுகள் உதவி புரியும் என்கின்றனர் நிபுணர்கள். ஆவகேடோ வெண்ணெய் பழம் என்று அழைக்கப்படும் ஆவகேடோ பழத்தில் உயர்தர பி6 வைட்டமின்கள் உள்ளன. இது டெஸ்டோஸ்ட்டிரான் உற்பத்திய…
-
- 38 replies
- 24k views
-
-
நல்லதோர் வீணை செய்வோம்! கடந்த சில மாதங்களாக யாழின் பதிவுகளில் என் கவனத்தை ஈர்த்தவை உடல், மன ஆரோக்கியம் பற்றிய பல் வேறு மூலங்களில் இருந்தும் பகிரப் படும் பதிவுகளாகும். இவை அனைத்தும் நல்ல நோக்கத்தோடு பகிரப் பட்ட பதிவுகள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் மூலங்களின் நம்பகத் தன்மை அல்லது முழுதான மூட நம்பிக்கைகளின் அடிப்படை போன்ற காரணங்களால் இந்த ஆரோக்கியப் பதிவுகள் சில தவறான தகவல்களையும் வாசிப்போரிடையே புகுத்தி விடுவதைக் கண்டேன். இப்பதிவுகளுக்கு தனித் தனியாகப் பதில் இடுவதை விட நாமே வாசகர்கள் அறிய ஆவல் கொள்ளும் ஆரோக்கிய அறிவியல் தகவல்களைத் தொகுத்து வழங்கினால் என்ன என்ற அவா எனக்கு எழுவதால் இந்தத் தொடரை ஆரம்பிக்கிறேன். இந்தத் தொடரில் பகிரப் படும் தகவல்கள் டாக்டரின் ஆலோசனைகள் அல்ல (…
-
- 38 replies
- 6.2k views
-
-
நான் ஒரு உணவுப் பிரியை. நன்றாக வேறு சமைப்பேன். சமைத்துவிட்டு சாப்பிடாமல் இருப்பது எப்படி??? ஆனால் எனக்கு எதை உண்டாலும் ஒருமணி நேரத்தில் சமிபாடடைந்துவிடும். அதனால் ஒரு நாளில் நான்கு தடவையாவது உண்ண வேண்டும். ஆனால் நான் மிக ஆரோக்கியமானவள். பசிப்பது நல்லது தானே என என் குடும்ப வைத்தியரும் கைவிரித்துவிட்டார். பதினெட்டு வயதில்லையாயினும், கொடியிடை இல்லாவிட்டாலும், மெலிந்து இருக்க ஆசை. அதற்காக என்னை சரியான குண்டு என்று கற்பனை செய்ய வேண்டாம். பசிக்காமல் இருந்தால் நான் ஏன் அதிகமாக உண்ணப் போகிறேன். அதனால் உங்கள் ஆலோசனை தேவை. கூற முடியுமா உறவுகளே????
-
- 37 replies
- 10.3k views
-
-
உங்க லிப்ஸ்டிக் தரமானதா? உதடு பத்திரம்! உதட்டிற்கு லிப்ஸ்டிக் போடுவது இன்றைக்கு பேஷனாகிவிட்டது. தரமான லிப்ஸ்டிக் உபயோகித்தால் மட்டுமே உதடுகளை பாதுகாக்க முடியும். இல்லையெனில் உதடுகள் கருத்தும் வறண்டும் போய்விடும். முதன்முறையாக லிப்ஸ்டிக் உபயோகிக்கப்போகிறீர்களா? இதோ லிப்ஸ்டிக் போடும் முறை பற்றி ஆலோசனை கூறுகின்றனர் அழகியல் நிபுணர்கள். ஒருவர் உபயோகித்த லிப்ஸ்டிக்குகளை மற்றவர்கள் உபயோகிக்க கூடாது இதனால் தொற்றுக்கிருமிகள் தாக்கும். எனவே தனியாக லிப்ஸ்டிக் வாங்கி உபயோகிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர் அழகியல் நிபுணர்கள். நிறத்திற்கு ஏற்ற லிப்ஸ்டிக். தற்போது இளஞ்சிவப்பு முதல் பிரவுன், வைலெட் மற்றும் கறுப்பு வரை பல்வேறு வர்ணங்களில் கடைகளில் லிப்ஸ்டிக்குகள் கிடைக்…
-
- 37 replies
- 3k views
-