சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
எமது முன்னோர் காட்டிய சாஸ்திர சம்பிரதாயங்கள் புனிதமானவை என்று புலம்பித்திரிபவர்கள் இந்த வீடியோவை பாரக்கவும். பெண்களின் காதல் உணர்வை மதிக்காது அவர்களை வளர்தது தமது ஜாதி கோத்திர பெருமைக்காக சடப் பொருள் போல கல்யாணம் என்ற பெயரில் தானம் செய்யவேண்டும் என்றும், பெண் குழந்தைகளுக்கு அவர்களின் சிறு வயதில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றும் மனித கலாச்சாரத்துக்கு எதிரான கிறிமினல் காட்டுமிராண்டி இந்து கலாச்சாரத்தை வலியுறுத்தும் இந்து மத குருவின் பிரசங்கம். கேட்டால் நாம் சைவம் இதற்கும் எமக்கும் தொடர்பு இல்லை என்று புலுடா விடுவார்கள். ஆனால் சைவம் என்பது இன்று நடைமுறையில் எல்லா இந்து பத்தாம் பசலித்தனங்களை ஏற்றுக்கொண்டு அதை வலியுறுத்தும் நிலையில் தான் உள்ளது …
-
- 105 replies
- 11.7k views
-
-
ஊரில.. எங்கள் மக்கள் கடின உழைப்பால்.. வீடு கட்டி.. குடிபுகுந்து.....மதில் கட்டி.. இல்ல சுற்று வேலி போட்டு.. அழகாக முற்றம் பெருக்கி.. பலவகை பூமரங்கள் நாட்டி.. அதற்கு காலையும் மாலையும் தண்ணி பாய்ச்சி.. செழிப்புற.. வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இடையில்.. சிங்கள பேரினவாத.. மேலாதிக்க வெறி எங்கள் தேசத்தையும் தானே பரிபாலிக்கனும் என்று விரும்ப.. நடந்த விரும்பத்தகாத திணிக்கப்பட்ட போர் விளைவுகளால்.. வீடிழந்து.. ஊரிழந்து.. நாடிழந்து.. இன்று நாடோடிகளாக உலகம் பூரா பரவி நாம் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம். இன்று எம் வாழ்க்கை அதன் பாரம்பரியம் இழந்து.. போக்கிடம் திணித்தவை மென்று..விழுங்கி.. ஏதோ நாங்களும்.. வாழிறம் என்று போய்க் கொண்டிருக்கிறது. இப்ப எல்லாம் நாம்.. அதிகம்.. வீடு க…
-
- 3 replies
- 11.4k views
-
-
பெண்களுக்கு பிடிக்காத ஆண்களின் குணங்கள் என்ன! [sunday, 2014-04-06 20:27:38] இந்த உலகில் எப்படி ஆண்களுக்கு ஒருசில குணங்கள் உள்ள பெண்களை பிடிக்காதோ அதேப் போன்று பெண்களுக்கும் சில குணங்கள் உள்ள ஆண்களை பிடிக்காது. அத்தகைய ஆண்களைப் பார்த்தால், பொறுத்துக் கொள்ள முடியாத அளவில் கோபம் மற்றும் வெறுப்பு வரும். பெண்களுக்கு ஆண்கள் மீது அளவுக்கு அதிகமான பாசம் வருவதற்கு காரணம் ஆண்களது ஒருசில குணங்கள் தான். அதே சமயம் வெறுப்பு வருவதும் குணங்களால் தான். அத்தகைய குணங்கள் என்னவென்று பார்க்கலாம்... • பெண்கள் கெட்ட வார்த்தையை அதிகம் பேசும் ஆண்களிடம் பழக விரும்பமாட்டார்கள். ஏனெனில் இந்த குணம் இருந்தால், எந்த ஒரு சிறு விஷயத்திற்கு திட்டும் போதும், கெட்ட வார்த்தையை ப…
-
- 19 replies
- 11.3k views
-
-
முத்தம் கொடுப்பதில் பல வகைகள் உண்டு பொதுவாக முத்தம் கொடுப்பது என்பது ஏதோ பேசக் கூடாத வார்த்தை என்று இருந்த காலம் போய் விட்டது. தற்போது தாம்பத்யத்தைப் பற்றிக் கூட வெளிப்படையாகப் பேசும் அளவிற்கு வாய்ப்புகள் அதிகரித்து விட்டன. முத்தம் என்பது பொதுவாக அன்பின் அடையாளமாகக் கருதப்படுகிறது. முத்தம் என்பதை பொதுவாக அதிகமாகப் பெறுவது குழந்தைகள்தான். குழந்தைகளுக்கு பெற்றவர்கள் முதல், உறவினர்கள், நண்பர்கள் என பலரும் முத்தத்தை வழங்குவார்கள். இவை அன்பின் அடையாளம். அடுத்தபடியான காதலர்கள் பகிர்ந்து கொள்ளும் முத்தம் மற்றும் தம்பதிகள் பகிர்ந்து கொள்ளும் முத்தம்…
-
- 20 replies
- 11.2k views
-
-
ஏறத்தாள 2000 க்குப் பின்பு புலப்பெயர்வில் ஒரு மாற்றம் வந்தது . முன்பு புலத்தில் இளைஞர்கள் தங்கள் வாழ்க்கைத் துணைகளை சிங்கப்பூரிலோ , தாய்லாந்திலோ போய்க் கலியாணம் செய்து புலத்திற்கு கூப்பிட்டார்கள் . பின் அது இந்தியாவாக மாறியது . ஆனால் இப்பொழுது புலத்து இளைஞிகளும் தங்கள் வாழ்க்கைத் துணைகளை புலத்தில் இருந்து நேரடியாகவே தாயகத்திற்குப் போய் கலியாணம் செய்கின்றார்கள் .அதுவும் நன்றாகப் படித்து பல்கலைக்கழகத்தில் ஓல் ஐலண்டில் முதல் 50 பேரில் தெரிவான மாப்பிள்ளை என்றால் முதலிடம் . மாப்பிள்ளையும் இங்கு வருகின்றார் . ஒரு சிறிது காலம் போனவுடன் அவர்களுள் அன்னியோன்னியம் குறைவதை அவதானித்திருக்கின்றேன் . வந்த மாப்பிள்ளைகளிடம் ஒருவிரக்தி மனப்பான்மை காணப்படுகின்றது . ஒருசிலர் தங்கள் குறைகளை எ…
-
- 143 replies
- 11.1k views
-
-
இங்கு அநேகமானவர்கள் குடும்பத்தவர்தானே. ஒரு சீரியசான விடயத்தை பதிவோம் என விளைகின்றேன். திருமணமாகி கனநாளாகி விட்டது. அதற்கு முதலே தெரிந்த மனைவிதானே. அந்த 3 நாட்கள் வந்தால் வயித்தைப்பிடித்தபடி துடிக்கும். சிலவேளை அது ஒரு கிழமையும் எடுக்கும். நமக்கு எப்படி அதன் வலி புரியும். அதைக்குடி இதைச்சாப்பிடு. வைத்தியரைப்போய்ப்பார் என்றதுடன் நமது ஆலோசனையும் நடவடிக்கையும் நின்றுவிடும். ஆனால் அதன்முடிவை மனம் விரும்பும். அது அவரது வலிக்கான முடிவுக்காக அல்லாது எமது தேவைக்கான தேடலாகவே இருக்கும். இது பலவருடங்கள் தொடரும் கதை. இதில் எனக்கும் அவருக்கும் பெரிதாக வில்லங்கங்கள் கிடையாது. இருவருக்கும் இந்த நடைமுறை பழகிப்போனது. (ஆற்றாமைகள் இருந்தாலும்). பல குடும்பங்களின் நிலை இப்படித்த…
-
- 81 replies
- 11k views
-
-
மனு எனும் தனி நபர் ஒருவரால் கிமு 200 தொடக்கம் கிமு 150 ஆண்டுகளுக்குள் எழுதப்பட்ட பிராமண சமூக நீதி நூல் என்று தற்காலத்தில் இனங்காட்டப்படும் நூல் செய்யுள் வடிவில் உள்ளது. அந்தச் செய்யுள்கள் சரிவர மொழிபெயர்க்கப்பட்டுள்ளனவா அல்லது சரிவரப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளனவா என்பது வினாக்குறியாகவே உள்ளது. திருக்குறளுக்கு விளக்கவுரை எழுதியவர்களிடையே குழப்பம் உள்ள போது.. இங்கு எப்படி இருக்கும்..! அதுமட்டுமன்றி மனு தான் வாழ்ந்த கால சமூகத்தின் அடிப்படையில் எழுதிய ஒரு சட்ட நூலே அது என்றும் சொல்லப்படுகிறது. அது இந்து மதக் கோட்பாடுகளைச் சொல்ல என்று வந்த நூல் அல்ல. செவி வழி வந்த வேதங்களை அடிப்படையாகக் கொண்டு எழுந்ததாகச் சிலர் சொல்கின்றனர். செவி வழி வரும் ஒரு செய்தி ஒரு மணித்திய…
-
- 2 replies
- 11k views
-
-
வணக்கம், நேற்று கனடா தமிழ்விசன் தொலைக்காட்சியில ஓர் இழவுப்படம் போச்சிது. நான் படத்தை முழுமையாக பார்க்க இல்லை என்றாலும் சில காட்சிகளை பார்த்து இருந்தன். எனது அக்கா படத்தை முழுமையாக பார்த்து இருந்தா. படத்தின் சாரம்சம் என்ன எண்டால்.. இரு உயிர்நண்பிகள். அதில ஒருத்தியிண்ட காதலனை இன்னொருத்தி கொத்துகின்றாள். மற்றவள் கடைசியில தன்னை ஒருமாதிரி சமாளிச்சுக்கொண்டு எங்கிருந்தாலும் வாழ்க என்று நண்பியுக்கு வாழ்த்தி தன்ர காதலனோட தனது நண்பி சந்தோசமாய் கலியாணம் கட்டி சேர்ந்துவாழ வழி அமைச்சுகொடுத்து ஆசீர்வாதமும் செய்துபோட்டு.. அவளை நீண்டகாலமாக கலியாணம் கட்ட ஆசைப்படுகிற ஒருத்தனையும் புறக்கணிச்சுப்போட்டு தனது காதலனை நினைச்சு உருகிக்கொண்டு தனது வாழ்க்கையை தொடர்கிறா. நண்பனின் அல்ல…
-
- 65 replies
- 11k views
-
-
வணக்கம் எல்லோருக்கும் நாளைய சனி எல்லாச் சனி நாட்களிலும் விசேடமானது. அதாவது சனியனுக்காக விரதம் பிடிக்கும் நாள். யாருக்காவது சனியன் பிடித்திருந்தால் அல்லது பிடிக்கப்போவதாய் இருந்தால் அதற்காக விரதம் பிடித்து மன்றாடி அவரை எங்களை விட்டு போகச் சொல்லியோ அல்லது தயவு செய்து எங்களிடம் வரவேண்டாம் என்று சொல்லி எள்ளு எண்ணையில் விளக்கு எரிக்கும் நாள். இதனை தொடர்ந்து நான்கு சனி கிழமைகளில் அனுஷ்டிப்பார்கள். இந்த எள்ளு எண்ணை எரிப்பதை நீங்கள் நவராத்திரி புiஐ தொடங்கும் முன் எரிக்கவேண்டும். நவராத்திரி புiஐ தொடங்கினால் எள்ளு எண்ணை எரிப்பது நன்றன்று. அது சரி சனி பெருமானுக்கு ஏன் எள்ளு எண்ணையில் விளக்கு எரிக்கவேண்டும்? உங்களில் யாருக்கவாது விபரம் தெரியுமா?
-
- 45 replies
- 11k views
-
-
-
கலியாணம் முடிஞ்சி 11ஆம் நாள் எய்ட்ஸ்! ஜெரா படம் | நேர்க்காணல் கண்டவர் அதைப் பெருந்தேடல் என்றுதான் சொல்லவேண்டும். ஒரு விழிப்புணர்வுக்காக, எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளான ஒருவரின் கதையை வெளியிடுவது என்று நீண்டகாலமாகவே திட்டமிட்டு, குறித்த நோயாளர்களைத் தேடிவந்தோம். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட எச்.ஐ.வி. நோயாளர்கள் யாழ்ப்பாணத்திலிருந்தும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஊடகங்களில் பேச மறுக்கின்றனர். அவர்கள் மத்தியிலிருந்து, “நாங்கள் ஊடகங்களில் பேசுகின்றோம்” என்று முன்வந்தது ஒரு குடும்பம். “எங்கள பாக்க வருத்தம் வந்தாக்கள் மாதிரி தெரியேல்லயோ?” அவர்களை நாங்கள் கண்டதும் கேட்ட முதல் கேள்வியில் நிலைகுலைந்துதான் போனோம்! 30 வயதுக்குட்பட்ட இளந் தம்பதியினர் அவர்கள். உடல்சோர்வோ, மனச் சோர்வோ…
-
- 8 replies
- 10.9k views
-
-
திருமணமான பெண்களுக்கு அந்நிய ஆண்கள் மீது ஈர்ப்பு ஏற்படக் காரணம் என்ன....? .திருமணத்திற்கு அப்பாற்பட்ட தகாத உறவு என்பது ஆண்-பெண் மத்தியில் இன்று சகஜமாகி வருகிறது. திருமணமான பெண்களில் சுமார் ஐம்பது சதவிகிதத்தினர் தன் கணவன் அல்லாத வேறு ஆணுடன் உறவு கொள்வதும், அதற்காகத் தம் திருமண வாழ்க்கையையே இழக்கத் தயாராக இருப்பதும் சர்வ சாதாரணமாகி விட்டது. திருமணமான பெண்களுக்குக் கணவன் அல்லாத அந்நிய ஆண்கள் மீது ஈர்ப்பு ஏற்படக் காரணங்கள் என்னென்ன....? * தம்பதியருக்கிடையேயான தாம்பத்திய உறவில் திருப்தியின்மை ஏற்படுவதே இதற்கான முழு முதல் காரணம். தாம்பத்திய உறவில் தன் கணவனால் திருப்தியடைய முடியாத பட்சத்தில் அந்தப் பெண் தனது உணர்ச்சிகளுக்கு வடிகாலாக இன்னொரு ஆணின் உறவை நாடுகிறாள். அத…
-
- 11 replies
- 10.8k views
-
-
அப்படியென்ன அவசரம் , சித்தி ? -சுப.சோமசுந்தரம் சென்ற சனிக்கிழமை காலை அப்படி மோசமாக விடிந்தது. அம்மா எழுப்பினாள். "ஒங்க மீனா சித்திக்கு (அம்மாவின் தங்கை) நெஞ்சு வலிக்குன்னு சித்தியும் சித்தப்பாவும் ஆஸ்பத்திரிக்குப் போறாங்களாம். வாரியா, போவோம் ?" எங்கள் வீட்டிற்கும் சித்தி வீட்டிற்கும் ஏறக்குறைய நடுவில்தான் அந்த மருத்துவமனை. நானும் அம்மாவும் அங்கு சென்றடைந்த போது தீவிர சிகிச்சைப் பிரிவில் சித்திக்கு முதலுதவி ஆரம்பித்திருந்தார்கள். இதய நோய் மருத்துவர் சொன்னார், "இது massive attack. கொடுத்துள்ள மருந்திலும் ஊசியிலும் stable ஆகிறதா என்று பார்ப்ப…
-
- 21 replies
- 10.4k views
- 1 follower
-
-
நேயர் விருப்பத்திற்காக....... "பெண்களிடம் ஆண்கள் விரும்புவது/ எதிர்பார்ப்பது" அண்ணாமார்/ தம்பிமார் அடி பாடு இல்லாம....அவசர படாம உங்கள் கருத்துகளை போட்டு தாக்குங்கோ....
-
- 35 replies
- 10.4k views
- 1 follower
-
-
காதல் என்பது எல்லோர் வாழ்க்கையிலும் கட்டாயம் இருந்து இருக்கும்..இன்று நீங்கள் திருமணம் குழந்தை என்று வாழ்க்கையில settle ஆகி விட்டாலும் கடந்த கால காதல் நினைவுகள் உங்கள் மனங்களில் ஒட்டிக்கொண்டு இருக்கும் சிலரிற்கு அது தான் இப்போதைய சோகம்களை மறப்பதர்க்கான ஒரு மருந்து ஆகவும் அமைந்து இருக்கும்..உங்களில் சிலரது காதல் வெற்றிகரமான திருமண வாழ்க்கையிலும் முடிந்து இருக்கும்..சிலரது காதல் தோல்வியில் முடிந்தும் இருக்கலாம்....எல்லாருக்குமே வாலிப வயதில் காதல் வந்து தான் இருக்கும்..அப்படி இல்லை எனில் ...... பெண்கள் சிலர் சொல்லலாம் நான் ஒருவரையும் காதலிக்க வில்லை என்று..ஆனால் ஒரு அழகான ஆணை. ஓரக்கண்ணால் side அடித்தாவது இருப்பீர்கள்.. நீங்கள் முதல் உங்கள் காதலை சொல்லும் போது உங்களி…
-
- 7 replies
- 10.4k views
-
-
தமிழர்களாகிய நாம் அன்று தொடக்கம் கொண்டாடிய சில பண்டிகைகள் ஏதோ பல காரணங்களினால் இன்று புறக்கணிக்கப்பட்டு வருகின்றது. கொண்டாடப்பட்ட பண்டிகைகள் எமக்குரியவை அல்ல.. என விவாதிக்கப்படுகின்றது. உண்மையில் தமிழர்கள் கொண்டாடக்கூடிய, உரிமையுள்ள பண்டிகைகள் எவை? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.
-
- 16 replies
- 10.4k views
-
-
கணவரிடம் இதை மட்டும் சொல்லாதிங்க…! August 19, 2008 கணவன்-மனைவி இடையே எந்த ரகசியமும் இருக்கக் கூடாது. இருவரும் ஒருவரை ஒருவர் அகமும் புறமும் அறிந்திருக்க வேண்டுமென்று பொதுவாகச் சொல்வார்கள். ஆனால் அப்படி திறந்த புத்தகமாக இருக்காதீர்கள், அது நன்மையை விட தீமையைத் தான் அதிகம் ஏற்படுத்தும் என்கிறார்கள் உளவியல் நிபுணணர்கள். தம்பதிகள் காக்கும் தலையாய ரகசியங்களாக அவர்கள் கூறும் விஷயங்கள். பழைய நட்பு, காதல்… திருமண வாழ்க்கை மீதும், புதிதாக வாழ்வில் இணைந்திருக்கும் கணவர் மீதும் அளவற்ற மரியாதை வைத்திருக்கும் பெண்கள், தங்களின் முந்தைய காதல், நட்பு பற்றி வெளிப்படையாகச் சொல்ல வேண்டும், இல்லற வாழ்க்கையை ரகசியங்களுடன் ஆரம்பிக்கக் கூடாது என்று நினைக்கிறார்கள். ஆனால் அது வேலை…
-
- 29 replies
- 10.3k views
-
-
பெண் ஆளுமைகளின் சமகால சவால்கள் சந்திரலேகா கிங்ஸ்லி -இலங்கை மலையகம் ஆளுமை என்பது பற்றி பேச முற்படும் அநேகர் ஆண் மையப்படுத்தப்பட்ட ஆளுமைகளையே உலகுக்கு எடுத்துக் காட்டிக் கொண்டிருப்பது சாதாரணாமாகி விட்டிருக்கின்றது. ஆளுமைகள் ஆண்களை மையப்படுத்தி தொழுதுக் கொண்டிருப்பதும் பெண் ஆளுமைகளை குறைபாடுள்ளவையாக கருதுவதும் பெண் ஆளுமைகள் பற்றிய விழிப்புணர்வுகள் பரிமாணங்கள், தெரிவுகள் சுயங்கள் நிலைப்பாடுகள் என்பன சமகாலத்தில் பெண் உயர்ச்சிக்கும் பெண் பற்றிய பதிவுகளுக்கும் மிகவும் அவசியமானவைகளாக கருதப்படுகின்றன.பெண் ஆளுமைகள் மேலோங்கியிருப்பதும் பெண்களின் உயர்வும் சமத்துவமும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு பட்டதாக காணப்படுகின்றன. ஆண்டாண்டு காலமாக பெண் ஆளுமைகள் விழிப்புறும் தோரணையிலும்…
-
- 3 replies
- 10.3k views
-
-
அனைவருக்கும் இனிய வணக்கங்கள், திரும்பவும் ஒரு சின்னக் கலந்துரையாடல். உங்கட எண்ணங்களச் சொல்லுங்கோ. இந்தக்காலத்தில ஒருவரை காதலிக்கிறது எண்டால் அது லேசுப்பட்ட வேலை இல்லை எண்டு காதலித்து பார்த்தவர்களுக்கு தெரியும். முதலில ஒருவரைக் காதலித்து அவரிடம் ஐ லவ் யூ எண்டு சொல்ல முன்னம்... வேறு பலரிடம் அனுமதிகள் பெறவேண்டி இருக்கிது. உங்களுக்கு காதல் அனுபவம் இருந்தால் நீங்கள் ஒருவரை காதலித்தபோது அதை யார் யாருக்கு எல்லாம் சொல்லி இருந்தீங்கள் (அதாவது உங்கட காதல் சமூக அங்கீகாரம் பெறப்படுவதற்கு யார் யார் காலில் விழுந்தீங்கள்.. ) எண்டு கொஞ்சம் சொல்லுங்கோ. இந்தக்காலத்தில எங்கட காதல் வெற்றி பெறுவதற்கு நாம காதலிப்பவரிடம் போய் ஐ லவ் யூ எண்டு சொல்லிறத விட (செருப்படி விழுந்தால…
-
- 57 replies
- 10.2k views
-
-
தங்கம் இன்றைக்கு விற்க்கும் நிலையில் வீட்டில் உள்ள அனைத்து சொத்தையும் விற்று தங்கத்தை வாங்கி அதனுடன் கார் இருக்கின்ற அனைத்து சாமான்களை வாங்கி பெண்ணை கட்டி கொடுத்தால் கட்டினவன் ஆண்மையற்றவனாக இருந்தால் எப்படி இருக்கும். அந்த பெண்ணின் நிலைமையை நினைத்து பாருங்கள் ஒரு பெண்ணுக்கு வரன் பார்க்க வேண்டும் என்று நினைத்தவுடன் என்ன செய்கிறார்கள். பையன் என்ன வேலை பார்க்கிறான். பெரிய கம்பெனியில் வேலை பார்க்கிறானா மாதத்திற்க்கு எவ்வளவு சம்பாதிக்கிறான். லட்சத்தை தாண்டுமா என்று பார்க்கிறார்கள். லட்சத்தை பார்க்கிறார்களே தவிர ஆணுக்கு உடைய லட்சணத்தில் இருக்கிறானா என்று பார்ப்பதில்லை. நிறைய சம்பாதிப்பவன் என்ன செய்வான் வேலையை கட்டிக்கொண்டு அதனுடன் போராடிக்கொண்டிருப்பான் அவன் வீட்டிற்க…
-
- 53 replies
- 10.2k views
-
-
முன்பு நாம் கடைபிடித்து வந்த ஒவ்வொரு சிறிய விஷயங்களுக்கு முன்பும் ஏதோ ஒரு நல்ல விஷயம் புதைந்திருக்கிறது. காலப்போக்கில் அவற்றை மறந்து நாம் அதை மூட நம்பிக்கை என கூற துவங்கிவிட்டோம். அதில் ஒன்று தான் வீட்டு வாசலில் எலுமிச்சை, மிளகாய், கரி சேர்த்து கட்டுவது. வாராவாரம் நமது வீடுகளில் வெள்ளிக்கிழமை அன்று வீட்டு வாசலில் தொங்கும் எலுமிச்சை, மிளகாய், கரி சேர்த்து கட்டுவது வழக்கமாக இருக்கும். புதியதை கட்டிய பிறகு, பழையதை யார் காலும் படாதபடி இடத்தில் வீசிவிட வீட்டில் உள்ள பெரியவர்கள் கூறுவார்கள். ஏன் இதை நமது முன்னோர்கள் செய்தனர்? இதன் பின்னணியில் மறைந்திருக்கும் அறிவியல் காரணம் என்ன? எலுமிச்சை, சிவப்பு மிளகாய், கரி சேர்த்து வீடு, அலுவலகம் வாசலில் கட்டுவது ஏன் என்று க…
-
- 31 replies
- 10.2k views
-
-
எமது திருமணமுறைப்படி மணமகள் திருமண வைபவத்தின் போது மணமகனின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெறும் வழக்கம் உண்டா ? நான் அறிந்தவரையில் இல்லை. ஆனால் கடந்த சில வருடங்களாக இந்த முறை கொஞ்சம் அதிக்மாகி வருகிறது போல, அதுவும் குறிப்பாக இந்தியாவில் சென்று திருமணம் முடிப்பவர்களுக்கே இந்த அனுபவம் ஏற்படுவது உண்டு. எனக்கு இப்படியான 2 திருமண வைபவங்க்ளை பார்த்தேன். 1.மணமகன் கூறைத்தட்டை கையில் வைத்துக் கொண்டு எழுந்து நிக்க மணமகள் காலில் கோயிலில் நாம் விழுந்து கும்பிடுவதைப் போல் வணங்கினார். அவரிடம் நான் கேட்ட போது குருக்களும், தனக்குத் தோளியாக வந்தவரும் அப்படிச் செயுமாறு கோரியதாகவும் தன்க்கு அவ்வாறு செய்ய வெட்கமாக இருந்தாகவும் என்றாழும் தான் அவ்வாறு வணங்கியதகாகத் தெரிவித்தார். அதைவிட…
-
- 54 replies
- 9.9k views
-
-
எமது மண்ணின் பண்பாட்டுச்சின்னங்களில் ஒன்று துலா . இந்தத் துலா என்பது ஒரு நீளமானதும், நேரானதுமான , ஒரு மரத் தண்டு ஆகும். இந்த மரத்துக்குக் குறுக்கே, அதனூடு இன்னொரு தண்டு செலுத்தப்பட்டு இருக்கும். இத்தண்டின் இரு முனைகளும் கட்டற்ற வகையில் சுழலக்கூடியவாறு தாங்கப்பட்டும். இத்தண்டு அச்சாகச் செயற்பட, முதலில் குறிப்பிட்ட நீளமான மரம் அந்த அச்சைப் பற்றி மேலும் கீழுமாக அசையக் கூடியதாக இருக்கும். அச்சாகச் செயற்படும் தண்டு அச்சுலக்கை எனவும் அச்சின் இரு முனைகளையும் தாங்குவதற்காகக் உருவாக்கப்படும் அமைப்பு ஆடுகால் எனவும் அழைக்கப்படும். ஆடுகால்கள் முன்பு பூவரசங்கதியால்களாலும் , பின்பு சீமந்தினாலும் உருவாக்கப்பட்டது . அச்சுலக்கை துலாவின் நடுப்பகுதியிலன்றி, நடுவிலிருந்து சற்றுத் தள்ளிய…
-
- 34 replies
- 9.8k views
-
-
எல்லோருக்கும் வணக்கம் உவகை பற்றி பேச வந்துள்ளேன். "உவகை" மணமக்கள் இணைப்பு இந்த விடயம் பற்றி யாழ் இணையத்தின் எப்பகுதியில் பதிவிடலாம் என்ற தேடலில் எனக்கு சிந்தனைக் களத்தில் உள்ள சமூகச் சாளரமே சிறந்த இடமாக தென்பட்டது ஆதலால் இவ்விடத்தில் "உவகை " பற்றி மனம் திறந்து பேசலாம் என்று நினைக்கிறேன். இன்று உலகளாவிய ரீதியில் எமது இனம் பரந்துபட்டு தொழில் நுட்பத்தால் பற்பல விடயங்களை வெற்றிகரமாக நகர்த்திக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் இப்படி ஒரு விடயம் தேவைதானா என்று பலர் சிந்தையில் தோன்றுவதைத் தவிர்க்க முடியாது. இணைய யுகம் வலைப்பதிவில் மணமக்கள் தெரிவு அவநம்பிக்கைகளுக்கூடாக திருமணம் என்ற நிலையில் பல தோல்விகளும், உவப்பில்லா வாழ்வியலுமாக ஒரு புறம் , தமக்கான…
-
- 68 replies
- 9.7k views
-
-
வணக்கம், புதிய நாகரீகங்கள், பழக்கவழக்கங்கள், தொழில்நுட்பங்கள், விஞ்ஞான வளர்ச்சிகளோட மனுச வாழ்க்கையும் தினமும் மாறிக்கொண்டு போகிது. இந்த மாற்றங்களில வெளிநாடுகளில இருக்கக்கூடிய தமிழ் ஆக்களுக்கு சவாலாக இருக்கிற ஒரு விசயம் திருமணம் + குடும்ப வாழ்க்கை. இதுபற்றி இஞ்ச கொஞ்சம் பேசலாம் எண்டு நினைக்கிறன். ஒவ்வொரு கிழமையும் வெளிநாடுகளில எங்கையாவது ஒரு ஹோலுக்க தடல்புடலா ஆடம்பரமா எங்கட ஆக்களிண்ட கலியாணங்கள் நடக்கிது. அங்க ஆட்டம் என்ன பாட்டு என்ன எல்லாம் சொல்லி வேலை இல்லை. பிறகு திருமண வரவேற்பு எண்டு கலியாணம் முடிஞ்ச கையோட அடுத்த கிழமை திரும்பவும் ஹோல் எடுத்து அதுக்க பெரிய கொண்டாட்டங்கள். உதுக்கு எல்லாம் ஆகிற செலவு எவ்வளவு தெரியுமோ? சுமார் ஐநூறு பேரை கொண்டாட்டத்துக்கு கூப்பி…
-
- 34 replies
- 9.6k views
-