Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முஸ்லிம்களுக்கு இழைத்ததை தவறென்று தமிழ்த் தரப்பு ஏற்க வேண்டும்: சுமந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் வடமாகாணத்திலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றி இன சுத்திகரிப்பு செய்தது தவறு என்பதை ஏற்றுக்கொள்ளும் பட்சத்திலேயே தமிழ்த் தரப்பு மற்றவர்களிடம் நியாயம் கோர முடியும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

130506091821_sumanthiran_thanthai_selva_

தந்தை செல்வா படத்துக்கு மரியாதை செய்கிறார் சுமந்திரன்

 

 

மட்டக்களப்பு வந்தாறுமூலையில் இலங்கை தமிழரசு கட்சியின் ஸ்தாபகரான தந்தை செல்வாவின் 36ஆவது நினைவு தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

 

“இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவை விசாரணை நடத்த வேணடும் என்று தற்போது ஏற்றுக் கொண்டிருக்கிறது. அதில் கூறப்பட்டுள்ளது மனித உரிமை விடயத்திலே இருதரப்பினர்களும் சர்வதேச மனித உரிமைச் சட்டங்களுக்கெதிராக குற்றம் புரிந்துள்ளார்கள். இது விசாரிக்கப்பட வேண்டும் தண்டிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதை நாங்கள் ஆதரிக்கின்றோம். அவ்வாறான விசாரணை இருதரப்பினரையும் உட்படுத்தி இந்த விசாரணை இடம்பெற வேண்டும்." என்று அவர் கூறினார்.

"சர்வதேச சட்டத்திலே மிக் பாரிய குற்றமான இனப்படுகொலை இடம்பெற்றுள்ளது என்பதையும், இறுதிகட்ட யுத்தத்தின் போது வன்னிப் பகுதியிலே வாழ்ந்த மூன்று இலட்சம் மக்களுக்கெதிராக இலங்கை அரசாங்கம் துன்புறுத்தல் செய்தது என்பதையும் சர்வதேச சமூகம் ஏற்றுக்கொண்டுள்ளது. சர்வதேச சட்டங்களுக்கு முரணாக எங்களுடைய பூர்வீக நிலம் தற்போது சுவிகரிக்கப்படுகின்றன என்பதையும் சர்வதேச சமூகம் ஏற்றுக்கொண்டுள்ளது." என்று அவர் குறிப்பிட்டார்.

 

"அதேநேரம் எங்களுடைய தரப்பிலிருந்தும் தவறுகள் இடம்பெற்றுள்ளதை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். எங்களுடைய மண்ணிலிருந்து இன சுத்திகரிப்பை நாங்கள் செய்திருக்கிறோம். தமிழர் தரப்பிலிருந்து இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டுள்ளது. வடக்கிலிருந்து முஸ்லிம் சகோதரர்கள் இரவோடு இரவாக வெளியேற்றப்பட்டதை எவரும் நியாயப்படுத்த முடியாது இந்த கவப்பான உண்மை. நாங்களும் இன சுத்திகரிபிற்கு குற்றவாளிகள் என்பதை ஏற்றுக்கொள்ளும் வரைக்கும் எமக்கெதிராக இடம்பெறுகின்ற அடக்குமுறைகளை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொள்ளாது." என்று அவர் தெரிவித்தார்.

 

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/05/130506_sumanthiranmuslim.shtml

 

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் மன்னிப்பு கேட்கலாமே ...நீங்கள்தான் தமிழரின் வருங்கால தலைவராம்.......

சுமந்திரனுக்கு நன்றி .

சிங்கள அரசுகளால் செய்த அத்தனை அநியாயங்களும் அடிப்பட்டு போகின்றது அவர்களுக்கு ஈடாக புலிகளும் செய்த அநியாயங்ககளால் தான் ,இதை நாங்கள் ஒப்புக்கொள்ளாதவரை சர்வதேசத்திடம் இருந்து எங்களுக்கான நியாயத்தை பெறமுடியாது .

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம்களை வெளியேற்றியது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு. சுமந்திரன் தமிழர் தரப்பை தவறை ஏற்கச் சொல்கிறார். அப்படியானால் தமிழர் தரப்பு என்பது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பா? புலிகள் அமைப்பை தமிழர் தரப்பாக யாருமே ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை சிங்கள அரசு, இந்திய அரசு மற்றும் மேற்குலகம் எமக்கு சொல்லிவிட்டார்கள்..! :D

 

இறுதியாக எமக்கு அறிவிக்கப்பட்டது என்னவென்றால் புலிகள் மக்களை பயங்கரவாதத்தின்மூலம் சிறைக்கைதிகளாக வைத்திருந்தார்கள் என்பது. சிறைப்பட்ட கைதிகளே கைது செய்தவரின் தவறுகளையும் ஏற்கவேண்டும் என்பது நியாயமாகத் தெரியவில்லை. :D

 

ஆகவே இந்த அறிக்கை மிகுந்த குழப்பத்தை ஏற்படுத்துகின்றது. :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கிலிருந்து முஸ்லிம் சகோதரர்கள் இரவோடு இரவாக வெளியேற்றப்பட்டுத் தமிழர் தரப்பிலிருந்து இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டதை எவரும் நியாயப்படுத்த முடியாது. உண்மை உண்மை மிகப்பெரிய உண்மை. :icon_mrgreen: 

 

சிங்களவர்களைப்போன்று இனக்கலவரம், மொழிக்கலவரம், தமிழ்சிங்கள, சிங்களத்தமிழ்க் கலவரம் என சிறுகச் சிறுக சிங்களத் தரப்பிலிருந்து தமிழரை இனச்சுத்திகரிப்புச் செய்துள்ளதுபோலச் செய்தாலே அதனை எவரும் நியாயப்படுத்த முடியும். ஒரு தமிழன் நியாயப்படுத்துகிறார்!. அதுவும் சிங்கக்கொடி தூக்கி மகிழ்ந்த சம்பந்தன் ஐயாவின் பேரன்புக்குரிய தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.. சுமந்திரன் என்ற தமிழன் தெரிவிக்கும்போது!....... தமிழர்களே நீங்கள் இன சுத்திகரிப்பின் குற்றவாளிகளே!!. :blink: 

 

 

வடக்கிலிருந்து முஸ்லிம் சகோதரர்கள் இரவோடு இரவாக வெளியேற்றப்பட்டுத் தமிழர் தரப்பிலிருந்து இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டதை எவரும் நியாயப்படுத்த முடியாது. உண்மை உண்மை மிகப்பெரிய உண்மை. :icon_mrgreen: 

 

சிங்களவர்களைப்போன்று இனக்கலவரம், மொழிக்கலவரம், தமிழ்சிங்கள, சிங்களத்தமிழ்க் கலவரம் என சிறுகச் சிறுக சிங்களத் தரப்பிலிருந்து தமிழரை இனச்சுத்திகரிப்புச் செய்துள்ளதுபோலச் செய்தாலே அதனை எவரும் நியாயப்படுத்த முடியும். ஒரு தமிழன் நியாயப்படுத்துகிறார்!. அதுவும் சிங்கக்கொடி தூக்கி மகிழ்ந்த சம்பந்தன் ஐயாவின் பேரன்புக்குரிய தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.. சுமந்திரன் என்ற தமிழன் தெரிவிக்கும்போது!....... தமிழர்களே நீங்கள் இன சுத்திகரிப்பின் குற்றவாளிகளே!!. :blink: 

பரந்த சிந்தனை , உண்மை ............நன்றி நண்பரே ...........இப்படி, பல தமிழர்கள் தெளிவாய் இருப்பதை நினைக்கும்போது மனம் நிறைவடைகிறது ................ஒரு சிலதை திருத்தமுடியாது விட்டுடுவோம் நண்பரே ............

முஸ்லீம்களை வெளியேற்றியது தவறு என்று புலிகளே பல ஆண்டுகளுக்கு முன்பு ஒத்துகொண்டு அதற்காக வருத்தமும் தெரிவிக்கபட்டு அவர்கள் திரும்ப வந்து குடியேறுவதை தாம் வரவேற்பதாக பல ஆண்டுகளுக்கு முன்பே தெரிவிக்கப்ட்டது. 1995 ல் இராணுவம் யாழ்ப்பாணதை கைப்பற்றி உடனேயே 90 வீதமான முஸ்லீம்கள் மீள் குடியேறியிருக்கலாம்.  அதற்காக பல ஆண்டுகள் கழித்து சொல்லொணா துயரத்தை அனுவித்த  தமிழ் மக்கள் அத்தவறை ஏற்க வேண்டுமென்றால் கிழக்கில் முஸ்லிம் ஊர்காவற்படையால் கொலை செய்யபட்ட தமிழ் மக்களுக்களாக யார் யாரிடம் மன்னிப்பு கேட்பது.கிழக்கில் எத்தனை தமிழ் மக்களின் கிராமங்களில் இருந்து தமிழ் மக்கள் முஸ்லீம் ஊர்காவற்படையால்  விரட்டப்பட்டு அக்கிராமங்கள் இன்றும் அவர்களை மீள குடியேற முடியாதபடி செயப்பட்டுள்ளது.  தமிழ் மக்களின் மீது அரக்கதனமாக தாக்குதல்களை நடத்திய அனைத்து அரசாங்கதிலும் முஸ்லீம் தலைவர்கள் பங்காளிகளாக இருந்தனர். அமைச்சரவைக் கூட்டு்ப்பொறுப்பின் அடிப்படையில் தமிழ்மக்களின் மீதான அனைத்து தாக்குதல்லகளுக்கும் முஸ்லீம் அரசியல் தலைவர்களுக்கும் பங்கு உண்டு. அவர்கள் தமது தவறை ஏற்றுக்கொள்வார்களா?  உண்மையில்  நடைபெற்ற யுத்தத்தில் அனைத்து தரப்பினரும் தவறு செய்தனர் என்பதே யதார்த்தம். உண்மையில் அனைவரும் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டு புதிய அனைத்து தேசிய இனங்களினதும் உரிமையை அங்கீகரித்து புதிய கூட்டாச்சி அரசியல் அமைப்பை உருவாக்குவதே நியாயம்  உலக வரலாற்றில் யுத்தங்களின் பின்னர் இந்நடைமுறை தான் அந்த நாடுகளின் பொருளாதார அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தியது. இந்த விடயம் மெத்த படித்த சுமந்திரனுக்கு தெரியாமல் போனது ஏன்? இலங்கை பாரம்பரிய கல்விமுறையில் படி சட்டம் மட்டும் படித்து வரலாறு சமூக சிந்தனை ஆகியவற்றை சுமந்திரன் படிக்கவில்லையா?

சுமந்திரன் தவறு என்று ஒன்றயும்,  திட்ட மிட்ட இனச்சுத்திகரிப்பு என்று ஒன்றையும் பற்றி பேசுகிறார். ஆனல் தான் ஆத்திரத்தில் இரண்டுக்கும் பேதம் என்று ஒன்று இருக்கு என்றதை மறந்து உணர்ச்சிவசத்தில் பேசுகிறார்.

 

 

புலிகள் அழியவில்லையா?

 

யாரிடம் மன்னிப்பு கேடக வேண்டும், யார் மன்னிப்பு கேட்க வேண்டும்? யார் இதை சொல்கிறார்கள்?

 

மன்னிப்பு கேட்டுமுடிய  யாரிடமிருந்து எதை சுமந்திரன் எதிர் பார்க்கிறார். 

 

 

Edited by மல்லையூரான்

சுமந்திரனுக்கு நன்றி .

சிங்கள அரசுகளால் செய்த அத்தனை அநியாயங்களும் அடிப்பட்டு போகின்றது அவர்களுக்கு ஈடாக புலிகளும் செய்த அநியாயங்ககளால் தான் ,இதை நாங்கள் ஒப்புக்கொள்ளாதவரை சர்வதேசத்திடம் இருந்து எங்களுக்கான நியாயத்தை பெறமுடியாது .

 

சரிதான் உங்களுடன் ஒத்துபோகும் சுமந்திரனுக்கு உங்கள் ஆதரவு உண்டா? சுமந்திரன் அசாத் சாலியை உடனே விட வேண்டும் என்றிருக்கிறார். அதை ஆதரித்து இதுவரையில் ஏதாவது எழுதியிருக்கிறீர்களா?. வேறு நிறைய பேசியும் இருக்கிறார்.  சுமந்திரனுக்கு நன்றி சொன்னாலும் சுமந்திரன் தமிழர்கள்தான் புலிகள் என்ற அர்த்தத்தில்தான் தமிழர் பொறுப்பு இதற்கு என்றிருக்கிறார்.

 

மேலும் நான் பார்த்த தலைமைகள் இரண்டு பக்கத்தையும் சர்வேதேச கோடுகளில் விசாரிப்பதில் ஆட்சேபனை இல்லை என்றிருக்கிறார்கள். இதன் பின்னர் நீங்கள் சர்வதேச விசாரணையை ஆதரித்து எழுதத் தொடங்குவீர்களா?

Edited by மல்லையூரான்

உப்படியே மன்னிப்புக் கேளுங்கோ, விரைவில் எல்லாறும் நல்லூர் கந்தசாமி தேருக்கு போக முடியாத நிலை வரும்,ஏன் என்றால் அங்கே ஒரு பெரிய பள்லிவாசல் இருக்கும், அப்போது தான் எமது அறிவாளிகளுக்கு அறிவு வரும், உதாரணம் இந்தோனெஷியா, மலேசியா

  • கருத்துக்கள உறவுகள்

 

.

 

 மனித உரிமை விடயத்திலே இருதரப்பினர்களும் சர்வதேச மனித உரிமைச் சட்டங்களுக்கெதிராக குற்றம் புரிந்துள்ளார்கள். இது விசாரிக்கப்பட வேண்டும் தண்டிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதை நாங்கள் ஆதரிக்கின்றோம். அவ்வாறான விசாரணை இருதரப்பினரையும் உட்படுத்தி இந்த விசாரணை இடம்பெற வேண்டும்." என்று அவர் கூறினார்.

 

.

 

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/05/130506_sumanthiranmuslim.shtml

 

விடுதலைப்புலிகள் ஆயுதங்களை மௌனமாக்கிய பின்னரும்

சிங்கள இனவாத அரசே புலிகள் முழுமையாக அழிக்கப்பட்டு விட்டார்கள் 

என்று கூறிய பின்னரும் , விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் எதுவுமற்ற 

இந்தக் கால கட்டத்தில் சுமந்திரன் அவர்கள் கூறும் இந்தக் கருத்தில் 

சுமந்திரன் அவர்கள்  சிங்கள இனவாத அரசிற்கு சாமரம் வீசும் காட்சி தெரிகின்றது

சுமந்திரன் தெளிவாகத்தான் பேசுகிறார். அவர் புலிகள் என்ற பதம் பயன்படுத்தவில்லையே! எமது தரப்பு தவறு என்று சொல்லுகிறார்.  தான் உட்பட ஒவ்வொரு தமிழனும் (பிரபாகரன் உடபட) தவறை ஏற்றுக்கொள்ளச்சொல்லுகிறார் அவ்வளவுதான். 

புலிகள் தான் தமிழர் தமிழர்தான் புலிகள் என்ற கருத்துடையவர்களுக்கு இந்த பதில் சம்ர்ப்பணம்

  • கருத்துக்கள உறவுகள்

இரட்டை நிலை எடுக்கமுடியாது என்பதுதான் எமது கருத்து..

 

புலிகள்தான் தமிழர்; தமிழர்தான் புலிகள் என்பதை ஏற்றுக்கொண்டால் தமிழர் தரப்பு (புலிகள் தரப்பு) ஏற்கனவே வருத்தம் தெரிவித்து தவறை ஏற்றுக்கொண்டுவிட்டது..

 

புலிகளும் தமிழரும் வேறு வேறு என்றால் புலிகளின் தவறை தமிழர்கள் ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும்? :blink::D

முஸ்லிம்கள் செய்த  கொடுமைகளை புலிகள் செய்த  தவறால் மறைக்கபட்டுவிட்டது....

 

 

   சுமந்திரன்   தமிழர்கள் ஏற்க்கவேண்டும் என்று கூறியதில் தவறில்லை என்று நினைக்கிறேன் ஏன் எனில்  புலிகள்  முஸ்லிம்களை  யாழைவிட்டு வெளியேற்றிய போது அதற்க்கு எதிர்ப்பு தெரிவிக்காமலும் மறைமுகமாக ஏற்றுக் கொண்ட நிலையிலே தான் தமிழ்மக்கள் இருந்து இருக்கிறார்கள் என்பது  முஸ்லிம்களின்  நிலைப்பாடு.

 

அப்படி பார்க்கும் போது தமிழர்கள் தவறை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற சுமந்திரனின் கருத்து சரியானதே......

 

 

புலிகள் மன்னிப்பு கேட்டார்கள் என்பவர்களுக்கு:  அப்படியாயின்  யூலைக் கலவரமும்  ஜக்கிய தேசிய கட்சியில் உள்ள இனவாதிகளால் நடத்தப்பட்டது  அதை மறந்து  இணைந்து வாழ்வோம் என  சிங்களவன் கூறீனால் உங்கள் நிலைப்பாடு என்னாவக இருக்கும்????????

 

 சிங்களவரும் தமிழர்களும் சேர்ந்து வாழவேண்டிய அவசியமில்லை ஆனால்  தமிழர்களும்   முஸ்லிம்களும் சேர்ந்து வாழவேண்டிய  மொழி நிலப்பரப்பைக் கொண்ட தேவை இருக்கிறது அதுக்காக  முதற்கட்டமாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு முயற்சிப்பதில் தவறில்லை...

 

 

 

சிங்களவன் அடித்து விட்டு  மன்னிப்பு கேட்டால் அதில் சூழ்ச்சி இருக்கும் ஆனால் நாம் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்பதில்  என்ன இழப்பதுக்கு இருக்கு?



ஆனால் என் மனநிலையில்  இலங்கை முஸ்லிம் மட்டுமில்லை  எந்த ஒரு நாட்டு முஸ்லிம்களுடனும் என்னால் நட்ப்பு பாராட்டமுடிவதில்லை :)  அதை விட படித்த அல்லது ஒரு ஏழை சிங்களவனோடு நின்மதியாக இருந்துவிடலாம் :lol:



இரட்டை நிலை எடுக்கமுடியாது என்பதுதான் எமது கருத்து..

 

புலிகள்தான் தமிழர்; தமிழர்தான் புலிகள் என்பதை ஏற்றுக்கொண்டால் தமிழர் தரப்பு (புலிகள் தரப்பு) ஏற்கனவே வருத்தம் தெரிவித்து தவறை ஏற்றுக்கொண்டுவிட்டது..

 

புலிகளும் தமிழரும் வேறு வேறு என்றால் புலிகளின் தவறை தமிழர்கள் ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும்? :blink::D

 

புலிகள் எடுத்த நிலைப்பாடு தவறு என யாழ்ப்பாணத்திலும் சரி   முழு இலங்கையிலும் சரி ஒரு தமிழனுக்குமா தெரியவில்லை?

  • கருத்துக்கள உறவுகள்

 

 

புலிகள் எடுத்த நிலைப்பாடு தவறு என யாழ்ப்பாணத்திலும் சரி   முழு இலங்கையிலும் சரி ஒரு தமிழனுக்குமா தெரியவில்லை?

 

புலிகள் தமிழரின் பிரதிநிதிகளா?

 

1) ஆம்

2) இல்லை

3) பதில் சொல்ல விரும்பவில்லை

 

:D

 

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனுக்கு நன்றி .

சிங்கள அரசுகளால் செய்த அத்தனை அநியாயங்களும் அடிப்பட்டு போகின்றது அவர்களுக்கு ஈடாக புலிகளும் செய்த அநியாயங்ககளால் தான் ,இதை நாங்கள் ஒப்புக்கொள்ளாதவரை சர்வதேசத்திடம் இருந்து எங்களுக்கான நியாயத்தை பெறமுடியாது .

முஸ்லிம்களை வெளியேற்றாது.............

முஸ்லிம்களாகவே போராடிய. குர்திஸ் இன மக்களுக்கு  நியாயங்களை புரிந்து விடுதலையை தாம்பாள தட்டில் வைத்து கொண்டுபோய் கொடுத்துள்ளார்கள்
மேற்குலக நாடுகள்.

முஸ்லீம்களை வெளியேற்றியது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு. சுமந்திரன் தமிழர் தரப்பை தவறை ஏற்கச் சொல்கிறார். அப்படியானால் தமிழர் தரப்பு என்பது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பா? புலிகள் அமைப்பை தமிழர் தரப்பாக யாருமே ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை சிங்கள அரசு, இந்திய அரசு மற்றும் மேற்குலகம் எமக்கு சொல்லிவிட்டார்கள்..! :D

 

இறுதியாக எமக்கு அறிவிக்கப்பட்டது என்னவென்றால் புலிகள் மக்களை பயங்கரவாதத்தின்மூலம் சிறைக்கைதிகளாக வைத்திருந்தார்கள் என்பது. சிறைப்பட்ட கைதிகளே கைது செய்தவரின் தவறுகளையும் ஏற்கவேண்டும் என்பது நியாயமாகத் தெரியவில்லை. :D

 

ஆகவே இந்த அறிக்கை மிகுந்த குழப்பத்தை ஏற்படுத்துகின்றது. :icon_mrgreen:

இதுக்கு ஐயா என்ன சொல்லபோகிறார்.

 
அல்லது இந்த திரியில் ஐயாவின் வேலை தடங்கள் இன்றி முடிந்துவிட்டதா?
 
ஒரு கருத்துக்கே பதில் எழுத முடியவில்லை.
இதில் போராட்டத்தின் சரி பிழைகளை பிநாத்துகிறார்கலாம்.

தமிழ் மக்கள் மீது மிலேச்சத்தனமாக தாக்குதல் நடத்தியபோது அந்த அனைத்து அரசாங்கத்திலும் அமைச்சர்க்களாக இருந்த அமைச்சரவை கூட்டுபொறுப்பாளர்கான   முஸ்லீம்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் மெளனமாக இருந்தார்கள் அதை மறைமுகமாக ஏற்றுக்கொண்டார்கள் என்பது தமிழர்களின் நிலைப்பாடு.

 

அதென்ன யுத்தம் நடைபெற்ற போது அனைத்து தரப்பு தலைவர்களும் குற்றம் இளைத்தார்களாம். அதில் தமிழ் மக்களுக்கு மட்டும் முள்ளிவாய்காலில் கொத்து கொத்தாக கொலை செய்யபட்டு தண்டனை வழங்கப்பட்டதாம்.  மிச்சம் உள்ள தமிழர்கள் மன்னிப்பு கேட்கவேண்டுமாம். மற்றவர்கள் மன்னிப்பு கேட்கமாட்டார்களாம். ஏனென்றால் ஒரு தரப்பினர் வென்றவர்களாம். மற்ற தரப்பினர் வென்றவர்களின் பக்கம் நி்ன்றவர்களாம்

 

நல்ல நியாயமப்பா.

  • கருத்துக்கள உறவுகள்

யாழிலிருந்து முஸ்லீம்களை வெளியேற்றியது நியாயப்படுத்தக்கூடியதொன்றல்ல. அவ்வாறு செய்தது தவறுதான் என்று புலிகள் சொன்னது நினைவிலிருக்கிறது. ஆகவே மீண்டும் சுமந்திரன் அதைக் கேட்பது ஏனென்றுதான் புரியவில்லை. தமிழர்கள் என்று அவர் யாரைக் குறிப்பிடுகிறார் என்று தெரியவில்லை. 

 

2009 வரை எல்லாவற்றுக்கும் புலிகளை நோக்கிக் கைய்யைக் காட்டினார்கள். இப்போது தமிழர்கள் என்கிறார்கள். ஆனால் தமிழர்களின் தலமை தாம்தான் என்று கூறிவிட்டு, தமிழர்களே மன்னிப்புக் கேளுங்கள் என்றால் யார்தான் கேட்பது? ஏன் நீங்களே இதைச் செய்யக் கூடாது. வேண்டுமென்றால் உங்கள் கட்சியைக் கூட்டி ஒரு தீர்மானம் நிறைவேற்றலாமே?? அதை விடுத்து தமிழர் மன்னிப்புக் கேட்கவேண்டுமென்றால் என்ன செய்வது ?

 

அப்படியே இன்னொரு விடயம் பற்றியும் சுமந்திரன் பேசலாம். அதாவது சிங்கள பேரினவாதத்துடன் சேர்ந்துகொண்டு இன்றுவரை தமிழின அழிப்பிற்கு முஸ்லீம் சமூகமும் அதன் தலமையும் செய்துவரும் முண்டுகொடுப்பிற்கு மன்னிப்பும், இனிமேல் அப்படி நடவாது என்கிற உத்தரவாதமும் முஸ்லீம் தரப்பிடமிருந்து கேட்கப்பட வேண்டும். அது சாத்தியா என்பது அரைப் பொறுத்தது. 

 

தவறுகள் எல்லாப் பக்கத்திலும் நடந்திருக்கும்போது, இதில் அதிகமாகப் பாதிக்கப்பட்ட இனமான தமிழினம் எல்லோரிடமும் மன்னிப்புக் கோர, மற்றைய இரு இனங்களும் தொடர்ந்தும் தமிழினத்தின் மீதான திட்டமிட்ட இனவழிப்பில் ஈடுபடுவதென்பது எந்த விதத்தில் நியாயம்? தமிழினத்திற்கெதிராக முஸ்லீம் சமூகம் செய்த தவறுகளுக்காக மன்னிப்புக் கோருங்கள் என்று ஒரு முஸ்லீம் தலமையையாவது சுமந்திரனால் கேட்க வைக்க முடியுமா?? அப்படி பகிரங்கமாகக் கோர முடிந்தால் நிச்சயம் யாழ் வெளியேற்றம்  பற்றியும் மன்னிப்புக் கோரலாம்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலைப் பகுதிகளில் தமிழர்களுக்கு சகோதர இனத்தினரால் செய்யப்பட்ட அனியாயங்களைப்பற்றி யாரும் கருத்திலெடுப்பதில்லை.  புள்ளி விபரப்படி பார்த்தால் யாழிலிருந்து வெளியேற்றியது பெரிய விடயமல்ல.  அங்கே படுகொலைகள் நடக்கவில்லை.  உடைமைகள் அழிக்கப்படவில்லை.  எல்லோரையும் மரியாதையாகவே வெளியேற்றினார்கள்.  மன்னிப்பை எல்லோரும் கேட்கவேண்டும்.  தமிழர்கள் மட்டும் முந்திக்கொண்டு நிற்கத் தேவையில்லை.

 

Edited by karu

  • கருத்துக்கள உறவுகள்

இனச்சுத்திகரிப்புன்னா என்னா சுமந்திரன் ஐயே... மக்களே இன்றைய சூழ்நிலையில் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து நிலைமை சீரானதும்.. திரும்பி வாருங்கள் என்று சொல்லுறது.. இனச் சுத்திகரிப்புன்னா.. அது உலகம் பூராவும் தினமும் நடக்கிறது மிஸ்டர் சுமந்திரன் ஐயே..! அதுக்காக எவரும் மன்னிப்புக் கோருவதில்லை. இருந்தும் புலிகள் பெரிய மனசு பண்ணி கேட்டார்கள். மீளக் குடியமரவும் அழைத்தார்கள். அதனை பிரபா - ஹக்கீம் உடன்படிக்கை சொல்லும்..! உதுகளை ரெம்ப ஈசியா மறந்திடுங்க..! திரும்பத் திரும்ப பழசுகளைப் பேசி.. குரோதங்களை வளர்த்துக்கிட்டே வாங்க..! :lol:

 

அப்புறம்.. 1990 முஸ்லீம் இடம்பெயர்விற்கு முன்னரே.. கல்முனை.. காத்தான்குடி.. அம்பாறை.. மூதூர்.. சம்பூர்.. திருமலை.. மன்னார்.. வவுனியாவில் இருந்து விரட்டி அடிக்கப்பட்ட தமிழ் மக்களின்.. சார்ப்பாக நீங்கள் முஸ்லீம் தலீவர்களை தமிழ் மக்களை நோக்கி மன்னிப்புக் கேட்கச் சொல்லி ஏன் இன்னும் லாஜிக் பேசல்ல.. ஐயே..!

 

அதுபோக.. 1952 இல் இருந்து உங்க சிங்கள சகோதர சகோதரிய.. தமிழ் மக்களை வேட்டையாடிக்கிட்டு வாறதிற்கு ஏன் நீங்க இன்னும் மன்னிப்புக் கேட்கச் சொல்லேல்ல.. ஐயே...???! அதுகளையும் சொல்லுறது தானே. தமிழன் மட்டும் தான் இழிச்ச வாயனா தெரியுறானா..!!! :icon_idea:

 

அப்புறம்..

 

உங்க தலீவரும் நீங்களும் இப்ப சில சமன்பாடுகளை எழுதுக்கிட்டு திரியுறீங்க என்னாத்துக்கு...

 

* சிறீலங்காவின் சிங்கக் கொடி= தமிழரின் அம்மன் தெய்யோ கொடி

 

* யாழ்ப்பாண முஸ்லீம் இடம்பெயர்வு = தமிழ் மக்கள் மீதான 60 ஆண்டு கால இனப்படுகொலை

 

* மறப்போம் மன்னிப்போம் = அப்பட்டமான இனப்படுகொலைக்கும்  மனித உரிமை மீறல்களுக்கும் தீர்வு

 

* சிறீலங்கா சட்டத்தின் மூலம் நிலங்களை மீட்போம் = சிறீலங்காவின் சிங்கள அதிகாரவரம்புக்குள் அடிமையா உட்கார்ந்திருப்போம்.

 

* முள்ளிவாய்க்கால் = ஓயாத அலைகள் 1

 

* சம்பந்தன் = இரத்தக்கறை படியாத சுத்த ஜனநாயகம்

 

* சுமந்திரன் = சரி கெட்டிக்கார அரசியல்வாதி (அமிர்தலிங்கத்தின் இன்னொரு காபன் கொப்பி)

 

ஆக மொத்தத்தில்..

 

உங்கள் நிலைப்பாடுகள் = தமிழ் மக்களின் தலையில் மிளகாய் அரைப்பு

 

:lol::icon_idea:

 

 

Edited by nedukkalapoovan

யாழில் முஸ்லிம்களை புலிகள் வெளியேற்றினார்களே? ஐயோ ஐயோ  அவர்கள் தன்னிச்சையாக அல்லவா வெளியேறினார்கள் .

சுமந்திரன் அரசின் கைக்கூலி .

  • கருத்துக்கள உறவுகள்

இனச்சுத்திகரிப்புன்னா என்னா சுமந்திரன் ஐயே... மக்களே இன்றைய சூழ்நிலையில் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து நிலைமை சீரானதும்.. திரும்பி வாருங்கள் என்று சொல்லுறது.. இனச் சுத்திகரிப்புன்னா.. அது உலகம் பூராவும் தினமும் நடக்கிறது மிஸ்டர் சுமந்திரன் ஐயே..! அதுக்காக எவரும் மன்னிப்புக் கோருவதில்லை. இருந்தும் புலிகள் பெரிய மனசு பண்ணி கேட்டார்கள். மீளக் குடியமரவும் அழைத்தார்கள். அதனை பிரபா - ஹக்கீம் உடன்படிக்கை சொல்லும்..! உதுகளை ரெம்ப ஈசியா மறந்திடுங்க..! திரும்பத் திரும்ப பழசுகளைப் பேசி..

 

 

 

 

வடமாகணத் தேர்தல் வருகுதில்ல, அங்கு தற்போது குடியேற்றப்பட்ட சிங்கள, முஸ்லிம்களின் வாக்குகளைக் கவர வேறுவழிகள் தெரிந்தால் சொல்லிக்கொடுங்கப்பா.

arjun

Advanced Member

  • photo-thumb-3687.jpg?_r=1352765096
  • கருத்துக்கள உறவுகள்
  • bullet_black.pngbullet_black.pngbullet_black.png
  • 4,031 posts
  • Gender:Male
  • Location:canada

Posted Today, 02:43 PM

யாழில் முஸ்லிம்களை புலிகள் வெளியேற்றினார்களே? ஐயோ ஐயோ  அவர்கள் தன்னிச்சையாக அல்லவா வெளியேறினார்கள் .

சுமந்திரன் அரசின் கைக்கூலி .

 

 

 இவர் சொல்ல மறந்ந்தது இந்த பூவுலகில் அடாவடி, அநியாயம்என்றால்  அது விடுதலைப்புலிகள் செய்ததது ஒன்று தான். மற்றயவர்கள் என் பிள்ளையை மட்டுமல்ல எனது வம்சத்தை அழித்தாலும் அதை நான் ஏற்றுக்கொள்வேன்.

யாழில் முஸ்லிம்களை புலிகள் வெளியேற்றினார்களே? ஐயோ ஐயோ  அவர்கள் தன்னிச்சையாக அல்லவா வெளியேறினார்கள் .

சுமந்திரன் அரசின் கைக்கூலி .

 

அதுவும் உண்மைதான். புலி  மொக்குக்கூட்டம் இதுவரையில் அதைச் சிந்திக்கவில்லை.

 

யாழ்ப்பாணத்தில் புலிகளின் ஆதிகம் இருந்தால் சிங்களம் உணவு முதல் மருந்துவரை cut off பண்ணும் என்று நல்ல யாபார சூழ்நிலைகள் இருந்த வெளி மாவட்டங்களுக்கு வெளியேறி இருப்பர்கள்.

 

இப்படி எல்லம் சிந்திக்க சுப்பர் பிறஸ்ன்தான். உண்மையான PhD.

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனுக்கு நன்றி .

சிங்கள அரசுகளால் செய்த அத்தனை அநியாயங்களும் அடிப்பட்டு போகின்றது அவர்களுக்கு ஈடாக புலிகளும் செய்த அநியாயங்ககளால் தான் ,இதை நாங்கள் ஒப்புக்கொள்ளாதவரை சர்வதேசத்திடம் இருந்து எங்களுக்கான நியாயத்தை பெறமுடியாது .

 

 

http://en.wikipedia.org/wiki/Expulsion_of_Muslims_from_the_Northern_province_by_LTTE

 

 

புலிகள் மன்னிப்பு கேட்டுள்ளார்கள். சுமந்திரன் கனவு கண்டு எழும்பி வந்துள்ளார்.கிழக்கில் முஸ்லிம் மக்களும் தெற்கில் சிங்கள மக்கள் தமிழ் மக்களுக்கு செய்த கொடுனைகளுக்கு எப்போ யாரால் மன்னிப்பு கேட்கப்பட்டது? அதே நேரம் ஒட்டுக்குழுக்களும் தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.