Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பண்டத்தரிப்பில் திருவிழா - 250 ஆட்டுக்கடாக்கள் உயிரைவிட்டன! பார்த்து மகிழ்ந்தனர் பக்தர்கள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

goat-killed150seithykal.jpg

யாழ் பண்டத்தரிப்பு - பிரான்பற்று ஆலயம் ஒன்றில் கடந்த சனிக்கிழமை ஆயிரக்கணக்கான மக்களின் கண்முன்னே 250 இற்கும் அதிகமான ஆட்டுக்கடாக்கள் வெட்டிச்சாய்க்கப்பட்ட சம்பவம் பலியிடுதல் என்று நடைபெற்றுள்ளது. வருடந்தோறும் பண்டத்தரிப்பு பிரான்பற்று ஆலயத்தில் நடைபெறும் வேள்வியிலேயே இந்தமுறையும் இவ்வாறு பெரும் எண்ணிக்கையான ஆட்டுக்கடாக்கள் பலியிடப்பட்டுள்ளன.

ஆலய வேள்விக்காக அதிகாலை முதலே டிறாக்டர், லாண்ட் மாஸ்டர், மாட்டு வண்டிகளில் நீராட்டப்பட்டு, மாலை அணிவிக்கப்பட்ட நிலையில் ஆட்டுக்கடாக்கள் ஊர்வலமாக ஆலயத்துக்கு அழைத்து வரப்பட்டன. மனிதனின் தேவைக்காகப் படைக்கப்பட்ட பொருள்களில் ஆட்டுக்கடாவும் ஒன்று. எனவே இறைவனின் சந்நிதானத்தில் பலியிடுவதால் மோட்சநிலைக்குச் செல்லும் வாய்ப்பு அவற்றுக்கு ஏற்படும் என்று ஆலய பூசகரால் அருள்வாக்குக் கூறப்பட்ட பின்னர் வேள்வி ஆரம்பமானது.

ஆட்டுக்கடாக்களின் தலைகள் ஒரே வெட்டில் அறுக்கப்பட்டன. இரத்தம் கொப்பளிக்க அவை நிலத்தில் வீழ, தொடர்ந்தும் காத்திருந்த ஆடுகள் பலியிடப்பட்டன. கூடவே 72 கோழிகளும் இதன்போது பலியிடப்பட்டன. வேள்வியின் போது பலியிடப்பட்ட முதல்நிலையான ஆடுகள் இரண்டு லட்சம் ரூபா வரை விலை போயின. ஓர் ஆட்டினைப் பலியிடுவதற்கு ஆலயத்துக்கு ஆயிரம் ரூபா கட்டணமும் செலுத்தப்பட்டது.

வேள்வியைத் தொடர்ந்து பொங்கல் வழிபாடுகளும் இடம்பெற்றன. பிரான்பற்றைத் தொடர்ந்து ஆனைக்கோட்டை, கவுணாவத்தை, சித்தன்கேணி, நவாலி போன்ற இடங்களிலுள்ள ஆலயங்களிலும் மிருக பலியிடல் நிகழ்வுகள் அடுத்துவரும் வாரங்களில் நடைபெறவுள்ளன. இதேவேளை, ஆலயங்களில் இவ்வாறு மிருக பலியிடலை மேற்கொள்வதற்கு இந்து அமைப்புகள் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளன.

நாவலர் வழியில் சைவநெறி தவறாது வாழ வேண்டிய நாம் இன்று சைவக்கோயில்களில் வேள்வி என்ற பெயரால் மிருகபலி செய்வது எமது சமயத்துக்குச் செய்யும் துரோகமாகும் என்று அகில இலங்கை இந்து மா மன்றம் இந்த மிருக பலியை கண்டித்துள்ளது. இந்து அமைப்புகளின் எதிர்ப்பையும் மீறி குறித்த ஆலயங்களில் தொடர்ந்தும் மிருக பலியிடல் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

http://www.seithy.co...&language=tamil

என்ன கொடுமை! :o

சனம் இஞ்ச குளிரிலும் பனியிலும் ஓடி ஓடி உழைச்சு காசு அனுப்ப அங்க மிருகப் பலி கொடுக்குதுகள்... :rolleyes:

இந்தக் காட்சியைப் சிறுவர்கள் பார்வையில் இருந்து தவிர்த்து இருப்பார்களா? இல்லை தீ மிதிக்கத் தள்ளி விட்டது போல் அவர்களைக் கொண்டும் வெட்டிச் சாய்க்க விட்டிருப்பார்களா? :blink::huh:

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கெனவே காட்டுமிராண்டிகள் என சிங்களத்தால் பரப்புரைகள் நடைபெறும் வேளையில், இது அவசியம் தானா?

இப்படி எழுதுவது, மற்றவர்கள் நம்பிக்கைகளைப் புண் படுத்தும் என எவராவது கருதினால், ஒரு சைவனாகப் பிறந்ததையிட்டு வெட்கப் படுகின்றேன்!

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் கண்ணப்ப நாயனாராக வேணும் என்ற ஆசை வந்திடுது போல...

ஆட்டு வேட்டையை  மக்கள் வேடிக்கை பார்க்க மக்கள் வேட்டையை ஆண்டவன் வேடிக்கை பார்க்க அரோகரா!

Edited by Manivasahan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாகரிகமாக வாழப்பழகிய மனிதன் மீண்டும் கற்காலம் நோக்கி செல்கின்றானா என எண்ணத்தோன்றுகின்றது ........

இலட்சக்கணக்கானோர் பசியோட இருக்கும் போது பாலாபிசேகம் செய்வதும், பொங்கிப் படைப்பதும் ஒன்றுதான் மிருகங்களை வெட்டி பலியிடுவதும் ஒன்றுதான்

ஆலயங்களில் இத்தகைய அர்த்தமற்ற கொடூரங்கள், விரயங்கள் நிறுத்தப்பட வேண்டும்!

இதனால் எந்த நன்மையும் விலையப் போவதில்லை. இந்த பிற்போக்குத்தனம் எந்த வேதங்களிலும் குறிப்பிடப்படவில்லை.

எனக்கு விளங்கவில்லை ஏன் நீங்கள் இதை எதிர்க்கின்றீர்கள் என்று? இந்து சமயப்படி வேள்விகள் ,யாகங்கள் காலம் காலமாக இடம் பெற்று வந்த நிகழ்வு தான். ஏதோ ஒரு காரணமாகத் தான் இதை நம் மூதாதையர் செய்து வந்தனர். இப்ப இதை சமய நம்பிக்கை இல்லாதோர் விமர்சிக்கின்றார்கள்.

(நீங்கள் சாப்பிடும் ஆடு இயற்கையாகவா மரணமடைகின்றது. அதைப் பற்றிக் கதைக்க மாட்டீர்கள். ஆட்டுக்குடல் கறி , ஆட்டுக்கால் பாயா ............................ உடனே ஆட்டுக்கடையில் வரசையில் நிற்பீர்கள்............... உரில் இருந்தாலும் வரிசையில் நீங்கள் தான் முன்னுக்கு. ஏன் நீங்கள் ஊரில் உள்ளவர்களுக்கு சாசு அனுப்புகின்றீர்கள். )

  • கருத்துக்கள உறவுகள்

படித்த சமூகம் வாழும் நாகரிகமான சமூகத்தில், காட்டுமிராண்டித்தனமான செயல்கள் வன்மையாகக் கண்டிக்கப் படவேண்டியது.

வெளிநாடுகளில், ஒரு மிருகத்தை இறைச்சிக்கு கொல்லும் போது கூட.... அது, வேதனையை அனுபவிக்காமல் தான் கொல்வார்கள்.

இந்த காட்டுமிராண்டிகள், 250 ஆட்டையும் கோயிலில் கழுத்தை வெட்டிக் கொன்றிருக்கிறார்கள்.

புலால்(இறைச்சி) உண்ணல் பாவம் என்று, சைவ சமயம் சொல்லுது.

இவங்களுக்கு... கோயிலில் வைத்து, இறைச்சி வெட்ட எந்தச் சமயம் சொல்லிக் கொடுத்தது?

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு விளங்கவில்லை ஏன் நீங்கள் இதை எதிர்க்கின்றீர்கள் என்று? இந்து சமயப்படி வேள்விகள் ,யாகங்கள் காலம் காலமாக இடம் பெற்று வந்த நிகழ்வு தான். ஏதோ ஒரு காரணமாகத் தான் இதை நம் மூதாதையர் செய்து வந்தனர். இப்ப இதை சமய நம்பிக்கை இல்லாதோர் விமர்சிக்கின்றார்கள்.

(நீங்கள் சாப்பிடும் ஆடு இயற்கையாகவா மரணமடைகின்றது. அதைப் பற்றிக் கதைக்க மாட்டீர்கள். ஆட்டுக்குடல் கறி , ஆட்டுக்கால் பாயா ............................ உடனே ஆட்டுக்கடையில் வரசையில் நிற்பீர்கள்............... உரில் இருந்தாலும் வரிசையில் நீங்கள் தான் முன்னுக்கு. ஏன் நீங்கள் ஊரில் உள்ளவர்களுக்கு சாசு அனுப்புகின்றீர்கள். )

அலைமகள் நான் சமய நம்பிக்கை உள்ளவன்,

கோயிலில் இரத்தப் பலி கொடுப்பது காட்டுமிராண்டிகள் செய்யும் வேலை.

இறைச்சிக்கு வெட்டும் மிருகங்களை, பலர் பார்க்க ஒரேயடியாக... கழுத்தை வெட்டுவது 21ம் நூற்றாண்டுக்கு ஏற்புடையதல்ல.

இதனைப் பார்க்கும் சிறுவர்களும்... நாளைக்கு, ஒரு மனிதனின் தலையை அறுத்தால்... யார் பொறுப்பேற்பது.

காலம் காலமாக யாகம் செய்து, நாம் கண்ட பலன் என்ன?

இந்து சமயத்தில் வேள்விகள் பற்றி நிறைய இருக்கின்றன. சமயப் புத்தங்களை எடுத்து வாசியுங்கோ. வேள்வி செய்ததற்காக உங்களைச் சாப்பிடச் சொல்லவில்லை. வெளி நாடுகளில் கோழிகளைத் திரும்பக் கூட இடமிலாத கூடுகளில் அடைத்து முட்டைக்காகவும், இறைச்சிக்காகவும் வளர்க்கின்றார்கள், மிருகங்கள் தொழிற்சாலைகளில் பேல்ரில் லைனாகப் போய்க்கொண்டிருக்கும் வெட்டப்படுவதற்கு. ( இது வெளினாட்டு மிருகங்களாகையால் துள்ளிக்குதித்துச் சந்தோசமாகப் போகும் ஏனேனில் உங்களுக்கு நாக்குக்கறி, குடல்கறி, ஆட்டுக்கறி (மதுவுக்கு முன்/பின்) தேவை என்பதால்!!! என்னத்தைத் தான் விட்டுவச்சியள்!!!!! முதல் விசயங்களை விளங்குங்கோ, பின்பு வாங்கோ எழுதுவதற்கு!!!!!!!!

உப்பிடி வரிசையில போய் நிண்டு ஆடுகளை வெட்டிச் சாயுங்கோ/ மிருகப் பலி கொண்டுங்கோ என்று சொல்லியே இங்க இருந்து காசு அனுப்புறம்? :huh: இது ஒருபக்கம்... அது சரி எங்கட மூதாதையர் விட்டுச் சென்ற எல்லாப் பழக்க வழக்தையும் ஒன்று விடாமல் நாங்கள் பின்பற்றுற ஆக்கள் தானே? :rolleyes:<_<

ஊரில் எங்கட அம்மம்மாட காலத்தில தான் பில்லிச் சூனியம், செய்வினை என்று எல்லாக் கருமங்களும் இருந்தது என்று அவவே சொல்லிக் கேள்வி... நாங்கள் அங்க இருந்த நேரம், எங்கட அம்மா அப்படி எதுவும் கதைச்சதா ஞாபகம் இல்லை... ஆனால் இப்ப அந்தப் பில்லிச் சூனியம், மிருகப் பலி, செய்வினை, செயட்பாடுவினை என்று எல்லாம் பழையபடி முருங்கை மரத்திலை ஏறிட்டுது... :rolleyes:

இந்து சமையத்தில் அப்படி ஒரு செயல் இருக்குமாக இருந்தால், அதை அந்த மதத்தவர் பின்பற்றுபவர்களாக இருந்தால் ஏன் இவ்வளவு நாளும் இப்படி நடக்கவில்லை? உலகம் முழுதும் தானே இந்து மதத்தினர் பரந்து வாழ்கிறார்கள் ஏன் அவர்கள் இதுவரை இப்படியான செயலில் ஈடுபடவில்லை?

Edited by குட்டி

  • கருத்துக்கள உறவுகள்

இந்து சமயத்தில் வேள்விகள் செய்து, என்னத்தைக் கண்டார்கள். என்ற கேள்விக்கு இன்னும் பதில் இல்லை.

நீங்கள் படித்த, சமயப் புத்தகத்திலும்... அதற்கு விடை இருந்திருக்காது.

அப்ப... வேள்வியில் கொன்ற ஆடுகளை, மண்ணுக்குள் வெட்டித் தாக்கிறார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

இந்து சமயம் புலால் உண்பதை எதிர்க்கின்றது.

உயிர்களைக் கொல்வதை எதிர்க்கின்றது.

ஆனால் வேள்வியும் யாகமும் செய்யும் போது உயிர்களைப்

பலியிடுவதை ஆதரிக்கின்றது.

இது தான் வேடிக்கை.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான ஜீவகாருணியமற்ற மிருக வதைகளுக்கு எதிராக விடுதலைப்புலிகள் கடும் நிலைப்பாட்டை எடுத்திருந்தோடு.. கோவில்களில் வேள்விகளுக்கு தடையும் விதித்திருந்தனர். ஏன் மக்கள் அவற்றை இப்போதும் பின்பற்றக் கூடாது. ஏன் இவ்வாறான மூடத்தனங்களை முற்றாக களையக் கூடாது..???! :icon_idea:

இது பங்கிறைச்சுக் காறர்களின் விளையாட்டு. இந்தப் பங்கிறைச்சிகள் நாளை புலம்பெயர் நாடுகளில் தமிழ் கடைகளில் கூட கிடைக்கும்..! பங்கிறைச்சிக்கு அடிபடுபவர்களே.. அநேகர் ஐயோ பாவம் என்றும் அழுகின்றனர்..! என்னே வேடிக்கை மனிதர்கள் பாரீர்.. பாரினில்...! :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

கொன்றால் பாவம் தின்றால் போச்சு.. இதுதான் என்கட்சி.. :D

  • கருத்துக்கள உறவுகள்

இந்து சமயத்தில் வேள்விகள் பற்றி நிறைய இருக்கின்றன. சமயப் புத்தங்களை எடுத்து வாசியுங்கோ. வேள்வி செய்ததற்காக உங்களைச் சாப்பிடச் சொல்லவில்லை. வெளி நாடுகளில் கோழிகளைத் திரும்பக் கூட இடமிலாத கூடுகளில் அடைத்து முட்டைக்காகவும், இறைச்சிக்காகவும் வளர்க்கின்றார்கள், மிருகங்கள் தொழிற்சாலைகளில் பேல்ரில் லைனாகப் போய்க்கொண்டிருக்கும் வெட்டப்படுவதற்கு. ( இது வெளினாட்டு மிருகங்களாகையால் துள்ளிக்குதித்துச் சந்தோசமாகப் போகும் ஏனேனில் உங்களுக்கு நாக்குக்கறி, குடல்கறி, ஆட்டுக்கறி (மதுவுக்கு முன்/பின்) தேவை என்பதால்!!! என்னத்தைத் தான் விட்டுவச்சியள்!!!!! முதல் விசயங்களை விளங்குங்கோ, பின்பு வாங்கோ எழுதுவதற்கு!!!!!!!!

அலைமகள்,

ஒரு நிமிடம் உங்களை நீங்கள், பண்டத்தரிப்புக் கோவிலில், வெட்டப் படக் காத்திருக்கும், வேள்விக் கிடாயாகக் கற்பனை செய்து பாருங்கள்!

மனித உயிருக்கும், மிருகங்களின் உயிருக்கும், அதிக வித்தியாசம் இல்லை!

வேட்டையாடும் விலங்குகள் கூடத் தங்கள் உணவுக்கு அளவாக மட்டுமே கொல்கின்றன!

கொல்வதை, ஒரு விழாவாக அவை கொண்டாடுவதில்லை!

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாவற்றுக்கும் மாற்றம் வேணும் என்று நினைக்கிற எங்கட மக்கள் இப்படியான விசயங்களில் மட்டும் மாற்றமே இல்லாமல் இருக்கீனம்....வேள்வி,யாகம் இது எல்லாம் வேணும் தானா..சிலரோடு இது பற்றி பேசி முரண்படும் போது சொல்கிறார்கள் மனிசரையே வேட்டுறாங்கள் ஆடு,மாடு பறவா இல்லையாம்.எது என்றாலும் ஒரு உயிர் தானே.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள், மறுபிறப்பில் ஒரு கிடாய் ஆடாக.. பிறந்து,1898_goatrunboer.gif

1898_laughn.gifபண்டத்தரிப்பு வேள்வியில்.... உங்கள் தலையை ஒரு வெட்டாக, வெட்டியிருந்தால்....

யோசித்துப் பாருங்கள், நிலவரம் புரியும்.

***

Edited by இணையவன்

இந்து சமயத்தில் வேள்விகள் பற்றி நிறைய இருக்கின்றன. சமயப் புத்தங்களை எடுத்து வாசியுங்கோ. வேள்வி செய்ததற்காக உங்களைச் சாப்பிடச் சொல்லவில்லை. வெளி நாடுகளில் கோழிகளைத் திரும்பக் கூட இடமிலாத கூடுகளில் அடைத்து முட்டைக்காகவும், இறைச்சிக்காகவும் வளர்க்கின்றார்கள், மிருகங்கள் தொழிற்சாலைகளில் பேல்ரில் லைனாகப் போய்க்கொண்டிருக்கும் வெட்டப்படுவதற்கு. ( இது வெளினாட்டு மிருகங்களாகையால் துள்ளிக்குதித்துச் சந்தோசமாகப் போகும் ஏனேனில் உங்களுக்கு நாக்குக்கறி, குடல்கறி, ஆட்டுக்கறி (மதுவுக்கு முன்/பின்) தேவை என்பதால்!!! என்னத்தைத் தான் விட்டுவச்சியள்!!!!! முதல் விசயங்களை விளங்குங்கோ, பின்பு வாங்கோ எழுதுவதற்கு!!!!!!!!

நீங்கள் மாமிசம் புசிப்பவர்கள் பற்றி எழுதிய கருத்து - சிந்திக்க வேண்டியது, அர்த்தம் நிறைந்தது.

ஆனால் எந்த இந்து சமயப் புத்தகத்தில் "மிருகபலி கொடுக்க வேண்டும்", "இது ஒரு சமயச் சடங்கு" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு கூறுங்கள் பார்க்கலாம்.

சில இந்துசமய ஆழ் அறிவுள்ளவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, வேதங்கள் முதலிய எந்தவொரு இந்து சமய நூல்களிலும் மிருகபலி கொடுக்க வேண்டும், அதனால் நன்மைகள் விளையும் என்று சொல்லப்படவில்லை என்கிறார்கள். இது சில சமூக வழக்கங்களாக இருந்ததே ஒழிய - சமய வழக்கம் இல்லவே இல்லை என்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாவற்றுக்கும் மாற்றம் வேணும் என்று நினைக்கிற எங்கட மக்கள் இப்படியான விசயங்களில் மட்டும் மாற்றமே இல்லாமல் இருக்கீனம்....வேள்வி,யாகம் இது எல்லாம் வேணும் தானா..சிலரோடு இது பற்றி பேசி முரண்படும் போது சொல்கிறார்கள் மனிசரையே வேட்டுறாங்கள் ஆடு,மாடு பறவா இல்லையாம்.எது என்றாலும் ஒரு உயிர் தானே.

நல்லாச் சொன்னீங்கள். பச்சை முடிஞ்சு போச்சு. எங்கட ஆட்களும் மாறுகினம் தெரியாதோ?. மேலை நாட்டில இருக்கிற மாதிரி டேற்றிங், சற்றிங், fலர்ரிங், என்டு மாற விரும்புகினம். ஆனால் மிருக பலி, சாத்திரம், யாகம், சாதி, இது போன்ற முற்போக்கான விடயங்களை விட்டுக் கொடுக்க ஏலாது தானே? <_<

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

40,000க்கும் மேல் எங்கள் மக்கள் துடிக்கத்துடிக்கக் கொல்லப்பட்டபோது நீங்கள் எல்லாம் அழவில்லையா? ஏன்? உங்கள் உறவுகள் என்பதால். மிருகங்கள் வாய்பேச முடியாது என்பதால் அதுகளுக்கு உணர்வுகள் இல்லை என்று எண்ணும் மனிதனின் மூடக்குணம் தான். மிருகங்கள் ஏன் தாவரங்கள் கூட சுற்றுச்சுழலை உணர்ந்து அதற்கேற்க தங்களுடைய வாழ்வை விஸ்தரிக்கின்றன என்பது உண்மை.

உயிருள்ள உணர்வுள்ள அனைத்தும் மனிதர்கள் போலத்தான். ஆனால் nதிக மரங்கள் வலியை உணர்வதில்லை. மிருகங்கள் மனிதனைப்போல் வலியை உணருகின்றன. கருணை காட்டுங்கள். நாங்கள் கருணை காட்டவில்லையெனின் ஆயிரம் முள்ளிவாய்க்கால் வந்தாலும் அதிசயப்பட ஒன்றும் இல்லை.

கடவுள் மனிதனை ஒரு தாவரபோஷணியாகத்தான் படைத்திருக்கின்றார். ஏனெனில் கடவுளால் படைக்கப்பட்ட அனைத்துக்கும் ஒரு காவல்காரனாகத்தான். ஆனால் மனிதம் செல்லும் பாதையோ அவனால் படைக்கப்பட்ட நோக்கத்தை விட்டு எதிர்த்திசையில் செல்வதால் டைனாசோர்கள் அழிக்கப்பட்டதுபோல் மனிதமும் அழியத்தொடங்கிவிட்டது. அல்லது படைத்தவன் மனிதத்திற்கு முடிவைக் கொண்டுவரத்தொடங்கிவிட்டான்.

உலகம் அழிவைக் குறுகிய காலத்தில் சந்திக்கும் என்பதற்கு இவைகள் சான்றாக அமைகின்றன. உலகம் என்பது ப+மி அழிந்துவிடாது.. மனிதம் பேரழிவைச்சந்திக்கும்.

மீன்களை மனிதன் பெருவாரியாகப் பிடிப்பதால் பேரழிவு என்பது நீர்பெருக்கினால் ஏற்பட வாள்ப்புக்கள் அதிகமாக இருக்கின்றது. மீன்களின் அதீத சக்தியாக கடல் பேரலைகளை உருவாகி மனிதத்தை இழுத்துச்செல்லும் சென்று கொண்டுதான் இருக்கின்றது. பேரலைகள் வரும்போது மற்றைய உயிரினங்கள் அழிவதில்லை. அழியவும் இல்லை மனிதன் மட்டுமே பெருவாரியாகக் கொல்லப்பட்டான்.

ஆட்டு வேட்டையை மக்கள் வேடிக்கை பார்க்க மக்கள் வேட்டையை ஆண்டவன் வேடிக்கை பார்க்க அரோகரா!

இதைவிட அழகாகச் சொல்ல முடியாது. நன்றி மணிவாசகன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.