Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முருகனும், சாதகமும்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=1]whattodo2.jpg[/size]

[size=4]கந்தையர், வழக்கத்தை விடக் கொஞ்சம் 'பிசியாக' இருந்தார்.[/size]

[size=4]'வதனா விலாசின்' மேலே கட்டப்பட்டிருந்த, ஒரு விதமான மாடியிலிருந்து, தற்காலிக படிகளைத் தூக்கிவைத்து, அதன் வழியே ஒரு விதமான,தனக்கேயுரித்தான லாவகத்துடன் கீழே இறங்கியவர், படிகளை எடுத்துச் மறைவான சுவரொன்றில், சாத்தியதும், மேலேயொரு, மாடி இருப்பதற்கான, எந்த வித அடையாளமும், அங்கு காணப் படவில்லை![/size]

[size=4]மள மளவென்று, காலைக்கடன்களை முடித்தவர், மீன்கடைக்குப் போன பெடியன், வந்திட்டானா என்று கடைக்கண்ணால் பார்த்து உறுதிப் படுத்திய பின்பு, முன்னாலிருந்த கடைக்குப் போய், ஒரு மல்லிகைப் பூமாலையை, வாங்கிக் கொண்டு வந்து, ஒரேயடியாகப், புத்தர், பிள்ளையார், முருகன்,லட்சுமி, அரபிக்கில் எழுதப் பட்ட படம், எல்லாத்தையும், கவர் பண்ணி, அதைப் போட்டார். பிறகு, ஊதுபத்தியைக் கொழுத்தி வைத்தவர், 'முருகா, முருகா, என்று, இரண்டு தரம் கூறியபடி, அன்றைய 'வீரகேசரிப் பேப்பரைத் திறக்கவும், தேத்தண்ணி குடிக்கிற ஆக்கள், வரத்துவங்கவும், சரியாக இருந்தது.[/size]

[size=4]டேய், தம்பி, அந்தக் கயித்தைக் கொழுத்தி விடப்பு! என்று ஆரோ சிகரட் வாங்கி விட்டு, நெருப்புக் கேட்ட போது, சத்தம் போட்டார்![/size]

[size=4]ஆ, ஐயா வாங்கோ, அப்பு வாங்கோ! என்று தன்னையறியாமலே, வழக்கம் போல, வாய் திருவாய் மலர்ந்து கொண்டிருந்தது.[/size]

[size=4]ம்ம்.... காலம் என்ன மாதிரி, ஓடிபோச்சுது, என நினைத்தவருக்குக், கொஞ்சம் பெருமையாகவும் இருந்தது.[/size]

[size=4]இருக்காதா, பின்னே?[/size]

[size=4]ஒரு 'பழையகாட்' சாரத்தோடையும், ஒரு 'மில்க் வைட்; சவர்காரக் கட்டியோடையும் தானே, ஊரை விட்டு வெளிக்கிட்டனான். இண்டைக்கு, ஒரு சாப்பாட்டுக் கடையும், நாலாம் குறுக்குத் தெருவில, ஒரு பலசரக்குக் கடையும் இருக்குதெண்டா, எல்லாம் அந்த முருகன் தந்தது தானே![/size]

[size=4]மீண்டுமொரு முறை, முருகனைப் பார்த்து,இரண்டு கன்னங்களிலும், போட்டுக் கொண்டவர், கடைக்குப் பின்னுக்குப் போய்,[/size]

[size=4]டேய், தம்பி, அந்தப் பழைய இட்டலியளை, எறிஞ்சு போடாதை! உழுந்து வடைக்கிள்ள போட நல்லாயிருக்கும், என்று மெதுவாகக் கூறியபடி, சமையல் பகுதியை நோட்டமிட்டார்![/size]

[size=4]தம்பியள், அந்த வெந்தயக் குழம்பையும், ஊத்திப் போடாதேயுங்கோ![/size]

[size=4]வெந்தயக் குழம்பு, பழுதாகாது, பிள்ளையள். இன்டைக்கு, வைக்கிற குழம்போட, சேர்த்து விடுங்கோ, என்ற படி, எனக்கேல்லோ தெரியும், இந்தக் கடை துவங்கின காலத்துக் குழம்பு, இண்டைக்கும் இருக்கென நினைத்தபடி,கடைக்கு முன்னால், ஓடி வந்தார்! [/size]

[size=4]அப்போது, ஊரிலிருந்து, மனுசி எழுதின விசயம், நினைவுக்கு வர, கடைப் பெடியனைக் கூப்பிட்டுத்,[/size]

[size=4];தம்பி, ஒருக்கா வெள்ளைவத்தைக்கு ஓடிபோய்ப். புறோக்கர் ஆறுமுகத்தை, ஒருக்காக் கூட்டிக் கொண்டு வாப்பு, என்று கலைத்து விட்டவர், தொடர்ந்து, கல்லாப் பெட்டியில், இருந்த படியே, நினைவுகளில் மூழ்கிப் போனார்![/size]

[size=4]ஆனால், வாய் மட்டும், ஐயா வாங்கோ! அம்மா வாங்கோ! என்ற படி இருந்தது! [/size]

[size=4]'இவள் வதனாக்கும், ஒரு கல்யாணத்தைப் பாத்துச் செய்து விட்டால், கடையைப் பெடியளிட்டைக் குடுத்துட்டு, இந்தியாவுக்குப் போய், என்ர 'முருகனைப்' பாத்திட்டு வந்திட்டனெண்டாக் கண்ணை மூடினாலும், பறுவாயில்லை![/size]

[size=4]மத்தியானச் சாப்பாட்டுக்கு, ஆக்கள் வரத் துவங்கீற்றினம்![/size]

[size=4]அதாரது, பாங்கரையாவா! என்ன ஊருக்குப் போயிற்று வந்தனீங்க போல![/size]

[size=4]பதிலை, எதிர்பாராத நலம் விசாரிப்புகள்![/size]

[size=4]அதே நேரம், ஆரோ நண்டு சாப்பிட்டவர், நண்டுக்காலைக் கடிக்க முடியாமல், கூப்பிட்டார்![/size]

[size=4]டேய், தம்பி, அந்த ஐயாவின்ர, காலை ஒருக்கா உடைச்சு விடப்பு![/size]

[size=4]என்றவர், புறோக்கர் ஆறுமுகம், தூரத்தில் வருவதைக் கண்டு கொண்டார்![/size]

[size=4]'முருகா, முருகா! என்று மீண்டும் முருகனைக் கூப்பிட்டார்![/size]

[size=4]நான், நினைச்ச விசயம் சரிவந்திட்டுதெண்டால், உனக்குத் தங்கத்தால 'பாதம்' செய்து போடுவன், என்று மனதுக்குள், நேர்த்தியும் வைத்து விட்டார்![/size]

[size=4]௦௦௦௦௦௦௦ ௦௦௦௦௦௦௦ ௦௦௦௦௦௦ ௦௦௦௦௦௦௦ [/size]

[size=4]வாங்க, ஆறுமுகத்தார்![/size]

[size=4]இண்டைக்கு நல்ல நாளாக் கிடக்கு! கன நாளா, நினைச்சு வைச்சிருக்கிற, ஒரு விசயத்தை, முடிச்சிடலாம் என நினைக்கிறன், எண்டவர் முருகனை, மீண்டும் பார்க்க, முருகனும் சிரித்த மாதிரி இருந்தது![/size]

[size=4]புறோக்கருக்கு, முதலே விசயம் விளங்கி விட்டது.[/size]

[size=4]ஆனால், எதற்கும், கந்தையற்றை வாயால வரட்டுமே, என்று பொறுமை காத்தார். அதே நேரம், பக்கத்தில இருந்த, கண்ணாடியில பார்த்து, வெயிலில் கரைந்து போன சந்தனப் பொட்டைச் சரிப்படுத்தினார். [/size]

[size=4]நான், நேர விசயத்துக்கு வாறன், ஆறுமுகம்.[/size]

[size=4]என்ர ஒரே பெட்டை, வதனிக்கு, நீ ஒரு இடம் பாக்க வேணும்![/size]

[size=4]சரி, என்ன மாதிரி எண்டு சொல்லுங்க. நான் என்ர 'டேட்டா பேசில' பாத்துச் சொல்லுறன். [/size]

[size=4]அதெல்லாம், வேணாம் ஆறுமுகம். உனக்குப் பிரச்சனையில்லாம, நானே பாத்து வைச்சிட்டன். இவள், விசாலாட்சி இருக்கிறாளெல்லோ? அவளின்ர பெடியன், நல்ல பெடியனாம். 'ஹட்டன் நேசனல் பாங்கில' உதவி மனேச்சராம்.[/size]

[size=4]அதை ஒருக்காப் பாத்து முடிச்சு விடன்![/size]

[size=4]ஆறுமுகத்தார், ஒரு நிமிடம் பேசவில்லை![/size]

[size=4]இல்லப் பெடியனுக்குப் 'பத்தில வியாழன்' வாற நேரம் என்று, இழுத்தார்.[/size]

[size=4]அதுக்கென்னடாப்பா, படிச்ச பெடியன், வெளிநாடு, கீடு போகப் போறான்போல! நாடு கிடக்கிற நிலையில, அதுகும் நல்லதுக்கு தான், என்றவர், மீண்டும், முருகனைக் கூப்பிட்டார்.[/size]

[size=4]இல்லை, அதுக்கில்லை... புறோக்கர் இழுத்தார்.[/size]

[size=4]இஞ்சை பார், நான் நினைச்சுட்டன்! இதை முடிச்சுத் தந்தா, உனக்குப் பத்தாயிரம்![/size]

[size=4]சரி, சாதகத்தைத் தாங்கோ! என்று இரண்டு கையையும், நீட்டி வாங்கிக் கொண்டார், ஆறுமுகத்தார்![/size]

[size=4]இந்த முறை, முருகா, என்றது, கந்தையரில்லை, ஆறுமுகத்தார்![/size]

[size=4]அவரது, மனதில் ஒரு பெரிய திட்டம் உருவாகி விட்டது![/size]

[size=4]அவருக்கும், உள்ளூரக் கந்தையரில ஒரு பொறாமையும் உண்டு![/size]

[size=4]ஊரில, தாங்கள் வசதியாக இருக்கேக்கை, ஒன்றுமில்லாமல் கிடந்ததுகள் எல்லாம், இண்டைக்குக் கடையும், விலாசமும்![/size]

[size=4]தனக்குள், கறுவிக்கொண்டவர், நேர தனது, சாத்திரி நண்பனிட்டைப் போய், எனக்கு ஒரு சாதகம், எழுத வேணும்![/size]

[size=4]சாத்திரி, என்ன பகிடியா விடுகிற ஆறுமுகம்? எனக் கேட்க, ஆயிரம் ரூபாய்களைத் தூக்கி மேசையில் போட்டார், ஆறுமுகம்![/size]

[size=4]சரி... நல்லதுக்குத் தானே, என்ற படி, பணத்தை எடுத்துக் கொண்டார் சாத்திரியார்![/size]

[size=4]'அடுப்பில, அவிக்கேக்க, கவனமா அவிக்க வேணும், என்ற படி, 'முருகா' என்றவர், அன்றைக்குப் பின்னேரமே யாழ்ப்பாணத்துக்குப், பஸ் பிடித்தார்.[/size]

[size=4]௦௦௦௦௦௦ ௦௦௦௦௦௦௦ ௦௦௦௦௦௦ ௦௦௦௦௦௦௦ ௦௦௦௦௦௦ [/size]

[size=4]விடியக் காலமையே, யாழ்ப்பாணம் போனவர், நேரே விசாலாட்சி, வீட்டை தான் போனார்.[/size]

[size=4]தனது, மூத்த மகளின்ர, பிள்ளையை, முழங்காலில் வைத்து, நல்லெண்ணை தடவிக் கொண்டிருந்த விசாலாட்சி, பிள்ளையைத் தடுக்கில குப்புறப் போட்டுவிட்டு, எழுந்தவள்,[/size]

[size=4]நான் நினைச்சனான், காகம் கத்தேக்கையே, நீங்க தான் வருவீங்க எண்டு சொல்லிய படியே, அண்ணை என்ன மாதிரி? என்று கேட்டாள்![/size]

[size=4]'எல்லாம் பழம் தான். என்று சிரித்த படியே சொன்ன ஆறுமுகத்தார், தேத்தண்ணியைப் போடன், என்ற படி திண்ணையில் அமர்ந்தார்![/size]

[size=4]அப்ப அந்தச் செவ்வாய்ப் பிரச்சனை?[/size]

[size=4]அதெல்லாம் தொண்ணூறு வீதம் பொருத்தம் என்றவர், இனி இதைப் பற்றி மூச்சு விடக் கூடாது, என்று வாயில் விரலை, வைத்துக் காட்டினர்![/size]

[size=4]மீண்டும், முருகா! என்றொரு குரல்![/size]

[size=4]இந்த முறை, விசாலாட்சி![/size]

[size=4] [/size]

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் புங்கை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4]வாழ்த்துக்கள்[/size]

ஒரு 'பழையகாட்' சாரத்தோடையும், ஒரு 'மில்க் வைட்; சவர்காரக் கட்டியோடையும் தானே, ஊரை விட்டு வெளிக்கிட்டனான். இண்டைக்கு, ஒரு சாப்பாட்டுக் கடையும், நாலாம் குறுக்குத் தெருவில, ஒரு பலசரக்குக் கடையும் இருக்குதெண்டா, எல்லாம் அந்த முருகன் தந்தது தானே!

இதை திருப்பி போட்டால் ?????????????

எங்கள் தோல் இன்னுமொருமுறை உங்கள் மூலம் உரிபட்டிருக்கின்றது . எத்தனை பேரால் உரிபட்டாலும் எங்கள் தோல் நிறம் மாறியதா ? என்னைப்பொறுத்தவரையில் எருமைமாட்டில் மழைபெஞ்சமாதிரி தான் நாங்கள் கதை எழுதிறதும் . தொடர்ந்து உரிப்போம் புங்கை .

  • கருத்துக்கள உறவுகள்

நாலு பொய்யைச் சொல்லி ஒரு குமரைக் கரைசேர்ப்பதில் தப்பில்லை

ஆனால் இங்கு அப்பா ,அம்மா, தரகர் எல்லோருமே....

"முருகா"

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]-----[/size]

[size=4]பதிலை, எதிர்பாராத நலம் விசாரிப்புகள்![/size]

[size=4]அதே நேரம், ஆரோ நண்டு சாப்பிட்டவர், நண்டுக்காலைக் கடிக்க முடியாமல், கூப்பிட்டார்![/size]

[size=4]டேய், தம்பி, அந்த ஐயாவின்ர, காலை ஒருக்கா உடைச்சு விடப்பு![/size]

[size=4]௦௦௦௦௦௦௦ ௦௦௦௦௦௦௦ ௦௦௦௦௦௦ ௦௦௦௦௦௦௦ [/size]

[size=4]------[/size]

[size=4]அப்ப அந்தச் செவ்வாய்ப் பிரச்சனை?[/size]

[size=4]அதெல்லாம் தொண்ணூறு வீதம் பொருத்தம் என்றவர், இனி இதைப் பற்றி மூச்சு விடக் கூடாது, என்று வாயில் விரலை, வைத்துக் காட்டினர்![/size]

[size=4]மீண்டும், முருகா! என்றொரு குரல்![/size]

[size=4]இந்த முறை, விசாலாட்சி![/size]

அருமை புங்கையூரான் :rolleyes::D:lol: .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்திய உறவுகளான, நந்தனுக்கும், லியோவுக்கும் மனம் திறந்த நன்றிகள்!!! :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு 'பழையகாட்' சாரத்தோடையும், ஒரு 'மில்க் வைட்; சவர்காரக் கட்டியோடையும் தானே, ஊரை விட்டு வெளிக்கிட்டனான். இண்டைக்கு, ஒரு சாப்பாட்டுக் கடையும், நாலாம் குறுக்குத் தெருவில, ஒரு பலசரக்குக் கடையும் இருக்குதெண்டா, எல்லாம் அந்த முருகன் தந்தது தானே!

இதை திருப்பி போட்டால் ?????????????

எங்கள் தோல் இன்னுமொருமுறை உங்கள் மூலம் உரிபட்டிருக்கின்றது . எத்தனை பேரால் உரிபட்டாலும் எங்கள் தோல் நிறம் மாறியதா ? என்னைப்பொறுத்தவரையில் எருமைமாட்டில் மழைபெஞ்சமாதிரி தான் நாங்கள் கதை எழுதிறதும் . தொடர்ந்து உரிப்போம் புங்கை .

அன்று கொழும்பில் நடந்தது, இன்று லா சப்பலிலும், சவுத் ஹறோவிலும் நடக்குது!

சின்ன வித்தியாசம்!

அன்றைக்கு உள்நாடு, இன்றைக்குச் சர்வதேசம்!

யார் சொல்கிறார்கள், தமிழன் வளரவில்லையென்று? :D

கருத்துக்கு நன்றிகள், கோமகன்!

  • கருத்துக்கள உறவுகள்

இது நம்ம சொந்தக்கதை சோகக்கதை போலக்கிடக்கு

எமது ஊரில் பிறந்தோர் பலரது கடின உழைப்பால் உயர்ந்து இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதைர பார்த்த அனுபவத்தில் வந்த கதைபோல் தெரிகிறது

இதில் குற்றம் சொல்ல ஏதுமில்லை.

அவரவர் அந்தந்த இடத்துக்கு வரும்போது தன்னைப்பற்றியும் தன் குடும்த்தை பற்றி மட்டுமே நினைக்கும் ஒரு நிலையை இது உணர்த்துகின்றது.

காலம் காலமாக நடப்பது தான்

தற்போதும் இது தொடர்கிறது.

உண்மையைச்சொன்னால் ஒரு தகப்பனாக தற்போதும் நானும் இப்படியொரு மனநிலையிலேயே உள்ளேன். நல்ல இடம் கிடைத்தால் தூக்கவேண்டியது தான் என்ற அதே பார்வைதான்.

என்ன சிக்கல் என்றால் என் பிள்ளை அதற்கு தலையாட்டாது என்ற நிலை. முன்பு அது இல்லையே.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]ஊர் நினைவுகளை மீட்டும் கதை . பகிர்வுக்கு நன்றி .............பாராட்டுக்கள். [/size]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கதை நல்லா இருக்கு புங்கை அண்ணா. :)

பாகம் 2 எழுதலாம் போல இருக்கே... :rolleyes::icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாலு பொய்யைச் சொல்லி ஒரு குமரைக் கரைசேர்ப்பதில் தப்பில்லை

ஆனால் இங்கு அப்பா ,அம்மா, தரகர் எல்லோருமே....

"முருகா"

கருத்துக்கு நன்றிகள், வாத்தியார்!

'முருகா' என்ற உங்களின் ஒரே வார்த்தைக்குள், கதையின் பிரணவமே, அடங்கிப் போய் விட்டது! :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அருமை புங்கையூரான் :rolleyes::D:lol: .

கருத்துக்கு நன்றிகள், தமிழ் சிறி!

ஒரேயொரு, பொருத்தம் மட்டும் பொருத்த ஏலாமல் போட்டுதாம்!

அது தான், நட்சத்திர விருட்சம்!

ஆனால், ஆண், பாலூட்டாத படியால், பால் மரமாக, இருக்கத் தேவையில்லையாம்! :D

  • கருத்துக்கள உறவுகள்

இங்கேதான் இப்படீன்னா அங்கேயும் சாதகத்தை சனங்கள் கட்டியழுகுதுகளா...? முருகா...முருகா...

கடைசியில் கல்யாணம் நடந்ததா...? முருகா...முருகா...

'கதை' நல்லாயிருக்கு, முருகா..முருகா...! இல்ல, இல்ல... புங்கை...புங்கை!! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையூரான் உங்கள் கதைகள் எல்லாம் ஊர் வாழ்க்கையினை பிரதிபலிக்கின்றது...உங்கள் எழுத்து நடை யதார்த்தமானது...பாராட்டுக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

மிக அருமை புங்கை அண்ணா..கதை எழுதியவிதம் எனக்கு மிகப் பிடித்திருக்கிறது...ரசித்து வாசித்தேன்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புங்கையர்! நல்ல விபரமாய்த்தான் எழுதுறியள்.உங்களுக்கு ஒரு அரோகரா :D

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கதையை படிக்கும்போது கரம்பொன் சீனி சண்முகத்தார் நினைவில் வந்தார் அவர் அடிக்கடி சொல்லுற வசனம் நான் ஒரு சவுக்கார கட்டியும் முப்பது ருபாய் காசோடையும்தான் கொழும்பிற்கு வந்தனான் என்பார். பின்னாளில் பெரும் பணக்காரர் பிரேமதாசாவுடன் ஏற்பட்ட உரசலால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக் கூறிய, உறவுகளுக்கு, மனம் கனிந்த நன்றிகள்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது நம்ம சொந்தக்கதை சோகக்கதை போலக்கிடக்கு

எமது ஊரில் பிறந்தோர் பலரது கடின உழைப்பால் உயர்ந்து இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதைர பார்த்த அனுபவத்தில் வந்த கதைபோல் தெரிகிறது

இதில் குற்றம் சொல்ல ஏதுமில்லை.

அவரவர் அந்தந்த இடத்துக்கு வரும்போது தன்னைப்பற்றியும் தன் குடும்த்தை பற்றி மட்டுமே நினைக்கும் ஒரு நிலையை இது உணர்த்துகின்றது.

காலம் காலமாக நடப்பது தான்

தற்போதும் இது தொடர்கிறது.

உண்மையைச்சொன்னால் ஒரு தகப்பனாக தற்போதும் நானும் இப்படியொரு மனநிலையிலேயே உள்ளேன். நல்ல இடம் கிடைத்தால் தூக்கவேண்டியது தான் என்ற அதே பார்வைதான்.

என்ன சிக்கல் என்றால் என் பிள்ளை அதற்கு தலையாட்டாது என்ற நிலை. முன்பு அது இல்லையே.

உண்மையைச் சொன்னால், ஒரே இரத்தம்!

ஒரே விதமான சிந்தனைகள்!

ஆனால், இந்தச் சாதகம் பார்க்கிற விசயத்தில மட்டும், ஒரு பெரிய 'சோகம்' என்னுள் புதைந்திருக்கின்றது!

சில விடயங்கள், நம்மோடு சேர்ந்து, எமது கல்லறைகளில் தூங்க வேண்டியவை!

அவை விழித்துக் கொண்டால், பலரது, நேர்கோட்டில் செல்லும் வாழ்க்கைகள், திசை மாறக் கூடும்!

அது வேண்டாமே! :o

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா இப்பிடி சொல்லி எங்கட யாழ் கள சாத்ஸ் அண்ணாவோட புழைப்புல மண்ணை அள்ளி போடுறிஹா....

Edited by SUNDHAL

  • கருத்துக்கள உறவுகள்

"முருகா"....இந்த முறை கதை வாசித்த புத்தன்:D ......நன்றிகள் புங்கையூரன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"முருகா"....இந்த முறை கதை வாசித்த புத்தன் :D ......நன்றிகள் புங்கையூரன்

வைகாசிக் குன்றிலமர்ந்த குமரா!

என்று அழகாகச் சொல்ல வேணும், புத்ஸ்! :D

கருத்துக்கு நன்றிகள்!!!

வழக்கமாக கோமகன் தான் "முருகா" என்று கொண்டு வருவார். இந்த முறை புங்கையூரான் வந்திருக்கிறீர்கள்.

இன்று தான் படித்தேன். நன்றாக இருக்கிறது.

என்ன தான் படித்து கொஞ்சம் அறிவைச் சேர்த்தாலும், வளர்ப்பு, வாழ்க்கை முறைகள் என்று வரும் போது சாதகத்தில் உண்மையில் ஏதும் இருக்கிறது தான் போல மாயை! என்ன செய்வது?

இப்போது லண்டனில் ஒரு புது சாமியார் - அவரும் "முருகா" என்ற படி தானாம். யாராவது அறிந்தீர்களா?

வழக்கமாக கோமகன் தான் "முருகா" என்று கொண்டு வருவார். இந்த முறை புங்கையூரான் வந்திருக்கிறீர்கள்.

இன்று தான் படித்தேன். நன்றாக இருக்கிறது.

என்ன தான் படித்து கொஞ்சம் அறிவைச் சேர்த்தாலும், வளர்ப்பு, வாழ்க்கை முறைகள் என்று வரும் போது சாதகத்தில் உண்மையில் ஏதும் இருக்கிறது தான் போல மாயை! என்ன செய்வது?

இப்போது லண்டனில் ஒரு புது சாமியார் - அவரும் "முருகா" என்ற படி தானாம். யாராவது அறிந்தீர்களா?

ஐயோ...... சத்தியமாய் அது நான் இல்லை :lol: :lol: :D :D .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.