Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

50 வாலிபர்களை மணந்து சாதனை படைத்த கேரள அழகி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]

sahana.jpg[/size]

[size=4]காதலித்து, திருமண ஆசைகாட்டி அப்பாவி இளைஞர்களிடம் பணம் பறித்த கேரள அழகி மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளது.[/size]

[size=4]அந்த மயக்கும் சாகச அழகி இதுவரை 50 வாலிபர்களை மணந்து சாதனை படைத்துள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.[/size]

[size=4]கேரள அழகியிடம் ஏமாந்த மேலும் 2 இளைஞர்கள் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வந்து கண்ணீர்விட்டு அழுதபடி புகார் கொடுத்தார்கள்.

புகார் கொடுத்த இளைஞர்களில் ஒருவரான மணிகண்டன் அழுதபடியே, ’’சென்னை முகலிவாக்கம் நான் பிறந்து வளர்ந்த ஊர். டிப்ள மோ என்ஜினீயரிங் முடித்துவிட்டு, மாருதி கார் சர்வீஸ் நிறுவனத் தில் வேலை பார்த்து வருகி றேன். சகானாவை கடந்த வாரம் வரை எனது மனைவி என்றே நினைத்திருந்தேன். கடந்த வாரம்தான் அவள் ஒரு மோசடி ராணி என்ற அந்த அதிர்ச்சி தகவல் எனக்கு கிடைத்தது.[/size]

[size=4]சகானா செல்போன் மூலம்தான் எனக்கு முதலில் அறிமுகம் ஆனாள். எடுத்த எடுப்பிலேயே உங்கள் குரல் பிடித்திருக்கிறது. அதனால் உங்களையும் பிடித்திருக்கிறது என்றுதான் சகானா ஆரம்பித்தாள். ஆனால் நான் அவளை நேரில் பார்த்தபிறகுதான், அவளது காதலை ஏற்றேன். வக்கீலுக்கு படித்துள்ளதாகவும், சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் தொழில் செய்வதாகவும் சொன்னாள்.[/size]

[size=4]அடுத்து ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதப்போவதாக சொன்னாள். முதலில் பெற்றோருக்கு தெரியாமல் அவளை ரகசிய திருமணம் செய்து கொண்டேன். அதன்பிறகு எனது பெற்றோர் ஆசியுடன் முறையாக அவளை, தாலி கட்டி மணந்தேன். அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, காலில் மெட்டி அணிவித்து, இப்படி அத்தனை திருமண சடங்குகளையும் செய்து அவளை கைப்பிடித்தேன்.[/size]

[size=4]தனது சொந்த ஊர் கேரளாவில் உள்ளது என்றும் எனது பெற்றோர் இறந்து விட்டதால் தான் ஒரு அனாதை என்றும் அவள் சொன்னாள். இதை நம்பினேன்.

2 மாதம் அவள் என்னோடு நல்ல மனைவியாக வாழ்ந்தாள். அதன்பிறகு ஐ.ஏ.எஸ். தேர்வு எழுத வேண்டி இருப்பதால், படிக்க தனிமை வேண்டும் என்று சொல்லி, சைதாப்பேட்டையில் உள்ள பெண்கள் விடுதி ஒன்றில் தங்கி இருந்தாள். அதன்பிறகு அவளை விடுதிக்குச் சென்று பார்த்து வந்தேன்.

கடந்த ஜனவரி மாதத்திலிருந்து விடுதியை காலி செய்துவிட்டு போய்விட்டாள். அதன்பிறகு போனில்தான் பேசி வந்தாள். ஐ.ஏ.எஸ். தேர்வு எழுத போய்விட்டதாக சொன்னாள். அவளால் நான் இழந்தது பல லட்சம் இருக்கும்’’ என்று கூறினார்.[/size]

[size=4]இன்னொரு வாலிபர் பிரசன்னாவும், கேரள அழகியிடம் மோசம் போனது பற்றி கண்ணீருடன் விளக்கினார். நானும் டிப்ளமோ என்ஜினீயர்தான். புளியந்தோப்பில் நான் வசிக்கிறேன். கால்பந்து வீரராகவும் உள்ளேன்.[/size]

[size=4]நான் சகானாவை புரசைவாக்கத்தில் ஒரு கடையில் சந்தித்தேன். முதலில் காதலை சொன்னாள். அடுத்து ரகசிய திருமணத்தில் விழவைத்தாள். கடந்த மார்ச் மாதம் 5-ந் தேதி காஞ்சீபுரம் அருகில் உள்ள ஊத்துக்காடு எல்லை அம்மன் கோவிலில் பெற்றோர் சம்மதத்துடன் அவளை மணந்து கொண்டேன். 2 மாதம் மட்டும் என்னோடு மனைவியாக வாழ்ந்தாள். எனக்கு நல்ல மனைவியாக இன்பத்தையும் வழங்கி, சமைத்து கூட போட்டாள்.[/size]

[size=4]அதன்பிறகு வக்கீலுக்கு படிக்கிறேன் என்று சொல்லி என்னைவிட்டு பிரிந்து சென்றுவிட்டாள். அதன்பிறகு போனில்தான் பேசுவாள்.

எனக்கு தெரியாமல் எங்கள் வீட்டுக்கு, பக்கத்து தெருவில் வசிக்கும் எனது உறவினர் சுரேசையும் இதுபோல் ஏமாற்றி மணந்து இருக்கிறாள். ஒரு நாள் எனது தாயாருடன் சகானா, புளியந்தோப்பு மார்க்கெட்டுக்கு சென்றாள். அங்கு சுரேசின் தாயார் சகானாவை பார்த்து, எனது தாயாரிடம், அவள் எனது மருமகள் என்று கூறி இருக்கிறாள். எனது தாயாரோ, நீங்கள் தெரியாமல் சொல்கிறீர்கள், அவள் எனது மருமகள் என்று கூறி இருக்கிறார். உடனே சகானா, சுரேசின் தாயாரை பார்த்து, மிரட்டி இருக்கிறாள். நான் பிரசன்னாவின் மனைவிதான் என்று அடித்து கூறிவிட்டு வந்துவிட்டாள்.[/size]

[size=4]இதனால் அதிர்ச்சி அடைந்த சுரேஷ் புளியந்தோப்பு போலீசில் புகார் கொடுத்தார். போலீஸ் நிலையத்திற்கும் வந்து, பிரசன்னாதான் எனது கணவர் என்று சகானா சத்தியம் செய்தாள். அவளை மாயக்காரி என்று தான் சொல்ல வேண்டும். நானும் அவளால் ரூ.5 லட்சத்தை இழந்து நிற்கிறேன் என்று கூறினார்.[/size]

[size=4]மோசக்காரி சகானா சட்டையை கழற்றுவதுபோல, மாப்பிள்ளைகளை கழற்றி இருக்கிறாள். இதுவரை அவளது மாப்பிள்ளை கணக்கை பார்த்தால், 50-ஐ தொடும் என்று சொல்லுகிறார்கள். கமிஷனர் அலுவலகத்தில் மட்டும் அல்லாது வேப்பேரி, அடையாறு, திருவொற்றியூர், புளியந்தோப்பு போன்ற போலீஸ் நிலையங்களிலும் அவளது மாப்பிள்ளைகளின் புகார்கள் உள்ளன.[/size]

[size=4]மத்திய குற்றப்பிரிவு போலீசிலும் அவளிடம் ஏமாந்த புருஷன்கள் 15 பேர் புகார் கொடுத்துள்ளனர். சம்சுதீன், திருவள்ளூர் ராஜேஷ், அடையாறு சீனிவாசன், கோவை சரவணன், திருச்சி ராகுல், அம்பத்தூர் சந்திரபாபு என்று, சகானாவின் காதல் கணவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.[/size]

[size=4]கேரளாவிலும் அவளிடம் ஏமாந்த கணவன்கள் உள்ளனர். இப்போது இந்த புகார்கள் மீது சென்னை அடையாறு அனைத்து மகளிர் போலீசார்தான் விசாரித்து வருகிறார்கள். மாயக்காரி சகானாவை போலீசார் தேடி வருகிறார்கள். [/size]

http://www.nakkheera...ws.aspx?N=81261

=======================================

பொண்ணுங்க எங்கையோ போயிட்டாங்க.. இன்னு ஆணாதிக்கம் என்று பேசிக்கிட்டு இருக்கிற பழமைவாதி ஆண்களும் இருக்கிற இவ்வுலகில்.. பொண்ணுங்க இப்படியும் ஏமாற்றத்தான் செய்வாங்க..! :D:lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அவரிடம் ஏமாந்த எல்லாரும்... டிப்ளோமா எஞ்சினியரும், வக்கீலுமாக இருக்கிறார்கள்.

ஜொள்ளு விட்டுக் கொண்டு திரியிற ஆண்களுக்கு, இது நல்ல படிப்பினை. :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

50 வாலிபர்களை மணந்து சாதனை படைத்த கேரள அழகி.

வாழ்த்துகள் வாழ்த்துகள்

  • கருத்துக்கள உறவுகள்

அவவைப் பார்த்தால் பெரிய அழகி மாதிரித் தெரியவில்லை ஆனால் 50 பேர் ஏமாந்திருக்கினம் :lol: ஆண் இனத்திற்கே அவமானம் :D:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

அவவைப் பார்த்தால் பெரிய அழகி மாதிரித் தெரியவில்லை ஆனால் 50 பேர் ஏமாந்திருக்கினம் :lol: ஆண் இனத்திற்கே அவமானம் :D:rolleyes:

எல்லாம் காய்ஞ்ச மாடுகளா இருக்கும், ரதி! :huh:

  • கருத்துக்கள உறவுகள்

இன்று காலையில் பதிந்த இப்பதிவை இதுவரை பார்வையிட்டோர், [size=5]3,845![/size] smiley6917.gif

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவரிடம் ஏமாந்த எல்லாரும்... டிப்ளோமா எஞ்சினியரும், வக்கீலுமாக இருக்கிறார்கள்.

ஜொள்ளு விட்டுக் கொண்டு திரியிற ஆண்களுக்கு, இது நல்ல படிப்பினை. :D:lol:

நான் நினைச்சதை எழுதிவிட்டீர்கள் அண்ணா.

50பேர் ஏமாறும் அளவுக்கு ஆண்கள் பலவீனமாக இருக்கிறார்கள் எனும் போது இவற்களை என்ன செய்ய? ஆண்களின் பலவீனத்தை அவள் சாதகமாக்கியிருக்கிறாள்.

தப்பு இருதரப்பிலும் தான். :wub::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இன்று காலையில் பதிந்த இப்பதிவை இதுவரை பார்வையிட்டோர், [size=5]3,845![/size] smiley6917.gif

[size=4]

இதுவரை பார்வையிட்டோர் 4,788

[/size]

[size=4]50 வாலிபர்களை மணந்து சாதனை படைத்த கேரள அழகி பற்றிய பதிவாயிற்றே![/size]

[size=4] [/size][size=4]ம்..ம் பார்வையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது போலும் :lol:[/size]

  • கருத்துக்கள உறவுகள்

அவரிடம் ஏமாந்த எல்லாரும்... டிப்ளோமா எஞ்சினியரும், வக்கீலுமாக இருக்கிறார்கள்.

ஜொள்ளு விட்டுக் கொண்டு திரியிற ஆண்களுக்கு, இது நல்ல படிப்பினை. :D:lol:

நமக்கெல்லாம் ஒரு படிப்பினை எண்டு சொல்லுங்கோ.. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

Excuse me isai anaa your qualification plz? :D

  • கருத்துக்கள உறவுகள்

Excuse me isai anaa your qualification plz? :D

51 :lol::D :D

என்ர அம்மோய் .திடமான பெண்குட்டி :lol:

எத்தனையோ ஆயிரம் கேரளத்துக் கிளிகள் இருக்கக்க, படிச்ச ஆக்கள் எல்லாம் இவவுக்குப் பின்னால போக என்ன காரணம்? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

அவங்க படிச்சது தான் காரணம்

:D

அவங்க படிச்சது தான் காரணம்

:D

அப்ப அவங்கள விட அதிகம் படிச்ச நம்ம நெடுக்கரும் அவவுக்குப் பின்னால போவாரா?

:rolleyes:

:D

  • கருத்துக்கள உறவுகள்

வேணும்னா அவா தான் பின்னால போவா ஏனா டிப்ளோமா டு டிகிரி படிச்சவங்க மட்டும் அவாக்கு பின்னால டாக்டர் படிப்பு படிச்சவங்கக்கு மட்டும் அவா பின்னால போவா :D

  • கருத்துக்கள உறவுகள்

நமக்கெல்லாம் ஒரு படிப்பினை எண்டு சொல்லுங்கோ.. :lol:

நீங்களும் ஜொள்ளு விடுபவரா! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

51 :lol::D :D

இவளவு தான் நம்ம இசை அண்ணாவோட tastea ? நான் என்னமோ நினைச்சனே

:D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு பெட்டைக்கு மட்டும் 50 இளிச்சவாயள்? கண்டவுடனை கவுண்டு விளுறது...அதுக்கை அப்பாவிகள்,அப்பிராணிகள் எண்டு கதை வேறை..பார்த்தால் எல்லாம் படிச்ச கிறவுட்டாய்க்கிடக்குsign0186.gifconfused0006.gif

  • கருத்துக்கள உறவுகள்

தாத்தா இந்த விசயத்திலை படிச்சவன் படிக்காதவன் எல்லாம் ஒண்டு தான்

  • கருத்துக்கள உறவுகள்

தனி ஒரு ஆளாக இருந்து 50 ஆண்களுக்கு வாழ்வு கொடுத்த

இந்தப் பெண்ணுக்கு ரொம்பப் பெரிய மனசு.

  • கருத்துக்கள உறவுகள்

தனி ஒரு ஆளாக இருந்து 50 ஆண்களுக்கு வாழ்வு கொடுத்த

இந்தப் பெண்ணுக்கு ரொம்பப் பெரிய மனசு.

கடலில் எத்தனை வள்ளம் போயிற்று என்பது முக்கியமில்லை. எல்லாம் நன்றாக கரை சேர்ந்தனவா என்பதே கணக்கு. அந்தவகையில் பாராட்டக்குரியவர்தான். வாத்தியார் என்றால் வாத்தியார்தான். எத்தனை பேருக்கு வரும் இந்த பாராட்டும் தன்மை. :lol::D :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு விபச்சாரிக்கு 50 பெரிய இலக்கமா என்ன...!

எதுக்கும் 50 பேருக்கும் எயிட்ஸ் ரெஸ்ட் செய்வது அவசியம்..! :lol:

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

0.jpg

பெங்களூரில் சிக்கிய 'கல்யாண ராணி' சஹானாஸிடம் சென்னையில் விடியவிடிய விசாரணை!

சென்னை: திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தைகளைக் கூறி 50க்கும் மேற்பட்டோரை திருமணம் செய்து ஏமாற்றியதாக கூறப்படும் சஹானாஸ் பெங்களூர் புறநகரில் தனிப்படை போலீசிடம் சிக்கியுள்ளார்.

பிடிபட்ட சஹானாஸை இரவோடு இரவாக சென்னை கொண்டுவந்த தனிப்படை போலீசார் அவரிடம் விடியவிடிய விசாரணை நடத்தியுள்ளனர்.

காதலிப்பதாகவும் தமக்கு பல கோடி சொத்து இருப்பதாகவும் தாம் ஒரு அனாதை என்றும் கூறி இளைஞர்கள் பலரையும் வசியப்படுத்தி ஒருவருக்கு ஒருவரைத் தெரியாமல் திருமணம் செய்து கொண்டு அந்த இளைஞர்களின் பணம், நகைகளை பறித்துக் கொண்டு ஏமாற்றியிருக்கிறார் சஹானாஸ் என்பது புகார்.

இது தொடர்பாக சென்னை நகரில் பல காவல்நிலையங்களில் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சஹானாஸின் சொந்த மாநிலமான கேரளத்திலும் இதேபோல் மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது. ஆனால் தாம் வேலை பார்த்த நிறுவன உரிமையாளரின் சதியால்தான் தம் மீது பொய்ப் புகார்கள் கூறப்படுகின்றன என்று சஹானாஸ் கூறியிருந்தார்.

இந்நிலையில் பெங்களூர் புறநகரில் சஹானாஸ் தங்கியிருப்பதை உறுதிப்படுத்திக் கொண்ட தனிப்படை போலீசார் அவரை நேற்று இரவு சுற்றி வளைத்து சென்னைக்கு கொண்டுவந்தனர். அவரிடம் புகார்கள் குறித்து விடிய விடிய விசாரணை நடைபெற்றிருக்கிறது. இன்றைய விசாரணையின் முடிவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் சஹானாஸை போலீஸ கஸ்டடியில் எடுத்து விசாரிக்கவும் சென்னை போலீசார் முடிவு செய்துள்ளனர்.

நன்றி தற்ஸ்தமிழ்.

நல்ல காலம்.. கைது செய்து விட்டார்கள்.

இல்லாவிட்டால்... நாங்களும், ஏமாந்திருப்பம். :lol::icon_idea:

ஊடகங்கள் விற்பனைக்காக மிகைப்படுத்தி எழுதும். படிப்பவர்களாவது சிந்திக்க வேண்டாமா? ஒரு பெண் எப்படி ஐம்பது திருமணங்களை செய்ய முடியும்.

50 கணவர்களுமே தமது மனைவி எங்கே போகிறாள், என்ன செய்கிறாள் என்று பார்க்கவில்லையா? ஒருவரை திருமணம் செய்வது என்றால், அவரைக் காதலித்து, திருமணம் செய்து, பின்பு அவரோடு வாழந்து இப்படிக் கணக்குப் பார்த்தாலே, அவருக்கு 50 பேரை திருமணம் செய்வதற்கு ஆகக் குறைந்தது 25 ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும்.

அவர் வேண்டும் என்றால், ஓரே நேரத்தில் பல ஆண்களோடு தொடர்பில் இருந்திருக்கலாம். அந்த ஆண்களோடு உடல்ரீதியான உறவும் இருந்திருக்கலாம். அவர்களின் எண்ணிக்கை ஐம்பதாக இருக்கலாம். மற்றையபடி 50 பேரை திருமணம் செய்வது என்பது எல்லாம் சாத்தியம் அற்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.