Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலன் பெயர்ந்தவனின் புலம்பல் (3) - ஊரா தேசமா?

Featured Replies

எல்லாருக்கும் வணக்கம்! நீங்கள் எல்லாம் எப்படி இருக்கிறியள்?

என்னடா இவனைக் கன காலமா இந்தப் பக்கம் காணேல்லையே! ஊரப் பக்கம் சோக்காட்டப் போய் கோத்தபாயா கூட்டத்திட்டை மாட்டுப் பாட்டுக் கீட்டுப் பட்டுப் போனானோ எண்டு நினைச்சிருப்பியள்....

அப்படி எல்லாம் இல்லைப் பாருங்கோ! நாப்பது வயதைத் தாண்டினால் நாய்ப்பிழைப்பெண்டு சொல்லுறவை. அது உண்மை தான் போலை கிடக்கு... அங்கையும் இங்கையும் ஓடுப்பட்டுத் திரியிறதிலை இதிலை குந்தியிருந்து உங்களோடை புலம்பிறதுக்கு நேரமில்லாமல் கிடக்குது...

சரி சரி உந்தப் பழைய பஞ்சாங்கங்களை விட்டுப் போட்டு நேரை விசயத்துக்கு வாறன்...

இப்ப இந்த சமர் ஹொலிடேயோடை எங்கடை ஆக்கள் சில பேர் வெளிக்கிட்டு ஊர்ப்பக்கம் போகினம்...அப்படிப் போயபாட்டு வாற ஆக்களோடை பேச்சுக் குடுத்துப் பாத்தன்.

"யாழ்ப்பாணம் அந்த மாதிரி இருக்குது. மட்டக்களப்பைப் பாத்தால் சொர்க்கம் போலை கிடக்குது...சனம் மோட்டச் சைக்கிள் என்ன..புதுப் புது செல் போனுகள் என்ன ... ஐ பாட்டுகள் என்ன அவை போடுற உடுப்புகள் என்ன நகை நட்டென்ன... வெளிநாடு தோத்துப் போயிடும் எண்டு சில பேர் புழுகித் தள்ளுகினம்.

இன்னும் சில ஆக்கள்

"ஊரிலை இருக்கிற ஒரு கோயிலும் விடாமல் போய் வந்தன். திறமாயிருக்குது. புதுசு புதுசா கோபுரங்கள் எல்லாம் எழும்பி அடையாளம் காண முடியாமல் இருக்குது. யாழ்ப்பாணத்திலையும் மட்டக்களப்பிலையும் இருக்கிற பள்ளிக்கூடங்களிலை எல்லாம் புதுசு புதுசா மாடிக கட்டிடங்கள் எழும்புது. ஊர் அந்ந மாதிரி முன்னேறிக் கொண்டிருக்குது"

எண்டு நாக்கிலை தண்ணி வரச் சொல்லிச்சினம்.

இதொண்டும் அரசாங்கம் செய்ய இல்லை. எல்லாம் புலத்திலை இருக்கிற ஊர்ச்சங்கங்களும் பழைய மாணவர் சங்கங்களும் அனுப்பிற காசிலை தான் நடக்குது எண்டது நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லைத் தானே.

இவையினரை கதையைக் கேக்க ஒரு பக்கம் சந்தோசமாத் த

தானிருக்குது. எங்கடை சனம் ஊர் விட்டு ஊர் வந்தாலும் தங்கடை பழைய இருப்பை மறக்காமல் கஸ்ரப்பட்டு குளிருக்குள்ளை இரவு பகலா உழைக்கிற காசிலை ஒரு பகுதியை ஊருக்குத் தானமாக் குடுத்து தங்கடை ஊர்க் கோயில்களையும் பள்ளிகக் கூடங்களையும் வளக்கினம் எண்டது சந்தோசமான விசயம் தானே!

ஆனால் இன்னொரு விசயத்தை நினைச்சுப் பாத்ததும் இந்தச் சந்தோசம் எல்லாம் பறந்து போயிடுது. அதுக்குப் பதிலா மனசின்ரை ஒரு மூலையிலை ஒரு முள்ளுத் தைச்ச மாதிரி வேதனையாக் கிடக்குது.

நான் இவ்வளவு நேரமும் கதைச்ச மாதிரி எங்கடை தேசத்தினிரை ஒரு பகுதி படபடெண்டு முன்னேற எங்கடை தாய் மண் சுதந்திரமா இருக்கோணும் எண்டதுக்காக வாயாலை சொல்ல முடியாத அளவு தியாகங்களையும் அதாலை பிறகு துன்பங்களையும் தாங்கிக் கொண்டு சொந்த மண்ணிலை இருந்தும் சொந்த மண்ணுக்குப் போக முடியாமல் வேறை காடுகளுக்குள்ளை இருந்தும் கஸ்ரப்ப\டற வன்னி சனத்தையும் வாகரைச் சனத்தையும் சம்பூர் சனத்தையும் நினைச்சுப் பாக்கிறன்.

ஒரு நேரச் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் ஆனா தொழில் இல்லாமல் வாழ்வா சாவை எண்டு தெரியாமல் முழிச்சுக் கொண்டிருக்கிற சனத்தையும் அதுகள் வீடு எண்ட பேரிலை தங்கி இருக்கிற தகரக் கொட்டில்களையும் நினைச்சுப் பாக்கிறன். அடிக்கிற வெயிலுக்கு இந்தத் தகரக் கொட்டில் வாழ்க்கை எப்படி இருக்கும் எண்டு யோசிச்சுப் பாக்கிறன்.

எங்கடை பிள்ளைகள் படிக்கிறதுக்குப் பள்ளிக் கூடமில்லாமல் தளபாடங்கள் இல்லாமல் மரங்களுக்கு கீழையிருந்து படிக்கிற அவலத்தை நினைச்சுப் பாக்கிறன்.

அது மட்டுமில்லை. காசுக் கஸ்ரத்திலையும் தங்கடை பிள்ளைகளுக்கு ஒரு நேரமாவது சாப்பாடாவது போட வேணுமு எண்ட அங்கலாய்ப்பிலையும் எங்கடை பிள்ளைகள் சிலது திசை மாறிப் போகுதுகள் எண்டும் கதை வருகுது.

சாப்பிட வழி இல்லாத தேசத்திலை இருந்தென்ன செய்யிறது எண்ட வெப்பியாரத்திலை எங்கடை சொந்தங்கள் சிலது தற்கொலை செய்தும் இருக்கினம்.

சரி இந்த நிலமையை மாத்த என்ன தான் செய்யலாம்..

நாங்கள் ஊர் எண்டு யோசிக்கிறதை விட்டிட்டு எங்கடை தேசம் எண்டு யோசிச்சாலே அரைவாசிப் பிரச்சினையைத் தீர்த்திடலாம்....

எங்கடை ஊர்க் கோயில், நான் படிச்ச பள்ளிக் கூடம் எண்ட வட்டத்தைத் தாண்டி நாங்கள் வெளியிலை வர வேணும்.

இங்கை இருக்கிற ஒவ்வொரு ஊர்ச் சங்கமும் வன்னியிலையும் வாகரையிலையும் இருக்கிற ஒவ்வொரு கிராமத்தைத் தத்தெடுக்க வேணும்.

இங்கை இருக்கிற ஒவ்வொரு பழைய மாணவர் சங்கங்களும் வன்னியிலையோ வாகரையிலையோ இருக்கிற ஒரு வசதியில்லாத பள்ளிக்கூடத்தைப் பொறுப்பெடுத்து தங்கடை பள்ளிக்கூடத்துக்கு இணையா முன்னேற்ற வேணும்.

சரி அப்ப ஊர்க் கோயில்களுக்கு கோபுரம் தேவையில்லையோ எண்டு நீங்கள் கேக்கிறது விளங்குது. கட்டுவம். ... அதிலை பிரச்சினையில்லை. ஆனால் அதைக் கொஞ:ச நாளைக்குத் தள்ளி வைப்பம். இப்போதைக்கு 'அவை' குடும்பமா கோயிலுக்குள்ளை சந்தூசமாத் தானே இருக்கினம். கோபுரம் கட்டாட்டி அவை வெளிக்கிட்டு இந்திரலோகத்துக்கோ அல்லது அதுக்கு அங்காலையோ போயிட மாட்டினம் தானே!

இந்தக் கோபுரும் கட்டிய காசிலை தகரக் கொட்டிலுக்குள்ளை இருந்து அவிஞ்சு கொண்டிருக்கிற ஒரு நூறு குடும்பத்தை அதுக்குள்ளை இருந்து வெளியிலை கொண்டு வரலாமெல்லே!

அன்பே வடிவானவர் எண்டு நீங்கள் சொல்லுற ஆண்டவர் இப்படிச் செய்தால் கோவிப்பார் எண்டு நீங்கள் நினைக்கிறியளே!

கஸ்ரப்படுற சனத்துக்கு உதவாமல் எனக்குக் கோபுரம் கட்ட வேணுமெண்டு 'அவை' ஒற்றைக் காலிலை நிப்பினமே!

இன்னொரு விசயத்தையும் சொல்ல வேணும்.

புலத்திலை ஒரு 2 லட்சம் தமிழ் குடும்பங்கள் இருக்கும். எங்கடை தேசத்திலை வாழ வழியல்லாமல் இருக்கிற குடும்பங்கள் எண்டு பாத்தால் ஆகக் கூடியது ஒரு 50000 குடும்பம் மட்டிலை தான் இருக்கும்.

இப்படி நாலிலை ஒரு குடும்பம் மனசு வைச்சு தாயகத்திலை ஒரு குடும்பத்தை தத்தெடுத்து அதுகள் தங்கடை சொந்தக் காலிலை நிககிறதுக்கான உதவியைச் செய்தால் நாங்கள் இப்ப ஊரிலை இருந்து கேள்விப்படுற கன கஸ்ரமான செய்திகளைக் கேக்க வேண்டியிருக்காது.

எப்படியிருந்த தேசத்திலை இப்ப விபச்சாரம் மலிஞ்சு போச்சுதே எண்டு பார்ட்டிகளிலை கூடியிருந்து மூக்காலை அளத் தேவையில்லை எல்லே!

இங்கை இருக்கிற கொஞ்சப் பேர் நான் இப்ப கதைச்ச மாதிரி வன்னிக்கும் வாகரைக்கும் மற்ற ஊர்களுக்கும் உதவிக் கொண்டு தானிருக்கினம். ஆனால் இது காணாது. இன்னும் எராளமான சங்கங்களும் கோயில்களும் ஆக்களும் மனசு வைச்சால் நிலமை மாறும்.

ஆனால் இல்லாதது என்ன பணமா? மனமா?

[size=4]மனம். [/size]

[size=4]

இவையினரை கதையைக் கேக்க ஒரு பக்கம் சந்தோசமாத்தானிருக்குது. எங்கடை சனம் ஊர் விட்டு ஊர் வந்தாலும் தங்கடை பழைய இருப்பை மறக்காமல் கஸ்ரப்பட்டு குளிருக்குள்ளை இரவு பகலா உழைக்கிற காசிலை ஒரு பகுதியை ஊருக்குத் தானமாக் குடுத்து தங்கடை ஊர்க் கோயில்களையும் பள்ளிகக் கூடங்களையும் வளக்கினம் எண்டது சந்தோசமான விசயம் தானே!
[/size]

[size=4]ஒரு குடும்பம் போய் வருகின்ற செலவு அங்கு செலவழிக்கும் பணத்துடன் / அங்குள்ள மக்களுக்கு தரும்பணத்துடன் ஒப்பிடும்பொழுது அதிகம். இருந்தாலும் தாயகத்தில் செலவு செய்யும் பணம் அந்த மக்களுக்கு உதவும். [/size]

[size=4]

எங்கடை ஊர்க் கோயில், நான் படிச்ச பள்ளிக் கூடம் எண்ட வட்டத்தைத் தாண்டி நாங்கள் வெளியிலை வர வேணும்.
[/size]

[size=4]மிக நல்ல கருத்து ![/size]

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியெல்லாம் எங்கடை ஊர்க்காரரிட்டைச் சொன்னால் என்னை ஊரைவிட்டே

தள்ளி வைத்து விடுவினம்.

இப்ப நாடு இல்லாமல் அலைய்கின்ற நான்

பிறகு ஊரும் இல்லாமல் அலையவேண்டும் :lol::D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதைத்தான் மஹிந்தவும் சொல்லுறார் எங்கண்டையளும் சொல்லுது.. இரண்டு பேருக்கும் என்ன வித்தியாசம்?

எல்லாரும் ஒரே மாதிரி வந்திட்டால் நாங்கள் ஆருக்கு சோ(க்)காட்டுறது???? :wub::icon_idea:

தேவல்லாத வேலைய விட்டிட்டு வன்னியிலையும் வாகரையிலையும் இருந்து போராடப் போன மொக்குக் கூட்டத்தில நல்ல வேலையாட்கள் கிடச்சாச் சொல்லுங்கோ. ஊருக்குப் போகக்க பிள்ளைகளப் பார்க்க ஆக்கள் வேணும்.

2001 இல பேச்சுவார்த்தை தொடங்கின உடனேயே கொழும்பிலையும் வன்னியிலயும் காணி வாங்கி காசு பார்த்தாக்கள் நாங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மணி, நம்மவர்கள் ஊர்களுக்கும், கோவில்களுக்கும், படித்த பாடசாலைகளுக்கும் கொடுக்கும் முக்கியத்துவம்போல் நாடு என்ற விடயத்தில் கொடுப்பதில்லை. அது ஒரு வகையான குறுகிய மனோபாவம். நாடு இருந்தால்தான் ஊர் வாழமுடியும் என்கின்ற இலகு விதியை விட ஊரை அலங்கரித்து மீண்டும் மீண்டும் இழப்புகளையும் துயரங்களையும் எதிர்கொள்ளும் முரண்விதியை மட்டுமே பின்பற்றும் மனோபாவம் நம்மவர்களிடம் மாறுமென்று எதிர்பார்க்கிறீர்கள்?!!!!!! :icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen:

  • தொடங்கியவர்

கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட உறவுகள் அனைவருக்கும் நன்றி....

  • கருத்துக்கள உறவுகள்

எமது மக்களுக்கு படம் காட்டுதல் தான் எல்லாவற்றையும் விட முக்கியம்.போர்க்காலத்தில் வன்னியில் மக்கள் இறந்து கொண்டு இருக்கும் போது கூட யாழ்ப்பாணத்தில் திருவிழா செய்தவர்கள் என்பது யாவரும் அறிந்தததே.

சாந்தியக்கா,இன்னும் பெயர் சொல்லாமல் உதவிகள் செய்யும் உறவுகள் போல் பலர் உருவாக வேண்டும்.

யூதர்கள் போல் நாம் என தம்பட்டம் அடிப்பவர்கள் எமது மக்களுக்கு நேர்ந்த துன்பம் போல் யூதர்களுக்கு நடந்திருந்தால் அவர்கள் என்ன செய்திருப்பார்கள் என சிந்தியுங்கள்.

நன்றி மணிவாசகன்.

இது தான் இன்றைய தேவை , அத்தியாவசியமுங்கூட . சும்மா தேசியம் , மாவீரர்கள் தியகம் என்று கொசிப் அடிப்பவர்களைக் கண்டால் என்னை அறியாது வெறுப்பே மண்டுகின்றது .

இது தான் இன்றைய தேவை , அத்தியாவசியமுங்கூட . சும்மா தேசியம் , மாவீரர்கள் தியகம் என்று கொசிப் அடிப்பவர்களைக் கண்டால் என்னை அறியாது வெறுப்பே மண்டுகின்றது .

[size=4]இதில் இரண்டாவது வசனம் தேவையற்றது. [/size]

இதில் இரண்டாவது வசனம் தேவையற்றது.

உங்களுக்குத் தேவையற்றதாக இருப்பது எனக்குத் தேவையானதாக இருக்கின்றதே . காரணம் இது எனது கருத்து .

  • கருத்துக்கள உறவுகள்

இதைத்தான் மஹிந்தவும் சொல்லுறார் எங்கண்டையளும் சொல்லுது.. இரண்டு பேருக்கும் என்ன வித்தியாசம்?

எல்லாரும் ஒரே மாதிரி வந்திட்டால் நாங்கள் ஆருக்கு சோ(க்)காட்டுறது???? :wub::icon_idea:

அது

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு கருவை அடிப்படையாக வைத்து எழுதி உள்ளீர்கள் [size=4][size=5]மணிவாசகன்[/size]. [/size]பாராட்டுக்கள்...எனக்கும் இது தொடர்பாக ஒரு சந்தேகம் சமாதான காலத்தில் செய்யாத வேலை எல்லாம் [உ+ம்] கோயிலை புணருத்தாணம் செய்தல் போன்றன இப்ப செய்யினம் அப்படி என்டால் அண்ணை எப்ப சாவார் திண்ணை எப்ப காலியாகும் என்று இவர்கள் காத்திருந்தார்களா?...போரினால் பாதிக்கப்ப இட‌ங்களை அபிவிருத்தி செய்தால் பர‌வாயில்லை ஆனால் இவர்களோ தங்கட‌ ஊர்ப் பெருமைகளை பறை சாற்ற வீம்புக்கு காசை தேவையில்லாமல் செலவழிக்கிறார்கள் இந்த காசுக்கு எத்தனையோ லட்சம் பிள்ளைகளை படிக்க வைக்கலாம் என்பது என் கருத்து...இதை முன்னுக்கு நின்று செய்வதும் தேசியவாதிகள் தான்

இது தான் இன்றைய தேவை , அத்தியாவசியமுங்கூட . சும்மா தேசியம் , மாவீரர்கள் தியகம் என்று கொசிப் அடிப்பவர்களைக் கண்டால் என்னை அறியாது வெறுப்பே மண்டுகின்றது .

[size=4]கொசிப் என்ற ஆங்கில சொல்லின் நெருங்கிய தமிழாக்கம் - அரட்டை. [/size]

[size=4]இந்த களத்தில் திரிகளில் அப்படி அரட்டை அடிப்பதை கண்டால், உணர்ந்தால் அதில் உங்கள் இந்தக்கருத்தை, பதிவதே பண்பு என்கிறேன். [/size]

கொசிப் என்ற ஆங்கில சொல்லின் நெருங்கிய தமிழாக்கம் - அரட்டை.

இந்த களத்தில் திரிகளில் அப்படி அரட்டை அடிப்பதை கண்டால், உணர்ந்தால் அதில் உங்கள் இந்தக்கருத்தை, பதிவதே பண்பு என்கிறேன்.

புத்தனின் சிட்ணி கொசிப் இதே கருத்துக்களத்தில் சக்கைபோடு போட்டது . அதன் தலைப்பும் " கொசிப் " தான் . அரட்டை தூயதமிழா என்பது எனக்குத் தெரியவில்லை . மேலும் கருத்துகளத்தில் பெரும்பாலும் இலக்கியம் சார்ந்ததே எனது பணி . இலக்கியம் சார்பான அரசியல் நெடிகள் வந்தால் எனது கருத்துக்கள் அதில் அவ்வப்போது இருக்கும் . இதில் எங்கே பண்பற்றசெயல் வந்தது ??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதை வந்து, அங்கே இருப்பவர்களும் செய்யலாம், வளங்களை பங்கிடுவது என்பது எங்கே இருந்தும் தொடங்கலாம். அங்கே இருபவர்கள் இன்னும் கொஞ்சம் "துடிதாட்தமாய்" இருந்தால் சில விடயங்களை செய்யலாம். அவர்கள் இதற்குரிய அனுபவங்கள் இல்லாதவர்கள் அல்லர். அவர்கள் சொந்த காலில் நிற்க பழக வேண்டும் - அது நொண்டியாக இருந்தாலும்- . இங்கே இருந்து ஒரு குடும்பதிர்ற்கு உதவி செய்யலாம், ஆனால் இங்கே அந்த குடும்பத்தை பார்ப்பது யார். போலியான உறவுகள் தேவைகள் காரணமாக இங்கே பலரும் தங்கள் நிலையில் இருந்து நகராமல் இருக்கிறார்கள். நாங்கள் முக்கியமாகக செய்யகூடியது எங்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுவதே. இப்படி சொன்னால் மனிவாசகதிடம் இருந்து முதல் கேள்வி வரும்; விபச்சாரத்தில் தள்ளபட்டிருக்கும் பெண்களுக்கு, இது எந்த வகையில் உதவும் என்று. அது ஒரு பிரச்சனைகளின் எல்லை என்பது போன்றது. அவர்களுக்கு, அவர்களை போல உள்ள தலைவனை இழந்த பெண்களுக்கு உதவி செய்ய வேண்டும். அவர்களும் கண்ணியமான தொழில் செய்ய வசதி ஏற்படுத்த வேண்டும். ஆனால் முழங்காவில் மத்திய மகா வித்தியாலத்தில் உள்ள ஆசிரியர் குறைக்கு என்ன செய்யலாம்? வேறு ஒரு இடத்தில உள்ள வைத்தியர் இல்லாத நிலைக்கு என்ன செய்யலாம்? நாங்கள் எப்படி சுயநலமாக இருக்கிறோமோ அப்படித்தான் அங்கேயும் இருக்கிறார்கள்.

வன்னியில் அந்த சந்தியில் புத்தர் சிலை வருகிறது, இந்த குளத்தின் பெயர் மாத்திபோட்டார்கள் என்று சொல்லுவர்களுக்கு, அந்த இடத்தின் பெயர் ஞாபகத்திர்ற்கு வருவதே அந்த புத்தரால்தான். அதற்காக அங்கெல்லாம் அப்படி புத்தர் வாறது சரி என்றோ அல்லது அதை ஏற்ருக்கொல்ல்வதேன்ரோ அர்த்தம் இல்லை.

அங்கே இருப்பவர்கள் இன்னும் வேகமாக சுழல வேண்டும்; அகக் குறைந்தது விவசாயம் ஆவது தொடங்க வேண்டும்..(அதுக்கு என்ன என்ன பிரச்சனை தடைகள் இருக்கு என்று தெரியாது) அப்படி ஒவொருவரும் வெளிக்கிட, மற்றவன் யார் என்று நினைக்காமல், பார்க்காமல் முன்னுக்கு போகலாம். சொல்வதை விட செய்வது கடினம் ஆனால் அதுதான் தேவை- உத்தரனதிர்ற்கு ஒரு முன்னாள் போராளி தொழில் ஒன்றும் இல்லாமல் கச்சான் கடலை விற்கிறார் என்றால், அங்கே கடலை விற்கும் பொன்னம்மா ; தான் ஒரு புதிய தொழிலை பழகி அந்த போராளிக்கு வழி விட வேண்டும். அவர்களுடன் போட்டி போட்டு தொழில் செய்கிறது என்ற நிலைய குறைக்க வேண்டும். அவர்கள் சுய தொழில் தான் செய்ய முடியம் என்றால் அந்த தொழில்களை அவர்களுக்கு விட்டுகுகிற பண்பு வர வேண்டும்.

இளவயது கற்பம், கருச்சிதைவு என்று செய்திகள் வரும் போது, மருத்துவ பீட மாணவர்கள், வைத்தியர்கள் பாடசாலைகளுக்கு சென்று இளவயது கற்பம் பற்றி அறிவூட்ட வேண்டும்..அதையே ஒரு செய்தியாக/கோசிப் ஆக பார்க்கிற தன்மை இல்லாமல் போக வேண்டும்.

யாரோ ஒருவர் இன்னுமொரு பதிலில் பதிந்தது போல், நாங்கள் 3 வருடத்துக்கு முன் என்ன என்ன எல்லாம் இழந்தோம் என்பதை மறந்து போற/ போன சமூகமாக வருவதர்ற்கு அதிக விடயங்கள் எங்கே செய்ய வேண்டி இருக்கு.

கொஞ்ச காலதிர்ற்கு முன் பல்கலை கழகங்கள் பூட்டபட்டு இருந்தது, எத்தனை பல்கலை மாணவர்கள், அகக் குறைந்தது தங்கள் தாங்கள் படித்த பாடசாலைக்கு தன்னும் போய் உதவி செய்தார்கள். இதுகள் எல்லாம் அங்கே இருந்தே செய்யலாம். எங்களுக்கு அப்படியான "பரம்பரை அலகுகள்" குறைவு என்றாலும். போலியாக இங்கே இருந்து பெரியளவில் செய்யலாம் என்று சொன்னாலும் அதில் நீண்ட காலத்திர்ற்கு ஒன்றும் இல்லை என்பதுதான் என்று கருத்து. அது 100 சதவீதமும் பிழையாக இருக்கலாம்.

முள்ளிவாய்க்கால் முடிவுடன் புலம் பெயர்ந்த தமிழர்கள் முன்னாள் போராளிகளினதும் பாதிக்க பட்ட மக்களினதும் புனர்வாழ்விற்கு தான் முக்கியத்துவம் கொடுப்பர்கள் என பலராலும் எதிர்பார்க்க பட்டது .

ஆனால் பழமும் திண்டு கோட்டையும் போட்ட புலம் பெயர்ந்தவர்களை மேய்த்துக்கொண்டிருந்த அமைப்பாளர்கள் அடுத்த கட்ட போராட்டம் என்று திருப்பியும் மேய்க தொடங்கிவிட்டார்கள் ,அது மாத்திரமல்ல உதவி செய்ய வெளிக்கிட்டவர்களையும் அரசுடன் நிற்கின்றான் என்று துரோகி பட்டங்கள் வீறு கொடுக்க தொடங்கிவிட்டார்கள் ,நாட்டுக்கு போய் அவர்களை பார்ப்பதே அரசுக்கு ஆதரவளிக்கத்தான் என்பது மாதிரி ஒரு தோற்றத்தையும் உருவாக்கிவிட்டார்கள் .

அவர்களை மீறி எதுவும் செய்ய முடியாமல் போய்விட்டதா என்று கேட்டால் ,அவர்களிடம் தான் அனைத்து ஊடக பலமும் ,அதிகாரமும் இருந்தது அதை வைத்துக்கொண்டு தொடர்ந்தும் மேய்க்க தொடங்கிவிட்டார்கள் .

ஆனால் இந்த மூன்று வருடங்களில் நிலைமை சற்று மாறியிருக்கின்றது என்பதுதான் சற்று ஆறுதலான விடயம் ,அவர்கள் சாயங்களும் கொஞ்சம் கொஞ்சமாக வெளிறிவருகின்றது.

இவர்களை மக்கள் இனம் கண்டு ஒதுக்கும் வரை தேசியம் என்ற போர்வையில் நின்று எம்மை மேயத்தான் போகின்றார்கள் .

[size=4]நீங்கள் ஐ.நா. தொடக்கம் பல உதவி வழங்கும் நாடுகளே ஒன்றும் (உதவிகள்) செய்ய முடியாமல் இருப்பதை அறிவீர்கள். இன்று இந்தியா தொடக்கம் அமெரிக்கா வரை ஆட்சி மாற்றத்தை நோக்கி நருகின்றன.[/size]

[size=4]தனிப்பட்ட ரீதியில் தெரிந்தவர் ஊடாக மட்டுமே அரசியல் கைதிகள், விதவைகள், முன்னாள் போராளிகள், சாதாரண மக்களுக்கு உதவும் நிலை உள்ளது.[/size]

[size=4]வேறு எவ்வாறு ஊடாக உதவ முடியும் என தெரிந்தால் இங்கே இணையுங்கள்.[/size]

  • கருத்துக்கள உறவுகள்

மணிவாசகன்

தங்களது ஆதங்கமே எனதும்.

ஆனால் முயற்சி செய்து பார்த்தபோது அது அவ்வளவு சுலபமல்ல என்பது தான் வன்னியில் மட்டுமல்ல எனது ஊரில் நிலைமை.

எனது ஊர்ச்சங்கம் ஊடாக வன்னியில் ஒரு திட்டத்தை முன்னெடுப்பதற்காக பல வழிகளிலும் பாராளுமன்ற உறுப்பினர் உட்பட முயன்றோம். தோல்வி. காரணம் சாப்பாடு அதுவும் ஒரு எல்லைக்குள் போடவே அனுமதி கிடைக்கிறது. அங்கத்தவரின் சந்தாப்பணத்தில் சோறு போட அவர்கள் விரும்பாததால் சிறிய சிறிய உதவிகளுடன் நிற்கிறது. தொடர்ந்து முயல்கின்றோம் பார்க்கலாம்.

(நான் இனி யாழினூடாக எதுவும் செய்வதில்லை என்றும் செய்வதனையும் இங்கு எழுதுவதில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளேன். இது தங்களுடைய ஆதங்கத்துக்கான பதில் மட்டுமே))

[size=4]நீங்கள் ஐ.நா. தொடக்கம் பல உதவி வழங்கும் நாடுகளே ஒன்றும் (உதவிகள்) செய்ய முடியாமல் இருப்பதை அறிவீர்கள். இன்று இந்தியா தொடக்கம் அமெரிக்கா வரை ஆட்சி மாற்றத்தை நோக்கி நருகின்றன.[/size]

[size=4]தனிப்பட்ட ரீதியில் தெரிந்தவர் ஊடாக மட்டுமே அரசியல் கைதிகள், விதவைகள், முன்னாள் போராளிகள், சாதாரண மக்களுக்கு உதவும் நிலை உள்ளது.[/size]

[size=4]வேறு எவ்வாறு ஊடாக உதவ முடியும் என தெரிந்தால் இங்கே இணையுங்கள்.[/size]

சோறு மட்டும் போடலாம். அவ்வளவு தான்.

முள்ளிவாய்க்கால் முடிவுடன் புலம் பெயர்ந்த தமிழர்கள் முன்னாள் போராளிகளினதும் பாதிக்க பட்ட மக்களினதும் புனர்வாழ்விற்கு தான் முக்கியத்துவம் கொடுப்பர்கள் என பலராலும் எதிர்பார்க்க பட்டது .

ஆனால் பழமும் திண்டு கோட்டையும் போட்ட புலம் பெயர்ந்தவர்களை மேய்த்துக்கொண்டிருந்த அமைப்பாளர்கள் அடுத்த கட்ட போராட்டம் என்று திருப்பியும் மேய்க தொடங்கிவிட்டார்கள் ,அது மாத்திரமல்ல உதவி செய்ய வெளிக்கிட்டவர்களையும் அரசுடன் நிற்கின்றான் என்று துரோகி பட்டங்கள் வீறு கொடுக்க தொடங்கிவிட்டார்கள் ,நாட்டுக்கு போய் அவர்களை பார்ப்பதே அரசுக்கு ஆதரவளிக்கத்தான் என்பது மாதிரி ஒரு தோற்றத்தையும் உருவாக்கிவிட்டார்கள் .

அவர்களை மீறி எதுவும் செய்ய முடியாமல் போய்விட்டதா என்று கேட்டால் ,அவர்களிடம் தான் அனைத்து ஊடக பலமும் ,அதிகாரமும் இருந்தது அதை வைத்துக்கொண்டு தொடர்ந்தும் மேய்க்க தொடங்கிவிட்டார்கள் .

ஆனால் இந்த மூன்று வருடங்களில் நிலைமை சற்று மாறியிருக்கின்றது என்பதுதான் சற்று ஆறுதலான விடயம் ,அவர்கள் சாயங்களும் கொஞ்சம் கொஞ்சமாக வெளிறிவருகின்றது.

இவர்களை மக்கள் இனம் கண்டு ஒதுக்கும் வரை தேசியம் என்ற போர்வையில் நின்று எம்மை மேயத்தான் போகின்றார்கள் .

[size=4]அர்யுன் அண்ணா,[/size]

[size=4]எங்கள் நாட்டு பிரதிநிதி இப்படி சொல்லுகிறாரே என்ன செய்யலாம்? [/size]

"[size=4][size=5]இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரனை நடத்த வேண்டும்; கனேடிய உயர்ஸ்தானிகர் புருஸ் லெவி கோரிக்கை" [/size][/size]

[size=4]http://www.yarl.com/...howtopic=107264[/size]

[size=4]இவரையும் 'தேசியம் என்ற போர்வையில் மேய்ப்பவன்' என கூறிவிடுவோமா?[/size]

[size=4]இல்லை கனடா சொல்வதை செவிமடுப்போமா? [/size]

[size=4]எது வசதி? [/size]

Edited by akootha

முள்ளிவாய்க்கால் முடிவுடன் புலம் பெயர்ந்த தமிழர்கள் முன்னாள் போராளிகளினதும் பாதிக்க பட்ட மக்களினதும் புனர்வாழ்விற்கு தான் முக்கியத்துவம் கொடுப்பர்கள் என பலராலும் எதிர்பார்க்க பட்டது .

ஆனால் பழமும் திண்டு கோட்டையும் போட்ட புலம் பெயர்ந்தவர்களை மேய்த்துக்கொண்டிருந்த அமைப்பாளர்கள் அடுத்த கட்ட போராட்டம் என்று திருப்பியும் மேய்க தொடங்கிவிட்டார்கள் ,அது மாத்திரமல்ல உதவி செய்ய வெளிக்கிட்டவர்களையும் அரசுடன் நிற்கின்றான் என்று துரோகி பட்டங்கள் வீறு கொடுக்க தொடங்கிவிட்டார்கள் ,நாட்டுக்கு போய் அவர்களை பார்ப்பதே அரசுக்கு ஆதரவளிக்கத்தான் என்பது மாதிரி ஒரு தோற்றத்தையும் உருவாக்கிவிட்டார்கள் .

அவர்களை மீறி எதுவும் செய்ய முடியாமல் போய்விட்டதா என்று கேட்டால் ,அவர்களிடம் தான் அனைத்து ஊடக பலமும் ,அதிகாரமும் இருந்தது அதை வைத்துக்கொண்டு தொடர்ந்தும் மேய்க்க தொடங்கிவிட்டார்கள் .

ஆனால் இந்த மூன்று வருடங்களில் நிலைமை சற்று மாறியிருக்கின்றது என்பதுதான் சற்று ஆறுதலான விடயம் ,அவர்கள் சாயங்களும் கொஞ்சம் கொஞ்சமாக வெளிறிவருகின்றது.

இவர்களை மக்கள் இனம் கண்டு ஒதுக்கும் வரை தேசியம் என்ற போர்வையில் நின்று எம்மை மேயத்தான் போகின்றார்கள் .

முன்னாள் போராளி என்கிறீர்கள் ................நன்று..........

ஆனால் ஏன்தான் தங்களுக்கு இந்தக்கொலைவெறி இந்த போராட்டத்தின்மீது ..........புரியவில்லை

முன்னாள் போராளி என்கிறீர்கள் ................நன்று..........

ஆனால் ஏன்தான் தங்களுக்கு இந்தக்கொலைவெறி இந்த போராட்டத்தின்மீது ..........புரியவில்லை

போராட்டத்தின் மீது ஒரு கொலை வெறியும் இல்லை அதை நாடாத்துவர்கள் மீது தான் .

இது நீங்களும் நானும் மட்டும் சம்பந்தபட்ட விடயமில்லை ,முழு ஈழத்தமிழனின் இருப்பும் வாழ்வும் பற்றியது .

இவ்வளவு மக்களையும் போராளிகளையும் நடுத்தெருவில் கொண்டுவந்து விட்டு விட்டு ,யார் என்ன செய்தாலும் கேட்க ஒரு நாதியில்லாத இனமாக (இலங்கை ,தமிழ் நாடு ஜெயிலில் நடப்பவை மட்டுமே போதும் ) அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் முழுசிக்கொண்டுஉலகின் வாயை பார்த்துக்கொண்டு நிற்கின்றோம் ,

நாக்கு கூசாமல் போராட்டம் அடுத்த கட்டத்திற்கு வந்து நிற்கின்றது என்பவனை பிடித்து நாக்கை அறுக்க வேண்டும் போல உள்ளது.

நாட்டில் அல்லல்படும் மக்களுக்கு எதையாவது முதலில் செய்வம் என்பதைவிட்டு இன்னமும் அடிப்பம் கிழிப்பம் என்பதும் வெறும் வீரபிரதாபங்க்களை வைத்து பிழைப்பு நடத்துவதும் தான் கோபத்தை ஊட்டுகின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் ஒரு சாதாரண புலம் பெயர்ந்த மனிதன்.என் எதிர் பார்ப்புநெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழிந்தோடி புல்லுக்கும் கசிந்தால் தவறில்லைஎன்பதே.ஆனால் இங்கு நாங்கள் புல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழிந்தோடி நெல்லுக்கு கசிந்ததா?

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கட்டுரையை எப்படி மிஸ்பண்ணினன் இவ்வளவு நாளும்..இந்த ஊருக்கு உதவுறம் எண்டு சங்கம் வைச்சு செய்யற்படும் பலர் உண்மையில் ஊர்ப்பாசத்தில் செய்வதில்லை..ஊருக்குள்ளைதானை அவர்களை அறிஞ்ச நாலுபேரும்,நாலு எதிரிகளும் இருப்பார்கள் அவர்களுக்கு படம் காட்டத்தான் சங்கம்,கோயில் எண்டு தலைகீழாய் நிக்கிறவை...கந்தசாமின்ர பெடி கட்டின தேர் எண்டுறதிலையும்,ஞானத்தார் உதவிசெய்து போட்ட றோட்டு எண்டு ஊருக்குபோகேக்கை இல்லாட்டி ஊராக்காள் ரெலிபோனிலை எடுத்து சொல்லேக்க இவைக்கும் இவையின்ர மனிசிமாருக்கும் வாற புழுகும்,தற்பெருமையும் எங்கையோ கஸ்ரப்படுர வன்னிச்சனத்துக் செய்தா வருமோ..?வன்னியிலை இருக்கிறதுவள் என்ன இனமோ சனமோ இல்லை எங்கடை ரத்தமோ..? என்னத்துக்கு அதுகளுக்கு உதவி செய்யோணும்..?எங்கையெண்டாலும் கிடந்து செத்தா எங்களுக்கென்ன....ஊருக்குள்ள சாமிக்கு ஆடியிலை தேரிழுக்காட்டித்தான் பெரும் குற்றம்...

நன்றி மணிவாசகன்..

இன்றைய காலத்தில் மிகவும் தேவையானதொரு விடயத்தை எழுதியுள்ளீர்கள்.

உண்மையில் உதவி செய்வதற்கு மனம் தான் தேவை. மனமுள்ளவன் தனது உணவில் மிச்சம் பிடித்து கூட உதவி செய்வான்.

இன்று சங்கங்கள், நிறுவனங்கள் மூலம் உதவி செய்யும்படி மக்களை கேட்டால் பெருமளவு மக்கள் உதவி செய்ய மாட்டார்கள். காரணம் உதவி செய்கிறேன் என்று சொல்லி பணம் வாங்கி தம்மை மேலும் வளப்படுத்திக்கொண்டு மிகுதிப்பணத்தில் சிறு உதவியை மட்டும் மக்களுக்கு வழங்குபவர்களே பலர்.... அப்படியான பலரை மக்கள் பார்த்து விட்டார்கள். (ஒரு சில நிறுவனங்கள் உண்மையாகவும் இருக்கின்றன)

எனவே அப்படி சங்கங்கள், நிறுவனங்கள் உதவி செய்ய வேண்டுமானால் அவை முதலில் மக்களின் நம்பிக்கையை பெற்றுக்கொள்ள வேண்டும்.

ஆனால் இப்பொழுது முடிந்தவரை வன்னியிலுள்ள மக்களுக்கு நேரடியாக தொடர்புகளை ஏற்படுத்தி உதவுமாறு மக்களுக்கு பிரச்சாரம் செய்ய வேண்டும். பத்திரிக்கை, இணையங்கள், தொலைகாட்சி வாயிலாகவும் பிரச்சாரம் செய்யலாம். ஆனால் அவற்றில் வருவதை கணக்கெடுப்பவர்கள் எண்ணிக்கையும் மிகவும் குறைவு. எனவே முடிந்தவரை நீங்கள் அன்றாடம் பழகும் தமிழ் மக்களிடம் இதனை பேசிப்பார்ப்பது சிறந்தது. முயற்சி செய்தால் ஓரிருவரை என்றாலும் சம்மதிக்க வைக்கலாம்.

இங்கு பலர் வன்னியில் உள்ள மக்களுக்கு பணம் அனுப்புகிறேன் என்ற பெயரில் வன்னியில் உள்ள தமக்கு தெரிந்த மக்கள் அல்லது தமது சொந்தக்காரருக்கு பணம் அனுப்புவார்கள். (ஏற்கனவே இன்னொரு சொந்தம் அவர்களுக்கு பணம் அனுப்பினாலும் கூட)

எனவே ஏனைய ஊர்க்காரர் முடிந்தவரை எந்த சொந்தங்களும் இல்லாமல் உதவி செய்வதற்கு எவரும் இல்லாமல் அனாதையாக உள்ளவர்களை இனங்கண்டு உதவி வழங்குங்கள். நேரடியாக நீங்களோ (அகதி அல்லாதவர்கள் எனின்) அல்லது ஊரில் உள்ள உங்களுக்கு நம்பிக்கையானவர்களோ வன்னிக்கு சென்று அப்படியானவர்களை தெரிந்தெடுப்பது நல்லது. சும்மா கண்ட கண்ட ஆட்களை நம்பி பணம் வழங்கினால் கடைசியில் ஏமாறுவது நீங்களாக தான் இருப்பீர்கள்.

அல்லது புலம்பெயர் தேசத்தில் உள்ள உங்களுக்கு மிகவும் நம்பிக்கையான நபர்கள் அல்லது நம்பிக்கையான நிறுவனம் மூலம் உதவுங்கள். அதை தேர்ந்தெடுப்பதில் பிழை விடாதீர்கள்.

உதயம் அண்ணா, நெடுக்ஸ் அண்ணா ஆகியோர் வன்னியில் ஏதாவது திட்டமிடல்களை மேற்கொண்டால் எதிர்காலத்தில் அவர்களுக்கு பண உதவி செய்ய முடிந்தால் செய்வேன். இருவரையும் எனக்கு தெரியாது. ஆனால் இருவர் மேலும் எனக்கு நம்பிக்கை உள்ளது.

இப்படியெல்லாம் எங்கடை ஊர்க்காரரிட்டைச் சொன்னால் என்னை ஊரைவிட்டே தள்ளி வைத்து விடுவினம்.

இப்ப நாடு இல்லாமல் அலைய்கின்ற நான் பிறகு ஊரும் இல்லாமல் அலையவேண்டும் :lol::D

உங்கள் ஊர்க்காரர் தள்ளி வைத்தால் வன்னியை உங்கள் ஊராக நினைத்து அம்மக்களுக்கு உதவி செய்ய முடியாதா? :)

Edited by துளசி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.