Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நினைத்தாலே நெஞ்சு பக் பக்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
:lol: :lol: உலகம் உருண்டைதான்
  • Replies 103
  • Views 14.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலகம் உருண்டைதான் அதனால் என்ன. என்னைப்போல விளங்கிக்கொள்ள முடியாதவைக்கு விளக்கமா எழுதுங்கோ நந்தன்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் எழுதுபவர்கள் பலரும் நான் உள்பட, கணனிக்கு முன்னால்.. இருந்து சிரிப்பவர்களே...

அதனை மனைவியோ... பிள்ளைகளோ.. கண்டு பிடிச்சு... "அப்பாவுக்கு, விசர் பிடித்து விட்டது" என்று சொல்வதை... அடிக்கடி கேட்பதுதான்.... :D:icon_idea:

[size=4]நீங்க என்றாலும் பரவாயில்லை .............[/size][size=1] [size=4]எங்கள் வீட்டில் அபிஷேகம் [/size][/size]

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

எனது மனைவியிடம்

உங்கள் புருசனுக்கு ஏதோ நடந்து விட்டது என்பார்கள்..... :lol::D :D

"நெஞ்சு பக் பக்" நல்ல தலப்பு. திரி கதை கதையாம் பகுதியில் இருப்பதை மறக்கவைக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

கதை நன்றாக உள்ளது தொடருங்கோ....வாசிக்க எனக்கும் நெஞ்சு பக் பக் என்கிறது.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இண்டைக்கும் நேற்றும் ஒரே பாராட்டு மலையில நனைந்ததால் எனக்கு மிகுதியை எழுதவே மனம் வரவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இண்டைக்கும் நேற்றும் ஒரே பாராட்டு மலையில நனைந்ததால் எனக்கு மிகுதியை எழுதவே மனம் வரவில்லை.

தடிமன் பிடிச்சிட்டுதா?? தலை பாரமாய் இருக்கும் ஆவி பிடியுங்கோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு என்னெண்டா உங்கடை மச்சான் தான் எதோ வில்லங்கத்தில் மாட்டியுள்ளார் எனப்படுகுது.இயல்பாக எழுதுவது தான் எப்போதும் நிலைக்கும்.அது உங்களுக்கு தாராளமாகவே வருகிறது.முடிவுக்காய் காத்திருக்கிறேன்.

இண்டைக்கும் நேற்றும் ஒரே பாராட்டு மலையில நனைந்ததால் எனக்கு மிகுதியை எழுதவே மனம் வரவில்லை.

என்னங்க கஸ்ட காலம். தெருவாலைபோவான் ஒருவனும் ஒரு கொடை குடுக்கல்லையே. அது சரி நீங்க எதிலை நனைஞ்சீங்க.

நிக்கிற மழையிலையா அல்லது பெய்யிறய மலையிலையா? :lol:

கதையின் மூலக்கரு கற்பனையல்ல என்று நினைக்கிறேன்.

கதையை [size=4]Gay Story [/size]ஆக முடிச்சிடுவீங்களோ என்று நெஞ்சு பக் பக் என்று அடிக்கிறது. :rolleyes:

தொடருங்கோ. :)

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் அப்பிடி தான் தோணுது அப்பிடி கேஸ் மாதிரி பட் லெட்ஸ் வெயிட் அண்ட் சி :D

  • கருத்துக்கள உறவுகள்

[size=4] எல்லோருடைய ஆவலயும் கவனியுங்கோ............[/size]

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிலாமதி சொல்லுறதால இப்பதான் வந்து கணினிக்கு முன்னால இருக்கிறன்.அனால் தெரிஞ்சவை எல்லாம் திண்ணையில இருந்து கொட்டமடிக்க எப்பிடி எனக்கு எழுத மனம் வரும் சொல்லுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]நீங்களும் திண்ணைக்கு போங்கோ அல்லது .............எழுதியதை இங்கு போட்டுவிடுங்கோ. அநேகமாக் முடிவு பகுதியாகக் இருக்கும். [/size]

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பஸ்சைக் கண்டவுடன் இதுவரை இருந்த ஒருவித பதட்டம் குறைந்ததுபோல் இருக்கிறது. பஸ்சில் ஏறியவுடன் இவர் பின்னால்ச் செல்ல முற்பாதுகாப்புடன் முன்னால் இருப்பம் என்கிறேன். முன்னிருக்கையில் ஒருபெண் இருக்க நானும் பிள்ளைகளும் அடுத்த சீற்றில் இருக்க இவரும் தம்பியாரும் எமக்குப் பின்னே இருக்கிறார்கள். பஸ் ஓடத்தொடங்க இனி ஒருநாளும் இங்கே வரப்போவதில்லை என்று எண்ணிக்கொண்டு கண்ணுக்கெட்டும் தூரம்வரை பார்க்கிறேன். அழகான கிராமம். இங்கொன்றும் அங்கொன்றுமாய் வீடுகள் வன்னியை நினைவுபடுத்துகின்றன. வசிப்பதற்க்கேற்ற இடமல்ல இரசிப்பதற்கு மட்டுமே ஏற்ற இடம் என நினைத்துக்கொண்டிருக்கும்போதே அடுத்த தரிப்பிடத்தில் பஸ் நிற்கிறதுஇரண்டு பேர் ஏறுகின்றனர். சாரதி பஸ்சை எடுத்துக்கொண்டு போக ஆரோ கைகாட்டி மறிக்கினம். பஸ் வேகம் குறைக்க நான் எட்டிப் பாக்கிறன் பரம் ஓடி வந்து ஏறிறான்.என்னையறியாமலே ஐயோ வாரான் எண்டு சொல்லிக்கொண்டு நான் எழும்பீட்டன். அண்ணி சீற்றில இருங்கோ அவன் உங்களை ஒண்டும் செய்ய மாட்டான் என்று சதீஸ் சொல்ல நான் மெதுவா இருக்கிறன். நான் பின்னுக்கு இருக்கிறன்தானே பயப்பிடாமல் இரு என்கிறார் இவர். பரம் எங்களைத் தாண்டிப் பின்னால்ப் போய் இருக்குது.

சிலோன் மாதிரி இங்கயும் கெண்டைக்ரர். சாரதிக்குப் பக்கத்தில அவருக்கும் ஒரு சீட் இருக்கு. சாரதியும் அவரும் தமது மொழியில் ஏதேதோ கதைசுச்சிரிக்கினம். அடுத்தடுத்த தரிப்பிடங்களில எறினதில பின்னுக்கிருந்த இரண்டுபேரும் இறங்கியாச்சு.நான் முன்னுக்குப் பாத்துக்கொண்டிருந்தாலும் பிடரியால பின்னுக்கும் பாத்துக்கொண்டிருந்தன். பின்னால பரம் எழும்புற அரவம் கேட்டுது. நான் உடன திரும்பினன். வந்த வேகத்தில சடபிட எண்டு தினேசுக்கு அடிச்சுப்போட்டு ஒண்டும் தெரியாதமாதிரி ஓடிப்போய் இருந்திட்டான். எனக்குச் சரியான பயமாப் போச்சு. முன்னுக்கு ரைவரிட்டச் சொல்லுங்கோ எண்டன் மனிசனைப் பாத்து. மனிசன் கெண்டைக்டரைக் கூப்பிட்டு பரமைக் காட்டி இவன் எங்களுக்குக் கரைச்சல் தாறான் எண்டு இங்கிலீசில சொல்லிச்சிது. அவங்களுக்கோ ஒண்டும் விளங்கேல்ல. சதீஸ் நீ சொல்லன்ரா எண்டு தம்பியாரப் பாத்துக் கேக்கிறார். சதீஸ் பேசாமல் இருக்கிறது.நான் உடன முன்னுக்கிருந்த பெண்ணிடம் எனது பாஸ்போட்டைக் காட்டி நாங்கள் டூரிஸ்ட். இவன் எங்களுக்கு பிரச்சனை தாறான். தயவுசெய்து போலீசைக் கூப்பிடு எண்டு சொல்லுறன். நான் போலிஸ் எண்டதுதான் தாமதம் பரம் எழும்பி எங்களுக்குக் கிட்ட வந்து எண்ட வீட்ட வந்து நிண்டு நக்கிப்போட்டு எனக்கே போலீசைக் கூப்பிடிறியோ எண்டு தொடங்க மனிசனுக்கு வந்துதே கோவம். பொத்தடா வாயை மனிசிபிள்ளயளோட தெரியாமல் இங்க வந்திட்டன் எண்டு பேசாமல் இருந்தால் என்னையும் அவன்மாதிரி விசரன் எண்டு நினைச்சியோ. காலடிச்சு முறிச்சுப்போடுவன் நாயே என்ற உடன பரமு நாய் வாலாட்டிக்கொண்டு சத்தம் போடாமல் ஒரு மூலேக்குள்ள போய்ப் படுக்குமேல்லோ அதுபோல சத்தப்பொறுதியில்லாமல் பின்னால போய் இருந்திட்டுது. என்ர மனிசன் போட்ட சத்தத்தில ரைவருக்கும் கெண்டைக்டருக்கும் எங்களுக்குள்ள எதோ பிரச்சனை எண்டு விளங்கிப்போச்சு. கெண்டைக்ரர் எழும்பி வந்து சதீசை இத்தாலிப் பாசேல ஏதேதோ கேட்கிறார். அப்பவும் சதீஸ் ஒண்டும் சொல்லாமல் இருக்குது. எனக்குக் கோவம் வந்திட்டிது. உங்கட தம்பியை நம்பி இங்க வந்ததுக்கு இது உங்களுக்கு வேணும் என்றேன். நான் எதிர்பார்த்தது நடந்திது. சதீஸ் வாயைத் திறந்து கெண்டைக்டருக்கு கடகட என்று எதோ சொல்ல அவர் பின்னால பரமைப் பாத்து எதோ சொல்ல பரம் திருப்ப எதோ பதில் சொல்லுறான். எனக்கு தினேஷ் எங்களுக்கு சார்பாக் கதைக்கிறானோ அல்லது அவனுக்குச் சார்பாக் கதைக்கிறானோ எண்டும் சந்தேகம். உடன இவரப் பாத்து எங்களுக்குப் பாதுகாப்பு வேணும். அதனால நாங்கள் இறங்கிற இடத்தில இவனை இறக்க விடவேண்டாம் எண்டு உங்கட தம்பியைச் சொல்லச்சொல்லுங்கோ என்றன். இவரும் சதீசும் பக்கத்திலபக்கத்தில தான் இருக்கினம் ஆனாலும் நான் சதீசைப் பாக்காமல் இவரைப் பாத்துச் சொன்னது சதீசுக்குச் சுட்டுப்போட்டுது. எழும்பிப் போய் ரைவரிட்ட எதோ சொல்லிப்போட்டு அண்ணி பயப்பிடாதைங்கோ. நான் ரைவருக்குச் சொல்லிப் போட்டன் அவனை இறங்க விடவேண்டாம் எண்டு. உங்களைப் பத்திரமா மகிந்தன் அண்ணா வீட்டில கொண்டுபோய் விடுறது என்ர பொறுப்பு எண்டு சொல்ல எனக்கே சதீசைப் பாக்கப் பாவமா இருந்துது.

நாங்கள் இறக்கிற இடம் வர கெண்டைக்ரர் பின்கதவில போய் நிக்கிறார். நாங்கள் முன்பக்கமாப் போய் இறங்கிறம். பரம் கொண்டைக்ரருடன் எதோ திட்டுப்படுது. எங்கள இறக்கினதோட அவனை இறக்காமல் பஸ்ஸை றைவர் எடுத்திட்டார். அவன் அடுத்த கோல்ட்டில இறங்கி வரமாட்டானோ என நான் கேட்கிறேன். மகிந்தண்ணான்ர இடத்துக்குப் போற பஸ் வர இன்னும் ஒரு மணித்தியாலத்துக்குக் கிட்ட இருக்கு. அவன் கட்டாயம் அங்க வருவான். அதனால பக்கத்தில இன்னுமொரு ரெயில்வே ஸ்டேசன் இருக்கு. அங்க போய் இருப்பம்.கா மணித்தியாலத்துக்கு முதல் பஸ் கோல்டுக்குப் போவம் என்று சதீஸ் சொல்ல நாங்களும் ஓம் எண்டு தலையாட்டிக் கொண்டு சதீசுக்குப் பின்னால நடக்கிறம். என் மூத்த மகளின் கையை சதீஸ் பிடிச்சுக்கொண்டு வரப் பார்க்க அவ கையை இழுத்துக்கொண்டு எனக்கு மற்றப்பக்கம் வந்து எண்ட கையை இறுக்கிப் பிடிக்கிற பிடியில அவவின் பயம் தெரியுது.

அத்தனை நேரம் பிள்ளைகள் இருவரும் என்னுடன் இருந்தும் அவர்களைப் பெரிதாகக் கவனிக்க ஏலாத அளவு பரம் எங்களைப் பிரச்சனையால மூடியிருந்ததை அப்பதான் நான் அவதானிச்சன். குட்டியளுக்குப் பசிக்குதா எண்டு அவர்களைப் பாத்துக் கேட்டன். ஒராள் ஓமெண்டு தலையாட்ட மற்றவ இல்லை எண்டு ஆட்டினா. அக்கம் பக்கம் கடைகள் ஒண்டையும் காணவில்லை. இஞ்சினேக்க கடைகிட ஒண்டும் இல்லையே எண்டு இவர் சதீசைப் பார்த்துக் கேக்கிறார். கொஞ்சம் தள்ளிப் போனால் ரண்டு மூண்டு கடையள் கிடக்கு. நான் உங்களை கொண்டுபோய் ஸ்டேசனில விட்டிட்டுப் போய் ஏதாவது வாங்கியாறன் என்று சதீஸ் சொல்ல எங்களைத் தனிய விட்டிட்டு எங்கயும் போவேண்டாம் நான் கைகாவலுக்கு பிஸ்கற்றும் யூசும் கொண்டுதான் திரியிறனான். ஆனபடியால் அங்க போனஉடன குடுப்பம் என்கிறேன்..

இந்தச் சனங்களுக்குக் கதைக்கிற பாசையும் விளங்குதில்ல. சதீஸ் விட்டிடுப் போனபிறகு அந்த நாய் வந்து ஏதும் பிரச்சனை பண்ணினால். இருக்கிற ஒரேயொரு துருப்புச் சீட்டு சதீஸ்தானே. அதால பசியே பொறுக்க முடியாத நான் அண்டைக்கு பயத்தில பசியே இல்லாத ஆளாகிப்போணன். நாம் எங்கேயாவது தூர இடங்களுக்குக் கிளம்பினால் உனக்குக் கொறிக்கக் கிரிக்க எல்லாம் எடுத்திட்டியோ ஒருவயதுப் பிள்ளையை கொண்டுபோகலாம். உன்னத்தான் தாக்காட்ட ஏலாது என்று இந்தாள் சொல்லும். பசி வந்தால் பத்தும் பறந்துபோகும்.பிரச்சனை வந்தால் பசிகூடப் பறந்துவிடும் என்பதை அன்று நான் உணர்ந்தேன்.

ஸ்டேசனுக்கு வந்தாச்சு. எதிரும் புதிருமாக நிறையக் கதிரைகள். ஒன்றிரண்டு பேர் மட்டுமே தொட்டம் தொட்டமா இருக்கினம். கொஞ்சமெண்டாலும் ஆக்கள் இருக்கிறது மனதுக்கு கொஞ்சம் நின்மதி தருது. நான் பிள்ளையளுக்கு பிஸ்கற்றும் யூசும் குடுக்க அவை இரண்டுபேரும் சாப்பிட்டுச் சாப்பிட்டு ஓடி விளையாடீனம். இவர் திரும்பவும் சதீஸ் இப்பிடியே நீ எங்களோட வாடா. அண்ணியும் நீயும் போங்கோ ரெயினில ஒரு செக்கப்பும் இல்லை. உனக்கு யூரோப் பற்றித் தெரியாமல் இங்க கிடக்கிறாய். வெளி உலகத்தை வந்து பாரடா என்று கல்லையும் கரைக்கிறமாதிரி ஏதேதோ சொல்லுறார். ஆனால் சதீசோ என்னால ஏலாது அண்ணா என்று பழைய பல்லவியைத் திரும்பப் பாடுது. சதீசின்ர கன்னத்தைப் பொத்தி நாலு அறை விடவேனும்போல எனக்கு ஆத்திரம் வருது. சதீஸ் நீங்கள் ஆரையும் கற்பழிச்சுக் கொலை கிலை செய்து அதை அவன் பாத்து உங்களை பிளக்மெயில் பண்ணுறானோ? அப்பிடிஎண்டாக்கூட உங்களை நாங்கள் காப்பாத்துவம். உந்த நாயிட்டக் கிடந்தது உப்பிடிச் சீரழியிறதவிட உண்மையை ஒத்துக்கொண்டு ஜெயிலுக்குப் போகலாம் என்று சொல்கிறேன். அதுக்கும் தலையைக் குனிஞ்சுகொண்டு பேசாமல் இருக்குது சதீஸ். எடேய் இவள் சொல்லுற மாதிரி ஏதேனும் செய்து போட்டியே அப்பிடிச் செய்திருந்தால் அவனையும் சேர்த்து வெட்டித் தாட்டிருக்க வேண்டியதுதானே. எங்கட குடும்பத்தில பிறந்துபோட்டு இப்பிடி எங்களுக்கு முன்னால அவனிட்ட அடி வாங்கிறாய் என்று இவர் சொல்ல அண்ண உன்னால என்ன மீட்கேலாது. இருவது வருசமா உன்னப் பாக்கேல்ல. பாத்தது சந்தோசம். என்ன ஒரு கிழமையாவது உங்களோடையும் பிள்ளயளோடையும் சந்தோசமா இருந்தன் அது காணும். நீ சந்தோசமாப் போய்ச் சேர். முந்தி மாதிரி இரண்டோ ஒரு மாதத்துக்கு ஒருக்காலோ போன் பண்ணுறன் எண்டு சொல்லிக்கொண்டிருக்க அம்மாஆ எண்டு கத்திக்கொண்டு விளையாடிக்கொண்டு நிண்ட பிள்ளையள் பீதியோட ஓடி வரீனம். பாத்தா பரமு வெறியோட வந்துகொண்டிருக்கு. எனக்கு கை காலெல்லாம் லூசாகிப் போனாப்போல இருக்கு. பரம் தூசனத்திலேயே எங்களப் பாத்துத் திட்டுது. சதீஸ் அவனைப் பாத்து நீ போடா நான் வாறன். அவை போப்போயினம் தேவையில்லாமல் ஏன்ரா பிரச்சனை பண்ணிறாய் எண்டு சொல்ல அவனோ காதுகுடுத்துக் கேக்கேலாத வார்த்தைகள் எல்லாம் சொல்லுறான். நாலஞ்சு சனம் எங்களுக்குப் பக்கத்தில வந்து புதினம் பாக்கினம். எனக்கோ சரியான கூச்சமாக் கிடக்கு. சதீஸ் இனியும் நீ எங்களோட நிக்க வேண்டாம். எனக்கு வார கோவத்தில உவன நானே திருகிச் சாக்காட்டிப் போடுவன். கூட்டிக்கொண்டு போடா எண்டு இவர் கத்திறார். சதீஸ் அவன்ர கையை இழுத்துக்கொண்டு போக அவனோ திமிறிக்கொண்டு எங்க திருகடா பாப்பம் எண்டு வாறான். சதீஸ் மீண்டும் அவனை இழுத்துக்கொண்டு போகுது. மனிசனுக்கு லேசில கோவம் வராது வந்தால் ஏதாவது செய்யாமல் விடாது எண்டு எனக்குத் தெரியும். அதால இனி நான் இங்க ஒரு நிமிசமும் நிக்கமாட்டன் ஐயோ வாங்கோ எண்டு சொல்லிக்கொண்டே நான் கதிரையில் பொத்தெண்டு இருக்கிறன். பிள்ளையள் இரண்டும் அழுதுகொண்டிருக்குதுகள்.

மனிசனுக்கு விளங்கிப்போச்சு கோபம் எங்கேயோ காணாமல்ப் போக எனக்குக் கிட்ட வந்து என்னப்பா செய்யுது எண்டு கேட்கிறார். எனக்கு எழாமல் இருக்கு என்னை உடன எங்கயாவது கூட்டிக்கொண்டு போங்கோ எண்டு நான் அழத்தொடங்கீற்றன். மனிசன் உடன அழாத எழும்பு. வரேக்க ஒரு கோட்டல் பாத்தனான் அங்க உடன போவம் என்று என் கையப் பிடித்து எழுப்புகிறார். நான் எழும்பியும் அவன் எங்கேயாவது நிக்கிறானா என சுற்றுமுற்றும் பாக்கிறேன். அவன்ர தலை தெரியாததால் கெதியாப் போவம் என்று கூறியபடி மனிசனோட போறன். நல்லகாலம் கொட்டேல் பக்கத்தில்தான். அங்கபோய் ரூம் எடுத்து ரூமுக்குள்ள போய் அப்பிடியே கட்டிலில விழுந்ததுதான். அஞ்சாறு மணித்தியாலம் நல்ல நித்திரை சாப்பிடக்கூட எழும்பேல்லை.

பின்னேரம் நாலுமணிக்குத்தான் கண்விளிச்சம். மனிசன் கொட்டலில கேட்டுக்கொண்டு வாறன் சாப்பாடு ஏதும் இருக்கோ எண்டு சொல்லிக்கொண்டு கீழ போகக் கிளம்பினார். அவன் நாங்கள் இங்க வந்ததைக் கண்டானோ தெரியாது. நீங்கள் தனியக் கீழ போக வேண்டாம் என்று நான் தடுத்தன். இவர் போன் பண்ணி சாப்பாடு ஏதும் இருக்கா எண்டு கேட்டார். காலை உணவு மட்டும்தான் என்று அவர்கள் கூறினார்கள். மனிசன் தான் வெளியில போய் வாங்கிக்கொண்டு வாறன் எண்டதுக்கும் நான் விடேல்லை. பிறகு கோட்டல் ஆக்கள் ஊடாக வெளியில் உணவு ஓடர் பண்ணிச் சாப்பிட்ட பிறகுதான் கொஞ்சம் தெம்பு வந்திது.

மகிந்தன் அண்ணைக்கு போன் செய்து வரச் சொல்லுங்கோ எண்டன். சாச்சில போட்ட போனை எடுத்தனியோ எண்டு இவர் கேட்ட உடனதான் பதட்டத்தில அதை எடுக்காமல் வந்தது ஞாபகம் வந்திது. இனி என்ன செய்யிறது. திரும்பப் போய் எடுக்கவே முடியும். அதிலதானே அப்பா எல்லாற்ற நம்பரும் இருக்கு. என்ன செய்யிறது எண்டு நான் இழுக்க கொம்மாக்கு அடிச்சு மாமாவின்ர நம்பர் எடு ஒண்டும் இப்ப சொல்லிப் போடாத. கொம்மாவும் விடமாட்டா.புடுங்கிப் புடுங்கிப் புதினம் கேப்பா கவனம்.போனுக்குச் சார்ச் இல்லை எண்டு மட்டும் சொல்லு என்றார். நாங்கள் எங்கள் காரைக் கொண்டுவந்து மாமா வீட்டில் சுவிசில் விட்டுவிட்டுத்தான் தொடருந்தில் இத்தாலி வந்தோம். நாம் எங்கே சென்றாலும் போன் டயரியை காருக்குள் எடுத்துப் போட்டுவிடுவோம். அதனால் மாமாவிடம் சொன்னால் காருக்குளிருந்து டயரியை எடுத்து நம்பர் சொல்லுவார். ஆனால் நாங்கள் கொட்டேலின் போனில் அடிக்க அடிக்க அம்மாவும் அப்பாவும் வீட்டில் இல்லை. ஒவ்வொரு கா மணித்தியாலத்துக்கு ஒருக்கா அடிச்சு அடிச்சு இரவுஒன்பதரை மணிக்குத் தான் அவை வீட்டை வந்தினம். அதுக்குப் பிறகு மாமாவுக்கு அடிச்சு நம்பர் கேட்டோம். உன்ர போன் வேலை செய்யேல்லை என்னடா உவன் சதீசிட்டை இருக்குமே இப்ப நீ எங்க நிக்கிறாய் வேற நம்பர் விழுது என்றதும் மனிசன் மாமனிட்டை எல்லாத்தையும் சொல்லிப்போட்டார். மாமா உடன இந்தா வெட்டுறன் அவன கொத்திறன் உங்கயே நில் நான் நாளைக்கு விடியவே உங்க வாறன் எண்டு அந்தாளச் சமாதானப் படுத்தவே அரமணித்தியாலமாப் போச்சு. பிறகு மகிந்தன் அண்ணாவை அடுத்த நாள் காலமை வரச்சொல்லிக் கதைத்த பிறகுதான் மனம் கொஞ்சம் நின்மதியாச்சு. அந்தண்டு முழுக்க கனவில பரம்தான்.

அடுத்த நாள் காலையில் மகிந்தன் அண்ண வந்து தன்ர வீட்ட கூட்டிக்கொண்டு போனார். எங்கண்ட கதையைக் கேட்டுப்போட்டு நீங்கள் தப்பி வந்தது பெருங்காரியம். அந்த இடத்தில இத்தாலிக்காரன்களே போய் இருக்க ஆசைப்படுறேல்லை. என்ன துணிச்சலில நீ போனனி எண்டு ஏசினார். அடுத்த இரண்டு நாட்களும் அவர்களுடன் நின்று அவர்கள் அளவுக்கதிகமாக உபசரித்தாலும் எப்ப அந்த நாட்டை விட்டுப் போவோம் என்றுதான் இருந்துது. திரும்ப சுவிஸ் வந்து மாமாவும் இவரும் பலதடவை சதீசுக்கு போன் செய்தும் சதீஸ் எடுக்கவில்லை. நாங்கள் வசிக்கும் நாட்டுக்கு வந்தபின்னர் பலரிடம் விசாரித்தும் சதீஸ் பற்றி ஒருவருக்கும் தெரியவில்லை.

இவர் தனது சிறிய தாயாருக்கு போன் செய்து தெரியாததுபோல் சதீஸின் போன் நம்பரையும் விலாசத்தையும் கேட்டோம். அவன் முந்திமாதிரி இப்ப எங்களோட கதைக்கிறேல்ல. அவனோட கதைச்சால் ஒருக்கா எடுக்கச்சொல்லு தம்பி எண்டு சித்தி கவலைப்பட்டா. நாம் அவருக்கு ஒன்றுமே சொல்லவில்லை.சதீசிடம் சொல்வதாகக் கூறிவிட்டு வைத்துவிட்டோம். அதன்பின் சதீஸ் எம்முடனோ மாமாவுடனோ தன குடும்பத்தவருடன் கூட எந்தத் தொடர்பும் வைக்கவில்லை. நாம் தொடர்புகொண்டாலும் எடுப்பதுமில்லை. மகிந்தனுடன் கதைக்கும்போது சதீஸ் பற்றிக் கேட்டால் எப்பவாவது காண்பதாகக் கூறுவார். நாங்களும் சதீஸ் பற்றிக் கதைக்கத் தொடங்கினால் இப்பிடி இருக்குமோ அப்பிடி இருக்குமோ என்று மண்டையைப்போட்டு உடைப்பதுதான் மிச்சம். ஓரினச் சேர்க்கையாளராய் இருக்கலாம் என்றார் இவர். ஆறு மாதங்களின் முன் பரத்தின் சொந்தக்காரப் பெண் ஒருவரை சதீஸ் மணந்து கொண்டதாகக் கேள்விப்பட்டோம்.சதீஸ் பெற்றோர்களுக்குக் கூடச் சொல்லவில்லை.சித்தி இவரிடம் போனெடுத்து அழுத அழுகை பாவம் தான். ஒருக்கா நீ அவனப் போய்ப் பாக்கமாட்டியே என்று அழுதா. நாங்களே போய் தப்பினோம் பிழைச்சோம் என்று ஓடி வந்ததை அவவுக்குச் சொல்லமுடியுமோ. என்ர கவலை கட்டின பெண்ணையாவது ஒழுங்கா வச்சு சதீஸ் பாக்கிறானோ அல்லது பரம்தான் வச்சிருக்கிறானோ. இல்ல வெட்டிக்கிட்டிப் புதச்சுப் போட்டாங்களோ.கடவுளுக்குத்தான் வெளிச்சம். எனக்கு ஆராவது செங்கம்பள வரவேற்புத் தந்தாக்கூட நான் இத்தாலிப் பக்கம் போகவே மாட்டன்.

பரம் பற்றிய விபரங்களை முழுமையாகக்கூறாமல் மொட்டையாக முடித்துவிட்டீர்களே. பரமும் சதீசும் ஓரினச்சேர்க்கையாளர்கள் என்று ஊகத்திற்கு வைத்தால்கூட பரம் இப்படி பொதுஇடங்களிலும், மற்றவர்கள் முன்னாலும் மோசமாக நடந்துகொள்வது அவருக்கு ஏதோ மோசமான குணவியல்பு சிக்கல்கள் உள்ளதை தெரிவிக்கின்றது. வித்தியாசமான அனுபவம், வித்தியாசமான கதை. (நீங்களும் கொஞ்சம் வித்தியாசமான ஆள்தான் போல. பெயரைப்பார்த்தாலே தெரிகின்றது. - சும்மா பகிடிக்கு)

  • கருத்துக்கள உறவுகள்

ஓரினச்சேர்க்கை மட்டும் காரணமா இருக்கப் போதாது.. :unsure: கதைக்கு/அனுபவப் பகிர்வுக்கு நன்றிகள்..!

வெளியிடங்களில் கை நீட்டுபட்டால் இந்த பக்கங்களில் உடனே பொலிசுக்கு போன் பண்ணி விடுவார்கள். இது பலகாலமக்க நடக்க ஏன் அப்படி ஒருவரும் ஒன்றும் செய்ய வில்லை?. நான் நினைக்கிறன் மொசோ அந்த பக்கம் போனபோதுதான் விஸ்வரூபம் எடுத்து இருக்கிறது என்று. கனகாலம் தொடந்திருக்க சந்தரப்பம் இல்லை.

பரமு எப்படி ஒரு பஸ்தரிப்பிடம் பஸ்சுக்கு முன்னால் சென்று பஸ் எடுத்தார் என்று கூறவில்லை.

மகேந்திரனுக்கு சில விடையங்கள் தெரியுமென்று எடுக்க வேண்டும். அவர் அந்த இடத்தை பற்றி கொடுத்த விபரம், அவர் இவர்கள் இருவரையும் கட்டாயம் ஏன் அங்கே தொடந்து இருக்கிறார்கள் என்றதை பற்றி ஆராய வைத்திருக்கும். அவர் உறவுகளுக்கிடையில் சில விபரங்களை தெரிய வைப்பதால் தான் கைக்கு அடங்காத உதவிகளை உறவுகள் கேட்டால் தன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்றுதான் சொல்ல விரும்பவில்லை போல இருக்கு. அதனால் தான் இப்போது சத்தீசை இடை இடை மட்டும் காண்பதாக கூறுகிறார். ஆனால் உண்மையில் சத்தீசின் நிலையில் புதிதாக மாற்றம் ஏதும் வந்ததா என்பதற்கு ஒழுங்கான தடையம் ஒன்றும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

'பரம்' ஒரு வித்தியாசமான கதா பாத்திரம்!

ஆனாலும், அவர் தனக்கு ஒரு விதமான, அங்கீகாரத்தைத் தேடியலைகிறார். மற்றவர்கள், குறிப்பாகச் சதீஸின் குடும்பத்தினரின், அங்கீகாரம் தான் அதுவென எண்ணுகின்றேன்.

சதீசுக்கு, அறிவிக்காமல்,அவர் சாப்பாடு ஒழுங்கு பண்ணியது இதைத் தான் காட்டுகின்றது. ஒரு வேளை, சதீசிடம் அவர் சொல்லியிருந்து, சதீஸ், அதை அண்ணனுடன் சொல்லாமல் விட்டிருக்கும் சாத்தியமே அதிகம் உண்டு.

இந்த நிலையில், பரத்தின் நடவடிக்கைகள், புரிந்து கொள்ளக் கூடியவையே! தனது, உணர்சிகளை, வேறு விதங்களில் வெளிப்படுத்த அவருக்குத் தெரியாமல் இருக்கலாம். அல்லது, அலட்சியப் படுத்தப் படுவதை, அவரால் தாங்க முடியாமல் போயிருக்கலாம்.

நாங்கள், கதை எழுதுபவரின், கணவரின் தம்பி, என்ற பார்வையில், சதீஸின், குணாதிசயத்தை, அவரது அண்ணாவை, வைத்து எடை போடுகின்றோம். அது, எங்களது, கலாச்சாரப் பின்னணியின் தவறு.

எனவே, பரத்தின் மீது, ஒரு அனுதாப உணர்வே, எனக்கு ஏற்படுகின்றது.

நான் இந்த இடத்தில் இருந்திருந்தால், அநேகமாகப் பரத்தின் வீட்டுக்குச் சாப்பிடப் போயிருப்பேன். பரத்தின் நம்பிக்கையைப் பெறுவதன் மூலம், ஒரு வேளை, அவர்களுக்கிடையேயான தொடர்பின் உண்மைகள் தெரிய வந்திருக்கும், சாத்தியங்கள் அதிகம்!

நாயொன்று குரைத்தால், திருப்பி நாங்களும், குரைப்பதிலும் பார்க்க, அதை தடவிக் கொடுத்தால், நாய்க்கு எம்மீது, நம்பிக்கை ஏற்படும் சாத்தியங்கள், அதிகம்.

நல்ல ஒரு கதையைத் தந்த, சுமோவுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!

உங்களிடமிருந்து, களம் மேலும் எதிர்பார்க்கின்றது!

  • கருத்துக்கள உறவுகள்

அதுக்காக... பரம் ஓடும் பஸ்ஸில் கலாட்டா பண்ண முடியுமா?

பரம், ஒரு கடைந்தெடுத்த ஊத்தை வாழி.

சதீஸ் வாயிலை, கொழுக்கட்டை வைத்த... அம்மணா மூஞ்சி பையன்.

இரண்டு பேரும்... இத்தாலி பஸ்ஸை நாற, வைச்ச... காவாலிகள்.

புங்கையூரானின் பார்வையும் வித்தியாசமாய், கொஞ்சம் யதார்த்தமாயும் உள்ளது. நமது சமூகத்தில் வாழக்கூடிய ஓரினச்சேர்க்கையாளர்களின் உளவியல் தெரியாதபடியால் விடயங்களை மட்டுக்கட்டுவது கடினமாகவே உள்ளது.

ஈசன் ஆரம்பத்திலேயே இது ஓர் 'கே' கதைபோல முடியப்போகின்றதோ என்று எச்சரித்தார். ஓரினச்சேர்க்கை விடயமாய் அமைந்தாலும் நமது சமூகத்தவர் பற்றிய கதையாதலால் ஈசனைப்போல் சற்றி எட்டி யோசிக்கமுடியவில்லை.

நிறைய ஞானப்பழங்கள் இங்கு உள்ளதுபற்றி பெருமைப்படத்தான் வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

கறுமம்

  • கருத்துக்கள உறவுகள்

கறுமம்

கருமம். :lol: :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.