Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இயேசு அழைக்கிறாரும்,நானும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எனது நண்பி "இயேசு அழைக்கிறார்" என்னும் கிறிஸ்தவத்தின் ஒரு பிரிவு மதத்தை சேர்ந்தவர்...அவர் ஒரே என்னை தன்ட சபைக்கு ஒருக்கால் வா என்று கூப்பிட்டு கொண்டே இருப்பார்.நான் உங்கு வந்து என்னத்தை செய்ய என்று அவரிடம் கேட்டேன் சும்மா ஒருக்கால் வந்து என்ன நடக்குது பார் எனச் சொன்னார்.நானும் இன்டைக்கு வாறன்,நாளைக்கு வாறன் என தட்டிக் கழித்துக் கொண்டே வந்தேன்.

அண்மையில் கேரளாவில் இருந்து ஒரு பாதிரியார் வந்திருப்பதாகவும்,அவர் வந்து ஜெபித்தால் நல்லது நடக்கும் எனவும் அவர் கொஞ்ச நாள் தான் இருப்பார் என்றும்,அவர் போகும் முன் வந்து ஜெபிக்குமாறும் என்னிட‌ம் சொன்னார்.நானும் பார்த்தேன் அண்மையில் எனக்கு ஏற்பட்ட மன அழுத்தம் கார‌ணமாக ஒரு சேன்ஞ் தேவைப்பட்டுது போய்ப் பார்ப்போம் அப்படி என்ன தான் செய்கிறார்கள் என்று பார்க்கப் போனேன்.

எனது நண்பி தமிழாக இருந்தாலும் அவர் தமிழ் சபைக்கு போறதில்லையாம் ஏன் எனக் கேட்டதிற்கு அந்த தமிழ் சபைக்கு வருபவர்கள் விதம்,விதமாய் சாறி கட்டி நிறைய நகை போட்டுக் கொண்டு வருவார்களாம் தாங்கள் அப்படிப் போகாத படியால் தங்களை வித்தியாச‌மாய் பார்ப்பார்களாம் அதனால் தாங்கள் இந்தியர்கள் நட‌த்தும் இந்த சபைக்கு போகின்றோம் என சொன்னார்கள் ஆனால் அந்த தமிழ் சபையில் 6000 பேர் உறுப்பினர்களாக உள்ளனராம் :(

இனி குறிப்பிட்ட நாளன்று நண்பியோடு சேர்ந்து அவட‌ சபைக்கு போயாச்சு...எண்ணி 30,40 சனம் வந்திச்சுது அதில் பெரும்பாலும் ஹிந்தி பேசுபவர்கள் அதில் வயது போனவர்கள் அதிகம் இருந்தது ஆச்சரியம் :) ...அந்த சபையின் பாஸ்ட‌ர் வந்து ஒவ்வொருவராக கதைத்து கை குலுக்கினார் அதன் பின்னர் ஆங்கிலத்தில் பிர‌ச‌ங்கம் பைபிளை வாசித்து தொட‌ங்கியது பின்னர் இயேசுவைப் பற்றிய பாட‌ல் வரிகள் திரையில் போக அதைப் பார்த்து சபையில் உள்ளோரும் கையை பெரிதாக தட்டி,தட்டி பாடினார்கள்...அதன் பின்னர் கேர‌ளாவில் இருந்து வந்திருந்த பாதிரியார் அவருக்கு ஆங்கிலம் தெரியாது அவர் மலையாளம் பேசுவார் அவர் தன்ட‌ பிர‌ச‌ங்கத்தை தொட‌ங்கினார்.

தான் மிகுந்த கட்டுப்பாடுகள் உடைய இந்துக் குடும்பத்தில் பிறந்ததாகவும்,காலை எழுந்ததும் கோயிலுக்குப் போய் விபூதி பூசாமல் விட்டால் தனக்கு காலைச் சாப்பாடு கிடைக்காது என்றும் அப்படிப் பட்ட குடும்பத்தில் பிறந்த தன்னை இயேசு தத்தெடுத்து கொண்டார் என்று அவரைப் பற்றிய சுய புராணம் 1/2 மணித்தியாலத்திற்கு மேலாக நட‌ந்தது அதன் பின்னர் திரும்பவும் எல்லோரும் சேர்ந்து ஆங்கிலத்தில் பாட்டுப் பாட‌ இவர் அதற்கு மேலாக மலையாளத்தில் யேசுவின் நாமத்தால் என சொல்லிப் போட்டு[டிரான்சிலேட் பண்ண ஆங்கிலம் தெரிந்த ஒருவர் இருந்தார்] பின்னர் மலையாளத்தில் மந்திர‌ம் மாதிரி என்னவோ சொல்லத் தொட‌ங்கினார் அதை மொழி மாற்றம் செய்யவில்லை எனக்கு என்னவோ அவர் ஒம் முருகா,ஒம் முருகா என கூப்பிட்ட மாதிரி இருந்தது :lol:

அவர்களுடைய பிரார்த்தனை எல்லாம் முடிந்ததும் தனித் தனியே ஒவ்வொருவராய் கூப்பிட்டு ஆசிர்வதித்தார்...என்னுடைய முறை வந்ததும் நானும் போனேன் தலையில் கை ஆசிர்வதித்து கொண்டு இயேசுவின் நாம‌த்தாலே என சொல்லிக் கொண்டு தனக்குள்ளே என்னவோ முணுமுணுத்தார்.நான் முருகா,முருகா காப்பாற்று முருகா என்று என்ட‌ மனதிற்குள் சொல்லிக் கொண்டு இருந்தேன் :D அவரும் எங்கட‌ மந்திர‌ங்களை சொன்ன மாதிரித் தான் என் மனதிற்குள் பட்டது.

அந்த மாலைப் பொழுது வித்தியாச‌மான பொழுதாக அமைந்தது...கட‌வுள் எல்லோரும் ஒன்று என நினைப்பவர்கள் எங்கட‌ கட‌வுளோட‌ சேர்த்து யேசுவையும் கும்பிட்டு போறது அதற்காக ஏன் மதம் மாற வேண்டும்?...கட‌வுள் இருக்கிறாரோ,இல்லையோ எனக்குத் தெரியாது ஆனால் சிலை வழிபாட்டை மதம் கொண்டு வந்ததிற்கு கார‌ணம் அதன் மூலம் கட்டுப்பாட்டை கொண்டு வர‌லாம் என்பதால் தான் என்று நினைக்கிறேன்.

அந்த சபையில் எனக்கு பிடித்த விட‌யங்களாக நான் நினைப்பது கூட்டுப் பிரார்த்தனை.எல்லோரும் சேர்ந்து ஒன்றுக்காக வழிபடும் போது அது கிடைக்கும் என்பது எனது கருத்து மற்றது முழங்கால் பிரார்த்தனை ஆனால் அவர்கள் முழங்காலில் இருந்து பிரார்த்தனை செய்யவில்லை அது பற்றி அந்த பாதிரியார் சொன்னார் அநேகமாக கத்தோலிக்கவர்கள் முழங்கால் பிராத்தனை தான் செய்கிறவர்கள்.

இந்த அனுபவம் போதும் இனி மேல் இப்படியான சபைக்கு போறதில்லை என்பது ர‌தியின் தீர்மானம்.

நிர்வாகத்திற்கு இந்த பதிவு மதத்தின் உணர்வை பாதிக்குமாறு இருந்தால் அதை நீக்கி விட‌வும் அதே மாதிரி இந்த சபையை சேர்ந்தவர்கள் யாழில் இருந்தால் உங்கள் மத உணர்வை புண் படுத்தி எழுதியிருக்குது என்று நினைக்காமல் ர‌தியின் அனுபவப் பகிர்வாக நினையுங்கள் :icon_idea:

  • Replies 67
  • Views 11k
  • Created
  • Last Reply

சந்திக்கு வரும் விடயங்களை சபையில் வைத்து பேசுவதில் தவறில்லை ரதி .எனது கசின் ஒருத்தியும் எப்படியோ உந்த அலையில் அடித்துக் கொண்டு போகப்பட்டு இப்போ உந்தக் கூட்டத்துடன் தான் இருக்கின்றா இலண்டனில்.

பூ பொட்டு நகை எதுவும் போடாது மூளிக்கோலம் தான். ஆகப் பெரிய துக்கம் என்னெண்டால் தனது 18 வயது மகனுக்கு வருத்தம் வந்த போது இயேசு காப்பாத்துவார் என்று கூடியிருந்து பிரசங்கம் செய்து செய்தே ஹாஸ்பிட்டல் கூட்டிப்போகாது மகனை இயேசுவிடம் ? அனுப்பிவிட்டு விட்டாள்.

21 ஆம் நூற்றாண்டிலும் இப்படிப்பட்ட ஆட்கள்..

டிஸ்கி: அவவிற்கு 18 வயதில் மகன் இருந்தான் என்பதற்காக என்னையும் வயது வந்தவர்கள் லிஸ்டில் சேர்த்து தலையில் நரை வைத்துப் பார்க்க வேண்டாம் :D

பகிர்வுக்கு நன்றி ரதி அக்கா ........இனிமேல் இப்படியான சபைகளுக்கு போவிடாதிர்கள் .......மூளைச்சலவை செய்யும் கூட்டம்

பலர் இப்போ பைத்தியம் பிடித்து அலைகிறார்கள் .......மதம் என்ற போர்வையில் தமக்கென்றொரு வட்டம் போட்டு

வாழும் கூட்டம்..........உண்மையில் நான் ஒரு கத்தோலிக்கன் என்ற வகையில் அந்த மதத்தை பற்றி அறிந்தவன் என்ற வகையில் கூறுகிறேன் ..இவர்கள் காட்டும் இயேசு அதுவல்ல,இவர்கள் காட்டும் மறை அதுவல்ல இவர்கள் காட்ட நினைப்பது சாத்தானையே..........என்னால் அடித்துச்சொல்ல முடியும் ,இவக்ர்களுடன் மதம் ,பைபிள் பற்றி விவாதிக்கவும் முடியும் .....அதில் பாண்டித்தியம் ஓரளவு என்னிடம் உள்ளது ...எனக்கு தெரியாத நான் அறியாத மதத்தை பிழை அல்லது பாவிகள் என்று சொல்லும் உரிமை எனக்கில்லை .ஆனால் இவர்கள் சொல்வார்கள் ....அதுவே ஓர் சிறிய உதாரணம் ...........ஆனாலும் எனக்கு கவலை எம் பாரம்பரிய மதமான ,எம் கலாச்சாரமதமான இந்து மதத்தில் இருந்து இதை நோக்கி போகும்போதுதான் தாங்கமுடியவில்லை .......சில காலங்களிற்கு முன் இங்கே ஓர் ஐயர் குல பெண்மணி ஜெர்மன் நாட்டிலிருந்து அந்த மதம் சார்பாக எனக்கு போதிக்க முயன்றார் ..அது என்னால் தாங்கமுடியாத வேதனையாக இருந்தது ...

அப்புறம் அவரும் ,அவரது கூட்டமும் துண்டைக்காணோம்,துணியை காணோம் என்று என்னையும் சபித்து விட்டு ஓட்டம் எடுத்தனர்...............இறைவனின் தூதர்கள் மனிதர்களை சபிப்பார்களா ,மன்னிப்பார்களா.......ஆனால் சாத்தானின் தூத்ர்கலாலேயே மனிதனை சபிக்கமுடியும்.........இதுவே எனக்கு தெரிந்த மதம் கற்று தந்த உண்மை.........நன்றி ...........இந்தக்க்ருத்தால் யாராவது மனம் புண்பட்டால் நிச்சயம் இதை நிர்வாகம் அகற்றலாம் ................உனக்கு ஒரு கை இடைஞ்சலாய் இருந்தால் அதை வெட்டி எடுத்துவிடு.........ஏசுபிரான் .நன்றி

நிர்வாகத்திற்கு இந்த பதிவு மதத்தின் உணர்வை பாதிக்குமாறு இருந்தால் அதை நீக்கி விட‌வும் அதே மாதிரி இந்த சபையை சேர்ந்தவர்கள் யாழில் இருந்தால் உங்கள் மத உணர்வை புண் படுத்தி எழுதியிருக்குது என்று நினைக்காமல் ர‌தியின் அனுபவப் பகிர்வாக நினையுங்கள் :icon_idea:

திரியை இனியபொழுது பகுதியில் இருந்து பேசாப்பொருள் பகுதிக்கு நகர்த்தியுள்ளேன்.

இந்து மதத்தை விமர்சித்து எழுத யாழில் இடம் இருப்பது போல ஏனைய மதங்களையும் விமர்சிக்கலாம். விமர்சனம்/விவாதம் ஆரோக்கியமான விதத்திலும், நாகரீகமாகவும் இருந்தால் எதையும் பற்றிக் கதைக்கலாம் என்பது என் தாழ்மையான கருத்து,

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குத்தெரிந்த ஒரு ஈழத்து அன்ரிக்கு இரண்டு பிள்ளைகள்.. இந்தியாவில் இருந்தார். கணவன் வெளிநாட்டில். பிறகு ரதியைக் கூட்டிக்கொண்டு போனமாதிரி அவவும் போனவ. அதனால் ஈர்க்கப்பட்டு குடும்ப வாழ்க்கையில் பிரச்சினை ஏற்பட்டுவிட்டது. இப்போது விவாகரத்தாகி தனியே வாழ்கிறார் எனக் கேள்வி. :blink:

  • கருத்துக்கள உறவுகள்

இது அந்தக்காலத்திலிருந்தே நடக்கும் ஒன்று.

81 அல்லது 82 இருக்கும்.

எனது மைத்துணரின் கரைச்சல் தாங்கமுடியாது ஒரு நாள் போனேன். மைத்துணருக்கு பெரும் சந்தோசம். எல்லோருக்கும் கை கொடுத்து எல்லோரையும் கொஞ்சி சந்தோசமாக இருந்தேன்.

வெளியில் வந்ததும் மைத்துணர் கேட்டார் எப்படி என்று. இவ்வளவு நாளும் வராமல் விட்டது எவ்வளவு தப்பு. இனி ஒவ்வொரு கிழமையும் வருவேன் என்று சொன்னேன். அப்படியா என்றார் ஆச்சரியத்தில்.

இப்படி வடிவான காய்களை கொஞ்ச முடியுமென்று முன்பே தெரியாதே என்றேன். அடிக்க வந்தார். ஓடி விட்டேன்.

அதன் பின் என்னை அவர் கேட்பதே இல்லை. :lol::D :D

இந்தக்கூட்டம் ஒரு கெட்ட கூட்டம்.கிட்டவும் வரவிடாதீர்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2009 ம் ஆண்டு நவம்பர் கடைசியோ அல்லது டிசம்பர் தொடக்கமோ சரியாக ஞாபகம் இல்லை நான் பேருந்தில் பயணித்து கொண்டு இருக்கும் போது ஒருவர் ஏறினார்.40 வயதிற்கு மேல் அவருக்கு இருக்கும் பார்த்தாலே தமிழர் எனத் தெரிந்து விடும்...பேருந்தில் ஏறியவர் அதில் இருக்காமல் தொண்டையை செருகிக் கொண்டு உரை ஆற்ற வெளிக்கிட்டார் நான் நல்ல மனிசனனாய் இருக்கிறார் எங்கட பிரச்சனையைப் பற்றி வெள்ளையளுக்கு ஏதோ சொல்லப் போகிறாராக்கும் என்று பார்த்தால் ஆள் தங்கட மதத்தைப் பற்றிக் கதைக்குது...எப்படி இருக்கும் மூஞ்சில பிடிச்சு குத்தோனும் போல இருந்தது ^_^

  • கருத்துக்கள உறவுகள்

[size=3] " மதம் பிடித்தவர்கள். " மற்றவர்களை இழுக்க்வேண்டும் . பரப்ப் வேண்டும் என்று நிற்பார்கள். தாய் நாட்டில் கத்தோலிக்கமும் சைவமும் ஒற்றுமையாக் தானே இருந்தோம். பரப்புரை .எல்லா நாடுகளிலும் இந்த வியாதி இருக்கு .[/size]

கவனம் இப்பிடியே உங்களையும் மாத்தி விடுவினம்

  • கருத்துக்கள உறவுகள்

கவனம் ரதி.

நான் நினைக்கிறேன் இந்து மதத்தவரின் வழிபாட்டிலுள்ள தவறுகளும்,இந்துக் கோயில்களுக்குப் போனாலே எதோ கடவுளின் அனுக்கிரகம் பெற்றவர்போல் ஒவ்வொருவரும் நடப்பதும்,மாற்றங்களை மனித மனங்கள் எதிர் பார்ப்பதால் இலகுவாகக் கிடைக்கக்கூடிய, நம்பக்கூடிய விடயங்களுக்குள் ஆழ்ந்து போகின்றனர் மன வலிமை அற்றோர்.

ஒருநாள் ஞாயிறு காலை ஒன்பதுக்கு எல்லோரும் கூடி இருந்து காலை உணவு உண்டுகொண்டிருக்க கதவு தட்டப்படும் சத்தம்.போன் செய்யாமல் யாரென்று பார்த்தால் வண்கம் நாங்கல் யேசுவிடம் இருந்து வரோம்.உங்கல் நட்டில் நிரய பிரைச்சனை என்று கொன்னைத் தமிழ் கதைத்தபடி ஒரு ஆங்கிலேயப் பெண். எண்கள் பிரச்சினையை நாங்களே தீர்த்துக் கொள்கிறோம் என்று கூறி கதவைச் சாற்றிவிட்டேன்.அதன்பின் வருவதில்லை. இந்து மதத்தின் சிறப்பே எவரையும் எம்மதத்தில் சேரும்படி கேட்பதில்லை.

இந்து மதம் ஏன் யாரையும் சேர்ப்பது இல்லை என்று சொன்னால் இந்தத் திரி திசை திரும்பிவிடும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்து மதம் ஏன் யாரையும் சேர்ப்பது இல்லை என்று சொன்னால் இந்தத் திரி திசை திரும்பிவிடும்

சொல்லுங்கள் சபேசன்! நல்ல கெட்ட விடயங்கள் யார் சொன்னாலும் வரவேற்கத்தக்கதே!

இங்கே திரிகள் திசைமாறி,தடுமாறி போவதைப்பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்களா?.....எழுதுங்கள்.........தலைப்போடு ஒட்டியதாக இருக்க வேண்டும். :D

நான் இப்படியான சபைக்கு சென்று வந்துள்ளேன். எதிர்காலத்திலும் இடையிடையே செல்லவேண்டிய தேவை உள்ளது, காரணம் எனக்கு வேண்டியவர்கள் இதில் ஐக்கியமாகிவிட்டார்கள். நீங்கள் வெளியில் நின்று பார்க்கும்போது கொஞ்சம் சஞ்சலமாக உணரலாம். உள்ளே போனால் எல்லாம் ஒன்றுதான். மதங்கள் என்பவை அவரவர் விருப்பம். இந்துசமயத்தினுள்ளும் ஆயிரம் வில்லங்கங்கள் உள்ளனதானே.

நான் அறிந்தவரையில் இவ்வாறான சபைகளில் எனக்கு அறிந்தவர்களின் ஐக்கியப்பாட்டை அவர்களின் வாழ்க்கையின் பகுதியாக வாழ்க்கை முறையாகவே பார்க்கின்றேன். எல்லாவற்றையும் சமாளித்துப்போகவேண்டியதுதான். எனது வாழ்க்கைமுறையைத்தேர்வு செய்வது எனது விருப்பம். மற்றவனை நீ அங்கே போகாதே,கூடாது, தவறானது என்று நான் எப்படிக்கூறுவது? அவ்வாறான ஆலோசனைகள் எனக்கும் எனக்கு வேண்டியவர்களுக்குமான உறவுநிலைகளில் விரிசல்களை ஏற்படுத்துவதாகவே அமையும்.

மதமாக, சபையாக இவற்றை அணுகாது அங்குள்ளவர்களை, அங்கு வந்து செல்பவர்களை எம்மைப்போன்ற மனிதர்களாக மதித்து, அவர்களுடன் சேர்ந்து பழகினால் நல்ல அனுபவங்களைப்பெறமுடியும்.

எனக்கும் உறவினர்கள் நண்பர்கள் என சிலர் வேதத்தில் குதித்துவிட்டார்கள் .எனது மதிப்பிற்குரிய யாழ் இந்து ஆசிரியர் ஒருவர் உட்பட .இதில் பலர் போவது ஒரே சேர்ச்த்தான்.அந்த சேர்ச் ஆறு மில்லியன் டொலரில் ஒரு தமிழ் பாஸ்டாரால் வாங்கி நிர்வகிக்கபடுகின்றது .அதற்குள் பெரிய மண்டபம் வேறு உண்டு .

ஒரு வேதக்கார உறவினரின் கல்யாண வீட்டிற்கு அங்கு போனால் அந்த சேர்ச் பாஸ்டர் யாழ் இந்துவில் எனது வகுப்பு படித்தவர் (சாவகச்சேரி) பெயர் எழுதவில்லை .என்னை கண்டுவிட்டு உடனே வந்து கதைத்து எல்லா இடமும் வேறு சுற்றிக்காட்டினார் .நேரமிருந்தால் பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு வரச்சொன்னார் . வந்திருந்த உறவினர்களுக்கு அதிர்ச்சி ஏனெனில் பாஸ்டர் அவர்களுக்கு பெரிய ஒரு ஆள் .

இவர்களுடன் ஒரு முறை பீச்சுக்கு போனேன் .அங்கு அவர்கள் உதைபந்து விளையாட நானும் கலந்து கொண்டேன் .ஒருவரின் கையில் பந்து பட கான்ட் போலென்று ஒருவர் சொல்ல மற்றவர் மறுக்க ஒரே வாக்குவாதம் .நான் கேட்டேன் "என்னப்பா வேதத்திற்கு மாறி கடவுள் நம்பிக்கையுடன் பெரிய இலட்சியவாதிகளாக இருப்பீர்கள் என்று பார்த்தல் ஒரு கான்ட் போலுக்கு இந்த சண்டை பிடித்து ஆளை ஆள் பொய்யன் ஆக்குகின்றிர்கள் என்று " எல்லோர் முகமும் மாறிவிட்டது .

எந்த மதமானாலென்ன எல்லாரும் ஆசா பாசம் உள்ள மனிதர்கள் தான் .

நான் இப்படியான சபைக்கு சென்று வந்துள்ளேன். எதிர்காலத்திலும் இடையிடையே செல்லவேண்டிய தேவை உள்ளது, காரணம் எனக்கு வேண்டியவர்கள் இதில் ஐக்கியமாகிவிட்டார்கள். நீங்கள் வெளியில் நின்று பார்க்கும்போது கொஞ்சம் சஞ்சலமாக உணரலாம். உள்ளே போனால் எல்லாம் ஒன்றுதான். மதங்கள் என்பவை அவரவர் விருப்பம். இந்துசமயத்தினுள்ளும் ஆயிரம் வில்லங்கங்கள் உள்ளனதானே.

நான் அறிந்தவரையில் இவ்வாறான சபைகளில் எனக்கு அறிந்தவர்களின் ஐக்கியப்பாட்டை அவர்களின் வாழ்க்கையின் பகுதியாக வாழ்க்கை முறையாகவே பார்க்கின்றேன். எல்லாவற்றையும் சமாளித்துப்போகவேண்டியதுதான். எனது வாழ்க்கைமுறையைத்தேர்வு செய்வது எனது விருப்பம். மற்றவனை நீ அங்கே போகாதே,கூடாது, தவறானது என்று நான் எப்படிக்கூறுவது? அவ்வாறான ஆலோசனைகள் எனக்கும் எனக்கு வேண்டியவர்களுக்குமான உறவுநிலைகளில் விரிசல்களை ஏற்படுத்துவதாகவே அமையும்.

மதமாக, சபையாக இவற்றை அணுகாது அங்குள்ளவர்களை, அங்கு வந்து செல்பவர்களை எம்மைப்போன்ற மனிதர்களாக மதித்து, அவர்களுடன் சேர்ந்து பழகினால் நல்ல அனுபவங்களைப்பெறமுடியும்.

பிரச்சனை இவர்கள் மற்ற மதங்கள் சரியில்லை, எம் மதம் தான் மிகச் சரியானது என்று சொல்லித்தான் மத மாற்றத்துக்கு தூண்டுகின்றவர்கள். இங்கு கனடாவில் 3 முறை எம் வீட்டுக்கு வந்து மிகவும் கடுமையாக பேசி அனுப்ப வேண்டி வந்தது. மூன்றாம் தரம், security guard இனையும் கூப்பிட்டு பேச வேண்டி வந்தது (Condo என்பதால் அனுமதி இன்றி யாரும் கட்டிடத்துக்குள் நுழைவது சட்டப்படி தவறு). இவர்களின் போதனைகளில் முக்கால்வாசி மூளைச் சலவை செய்வது தான். அதுவும் ஒருவர் அல்லது ஒரு குடும்பம் கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கும் போது அதை அறிந்து விட்டார்கள் என்றால் அவ்வளவு தான். விட மாட்டார்கள்.

எல்லா மதங்களும் ஒன்றுதான், கடவுள் எல்லாம் ஒன்றுதான், எல்லா நம்பிக்கைகளும் மனிதனை வளப்படுத்துவன தான் என்று இவர்களிடம் சொல்லிப் பாருங்கள்...இல்லை தாங்கள் தான் உண்மையானவர்கள் என்றும் தன் நம்பிக்கை மாத்திரமே மானுட விடுதலையைத் தரும் என்றும் தொடங்கி விவாதிக்க ஆரம்பித்து விடுவார்கள். கொஞ்சம் செவி மடுத்துக் கேட்டால் உண்மையாகவே நாங்கள் சாத்தான்களா என்று எமக்கே சந்தேகம் வந்துவிடும் அளவுக்கு கதைப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் இதில் நிறைய அனுபவம் உண்டு அதைத்தான் எனது தொடரான க .கா.கா. வில் அடுத்ததாக எழுத முடிவெடுத்து பைபிளை மார்போடு அணைத்த போலின் என்று முடித்திருந்தேன் நேரம் கிடைக்கும் போது அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு தெரிந்தவர்! தமிழர்!!!!!....ஆரம்பத்தில் ஜெகோவா. குடும்ப சூழ்நிலை காரணமாய் இப்ப யேசுஅழைக்கிறார்.மூத்தவள் கேரளாக்காரனை மாப்பிளையாக்கிட்டாள்.இனி......

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் இப்படி மதம் பரப்புபவர்களுடன் பொழுதுபோக்கிற்கு கதைப்பது பிடிக்கும். தமிழர்கள் எப்போதும் என் கதையைக் கேட்டுப் பயந்துபோய்விடுவார்கள்!

ஒருமுறை 3 - 4 கறுப்பின ஆண்கள், பெண்கள் ஒரு தமிழர் என்று வந்து கதவைத் தட்டினர். கடவுளைப் பற்றி பிரச்சாரம் தொடங்க முதல் என்ன மதம் என்று கேட்டனர். சிலவேளை முஸ்லிம் என்று சொன்னால் நடையைக் கட்டிவிடுவார்களோ தெரியாது.. நான் உள்ளே வந்தால் கடவுளைக் காட்டலாம் என்றேன். வந்தார்கள்.. உள்ளே சீருடையுடனுன் இருந்த தலைவர் பிரபாகரனின் கலண்டரைக் காட்டி இவர்தான் எங்கள் கடவுள் என்றேன். வந்தவர்கள் ஓடிப்போய் விட்டார்கள். அதன் பின்னர் தொந்தரவு தந்ததில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் இப்படி மதம் பரப்புபவர்களுடன் பொழுதுபோக்கிற்கு கதைப்பது பிடிக்கும். தமிழர்கள் எப்போதும் என் கதையைக் கேட்டுப் பயந்துபோய்விடுவார்கள்!

ஒருமுறை 3 - 4 கறுப்பின ஆண்கள், பெண்கள் ஒரு தமிழர் என்று வந்து கதவைத் தட்டினர். கடவுளைப் பற்றி பிரச்சாரம் தொடங்க முதல் என்ன மதம் என்று கேட்டனர். சிலவேளை முஸ்லிம் என்று சொன்னால் நடையைக் கட்டிவிடுவார்களோ தெரியாது.. நான் உள்ளே வந்தால் கடவுளைக் காட்டலாம் என்றேன். வந்தார்கள்.. உள்ளே சீருடையுடனுன் இருந்த தலைவர் பிரபாகரனின் கலண்டரைக் காட்டி இவர்தான் எங்கள் கடவுள் என்றேன். வந்தவர்கள் ஓடிப்போய் விட்டார்கள். அதன் பின்னர் தொந்தரவு தந்ததில்லை.

ஆகா.... :lol: :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கும் இப்படி மதம் பரப்புபவர்களுடன் பொழுதுபோக்கிற்கு கதைப்பது பிடிக்கும். தமிழர்கள் எப்போதும் என் கதையைக் கேட்டுப் பயந்துபோய்விடுவார்கள்!

ஒருமுறை 3 - 4 கறுப்பின ஆண்கள், பெண்கள் ஒரு தமிழர் என்று வந்து கதவைத் தட்டினர். கடவுளைப் பற்றி பிரச்சாரம் தொடங்க முதல் என்ன மதம் என்று கேட்டனர். சிலவேளை முஸ்லிம் என்று சொன்னால் நடையைக் கட்டிவிடுவார்களோ தெரியாது.. நான் உள்ளே வந்தால் கடவுளைக் காட்டலாம் என்றேன். வந்தார்கள்.. உள்ளே சீருடையுடனுன் இருந்த தலைவர் பிரபாகரனின் கலண்டரைக் காட்டி இவர்தான் எங்கள் கடவுள் என்றேன். வந்தவர்கள் ஓடிப்போய் விட்டார்கள். அதன் பின்னர் தொந்தரவு தந்ததில்லை.

நக்கல்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவர்களுடைய பிரசங்கம் என்னும் சொல்லிக் கொள்ளும் அரைவாசி நேரமும் எங்கட மதத்தை நக்கலடிக்கிறதில் தான் முடிந்தது...உலகம் அழியப் போகிறது நல்லவர்கள் தப்ப,கெட்டவர்கள் அழிவார்கள் என சொன்னால் பிழையில்லை அதை விடுத்து யேசுவை நம்பும் தங்கட மதத்தை சேர்ந்தவர்கள் மட்டும் தான் தப்புவார்களாம்,நாங்கள் எல்லாம் அழிந்து போவோமாம் :( இது என்ன கதை

பிரச்சனை உள்ள ஆட்களைத் தேர்ந்தெடுத்து தான் மத மாற்றம் செய்வார்கள்...நிறைய தனிய இருக்கும் எங்கட பெடியங்கள் இங்கு போகிறார்களாம்...எங்கட ஆட்கள் தான் ஈசியாய் மதம் மாறுவார்கள் இதே முஸ்லீம்கள் என்டால் மாத்திப் போடுவினமே!

நான் ஊரில் இருக்கும் போது மாதா,அந்தோணியார் கோயிலுக்குப் போறது.இப்பவும் நம்பிக்கை இருக்குது ஆனால் இப்படியான சபை வைத்திருப்பவர்கள் போலி என்பது தான் எனது கருத்து

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாத்தையும் விட.........இவ்வளவுகாலமும் சைவ சமயத்திலையிருந்து தங்கடை காலத்தை வீணாக்கி போட்டினமாமெல்லே......என்ரை அண்ணா சொல்லுறார்.

  • கருத்துக்கள உறவுகள்

நக்கல்....

உண்மையைச் சொன்னாலும் சிக்கலாக இருக்கே.. இந்த வருடக் கலண்டரும் இருக்கு (சீருடையில்லாமல்).

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையைச் சொன்னாலும் சிக்கலாக இருக்கே.. இந்த வருடக் கலண்டரும் இருக்கு (சீருடையில்லாமல்).

சமாதானம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.