Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீண்டும் குதிரைகள் வெளிக் கிளம்பும்..: கவிதை: நிழலி

Featured Replies

வரலாற்றில் புதையுண்டு போன

நிலங்களில் இருந்து

மீண்டும் குதிரைகள்

வெளிக் கிளம்பும்..

நூற்றாண்டுகளாக சாம்பல்

மூடிய வீதிகளில்

அந்நிய பாதச் சுவடுகளை

மேவி தம் கால்கள்

பதிக்கும்.

இருண்ட கானகங்களில்

மழையின் பின் மரங்கள்

பொந்துகளுக்குள் பொத்தி வைத்த

நீரை வாரி இறைக்க

நுதல் வழி வழியும்

நீர் படர்ந்து

காய்ந்த மண்ணின் துகள்கள்

ஒவ்வொன்றும்

உயிர்த்து எழும்.

எம் கடற்கரைகளில்

எங்கள் கூழைக்கிடாக்கள்

சேர்த்து வைத்திருந்த

மீன் குஞ்சுகளின்

ஆரவாரங்களில்

கடலின் மெளன வெளிகளில்

தாண்டு போயிருந்த எம்

படகுகள் மீண்டும் எம் கடல்களில்

வலம் வரும்

கால அசைவியக்க காற்றில்

எப்பொழுதும் மரங்கள் காய்ந்து கிடப்பதில்லை

எப்போதும் வானம் இருண்டு கிடப்பதில்லை

எப்போது கனவுகள் பொய்த்தே போவதில்லை

வரலாற்றில் புதையுண்டு போன

நிலங்களில் இருந்து

மீண்டும் எங்கள் புரவிகள்

வெளிக் கிளம்பும்..

ஆயிரம் சக்கரங்கள் பூட்டி

எங்கள் மண்ணில்

எங்கள் தெருக்களில்

எங்கள் தேர்கள்

மீண்டும் வலம் வரும் !!

19-Oct-2012: 4:15 PM

  • கருத்துக்கள உறவுகள்

பெருமூச்சோடு நம்பிக்கையும் தரும் கவிதை.நன்றி நிழலி.

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]நூற்றாண்டுகளாக சாம்பல்[/size]

[size=4]மூடிய வீதிகளில்[/size]

[size=4]அந்நிய பாதச் சுவடுகளை[/size]

[size=4]மேவி தம் கால்கள்[/size]

[size=4]பதிக்கும்.[/size]

மானிட வரலாறு, என்றும் நேராகப் பயணித்ததில்லை!

ஒரு சுழற்சி முறையிலேயே இயங்குகின்றது!

அந்த நாளுக்காக, உங்களுடன் நானும் ஏக்கத்துடன் ஏங்குகிறேன்!

  • கருத்துக்கள உறவுகள்

கால அசைவியக்க காற்றில்

எப்பொழுதும் மரங்கள் காய்ந்து கிடப்பதில்லை

எப்போதும் வானம் இருண்டு கிடப்பதில்லை

எப்போது கனவுகள் பொய்த்தே போவதில்லை

வரலாற்றில் புதையுண்டு போன

நிலங்களில் இருந்து

மீண்டும் எங்கள் புரவிகள்

வெளிக் கிளம்பும்..

ஆயிரம் சக்கரங்கள் பூட்டி

எங்கள் மண்ணில்

எங்கள் தெருக்களில்

எங்கள் தேர்கள்

மீண்டும் வலம் வரும் !!

19-Oct-2012: 4:15 PM

மிகவும் பிடித்திருக்கின்றது.

நிழலி ஏன் வலம்வரும் என்று ஆணித்தரமாகக் கூறி முற்றுப்புள்ளி வைக்காமல் ஆச்சரியக்குறியீட்டை போட்டுள்ளீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவிதை..பகிர்வுக்கு மிக்க நன்றி நிழலி அண்ணா..

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி, இது நீங்கள் இயற்றியதா?? அருமை. இதில் சொல்லப்பட்டவை நடக்க இறைவனை நிதம் பிரார்த்தித்து வருகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]கால அசைவியக்க காற்றில்[/size]

[size=4]எப்பொழுதும் மரங்கள் காய்ந்து கிடப்பதில்லை[/size]

[size=4]எப்போதும் வானம் இருண்டு கிடப்பதில்லை[/size]

[size=4]எப்போது கனவுகள் பொய்த்தே போவதில்லை[/size]

[size=4]வரலாற்றில் புதையுண்டு போன[/size]

[size=4]நிலங்களில் இருந்து[/size]

[size=4]மீண்டும் எங்கள் புரவிகள்[/size]

[size=4]வெளிக் கிளம்பும்..[/size]

[size=4]ஆயிரம் சக்கரங்கள் பூட்டி[/size]

[size=4]எங்கள் மண்ணில்[/size]

[size=4]எங்கள் தெருக்களில்[/size]

[size=4]எங்கள் தேர்கள்[/size]

[size=4]மீண்டும் வலம் வரும் !![/size]

மிகவும் பிடித்திருக்கின்றன இந்தவரிகள்...மனதால் மட்ட்டுமே உணரக்கூடிய ஒரு நம்பிக்கையை திடமாக மனதுள் விதைத்து செல்கிறது படிக்கையில்..நன்றி அண்ணா கவிதைக்கு..

தொலைந்துபோன குதிரை, குடைசாய்ந்த தேர், கவசங்கள் எல்லாம் பறிபோய், மார்பெல்லாம் அம்பு பாய்ந்து குருதி பாய 'உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது என்ற' பாட்டோடு ஓடுகின்ற சீன் கடுப்பேத்தாத தமிழனே இல்லை. எங்கள் குதிரைகளின் குளம்பொலி என்ற சிந்தனையே மகிழ்வாககத் தான் இருக்குது.

ஆனால், எனக்கென்னவோ கவிஞர் இந்தக் கவிதையினை குதிரைக் குளம்புகள் கொண்டு புழுதி கிளப்பப்பாடியதாய்த் தோன்றவில்லை. மாறாக, தனது சமூகத்தின் ஏதோ அசைவியக்கம் சார்ந்த எச்சரிப்பாய், அல்லது விமர்சனமாய்ப் பாடியிருப்பாரோ என்று தோன்றுகின்றது. அதற்கான ஒரே ஒரு காரணம் பின்வரும் பந்தி.

எம் கடற்கரைகளில்

எங்கள் கூழைக்கிடாக்கள்

சேர்த்து வைத்திருந்த

மீன் குஞ்சுகளின்

ஆரவாரங்களில்

கடலின் மெளன வெளிகளில்

தாண்டு போயிருந்த எம்

படகுகள் மீண்டும் எம் கடல்களில்

வலம் வரும்

19-Oct-2012: 4:15 PM

கூழைக்கிடாக்கள் சேர்த்துவைத்திருந்த மீன் சுஞ்சுகளின் சத்தம் மரண ஓலமாக இருக்காதா? கடலில் இல்லை கரையில் என்பது மட்டுமன்றி, கூழைக்கிடாவேறு சேர்த்துவைத்த தினாவட்டில் குத்திநின்றால் மீன் குஞ்சுகளால் மகிழ்ந்து ஆரவரிக்கமுடியுமா? அது முள்ளிவாய்காலினதும் நந்திக்கடலோரத்தினதும் ஓசையாக இருக்காதா? அந்த மரண ஓலம் கேட்டுக் கடலில் தாண்டுபோயிருந்த படகுகள் மீண்டும் கடலில் வந்தால் அது பேய்ப்படமாகிப் போகாதா?மேலும், 'எங்கள் கூழைக்கடாக்கள் என்று வேறு எழுதப்பட்டிருக்கிறது.

இதை வைத்து எதையோ சொல்லியிருக்கிறீர்கள். அது என்னவென்று சரியாகப் புரியாததால், சற்றுப் புரியவைக்க முடியுமா என்று இந்தப் பின்னூட்டம்.

Edited by Innumoruvan

  • கருத்துக்கள உறவுகள்

தொலைந்துபோன குதிரை, குடைசாய்ந்த தேர், கவசங்கள் எல்லாம் பறிபோய், மார்பெல்லாம் அம்பு பாய்ந்து குருதி பாய 'உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது என்ற' பாட்டோடு ஓடுகின்ற சீன் கடுப்பேத்தாத தமிழனே இல்லை. எங்கள் குதிரைகளின் குளம்பொலி என்ற சிந்தனையே மகிழ்வாககத் தான் இருக்குது.

ஆனால், எனக்கென்னவோ கவிஞர் இந்தக் கவிதையினை குதிரைக் குளம்புகள் கொண்டு புழுதி கிளப்பப்பாடியதாய்த் தோன்றவில்லை. மாறாக, தனது சமூகத்தின் ஏதோ அசைவியக்கம் சார்ந்த எச்சரிப்பாய், அல்லது விமர்சனமாய்ப் பாடியிருப்பாரோ என்று தோன்றுகின்றது. அதற்கான ஒரே ஒரு காரணம் பின்வரும் பந்தி.

கூழைக்கிடாக்கள் சேர்த்துவைத்திருந்த மீன் சுஞ்சுகளின் சத்தம் மரண ஓலமாக இருக்காதா? கடலில் இல்லை கரையில் என்பது மட்டுமன்றி, கூழைக்கிடாவேறு சேர்த்துவைத்த தினாவட்டில் குத்திநின்றால் மீன் குஞ்சுகளால் மகிழ்ந்து ஆரவரிக்கமுடியுமா? அது முள்ளிவாய்காலினதும் நந்திக்கடலோரத்தினதும் ஓசையாக இருக்காதா? அந்த மரண ஓலம் கேட்டுக் கடலில் தாண்டுபோயிருந்த படகுகள் மீண்டும் கடலில் வந்தால் அது பேய்ப்படமாகிப் போகாதா?

இதை வைத்து எதையோ சொல்லியிருக்கிறீர்கள். அது என்னவென்று சரியாகப் புரியாததால், சற்றுப் புரியவைக்க முடியுமா என்று இந்தப் பின்னூட்டம்.

இன்னுமொருவன் இந்தக்கவிதையை வாசித்து முடித்தபோது முடிவில் அவர் போட்டிருந்த குறியீட்டால் நானே குழம்பிப்போய் நிற்கிறேன் நீங்கள் வேறு இன்னும் குழப்பி விடுகிறீர்கள்.... :icon_mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வரலாற்றில் புதையுண்டு போன

நிலங்களில் இருந்து

மீண்டும் குதிரைகள்

வெளிக் கிளம்பும்..

நூற்றாண்டுகளாக சாம்பல்

மூடிய வீதிகளில்

அந்நிய பாதச் சுவடுகளை

மேவி தம் கால்கள்

பதிக்கும்.

இருண்ட கானகங்களில்

மழையின் பின் மரங்கள்

பொந்துகளுக்குள் பொத்தி வைத்த

நீரை வாரி இறைக்க

நுதல் வழி வழியும்

நீர் படர்ந்து

காய்ந்த மண்ணின் துகள்கள்

ஒவ்வொன்றும்

உயிர்த்து எழும்.

எம் கடற்கரைகளில்

எங்கள் கூழைக்கிடாக்கள்

சேர்த்து வைத்திருந்த

மீன் குஞ்சுகளின்

ஆரவாரங்களில்

கடலின் மெளன வெளிகளில்

தாண்டு போயிருந்த எம்

படகுகள் மீண்டும் எம் கடல்களில்

வலம் வரும்

கால அசைவியக்க காற்றில்

எப்பொழுதும் மரங்கள் காய்ந்து கிடப்பதில்லை

எப்போதும் வானம் இருண்டு கிடப்பதில்லை

எப்போது கனவுகள் பொய்த்தே போவதில்லை

வரலாற்றில் புதையுண்டு போன

நிலங்களில் இருந்து

மீண்டும் எங்கள் புரவிகள்

வெளிக் கிளம்பும்..

ஆயிரம் சக்கரங்கள் பூட்டி

எங்கள் மண்ணில்

எங்கள் தெருக்களில்

எங்கள் தேர்கள்

மீண்டும் வலம் வரும் !!

19-Oct-2012: 4:15 PM

புதுக் கவிதைக்குப் புத்துயிரும்

புனிதப் போருக்கு புதுப்பலமும்

புலம்பெயர்ந் தவருக்குப் புத்துணர்வும்

புதுமையுடன் தந்தனநிழலி, உம் வரிகள்

கூழைக்கிடாக்கள் சேர்த்துவைத்திருந்த மீன் சுஞ்சுகளின் சத்தம் மரண ஓலமாக இருக்காதா? கடலில் இல்லை கரையில் என்பது மட்டுமன்றி, கூழைக்கிடாவேறு சேர்த்துவைத்த தினாவட்டில் குத்திநின்றால் மீன் குஞ்சுகளால் மகிழ்ந்து ஆரவரிக்கமுடியுமா? அது முள்ளிவாய்காலினதும் நந்திக்கடலோரத்தினதும் ஓசையாக இருக்காதா? அந்த மரண ஓலம் கேட்டுக் கடலில் தாண்டுபோயிருந்த படகுகள் மீண்டும் கடலில் வந்தால் அது பேய்ப்படமாகிப் போகாதா?மேலும், 'எங்கள் கூழைக்கடாக்கள் என்று வேறு எழுதப்பட்டிருக்கிறது.

கவிதை என்பதே ஒர்வொருவரினுள்ளும் ஒவ்வொருவிதமான கற்பனைகளை தட்டிவிடக்கூடியதும், வெவ்வேறுவிதமான புரிதல்களை ஏற்படுத்தக்கூடியதுமே. உங்கள் பொழிப்புரை அபாரமாய் உள்ளது.

  • தொடங்கியவர்

பெருமூச்சோடு நம்பிக்கையும் தரும் கவிதை.நன்றி நிழலி.

நன்றி சுமேரியர்...

மானிட வரலாறு, என்றும் நேராகப் பயணித்ததில்லை!

ஒரு சுழற்சி முறையிலேயே இயங்குகின்றது!

அந்த நாளுக்காக, உங்களுடன் நானும் ஏக்கத்துடன் ஏங்குகிறேன்!

விடுதலை விரும்பிய எந்த இனமும் கால காலமாக அடிமைப்பட்டு இருந்ததில்லை...எம் விடிவுக்கான ஒரு காலம் நிச்சயம் வரும். ஆனால் அதைப் பார்க்க கூடிய வாய்ப்பு என் வாழ்நாளில் நிகழுமான என்பதில் தான் சந்தேகம். மண்ணின் விடிவிற்காக மண் சுமந்து, வலி சுமந்து, அனைத்தும் இழந்த எம் தலைமுறை தன் இழப்பிற்கான அறுவடையை அடுத்தடுத்த சந்ததிகளுக்கே விட்டுச் செல்லும் என்று நினைக்கின்றேன்.

நன்றி நிழலி

நல்ல கவிதை..பகிர்வுக்கு மிக்க நன்றி நிழலி அண்ணா..

வாசித்து கருத்திட்ட அன்புக்கு நன்றி.

நிழலி, இது நீங்கள் இயற்றியதா?? அருமை. இதில் சொல்லப்பட்டவை நடக்க இறைவனை நிதம் பிரார்த்தித்து வருகிறேன்.

அடடா.. என் நண்பனுக்கு இப்படி ஒரு சந்தேகமா...!! நான் எழுதியதுதான் ரகு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=5]நல்ல கவிதை..பகிர்வுக்கு மிக்க நன்றி[/size]

  • தொடங்கியவர்

எனக்கு எள்ளளவும் சந்தேகமின்றி தெரிகின்ற விடயம்...காலம் இப்ப மாதிரி எப்பவும் இருக்காது. போராடாது விட்டால் வாழ ஏலாது என்ற நிலையில் இருக்கும் எம் இனத்தில் நிச்சயம் உண்மையான விடுதலை வீரர்கள் புரவிகள் போன்று வெளிக்கிழம்புவர் என்று. ஒவ்வொரு தலை முறை மாறும் போதும் உலக அரசியல் மாறுகின்றது. புதிய சிந்தனைகள் வருகின்றன. முதலாம் உலகப் போர், பின் இரண்டாம் உலக்ப்போர், அதன் பின் பனிப்போர், இன்று பொருளாதாரப் போர் என்று ஒவ்வொரு 30 இல் இருந்து 40 வருடங்களுக்கு ஒரு முறை எல்லாம் மாறுகின்றது. 30 வருடங்களுக்கு முன்பிருந்த எம் போராட்டம் ஒரு தலைமுறையைத் தாண்டும் போது தோற்றுப் போனது. மீண்டும் சில தலைமுறைகளில் முனைப்பெடுத்து சரியாக வரும் என்ற நம்பிக்கை இருக்குது. அந்த முனைப்பு எடுக்கும் ஒரு காலத்தை எழுத முற்பட்ட போதுதான் இந்தக் கவிதை மனசுள் வந்தது.

மிகவும் பிடித்திருக்கின்றது.

நிழலி ஏன் வலம்வரும் என்று ஆணித்தரமாகக் கூறி முற்றுப்புள்ளி வைக்காமல் ஆச்சரியக்குறியீட்டை போட்டுள்ளீர்கள்?

தொலைந்துபோன குதிரை, குடைசாய்ந்த தேர், கவசங்கள் எல்லாம் பறிபோய், மார்பெல்லாம் அம்பு பாய்ந்து குருதி பாய 'உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது என்ற' பாட்டோடு ஓடுகின்ற சீன் கடுப்பேத்தாத தமிழனே இல்லை. எங்கள் குதிரைகளின் குளம்பொலி என்ற சிந்தனையே மகிழ்வாககத் தான் இருக்குது.

ஆனால், எனக்கென்னவோ கவிஞர் இந்தக் கவிதையினை குதிரைக் குளம்புகள் கொண்டு புழுதி கிளப்பப்பாடியதாய்த் தோன்றவில்லை. மாறாக, தனது சமூகத்தின் ஏதோ அசைவியக்கம் சார்ந்த எச்சரிப்பாய், அல்லது விமர்சனமாய்ப் பாடியிருப்பாரோ என்று தோன்றுகின்றது. அதற்கான ஒரே ஒரு காரணம் பின்வரும் பந்தி.

கூழைக்கிடாக்கள் சேர்த்துவைத்திருந்த மீன் சுஞ்சுகளின் சத்தம் மரண ஓலமாக இருக்காதா? கடலில் இல்லை கரையில் என்பது மட்டுமன்றி, கூழைக்கிடாவேறு சேர்த்துவைத்த தினாவட்டில் குத்திநின்றால் மீன் குஞ்சுகளால் மகிழ்ந்து ஆரவரிக்கமுடியுமா? அது முள்ளிவாய்காலினதும் நந்திக்கடலோரத்தினதும் ஓசையாக இருக்காதா? அந்த மரண ஓலம் கேட்டுக் கடலில் தாண்டுபோயிருந்த படகுகள் மீண்டும் கடலில் வந்தால் அது பேய்ப்படமாகிப் போகாதா?மேலும், 'எங்கள் கூழைக்கடாக்கள் என்று வேறு எழுதப்பட்டிருக்கிறது.

இதை வைத்து எதையோ சொல்லியிருக்கிறீர்கள். அது என்னவென்று சரியாகப் புரியாததால், சற்றுப் புரியவைக்க முடியுமா என்று இந்தப் பின்னூட்டம்.

உங்கள் இருவரின் கருத்துகளுக்கும் பதில் எழுத தொடங்கும் போது நானே என் கவிதைக்கு பொழிப்புரை தரும் தவறைச் செய்யப் போகின்றேனா என அஞ்சிக் கொண்டு மிச்சத்தை தொடர்கின்றேன்.

நான் எழுதிய இந்தக் கவிதையில் எந்த இடத்திலும் மனிதர்கள் இல்லை. குதிரையும், மரங்களும், பறவைகளும், மீன்களும், மழையும் தான் நடமாடுகின்றன. மனிதன் அல்லது மானுடம் என்பதே இந்த புறச்சூழலால் நிரம்பிய ஒரு உயிரினம். ஒரு மண் சிறைப்படும் போது, அடிமைப்படும் போது, வெறும் மனிதம் மட்டுமே குறுகிப் போகாமால் அந்த நிலம் சார்ந்த அனைத்துமே அடிமைப்பட்டு, நெருக்குதல்களுக்குள்ளாகி விடுதலையை நாடுகின்றன என நம்புகின்றேன். அதனால் தான் கானகங்களில் இருக்கும் மரங்களும் எவருக்கும் தெரியாமல் நாளை வரப்போகும் விடுதலை விரும்பிகளுக்காக மழை நீரை பொந்துகளுக்குள் பொத்தி வைத்து காத்திருக்கின்றது.

குதிரைகள் என்பது ஒரு குறியீடு தான் என்று உங்களுக்கு தெரிந்து இருக்கும். ஆரம்ப வரிகளை எழுதும் போது, நூற்றாண்டுகளாக சாம்பல் மூடிய ஒரு நிலத்தில் பீறிட்டுக் கொண்டு குதிரைகள் வெளிக்கிளம்புகின்ற காட்சிதான் முதலில் தோன்றியது. அந்த காட்சியை மையப்படுத்தித் தான் மிச்ச வரிகள் தானாக வந்து விழுந்தன. எந்த இனமும் கால காலமாக அடிமையாக வாழ விரும்பாது என்ற இயற்கை விதியை நம்பித்தான் என் குதிரைகள் வெளிக் கிழம்பின.

கூழைக் கிடாக்கள் பற்றி எழுதிய வரிகளுக்கு முன்னமே வேறு வகையான வரிகளை இட்டுவிட்டு பின்னர் மாற்றி இருந்தேன் (அவை சரியாக இப்ப நினைவில் இல்லை). கூழைக் கிடாக்களின் உணவாக மீன்கள் ஆனது ஒரு இயற்கை விதி. அதே போன்று மீனவர்களுக்கும் மீன் தான் வாழ்க்கை வழி என்று ஆனது. எம் படகுகள் எல்லாம் தாண்டு போக எம் கடற்கரை முழுதும் அந்நியர்களின் வருகையால் நிரம்பியிருக்க, மீன் இனமே அழிந்து போய் விடுமோ என அஞ்சி பெரிய மீன்களை உண்டு குஞ்சு மீன்களை அடை காத்து காத்திருக்கின்றன அவை. மீண்டும் புரவிகள் வரும் போது, எம் படகுகள் மீண்டும் கடலில் எழுகின்றன, அடைக்காக்கப்பட்ட மீன்களை நம்பி.

..மற்றது நான் குதிரைகளின் குளம்பால்தான் சாம்பல் எழுந்தது என்று எழுதவில்லை,

ஆனாலும் ஒரு கவிதைக்கான பல் வாசிப்புகள் தான் கவிதையை பூரணப்படுத்துகின்றன. மேலே சொன்ன வரிகளை எழுதும் போது நந்திக்கடல் பற்றிய எந்தவிதமான பிரக்ஞையும் இருக்கவில்லை. உங்களின் அபாரமான வாசிப்பின் பின், அதனுள் உள் நுழைந்து பார்க்கும் போது என் கவிதையே எனக்கு புதுசாகத் தெரிகின்றது. எங்கு கற்றீர்கள் இப்படியான ஒரு வாசிப்பை..

எல்லாக் கவிதைகளையும் போல என் இந்தக் கவிதையும் இன்னும் 20 ஆண்டுகளின் பின் வாசிக்கப்படும் ஒரு கவிதையாக சில வேளைகளில் மேடைகளில் உரத்து வாசிக்கப்படும் அல்லது நாளையே குப்பைத் தொட்டிக்குள் போடப்படும் காகிதமாக்கப்படும்.

சகாறா,

பொதுவாக நான் முற்றுப் புள்ளியோ ஆச்சரியப் புள்ளியோ என் கவிதைகளுக்கு இடுவதில்லை. இந்தக் கவிதையில் மட்டும் முற்றுப் புள்ளிகளை பல இடங்களில் பயன்படுத்தி ஈற்றில் ஆச்சரியக் குறியை பயன்படுத்தி இருக்கின்றேன். உண்மையில் பிரமிப்பு குறிகளாகத் தான் அவற்றை பயன்படுத்தி இருக்கின்றேன்.

  • தொடங்கியவர்

புதுக் கவிதைக்குப் புத்துயிரும்

புனிதப் போருக்கு புதுப்பலமும்

புலம்பெயர்ந் தவருக்குப் புத்துணர்வும்

புதுமையுடன் தந்தனநிழலி, உம் வரிகள்

நன்றி பாகன் உங்கள் கருத்துக்கு.....ஆனாலும் நான் 'புனிதப் போர்' பற்றி எழுதவில்லை என்றதையும், புலம்பெயர்ந்தவருக்கு புத்துணர்வு தருவதற்கு இதை எழுதவில்லை என்றதையும் சொல்லத் தான் வேண்டும்.

கவிதைபோல் ஏதோ ஒன்று நடக்கவேணும் என்ற அவாவுடன் தான் நாம் வாழ்ந்தாகவேண்டும். போரின் முடிவுக்குப் பின்னர் பலருடன் உரையாடும்போது போரின் முடிவை ஏற்றுக்கொள்ளும் நிலையில் எவரும் இல்லை. அது ஜீரணிக்கமுடியாததாகவே மனதுள் உழண்டுகொண்டிருகின்றது. தென்னிலங்கையை சுனாமி நாசம் பண்ணவேண்டும் என விரும்புபவர்கள் பூகம்பம் வரவேண்டும் அணுகுண்டு வெடிக்கவேண்டும் இப்படி பல பேர் பலவிதாமாக ஆற்றாமையை வெளிப்படுத்துகின்றனர். யாரும் இந்தத் தோல்வியை மறந்துவிடவில்லை. திரும்பத் திரும்ப அவரவருக்கு மனதை உறுத்திக்கொண்டிருகின்றது. ஆனால் இவ்வாறான உறுத்தல்களில் காலத்தைக் கணக்கிட்டு சாத்தியப்படக்கூடிய விழைவு ஒன்று ஏற்படுமா என்பதுக்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும். சிலவேளை கனக்க யோசிக்கும் புத்திசாலிகளை விட சொட்டு யோசிக்கும் மொக்கன்களால் கூட பெரும் விழைவுகள் ஏற்படும். இரவு வந்தால் பகல் வருவதும் தவிரக்கமுடியாததுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

வரலாற்றில் புதையுண்டு போன

நிலங்களில் இருந்து

மீண்டும் எங்கள் புரவிகள்

வெளிக் கிளம்பும்..

ஆயிரம் சக்கரங்கள் பூட்டி

எங்கள் மண்ணில்

எங்கள் தெருக்களில்

எங்கள் தேர்கள்

மீண்டும் வலம் வரும் !!

இன்றைய யாழில் அதுவும் நிழலியிடம் இருந்து இப்படி ஒரு எண்ணப்பாடு வெளி வரும் என்றே நினைக்கவில்லை..! எங்கள் புரவிகள்.. எங்கள் தேர்கள்... எங்கள் தெருக்கள்.. என்ற எண்ண ஓட்டத்தில் எங்களுக்கிடையே வேறுபாடில்லை. ஆனால்.. அந்தப் புரவிகளை.. தேர்களை.. தெருக்களை சீர்செய்து.. வலம் வர வைப்பது எது என்பது தான் இன்று தொக்கு நிற்கும் வினா..??! கால இடைவெளியை வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றால்.. அது ஆகாது. அந்த வகையில் முயற்சி அவசியம். அதில் யாழையும் இணைக்க நிழலி உதவ வேண்டும். கவிதையில் மட்டும் ஏக்கத்தை இறைத்துவிட்டு நடைமுறையில் அதனை அதிகரிப்பது புரவிகள் கிளம்ப இடமளியாது. மாறாக கிடப்பில் கிடக்கவே இடமளிக்கும்..! :icon_idea::)

Edited by nedukkalapoovan

இருண்ட கானகங்களில்

மழையின் பின் மரங்கள்

பொந்துகளுக்குள் பொத்தி வைத்த

நீரை வாரி இறைக்க

நுதல் வழி வழியும்

நீர் படர்ந்து

காய்ந்த மண்ணின் துகள்கள்

ஒவ்வொன்றும்

உயிர்த்து எழும்.

எம் கடற்கரைகளில்

எங்கள் கூழைக்கிடாக்கள்

சேர்த்து வைத்திருந்த

மீன் குஞ்சுகளின்

ஆரவாரங்களில்

கடலின் மெளன வெளிகளில்

தாண்டு போயிருந்த எம்

படகுகள் மீண்டும் எம் கடல்களில்

வலம் வரும்

கால அசைவியக்க காற்றில்

எப்பொழுதும் மரங்கள் காய்ந்து கிடப்பதில்லை

எப்போதும் வானம் இருண்டு கிடப்பதில்லை

எப்போது கனவுகள் பொய்த்தே போவதில்லை

வரலாற்றில் புதையுண்டு போன

நிலங்களில் இருந்து

மீண்டும் எங்கள் புரவிகள்

வெளிக் கிளம்பும்..

ஆயிரம் சக்கரங்கள் பூட்டி

எங்கள் மண்ணில்

எங்கள் தெருக்களில்

எங்கள் தேர்கள்[size=5] [/size]

மீண்டும் வலம் வரும் !!

[size=5]நல்ல கவிதை..பகிர்வுக்கு மிக்க நன்றி[/size]

ஆனாலும் ஒரு கவிதைக்கான பல் வாசிப்புகள் தான் கவிதையை பூரணப்படுத்துகின்றன. மேலே சொன்ன வரிகளை எழுதும் போது நந்திக்கடல் பற்றிய எந்தவிதமான பிரக்ஞையும் இருக்கவில்லை. உங்களின் அபாரமான வாசிப்பின் பின், அதனுள் உள் நுழைந்து பார்க்கும் போது என் கவிதையே எனக்கு புதுசாகத் தெரிகின்றது. எங்கு கற்றீர்கள் இப்படியான ஒரு வாசிப்பை..

வாசிப்பு திறன் ஒன்று, அடுத்தது சிந்திக்கும் திறன். இன்னுமொருவனின் லேசர் ஊடுறுவல் பார்வை நீண்டகால அனுபவ முதிர்ச்சியில் அவருக்கு கிடைத்துள்ளது என்று நினைக்கின்றேன்.

கூழைக்கடா என்பது என்னவென்று எனக்கு ஆரம்பத்தில் விளங்கவில்லை.

கலைக்களஞ்சியத்தில் பார்த்தபோது:

சாம்பல் கூழைக்கடா ( Spot-billed Pelican or Grey Pelican - Pelecanus philippensis ) என்பது (பெலிக்கனிடே) கூழைக்கடாக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவை. இப்பறவையை வேடந்தாங்கல் பகுதியில் மத்தாளி அல்லது மத்தாளிக் கொக்கு என்றும் அழைக்கின்றனர். கூழைக்கடாக்கள் பறக்கும் பறவைகளில் மிகப் பெரிய நீர்ப் பறவை. 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய பறவை. இதன் தசை கெட்டியாக இல்லாமல், மென்மையாக கூழ் போன்று இருப்பதாலும், கிடா போன்று பெரிதாக இருப்பதாலும் இதை கூழைக்கடா என அழைக்கிறார்கள். இதன் எடை 4.5 முதல் 11 கிலோ வரை இருக்கும். சிறகுகளின் நீளம் 2.7 மீ. மொத்த உயரம் 127 முதல் 182 செ.மீ. அலகு நீளம் 22 செ.மீ. கூழக்கடாக்கள் நெடுந்தூரம் வலசை செல்லும் இயல்புடையவை.இவ்வினத்தின் எண்ணிக்கை மிதமான-துரித வீதத்தில் குறைந்து வருவதால் இதனை அச்சுறுத்துநிலையை எட்டியவை என்ற பிரிவில் ஐயுசிஎன் - சிவப்புப் பட்டியலில் வகுத்துள்ளது.

799px-Spot-billed_Pelican_%28Pelecanus_philippensis%29_with_nesting_material_W_IMG_2806.jpg

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் எனக்கும் கூழைக் கடா என்றால் என்னவென்று தெரியாது..மீனை சேகரிச்சு வைச்சு இருக்கும் என்று எழுதியதும் கடல் வாழ் (பறவை)இனமாக இருக்கலாம் என்று மட்டும் புரிந்து கொண்டேன்..கூழைக்கடா பற்றிய விளக்கத்திற்கு நன்றி கலைஞன் அண்ணா.

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கவிதை

அதற்கு நான் எழுத வருமுன்னே

நான் எழுத வேண்டியதை நீங்களே எழுதி விட்டீர்கள் நிழலி.

ஒன்று மட்டும் தெரிகிறது

எனக்கு உங்களுக்கு ஏன் ஒவ்வொரு தமிழனுக்கும் ஏக்கம் ஒன்றுதான்.

அதன் வலி ஒன்றுதான்.

அதை அடைய ஒரு கல்லையாவது போடுவோம்.

நான் எழுதிய இந்தக் கவிதையில் எந்த இடத்திலும் மனிதர்கள் இல்லை. குதிரையும், மரங்களும், பறவைகளும், மீன்களும், மழையும் தான் நடமாடுகின்றன. மனிதன் அல்லது மானுடம் என்பதே இந்த புறச்சூழலால் நிரம்பிய ஒரு உயிரினம். ஒரு மண் சிறைப்படும் போது, அடிமைப்படும் போது, வெறும் மனிதம் மட்டுமே குறுகிப் போகாமால் அந்த நிலம் சார்ந்த அனைத்துமே அடிமைப்பட்டு, நெருக்குதல்களுக்குள்ளாகி விடுதலையை நாடுகின்றன என நம்புகின்றேன். ...

நன்றி கலைஞன்.

நிழலி,

உங்கள் விரிவான பதிலிற்கு நன்றி. நிச்சயமாக உங்கள் உணர்வு புரிகிறது. உண்மையில் நேற்று எனது பின்னூட்டத்தை இட்டுவிட்டு, சரியாக ஐந்து நிமிடங்களிற்குள் 'தேவையில்லாமல் வரிகளிற்கிடையில் வாசிக்கிறேனோ என்று தோன்றுவதால் நீக்கப்படுகிறது..' என்ற வசனத்தோடு பின்னூட்டத்தை நீக்குவதற்காகப் பின்னூட்டத்திற்குப் போனால், அதற்கிடையில் சஹாரா எனது பின்னூட்டத்தை மேற்கோள் காட்டி எனது பின்னூட்டத்தை லொக் பண்ணிவிட்டார். அதன் பின் அழிக்க முடியாததால் அப்படியே விட்டுவிட்டேன்.

உங்கள் பதில் சார்ந்து :

'ஒரு மண் சிறைப்படும்போது, வெறும் மனிதம் மட்டுமே குறுகிப்போகாமல் அந்த நிலம் சார்ந்த அனைத்துமே அடிமைப்பட்டு நெருக்குதல்களிற்குள்ளாகி விடுதலையை நாடுகின்றன என நம்புகிறேன்' என்ற உங்கள் வரி அழகாக இருக்கிறது. நாங்கள் கவிதை என்ற ஜோனரா சார்ந்துதான் பேசிக்கொண்டிருக்கின்றோம் என்பதையும் நான் மறுக்கவில்லை. எனினும், இங்கு சிறைப்பிடிப்பது வேறொரு மனிதன் தானே? மனிதன் என்பவனே, அதுவும் நிலங்களைச் சிறைப்பிடிக்கும் ஆழுமை பொருந்திய அதிகார மனிதன், பொதுவாக இயற்கைக்கு முரணான பல ஆசைகளை வழர்த்துக்கொண்டவனாகத் தானே வலம் வருகிறான். அந்நிலையில், சிறைப்பிடிப்பு என்பது ஒரு மனிதக்கூட்டத்தால் மற்றுமொரு மனிதக்கூட்டம் சார்ந்தாய் மட்டும் தானே உணரப்படக்கூடியது. இயற்கையின் மற்றைய அங்கங்களிற்கு, அந்த மாற்றம் மனதில் தோன்றுவதற்கான ஏதுநிலை கூட அங்கு இருக்கப்போதில்லையே. ஒருவேளை இயற்கையின் இதர அங்கங்களிற்கு விடுதலை வேட்கை வரின் அது அந்த நிலத்தைப் பறிகொடுத்த மனிதக்கூட்டத்தின் விடுதலை உணர்வினை ஒத்ததாக இருக்கப்போவதில்லையே. அதனால் தான் உங்கள் கவிதையில் எங்கும் மனிதர்கள் இல்லை என்றபோதும் (மீண்ட படகுகளையும் பாதச்சுவடுகளையும் தவிhத்து) இதை மனிதனைச் சார்ந்து மட்டுமே வாசிக்க முடிகிறது.

உங்கள் பதில் பின்னூட்டத்தில் இன்னமும் சில கருத்துக்கள் விவாதிக்கப்படலாம். ஆனால் தெட்டத்தெளிவாக என்ன உணர்வில் கவிதை எழுதினேன் என்பதை நீங்கள் கூறியிருக்கிறீர்கள். அதன் பின் அவ்வாறு விவாதிப்பது முட்டையில் எதையோ பிடுங்குவதுபோலாகிவிடும் என்பதால் இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன்.

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

மனதில் தேக்கி வைத்திருந்த மிகுந்த நம்பிக்கையான வார்த்தைகள் கவிதை வரிகளில் சிந்தியுள்ளது.இலக்குகளை நோக்கி நகரும்போது நம்பிக்கை தளராமல் இருந்தால் இலக்குகளும் மாறாமல் இருக்கும். பொந்துகளில் பொத்தி வைக்கப்பட்ட நீரும், கூழைக்கிடாக்கள் சேர்த்த மீன் குஞ்சுகளும் வீணாகக் கூடாது..

வழக்கம் போல் நிழலியின் தனித்துவமான கவிதை .மிக அழகான சொற்பதங்களை கவிதையில் இழைத்திருக்கின்றார் .

இதுவும் ஒரு தோற்றவர்களுக்கான நம்பிக்கை தரும் கவிதைதான் ,வரலாறு எப்போதும் முன்னோக்கித்தான் செல்லும் திரும்ப வராது .

விடிவு என்பதும் நாங்களாக தேடினால் தான் உண்டு அதுவும் தானாக வராது .

கூழைக்கடா சரியோ தெரியாது.கூழக்கடா என்று தான் நான் கேள்விப்பட்டது .வெகு துரத்தில் இருந்து ஒரு சீசனுக்கு மட்டும் வந்து (மன்னார்,நெடுந்தீவு ) மீனை பிடித்துக்கொண்டு போய்விடும் .

செங்கைஆழியானின் வாடைக்காற்று கதையின் கருவே இந்த பறவையின் தன்மை பற்றியதுதான் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.