Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆட்டுக்குட்டி எந்தன் குட்டி : ஆனந்த குமார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்டுக்குட்டி எந்தன் குட்டி : ஆனந்த குமார்

goat-300x225.jpg

புலம்பெயர் நாடுகளில் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் தமிழ்க் கல்வி கற்பிப்பதற்கென்று பல பாடசாலைகள் இயங்குகின்றன. குறிப்பாக பிரித்தானியாவில் அவர்கள் வசிக்கும் பிரதேசங்களில் இந்தப் பாடசாலைகளுக்கு சிறிய மானியத் தொகையும் வழங்கப்படுகின்றது. தவிர பாடசாலை நிர்வாகிகள் பெற்றோரிடம் மாதாந்தம் சிறிய தொகைப் பணத்தையும் அறவிடுகின்றனர். பாடசாலைகள் வார இறுதியில் மண்டபங்களையும், ஆங்கிலப் பாடசாலை வகுப்பறைகளையும் வாடகைக்கு அமர்த்துவதனூடாக நடைபெறுகின்றது.

தமிழைக் கற்பிபதே இவர்களின் பிரதான நோக்கம். இதனை சூழ பல வியாபார நிறுவனங்கள் புத்தகங்களை வெளியிடுதல், பாடல்களை வெளியிடுதல் போன்ற பல முயற்சிகளை மேற்கொண்ட போதும் வியாபாரம் அவர்களுக்கு பெருத்த வெற்றியளிக்கவில்லை என்பதே உண்மை.

இந்தப் பாடசலைக்கு நிர்வகிக்கின்ற நிர்வாகிகள் உட்பட ஆசிரியர்கள் யாழ்ப்பாணத்தை அப்படியே திரும்ப நினைவுபடுத்துகின்றனர். அதுவும் 80களின் யாழ்ப்பாணத்தை நினைவுபடுத்துகின்றனர். ஆண் வாத்தியார்களுக்குப் பிரம்பையும், பெண்களுக்கு சுடுதண்ணிப் போத்தலையும் களட்டிவிட்டால் யாழ்ப்பாண வாத்திமார்களுக்கும் இவர்களுக்கும் எந்த வேறுபாட்டையும் காணமுடியாது.

பெரும்பாலானவர்கள் பாட்டி வடை சுட்டு விற்ற கதையிலிருந்தோ இல்லை அதுபோன்ற கதையிலிருந்தோ ஆரம்பிக்கிறார்கள். இந்தக் கதைகளை எந்த அர்த்தமும் புரியாமல் குழந்தைகள் மனப்பாடம் செய்து கொள்கிறார்கள்.

ஒரு தமிழ்ப் பாடசாலை நடத்திய விழாவில் ‘ஆட்டுக்குடி எந்தன் குட்டி, அருமையான சின்னக்குட்டி, ஓட்டம் ஓடு வந்திடுவாய்’ என்று ஒரு எட்டு வயதுக் குழந்தை பாடியது. நிகழ்ச்சி இடைவேளையில் அந்தக் குழந்தையை ஆட்டுக்குட்டியைப் பார்த்திருக்கிறாயா என்று நான் கேட்டு வைத்தேன். கிட்டத்தட்ட பக்கத்துவீட்டு ஒஸ்ரியன் நாயைப் போல இருக்கும் என்று அம்மா சொல்லியிருப்பதாக அவன் சொன்னான்.

அந்தக் குழந்தை பாடும் போது எனக்கு பழை நினைவுகள் பிளாஷ் பாக்லில் வந்து போயின. மெட்டுக் கூட எந்த மாற்றமும் இல்லை.

இன்னொரு குழந்தை தீபாவளி நாளில் எப்படி எல்லாம் உற்சாகமாக இருந்தார்கள் என்று கூறி வைத்தது. இன்னும் ஒரு குழந்தை தமிழின் பெருமையையும், ஆறுமுக நாவலரையும் பற்றிப் பேசியது.

குழந்தைகளிலிருந்து முற்றாக அன்னியப்பட்ட ஒரு சூழலை அவர்கள் மீது திணித்து அவர்களை யாழ்ப்பாணத் தமிழர்களாக்கி மகிழும் பெற்றோரினதும் ஆசிரியர்களதும் திமிருக்கு தமிழ்க் கல்வி என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

தாம் வாழுகின்ற புலம்பெயர் நாடுகளில் கூட, அரச பாடசாலைகளில் , கல்வி கற்பதற்கு நவீன முறைகளை அறிமுகப்படுத்துகிறார்கள். நவீனமொழிகள் என்று அழைத்துக்கொள்ளும் ஐரோப்பிய மொழிகளைக் அந்த மொழி பேசாத குழந்தைகளுக்குக் கற்பிபதற்கு ஐரோப்பியர்கள் நாளந்தம் புதிய உக்திகளை உருவாக்கிக் கொள்கிறார்கள். குழந்தைகளுக்கு மொழி மீதான விருப்பை உருவாக்கும் வகையில் புதிய வழிமுறைகள் எல்லாம் கையாளப்படுகின்றன.

இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் கூட ஆங்கிலம் கற்பிக்கும் போது லண்டனிலிருந்து ஈலிங்கிற்கு தாமதமாக வந்த புகையிரதத்தைப்பற்றிப் போதிப்பதில்லையே.

ஐரோப்பிய நாடுகளில் சந்திக்கும் நாளந்தப் பிரச்சனைகளைக் கூட தமிழ் மொழியில் கதைகளாக மாற்றி குழந்தைகளுக்குப் போதிப்பது போன்ற சிறிய உக்திகளைக் கூட இவர்கள் கையாளாத பழமைவாதிகள்.

தமிழ் கற்பித்தல் தான் இப்படி என்றால் அவர்களின் அடுத்த கனவு கர்நாடக சங்கீதம். பாடுவதற்கு ஆர்வமற்ற குழந்தைகள் கூட பெற்றோர்களின் வற்புறுத்தலுக்கு இணங்க தெலுங்குக் கீர்த்தனைகளை மனப்பாடம் செய்து கொள்கிறார்கள்.

யாழ்ப்பாண உயர்குடிகளின் மையவாதம் தான் இந்தப் பாடசாலைகளும் அவற்றில் துன்புறும் ஒன்றுமறியாக் குழந்தைகளும்.

அண்மையில் கொரிய பாடசாலை ஒன்றிற்கு செல்ல நேர்ந்தது. சனிக்கிழமைகளில் நடக்கும் அந்தப் பாடசாலையில் மொழி கற்பிக்க ஒரு திட்டம் வைத்திருக்கிறார்கள், முதலில் ஆங்கிலத்திலெயே கொரிய கலாச்சாரம் உட்பட ஏனைய நாடுகளின் கலாச்சரங்களையும் கற்பிக்கிறார்கள். சிந்து வெளி நாகரீகம் எல்லாம் கூட கற்பிக்கிறார்கள். பின்னர் மாணவர்களுக்கு ஒரு விருப்பு ஏற்பட்டதும் கொரிய மொழிகளின் சில பகுதிகளை அவர்களே உருவாக்கிய கதைகளின் ஊடாகக் கற்பிக்கிறார்கள்.

இது முழுமையானதா இல்லையா என்பது எனக்குத் தெரியாது ஆனால் அவர்களிடம் ஒரு திட்டமிடல் இருக்கிறது என்பதே இங்கு உண்மை.

யாழ்ப்பாணத்தைப் பெயர்த்துவைத்து அழகு பார்க்க எண்ணினால் தமிழை அல்ல தமிழில் பொதிந்திருக்கும் அழுக்குகளையே அவர்கள் கற்றுக்கொள்வார்கள்.

http://inioru.com/?p=31080

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்கல்வி கற்பிக்கும் ஆசியர்கள் கருத்தில் எடுக்கவேண்டிய விடயங்கள் ...

இணைப்பிற்கு நன்றி கிருபன்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதோர் பதிவு கிருபன்

காலத்திற்கேற்ப வாழும் சூழலுக்குத் தகுந்தாற்போல் கல்வித்திட்டங்கள் வனையப்படவேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]எங்களுக்கு மட்டும் என்ன.......[/size]

[size=4]ராவணனின் புஷ்ப விமானத்தையும் அரை மணி நீரம் கழித்து ரைட் சகோதர்களின் விமானத்தை பற்றியும் சொல்லி தந்து குழப்பவில்லையா?[/size]

[size=4] [/size]

[size=4]ஆசிரியர் தொழில் என்பது மிகவும் பொறுப்பு வாய்ந்த ஒன்று அதற்கு சம்மந்தம் இல்லாதவர்கள்தான் அதில் அதிகம். முதலில் அவர்கள் படிக்க எவளவோ இருக்கு. அதை அவர்கள் ஒருபோதும் செய்ய மாட்டார்கள். அவர்களுடைய தகுதி அதற்கு இடம் கொடுக்காது. இது ஒரு யாழ்பாணிய கேடு கேட்ட நிலை இதை ஆசிரியர்கள் ஆக இருக்கும் எனது நெருங்கிய உறவினர்களுடனேயே பேசி இருக்கிறேன். அவர்களுடைய தலைக்கணம் நான் என்ன சொல்ல வருகிறேன் என்ற ஒரு கணம் சிந்திக்க கூட அவர்களை விடவில்லை என்பதுதான் கவலை யான விடயம்.[/size]

[size=4] [/size]

[size=4]"நான் இப்படி இருக்கிறேன் என்றால் இதற்கு முக்கிய காரணம் எனக்கு வரலாறு கற்பித்த ஆசிரியர்தான்". இதை சொன்னது கிட்லர். [/size]

[size=4]ஒரு வரலாற்று ஆசிரியரால் ஒரு சிறுவனை கிட்லர் ஆக்க முடிந்திருக்கிறது இதை கொஞ்சம் கவனத்தில் எடுப்பீர்களா??[/size]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெரும்பாலானவர்கள் பாட்டி வடை சுட்டு விற்ற கதையிலிருந்தோ இல்லை அதுபோன்ற கதையிலிருந்தோ ஆரம்பிக்கிறார்கள். இந்தக் கதைகளை எந்த அர்த்தமும் புரியாமல் குழந்தைகள் மனப்பாடம் செய்து கொள்கிறார்கள்.

ஒரு தமிழ்ப் பாடசாலை நடத்திய விழாவில் ‘ஆட்டுக்குடி எந்தன் குட்டி, அருமையான சின்னக்குட்டி, ஓட்டம் ஓடு வந்திடுவாய்’ என்று ஒரு எட்டு வயதுக் குழந்தை பாடியது. நிகழ்ச்சி இடைவேளையில் அந்தக் குழந்தையை ஆட்டுக்குட்டியைப் பார்த்திருக்கிறாயா என்று நான் கேட்டு வைத்தேன். கிட்டத்தட்ட பக்கத்துவீட்டு ஒஸ்ரியன் நாயைப் போல இருக்கும் என்று அம்மா சொல்லியிருப்பதாக அவன் சொன்னான்.

அந்தக் குழந்தை பாடும் போது எனக்கு பழை நினைவுகள் பிளாஷ் பாக்லில் வந்து போயின. மெட்டுக் கூட எந்த மாற்றமும் இல்லை.

http://inioru.com/?p=31080

இண்டைக்கு எல்லாரிலும் பிழை பிடித்து பரிசு வாங்க வேண்டும் :)

எட்டு வயது பிள்ளையிடம் ஆடு பார்த்தனிய? என்று கேட்ட விண்ணனின் மூளையும் 4 வயது வளர்ச்சிதான் இருக்கும்.

நானும் கங்காருவை பார்த்தபிறகுதான் அது ஒரு பாலுட்டி என்று படிக்க வெளிக்கிட்டால், அது நான் செத்த பிறகுதான் நடக்கும். சின்னவதில், 8 / 9 வகுப்பில் ஒல்விவர் ட்விஸ்ட் இன் " he asked some more " என்னவோ மனதில் பதிந்து , ஒரு ஆங்கில வசனமாக பாடமாக்கி பலகாலம் பயன்படுத்தினேன் முக்கியமாக " he asked " . புதியது படிக்கும் போது எப்பவும் கொஞ்சம் கற்பனை இருக்கும். எனக்கு 4 / 5 வயதில் ஆட்டுக்குட்டி தெரிந்திருந்தது எப்பதர்காக இங்கே பிறந்த எனது பிள்ளைக்கும் ஆட்டுக்குட்டி தெரிய வேண்டும் என்றோ, அது தெரிந்த பிறகுதான் பாட்டு சொல்லிகொடுப்பான் என்றோ இருந்தால், அது இப்போது நடக்கபோவதில்லை. அது சிலவேளை 15 வயதில் இலங்கைக்கு போனபிறகு " நான் பார்த்த ஆட்டுக்குட்டியை முற்றத்தில்" காட்டி அப்போதுதான் ஆட்டுக்குட்டி பாட்டு பாடவேண்டிவரும். 15 வயது பிள்ளையும் 55 வயது அப்பாவும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் நாடுகளில் தமிழை இரண்டாம் மொழியாகக் கற்பிக்கும்போது பிள்ளைகளுக்கு மொழியே அந்நியமாகவும், கடினமாகவும் இருக்கும். பிள்ளை தமிழ் பேசத் தெரிந்தாலும் தமிழ் பயில்வது இலகுவானது அல்ல என்பது தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட எம்போன்றவர்கள் தமிழைக் கற்றதில் இருந்து அறிந்திருப்போம்.

எனவே பிள்ளைகள் ஒருபோதுமே கண்டிராத ஆட்டுக்குட்டியை வைத்து தமிழில் ஆர்வத்தை உருவாக்கமுடியாது என்பதால், சூழ்நிலைகளுக்கேற்ப கற்பித்தலிலும் மாற்றங்கள் கொண்டுவரப்படவேண்டும். சில பாடசாலைகளில், சில ஆர்சிரியர்கள் இதைப் புரிந்துள்ளனர் என்றுதான் நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

கடவுளே.. பிரிட்டன் என்ன சொர்க்கலோகத்திலா இருக்குது. பிரிட்டனிலும் ஆட்டிக்குட்டி இருக்குது. லண்டனுக்குள்ள ஏதாவது ஒரு குறிச்சிக்க இருந்து கொண்டு அதுதான் உலகமென்று நினைக்கிறதும் தப்பு..!

லண்டனை விட்டு கொஞ்சம் வெளில போங்க. ஆடு.. வயல்.. பண்ணை.. என்று நிறைய இருக்குது..! நான் ஆட்டுக்குட்டியை அதுவும் அழகான செம்மறி ஆட்டுக்குட்டிகளை கண்டிருக்கிறேன்..! அவை துள்ளி விளையாடும் அழகே அழகு..! குதிரைகள்.. மாடுகள்.. வயல்கள்.. என்று.. எல்லாம் பிரிட்டனிலும் இருக்குது. ஏன் மான் கூட நிற்குது. குறைஞ்சது.. Chesham பக்கமாவது போங்கப்பா..!

போகாமல் குழந்தைகளை வீட்டுக்க வைச்சு மக்டொனால்டும் கே எவ் சியும் தீம்பாக்கும் காட்டிறது மட்டும் தான் பிரிட்டன் என்று நினைக்கிறது தான் தப்பு..!

ஒன்றில் ஊர் நினைப்பில இருங்கோ.. இல்ல.. நீங்க வாழுற குறிச்சியே உலமென்று இருங்கோ..! கொஞ்சமும் பரந்து பட்டு போகாதேங்கோ.. பார்க்காதேங்கோ. அப்புறம் ஆளையாள் நான் பெரிசு நீ பெரிசுன்னு அடிபடுங்கோ..! இதுவே அங்க ஊரிலும் பிழைப்பு.. இங்கும் அதுவே..!

பிள்ளைகளுக்கு ஆட்டுக்குட்டி.. கன்றுக்குட்டி தெரியல்லைன்னா.. அதுகள் உள்ள இடங்களிற்கு.. குறைஞ்சது.. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலாப் போங்கோ.உங்களுக்கு தெரியல்லைன்னா.. ஆக்களட்ட கேட்டு விசாரிச்சுப் போங்கோ. எல்லாம் தெரிஞ்ச கணக்கா நடக்காதேங்கோ..! பிள்ளைகளுக்கு அதுகளை.. காட்டுங்கோ. குறை சொல்ல முதல் அதைச் செய்யுங்கோ. உதுகளைச் செய்யாமல்.. மாறிமாறி.. பிள்ளைகளிலும்.. மொழியிலும் குறைபிடிக்கிறதிலையோ காலத்தை தள்ளுங்கோ..! :lol::D:icon_idea:

nubian_goats.jpg

Highlands Farm

Woodchurch

Ashford

Kent, TN26 3RJ

St Helen's farm in Yorkshire

http://www.vanhkish.f9.co.uk/highlandgoatclub/index.htm

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நேற்றைய தினம் ஒரு உறவுக்காரப் பிள்ளையோடு கதைக்கும் போது இந்த தமிழ் கல்விக் கூடங்கள் செய்யும் சில வேண்டாத விசயங்கள் பற்றி சொல்லிக் கொண்டா.... இங்கு அனேகமான ஆலயங்களில் வார இறுதி நாட்களில் தமிழோடு,சமயம் சார்ந்த சில விடையங்களையும் மேலோட்டமாக சொல்லிக் கொடுக்கிறார்கள்.வயதில் மிகவும் குறைந்த பிள்ளைகளும் தமிழ்,சமயம் கற்பிக்கிறார்கள் அவர்களுக்கே தமிழ்,சமயங்களில் போதிய அறிவு இருக்குமா என்றால் என்னைப் பொறுத்த மட்டில் கேள்விக் குறியாகவே இருக்கிறது..தமிழ் என்றால் அந்தப் பாடத்தை மட்டும் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுப்பதும் இல்லை சமயம் அது,இது என்று ஒரு கலவையான கல்வியாகத் தான் இருக்கிறது.

கடந்த மாதம் ஒரு ஆலயத்தில் கல்வி கற்கும் பிள்ளைகளுக்கு அவர்களின் பெற்றோரிடம் ஏதோ உடுப்பு தைக்க சொன்னார்களாம்... 5 நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் செய்ய வேண்டிய ஒரு நடனத்திற்காக 45 டொலர்களுக்கு உடுப்பு தைக்க வேண்டிய நிலை...நெடுகலும் அவர்கள் சொல்வதை செய்ய ஏலாத காரணத்தினால் கிறிஸ்த்தவ பாடசாலைகளில் நடை பெறும் தமிழ் வகுப்புக்கு அனுப்பி விட்டால் படிப்பிக்கும் போது அவற்றில் வரும் தமிழ் பெயர்களுக்கு ஆன், மேறி, ஜோஸ்வா,றோபேக்கா என்று பெயர்களை மாற்றி சொல்லிக் கொடுக்கிறார்கள் என்றும் அந்த தாய் மிகவும் கவலைப்பட்டு சொல்லிக் கொண்டு இருந்தார்.

பிள்ளைகளை அவர்களிடம் தமிழ் கற்பிக்க அனுப்பி விட்டு குறையும் சொல்ல முடியாது..ஆனால் கல்விக் கூடங்களுக்கு அனுப்பியும் சில பிள்ளைகள் தொடர்ந்து ஆங்கிலம் பேசுவதைத் தான் விரும்புகிறார்கள்.ஆகவே பிள்ளைகளின் பூரண விருப்பின்றி மிக குறைந்த வயதிலயே இப்படியான வகுப்புக்களுக் அனுப்புவதை இயன்றைவரை பெற்றோர் தவிர்த்து கொண்டால் மிகவும் விரும்ப தகுந்த விடையம்...கொஞ்சம் வளர்ந்த பிள்ளைகளாகிய பின் அவர்கள் விருப்பின் பேரில் தமிழ்,சமயம் சார்ந்த வகுப்புக்களுக்கு அனுப்பி வைப்பது நல்லது என்று நினைக்கிறன்.சில பிள்ளைகள் சிறு வயதில் தாய்,தந்தையரின் கட்டாயப்படுத்தலினால் வகுப்புக்களுக்கு போய் விட்டு ஒரு குறிப்பிட்ட வயது வந்த பின்னர் தாங்களாகவே தமிழ்,சமய,சங்கீத வகுப்புக்களுக்கு போவதை நிறுத்தி விடுகிறவர்களையும் நான் பார்த்து இருக்கிறன்.ஆகவே ஒரு பிள்ளை உண்மையாக எதை விரும்புகிறது என்று நன்கு அறிந்து விட்டு அதற்கு ஏற்ப பெற்றோர் செயல்படுவது நன்று.

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

தமது வேலைப்பளுவுக்குள்ளும்

ஆசிரியர்களும் பெற்றோரும் பிள்ளைகளும் ஒரு உணர்வோடும் மிகுந்த சிரமங்களுக்கு முகம் கொடுத்தபடியேதான் இது போன்ற வகுப்புக்களை நடாத்துகின்றனர்.

எரிமலை குறிப்பிட்டதுபோல்

குறை பிடிப்பவர்களிடம் ஒரு வேண்கோள்

ஒரு மாதம் ஒரு வகுப்பை பொறுப்படுத்து

சரியான நேரத்திற்கு ஆரம்பித்து சரியான நேரத்திற்கு அனைவரையும் ஒன்று கூட்டி வகுப்புக்களை நெறிப்படுத்தி நடாத்திவிட்டு வந்து எழுதுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இது குறை பிடிப்பு அல்ல..அப்படி உங்களுக்கு தெரிந்தால் நாங்கள் ஒன்றும் செய்ய இயலாது..ஏன் இப்படி செய்து கொள்கிறார்கள் என்ற ஆதங்கம் மட்டுமே....பலரும் கருத்துக்களை முன் வைக்கிறார்கள் ஆகவே தான் கலந்து கொள்கிறோம்..அனேகமான பாடசாலைகளில் படிக்கும் பிள்ளைகளின் நிலை சொல்லப் போனால் ஆங்கிலத் திரைப்படத்தை,மற்றும் வேற்று மொழிப் படங்களை டப்பிங் செய்வது போல் தான் இருக்கிறது...சில பிள்ளைகள் ஆங்கிலமும் தமிழும் கலந்து பேசுகிறார்கள் அது நன்றாக இருக்கிறதா......ஒரு வீட்டுக்கு தொலைபேசி எடுத்து அம்மா எங்க அப்பன் என்று சின்னப் பிள்ளை ஒன்றை கேட்டால் அந்தப் பிள்ளை சொல்கிறான் அம்மா குளிக்கிங்..பின் ஆங்கிலத்தில் தொடர்கிறான்...அம்மா குளிக்கிங் எந்த மொழி சொல்லுங்கள்.

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

ஆங்கிலேயர் பிரென்ஞ் படிக்கினம்,பிரென்ஞ்காரர் ஆங்கிலம் படிக்கினம் தமிழன் இதையெல்லாம் படிப்பான் ஆனால் தன்ட சொந்த மொழி படிக்க மாட்டான்...உலகில் இருக்கின்ற பெரும்பான்மையான மக்கள் தங்கள்,தங்கள் தாய் மொழியை வருங்கால சந்ததிக்கு சொல்லிக் கொடுத்து கொண்டு தான் இருக்கினம் ஆனால் தமிழனுக்கு மட்டும் தமிழ் படிக்க நூற்றியெட்டு குற்றச்சாட்டு...பாடசாலையில் போய் தமிழ் படித்தால் மட்டும் காணாது ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகளோடு தமிழில் கதைக்க வேண்டும்...தாய் மொழிப் பற்று இருந்தால் தான் நாட்டுப் பற்றுத் தானாக வரும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருத்துக்களை பகிர்ந்த நண்பர்கள் எல்லோருக்கும் நன்றி.

சின்னப்பிள்ளைகளுக்கு ஒரு பாடத்திட்டம் என்று கொண்டு வருவது ஒரு கடினமான காரியம். அனைத்திலும் சரிகளும் தவறுகளும் உண்டு. கற்பனையில் எந்தளவை சொல்லலாம் என்று ஒரு அளவு இருக்க வேண்டும். ஆனால் நடைமுறையில் அதுவே மிகக் கடினமான வேலை. நெடுக்கு சொன்னதுபோல, ஆடு மாடு கூட்டிக்கொண்டுபோய் காட்டலாம், ஆனால் அதுகளை எப்ப காட்டுவது எப்பதுதான் கேள்வி? பாட்டு பாடமாக்க முதலா? அல்லது பாட்டு அரங்கேற்றத்துக்கு பிறகா? ..பிறகு அதற்கும் கேள்வி வரும், தமிழ் பள்ளிகூடத்திர்ற்கு விட்டால், நாங்கள் மிருகக்காட்சி சாலைகளுக்கும், தமிழ் அரும் பொருள் காட்சிக் கூடத்திற்கும் கூட்டிக்கொண்டு போக வேண்டும் என்று.

- இன்னுமொன்று இந்த மிருகக் காட்சி சாலையில் இருக்கும் மிருகங்களுக்கும் எங்கள் கற்பனையில் உள்ள மிருகங்களுக்கும் நிறைய தூரம். மகள் "டோரா" லாமா என்கிற மிருகத்தை பற்றி ஒரு உயர்ந்த அபிபிராயம் வைத்திருந்தார்- 4 / 5 வயது பிள்ளை, ஆனால் "கிங்க்ஸ்டன்" உள்ள "பிக் ஆப்பிள்" இடத்தில் உள்ள லாமாவை பார்த்தல்..அதற்கு கிட்டவே போக முடியாது.-மணமும் நொடியும் - அதே போலத்தான் எங்கள் ஆட்டுக்குட்டி பாட்டும். ஊரிலே இடிக்கிற, மூடுகிற ஆடுகள் உள்ளபோது, எனக்கு முத்தம் தந்துவிடுவாய் என்று இங்கே படித்துபோட்டி தலை குடுக்காட்டி சரி.

கல்வியில் எவ்வளவு தூரம் "கற்பனை" என்பது கடினமான இலக்கு. அதை ஒழுங்காக்க புலத்தில் தமிழ் படிக்கும், படிப்பிக்கும், மற்றைய அந்த துறை சார்ந்தவர்களும் சேர்ந்து ஒரு முடிவு எடுக்க வேண்டும்.

"குளிகிரிங்"

அந்த பிள்ளையின் நிலை தனியே, தமிழ் சொற்கள் அறிவது மாத்திரம் அல்ல, அதற்கு தமிழ் ஏற்கனவே தெரிகிறது- குளி, ஆனால் அதற்குரிய சரியான காலம் தெரியவில்லை "நிகழ்காலம்" . எனவே அவவிற்கு கூடிய நிலையில் உள்ள தமிழ் வேண்டும். இலக்கண தமிழ். இந்த நிலையில் உள்ளவர்களை நல்ல தமிழ் பேச வைப்பதில்தான் எங்கள் வெற்றி இருக்கிறது.

மானாட மயிலாடவும் , சூப்ப ஜூனியர் சிங்கரும் வீட்டில டெயிலி ஓடினால் தாய்தேப்பனுக்கும் , பிள்ளையளுக்கும் நல்லதமிழ் வரும் . ஏனெண்டால் உயர்பாடதிட்ட விதான அமைப்புகளைவிட இந்த நிகழ்சியள் தாங்கோ தமிழரின்ரை மொழி வளர்சியை கூட்டிக் கொண்டுபோகுது . அட தாய்தேப்பனுக்கே " ழ " கர " ல " கரத்தில பெரிய வில்லங்கம் . பேந்தேனப்பா சின்னனுகளோடை போறியள் ???? நீங்கள் எப்பிடி இருக்கிறியளோ அப்பிடிதானே சின்னனுகளும் இருக்கும் .

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]பிரித்தானியாவில் தமிழ்ப் பாடசாலைகள் பற்றிய உங்கள் எல்லோரது கருத்துக்களை வாசித்தேன். கல்வி என்பது சிறு வயதிற்கு உரியது. பிள்ளைகள் எப்போதும் தாமாக விரும்பிக் கல்வி கற்பதில்லை. ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பது தமிழ்ப் பழமொழிதான். ஒன்பது வயதுப் பிள்ளையால் ஒரு நேரத்தில் ஒன்பது மொழியைக் கூடக் கற்க முடியும் என்று அறிஞர்கள் கூறுகின்றனர். ஒரு இனம் அழிந்துபோகாதிருக்க அதன் பண்பாடு அழிந்துபோகாதிருக்க மொழி முக்கியமானது. கிருபன் நீங்கள் போன பாடசாலை தரம் குறைந்த தமிழைக் கட்ர்ப்பிப்பதைக் கடமையாக நினைத்துச் செய்யும் ஒரு பாடசாலையாக எனக்குப் படுகிறது. எனக்குத் தெரிந்து பல நல்ல உயர்ந்த நோக்கோடு நடாத்தப்படும் தரமான பாடசாலைகளை நான் அறிவேன். தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை என்னும் தமிழர்களின் கல்விப் பேரவை உலகம் முழுதும் பல பாடசாலைகளை உள்ளடக்கியது. புலம்பெயர் சிறுவர்களுக்கான பாடத்திட்டம் இலகுவாக்கப்பட்ட ஐரோப்பியக் கல்விமுரைசார் புத்தகங்களும் பல அறிஞர்கள் சேர்ந்து தயாரித்து, கேட்டல்,பேசுதல், வாசித்தல்,எழுதுதல் என்னும் நான்கு வழிகளில் மொழிசார் பரீட்சையும் நடத்தப்பட்டு தமிழ் வளர்க்கப்படுகிறது. சுய லாபம் கருதிச் சிலர் சிலோன் பாடப் புத்தகங்களை காப்பி பண்ணி அரைகுறையாகத் தமிழைக் கற்ப்பிக்கின்றனர். தாய் மொழி கற்று தாய்மொழியைப் பேசவும் எழுதவும் தெரிந்த பிள்ளைகளால் நன்றாகச் சிந்திக்க முடியும்.வேற்று மொழிகளான ஆங்கிலம் பிரெஞ்சு,யேர்மன்,இஸ்பெயின் மொழிகளை உங்கள் பிள்ளைகள் கற்ற்க்கும்போது மட்டும் அந்தப் பிள்ளைக்கு இலகுவாகவா இருக்கும். எந்த இனத்தை எடுத்துக் கொண்டாலும் தாய்மொழி தெரியாத பிள்ளை தமிழ்ப்பிள்ளை மட்டுமே.ஒரு மொழி தெரியுமென்றால் எழுதவும் வாசிக்கவும் தெரிந்தால் மட்டும் தான் அது ஒரு மொழி தெரிந்ததர்க்கான அடையாளம். அரை குறையாகக் கதைத்தால் மட்டும் போதாது.காலப்போக்கில் மற்றைய மொழியின் தாக்கத்தால் அது தானாகவே அருகிவிடும். மொழி மொழி என்கின்றோமே நாம் தமிழர் நாம் எத்தனைபேர் தமிழ் மொழியில் கையொப்பம் இட்டிருக்கின்றோம் அல்லது இடுகின்றோம். அதுவே தமிழினத்துக்கு அவமானமல்லவா. யாழில் வந்து தமிழ் தமிழ் என மார்தட்டும் எத்தனைபேர் உங்கள் பிள்ளைகளைத் தமிழ்ப் பிள்ளைகளாக வளர்க்கின்றீர்கள். வீட்டில்க் கதைக்கிறீர்கள் தமிழில். எத்தனைபேர் பிள்ளைகளுக்குத் தமிழ்ப் பெயர் வைத்துள்ளோம். அத்தனை தமிழ் என்றால் தமிழனுக்குக் கேவலம். முதலில் நாம் ஒவ்வொருவரும் தமிழராக வாழ்வோம்.தமிழை நேசிப்போம். தமிழ் தானாக நிலைக்கும்.[/size]

[size=5]பிரித்தானியாவில் தமிழ்ப் பாடசாலைகள் பற்றிய உங்கள் எல்லோரது கருத்துக்களை வாசித்தேன். கல்வி என்பது சிறு வயதிற்கு உரியது. பிள்ளைகள் எப்போதும் தாமாக விரும்பிக் கல்வி கற்பதில்லை. ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பது தமிழ்ப் பழமொழிதான். ஒன்பது வயதுப் பிள்ளையால் ஒரு நேரத்தில் ஒன்பது மொழியைக் கூடக் கற்க முடியும் என்று அறிஞர்கள் கூறுகின்றனர். ஒரு இனம் அழிந்துபோகாதிருக்க அதன் பண்பாடு அழிந்துபோகாதிருக்க மொழி முக்கியமானது. கிருபன் நீங்கள் போன பாடசாலை தரம் குறைந்த தமிழைக் கட்ர்ப்பிப்பதைக் கடமையாக நினைத்துச் செய்யும் ஒரு பாடசாலையாக எனக்குப் படுகிறது. எனக்குத் தெரிந்து பல நல்ல உயர்ந்த நோக்கோடு நடாத்தப்படும் தரமான பாடசாலைகளை நான் அறிவேன். தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை என்னும் தமிழர்களின் கல்விப் பேரவை உலகம் முழுதும் பல பாடசாலைகளை உள்ளடக்கியது. புலம்பெயர் சிறுவர்களுக்கான பாடத்திட்டம் இலகுவாக்கப்பட்ட ஐரோப்பியக் கல்விமுரைசார் புத்தகங்களும் பல அறிஞர்கள் சேர்ந்து தயாரித்து, கேட்டல்,பேசுதல், வாசித்தல்,எழுதுதல் என்னும் நான்கு வழிகளில் மொழிசார் பரீட்சையும் நடத்தப்பட்டு தமிழ் வளர்க்கப்படுகிறது. சுய லாபம் கருதிச் சிலர் சிலோன் பாடப் புத்தகங்களை காப்பி பண்ணி அரைகுறையாகத் தமிழைக் கற்ப்பிக்கின்றனர். தாய் மொழி கற்று தாய்மொழியைப் பேசவும் எழுதவும் தெரிந்த பிள்ளைகளால் நன்றாகச் சிந்திக்க முடியும்.வேற்று மொழிகளான ஆங்கிலம் பிரெஞ்சு,யேர்மன்,இஸ்பெயின் மொழிகளை உங்கள் பிள்ளைகள் கற்ற்க்கும்போது மட்டும் அந்தப் பிள்ளைக்கு இலகுவாகவா இருக்கும். எந்த இனத்தை எடுத்துக் கொண்டாலும் தாய்மொழி தெரியாத பிள்ளை தமிழ்ப்பிள்ளை மட்டுமே.[/size]ஒரு மொழி தெரியுமென்றால் எழுதவும் வாசிக்கவும் தெரிந்தால் மட்டும் தான் அது ஒரு மொழி தெரிந்ததர்க்கான அடையாளம். அரை குறையாகக் கதைத்தால் மட்டும் போதாது.காலப்போக்கில் மற்றைய மொழியின் தாக்கத்தால் அது தானாகவே அருகிவிடும். மொழி மொழி என்கின்றோமே நாம் தமிழர் நாம் எத்தனைபேர் தமிழ் மொழியில் கையொப்பம் இட்டிருக்கின்றோம் அல்லது இடுகின்றோம். அதுவே தமிழினத்துக்கு அவமானமல்லவா. யாழில் வந்து தமிழ் தமிழ் என மார்தட்டும் எத்தனைபேர் உங்கள் பிள்ளைகளைத் தமிழ்ப் பிள்ளைகளாக வளர்க்கின்றீர்கள். வீட்டில்க் கதைக்கிறீர்கள் தமிழில். எத்தனைபேர் பிள்ளைகளுக்குத் தமிழ்ப் பெயர் வைத்துள்ளோம். அத்தனை தமிழ் என்றால் தமிழனுக்குக் கேவலம். முதலில் நாம் ஒவ்வொருவரும் தமிழராக வாழ்வோம்.தமிழை நேசிப்போம். தமிழ் தானாக நிலைக்கும்.

அது ................................. சுமே அங்கை நிக்கிறியள் . போடுற விதை சரியா இருந்தால்தான் விளைச்சல் ஒழுங்காய் இருக்கும் .

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் தலைப்பைப் படிச்சிட்டு.. லண்டனில் தமிழ் படிக்கிற ஒரு 8 வயதுச் சிறுமியிடம் ஒரு கருத்துக் கேட்டன். இப்படி பெரிய மனுசாள் சொல்லினம்.. நீங்க என்னம்மா நினைக்கிறீங்க என்று கேட்டன்.

அதற்கு அந்தப் பிள்ளை தனது புத்தகத்தில் உள்ள.. இந்தப் படத்தைக் காட்டிட்டு சொல்லிச்சுது எனக்கு ஆடு.. குட்டி என்றால் என்னெண்டு தெரியும் என்று. விளங்குது எண்டு. இல்ல யூரியுப்பில பார்ப்பம் தெரியாட்டி என்று. மேலும் சொல்லிச்சு நிலா பாட்டு எல்லாம் படிக்கிறம் நிலாவுக்கு போயா பார்த்திட்டு வந்து படிக்கிறம். நிலா இப்படித்தான் இருக்கும் என்று படத்தில பார்த்துத் தானே படிக்கிறம் எண்டிச்சுது. எனக்கே கொஞ்சம் அதிர்ச்சியாத்தான் இருந்திச்சு. இருந்தாலும்.. பிள்ளையள் நல்ல தெளிவா இருக்குதுகள். பெரியாக்கள் தான் பிரச்சனையோட இருக்கினம் போல.

அந்தப் பிள்ளையின்ர அண்ணணட்டும் விசயத்தைச் சொன்னன். அவன் சொன்னான்.. உங்க எத்தினை பார்ம் இருக்குது. அங்க போய் பார்க்கலாம் எல்லாம் என்று. நான் அவர்களோடு கதைக்கும் போது எந்த ஐடியாவும் கொடுக்கல்ல. கருத்து மட்டும் தான் கேட்டன். அவர்களாகவே இவற்றைச் சொன்னார்கள்.

இதுதான் அந்தப் பிள்ளை காட்டின புத்தகத்தின் பக்கம்..

goat.jpg

சின்னுகளட்ட பெரியாக்கள்.. கருத்துக் கேட்டிட்டு ஆக்கம் படையுங்கோ.

எதுக்கும் நான் சொன்னது.. ஒன்று தெரியாட்டி ரீச்சரட்டச் சொல்லி ஒரு சுற்றுலாப் போய் பாருங்கோ என்று. அது நல்ல ஐடியா என்றிச்சுகள்..! ஸ்கூலாலும் கூட்டிக் கொண்டு போறவை என்றிச்சுதுகள்..! :icon_idea::)

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]நாங்கள் ஊரில் நீராவியில் புட்டு அவித்து சாப்பிட்டுவிட்டு [/size]

[size=4]நீராவி இயந்திரம் பற்றி படிக்கவில்லையா என்னா?[/size]

[size=4] [/size]

[size=4]ஆடத்தெரியாதவனுக்கு மேடை சரியில்லை என்பதை எப்போதோ இருந்தே கேள்விபடுகிறோம் தானே.[/size]

டிவியில் கண்ட கண்டதையெல்லாம் பார்க்கிறார்கள். ஆரம்பத்தில் போடும்பொழுது விளங்கா விட்டாலும் பின்பு விளங்குகிறது. தமிழ் விளங்காதா? தமிழ்ப் பாடசாலைகள் எம்மிடம் உதவி கேட்கின்றன. நானே நேரம் கிடைக்காமையால் ஒதுங்கிப் போயுள்ளேன். பிழைகளைச் சுட்டிக் காட்டி ஊக்கிவிப்பது நமது கடமை. அவர்களும் ஆட்கள் இல்லாமல்தான் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

உதாரணமாக இப்படிச் சொன்னால்

நமீதாக் குட்டி எந்தன் குட்டி

அருமையான சின்னக் குட்டி

ஓட்டம் ஒடி வந்திடிடுவாய்

உனக்கு முத்தம் தந்திடுவேன்

இது எந்தக் களவாணிக்கும் விளங்கும்.

ஆட்டுக் குட்டியைப் போட்டதால் தமிழ் தடக்குப்படுகிறது.

Edited by தப்பிலி

  • கருத்துக்கள உறவுகள்

நமீதாக் குட்டி எந்தன் குட்டி

அருமையான சின்னக் குட்டி

ஓட்டம் ஒடி வந்திடிடுவாய்

உனக்கு முத்தம் தந்திடுவேன்

இது எந்தக் களவாணிக்கும் விளங்கும்.

ஆட்டுக் குட்டியைப் போட்டதால் தமிழ் தடக்குப்படுகிறது.

[size=4]இப்பிடி என்றால் இனி........[/size]

[size=4]விசுகு அண்ணா [/size]

[size=4]தமிழ் சிறி அண்ணா[/size]

[size=4]நம்ம இசை அண்ணா எல்லாம் நாங்களும் முதலிலே இருந்து தமிழை வடிவாக கற்றுக்கொள்ள போகிறோம் என்று வெளிக்கிட்டால்.[/size]

[size=4]சிறுவர்களுக்கு பள்ளியில் இடம் இல்லாது போய்விடும்.[/size]

[size=4]ஆட்டுக்குட்டியே இருக்கட்டும்![/size]

[size=4]இல்லாத இடத்திற்கு வேண்டுமானால் ஒரு ஆட்டுக்குட்டியை அயல் நாடுகளில் இருந்து பெற்று கொடுக்கலாம்.[/size]

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[size=5]கிருபன் நீங்கள் போன பாடசாலை தரம் குறைந்த தமிழைக் கட்ர்ப்பிப்பதைக் கடமையாக நினைத்துச் செய்யும் ஒரு பாடசாலையாக எனக்குப் படுகிறது. எனக்குத் தெரிந்து பல நல்ல உயர்ந்த நோக்கோடு நடாத்தப்படும் தரமான பாடசாலைகளை நான் அறிவேன். தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை என்னும் தமிழர்களின் கல்விப் பேரவை உலகம் முழுதும் பல பாடசாலைகளை உள்ளடக்கியது. புலம்பெயர் சிறுவர்களுக்கான பாடத்திட்டம் இலகுவாக்கப்பட்ட ஐரோப்பியக் கல்விமுரைசார் புத்தகங்களும் பல அறிஞர்கள் சேர்ந்து தயாரித்து, கேட்டல்,பேசுதல், வாசித்தல்,எழுதுதல் என்னும் நான்கு வழிகளில் மொழிசார் பரீட்சையும் நடத்தப்பட்டு தமிழ் வளர்க்கப்படுகிறது.[/size]

நான் படித்த பாடசாலை மிகவும் தரமான பாடசாலை என்று எனது தமிழில் இருந்தே உங்களுக்குப் புரிந்திருக்கவேண்டும் :)

புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ்ப் பாடசாலைகள் எப்படி நடாத்தப்படுகின்றன என்பதை நேரிடையாகச் சென்று பார்க்க சந்தர்ப்பம் மிகவும் குறைவு. எனினும் பிறர் பேசும்போது கேட்டதன்படி, நீங்கள் மேலே குறிப்பிட்ட தரத்துடன் உள்ள பாடசாலைகள், தகமையுள்ள ஆசிரியர்கள் குறைவு.

சிறிய வயதில் பல மொழிகளையும் இலகுவாகக் கற்கலாம். ஆனால் கற்றலில் பிள்ளைகளுக்கு விருப்பத்தை உண்டாக்கக்கூடிய பாடவிதானமும், கற்பித்தல் முறையும் இருக்கவேண்டும். தமிழை படிக்கவேண்டும் என்று பிள்ளைகளைக் கட்டாயப்படுத்துவதைவிட தமிழைப் பிள்ளைகள் விரும்பிப் படிக்கும் சூழலை ஏற்படுத்தினால் தமிழ் நிச்சயம் வளரும்.

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் தவறாக் விளங்கிக் கொண்டு விட்டீர்கள். நான் சொன்னது கலை விழா நடந்த பாடசாலை பற்றி.

என் அவசரம் உங்கள் மனதைப் புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்.

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்

ஆங்கிலேயர் பிரென்ஞ் படிக்கினம்,பிரென்ஞ்காரர் ஆங்கிலம் படிக்கினம் தமிழன் இதையெல்லாம் படிப்பான் ஆனால் தன்ட சொந்த மொழி படிக்க மாட்டான்...உலகில் இருக்கின்ற பெரும்பான்மையான மக்கள் தங்கள்,தங்கள் தாய் மொழியை வருங்கால சந்ததிக்கு சொல்லிக் கொடுத்து கொண்டு தான் இருக்கினம் ஆனால் தமிழனுக்கு மட்டும் தமிழ் படிக்க நூற்றியெட்டு குற்றச்சாட்டு...பாடசாலையில் போய் தமிழ் படித்தால் மட்டும் காணாது ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகளோடு தமிழில் கதைக்க வேண்டும்...தாய் மொழிப் பற்று இருந்தால் தான் நாட்டுப் பற்றுத் தானாக வரும்

[size=3]தரமான சிந்திக்கவேண்டிய கருத்து.

நன்றி ரதி.

வரவேற்கின்றேன்.[/size]

  • கருத்துக்கள உறவுகள்

நான் தரம் 5,6 ஆம் வகுப்பு தமிழ் புத்தகங்கள் (கேட்டல், பேசுதல்.வாசித்தல்,எழுதுதல்) வாசித்து பார்த்தேன்.இவை வட அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு பொதுவான கல்வி திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது .நாம் படித்த காலத்தை விட மிக மிக தரமான புத்தகங்கள்.புத்தகத்தில் உள்ளவற்றை எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் (பார்த்து இருக்க வேண்டிய அவசியமில்லை) என்ற அவசியமில்லை.மாணவர்களை சிந்திக்க கூடிய வகையில் படிப்பித்தாலே போதுமானது. பல மொழிகளை கற்கும் சிறார்கள் தாங்களாகவே ஏனைய மொழிகளோடு,கலாச்சாரத்தோடு பிணைத்து பார்க்கிறார்கள்.

இங்கு இருக்கும் அமெரிக்கர்கள் தமது மூதாதையர் பிரிட்டன், ஜேர்மனி ,இன்னும் பல ஐரோப்பிய நாடுகளை குறிப்பிட்டு அங்குள்ள இடங்கள் ,சண்டைகள் என பலவற்றை தமது குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கிறார்கள்.நாம் மட்டும் எமது குழந்தைகளுக்கு எமது தாயகத்தை பற்றி சொல்லிக்கொடுக்க கூடாது??

மேற் சொன்ன சிறார்கள் ஸ்பானிசும் கற்கிறார்கள்.அந்த புத்தகத்தை படித்தால் மெக்சிக்கோவை பற்றியும் ஸ்பெயினை பற்றியும் தான் சொல்கிறார்கள்.நாம் மட்டும் ஏன் குறுகிய சிந்தனை கொண்டவர்களாக மட்டக்களப்பை படிக்க கூடாது யாழ்ப்பாணத்தை படிக்க கூடாது என கூப்பாடு போடுகிறோம்??

ஒரு சிறுமியின் 3 ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் திருக்குறளை மனனம் செய்து கருத்தும் படிக்கச்சொல்லி உள்ளார்கள்.மாணவியை கேட்டேன்.அவர் தனக்கு விளங்கவில்லை (தமிழில் கூறப்பட்ட படியால்) எனவும் தான் கூகிளில் பெற்றோரின் உதவியுடன் தேட்டிப்பார்த்து ஆங்கிலத்தில் அதனை விளங்கக்கூடியதாக இருந்தது என்றும் கூறினார். ஆகவே கல்வி திட்டத்தில் பிழை என்போர் என்ன சொல்கிறீர்கள்??

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் தவறாக் விளங்கிக் கொண்டு விட்டீர்கள். நான் சொன்னது கலை விழா நடந்த பாடசாலை பற்றி.

என் அவசரம் உங்கள் மனதைப் புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்.

மனதைப் புண்படுத்துமாறு நீங்கள் எதுவும் எழுதவில்லைத்தானே.

இரண்டாவது, மூன்றாவது தலைமுறைத் தமிழர்கள் தமிழைப் பேசுகின்றார்களோ இல்லையோ தங்களைத் தமிழர்களாக அடையாளப்படுத்துவதை நிறையவே பார்த்திருக்கின்றேன்.

எனவே மொழியைக் கற்பிக்க்கும்போது பிள்ளைகளுக்கு ஆர்வம் உண்டாக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும். ஆர்வம் உள்ளவர்கள் எதையும் இலகுவில் கற்றுவிடுவார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.