Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்



எனது பன்னிரண்டாவது வயதில் நான் முதல் முதல் அவளைச் சந்தித்தேன். வேம்படியில் அன்றுதான் ஆறாம் வகுப்பில் சேர்கிறேன். என்னோடு ஐந்தாம் வகுப்பில் படித்த இரண்டு மூன்று பேர் வந்திருந்தாலும் புதிதாய்க் காண்பவர்களிடம் கதைப்பதற்குத்தானே மனம்  அவாவும். அவள் என்னைப் பார்த்துச் சிரித்தது இன்றும் ஞாபகம் இருக்கிறது.

அவள் என்னைப் பார்த்துச் சிரித்ததும் அவளை நெருங்கி என்ன பெயர் என்று கேட்டேன். யாழினி என்றாள். அவளின் ஊர் பற்றிக் கேட்டு பொதுவாகக் கதைத்துவிட்டு மற்றவளிடம் நகர்ந்துவிட்டேன். இரண்டு மணி நேரத்தில் வகுப்புகள் பிரித்து விட வகுப்பில்  முன் வரிசையில் இடம்பிடித்து நான் அமர்ந்தபோது அவளாக எனக்குப் பக்கத்து இருக்கையில் வந்தமர்ந்தாள்.

 

நான் சரியான அலட்டல். அலட்டல் என்றால் பல அர்த்தங்கள் இருக்கு. எனக்கு கதைப்பது என்றால் மிகவும் பிடிக்கும். ஒருவரையும் விட்டுவைக்க மாட்டேன். அதனால் படிக்கும் காலத்தில் படித்ததை விட எல்லோருடனும் அலட்டியதே அதிகம். அதனால் இரண்டு ஆண்டுகள் எனக்கு நிலையான ஒரு நண்பி என்று இல்லை. நாங்கள் ஆறு பேர் ஒன்றாக இருந்து அலட்டுவோம். சாப்பிடுவோம். எல்லாம் செய்வோம். இவளும் எம்முடன் சேர்ந்து நிற்பாள். ஆனால் மற்றவர்களுக்கு இவளைப் பெரிதாகப் பிடிக்காது. இருந்தாலும்  என்னுடன் நிற்பதனால் ஒன்றும் சொல்வதில்லை.

மதிய உணவு இடைவேளையில் இவள் எல்லோருக்கும் திரைக்கதை விமர்சனம் சொல்லுவாள். நாங்கள் சிலர் வாய் பிளந்து கேட்டுக்கொண்டிருப்போம். அதில் கதாநாயகன் நாயகி அணிந்திருந்த ஆடைகளின் நிறம் கூடச் சொல்லுவாள். அவள் வாரம் ஒரு படம் தொலைக் காட்சியில் பார்த்ததாகக்  கூறுவதை நாம் நம்பத்தான் வேண்டியிருந்தது. அவளின் ஊர் அரியாலை. அவ்வூரைப் பற்றி அவள் வர்ணிக்கும் வர்ணிப்பில் எனக்கு அவளூரைப் பார்க்கப் போக வேண்டும் என்ற ஆசை வந்தது.

அம்மாவிடம் கேட்டால் விடவே மாட்டார் என்பது தெரிந்ததே. அதனால்  அம்மாவுக்குக்  கூறாமல் அரை நேரம் பாடசாலையைக் கட் அடித்துவிட்டு இருவரும் செல்வதாகத் திட்டம் போட்டோம். அவள் மிதியுந்திலேயே பாடசாலைக்கு வருவாள். இன்னும் ஒரு நண்பியின் மிதியுந்தை வாங்கிக் கொண்டு நாங்கள் சென்றோம் . உண்மையில் அவளின் ஊர் பச்சை வயற்பரப்புகள், கோயில் குளங்கள், கடல் என்று மிக அழகாகவே இருந்தது.

அவளின் தாயார் எம்மை அன்புடன் வரவேற்று உபசரித்தார். மதிய உணவை உண்டுவிட்டு அவள் வீட்டு வரவேற்பறையில் பாயை விரித்து இருவரும் கைகளில் தலையை ஊன்றியபடி நீண்டநேரம் கதைத்துக்கொண்டு இருந்தோம். அன்று தான் எனக்குத் தெரிந்தது அவளுக்கு தந்தை இல்லை என்ற விடயம். அதன்பின் அவளிடம் எனக்கு ஒரு மேலதிக அன்பு தோன்றிவிட்டது. அப்போதுதான் கவனித்தேன் அவளிடம் தொலைக் காட்சி கூட இல்லை என்பதை. இருந்தாலும் என்னால் கேட்காமல் இருக்க முடியவில்லை. எங்கே உன் வீட்டு தொலைக் காட்சி என்றேன். அது பழுதாகி விட்டது அதனால் திருத்தக் கொடுத்து விட்டோம் என்றாள்.

பாடசாலை விடுவதற்கு இன்னும் அரை மணிநேரமே இருந்ததால் மீண்டும் பாடசாலைக்குக் கிளம்பினோம். வெளியே வரும்போது ஒருமுறை  அவள் வீட்டைச் சுற்றிப் பார்த்தேன். என்னடி பார்க்கிறாய் என்றால் ஒன்றும் இல்லை சும்மா பார்த்தேன் என்றுவிட்டு மிதியுந்தில் ஏறினேன். மனதுக்குள் அடி கள்ளி உன் வீட்டில் தொலைக்காட்சி இருந்திருந்தால் வெளியே உயரமான குழாயில் அன்டெனா (உணர்கொம்புநிரை)  பொருத்தப்பட்டிருக்க வேண்டுமே .அதாவது வெறும் குழாய் கூட அங்கில்லை. ஏன் பொய்  சொன்னனி என்று கேட்க எண்ணியும் கேட்கவில்லை.

ஒன்பதாம் பத்தாம் வகுப்புகளில் அவளுடனான நெருக்கம் அதிகரித்தது. அவள் என் வீட்டுக்கு வருவதும் நான் அம்மாவிடம் கூறிவிட்டு அவளின் வீட்டுக்குப் போவதும், அவளூரில் இருக்கும் சிறிய குளக்கட்டில் அமர்ந்து மணிக்கணக்காகப் பேசிச் சிரிப்பதுமாக எங்கள் பொழுதுகள் ஆனந்தமாகக் கழிந்தன. எமதூருக்கு அவள் வந்தால் தோட்டங்களைப் பார்க்க ஆசைப்படுவாள். எமதூரில் எங்கும் தோட்டம் என்பதனால் எனக்கு அது பெரிதாகத் தெரிவதில்லை. அவளுக்காகக் கூட்டிக் கொண்டு போய் காட்டுவேன்.

பின் நாம் உயர் தரம் படிக்கையில் அவள் ஆர்ட் எடுக்க நான் விஞ்ஞானம் படித்ததால் அவளின் அலட்டல்கள் குறைந்து கொஞ்சம் நின்மதியாகவும் இருந்தது எனக்கு. ஆனாலும் எமது நட்புத் தொடர்ந்துகொண்டுதான்இருந்தது. அதன்பின் அடிக்கடி நாம் சந்திக்க முடியாது போனாலும் தன் பிரச்சனைகளை எனக்கு மடலாக வடிப்பாள். நான் உடனே பதில் போடாவிடிலும் ஒரு வாரத்தின் பின்னாவது  அவளுக்குப் பதில் போடுவேன். இப்படியே எம் நட்பு பல்கலைக்கழகம் முடிந்து நான் புலம்பெயர் தேசத்துக்கு வந்தபின்னும் தொடர்ந்தது.

நான் இங்கு வந்தபின் தனக்கு ஒரு பேனா நண்பன் இருப்பதாக எனக்கு எழுதியிருந்தாள். நானும் காதலரைக் கரம்பிடித்து குடும்ப வாழ்க்கைக்குள் சென்றிருந்தேன். இவளிடம் இருந்து பக்கம் பக்கமாக மடல் வரும். என்கணவர் கேட்பார் உன் நண்பிக்கு என்ன விசரா. நான் கூட உனக்கு இவ்வளவு எழுதுவதில்லையே என்று. ஆனாலும் எமக்குக் குறுக்கே நிற்கவில்லை.
அதன்பின் அவளுக்கு கொழும்பில் வேலை கிடைத்து வந்துவிட்டாள். ஆனாலும் மடல் எழுதுவதை மட்டும் அவள் நிறுத்தவில்லை. நான் எழுத்தும்  பஞ்சியில் தொலைபேசி எடுத்து கதைத்துவிட்டு எழுதாமல் விட்டுவிடுவேன்.

ஒருநாள் அவளிடமிருந்து வந்திருந்த மடலில் தானும் தனது பேனா நண்பனும் காதலில் வீழ்ந்துவிட்டோம். என்னடி செய்வது எனக் கேட்டு எழுதியிருந்தாள்.  வேறென்ன செய்வது திருமணம் தான் செய்யவேணும் என அவளுக்கு தொலைபேசியில் வாழ்த்தும் கூறினேன். எனக்கு கேட்ட கூச்சமாக இருக்கடி. நீ இருக்கும் நாட்டில் தான் இருக்கிறார். எப்போ வந்து என்னைத் திருமணம் செய்வார் என நீதான் கேட்டுச் சொல்ல வேண்டும் என்றாள். சரி வேறென்ன செய்வது மாட்டேன் என்று சொல்ல முடியுமா என்று மனதில் எண்ணியபடி கேட்டுச் சொல்வதாகக் கூறி தொலைபேசியைவைத்துவிட்டேன்.

கணவரிடம் கூறிவிட்டு அவளின் காதலனுக்கு தொலைபேசி எடுத்து என்னை அறிமுகம் செய்துவிட்டு எடுத்த எடுப்பிலேயே யாழினியைத்
திருமணம் செய்வீர்கள் தானே எனக் கேட்டேன். உடனே காந்தனுக்குச் சிரிப்புவந்துவிட்டது. அவள் காதலன் பெயர் காந்தன். அதை யாழ் என்னிடம் கேட்டிருக்கலாமே. காதலுக்குத்தான் தூது விடுவார்கள். உங்கள் நண்பி திருமணத் தூது விடுகிறாரா என்று கேட்டுவிட்டு நான் கைவிட்டுவிடுவேன் என உங்கள் நண்பிக்குச் சந்தேகம் வந்துவிட்டதோ என்றவர், தான் அடுத்த மாதம் இலங்கை போவதாகவும் அங்கு அவரைப் பதிவுத் திருமணம் செய்வதாகவும் கூறினார்.

அதன்பின் அவள் விசா கிடைத்து யேர்மனி வந்து அவள் திருமணத்தை நாமே முன்னின்று நடத்தி முடித்த்தோம். அதன்பின்னர் எனக்கு கொழும்புக்குத் தொலைபேசி அடிப்பது நின்றுவிட்டதே தவிர வாரம் ஒருமுறை அவள் எனக்கு தொலைபேசி எடுக்க நான் ஒருமுறை என்று உலக விடயம் ஊர்விடயம் என்று பொழுது நன்றாகப் போயிற்று. உன் நண்பி கொழும்பில் நின்றபோது செலவு குறைவு. இப்ப போன் பில் கூட என என் கணவர் நக்கலடிக்கும் அளவு நானும் அவளும் உரையாடுவது தொடர்ந்தது.

அவள் நன்றாகக் கதைகள் எழுதுவாள். வீரகேசரியில் கூட அவளது ஒரு கதை தொடராக வந்தது. அப்போதெல்லாம் எனக்கு அவளைப் பார்த்து பிரமிப்பாக இருக்கும். எப்படி இவ்வளவு நன்றாக எழுதுகிறாள் என்று. எல்லாக் கதைகளையும் எனக்கு அனுப்புவாள். எனக்கும் அப்போதெல்லாம் கதை வாசிப்பது என்றால் வேறொன்றும் தேவை இல்லை. அத்தனை பயித்தியம் வாசிப்பதில். அதனால் அவள் அனுப்பாவிட்டாலும் அனுப்படி என்று கரைச்சல் கொடுத்து வாசிப்பேன்.

அக்காலகட்டத்தில் ஜெர்மனியில் புத்தகங்கள் குறைவு. கடைகளுக்கும் பெரிதாக வருவதில்லை. எனவே கிடைப்பதை விடுவதில்லை. ஐரோப்பிய நாடுகளுள் நடைபெறும் போட்டிகளில் எல்லாம் பங்குபற்றி நிறைய பரிசில்கள் எல்லாம் எடுத்திருக்கிறாள். அவள் நான் போகும்போது பரிசில்களை எல்லாம் காட்டுவாள். நானே பரிசு பெற்றது போல் எனக்கு மகிழ்வேற்படும்.

ஒரு வருடத்தின் பின்னர் அவளுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.

தொடரும் .........








 

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • Replies 83
  • Views 5.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தொடரும் .........

  • கருத்துக்கள உறவுகள்

இளமைக்   கால நினை வுகளை மீட்டும் கதை கேட்க ஆவல். மேலும் தொடருங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி உடையார், நிலா அக்கா.

  • கருத்துக்கள உறவுகள்

அதிக இடைவெளி விடாமல் தொடருங்கள் சுமோ...நானும் வாசிக்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

தொடரும் .........


 

தொடருங்கள் சுமோ, இளமை கால கதை கேட்பது நினைவுகளை மீட்பது எப்போதும் சந்தோசம்.

நானும் வேம்படிக்கு பக்கத்தில் உள்ள  கல்லூரியில் தான். :D

வணக்கம் சுமே .  எழுத்தாடலில் சிறிது மாற்றம் தெரிகின்றது .  இயல்பாக உங்கள் நடையில் எழுதுங்கள் . பள்ளிக்கூடக் கதை சுவை குன்றாது செல்கின்றது . எனது மனங்கனிந்த வாழ்த்துக்கள்  :)  :)  .

தொடருங்கள் சுமோ!! எனக்கும் அலட்ட நல்லாய்ப் பிடிக்கும் :D

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் சுமோ!! எனக்கும் அலட்ட நல்லாய்ப் பிடிக்கும் :D

 

எனக்கு அரட்டையும் பிடிக்காது அரட்டை அடிக்கிறவர்களையும் பிடிக்காது :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்தெழுதிய ரதி,விசுகு அண்ணா,அலை, நவீனன்,கோமகன் ஆகியோருக்கு நன்றி. விரைவில் முடித்துவிடுவேன் பயம் வேண்டாம் :)

எனக்கு அரட்டையும் பிடிக்காது அரட்டை அடிக்கிறவர்களையும் பிடிக்காது :lol:

என்ன மனிசியப்பா இந்த றதி? :lol:  :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு எல்லாவற்றிலும் பிடித்ததே அரட்டைதான் ரதி. அதைப் போன்ற சுவை எதிலும் இல்லை தெரியுமா. :D :D

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு எல்லாவற்றிலும் பிடித்ததே அரட்டைதான் ரதி. அதைப் போன்ற சுவை எதிலும் இல்லை தெரியுமா. :D :D

எனக்குத் தெரியுமே  :D

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் அக்கா...நன்றாக இருக்கிறது...

பாடசாலை அனுபவமும் நட்பின் அனுபவமும் திரும்ப திரும்ப எத்தனை முறை சொன்னாலும் சுவை குறையாத அனுபவங்கள். அதை எல்லாம் ஒரு காலத்தில் நாங்கள் எழுதுவோம் என்று கூட நினைத்து பாத்திருக்க மாட்டோம். உங்கள் எழுத்தில் எங்களையும் இரைமீட்க செய்த உங்களுக்கு நன்றிகள் சுமோ அக்கா.

 

அலட்டலிலும் சுவையான, அறிவுபூர்வமான, ஆட்களை ஆட்கள் வாரிவிடுகின்ற நகைச்சுவையான அலட்டல்கள் எங்களின் பொழுதுகளையும் அழுத்தங்களையும் மறக்க செய்கின்றன. சில பேருடன் சும்மா என்றாலும் அலட்டோணும் போல இருக்கும். :lol: 

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள், சுமோ! 

 

வாய்க்குள்ள இலையான் போறது தெரியாமல் கதையை வாசித்தேன்! :o

 

விடுப்புக்கதை, கேட்கிறதெண்டால், அவ்வளவு விருப்பம்! :D 

 

cork-hat.jpg

 

Quote:" பின் நாம் உயர் தரம் படிக்கையில் அவள் ஆர்ட் எடுக்க நான் விஞ்ஞானம் படித்ததால் அவளின் அலட்டல்கள் குறைந்து கொஞ்சம் நின்மதியாகவும் இருந்தது எனக்கு."

 

நீங்களே அலட்டல் என்று கூறுகின்றீர்கள், உங்களைவிட அலட்டலா அவா?

 

அத்துடன் மன நிம்மதி என்று வேறு கூறுகின்றீர்கள், ஏன் அலட்டுவது பிடிப்பதில்லையா? 

 

மண்டையை சொறியனும் போல இருக்கு :rolleyes:

 

 ஏன் இப்படி குழப்புகின்றீர்கள்.

 

தொடருங்கள் வாசிப்போம் அல்லவா...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சுபேஸ்

 

எனக்குத் தெரியுமே  :D

 

உங்களுக்கு என்னதான் தெரியாது :lol: .
 




 

அலட்டலிலும் சுவையான, அறிவுபூர்வமான, ஆட்களை ஆட்கள் வாரிவிடுகின்ற நகைச்சுவையான அலட்டல்கள் எங்களின் பொழுதுகளையும் அழுத்தங்களையும் மறக்க செய்கின்றன. சில பேருடன் சும்மா என்றாலும் அலட்டோணும் போல இருக்கும். :lol:





உண்மைதான் பகலவன் அலட்டுவதால் எம் மனம் இலகுவாகிவிடுகிறது. அதனால்த்தான் என் வாழ்வு இன்றுவரை துன்பமின்றி மகிழ்வாகப் போய்க்கொண்டு இருக்கிறது.
 



தொடருங்கள், சுமோ! 

 

வாய்க்குள்ள இலையான் போறது தெரியாமல் கதையை வாசித்தேன்! :o

 

விடுப்புக்கதை, கேட்கிறதெண்டால், அவ்வளவு விருப்பம்! :D

 


பெண்கள் தான் விடுப்புக் கேட்பார்கள் என்று பார்த்தால் ஆண்களுமா ????? :D :D





நீங்களே அலட்டல் என்று கூறுகின்றீர்கள், உங்களைவிட அலட்டலா அவா?

 

அத்துடன் மன நிம்மதி என்று வேறு கூறுகின்றீர்கள், ஏன் அலட்டுவது பிடிப்பதில்லையா? 

 

மண்டையை சொறியனும் போல இருக்கு :rolleyes:

 

 ஏன் இப்படி குழப்புகின்றீர்கள்.

 

தொடருங்கள் வாசிப்போம் அல்லவா...

 

 

நான் அலட்டல். அவள் அறுவை. இரண்டுக்கும் வித்தியாசம்தானே வந்தி.


 

 


 

  • கருத்துக்கள உறவுகள்

என்ன மனிசியப்பா இந்த றதி? :lol:  :lol:

 

 

பெண்களோடு பெண்கள் அலட்டினால் அது தேவையில்லாமல் பெரிய பிரச்சனையில் தான் போய் விடும்...பெண்கள் ஒரு சின்ன விசயத்தையும் தேவையில்லாமல் தூக்கிப் பிடித்துப் பிரச்சனை பண்ணுவார்கள்...இதே நேரத்தில் ஆண்கள் தங்களுக்குள் பொதுவான விடயத்தை கதைப்பார்கள் .பிரச்சனையே வராது என்று நினைக்கிறேன் :)

பாடசாலை அனுபவமும் நட்பின் அனுபவமும் திரும்ப திரும்ப எத்தனை முறை சொன்னாலும் சுவை குறையாத அனுபவங்கள். அதை எல்லாம் ஒரு காலத்தில் நாங்கள் எழுதுவோம் என்று கூட நினைத்து பாத்திருக்க மாட்டோம். உங்கள் எழுத்தில் எங்களையும் இரைமீட்க செய்த உங்களுக்கு நன்றிகள் சுமோ அக்கா.

 

அலட்டலிலும் சுவையான, அறிவுபூர்வமான, ஆட்களை ஆட்கள் வாரிவிடுகின்ற நகைச்சுவையான அலட்டல்கள் எங்களின் பொழுதுகளையும் அழுத்தங்களையும் மறக்க செய்கின்றன. சில பேருடன் சும்மா என்றாலும் அலட்டோணும் போல இருக்கும். :lol:

 

 

வீட்டில மனைவி,சகோதரி கதைத்தால் தேவையில்லாத அலட்டல்,அலம்பலாக தெரியும்...இதே அலுவல பெண்கள் என்ன மொக்கையாக கதைத்தாலும் ஈ என்று இளித்து கொண்டு கேட்கத் தோன்றும் :lol:  :D  :lol:
  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்....

இது எப்ப இருந்து நம்ம style :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவளுக்குக் குழந்தை பிறந்தபின் எங்கள் தொலைபேசி உரையாடல்கள் கொஞ்சம்குறைந்தன. ஆனால் கதைக்கும் நேரங்களில் தமக்குக் கடன் என்று ஒரே கடன் புராணம்தான். யாழினி வெளிநாடு வரும்போது அவளைக் கூப்பிட்ட கடனில் இன்னும் கொஞ்சம் அடைக்கவேண்டி இருப்பதாகவும் அதனால் தானும் இனி வேலை செய்யப் போவதாகவும் கூறினாள். குழந்தைக்கு இப்பதானே ஆறு மாதம். ஒரு ஒருவருடம் முடிய
போவன் என்று அவள் நன்மை கருதி நான் கூறினேன். நீ மட்டும் வேலைக்குப் போகிறாய் என்னை மட்டும் ஏன் நிக்கச் சொல்கிறாய் என்று அவள் கேட்டதும் எனக்கு அதிர்ச்சியில் என்ன செய்வது என்று தெரியவில்லை.

நான் இருந்த சூழல் வேறு. எனது பெற்றோர் சகோதரர்கள் எல்லோரும் ஒன்றாக இருந்தோம். நான் வேலைக்குச் சென்றாலும் எனது பிள்ளையைப் பார்த்துக் கொள்ளபலர் இருந்தனர். அவளுக்கு அப்படி அல்ல அவளும் கணவனும் தான். எனவே அவளுக்கு நான் அதை எடுத்துக் கூறினேன். ஆனாலும் அவள் அதைக் கேட்கவில்லை.

நானும் எனது கணவரும் முழு நேர வேலை செய்த படியால் வருடத்தில் இரு மாதங்கள் விடுமுறை 
எடுக்கும் வாய்ப்பு எமக்கு இருந்தது. அதனால் நாம் ஒவ்வொரு வருடமும் இருமாத விடுமுறையில் எங்காவது போவதற்குத் திட்டமிட்டுவிடுவோம். அந்த வருடம் நாம் இந்தியா செல்வதற்குத் திட்டமிட்டிருந்தோம். ஒரு வாரத்தின் முன்பே யாழினிக்கு தொலைபேசியில் எமது இந்தியப் பயணம் பற்றி கூறியிருந்தேன். எனக்கிருக்கும் கடனுக்கு நான் இப்போது எங்குமே போகமுடியகதடி என்று அலுத்துக் கொண்டாள். இந்தவருடம் போகாவிட்டால் அடுத்ததடவை போனால் போகிறது என்று அவளுக்கு ஆறுதல் கூறினேன்.

எங்கு போனாலும் என்ன வாங்கினாலும்அவளுக்குச் சொல்லாவிட்டால் எனக்கு நின்மதியிருக்காது. அவளும் அப்படித்தான் எல்லாம் சொல்லிப் புலம்புவாள். அவளுக்கு யார் இருக்கிறார்கள் என்னிடம் தானே கூறலாம் என நானும் இறுமாந்திருந்தேன். இந்தியா போய் வந்தபின்னரும் எங்கே போனோம். என்ன பார்த்தோம் என்றெல்லாம் ஒன்றும் விடாமல் அவளுக்குக் கூறிய பின் தான் என்னால் நின்மதியாக உணர முடிந்தது.

அடுத்த ஆண்டு எங்கே போவது என்று திட்டமிட்டபோது கனடாவே எமது தெரிவாக இருந்தது.
பிள்ளைகள் பள்ளியில் படித்ததனால் பாடசாலை விடுமுறை விடுவதற்கு இரு வாரங்களின் முன்னரே பள்ளியில் சொல்லிவிட்டுச் செல்வதாகத் திட்டம். முற்பதிவு செய்தால் பயணச் சீட்டு மலிவாகப் பெற்றுக் கொள்ள முடியுமென்பதால் முற்பதிவு செய்துவிட்டு யாழினிக்கு தொலைபேசி எடுத்தால் அவள் வீட்டில்
இல்லை. சரி எங்கோ போய்விட்டார்களாக்கும் என்று அடுத்தநாள் முயன்றால் அன்றும் ஒருவரும் இல்லை. தொலைபேசிதான் ஏதும் பிரச்சனையோ என்று நான் எண்ணிக்கொண்டு கணவரின் காதைக் கடித்தேன். உன் நண்பி இப்ப கணவன் பிள்ளையுடன் தான் இருக்கிறாள் அதனால் நீ கவலைப்படத் தேவை இல்லை என்று என் வாயை அடைத்தார் கணவர். என்றாலும் எனக்குச் சொல்லாமல் ஒரு இடமும் போக மாட்டாளே.
சிலநேரம் ஏதும் வருத்தம் வந்துவிட்டதோ. இப்படிப் பலவும் எண்ணிக் குழம்புவதும் வேலையால் வந்து அவளுக்கு போன் பண்ணுவதுமாக ஒரு வாரம் ஓடிப் போனது.

அன்று சனிக்கிழமை இன்று எப்படியாவது அவளைப் பிடித்துவிட வேண்டும் என்று காலை தொடக்கம் மாலை வரை ஒரு ஆறு தடவை அவளுக்கு தொலைபேசியில் எண்களை அழுத்தியதுதான் மிச்சம். ஆள் அகப்படவே இல்லை. இனி நானாக தொலைபேசிஎடுப்பதில்லை.என்ன நடக்கிறது என்றுதான் பார்ப்போமே என எண்ணி மனத்தைக் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டு என்பாட்டில் இருந்தேன்.

இரண்டு வாரங்களின் பின் மாலை தொலைபேசி வர போய் எடுத்தால் யாழினி. என்னடி எங்கேயடி தொலைந்தாய் மூன்று கிழமையாக. போன் அடித்து அடித்து என் கைகள் ஓய்ந்து விட்டது என்ற ஆதங்கத்தோடு  கூறினேன். ஓமடி போனில ஒரே உன் இலக்கம் தான்என்றுவிட்டு நான் உனக்குச் சொல்ல மறந்து  போனன். ஸ்ரீலங்கா போட்டு நேற்றுத்தான் வந்தனாங்கள் என்றால். எனக்கு யாரோ ஓங்கித் தலையில் எதனாலோ அடித்தது போல் இருந்தது. எனக்குள் ஒருவித ஏமாற்றம் கோபம் இன்னும் என்னென்னவோ உணர்வுகள்  எல்லாம் நெஞ்சில் தோன்றி எதோ செய்தது. எனக்கு ஏன் சொல்லவில்லை என வாய்வரை வந்த வார்த்தையை  அடக்கியபடி ஊர் எப்படி இருந்தது. எப்படித் துணிந்து போனாய் என்றேன். தனது மாமா ஒருவர் கஸ்டம்ஸ் இல் வேலை பார்ப்பதாகவும், விமானத்திலிருந்து இறங்கிய உடனேயே  மாமா தங்களை வந்து
கூட்டிக் கொண்டு போனதாகவும் கூறினாள். அதன் பின் அவள் ஏதேதோ கூறினாள். எனக்கு அவை ஒன்றும் மனதில் பதியவே இல்லை.

அதன் பின் வந்த நாட்கள் அவளுக்கும் எனக்குமான உறவில் சிறு இடைவெளி ஏற்பட்டுப் போனது உண்மை. நான் ஒருமுறை தொலைபேசி எடுத்தால் அவள் மறுமுறை எடுப்பது தான் வழமையாக இருந்தது.
இப்போதெல்லாம் நான் இருமுறை எடுத்தபின்னர் அவள் ஒருமுறை எடுக்கலானாள். எனக்கு அது மனதை உறுத்தினாலும் சரி நண்பிதானே என்று எண்ணி பொறுமை காத்தேன். எனக்கு மனதில் வைத்திருக்கவும் முடியாமல் கணவரிடம் புலம்புவேன். நீயும் உன் கண்டறியாத பிரெண்டும். எனக்கு ஒண்டும் சொல்லவேண்டாம் என்றுவிட்டார் கணவர்.

நாம் 2003 இல் ஈழத்துக்குச் செல்வதாகத் திட்டம் போட்டோம். எனக்கு முதலில் யாழினிக்குச் சொல்வதா வேண்டாமா என்ற தடுமாற்றம் ஏற்பட்டது. பிறகும் அவள் விட்ட தவறையே நானும் ஏன் விடுவான் என்று எண்ணி அவளை அழைத்து நாம் போகும் விடயத்தைக் கூறினேன். நாங்களும் போக இருக்கிறோம் என்றாள். நீ கடந்த வருடம் சென்றாயே மீண்டும் போகிறாயா என்றேன். ஏன் போகக் கூடாதாஎன்றாள். இல்லை உனக்கு இன்னும் கடன் இருப்பதாகக் கூறினாயே என்றேன். கடன் இருந்தால் போகக்கூடாதா என்றாள். எனக்குக் கோபம் வந்துவிட்டது. கடன் இருக்கென்றால் போன இடத்துக்கு மீண்டும் ஏன் போவான. முதல் கடனை அடைக்கும் வழியைப் பார் அதன்பிறகு எங்குவேண்டுமானாலும் திரியலாம் என்றேன். நான் அப்படிக் கூறியது பிடிக்கவில்லை. வேறொரு போன் வருகிறது  என்று கூறி என் தொலைபேசியைக் நிப்பாட்டிவிட்டாள்.

தொடரும்..........

  • கருத்துக்கள உறவுகள்

நண்பிகளின் கதை நன்றாக  போகிறது ...வார்த்தையால் அடிப்பதும் அணைப்பதும்

 

உள்ளது  தான் நட்பு ...மேலும்  தொடருங்கள் ..........

  • கருத்துக்கள உறவுகள்

உயரமான குழாயில் அன்டெனா (உணர்கொம்புநிரை)

 

நீங்கள் தேடினது  இதையா

 

 

100852.gif

Edited by sathiri

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.