Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உங்கள் சாப்பாட்டுக் கோப்பையை யார் கழுவினம்?: நிழலி

Featured Replies

எப்பையோ இதைப் பற்றி கதைக்க வேண்டும் என்று நினைத்து இருந்தன். இப்பவாவது கதைப்பம் என்று நினைக்கின்றன். இது ஒரு மிக மிக சாதாரண விடயம். ஆனால் இந்த விடயம் கூட விவாதிக்க வேண்டி இருக்கும் ஒரு சமூகத்தில் தான் நாம் இருக்கின்றோம்.

 

என் அப்பா எனக்கு சொல்லித் தந்த முக்கியமான சில பழக்கவழக்கங்களில் ஒன்று 'நீ சாப்பிட்ட கோப்பையை நீயே கழுவு" என்பதும் ஒன்று. என் அப்பா ஒருக்காலும் தான் சாப்பிட்ட கோப்பையை அம்மாவை கழுவ விடமாட்டார். "ஏன் நான் இவ்வளவு நேரமும் சாப்பிட்ட கோப்பையை என்னால் கழுவ ஏலாதா" என்று கேட்டு கழுவுவார். "ஒருவரின் எச்சிலை இன்னொருவர் கழுவுவது பாவம்" என்பார். ஒரு நாள் நான் சின்ன வயதில் என் கோப்பையை கழுவாமல் அம்மாவிடம் கொடுத்த போது அப்பா விட்ட பொய்ட்டார் (அடி என்பதை இப்படியும் சொல்லுவோம்) இன்னும் காதுக்குள் ரிங்ங் என்று ஒலிக்குது.

 

அன்றில் இருந்து இந்த நிமிடம் வரை ஒருக்காலும் என் கோப்பையை நான் கழுவாமல் விட்டதில்லை. விதி விலக்குகளாக உணவு விடுதிகளில் கோப்பையை அப்படியே விட்டு விட்டு போக வேண்டி வருவதும், நான் சுகவீனமாக இருக்கும் தருணங்களும் இருக்கு. நண்பர்களின் வீடுகளுக்கு விருந்துக்கு போனாலும் அடம் பிடித்து கழுவுவது உண்டு. அவர்களின் வீட்டில் washer இருந்தாலும் மேலோட்டமகா கழுவி வைப்பேன்.

 

ஆனால்,நான் என் நண்பர்களின் மற்றும் மச்சான் மச்சாள் வீடுகளில் பார்ப்பது முற்றிலும் வேறு. என் மச்சான் ஒருநாளும் தான்  சாப்பிட்ட கோப்பயை கழுவ மாட்டார். மூன்று முறை வாயில் எச்சில் வழிய வழிய சாப்பிட்டு விட்டு அப்படியே மனைவியுடன் கொடுப்பார். அவரும் மனைவி என்றால் கழுவத்தான் வேண்டும் என்ற விதிக்கப்படாத விதியின் படி கழுவி வைப்பார். அரை மணித்தியாலம் சாப்பிட்டவருக்கு 3 நிமிடங்கள் கழுவ நேரம் ஒதுக்க முடியாது போய்விடுமா. பொதுவாக என் வீட்டுக்கு விருந்துக்கு வருபவர்களை தங்கள் கோப்பைகளை கழுவ சந்தர்ப்பம் கொடுப்பேன். சிலர் அப்படியே வைத்து விட்டு போகும் போது ஒன்றும் சொல்லாமல் விட்டு விடுவேன் (அடுத்த முறை என் வீட்டுக்கு விருந்துக்கு வரும் யாழ் கள உறவுகள் கவனிக்க)

 

இன்று என் பிள்ளைகள் தம் சாப்பாட்டுக் கோப்பையை தாமே கழுவினம். சின்னவள் சில நேரங்களில் கோப்பையை உடைத்து தன்னை காயப்படுத்திக் கொள்வாள் என்ற பயத்தில் அவளது கோப்பையை நாங்கள் கழுவிக் கொடுப்பம். ஆனால் மகன் கண்டிப்பாக தான் சாப்பிட்ட கோப்பையை தான் தான் கழுவ வேண்டும்.

 

எனக்கு விளங்காத ஒரு விடயம்; ஏன் ஒரு ஆணால் தான் சாப்பிட்ட கோப்பையை கழுவ முடியாது? கழுவக் கூடாதா? எங்கு இருந்து இந்த பழக்கத்தின் முளை ஒரு பெரு மரமாக எம் சமூகத்தில் வளர்ந்து இருக்கு?

 

 

இது ஒரு நல்ல விடயம் நிழலி, எமது சாப்பாட்டு கோப்பையை நாங்களே கழுவது நல்லது. அத்துடன் பிள்ளைகளையும் சிறு வயதில் இருந்தே பழக்கிவிடவேண்டும்.

 

ஏன் ஒரு ஆணால் தான் சாப்பிட்ட கோப்பையை கழுவ முடியாது? கழுவக் கூடாதா    இந்த கேள்விக்கு பதில் என்றால் எமது சமூகத்தில் உள்ள பழக்கம்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
யாருக்கும் எந்த விதத்திலும் தொந்தரவு, இடையூறாக இருக்க கூடாது என்பதில் மிகவும் கவனமாக உள்ளேன். இது எனது சாவு உள்ளடங்கலாக என்பதையும் கூற வேண்டும்.நெருங்கிய வெள்ளையின நண்பர் அடிக்கடி தனது தந்தை சுகவீனத்தால் மிகவும் கஸ்டப்படுவதாகவும் தன்னால் பார்த்துக்கொண்டு இருக்க முடியவில்லை.மிகுந்த மனக்கஸ்டப்படுவதாகவும் கூறி தான் அந்த நிலைக்கு போகாமல் அப்படி ஒரு நிலை வரும் போது தனது உயிரை போக்கிக்கொள்ள போவதாகவும் கூறினார். நானும் தான் என கூறினேன்.தனது உயிரை மாய்க்க சட்டம் இன்னும் இங்கு அமலாக்கப்படவில்லை என்பது வேறு விடயம்.
 
மன்னிக்கவும் நிழலி.ஏதோ ஒன்றில் தொடங்கி சாவில் முடித்ததை.அந்தளவுக்கு யாருக்கும் கடமைப்படுவதில் எனக்கு உடன்பாடில்லை.

நான் எனது சாப்பாட்டுக் கோப்பையை நானே கழுவுவேன் . சிலவேளைகளில் மனைவியினதும் கழுவுவேன் . என்னைப்பொறுத்தவரையில் , சிறுவயதில் பெற்றோர்களால் பிள்ளைகள் நல்வழிப்படுத்தலால் வருகின்ற அடிப்படை மனிதப்பழக்கங்களே இவை . அதேவேளையில் இயல்பான ஆணாதிக்க சிந்தனைகள் பெருமளவு பங்குவகிக்கின்றன . நான் இன்னுமொரு விடையத்தையும் சொல்ல வேண்டும் . எமது ஆணகள் பொது இடங்களில் தமது மனைவிகளை பகிடி என்ற போர்வையில் மட்டந்தட்டிப்பேசுவது . இதுவும் அருவருப்பான செயல் . ஆனால் , இங்கு பிறக்கின்ற குழந்தைகளை அவதானித்த அளவில் , அவர்கள் படிக்கின்ற மற்றேர்னிற்ரி ஸ்கூலில் உள்ள கன்ரீனில் அடிப்படை உணவு பழக்கவழக்கங்களை பழக்கி விடுகின்றார்கள் . இதை எனது தொழில் சார்ரீதியாக பார்த்ததுண்டு . பல குழந்தைகள் சாப்பாட்டு மேசையை யுத்தகளமாக்காது அளவாக எடுத்து சாப்பிட்டு இறுதியில் எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்திவிட்டுச் செல்வார்கள் . இப்படியான குழந்தைகள் அருவருக்கத்தக்க செயல்களை வருங்காலத்தில் செய்யமாட்டார்கள் .

நிழலி அண்ணா, இந்த விடயத்தில் நீங்கள் என்னை போல் இருக்கிறீர்கள். நானும் நான் சாப்பிட்ட கோப்பையை நான் தான் கழுவுவேன். இந்த பழக்கத்தை எனக்கு, என் சகோதரர்களுக்கு பழக்கியது அம்மம்மா. (அம்மா வேலைக்கு செல்வதால் சாப்பிடும் போது அம்மம்மா தான் எம்முடன் நிற்பார்....)

இங்கும் என் நண்பர்கள் வீட்டிற்கு சென்றால் அவர்கள் கோப்பையை தம்மிடம் தரும்படி கூறி வாங்க வருவார்கள்/ வைக்கும்படி சொல்வார்கள்... நான் அடம்பிடித்து நான் தான் கழுவி வைப்பேன். (அவர்கள் வீட்டை என் வீடு போல் உபயோகிக்க அனுமதியுண்டு. அதனால் தயங்காமல் kitchen க்கு செல்வேன்.) இந்த பிள்ளை சொல்லுக்கேட்காது என்று சொல்லி சிரிப்பார்கள். :lol:

அதே போல் என் மாமா இந்த நாட்டுக்கு வந்தால் என் நண்பர்கள் வீட்டுக்கு அழைத்து செல்வதுண்டு. மாமா அங்கு சாப்பிட்டு விட்டு கோப்பையை கொடுக்க / sink இனுள் வைத்து விட்டு வர முயற்சித்தால் நான் விடுவதில்லை. கழுவி வைத்த பின்னர் தான் வெளியில் வர சொல்வேன். என் நண்பர்கள் அல்லது அவர்கள் சித்தி/ பெரியம்மா என்னை பேசுவார்கள். :icon_idea:

இங்கு பேசுபவர்கள் எல்லோரும் பெண்கள் என்பதால் இது பெண்கள் தாமாக ஆண்களுக்கு பழக்கிய பழக்கமா அல்லது ஆண்கள் பெண்களை இப்படி செய் என்று சொல்லி வந்த பழக்கமா தெரியவில்லை. ஆனால் நவீனன் அண்ணா சொன்னது போல் இது ஒரு சமூக பிரச்சினை தான். இப்படி இப்படி செய்ய வேண்டும் என்று எம் சமூகத்தில் இப்படியான செயற்பாடுகளை உருவாக்கி வைத்துள்ளார்கள். :rolleyes:

 

நாமாவது பரவாயில்லை. ஆனால் நான் கொழும்பில் நின்ற காலப்பகுதியில் முஸ்லிம் பெண்ணொருவர் நண்பராக இருந்தார். அவர் கூறியது தாங்கள் சாப்பிட்டால் தாம் கோப்பை கழுவ கூடாதாம். தமது அம்மா தான் அப்பாவின் கோப்பையும் தங்கள் கோப்பையையும் சேர்த்து கழுவ வேண்டும் என்று சொன்னார். முஸ்லிம்களுடன் எனக்கு பெரிதாக பழக்கமில்லை என்பதால் இதுபற்றி சரியாக தெரியவில்லை.

 

 

பொதுவாக என் வீட்டுக்கு விருந்துக்கு வருபவர்களை தங்கள் கோப்பைகளை கழுவ சந்தர்ப்பம் கொடுப்பேன். சிலர் அப்படியே வைத்து விட்டு போகும் போது ஒன்றும் சொல்லாமல் விட்டு விடுவேன் (அடுத்த முறை என் வீட்டுக்கு விருந்துக்கு வரும் யாழ் கள உறவுகள் கவனிக்க)

:lol: :lol:


 

யாருக்கும் எந்த விதத்திலும் தொந்தரவு, இடையூறாக இருக்க கூடாது என்பதில் மிகவும் கவனமாக உள்ளேன். இது எனது சாவு உள்ளடங்கலாக என்பதையும் கூற வேண்டும்.நெருங்கிய வெள்ளையின நண்பர் அடிக்கடி தனது தந்தை சுகவீனத்தால் மிகவும் கஸ்டப்படுவதாகவும் தன்னால் பார்த்துக்கொண்டு இருக்க முடியவில்லை.மிகுந்த மனக்கஸ்டப்படுவதாகவும் கூறி தான் அந்த நிலைக்கு போகாமல் அப்படி ஒரு நிலை வரும் போது தனது உயிரை போக்கிக்கொள்ள போவதாகவும் கூறினார். நானும் தான் என கூறினேன்.தனது உயிரை மாய்க்க சட்டம் இன்னும் இங்கு அமலாக்கப்படவில்லை என்பது வேறு விடயம்.
 
மன்னிக்கவும் நிழலி.ஏதோ ஒன்றில் தொடங்கி சாவில் முடித்ததை.அந்தளவுக்கு யாருக்கும் கடமைப்படுவதில் எனக்கு உடன்பாடில்லை.

 

நானும் இப்படி சிலவேளை யோசித்திருக்கிறேன். என்னால் சுயமாக இயங்க முடியாத நிலை வந்தால் நான் வேறு யாருக்கும் கரைச்சல் கொடுக்க கூடாது என்று. சில நாடுகளில் கருணைக்கொலை செய்ய அனுமதி உண்டு என்ற நினைப்பில். :unsure: எம்மால் முடியாமல் போனால் கருணைக்கொலை செய்யும்படி எழுதி கொடுப்பார்களாம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். :unsure: (அது குறித்த நபர்களால் ஆக இயலாமல் போனால் தான் கருணைக்கொலை செய்வார்கள்.) யாரும் என்னை கொலை செய்தால் பரவாயில்லை. ஆனால் நானாக தற்கொலை செய்ய எனக்கு பயம். :D 

ஆனால் நீங்கள் இப்படி யோசிக்காதீர்கள். :( பக்கத்தில் இருப்பவர்கள் (உதாரணத்துக்கு உங்கள் மனைவி) அன்புடன் பார்க்கக்கூடியவர் என்றால் இவ்வாறு முடிவெடுக்க தோன்றாது. அவர்களுக்கு உங்களை பிடித்தால் அது சுமையாகவும் தெரியாது. :)  அல்லது இங்கு பணம் கொடுத்தால் பராமரிக்க கூடியவர்களும் உள்ளார்கள். :rolleyes:

 

ஹிந்தியில் இது தொடர்பாக guzaarish என்ற படம் கூட வந்தது. ஹிருத்திக் ரோஷன், ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார்கள். முன்பு அந்த படம் வந்தவுடன் பார்த்திருந்தேன். படத்தில் ஹிருத்திக்கின் நிலை மிகவும் கடினமானதொன்று... கருணைக்கொலை செய்ய அனுமதிக்கும் படி கேட்டு அனுமதி கிடைக்கவில்லை. ஆனால் முடிவில் ஐஸ்வர்யா ராய் ஹிருத்திக் ஐ காதலித்து தானே அவரை பார்க்க முடிவெடுத்திருந்தார்.

 

பி.கு: இதற்கும் திரிக்கும் சம்பந்தமில்லை... :(

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

சிறிய வயதில் இருந்து எமது அலுவல்களை நாமே பார்க்கவேண்டும் என்று வீட்டில் பழக்கிவிட்டதால், சாப்பாட்டுக் கோப்பைகளை எப்போதும் நானே கழுவுவதுண்டு. நண்பர்கள் வந்தாலும் அவர்களின் கோப்பைகளை வாங்குவதில்லை என்பதால் அவர்களாகவே போய்க் கழுவுவார்கள்! எனினும் சில dish washer உள்ள வீடுகளில் கழுவவேண்டாம் என்று சொன்னாலும் sink இற்குள் கோப்பையை அலம்பி வைக்காமல் வருவதில்லை.

 

தங்கள் சாப்பாட்டுக் கோப்பை கழுவ இன்னுமொருவரில் தங்கியுள்ளவர்கள் தங்கள் பின்புறத்தை யாரைக்கொண்டு கழுவுகின்றார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

எமது வீட்டில் கட்டாயம் என்பதில்லை.மனைவி பிள்ளைகள் சாப்பிட்டு மீதமிருந்தால் எல்லாவற்றையும் ஒன்றாக்கி சாப்பிடுவேன்.(இதுக்காகவோ தெரியவில்லை கொஞ்சம் மீதம் வைப்பார்கள்) மனவியும் அப்படி தான். கோப்பை கழுவும் போதும் நான் கழுவிக் கொண்டிருந்தால் உள்ள முழு தொட்டியையும் சுத்தம் பண்ணிவிடுவேன்.பிள்ளைகள் கொஞ்சம் களவு தான் இருந்தாலும் சொல்லி செய்விக்கிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் சாப்பாட்டுக் கோப்பையை யார் கழுவினம்?: நிழலி

 

 

இதென்ன கேள்வி நிழலி அண்ணா..? கோப்பை மட்டுமா கழுவுறம்..போடுற உடுப்பு தோய்ப்பதில் இருந்து சமைப்பதில் இருந்து மாக்கெற் போவதில் இருந்து மரக்கறி வெட்டுவதில் இருந்து ..எல்லாத்தையும் நங்கள்தானை செய்யணும்..அதுவும் வெளிநாட்டுக்கு எண்டு தனிய வெளிக்கிட்டிட்டு... :D கேள்வி கேட்டு கடுப்பேத்துறார் மை லாட்... :lol:

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

இதென்ன கேள்வி நிழலி அண்ணா..? கோப்பை மட்டுமா கழுவுறம்..போடுற உடுப்பு தோய்ப்பதில் இருந்து சமைப்பதில் இருந்து மாக்கெற் போவதில் இருந்து மரக்கறி வெட்டுவதில் இருந்து ..எல்லாத்தையும் நங்கள்தானை செய்யணும்..அதுவும் வெளிநாட்டுக்கு எண்டு தனிய வெளிக்கிட்டிட்டு... :D கேள்வி கேட்டு கடுப்பேத்துறார் மை லாட்... :lol:

 

நான் பதினொரு வயதிலேயே அயர்ன் பண்ணிய உடுப்புத்தான் போடுவேன் என்று அடம்பிடித்தபோது மாப்பிளை மாதிரிப் போகவேண்டுமென்றால் நீயே அயர்ன் பண்ணி உடுப்பைப் போடு என்று அம்மா சொல்லிவிட்டார். அப்போதிருந்தே துவைப்பதும் அயர்ன் பண்ணுவதும் ஒன்றிரண்டு உடுப்புக்களை எரித்துப் பழகிவிட்டேன். இப்போது கூடியவரை non-iron உடுப்புக்களை வாங்குவதால் அதிகம் பிரச்சினைகள் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

நான் சாப்பிட்ட கோப்பை, குடிச்ச தேத்தண்ணிக் கப் எல்லாவற்றையும் நானே கழுவிவிடுவேன். நண்பர் வீடுகளுக்குப் போனாலும் முடிந்தளவு கழுவிவிடுவேன். சிலவேளை மனைவி வேலைக்குப் போகின்ற நேரத்தில் சாப்பிட்டுபோட்டு கோப்பையக் கழுவிவைக்கச் சொல்லுவாள். அதையும் செய்யுறதுதான்.

Edited by காவாலி

  • கருத்துக்கள உறவுகள்

நான் பதினொரு வயதிலேயே அயர்ன் பண்ணிய உடுப்புத்தான் போடுவேன் என்று அடம்பிடித்தபோது மாப்பிளை மாதிரிப் போகவேண்டுமென்றால் நீயே அயர்ன் பண்ணி உடுப்பைப் போடு என்று அம்மா சொல்லிவிட்டார். அப்போதிருந்தே துவைப்பதும் அயர்ன் பண்ணுவதும் ஒன்றிரண்டு உடுப்புக்களை எரித்துப் பழகிவிட்டேன். இப்போது கூடியவரை non-iron உடுப்புக்களை வாங்குவதால் அதிகம் பிரச்சினைகள் இல்லை. 

 

எனக்கு கிட்டத்தட்ட பதினொரு வயது வரும்வரையும் அம்மாதான் உடுப்பு தோய்ப்பது..நான் தோய்க்க விரும்பினாலும் அம்மா விடா..வீட்டில் ஒன்று என்பதால் கொஞ்சம் செல்லம் அதிகம்..ஆனால் பதினொரு வயது அப்படி இருக்கும் என்று நினைக்கிறன் அப்பொழுது வெக்கத்தில் ஜட்டியை நானே தோய்க்க பழகி பின்னர் மெதுமெதுவாக எல்லா உடுப்பும் தோய்க்க தொடங்கிவிட்டேன் அம்மாவிடம் கொடுக்காமல்..என்றாலும் நான் முதன்முதல் தோய்த்து பழகியதென்றால் ஜட்டிதான் :D ..ஊரில் வோசிங்மெசின் எல்லாம் இல்லை..தன்கையே தனக்குதவி என்று தோய்ப்போம்... :D ஆனால் அயனிங்மட்டும் எனக்கு வரவே வராது..எப்படி அயன் பன்னினாலும் பின்பக்கம் அயன்பண்ணீட்டு முன்பக்கம் அயன் பண்ண பின்ப்க்கம் பழைய நிலையில் இருக்கும் சுருங்கி :D ..பலமுறை முயன்றும் தோற்றதால் வெளிநாடு வரும் வரை அயனிங்கிற்குமட்டும் அம்மாவின் உதவியை நாடுவேன்..அதுவும்கூட இங்கு வந்ததும் பழகீட்டு வடிவாய்..

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் வீட்டில் அவரவரே செய்து கொள்வதுதான்.. மகளினுடையதை நாம்தான் கழுவ வேண்டும். எட்டாது.

 

வெள்ளை நண்பர்கள் வீட்டுக்குப் போனால் கழுவுவதில்லை. அவர்கள் கழுவும் இயந்திரத்தை உபயோகிப்பதால் அதனுள் போட்டுவிடுவார்கள்..!

 

கழுவும் இயந்திரத்தை முறையாகப் பயன்படுத்தும் பழக்கம் இல்லை. இனிமேல் ஆரம்பிக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

கலியாணம் கட்ட முந்தித் தங்கச்சிமார் கழுவுவினம்!

 

கட்டின பிறகு நான் தான் எனது கோப்பையைக் கழுவிக் கொள்வேன்! விடுதியில் இருந்த காலத்தில் பழகிப் போச்சு!

 

எங்காவது போற இடங்களில், நானே கோப்பையை எடுத்துக்கொண்டு போவேன்! போகும் போது, கோப்பையை வைச்சிட்டுப் போங்கோ எண்டு சொல்லுவினம்! நான் உங்கட கோப்பையைக் கொண்டுபோகேல்ல எண்டு சொல்ல, அவர்கள் விட்டு விடுவார்கள். :D

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப்பிரச்சனை பல இடங்களில் இருக்கிறது யாழ் உறவுகள் ரொம்ப நாகரீகமாக இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. என்வீட்டிலும் கோப்பை கழுவுதல் அவரவரே செய்வோம். சில ஒரு காலத்தில் என்னுடைய உறவினர்கள் மற்றவர்களின் கோப்பைகளை வாங்கிக் கழுவும்படி அழுத்தம் கொடுக்கும்போது உடன்பாடின்றி செய்த பழக்கம் இருக்கிறது ஆனால் இப்போதும் அப்படி செய்வதில்லை. விருந்தினர்கள் வந்து உணவருந்தினாலும் அவர்கள் உணவுண்ட கோப்பைகளை அவர்கள் கழுவுவதைத் தடுத்துப் பறித்து சுத்தம் செய்வதில்லை.... எப்பவாவது வீட்டுக்காரன் அரைகுறையாக விட்டுவைப்பதை கொட்டிச் சுத்தம் செய்திருக்கிறேன். அதற்காக அடுத்த நாட்காலை என் வீட்டு ஆண்மகன் தலை குனிந்துநின்று திட்டு வாங்குவார். அந்தப்பயம் கருதியே அப்படியான நிலைக்கு தன்னை உட்படுத்துவதில்லை :icon_mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எந்த மரணவெறியெண்டாலும் நான் சாப்பிட்ட கோப்பையை நான் தான் கழுவுவன்....உந்த விசயத்திலை நான் வலு நிதானம்.......... :)  :)  :)

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு வர முன்பு நான் தான் கழுவுவது. இங்கு dish washer தான் என்பதால் அலம்பி வைப்பேன். மேல்மாடியில் கணனியின் முன்பு இருந்து சாப்பிட்டால் கீழே வரப் பஞ்சியில் காயக் காய வச்சுக் கொண்டிருப்பேன். ஆனால் நான் தான் கீழே கொண்டுவந்து இயந்திரத்தினுள் போடுவது. இருந்திட்டு மனிசியின் மிச்ச மீதிகளை குழைச்சு அடிக்கும் போது அவளின்டயையும் கழுவுவது உண்டு. ஊரிலும் பத்து வயதில் இருந்து எமது உடுப்பை நாம் தான் தோய்ப்போம். ஆனால் உடுப்பை மடித்து வைப்பது அம்மா தான். மெசின் மாதிரி நீட்டாக மடித்து மூண்டு பெடியளின் அலுமாரிகளினுள்ளும் வைத்து விடுவா.

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் தான் சாப்பிட்ட கோப்பையை... தானே கழுவும் போது தான்... சாப்பிட்ட திருப்தி ஏற்படும்.
 

  • கருத்துக்கள உறவுகள்

எனது சாப்பாட்டுக் கோப்பையை நானே தான் கழுவுவேன்

  • கருத்துக்கள உறவுகள்

இதென்ன கேள்வி நிழலி அண்ணா..? கோப்பை மட்டுமா கழுவுறம்..போடுற உடுப்பு தோய்ப்பதில் இருந்து சமைப்பதில் இருந்து மாக்கெற் போவதில் இருந்து மரக்கறி வெட்டுவதில் இருந்து ..எல்லாத்தையும் நங்கள்தானை செய்யணும்..அதுவும் வெளிநாட்டுக்கு எண்டு தனிய வெளிக்கிட்டிட்டு... :D கேள்வி கேட்டு கடுப்பேத்துறார் மை லாட்... :lol:

 

பழக்கத்தை விடாதீங்கப்பு!

 

இரண்டு மூண்டு பேருக்கேற்ற மாதிரிப் பழகி வைக்கிறது, பிற்காலத்திற்கு உதவும்! :D

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

நாங்க தாப்பா கழுவனும். இதுக்கும் வேறை ஆக்களையா எதிர்பார்க்க முடியும்..??!  :lol:  நானே எனது கோப்பைகளை உடனடியாக கழுவித் துடைத்து கவிழ்த்துவிட்டுத்தான் செல்வேன்..! சிங்குக்குள்ள போட்டு வைச்சிட்டு அப்புறமா கழுவிற வாடிக்கை கூட இல்லை.

 

அப்புறம்.. டிஸ்வோசர் எல்லாம் பாவிக்கிறதில்லை..! அந்தளவுக்கு பாத்திரங்கள் கழுவ வேண்டிய தேவையும் வரல்ல..! :)

 

ஆனால் இங்கு சில பெற்றோர் பிள்ளைகளுக்கு கை நொந்திடும் என்றோ என்னவோ.. அவர்களை சாப்பாட்டுக் கோப்பை கழுவ விடுவதில்லை. அது அவர்கள் வளர்ந்து.. விடுதி வாழ்க்கைக்கு வரும் போது.. மற்றவர்கள் அவருவருக்கத்தக்க பழக்க வழக்கத்தையே கொண்டு வரச் செய்கிறது என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டி உள்ளது..!

 

health-graphics-20_1050174a.jpg

 

மிக அருவருக்கத்தக்க கோப்பை கழுவாத பழக்கங்களோடு எம்மவர்களின் புகலிடத்தில் பிறந்த மற்றும் சில பல வெள்ளைகளையும் அவதானித்திருக்கிறேன்.

 

dirty%20dishes%20sinkful%20lots%20filthy

 

விடுதி வாழ்க்கையில் இப்படியான அருவருப்புக்களை சந்திக்க நேரிட்டது. :(

Edited by nedukkalapoovan

நான்தான் கழுவுவேன். சின்ன வயதில இருந்து எல்லா வேலையும் செய்யப் பழகிட்டன். எட்டு வயதிலேயே பெரிய உரலில் ஒரு மரைக்கால்  அரிசி மா இடிப்பேன். இங்க கோப்பை  கழுவிற தொழிலும் செய்திருக்கிறேன்.  மற்ற ஆட்களிடம் எனது கோப்பையைக் கழுவக் கொடுப்பதில்லை.

 

இதென்ன கேள்வி நிழலி அண்ணா..? கோப்பை மட்டுமா கழுவுறம்..போடுற உடுப்பு தோய்ப்பதில் இருந்து சமைப்பதில் இருந்து மாக்கெற் போவதில் இருந்து மரக்கறி வெட்டுவதில் இருந்து ..எல்லாத்தையும் நங்கள்தானை செய்யணும்..அதுவும் வெளிநாட்டுக்கு எண்டு தனிய வெளிக்கிட்டிட்டு... :D கேள்வி கேட்டு கடுப்பேத்துறார் மை லாட்... :lol:

 

இது ஜாலியா குடும்பம் நடத்திற ஆட்களிட்ட கேட்கப்பட்ட கேள்வி. தனியாக இருந்து தவில் அடிக்கிற ஆட்கள் இந்தத் திரிக்குள்ள எட்டிப் பார்த்தால் கடுப்புத்தான் வரும். :D

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இது ஜாலியா குடும்பம் நடத்திற ஆட்களிட்ட கேட்கப்பட்ட கேள்வி. தனியாக இருந்து தவில் அடிக்கிற ஆட்கள் இந்தத் திரிக்குள்ள எட்டிப் பார்த்தால் கடுப்புத்தான் வரும். :D

 

தப்ஸ்.. தனியா இருக்கிற நாங்கள் எங்களுக்காக மட்டும் தான் தவில் அடிக்கிறம். சம்சாரிங்க.. எத்தினை பேருக்கு சேர்த்து அடிக்கிறாங்கன்னதையும் பார்க்கனும்..! :lol:

தப்ஸ்.. தனியா இருக்கிற நாங்கள் எங்களுக்காக மட்டும் தான் தவில் அடிக்கிறம். சம்சாரிங்க.. எத்தினை பேருக்கு சேர்த்து அடிக்கிறாங்கன்னதையும் பார்க்கனும்..! :lol:

 

ஆங்.......!   சொல்ல மறந்திட்டன்.......

 

எங்களுக்கு கோப்பை கழுவிற சந்தர்ப்பங்களே குறைவு. வழமையா காப்புக் கையால  ஊட்டி விடுவாங்க.   :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஆங்.......!   சொல்ல மறந்திட்டன்.......

 

எங்களுக்கு கோப்பை கழுவிற சந்தர்ப்பங்களே குறைவு. வழமையா காப்புக் கையால  ஊட்டி விடுவாங்க.   :lol:

 

பட்.. காப்பும் நீங்கள் தானே வாங்கிக் கொடுக்கனும். அதுக்கு எவ்வளவு கழுவல்.. கழுவி இருப்பீங்க..! அதோட ஒப்பீடேக்க...! :lol::D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.