Jump to content

ஈழப் படுகொலைக்கு உடந்தையாக இருந்தது இந்தியா!-முன்னாள் இந்திய வெளிவிவகார அமைச்சர்


Recommended Posts

ஈழத் தமிழர் படுகொலைக்கு இந்தியாவும் உடந்தையாகவே இருந்தது. புலிகளின் கடற்படையை இந்திய கடற்படையே ஒழித்தது என இந்தியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவருமான யஸ்வந் சின்கா தெரிவித்துள்ளார்.
 
லோக்சபாவில் இன்று நடைபெற்ற இலங்கை தொடர்பான சிறப்பு விவாத்தின் போது பேசிய அவர், இலங்கையில் நமது காலத்தில் நடந்த துயரம் கொடூரமானது. கனத்த இதயத்துடன் இந்த விவாதத்தில் பங்கேற்கிறேன். இலங்கையில் மிகப் பெரும் படுகொலை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. மனித உரிமை மீறல்கள் நடந்தேறி வருகின்றன இலங்கை ராணுவ பங்கர் ஒன்றில் 12வயது சிறுவன் பாலச்சந்திரன் பிஸ்கட் போன்ற ஒன்றை கொறித்துக் கொண்டிருக்கும் அந்தக் காட்சியையும் அவன் சிறிது நேரத்தில் சுட்டுப் படுகொலை செய்யப்படுவதையும் பார்க்கும் காட்சிகள் அனைவரையும் உறையவைக்கும்.
 
இலங்கையில் எப்படியான படுகொலைகள் நிகழ்ந்திருக்கின்றன என்பதை அந்தப் படம் ஒன்றே சொல்லும். இலங்கை அண்டை நாடு. அதனால் மற்ற நாடுகளைப் போல இலங்கை பிரச்சனையை கையாள முடியாது. ஆனால் இலங்கையை கையாள்வது எளிதானதுதான்., இலங்கை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு மாற வேண்டும். அதற்கு இந்த விவாதம் உதவ வேண்டும். 2009 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு முன்பே இலங்கையில் போர் முடிந்துவிட வேண்டும் என இந்தியா கருதியது. இந்த லோக்சபா தேர்தல் காலத்தை இலங்கை அதிபர் ராஜபக்சே தந்திரமாக பயன்படுத்திக் கொண்டார். இதை பயன்படுத்தி தமிழர்களுக்கு எதிரான போரை நடத்தி வெற்றி பெற்றார். இந்திய அரசியல் கட்சிகளும் கண்டுகொள்ளவில்லை.
 
ஈழப் போர் முடியும் வரை இந்தியாவும் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஈழத் தமிழர் படுகொலைக்கு இந்தியாவும் உடந்தையாகவே இருந்தது. புலிகளின் கடற்படையை இந்திய கடற்படையே ஒழித்தது. 2009-ம் ஆண்டு இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என பிரதமரிடம் பேசினேன். ஆனால் நட்பு நாடு என்பதால் தடை விதிக்க முடியாது என்று கூறிவிட்டார் பிரதமர். இலங்கையில் போர் முடிந்த பின்னரும் அமைதிக்கான பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
 
இலங்கையின் வடபகுதியில் இருந்து ராணுவம் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும். 13-வது அரசியல் சாசன திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும். திவிநெகும என்ற சட்டம் மூலம் மாகாண சபைகளின் அதிகராங்களைக் குறைத்திருக்கிறது இலங்கை அரசு. இலங்கையின் தலைமை நீதிபதியையே பதவி நீக்கம் செய்திருக்கிறது இலங்கை அரசு. இது தொடர்பாக விசாரிக்க சென்ற சர்வதேச விசாரணைக் குழுவை அனுமதிக்கவில்லை
 
இலங்கை அரசு. இலங்கை மீதான புகார்கள் தொடர்பாக இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட்டு குற்றங்கள் செய்தோர் தண்டிக்கப்பட வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியாவே கொண்டுவர வேண்டும் என்றார் அவர்.
 
Link to comment
Share on other sites

மிக எளிதான விடயத்தை கூட கையாளத காரணம் என்ன?

 

தமிழர்கள் என்ற ஒரே காரணத்தால் தான் !

Link to comment
Share on other sites

மக்களவையில் இலங்கை பிரச்சனை தொடர்பான விவாதம் 07.03.2013 வியாழக்கிழமை அன்று நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய யஷ்வந்த் சின்ஹா,

கனத்த இதயத்துடன் இந்த விவாதத்தில் பங்கேற்கிறேன். இலங்கை நமது நெருங்கிய அண்டை நாடு என்பது அனைவருக்கும் தெரியும். நமது நெருங்கிய சகோதரர்கள் இலங்கை போரில் உயிரிழந்துள்ளனர். இலங்கை தமிழர்களுக்கு இழைக்கப்படும் கொடுமை தொடர்கிறது.

பாலச்சந்திரன் பலியான புகைப்படத்தை பார்க்கும்போது வேதனை அடைவது நிச்சயம். பாலச்சந்திரன் புகைப்படம் போரின் ஒரு கோர முகத்தை வெளிப்படுத்தியுள்ளது. பாலச்சந்திரன் புகைப்படம் உக்கிரமான இலங்கைப்போரின் ஒரு சான்று.

மாறி வரும் சூழலில் இலங்கை குறித்த இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பது தெரிய வேண்டும். இலங்கை விவகாரத்தை எளிதாக அணுக முடியும் என்பது என் அனுபவத்தில் கண்ட நம்பிக்கை. விடுதலைப்புலிகளுடனான இறுதிப்போரின் போது இந்தியாவில் தேர்தல் நேரம். இதனைப் பயன்படுத்தி ராஜபச்சே தமிழர்களை கொன்று குவித்தார். இலங்கை நமது நெருங்கிய அண்டை நாடு என்பது அனைவருக்கும் தெரியும். சிங்கள படை வெற்றிக்கு இந்தியா உதவியதும் ஒரு காரணம் என ராஜபக்சே அப்போது தெரிவித்திருந்தார்.

சென்னையில் திமுக தலைவர் கலைஞரை சந்தித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அளித்த உறுதி மொழி வேறு. இலங்கை சென்றபின்னர் தேசிய பாதுகாப்பு செயலாளர் தெரிவித்த கருத்துக்கள் வேறு. இலங்கை போர் குறித்து செஞ்சிலுவை சங்கம் அளித்த எச்சரிக்கையை இந்திய அரசு கேட்க தவறிவிட்டது. 1987ஆம் ஆண்டு 13வது சட்ட திருத்தத்தை அமல்படுத்த இலங்கை அரசு ஒப்புக்கொண்டது.

தேர்தல் வெற்றிக்குப் பிறகு இலங்கை அதிபர் இந்தியா வந்தார். அப்போது இலங்கை பிரச்சனைக்கு சமூக தீர்வு காணப்படும் என அவர் உறுதி அளித்தார். ஆனால் இலங்கை தமிழர்கள் மீதான வன்முறை மனித உரிமை மீறல்கள் பற்றி எதுவும்அவர் தெரிவிக்கவில்லை. போரால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு உதவ வேண்டும் என்பதும் பாஜகவின் கருத்தாக இருந்தது. இலங்கை வடக்குப் பகுதியில் தமிழர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதே பாஜக நிலைப்பாடு. இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக நான் கண்ணீர் வடிக்கிறேன்.

ராணுவத்தை இலங்கை வடக்கு பகுதியில் இருந்து திரும்பப் பெற இந்தியா வலியுறுத்த வேண்டும். அத்துமீறல்களை நிறுத்திவிட்டு ராணுவம் பாசறைக்கு செல்ல வேண்டும். 13வது சட்ட திருத்தத்தை இலங்கை அரசு உடனடியாக அமல்படுத்த அழுத்தம் கொடுக்க வேண்டும். தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அதிகார பகிர்வுக்கு வழி வகுக்க வேண்டும். தமிழர்கள் மீதான இனப்படுகொலை குறித்து நியாயமான விசாரணை நடத்த வேண்டும். சர்வதேச அமைப்பு பிரதிநிதிகள் மூலம் விசாரணை நடத்தவேண்டும். ஐ.நா.வில் இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பான தீர்மானத்தை இந்தியாவே வடிவமைக்க வேண்டும். இந்தியா இலங்கை இடையேயான விவகாரத்தில் எந்த வெளிநாட்டின் தலையீட்டையும் அனுமதிக்க கூடாது. இவ்வாறு பேசினார்.http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13183:yashvathsing&catid=37:india&Itemid=103

Link to comment
Share on other sites

Link to comment
Share on other sites

Today night I am participating in a  discussion on Indian foreign policy and Elam Tamils at Puthiyathalaimurai TV. Please kindly watch..- Jayapalan

Link to comment
Share on other sites

Today night I am participating in a  discussion on Indian foreign policy and Elam Tamils at Puthiyathalaimurai TV. Please kindly watch..- Jayapalan

 

வாழ்த்துக்கள் கவிஞரே.எங்களின் குரல் உங்கள் குரலினூடு ஒலிக்கட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Today night I am participating in a  discussion on Indian foreign policy and Elam Tamils at Puthiyathalaimurai TV. Please kindly watch..- Jayapalan

 

இதிலும்.. உங்கள் நட்புக்கள் சார்ந்து அவர்களைத் திருப்திப்படுத்தும் வகையில் பேசாமல்.. மக்கள்.. அவர்களின் துயர்கள்... தேவைகள்.. உணர்ந்து உங்கள் மனச்சாட்சிக்கு உட்பட்டுப் பேசுவீர்கள் என்று நம்புகிறோம். :icon_idea:

Link to comment
Share on other sites

Today night I am participating in a  discussion on Indian foreign policy and Elam Tamils at Puthiyathalaimurai TV. Please kindly watch..- Jayapalan

 

வாழ்த்துக்கள் ஐயா..

 

  • ஈழம் பிரிந்தால் தமிழ்நாடும் பிரியும் என்கிற சப்பை வாதத்தை உடையுங்கள். ஈழம் பிரியாவிட்டால்தான் தமிழகத்துக்கும் அதன்மூலம் இந்தியாவுக்கும் பிரச்சினைகள் அதிகரிக்கும் என்பதை நீங்கள் எடுத்துக்கூறுங்கள்.
  • இந்தியாவுக்கு அரணாக ஈழம் மட்டுமே இருக்க முடியும் என்பதையும் ஆதாரத்துடன் விளக்கலாம். உதாரணமாக, இந்தியா வெறுத்தபோதும் தமிழர் அரசியல் இதுநாள்வரையில், சீனா, பாகிஸ்தான் பக்கம் போனதில்லை. ஆனால் சிங்களவன் போய்க்கொண்டே இருக்கிறான்.
  • வரலாற்றுரீதியாக ஈழம் தமிழர்களின் தாய்நிலம் என்பதையும் கூறுங்கள்.
Link to comment
Share on other sites

மிக எளிதான விடயத்தை கூட கையாளத காரணம் என்ன?

 

தமிழர்கள் என்ற ஒரே காரணத்தால் தான் !

 

"ஈழப் போர் முடியும் வரை இந்தியாவும் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஈழத் தமிழர் படுகொலைக்கு இந்தியாவும் உடந்தையாகவே இருந்தது. புலிகளின் கடற்படையை இந்திய கடற்படையே ஒழித்தது. 2009-ம் ஆண்டு இலங்கை மீது

பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என பிரதமரிடம் பேசினேன். ஆனால் நட்பு நாடு என்பதால் தடை விதிக்க முடியாது என்று கூறிவிட்டார் பிரதமர். இலங்கையில் போர் முடிந்த பின்னரும் அமைதிக்கான பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது."

 

காங்கிரசு கையாளத்தாயர் இல்லை. ஆகவே கருணாநிதியும் காங்கிரசும் போக வேண்டும்.

Link to comment
Share on other sites

ஒரு நாலு தமிழனின் அறியாமைக்கு  முழு தமிழனையும் தண்டிப்பது எந்த வகையில் நியாயம் என்று கேளுங்கள் .

Link to comment
Share on other sites

ஒரு நாலு தமிழனின் அறியாமைக்கு  முழு தமிழனையும் தண்டிப்பது எந்த வகையில் நியாயம் என்று கேளுங்கள் .

 

கந்தை என்றாலும் புளோட் என்ற சீலை இருந்தால் மூடிக்கொள்ள முயலலாம். அதை கிழித்து விட்டதாக கூறிக்கொள்ளும் நீங்கள் மூடிகொள்ள முயலாவிட்டால் யார்தான் அதை பார்த்து ஆச்சரியப்பட முடியும்?

 

தன்னையேதான் கிழித்ததாக கூறுபவர்கள் தமிழனை கீழிப்பதை பார்த்து என்ன ஆச்சரியம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நேர்பட பேசு நிகழ்சியில், ஐயா பொயட் ஈழ இசுலாமியர்களின் அபிலாசைகளையும் உள்ளடக்கிய 13+ திருத்த வரைவு திட்டத்தை வரவேற்று வாதிட்டுள்ளார். அடுத்த கட்ட நகர்வுக்கான அடிப்படையாக இதை எடுத்துக்கொண்டாலும், இதற்காகவா 60 வருட போராட்டமும், இவ்வளவு மரணமும், வலிகளும், இழப்பும்?

 

வலியுடன் நெருடுகிறது. தீர்மானிக்க வேண்டியது, ஈழத் தமிழர்களே.

Link to comment
Share on other sites

முஸ்லிம்களே தமிழருடன் இருக்க விரும்புவதாக தெரியவில்லை.அவர்களே ஒன்றும் செய்யாமல் இருக்கிறார்கள்.பொயட் யாழ் களத்திலேயும் முஸ்லிம்கள் பற்றி தான் வாதாடியவர்.அதைனையே தொலைக்காட்சியிலும் கூறி இருக்கிறார் போல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் ஐயா..

 

  • ஈழம் பிரிந்தால் தமிழ்நாடும் பிரியும் என்கிற சப்பை வாதத்தை உடையுங்கள். ஈழம் பிரியாவிட்டால்தான் தமிழகத்துக்கும் அதன்மூலம் இந்தியாவுக்கும் பிரச்சினைகள் அதிகரிக்கும் என்பதை நீங்கள் எடுத்துக்கூறுங்கள்.
  • இந்தியாவுக்கு அரணாக ஈழம் மட்டுமே இருக்க முடியும் என்பதையும் ஆதாரத்துடன் விளக்கலாம். உதாரணமாக, இந்தியா வெறுத்தபோதும் தமிழர் அரசியல் இதுநாள்வரையில், சீனா, பாகிஸ்தான் பக்கம் போனதில்லை. ஆனால் சிங்களவன் போய்க்கொண்டே இருக்கிறான்.
  • வரலாற்றுரீதியாக ஈழம் தமிழர்களின் தாய்நிலம் என்பதையும் கூறுங்கள்.

உண்மைதான் இசை

 

நான் வேலை செய்யும் இடத்தில் பல பாக்கிகளும் சீக்கியர்களும்

அடிக்கடி வேலைகேட்டு வருவார்கள்

 

அவர்களின் விபரத்தைக் கேட்டறிந்ததும் அடிமனதில்

ஒரு வெறுப்பும் கோபமும் என்னையறியாமலே எழும்

 

அவர்களை வேலையில் சேர்ப்பதைத் தவிர்த்தே வருகின்றேன்  

Link to comment
Share on other sites

புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நேர்பட பேசு நிகழ்சியில், ஐயா பொயட் ஈழ இசுலாமியர்களின் அபிலாசைகளையும் உள்ளடக்கிய 13+ திருத்த வரைவு திட்டத்தை வரவேற்று வாதிட்டுள்ளார். அடுத்த கட்ட நகர்வுக்கான அடிப்படையாக இதை எடுத்துக்கொண்டாலும், இதற்காகவா 60 வருட போராட்டமும், இவ்வளவு மரணமும், வலிகளும், இழப்பும்?

 

வலியுடன் நெருடுகிறது. தீர்மானிக்க வேண்டியது, ஈழத் தமிழர்களே.

 

கவிஞர் ஐயா அவர்கள் மத்திய காங்கிரஸ் அரசின் குரலாக ஒலிப்பார் என்பது தெரிந்ததே.. :D

Link to comment
Share on other sites

அவரை விட ஜெனிவா வந்து தமிழர் துன்படவில்லை என்று கூறிய கக்கீமும், பதியுதினும் நல்லவர்கள். அவர்கள்  ஐ.நாவில் யாரும் தங்களை நம்ப மாட்டர்கள் என்று தெரிந்து கொண்டுதான் செய்தார்கள். அதனால் தங்களால் தமிழருக்கு மேலதிக தீமை செய்ய முடியும் என்று நம்பவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நேர்பட பேசு நிகழ்சியில், ஐயா பொயட் ஈழ இசுலாமியர்களின் அபிலாசைகளையும் உள்ளடக்கிய 13+ திருத்த வரைவு திட்டத்தை வரவேற்று வாதிட்டுள்ளார். அடுத்த கட்ட நகர்வுக்கான அடிப்படையாக இதை எடுத்துக்கொண்டாலும், இதற்காகவா 60 வருட போராட்டமும், இவ்வளவு மரணமும், வலிகளும், இழப்பும்?

 

வலியுடன் நெருடுகிறது. தீர்மானிக்க வேண்டியது, ஈழத் தமிழர்களே.

 

இதுதான் எம்மவரின் பிரச்சனையே. அடுத்தவன் சோழியை தன் தலைமேல தூக்கிக் கொண்டு.. தான் வாழாமல் செய்வதே.

 

முதலில் எமது சம கால தேவைகளை சொல்லுங்கள். 13+ இல் என்ன அடங்க வேண்டும் என்ற ஒரு வரையறையே இல்லாத நிலையில் அதைப் பற்றிப் பேசுவதே அர்த்தமற்றது. இன்று பேசப்பட வேண்டிய விடயம்.. இனப்படுகொலை.. மனித உரிமை மீறல்கள்.. சர்வதேச அனுசரணையுடன் கூடிய தீர்வு நோக்கிய பயணம். அதன் பிறகு பிற இனத்தின் தேவைகளை அவர்களோடு கலந்து பேசி தீர்த்துக் கொள்ளலாம்..!

 

எமது துயர் தொடர்பில் இஸ்லாமியர்கள் ஒரு அக்கறை செலுத்த எப்போதுமே தயார் இல்லை. அவர்களுக்குப் பிரச்சனை நாடு பூராக உள்ளது. அதை 13+ க்குள்ளால எப்படி தீர்ப்பது..???! அப்படி என்றால்.. மருதானையில் ஒரு முஸ்லீம் அலகு.. மாவனல்லையில் ஒரு முஸ்லீம் அலகு.. யாழ்ப்பாணம் சோனக தெருவில் ஒரு முஸ்லீம் அலகு.. காத்தான் குடியில் அலகு.. கல்முனையில் அலகு.. களுத்துறையில் அலகு.. கண்டியில் அலகு என்று நாட்டை அலகு அலகாகப் பிரிக்க வேண்டித்தான் வரும்..!

 

பொயட் இங்கே பாடும் அதே பல்லவியையையே பாடியுள்ளார்..! சொல்லியும் கேட்காத இப்படியான மக்களின் எண்ணத்தைப் பிரதிபலிக்க மறுக்கும்.. அரசியல் வக்குரோத்து நிலையால் தான் மண்டையில போட வேண்டி வந்தது..! :icon_idea:

 

Link to comment
Share on other sites

கனவிற்கும் நிஜத்திற்குமான இடைவெளி தான் அது .வாழ்த்துக்கள் பொயட் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞர் அரசியல்வாதியாகிக் கனகாலம் சென்றுவிட்டது

ஈழத்தமிழரின் நிலை இன்று எடுப்பார் கைப்பிள்ளையாகிவிட்டது

Link to comment
Share on other sites

புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நேர்பட பேசு நிகழ்சியில், ஐயா பொயட் ஈழ இசுலாமியர்களின் அபிலாசைகளையும் உள்ளடக்கிய 13+ திருத்த வரைவு திட்டத்தை வரவேற்று வாதிட்டுள்ளார். அடுத்த கட்ட நகர்வுக்கான அடிப்படையாக இதை எடுத்துக்கொண்டாலும், இதற்காகவா 60 வருட போராட்டமும், இவ்வளவு மரணமும், வலிகளும், இழப்பும்?

 

வலியுடன் நெருடுகிறது. தீர்மானிக்க வேண்டியது, ஈழத் தமிழர்களே.

 

சரி தமிழர் உரிமையை விடுவோம். இன்று பாதிக்கப்பட்டுள்ள வன்னி மக்களைப் பற்றி, நிலப்ப றிப்பு,  குடியேற்றம் பற்றி பேசினாரா?

முஸ்லிம்களுக்குக் குரல் கொடுக்க ஏராளமானவர்கள் இருக்கிறார்களே?

 

தன்னைப் பெற்ற தாய் மடியேந்தி பிச்சை எடுக்க, மகன் தொலைக்காட்சியில் 'கோ' தானம் செய்தானாம் என்ற மாதிரிக் கிடக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனவிற்கும் நிஜத்திற்குமான இடைவெளி தான் அது .வாழ்த்துக்கள் பொயட் .

 

இல்லாத 13+ பற்றி பேசுவது.. கனவில்லை நிஜமாக்கும்..???!

 

என்னே ஒரு அறிவு..??! இதைத்தானே நாங்களும் மீன்பிடிப்படகில் நின்று கொண்டு எவ் எம் மைக்கை வைச்சுக் கொண்டு.. தமிழீழம் படைக்க சத்தியம் செய்து அப்புறமா.. அது பெயிலியராக.. புலிகளா நாங்களா.. பார் காட்டிறம் என்று றோவின் சிங்களத்தின் கூட்டு வழிகாட்டலில்.. மாலைதீவில அதை படைக்க கனவு கண்டனாங்கள்..! இப்பவும் அங்க சிறைகளில் உள்ள தோழர்களுக்கு ஒரு முடிவில்ல..! முதலில் அதற்கு ஒரு வகை செய்யுங்கள்.!

 

Coup in Maldives

 

Main article: 1988 Maldives Coup

In late 1988, a coup to overthrow the Maumoon Abdul Gayoom's government in Maldives with the help of mercenaries from PLOTE was foiled by India.[1]

 

The People's Liberation Organization was reported to have been offered at least $1 million - some estimates run as high as $10 million. Officials said they were not certain whether money was the only reward the guerrillas were to get for their part in the coup. There have been suggestions that the PLOTE may have been promised one of the small Maldivian islands as a base, possibly for Arms shipments. In a recent interview, Vetrichelvan PLOTE's former representative in New Delhi claims it was Athulathmudali, then Srilankan Prime Minister, who instigated PLOTE into such a venture on a promise of some islands.[2]

 

http://en.wikipedia.org/wiki/People%27s_Liberation_Organisation_of_Tamil_Eelam

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் ஐயா..

 

  • ஈழம் பிரிந்தால் தமிழ்நாடும் பிரியும் என்கிற சப்பை வாதத்தை உடையுங்கள். ஈழம் பிரியாவிட்டால்தான் தமிழகத்துக்கும் அதன்மூலம் இந்தியாவுக்கும் பிரச்சினைகள் அதிகரிக்கும் என்பதை நீங்கள் எடுத்துக்கூறுங்கள்.
  • இந்தியாவுக்கு அரணாக ஈழம் மட்டுமே இருக்க முடியும் என்பதையும் ஆதாரத்துடன் விளக்கலாம். உதாரணமாக, இந்தியா வெறுத்தபோதும் தமிழர் அரசியல் இதுநாள்வரையில், சீனா, பாகிஸ்தான் பக்கம் போனதில்லை. ஆனால் சிங்களவன் போய்க்கொண்டே இருக்கிறான்.
  • வரலாற்றுரீதியாக ஈழம் தமிழர்களின் தாய்நிலம் என்பதையும் கூறுங்கள்.

 

இதுதான் உண்மை காங்கிரஸ் இருக்கும்வரை உணரமாட்டார்கள், அவர்களுக்கு தமிழனை அடக்கிவைத்திருக்கனும், சிங்களவனின் காலில் விழுந்தென்றாலும்

Link to comment
Share on other sites

கனவில் இருப்போர் மற்றவர்களை கனவில் இருப்பத்தாக  காண்பதுண்டு.

 

13 என்றுமே நடை முறை சாத்தியமாக இருக்கவில்லை. பொயட். 13ம் திருத்ததில் இணைக்கப்பட்டிருந்த  வடக்கு கிழக்கு பிரிக்கபட்டதை ஆதரித்தவர். 13ம் திருத்தம் என்பது மாகண அபிவிருத்திகளுக்கு மட்டுமே உபயோகமானது. அது இன்று திவி நெகும்பாவால்  பொறுப்பேற்கப்பட்டுவிட்டது.  இதில் இனி செய்ய ஒன்றும் இல்லை. திவி நெகும்பாவை எதிர்த்தவர் என்பதால் சிராணி பதவி நீக்கபட்டார்.

 

13ம் + என்று மகிந்தா மட்டும்தன் ஒரு பதத்தை பாவித்தார்.  அதை இந்திய அரசியல் வாதிகளிடம் தான் கூறினார். அவர் அதில் கூறியது மாகாண சபைகளை நீக்கி மேல் சபையை கொண்டுவருவதே. இதை பொயட் இந்தியா போய் கேட்க வேண்டியதில்லை. மாகாண சபைகள் போய், மேல் சபை வருவதை யாரும் தடுக்க முடியாது. மகிந்தா சொன்னதில் பிழை விட்டது கிடையாது.

 

இந்தியா என்ற நாடு 13ம் திருத்தத்தை பற்றி கவலை படுவது கிடையாது. பா.ஜ.கா தனது காலத்தில் அதைபற்றி அக்கறை காட்டவிலை. 2009 ம் போரின் பின் மன்மோகன் சிங் பேசியது தமிழர் இலங்கை அரசு கொடுப்பத்தை மட்டும் தான் பெற்றுக்கொள்ளாலாம் என்பதே(அவர்களின் கருத்து 13ம் திருத்தத்தை அரசு நிறைவேற்றாது, தாங்களும் அதை கேட்கமாட்டார்கள் என்பதே). 13ம் திருத்தம் போரின் பின் பேச்சளவில் திரும்ப வந்தது கிருஸ்ணா பொங்களுக்கு வந்த போதே. அப்போது அமெரிக்கா பிரேணையில் இலங்கையை கையெழுத்து போடும் படி கேட்டுக்கொண்டிருந்த காலம். அதிலிருந்து இலங்கையை காப்பாற கிருஸ்ணா கேட்டதுதான் 13ம் திருத்தத்தின் புதிய அத்தியாயம். அதற்கு அவர் கூட்டமைப்புக்கு கொடுத்த அறிவுறுத்தல் கூட்டமைப்பு தெரிவு குழுவில் பங்கேற்க வேண்டும் என்பது. கூட்டமைப்பு. கூட்டமைப்பு எப்போதும் 13ம் திருத்ததை ஏற்கவில்லை. கூட்டமைப்பு தெரிவுக்கு குழுவுக்கு போகவில்லை.

 

ராஜபக்சா திருகோண்மையில் வைத்து இலங்கையில் வேறு ஒரு அரசும் அதிகாரம் கொண்டதாக இருக்க முடியாது என்று கூறிவிட்டார். அதன் பின்னர் இந்தியா அந்த கதையை எடுக்கவில்லை. 

 

இப்போது அமெரிக்கா சரவதேச விசாரணைக்கு முயல்கிறது. அதை குழப்பத்தான் RAW முனைகிறது போலிருக்கிறது.

 

இப்போது RAW சிலருக்கு பணம் கொடுத்து மேடை எற்றி 13ம் திருத்தத்தை ராஜபக்சா ஏற்கிறார் மாதிரி நடிக்க வைத்து பிரேரணையை குழப்ப முயல்கிறது போல இருக்கிறது.

 

 

 

Link to comment
Share on other sites

எல்லாம் இருக்கட்டும்
பொயட் அவர்களே விவாதத்தில் என்ன நடந்தது என யாழுடன் பகிர முடியுமா? நன்றி
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ரஸ்யாவின் மற்றும் யூகோசிலாவியாவின் உடைவு(உடைப்பு) என ஒரு தொடர் செயற்பாட்டு நிரலுள் நடைபெறும் பூகோள மற்றும் கனியவளச் சுரண்டலாதிக்கக் கொள்கைகளே போருக்கான முதன்மைக் காரணிகளாக விளங்குகின்றமை யாவரும் அறிந்த ஒன்று. மிகையில் கோபர்சேவின் நடவடிக்கையால் உதிர்ந்த சோவியத் ஒன்றியமும் இணைந்த யேர்மனியும் புதின் போன்ற கடும் போக்குத் தலைமைகளால் சாத்தியமாகியிருக்காது அல்லது பழைய போக்கிலேயே ஒரு பனிப்போர்காலம் போல் தொடர்ந்திருக்கும். ஆனால் உலகம் மாற்றங்களை ஏதோ ஒரு வகையில் சந்தித்தே வருகிறது. அது(போர் அல்லது இராசதந்திரப்போர்) வன்வலு மற்றும் மென்வலு என அழைக்கப்படும் இரு வழிகளூடாகவும் உலகு தொடர் மனித உயிரிழப்பைச் சந்தித்தே வருகிறதென்று கொள்ளலாம். இதற்கு அடிப்படையாக இருப்பது உலகத் தலைவர்களின் நேர்மையீனமே.அவர்கள் செய்துகொள்ளும் ஒப்பந்தங்களையோ வாக்குறுதிகளையோ கடைப்பிடித்துச் செல்பவர்களாக இல்லை. அதன் விளைவாகவே போர்கள் தோற்றம் பெறுகின்றன. போர் நாகரீகமற்றது என்று  போதித்தவாறு காசாவின் படுகொலைகளை இந்த உலகு பார்த்துக்கொண்டிருக்கிறது. மனிதாபிமான உதவிகள், போர் நிறுத்தக் கோரல்கள், பயங்கரவாதத்தைத் தடுக்கும் உரிமை என்ற சொல்லாடல்கள் வழியாகப் போரைத் தொடர்கிறது. இதனையே முழு உலகிலும் தமது தேவைக்கேற்ப செய்கிறார்கள். ஆனால், ஒரு வல்லரசான ரஸ்யா ஏன் நேட்டோவைக் கண்டு அஞ்சுகிறது. அது தனது எல்லைகளைப் பலப்படுத்திப் பாதுகாப்பை வலுப்படுத்தியிருக்கலாமே. இவளவு மனிதவள, பொருண்மிய இழப்புகள் தேவையா? தோல்வியை ஏற்காதுவிடின் வெற்றியைப் பெறும்வரை போரை நடாத்தி இன்னும் அழிவுகளை விதைத்து எதைக்காணப் போகிறார்கள்? அணுஆயுத வல்லரசு தோல்வியை ஏற்குமா என்பதை இனிவரும் நாட்களே முடிவுசெய்யும். எதற்காகப் புதின் திடீரென நிபந்தனைகளோடு போர்நிறுத்தத்தைக் கோருகிறார்?  நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
    • வாறது தமிழனுக்கு அடுத்த ஆப்பைச் சொருக. அதனால இனி அடிக்க மாட்டாங்கள். 2005 இல இருந்து இண்டைக்கு மட்டும் இலங்கையின்ர உற்ற நண்பன் இந்தியாதானெண்டு சிங்களத்துக்குத் தெரியும். 
    • யாழில் அண்மையில் கலந்துரையாடிய விடயங்களும் இக்காணொளியில் உள்ளமையால் இணைத்துள்ளேன்.
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.