Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நானும் இரண்டு பொண்டாட்டிக்காரன் தான்..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

580541_10152640454215055_1527080915_n.jp

 

தொட்டுவிட்டவள்

தொற்றிவிட்டவள்

என்றிரண்டு

பொண்டாட்டிங்க எனக்கு..!

எங்களுக்க

விவாகமுமில்ல

விவாகரத்துமில்ல

சண்டையுமில்ல

சச்சரவுமில்ல

கூவத் தெரிந்த நான்

கூனியதுமில்ல..

கொண்டை வைச்ச நான்

தலை சாய்த்ததுமில்ல..!

இவ்வளவைய

கட்டிமேய்க்கிறேன்

கனகாலமாய்..!

நானும்

இரண்டு பொண்டாட்டிக்காரன் தான். :lol:

 

Spoiler
(இப்படிக்கு வெள்ளைக் கோழி.. சிவப்புக்கோழிகளின் கணவன் செஞ்சேவல்)

 

படம்:முகநூல்

Edited by nedukkalapoovan

  • Replies 51
  • Views 7.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

580541_10152640454215055_1527080915_n.jp

 

 

Spoiler
(இப்படிக்கு வெள்ளைக் கோழி.. சிவப்புக்கோழிகளின் கணவன் செஞ்சேவல்)

:D  :lol:  :icon_idea:

Spoiler
அந்தச் சேவல்... வெள்ளைக்காரியையும், ஊர்க்காரியையும் சமாளிக்கிற எங்கடை ஆக்கள் போலையிருக்கு.
  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் நன்றாக இருக்கு நெடுக்ஸ் உங்கள் சிந்தனையும் கவிதையும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:D  :lol:  :icon_idea:

Spoiler
அந்தச் சேவல்... வெள்ளைக்காரியையும், ஊர்க்காரியையும் சமாளிக்கிற எங்கடை ஆக்கள் போலையிருக்கு.

 

முடியலை சிறி அண்ணா, சிரிச்சு வயிறு நோகுது.. :D :D

:D  :lol:  :icon_idea:

Spoiler
அந்தச் சேவல்... வெள்ளைக்காரியையும், ஊர்க்காரியையும் சமாளிக்கிற எங்கடை ஆக்கள் போலையிருக்கு.

 

இதை நீங்க ஒண்டும் நெடுக்கருக்கு எழுதல்லையே? :D

நானும் ஏதோ நெடுக்கர் இரண்டை எங்கையோ விழுத்தீட்டாராக்கும் எண்டு ஓடி வந்து பார்த்தால்...... எண்டாலும் கவிதை நல்லாய் தான் இருக்கு. :D

  • கருத்துக்கள உறவுகள்
நல்லா இருக்கு நெடுக்ஸ்,
 
இதுல எது சின்ன வீடு?
  • கருத்துக்கள உறவுகள்

இந்த மாதிரி எண்டால் ஒரு அஞ்சாறு சமாளிக்கலாம்! :D

 

நன்றிகள், நெடுக்கர்!

  • கருத்துக்கள உறவுகள்

நான் தலைப்பை பார்த்து யாரோ கலைஞர் போல இரண்டு பெண்டாட்டிகாரர் என்று பார்த்தால் ....... இங்கு நெடுக்க்ஸ் கோழிகளை போட்டிருக்கின்றார்  :D  :lol:



நெடுக்க்ஸ் நன்றிகள்

சேவல் ஒற்றைகாலோடை நிக்கிது . ஏதாவது பிரைச்சனையோ  :lol:  :lol:  :lol: ????  கவிதைக்குப் பாராட்டுக்கள் நெடுக்கர் :) .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

:D  :lol:  :icon_idea:

Spoiler
அந்தச் சேவல்... வெள்ளைக்காரியையும், ஊர்க்காரியையும் சமாளிக்கிற எங்கடை ஆக்கள் போலையிருக்கு.

 

எனக்குத் தெரிய ஒருவர். அவருக்கு லண்டனில ஊர்க்கோழி.. வெளில வெள்ளைக்கோழி.. அங்க ஒரு 3 மாசம்.. இங்க ஒரு 3 மாசம்.. இப்படி வாழ்க்கையை ஓட்டிக்கிட்டு இருக்கிறார்..! ஆனால் என்ன என்றால் இரண்டு பக்கமும் குடும்பத்தைக் கவனிக்கிறார்..! நல்ல நிலையிலும் வைச்சிருக்கிறார்..! இந்தச் சேவல் போல..!

 

இதற்கு தனித்திறமை அவசியம். எந்த யுனிவேர்சிட்டிக்குப் போனாலும்.. இது சொல்லித் தரமாட்டாங்க..! இது ஒரு தனிக் கலை..! :lol::D

நானும் ஏதோ நெடுக்கர் இரண்டை எங்கையோ விழுத்தீட்டாராக்கும் எண்டு ஓடி வந்து பார்த்தால்...... எண்டாலும் கவிதை நல்லாய் தான் இருக்கு. :D

 

ஒன்றைப் பிடிச்சு வைச்சிருக்கவே தெரியாமல் திண்டாடுறம்.. இதில இரண்டு விழுத்தீட்டம் என்று ஓடி வந்திருக்கீங்களே..! ஐயோ ஐயோ..! :lol::D

மேலும் கருத்துச் சொன்ன.. வாழ்த்துச் சொன்ன எல்லா உறவுகளுக்கும் நன்றி.

 

 இந்தப் படத்தை பார்த்ததும் பக்கென்று மனசில வந்ததை எழுதிப் போட்டம். அவ்வளவும் தான். அது பலருக்கு பொருந்தி வாறது.. என்ன.. பலர் இந்த சேவலின்ர வாழ்க்கை போல.. வாழ்ந்துகிட்டு.. உலகில் இருக்காங்க என்பதையே இனங்காட்டுது. அதுக்கும் ஒரு கொடுப்பனவு வேண்டும். :lol:

மனிசரில்.. சில பேர் நிலைமை இப்படியாவதும் உண்டு..

 

225562_485714031476910_1206478939_n.jpg

படம்: முகநூல்

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள் நெடுக்ஸ்.

உங்கள் படைப்புக்களில் எப்போதும் ஒரு புதுமை இருக்கும்.

அதுதான் உங்கள் தனி முத்திரை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
உந்த மூண்டு கோழியையும் பாக்க கவிதை மனப்பான்மை எனக்கு துண்டற வரவேயில்லை.........வந்தது முழுக்க உப்பு...புளி....தூள்......பிரட்டல்  :wub:
Spoiler
 
நெடுக்கர்: அததுகள் தங்கடை புத்தியை வைச்சி யோசிக்குதுகள்.  :)  :icon_idea:
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உந்த மூண்டு கோழியையும் பாக்க கவிதை மனப்பான்மை எனக்கு துண்டற வரவேயில்லை.........வந்தது முழுக்க உப்பு...புளி....தூள்......பிரட்டல்  :wub:
Spoiler
 
நெடுக்கர்: அததுகள் தங்கடை புத்தியை வைச்சி யோசிக்குதுகள்.  :)  :icon_idea:

 

எனக்கென்றால் அப்படி தோனவே இல்ல. எங்கட வீட்டில வளர்த்த கோழிகள் தான் ஞாபகம் வந்திச்சு. அதுகளைப் பிடிச்சு வாலில சொப்பிங் பாக்கை கட்டி விட்டால்.. அது அந்த சலசலப்பில.. அங்கும் இங்கும் ஓடுங்கள். அப்புறம் பார்க்கப் பாவமா இருக்கும். பிடிச்சு அவிட்டு விடுவன்..! ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பெயர் வைச்சு அதுகளை வளர்க்க ஆடித் தூக்கம் என்று ஒன்று வந்து எல்லாம் பொட்டென்று போகேக்க கவலையா இருக்கும் என்றிட்டு.. ஊசி போடுவிச்சு.. மருந்து கொடுத்து.. தப்ப வைச்சு.. அதெல்லாம் ஊரில வசந்த காலங்கள்..! 

 

Kuiken.jpg

 

அடை வைச்சு.. கிட்டத்தட்ட 21 நாட்கள் கோழி அடைகாக்குதோ இல்லையோ.. நாங்க எப்படா குஞ்சு வரும் என்று காத்திருந்து.. அழகழகா அவை முட்டை உடைச்சு வெளிய வந்து உலாவித்திரியவும். பஞ்சு போன்ற அந்தக் குஞ்சுகளை உள்ளங்கையில் நிறுத்தி வைச்சு.. பார்க்க.. எவ்வளவு அழகா இருக்கும்..!

 

அப்புறம் இரண்டு நாள் பழக்கிவிட 3ம் நாள் மாமரத்தில மாலை 6 மணி என்றதும்.. ஏறிப் படுக்குங்கள்.. அதுகளின்ர வாழ்க்கையும் மனிசங்க எங்கட வாழ்க்கையும் ஒரு அண்டஸ்ராண்டிங்கோட.. எவ்வளவு ஒத்திசைவா போய்க்கிட்டு இருக்கும். எல்லாம் போயி.. இப்ப எல்லாம் கோழியைக் காணவே முடியாது. செத்து பொரிச்ச நிலைல வாய்க்குள்ள போக ரெடியாத்தான் அவற்றைக் காண முடிகிறது. அவற்றின் மீதான அந்த ஜீவகாருணியமே செத்துப் போச்சுது. அப்படியான இடத்தில மனிசங்க மீது மனிசங்களுக்கே காருணியம் வருமா என்ன. அதுதான் நாளும் கத்திக் குத்தும் வழிப்பறியும் கொலையும்.... கொள்ளையும்..! காசு வசதி இருந்தும்... என்ன இவற்றை தடுக்க முடியல்லையே..! :):D

 

800px-Hen_and_chickens.jpg

=========================

 

தங்கள் கருத்திற்கு நன்றி யாழ்வாலி (உங்களை யாரேனும் மறைஞ்சிருந்து போட்டுத்தள்ளிடப் போறாங்க.. இராமாயன.. வாலி மறுபிறப்பு என்று) வந்திக்கும் நன்றி..! :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மேலே உள்ள படங்களில்.....................

 

ஒரு ஆண் (romantic பண்ணிற நினைப்பில) எங்கே நிமிர்ந்து நிற்கிறார்கள் என்று பாருங்க...

 

 

பெண் (தாய்) எங்கே நிமிர்ந்து நிற்கிறாள் என்றும் பாருங்க..

 

இங்க தான்.. பிரச்சனை ஆரம்பமாகுது.. நம்ம ஆணுகளுக்கு..! :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

படத்தை பகிர்வா க்கிய உங்கள் திறமைக்கு பாராட்டுக்கள். கோழியும் அதன் குஞ்சுகளும் பருந்து  எதிரி களிடம் இருந்து காப்பாற்றும் திறமை இருகிறதே அது ...ஒரு ஜீவ மரண ப்போராட்டம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்ஸ் அண்ணை,

உங்கட குறும்புகளுக்கு ஒரு எல்லையே இல்லை!.....:)

 

ஆம்பிளையள் எத்தனை பொம்பிளையைக் கட்டினாலும் சமாளிக்கலாம்!! ஆனால் ஒரு பொம்பிளை ஒரே ஒரு ஆம்பிளையைக் கட்டிப்போட்டு படுற பாடு இருக்கே:)))))))))))))))))!!!!....கஷ்டமப்பா:))))

 

**நீங்கள் சொன்ன ஜீவகாருண்யத்தைச் சொன்னபோது மனசுக்கு மிகுந்த வேதனையாய் இருந்தது அண்ணை.

 

ம்ம்ம்.....மனுஷன் தான் வாழுறதுக்காக என்னவெல்லாமோ செய்வான்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி மாமரத்தில படுத்திருந்த கோழி ஒன்றை பிடித்து, கழுத்தினை திருகி விட்டு, பார்த்து விட்டோம் என்றவுடம், பவ்வியமாக வந்து, கேப்டன் சப்பாத்திக்கு கோழிக் கறி கேட்கிறார்... அதுதான்... என்று தலை சொரிந்த இந்திய கோழிக் கள்ளர், ச.. அமைதி காத்த படையினை பத்தியும் சொல்ல விரும்புகிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் அண்ணை,

உங்கட குறும்புகளுக்கு ஒரு எல்லையே இல்லை!..... :)

 

ஆம்பிளையள் எத்தனை பொம்பிளையைக் கட்டினாலும் சமாளிக்கலாம்!! ஆனால் ஒரு பொம்பிளை ஒரே ஒரு ஆம்பிளையைக் கட்டிப்போட்டு படுற பாடு இருக்கே :)))))))))))))))))!!!!....கஷ்டமப்பா :))))

 

**நீங்கள் சொன்ன ஜீவகாருண்யத்தைச் சொன்னபோது மனசுக்கு மிகுந்த வேதனையாய் இருந்தது அண்ணை.

 

ம்ம்ம்.....மனுஷன் தான் வாழுறதுக்காக என்னவெல்லாமோ செய்வான்.

 

குறும்பு.. குசும்பு.. குழப்படி எல்லாம் எங்களோட கூடப்பிறந்ததுகள். :)

 

நன்றி சகோதரி உங்கள் கருத்திற்கு.

 

நிலா அக்காவிற்கும் நன்றி. :)

 

நாதமுனிக்கும் நன்றி... இந்திய ஆமி ஈழத்தில.. கள்ளக் கோழி மட்டுமில்ல கள்ளாடும் திருடினது..! அதுக்கு மட்டும் தனிய அவங்களை விசாரிக்கனும்..! :)

 

  • கருத்துக்கள உறவுகள்

எங்கடை வீட்டையும் கோழி அடைவைச்சு அது முட்டையாலை குஞ்சுவரேக்க பாக்க வடிவாய் இருக்கும்...பஞ்சுப்பொதிமாதிரி தடவ தடவ ஆசையாய் இருக்கும்..ஒவ்வொண்டும் ஒவ்வொரு கலரில பாக் பாக் எண்டு கத்திக்கொண்டு திரியும்பொழுது..சிலநேரம் எங்கையோ இருந்து குறுக்கால பாய்ஞ்சு வந்து கோழிக்குஞ்சை பருந்து தூக்கிப்போய்விடும்..அப்பொழுது அந்தக்குஞ்சுகளும் தாய்க்கோழிகளும் அந்தரிப்பதையும் படும்பாட்டையும்தான் நாங்களும் புக்காரா சீப்பிளேன் கெலி எண்டு வந்து குத்தி அடிக்கேக்க பட்டம்...குஞ்சை இழந்த தாய்க்கோழி அன்று முழுவதும் காணி எல்லாம் கத்திக்கதறிக்கொன்டு திரியும்..அப்படித்தானே தங்கள் பிள்ளைகளை விமானக்குண்டுவீச்சுக்கு பறிகொடுத்த பெற்றோர்களின் வலியும்...கழுத்தில் செட்டை இல்லாமல் பிறக்கும் கோழிக்குஞ்சை சோனகக்குஞ்சு என்று வீட்டில் சொல்லுவார்கள்..எனக்கு இண்டு வரை ஏன் அப்படி சொல்லுகிறவர்கள் என்றுதான் புரியவில்லை...கோழியை வைத்து நல்ல கற்பனை நெடுக்ஸ் அண்ணா..அத்துடன் உள்ளத்துக்குள் ஒழிந்துகிடந்த பால்யகால ஞாபகங்களையும் கிண்டிவிட்டீர்கள்..நன்றி..

Edited by சுபேஸ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தங்கள் கருத்திற்கு நன்றி சுபேஸ். :)

 

சோனகர் தலையில் தொப்பி போட்டு மொட்டையாக தெரிவது போல அந்தக் கோழிக்குஞ்சும் தெரிவதாலாக இருக்கலாம்.

 

அறிவியல் ரீதியில் ஜீன் விகாரம் இந்த நிலையை தோற்றியுள்ளதாகத் தெரிகிறது. வான்கோழிகளும் இந்த நிலை அவதானிக்கப்பட்டுள்ளது. ஆனால் இவை வான்கோழிக் கலப்புகள் அல்ல..!

 

chicken + turkey =/= churkey

 


article-1366748-0B32C2C600000578-78_468x

 

Researchers found that the way vitamin A is converted by the bird's skin, combined with a protein in the flesh,
allowed it to shed feathers around its neck

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

கழுத்தில் செட்டை இல்லாமல் பிறக்கும் கோழிக்குஞ்சை சோனகக்குஞ்சு என்று வீட்டில் சொல்லுவார்கள்..எனக்கு இண்டு வரை ஏன் அப்படி சொல்லுகிறவர்கள் என்றுதான் புரியவில்லை...
 

எனக்கும் முன்னர் புரியவில்லை.....இதில் நீங்கள் எழுதியதை பார்த்ததும் ஊகிக்க கூடியதாக இருக்கிறது. :rolleyes::icon_idea:

 

 

 

நெடுக்ஸ்...உங்களின் கவிதைக்கும் 15 ஆவது கருத்துக்கும் ஒரு பச்சை....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கருத்துக்கு நன்றி சபேஷ்..! :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் எந்த உலகத்திலை இருக்கிறியள் ?? நாங்கள்தான் இப்ப உங்களை போலை ஆக்களை   மேச்சுகொண்டிருக்கிறம் . கவிதைக்கு பாராட்டுறன் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.