Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நீங்கள் என்டால் என்ன செய்வீர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்.நான் வாழும் இடத்தில் ஒரு சம்பவம் .விசையம் என்னவென்டால் ஒரு பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு கொடுக்கப்பட்ட கவரில் காசு வைக்காமல் கொடுக்கப்பட்டிருப்பது கண்டு பிடிக்கப்ட்டது .சம்பந்தப்பட்டவர்கள் கவணக்குறைவால் செய்திருக்க கூடிய சாத்தியங்கள் தான் 99 வீதம் உண்டு.சரி அதை விடுவம்.ஒரு உதாரனத்துக்கு நீங்கள் அந்த விழாவை நடத்தியவர் ஆகின் என்ன செய்திருப்பீர்கள்.

அன்பு உறவுகளின் கருத்துக்களை எதிர் பாக்கிறேன். :)

  • கருத்துக்கள உறவுகள்

விசையம் என்னவென்டால் ஒரு பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு கொடுக்கப்பட்ட கவரில் காசு வைக்காமல் கொடுக்கப்பட்டிருப்பது கண்டு பிடிக்கப்ட்டது .

இப்பவும் பழுப்பு/வெள்ளைக் கவரில் காசு கொடுக்கும் புழக்கம் இருக்கின்றதா? புலம்பெயர் நாடுகளில்தானே அழகான வாழ்த்து அட்டைகள் இருக்கின்றன. அவற்றை கொடுப்பதில்லையா?

வெறும் வாழ்த்து அட்டை என்றால் ஒரு பிரச்சினை இல்லை! பலருக்கு கொடுத்தும் இருக்கின்றேன்!

"கவர்" கொடுப்பதே நாகரிகக் குறைவு என்று கருதுவதால் மொய் வைக்காத "கவர்"ஐக் கொடுத்தால் என்ன, விட்டால் என்ன!  

  • கருத்துக்கள உறவுகள்

நான் பிறந்த நாள் கொண்டாட்டம் செய்வதில்லை. இருந்தாலும் அப்படி ஒருவர் வைக்கவில்லை என்றால் என்ன செய்வது?? பேசாமல் விடவேண்டியதுதான். அவர்களின் பெயர் தெரிந்தால் அவர்களைப் பற்றி மதிப்பீடு செய்து, அவர்கள் எவ்வளவு தந்திருக்கச் சாத்தியம் என கணித்து அவர்களின் விழாவில் கொடுத்துத் தான்
இருப்பேன்.

உங்கள் கவர் யாராலோ கிழிக்கப்பட்டிருந்தது. அதில் எவ்வளவு இருந்தது என்றும் கேட்க முடியாது. ஏனெனில் அவர்கள் £50 வைத்துவிட்டு 100 என்றும் சொல்ல வாய்ப்பிருக்கிறது. எனவே நட்டக் கணக்கில் எழுதிவிட்டு போய்க்கொண்டே இருக்கவேண்டியதுதான்.

உங்களுக்கு யாராவது வைக்காது விட்டுவிட்டார்களா சுவைப் பிரியன் ??? :D

  • கருத்துக்கள உறவுகள்

இதில என்ன செய்யக் கிடக்குது. இதுக்காக கொலையா செய்ய முடியும். தர விருப்பமில்லையாக்கும் என்றிட்டு அடுத்த அலுவலைப் பார்க்க வேண்டியதுதான். :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மையில் இப்படி ஒரு சம்பவம் எங்கள் வீட்டிலும் நடந்தது.

2009ம் ஆண்டு அண்ணாவின் மகனது முதலாவது பிறந்தநாளுக்கு இப்படி ஒரு கவர் வந்தது.

அண்ணா,அண்ணி,நான் மூன்று பேருமாக வந்த பரிசுகளைப் பார்த்து எழுதிக்கொண்டிருக்கும் போது என் கைக்கு பெயர் எழுதாத வெற்று உறை வந்தது உடைத்துப் பார்த்தால் எதுவுமே இல்லை. பிறகு DVD வந்ததும், வீடியோ போட்டுப் பார்த்தது யார் அந்த ஆள் என்று. நன்கு தெரிந்த ஆள் தான் என்ன செய்ய முடியும்? ஆனால் இப்பவும் அவர் எந்த சங்கோஜமும் இன்றி கடைக்கு வந்து சாமான் வாங்க்கிப் போவார். :o

பாட்டியள் கனக்க வைச்சாச் சனமும் காசுக்கு எங்கு போறது? :lol:  :lol:

உண்மையில் இப்படி ஒரு சம்பவம் எங்கள் வீட்டிலும் நடந்தது.

2009ம் ஆண்டு அண்ணாவின் மகனது முதலாவது பிறந்தநாளுக்கு இப்படி ஒரு கவர் வந்தது.

அண்ணா,அண்ணி,நான் மூன்று பேருமாக வந்த பரிசுகளைப் பார்த்து எழுதிக்கொண்டிருக்கும் போது என் கைக்கு பெயர் எழுதாத வெற்று உறை வந்தது உடைத்துப் பார்த்தால் எதுவுமே இல்லை. பிறகு DVD வந்ததும், வீடியோ போட்டுப் பார்த்தது யார் அந்த ஆள் என்று. நன்கு தெரிந்த ஆள் தான் என்ன செய்ய முடியும்? ஆனால் இப்பவும் அவர் எந்த சங்கோஜமும் இன்றி கடைக்கு வந்து சாமான் வாங்க்கிப் போவார். :o

அவருக்கு விற்கின்ற சாமாங்களில் ஐஞ்சு பத்து கூட்டி வித்து கணக்கை நேராக்க வேண்டியதுதானே ஜீவா :icon_mrgreen:

வணக்கம்.நான் வாழும் இடத்தில் ஒரு சம்பவம் .விசையம் என்னவென்டால் ஒரு பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு கொடுக்கப்பட்ட கவரில் காசு வைக்காமல் கொடுக்கப்பட்டிருப்பது கண்டு பிடிக்கப்ட்டது .சம்பந்தப்பட்டவர்கள் கவணக்குறைவால் செய்திருக்க கூடிய சாத்தியங்கள் தான் 99 வீதம் உண்டு.சரி அதை விடுவம்.ஒரு உதாரனத்துக்கு நீங்கள் அந்த விழாவை நடத்தியவர் ஆகின் என்ன செய்திருப்பீர்கள்.

அன்பு உறவுகளின் கருத்துக்களை எதிர் பாக்கிறேன். :)

கவராவது தந்திச்சினமே, அடுத்த பார்ட்டிக்கு அதை உபயோகப்படுத்தவும்

குத்துவிளக்கில் கணக்குப்பார்த்தால் இப்படிதான் மனமுடைச்சு போக வேண்டி வரும் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

யார் அந்த கவர் தந்ததென்று தெரிந்தால் நேரடியாகவே அவரிடம் விடயத்தை சொல்வது தான் நன்று.அவர் தவறுதலாக செய்திருந்தால் இனிமேலும் கவனமாக இருப்பார்.வேண்டுமென்று செய்திருந்தால் அட பிடிபட்டுவிட்டமே என்னும் அவமானத்தால் இனிமேலும் செய்யாமல் இருப்பார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்கள் வைத்த அனைவருக்கும் நன்றி.இது எனக்கு நடக்கவில்லை.இதில் நான் அறிய நினைத்தது என்னவென்டால் அதை போய் கேட்பதோ  அல்லது அப்படியே விட்டு விடுவதோ சிறந்தது என்று அறியத்தான்.ஆனால் சம்பந்தப்பட்ட விழா உரிமையாளர் :lol: தொலை பேசியில் கேட்டாராம்.பின்பு மொய் கொடுக்க மறந்தவர் வீட்டடை கொண்டு போய் கொடுத்தாராம். :D

  • கருத்துக்கள உறவுகள்

இதில என்ன செய்யக் கிடக்குது. இதுக்காக கொலையா செய்ய முடியும். தர விருப்பமில்லையாக்கும் என்றிட்டு அடுத்த அலுவலைப் பார்க்க வேண்டியதுதான். :lol:

இப்படியான வழிகளில் பணம் சம்பாதிப்பதை நிறுத்திப் பணத்தை உழைத்துச் சம்பாதியுங்கள் என்ற அறிவுறுத்தலாக ஏன் இருக்கக்கூடாது!

என் பெயரும் ஒரு சிறு வாழ்த்தும் எழுதாமல் இதுவரை நான் கவர் கொடுத்ததில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்.நான் வாழும் இடத்தில் ஒரு சம்பவம் .விசையம் என்னவென்டால் ஒரு பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு கொடுக்கப்பட்ட கவரில் காசு வைக்காமல் கொடுக்கப்பட்டிருப்பது கண்டு பிடிக்கப்ட்டது .சம்பந்தப்பட்டவர்கள் கவணக்குறைவால் செய்திருக்க கூடிய சாத்தியங்கள் தான் 99 வீதம் உண்டு.சரி அதை விடுவம்.ஒரு உதாரனத்துக்கு நீங்கள் அந்த விழாவை நடத்தியவர் ஆகின் என்ன செய்திருப்பீர்கள்.

அன்பு உறவுகளின் கருத்துக்களை எதிர் பாக்கிறேன். :)

இது இப்ப ஒரு பெரிய பிரச்சனையாப் போட்டுது! :o

ஊரில் இருக்கும்போது, திடீரென ஏற்படும் செலவுகளைச் சமாளிப்பதற்காக, ஒரு உதவியாக, ஒரு நல்ல நோக்கத்துக்காக, இது ஆரம்பிக்கப் பட்டிருக்கலாம் என நினைக்கிறேன்!

இப்போதெல்லாம், ஒரு அந்தஸ்தின் அளவையாய், இது உருவெடுத்து விட்டது! :o

இதுவே, இப்படியான விழாக்கள், பெரிதாக உருப்பெருத்து வருவதையும், மறைமுகமாக, ஊக்குவிக்கிறது!

இறுதியில், இதுவும் ஒரு Catch 22  ஆகத் தான் முடியும்!

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்.நான் வாழும் இடத்தில் ஒரு சம்பவம் .விசையம் என்னவென்டால் ஒரு பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு கொடுக்கப்பட்ட கவரில் காசு வைக்காமல் கொடுக்கப்பட்டிருப்பது கண்டு பிடிக்கப்ட்டது .சம்பந்தப்பட்டவர்கள் கவணக்குறைவால் செய்திருக்க கூடிய சாத்தியங்கள் தான் 99 வீதம் உண்டு.சரி அதை விடுவம்.ஒரு உதாரனத்துக்கு நீங்கள் அந்த விழாவை நடத்தியவர் ஆகின் என்ன செய்திருப்பீர்கள்.

அன்பு உறவுகளின் கருத்துக்களை எதிர் பாக்கிறேன். :)

உண்மையில் இதுவும் ஒரு புலம் பெயர் அவலமாகத்தான் பார்க்கின்றேன்

இதற்கு பதில் எழுதணும் என்றால் அதற்கு முதலில் பல கேள்விகள் இருக்கு

1விழாவைச்செய்தவர்

1- பணத்துக்காக செய்தாரா  

2- உறவுகளை அழைத்து மகிழ்வுக்காக செய்தாரா?

3- தான் கொடுத்தவற்றை வசூலிப்பதற்காகச்செய்தாரா?

4-தான் கொடுக்கும் சாப்பாட்டுக்காவது வந்தவர் ஏதாவது தரணும் என்று எதிர்பார்த்தாரா???

5- ????????????

6-?????????????

இப்படி கன கேள்விகள் இருக்கு

இதை வைத்துத்தான் வெறும் கவர் கொடுத்தவரின் மனநிலையை  அல்லது செயலை அல்லது ஆற்றாமையை  நாம் பேசமுடியும்???

உதாரணமாக வந்தவர் ஆகக்குறைந்தது

தான் சாப்பிட்ட சாப்பாட்டுக்காவது  பணம் வைத்திருக்கணும் என்று விழாவை ஏற்பாடு செய்தவர்  நினைப்பாரே ஆக இருந்தால் அது சரியே?

ஆனால் அவர்தானே விருந்தாளியாக என்னை அழைத்தார் என  வெறும் கவர் வைத்தவர் கேட்டால்???

எனக்கு இப்படிநிலை  வந்ததில்லை.

காரணம் குடும்பத்தை தவிர  வெளியில் எவரையும் அழைப்பதில்லை.

நண்பர்களிடம் எதையும் எதிர்பார்ப்பதில்லை.

என்னை அழைத்தால் தெரியாதவராக  இருந்தாலும் சாப்பாட்டுக்கான பணத்துடன் சிறுது அதிகம்  வைத்து கொடுத்துவிடுவேன்.

ஒரு புத்தக வெளியீட்டிலும் மேடையில் வந்து வெறும் என்வலப்பை கொடுத்துவிட்டு புத்தகத்தை ஒருவர் வாங்கிக்கொண்டு போய்விட்டார் .பின்னர் அவர் யாரென்று கண்டுபிடித்துவிட்டார்கள் .

அதற்கு அவர் சொன்ன பதில் "புத்தகத்திற்குள் என்ன இருக்கோ அதுதான் என்வலப்பிற்குள்ளும் இருக்கு "

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான வழிகளில் பணம் சம்பாதிப்பதை நிறுத்திப் பணத்தை உழைத்துச் சம்பாதியுங்கள் என்ற அறிவுறுத்தலாக ஏன் இருக்கக்கூடாது!

என் பெயரும் ஒரு சிறு வாழ்த்தும் எழுதாமல் இதுவரை நான் கவர் கொடுத்ததில்லை.

சில ஆடம்பர பார்ட்டிகளில் திரும்பும் பணத்தை விட திரும்பாத பணத்தின் அளவு தான் அதிகம்.

இப்படி மொட்டையா கொடுப்பதிலும்.. நீங்கள் சொன்னது போல செய்பவர்கள் என்றால்.. நாலு வரி எழுதிட்டு கொடுத்தால் சந்தேகம் வராதில்ல. :):lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

விழாக்கள் இப்போது வியாபாரமாகிவிட்டது.. வெள்ளையினத்தவர்கள் இன்னும் ஒரு படி மேலே.. தங்களுக்குத் தேவையான பொருட்களை ஒரு கடையில் தெரிவு செய்து ஒரு பட்டியலாக அனுப்பிவிடுவார்கள்..! அவரவர் அதில் தெரிந்தெடுத்து வாங்கிக் கொடுத்துவிடுவார்கள்..! :D எம்மவர்களும் இப்போது பின்பற்றுவதாக அறியமுடிகிறது..

இங்கே ஆண்டுக்கு ஒரு 15 விழாக்களாவது அழைப்பு வரும். ஒரு விழாவுக்கு 100 fடொலர் படி பார்த்தாலும் 1500 டொலர்கள் துண்டு.. :( இது வரிப்பிடிப்பின் பின் உள்ள தொகை.. ஆகவே வருட வருமானத்தில் 2500 துண்டு.. இதுவும் ஒரு வராக்கடன்தான்.. :o:unsure:

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே ஆண்டுக்கு ஒரு 15 விழாக்களாவது அழைப்பு வரும். ஒரு விழாவுக்கு 100 fடொலர் படி பார்த்தாலும் 1500 டொலர்கள் துண்டு.. :(இது வரிப்பிடிப்பின் பின் உள்ள தொகை.. ஆகவே வருட வருமானத்தில் 2500 துண்டு.. இதுவும் ஒரு வராக்கடன்தான்.. :o:unsure:

ராசா

நல்ல  காசு  வைத்திருப்பீர் என்று நினைக்கின்றேன்

(நாம  இப்படி கணக்கு பாராது போட்டே கந்தறுந்து   போனோம் :( )

  • கருத்துக்கள உறவுகள்

ராசா

நல்ல காசு வைத்திருப்பீர் என்று நினைக்கின்றேன்

(நாம இப்படி கணக்கு பாராது போட்டே கந்தறுந்து போனோம் :( )

காசா?? அதைக்கண்ணால் கண்டு கனகாலம்.. :unsure: மட்டைக்குள்ளை வாறதும் தெரியேல்ல.. போறதும் தெரியேல்ல.. :rolleyes:

நாங்கல்லாம் தொழிலாளிகள்.. :( உங்களைமாதிரி முதலாளிகளா? :D

  • கருத்துக்கள உறவுகள்

காசா?? அதைக்கண்ணால் கண்டு கனகாலம்.. :unsure: மட்டைக்குள்ளை வாறதும் தெரியேல்ல.. போறதும் தெரியேல்ல.. :rolleyes:

நாங்கல்லாம் தொழிலாளிகள்.. :(

உங்களைமாதிரி முதலாளிகளா?

நாங்கல்லாம் தொழிலாளிகள்.. :(

உங்களைமாதிரி முதலாளிகளா

:D

http://www.youtube.com/watch?v=6Nopeqe-lyI

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்கள் வைத்த அனைவருக்கும் நன்றி.இது எனக்கு நடக்கவில்லை.இதில் நான் அறிய நினைத்தது என்னவென்டால் அதை போய் கேட்பதோ  அல்லது அப்படியே விட்டு விடுவதோ சிறந்தது என்று அறியத்தான்.ஆனால் சம்பந்தப்பட்ட விழா உரிமையாளர் :lol: தொலை பேசியில் கேட்டாராம்.பின்பு மொய் கொடுக்க மறந்தவர் வீட்டடை கொண்டு போய் கொடுத்தாராம். :D

விழா உரிமையாளரும்.... லேசுப்பட்ட, ஆளில்லைப் போலகிடக்குது.

தனக்கு வரவேண்டிய... மொய்யை, வாய் விட்டுக் கேட்டுப்போட்டார். :D  :lol:

விழாக்கள் இப்போது வியாபாரமாகிவிட்டது.. வெள்ளையினத்தவர்கள் இன்னும் ஒரு படி மேலே.. தங்களுக்குத் தேவையான பொருட்களை ஒரு கடையில் தெரிவு செய்து ஒரு பட்டியலாக அனுப்பிவிடுவார்கள்..! அவரவர் அதில் தெரிந்தெடுத்து வாங்கிக் கொடுத்துவிடுவார்கள்..! :D எம்மவர்களும் இப்போது பின்பற்றுவதாக அறியமுடிகிறது..

இங்கே ஆண்டுக்கு ஒரு 15 விழாக்களாவது அழைப்பு வரும். ஒரு விழாவுக்கு 100 fடொலர் படி பார்த்தாலும் 1500 டொலர்கள் துண்டு.. :( இது வரிப்பிடிப்பின் பின் உள்ள தொகை.. ஆகவே வருட வருமானத்தில் 2500 துண்டு.. இதுவும் ஒரு வராக்கடன்தான்.. :o:unsure:

என்னை மாதிரி இருந்து விட்டால் பிரச்சனை குறைவு இசை.

கனடாவுக்கு வந்த புதுசில் கலியாண வீடு, பிள்ளைக்கு 31 ஆம் நாள், சாமத்தியச் சடங்கு, வீடு குடி புகுதல் என்று எக்கச்சக்கமாக அழைப்புகள் வந்தன. மிகவும் நெருக்கமான உறவுகளின், நண்பர்களின் வைபவங்கள் தவிர வேறு ஒன்றுக்கும் போவதில்லை என்று உறுதியாக இருந்து போகாமல் விட்டதனால் "இவனுக்கு படிச்ச திமிர்" என்ற மாதிரி முத்திரை குத்தி இப்ப அநேகமானவற்றுக்கு கூப்பிடுவது இல்லை. அத்துடன் எந்த ஒரு சாமத்தியச் சடங்கு நிகழ்வுக்கும் போவதில்லை என்பதாலும் என்னை / என் குடும்பத்தினை கூப்பிடுவதில்லை. ஒரு வருடத்தில் ஆகக் கூடியனது 250 டொலர் தான் இவற்றுக்கு போகும் எனக்கு. Hall எடுத்து செய்யும் பிறந்த தின கொண்டாட்டங்களிலும் அநேகமாக கலந்து கொள்வதில்லை.

ஒரு இரண்டு வருசம் இதை Try பண்ணி பாருங்கள்... திமிர் ஆள் என்று கூப்பிடாமக் விட்டு விடுவினம். இவற்றுக்கு கொடுக்கும் காசுக்கு குடும்பத்துடன் பல இடங்களுக்கு சுற்றுலா போகலாம்.

உண்மைதான்.. ஒரு ஐந்து வருடங்கள் இடையில் பிரச்சினையில்லாமல் ஓடியது .. வேறு ஊரில் இருந்தபடியால்..

முயற்சித்துப் பார்க்கிறேன்..

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான்.. ஒரு ஐந்து வருடங்கள் இடையில் பிரச்சினையில்லாமல் ஓடியது .. வேறு ஊரில் இருந்தபடியால்..

முயற்சித்துப் பார்க்கிறேன்..

எல்லோருக்கும் எல்லாம் சரிப்பட்டு வராது ராசாக்கள் :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அனைவரின் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.இப்ப பாக்கும் போது பல இடத்தில இப்படி சம்பவங்கள் தெரிந்தோ அல்லது தெரியாமலோ நடந்திருக்கு போல :rolleyes: நான் அறிய நினைத்தது என்ன என்றால் வெறும் கவர் கொடுத்தருக்கு(அவர் தன் பெயர் எழுத மறக்க வில்லை)phone பண்ணி பணத்தை வசூலிப்பது :D நாகரீகமா என்றுஅறிவதற்கே.ஆனால் கிணறு வெட்ட பூதம் கிழம்பிய மாதிரி பல இடத்தில பல சம்பவங்கள் நடந்துருக்குது என்றி பாக்க சுவாரிசியமாக உள்ளது.மற்றும் ஒரு கொசுறு தகவல்.ஏற்கனவே விழா உரிமையாளுருக்கு கடன்(கொடுக்குமதி இல்ல) என்றால் விழாவுக்கு போகத்தேவை இல்லையாம் :lol: )இந்த லட்சனத்தில எத்தினை பேர் அந்த பிள்ளையை வாழ்த்த போகிறர்கள். :unsure:

  • கருத்துக்கள உறவுகள்
அவர் என்வலப்பில் பெயரை எழுதிய படியால் 1)அவர் உண்மையில் பணம் வைக்க மறந்திருக்க வேண்டும் அல்லது விழாவை செய்தவருக்கு ஏதாவது பாடம் புகட்ட அப்படி செய்திருக்க வேண்டும்.
 
அவர் உண்மையில் மறந்து தான் காசு வைக்கவில்லை என்று நான் நினைத்தால் அவரை எங்காலும் தனியாய் காணும் போது சொல்லுவேன்...இது அந்த காசை திரும்பி வாங்க அல்ல இந்த பிழையை அவர் இன்னொருத்தருக்கு செய்து அவர் மிகப் பெரிய அவமானப் படுவதை விட எச்சரிப்பதன் மூலம் அவரைக் காப்பாற்றலாம் :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.