Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பாடகர் பி பீ ஸ்ரீனிவாஸ் காலமானார்

Featured Replies

பழம்பெரும் திரைப்பட பின்னணிப் பாடகர் பி.பீ.ஸ்ரீனிவாஸ் அவர்கள் சென்னையில் காலமானார்.

தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு உட்பட பல இந்திய மொழிகளில் அவர் மிகவும் இனிமையான பாடல்களை பாடியிருக்கின்றார்.

அதேவேளை, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி, உருது, ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருதம் ஆகிய 8 மொழிகளில் பாண்டித்தியம் பெற்றவராகவும் அவர் திகழ்ந்தார்.

தமிழ் திரைப்படங்களில் இவர் பாடிய பாடல்கள் காலத்தால் அழியாதவையாக இன்றும் திகழ்கின்றன.

1930 ஆம் ஆண்டு ஆந்திராவில் காக்கிநாடாவில் இவர் பிறந்தார். அவரது இயற்பெயர் பிரதிவாதி பயங்கரா ஸ்ரீனிவாஸ் ஆகும்.

 

http://www.bbc.co.uk/tamil/arts_and_culture/2013/04/130414_srivasdied.shtml

இவர் பாடிய,

பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாய்,

ரோஜா மலரே ராஜ குமாரி,

அவள் பறந்து போனாளே,

மயக்கமா கலக்கமா,

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்,

நிலவே என்னிடம் நெருங்காதே,

போக போக தெரியும்,

அனுபவம் புதுமை,

உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா,

 

போன்ற பாடல்கள் மிகப்பிரபலம். சினிமாவில் இவரது கலைச்சேவையை பாராட்டி தமிழக அரசு கலைமாமணி விருது கொடுத்து பாராட்டியது.

 

குடும்பத்தார்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் ..

  • கருத்துக்கள உறவுகள்

அற்புதமான குரல்வளம்.. சங்கீதம் முறைப்படி பயிலாதவர் எனக் கேள்விப்பட்டுள்ளேன்..! அவரது ஆன்மா அமைதிபெறட்டும்..!

 

அவரது இழப்பால் துயருறும் உறவினர், நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்..!

 

திருத்திய காரணம்: எழுத்துப்பிழை திருத்தப்பட்டது.

Edited by இசைக்கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

 pbs.jpg

 

http://www.youtube.com/watch?v=PFO5EbeDm5I

 

அருமையான பாடல்களைத் தந்த, இனிமையான குரலுக்கு சொந்தக்காரர் P.B. ஸ்ரீநிவாஸ்.
அன்னாரின் ஆத்மசாந்திக்கு பிரார்த்திக்கின்றேன்.
 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

தன் வளமான குரலால் மிக அருமையான பாடல்களைத் தந்தவர்...இன்றும் இரவில் தூங்கப் போகுமுன் இவரின் பாடல்களைக் கேட்பதுண்டு...

 

"எங்க வீட்டுப் பெண்" படத்தில் இவர் பாடிய

 

"சிரிப்பு பாதி அழுகை பாதி...
சேர்ந்ததல்லவோ மனித ஜாதி...

 

பசித்த வயிற்றில் உணவு தெய்வம்
பாலைவனத்தில் தண்ணீர் தெய்வம்
கொட்டும் மழையில் கூரை தெய்வம்
கோடை வெயிலின் நிழலே தெய்வம்
...!"

.....
 

இன்றும் மனதைவிட்டு அகலாத பாடல்!

 

காலத்தால் மறையாத பாடல்களை அளித்த இக்கலைஞனின் மறைவுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்..!

 

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=20207

 

 

நேற்று எதுவும் அறியாமலே இந்த தளத்தில் எனது நேரத்தை செலவிட்டிருந்தேன்.

 

 

பல தென்னக மொழிகளில் பாடி பல ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்ட அற்புத கலைமாமணி! 

 

ஆத்மா சாந்தியடையட்டும்.

 

 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குப் பிடித்த பாடல்களுள் ஒன்று.. பாதிப் பாடலில் இருந்து ஆரம்பிக்கும் இவரது மந்திரக்குரல்..!

 

http://www.youtube.com/watch?v=IvKOzk3wKLI#t=1m42s

 

அருமையான பாடகர். அன்னாரின் ஆத்மா சாந்தியடைக.

 

  • கருத்துக்கள உறவுகள்
அவரின் பாடல்கள் மனதை விட்டு ஆகலாதவை அதில் இதுவும் ஒன்று 
 
காலங்களில் அவள் வசந்தம் 
கலைகளிலே அவள் ஓவியம் 
மாதங்களில் அவள் மார்கழி 
மலர்களிலே அவள் மல்லிகை ....
 

http://download.tamiltunes.com/songs/Hits/P.b._srinivas/01-kaalangalil_.mp3

குடும்பத்தார்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் ..

 



அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகின்றேன். 

 

  • கருத்துக்கள உறவுகள்

அன்னாருக்கு எனது இறுதி வணக்கங்கள்!

 

ஒரு மேடையில் பாடகர் S. P, பாலசுப்பிரமணியம் அவர்கள், P. B. ஸ்ரீநிவாஸ் அவர்களைப் பார்த்துத்தான் தானும் ஒரு பாடகராக விரும்பியதாகத் தெரிவித்திருந்தார்.

 

 

 

அவரின் பாடல்களில் என்னை மிகவும் கவர்ந்த பாடல் இது:

http://www.youtube.com/watch?v=qBFcwwabI3s

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=69959&hl=%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87

 

  • கருத்துக்கள உறவுகள்
சிறினிவாஸ் பாடல்கள் காலத்தால் அழியாதவை. அன்னாரின் இழப்பு இசை பிரியர்களுக்கு பேர் இழப்பாகும்.அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.
 
அவரின் பல பாடல்கள் பிடித்து இருந்தாலும் சில பாடல்கள் இங்கு...
 
 
 

ஒரு இசைத் துளி பெருவெள்ளத்தில் கலந்து விட்டது.

ஒரு துளி ஓசை ஓங்காரத்துள் தன்னை சங்கமிக்க விட்டு விட்டது,

காலப் பெருவெளியில் கலந்து போய்விட்டார் இசை வாசம் செய்த சக்கரவர்த்தி.

  • கருத்துக்கள உறவுகள்

காலத்தால் அழியாத பாடல்களைத் தந்த பாடல்களைத் தந்த பி பீ ஸ்ரீனிவாஸ் அவர்களின் மறைவு பெரிய இழப்பு. அவர் குடும்பத்தாருக்கும், உறவினர், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.

சவாலான தருணங்கள் வரும்போது எல்லாம் அவரது குரலில் ஒலித்த "தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா" என்ற பாட்டுத்தான் நினைவுக்கு வரும்.

ஆயிரம் தரமாவது "தோல்வி நிலையென நினைத்தால்" கேட்டிருப்பேன். இன்று தான் தெரியும் அந்தப்பாடலுக்கு உணர்வைக் கொடுத்த குரல் யாரென்று. (நன்றி மல்லை.)
 
அவர் ஆத்மா சாந்தியடையட்டும்.
  • கருத்துக்கள உறவுகள்

அன்றைய தலைமுறையை மட்டும் அல்லாமல் இன்றைய தலைமுறையையும் தன்னுடைய குரலாலும் பாடல்களாலும் கவர்ந்தவர்....

நான் வானொலியில் செய்த என்றோ கேட்டவை என்றும் இனியவை நிகழ்ச்சியில் அடிக்கடி ஒலித்த குரல்.....

தான் பாடிய பாடல்களால் தலைமுடிகள் பல கடந்தும் வாழ்ந்து கொண்டே இருப்பார்....

RIP

எனது முதல் தெரிவு என்றும் இவர்தான்.இவர் பாடல்களுடன் தான் என் இளமை பலவருடங்கள் கழிந்தது .(ஜெமினி ,முத்துராமனுக்கு தான் அதிகம் பாடுவார் )

அன்னாருக்கு எனது அஞ்சலிகள் .

நிலவே என்னிடம் நெருங்காதே என்றும் மறக்கமுடியாத பாடல்

  • கருத்துக்கள உறவுகள்

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 14,2013,16:25 IST

மாற்றம் செய்த நாள் : ஏப்ரல் 14,2013,19:19 IST

கருத்துகள் (16) கருத்தை பதிவு செய்ய

சென்னை: ஏறக்குறைய 50 ஆண்டு காலம் தமிழர்களின் நெஞ்ங்களில் குளிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக தனது இனிய குரலால் பல லட்சம் ரசிகர்களை தன் வசப்படுத்திய தமிழ் திரைப்பட பின்னணி பாடகர் பி.பி., ஸ்ரீனிவாஸ் இன்று காலமானார். இவருக்கு வயது ( 82 ).

காலங்களில் அவள் வசந்தம், அவள் பறந்து போன‌ாளே, ரோஜா மலரே ராஜ குமாரி, நிலவே என்னிடம் மயங்காதே , நினைப்பதெல்லாம் நடந்து விட்டால், தோல்வி நிலையென நினைத்தால் (ஊமை விழிகள் ) உள்ளிட்ட பிரபல பாடல்கள் என்றும் மறக்க முடியாதவைகளில் சில, இவர் மறைந்தாலும் இவரின் இனிய குரல் என்றும் மக்கள் மனதை தாலாட்டும்.

"பாசமலர்"

ஆந்திர மாநிலம், பத்தளபொடியில் 1930ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி பனிந்திர சுவாமி-சேஷா கிரியம்மா தம்பதிகளின் மகனாக பிறந்தவர் ஸ்ரீனிவாஸ். பி.காம்., பட்டதாரியான இவர் முறைப்படி கர்நாடக சங்கீதம் பயின்று சினிமா துறைக்கு வந்தவர். 1952ம் ஆண்டு ஸ்ரீனிவாஸ் சினிமாவில் பின்னணி பாடகராக அறிமுகமானார். முதல்படம் இந்தி படமாக அமைந்தது. தமிழில் ஜாதகம் என்ற படத்தில் சிந்தனை என் செல்வமே என்ற பாடலை பாடினார். "பாசமலர்" படத்தில் வந்த "யார் யார் யார் இவர் யாரோ..." , அதன்பின் "பாவ மன்னிப்பில்" - இடம்பெற்ற "காலங்களில் அவள் வசந்தம்... படப்பாடல் அவரை பிரபலமாக்கியது. தொடர்ந்து சிவாஜி, எம்.ஜி.ஆர்., ஜெமினி போன்ற தமிழ் திரையுலகின் ஜாம்பவான்களின் படங்களுக்கு பாடல்களில் பாடியுள்ளார்.

பிரபல பின்னணி பாடகர்கள் சுசீலா, ஜானகி, பானுமதி, எல்.ஆர்.ஈஸ்வரி, லதா மங்கேஸ்கர் போன்றவர்களுடன் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 12 மொழிகளிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். பாடகராக மட்டுமல்லாமல் நிறைய கஸல்களையும் எழுதியுள்ளார்.

காதல் மன்னன் :

தமிழில் காதல் மன்னன் என்று புகழப்படும் ஜெமினி கணேசனுக்கும், கன்னட நடிகர் ராஜகுமாருக்கும் தான் அதிக பாடல்களை பாடி ரசிகர்களை கவர்ந்தார். இவர் பாடிய, பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாய், ரோஜா மலரே ராஜ குமாரி, அவள் பறந்து போனாலே, மயக்கமா கலக்கமா, நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால், நிலவே என்னிடம் நெருங்காதே, போக போக தெரியும், அனுபவம் புதுமை, உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா, போன்ற பாடல்கள் மிகப்பிரபலம். சினிமாவில் இவரது கலைச்சேவையை பாராட்டி தமிழக அரசு கலைமாமணி விருது கொடுத்து பாராட்டியது. இவர் மறைந்தாலும் இவரது குரல் எப்போதும் ஒலிக்கும் , இனிக்கும்.

தமிழ் சினிமாவில் பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடிய காலத்தால் அழியாத பாடல்கள் வருமாறு...

01. காலங்களில் அவள் வசந்தம் - பாவமன்னிப்பு

02. பொதிகை மலை உச்சியிலே - திருவிளையாடல்

03. ஒன்று சேர்ந்த அன்று மாறுமா - மக்களை பெற்ற மகராசி

04. மனிதன் என்பவன் தெய்வமாகலாம் - சுமைதாங்கி

05. மதுரா நகரில் தமிழ் சங்கம் - பார் மகளே பார்

06. தென்னங்கீற்று ஊஞ்சலிலே - பாதை தெரியுது பார்

07. சின்ன சின்ன கண்ணனுக்கு - வாழ்க்கை படகு

08. காத்திருந்‌த கண்களே - மோட்டார் சுந்தரம் பிள்ளை

09. காற்றுவெளியிடை கண்ணம்மா - கப்பலோட்டிய தமிழன்

10. கண்படுமே கண்படுமே - காத்திருந்த கண்கள்

11. ஒரே ‌கேள்வி ஒரே கேள்வி எந்தன் நெஞ்சிலே - பனித்திரை

12. நிலவே என்னிடம் நெருங்காதே - ராமு

13. இன்பம் பொங்கும் வெண்ணிலா - வீரபாண்டிய கட்டபொம்மன்

14. கண்ணாலே பேசி பேசி கொல்லாதே - அடுத்த வீட்டு பெண்

15. அழகிய மிதிலை நகரிலே - அன்னை

16. ஆண்டுறொன்று போனால் வயதொன்று போகும் - போலீஸ்காரன் மகள்

17. எந்த ஊர் என்றவனே - காட்டுரோஜா

18. என்னருகே நீ இருந்தால் - திருடாதே

19. காதல் நிலவே கண்‌மணி ராதா - ஹலோ மிஸ்டர் ஜமீன்தார்

20. விஸ்வநாதன் வேலை வேண்டும் - காதலிக்க நேரமில்லை

21. அனுபவம் புதுமை - காதலிக்க நேரமில்லை

22. உங்கள் பொன்னான கைகள் புண்ணாகலாமா - காதலிக்க நேரமில்லை

23. கன்னி வேண்டுமா கவிதை வேண்டுமா -பச்சை விளக்கு

24. கண்ணிரண்டு மெல்ல மெல்ல - ஆண்டவன் கட்டளை

25. இரவு முடிந்துவிடும் - அன்பு கரங்கள்

26. மெய்யேந்தும் விழியாட - பூஜைக்கு வந்த மலர்

27. மயக்கமா கலக்கமா - சுமை தாங்கி

28. நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன் - இதயகமலம்

29. நேற்று வரை நீ யாரோ - வாழ்க்கை படகு

30. ஏனோ மனிதன் பிறந்துவிட்டான் - பனித்திரை

31. பார்த்தேன் சிரித்தேன் - வீர அபிமன்யூ

32. உன்னழகை கண்டு கொண்டால் - பூவும் பொட்டும்

33. நெஞ்சம் மறப்பதில்லை - நெஞ்சம் மறப்பதில்லை

34. பால் வண்ணம் பருவம் கொண்டு - பாசம்

35. நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் - நெஞ்சில் ஓர் ஆலயம்

36. நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் - போலீஸ்காரன் மகள்

37. வாழ்ந்து பார்க்க வேண்டும் - சாந்தி

38. உடல் உயிருக்கு காவல் - மணப்பந்தல்

39. ரோஜா மலரே ராஜகுமாரி - வீரத்திருமகன்

40. பொன் ஒன்று கண்டேன் - படித்தால் மட்டும் போதுமா

41. பாட்டெழுதெட்டும் பருவம் - அண்ணாவின் ஆசை

42. ராஜ ராஜ ஸ்ரீ ராஜன் வந்தான் - ஊட்டி வரை உறவு

43. தென்றலே நீ பேசு - கடவுள் அமைத்த மேடை

44. வளர்ந்த கலை மறந்துவிட்டால் - காத்திருந்த கண்கள்

45. யாரோடும் பேசக் கூடாது - ஊட்டி வரை உறவு

46. ஒடிவது போல் இடை இருக்கும் - இதயத்தில் நீ

47. கண்பாடும் பொன் வண்ணமே - சகோத‌ரி

48. இரவின் மடியில் - சரஸா பி.ஏ.

49. எங்கும் துன்பமில்லை - புனர்ஜென்மம்

50. அழகான மலரே - தென்றல் வீசும்

51. இன்ப எல்லை காணும் நேரம் - இவன் அவனே தான்

52. மாலை மயங்கினால் இரவா - இனிக்கும் இளமை

53. அன்பு மனம் - ஆளுக்கொரு வீடு

54. பாடாத பாட்டெல்லாம் பாட - வீர திருமகன்

55. அவள் பறந்து போனாளே - பார் மகளே பார்

56. அத்திக்காய் - பலே பாண்டியா

57. ஆரோடும் மண்ணில் எங்கும் - பழநி

58. நெஞ்சத்தை அள்ளிக் கொஞ்சம் தா தா - காதலிக்க நேரமில்லை

59. தாமரை கன்னங்கள் தேன்மலர் - எதிர்நீச்சல்

60. தோல்வி நிலை என நினைத்தால் - ஊமை விழிகள்

61. ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால் - சாரதா

62. மாம்பழத்து வண்டு - சுமைதாங்கி

63துள்ளித்திரிந்த பெண்- காத்திருந்த கண்கள்

64.பொன் என்பேன் சிறுபூ- போலீஸ்காரன் மகள்

65.பூவறியும் பூங்கொடியே- இதயத்தில் நீ

போன்ற பாடல்கள் மிகப்பிரபலம். கடைசியாக தமிழில், கார்த்தி நடித்த ஆயிரத்தில் ஒருவன் படத்தில் "பெண்மானே பேர் உலகின் பெருமானே..." என்ற பாடலை பாடியிருந்தார்.

Dinamalar

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள். :(

http://youtu.be/67p3536fyrk

 



எனக்கு தெரிய சிவாஜிக்கு சிறிநிவாஸ் பாடிய ஒரே பாடல் இது .

  • கருத்துக்கள உறவுகள்

THAVD_PBS_1_1427914g.jpg

 

22slide5.jpg

 

பி.பி.சீனிவாஸ் அவர்களை சென்னை கதீட்ரல் சாலையிலுள்ள 'உட்லேண்ட்ஸ் டிரைவ் இன்' உணவகத்தில் இருமுறை கண்டிருக்கிறேன். அவரின் பல பாடலுக்கு இசை அமைப்பாளருடான கலந்துரையாடல் சந்திப்பு இந்த உணவகதின் ஒரு பகுதியிலேயே நடைபெற்றதாக அவர் பல பேட்டிகளில் குறிப்பிட்டுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் எப்போதும் நினைத்தவுடன்

நினைவில் வந்து வாய் முணுமுணுக்கும்

 

"நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்" மிகவும் பிடித்த பாடல்

 

ஆழ்ந்த அனுதாபங்கள்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு மிகவும் பிடித்த ஒரு பாடகர் இவராகும்!

 

அன்னாரின் மறைவால் துயருறும், அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

அவரது இழப்பால் துயருறும் உறவினர், நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை: பி.பி.ஸ்ரீனிவாசின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள கவிஞர் வைரமுத்து, ‘‘அரை நூற்றாண்டாக ரசிகர்களின் காதலை வளர்த்த குரல், கண்ணீரை துடைத்த குரல் பாடுவதை நிறுத்திக்கொண்டது'' என்று கூறி உள்ளார்.

பழம் பெரும் பின்னணி பாடகர் பி.பி.ஸ்ரீனிவாசின் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள

இரங்கல் செய்தி:

அரை நூற்றாண்டாக ரசிகர்களின் காதலை வளர்த்த குரல்; கண்ணீரை துடைத்த குரல் இன்று முதல் பாடுவதை நிறுத்திக்கொண்டது. பி.பி.ஸ்ரீனிவாசின் குரல் வித்தியாசமான குரல். மழையில் நனைந்து வரும் காற்றாக சில்லிட்டு பரவும் தேன் குரல். மனதின் சந்து பொந்துகளை சலவை செய்யும் குரல். அதில் காதலின் லயமும் இருக்கும்; சோகத்தின் சுகமும் இருக்கும்.

‘காலங்களில் அவள் வசந்தம்', ‘ரோஜா மலரே ராஜகுமாரி', ‘மவுனமே பார்வையால் ஒரு பாட்டு பாடவேண்டும்' என்று அவர் காதலை பாடும் போது அதில் கண்ணியம் இருக்கும். ‘மயக்கமா கலக்கமா', ‘நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்', ‘கண்களே கண்களே காதல் செய்வதை விட்டு விடுங்கள்' என்று அவர் சோகத்தை பாடும் போது கண்ணுக்கு தெரியாத கண்ணீர் இருக்கும்.

தாய் மொழி வேறாக இருந்தாலும் தமிழை தமிழாக உச்சரித்தவர் அவர். உடல் கடந்த வாழ்க்கை வாழ்கிறவன் மரணத்தை வெல்கிறான். அவர் உடல் மறைந்தாலும் உடலைப்போல் மறையாத பாடல்கள் காலமெல்லாம் காற்றோடு வாழ்ந்து கொண்டு இருக்கும்.

நெஞ்சு வலிக்கிறது என்றாராம், உடனே உயிர் பிரிந்து விட்டதாம். அவர் பாடல்களைப் போலவே அவரது மரணமும் சுகமானது. காலங்களில் அவர் வசந்தம். கலைகளிலே அவர் சங்கீதம். பறவைகளில் அவர் ஆண் குயில். பாடல்களில் அவர் பி.பி.எஸ்.

‘ஆயிரத்தில் ஒருவன்' படத்தில் திரையுலகில் அவர் பாடிய கடைசி பாடலை எழுதியவன் என்கிற முறையில் நான் மேலும் கண் கலங்குகிறேன். அவர் ரசிகர்களின் கண்ணீர் வரிசையில் முதலும் கடைசியுமாய் நான் நிற்கிறேன்.

இவ்வாறு அந்த செய்தியில் வைரமுத்து கூறியுள்ளார்.

Thatstamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.