Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப்புலிகளுக்கு பின்னரான காலமும் – செங்கலடி சம்பவமும்- இரா.துரைரத்தினம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published on April 28, 2013-10:08 am  

chenkalady_c11-150x150.jpgமட்டக்களப்பு பிராந்தியத்தில் பண்பாட்டு விழுமியங்களில் சிறந்து விளங்கும் கிராமங்களில் செங்கலடிக்கு முக்கிய இடம் உண்டு. பாரம்பரிய ஒழுக்க கட்டுப்பாட்டுடன் விளங்கும் படுவான்கரை கிராமங்களை போல எழுவான்கரை கிராமான செங்கலடி பழைமையான தமிழ் கிராமமாகும்.  அந்த கிராமத்தில் தான் இந்த அதிர்ச்சியூட்டும் அதிசயம் நிகழ்ந்திருக்கிறது. அதுவும் செங்கலடியின் பாரம்பரிய குடும்பம் ஒன்றில் தான் இது நடந்திருக்கிறது.

செங்கலடியில் பரம்பரை பணக்காரர்கள் வரிசையில் காலஞ்சென்ற முன்னாள் மாவட்ட சபை தலைவர் சம்பந்தமூர்த்தி, முன்னாள் அமைச்சர் தேவநாயகம், அதிபர் சுந்தரமூர்த்தி ஆகியோரை குறிப்பிடலாம். ஒழுக்கத்தையும் பண்பாட்டையும் வளர்த்த ஓய்வு பெற்ற அதிபர் சுந்தரமூர்த்தியின் குடும்பம் தான் இப்போது தமிழர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியிருக்கிறது.

அதிபர் சுந்தரமூர்த்தியின் ஒரே ஒரு மகளான விப்ராவின் மகள் தான் இந்த உலக சாதனையை செய்திருக்கிறார். தாயையும் தந்தையும் காதலனைக்கொண்டு வெட்டிக்கொலை செய்வித்தது மட்டுமன்றி தந்தையின் கண்களை தோண்டுமாறு கேட்ட விசித்திர குணம் கொண்ட பெண்ணை மட்டக்களப்பு சமூகம் இதுவரை கண்டதில்லை.

இந்த சம்பவம் பற்றி பேசும் பெரும்பாலானவர்கள் ஒரு உண்மையை மட்டும் உணர்ந்து கொள்கிறார்கள். விடுதலைப்புலிகள் இருந்திருந்தால் இப்படி சமூகம் சீரழிந்திருக்காது என்ற உண்மையை பெரும்பாலானவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.
விடுதலைப்புலிகளை முற்றாக அழித்து விட்டோம் என பெருமை பேசுபவர்கள் உருவாக்கியிருக்கும் சமூகத்தின் கண்ணாடியாக செங்கலடி இரட்டை படுகொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தின் கதாநாயகி 16 வயதான தலக்ஷனா செங்கலடி நகரில் விப்ரா பான்சி பலஸ் கடையின் உரிமையாளர் சிவகுரு ரகுவின் இரண்டாவது மகள். ஓய்வு பெற்ற அதிபர் சுந்தரமூர்த்தியின் பேத்தி, 549162_316333655160485_467013454_n1.jpg
அதிபர் சுந்தரமூர்த்தியின் மகள் விப்ரா கிரானை சேர்ந்த ரகுவை காதலித்து திருமணம் முடித்து கொண்டவர்கள். செங்கலடியில் விப்ரா பான்சி பலஸ் கடை மட்டுமல்ல, மேலும் சில கடைகள் இவர்களுக்கு சொந்தமாக உள்ளது. அதனை வாடகைக்கு கொடுத்துள்ளனர். வயல் நிலபுலங்களுக்கு சொந்தக்காரர்.

இவர்களுக்கு 21வயதுடைய வைஷ்னவி 16வயதுடைய தலக்ஷனா என்ற இரு பெண் பிள்ளைகள் உண்டு. தனது இளைய மகள் இப்படி ஒரு சாதனையாளராவர் என பெற்றோர்களான ரகுவும் விப்ராவும் எண்ணியிருக்க மாட்டார்கள்.
உழைப்பு உழைப்பு என பறந்து திரிந்த இவர்களுக்கு மகள் வேறு திசையில் பறந்து கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்து கொள்ள தவறியதன் விளைவு தன் மகளாலேயே கொல்லப்பட்ட பரிதாப சம்பவம் இடம்பெற்றிருக்கிறது. இப்படி பட்ட பிள்ளையை பெற்று வளர்த்ததற்கு உயர்ந்த தண்டனையையும் இந்த பெற்றோர் அனுபவித்து விட்டனர்.

6ஆவது காதலன்
செங்கலடி மத்திய மகாவித்தியாலயத்தில் 11ஆம் ஆண்டில் கல்வி கற்று வந்த 16வயதுடைய தலக்ஷனா என்ற இந்த மாணவியின் காதலன் அதேபாடசாலையில் கல்வி கற்கும் 16வயதுடைய சிவநேசராசா அஜந் என்பது இந்த சம்பவம் பற்றிய செய்திகளின் பின் பலரும் அறிந்த விடயம். ஆனால் அவர் தலக்ஷனாவின் 6வது காதலன். 16வயதுடைய தலக்ஷனா இதுவரை 6பேரை காதலித்துள்ளார்.

பொலிஸார் நடத்திய விசாரணைகளிலும் இவரின் குடும்பத்தவர்களிடமிருந்து பல தகவல்கள் தற்போது கசிந்து வருகிறது. தலக்ஷனா 13வயதிலும் 15வயதிலும் இருமுறை கருத்தரித்து கருக்கலைப்பு செய்துள்ளார்.  காதலித்த 6காதலர்களுடனும் உடலுறவை வைத்துக்கொண்டது மட்டுமன்றி தனது காதலர்களின் நண்பர்களையும் படுக்கை அறை நண்பர்களாக்கியிருந்தார் என்ற தகவல்களும் தற்போது வெளியாகியிருக்கிறது.

தற்போது கொலை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருக்கும் அஜிந் என்பவரின் நண்பர்களான புவனேந்திரன் சுமன் மற்றும் குமாரசிங்கம் நிலக்சன் ஆகியோரும் தலக்ஷனாவின் படுக்கை அறைவரை சென்றுவந்தனர் என தற்போது விசாரணைகளில் தெரியவந்திருக்கிறது.

தாயும் தந்தையும் காலையில் 7மணிக்கு கடைக்கு வந்தால் இரவு 8மணிக்கே வீட்டுக்கு செல்வார்கள். இவரின் சகோதரியும் பெரும்பாலும் தாயின் பெற்றோரான ஓய்வு பெற்ற அதிபர் சுந்தரமூர்த்தியின் வீட்டிலேயே அதிகம் இருப்பார்.   இது தலக்ஷனாவின் காதல் களியாட்டங்களுக்கு மிக வசதியாக அமைந்து விட்டது. தன்னுடைய காதலர்களை வீட்டிற்கு அழைத்து உல்லாசமாக இருப்பதற்கு இவரின் குடும்ப சூழ்நிலை மிக இடமளித்துள்ளது.
போதைப்பொருள் பாவனை

14வயதிலிருந்து தலக்ஷனா போதைப்பொருள் பாவிக்க தொடங்கினார் என்றும் அவரின் காதலர்களே இந்த பழக்கத்தை தனக்கு ஊட்டினார்கள் என்றும் அவர் காவல்துறையினருக்கு வழங்கிய வாக்கு மூலத்தில் தெரிவித்திருக்கிறார்.

ஏற்கனவே 5பேரை காதலித்த தலக்ஷனா 6ஆவது நபராக தன்னுடன் கல்வி கற்கும் அஜந் என்பவரை காதலிக்க தொடக்கியதை அறிந்த பெற்றோர் அந்த மாணவனை கண்டித்துள்ளனர். ஒருநாள் தக்ஷிகாவின் தந்தை ரகு தன் மகளின் காதலனான அஜந் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். உனக்கு செய்யிறன் வேலை என கூறிவிட்டு சென்ற அஜந் தன் காதலியுடன் சேர்ந்து போட்ட திட்டம் தான் இந்த இரட்டை படுகொலை.11972_316333791827138_95985582_n-11.jpg

கொலைக்கான திட்டங்கள்
ரகு தம்பதியினரை மர்மமான முறையில் கொலை செய்வதற்கு ஏற்கனவே இவர்கள் திட்டமிட்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது. கடந்த மார்ச் 27 ஆந் திகதி தூக்க மாத்திரையை உட்கொள்ளச்செய்துவிட்டு விப்ராவை தலையணையால் அமுக்கி கொலை செய்த பின்னர் தகப்பனை கிணற்றுக்குள் போட்டு கொலை செய்வதாக திட்டம் ஒன்றை அவர்களது மகள் தக்ஸிகா மேற்கொண்டிருந்தார்.

ரகு தனது மனைவியைக் கொன்றுவிட்டு தான் தற்கொலை செய்துவிட்டார் என தகவல் வெளியாகும் இதன் மூலம் தாம் தப்பிக்கொள்ளலாம். தமது காதல் வாழ்க்கை சிரமமின்றி தொடரும் என இவர்கள் எண்ணியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் அத்திட்டம் வெற்றியளிக்காததால் அவர்களை வெட்டி கொலை செய்வதென காதலர்கள் இருவரும் முடிவு செய்ததாக விசாரணைகளிலிருந்து தெரியவந்திருக்கிறது.

குருவி மற்றும் அயன் போன்ற சினிமா படங்களைப் பார்த்து இந்த கொலைக்கான முன்மாதிரியை அறிந்துகொண்டனர். பாடசாலை வகுப்பறை, ரியுசன் வகுப்பு, தக்ஸிகா வீட்டில் இருவரும் சந்திக்கும் போதும் இக்கொலைக்கான திட்டத்தை வகுத்து கொண்டனர்.

ஏற்கனவே ஏறாவூர் செங்கலடி வைத்தியசாலைகளுக்கு சென்ற இவர்கள் தங்களுக்கு நித்திரை வருவதில்லை என கூறி நித்திரை மாத்திரைகளை வாங்கிக்கொண்டனர். அதனை சாப்பாட்டில் போட்டு அவர்கள் ஆழ்ந்த நித்திரையில் இருக்கும் போது கொலையை இலகுவாக நிறைவேற்றிக்கொள்ள முடியும் என்றும் திட்டமிட்டு கொண்டனர். 547850_316333625160488_754473710_n1-224x

ஏப்ரல் 7ஆம் திகதி ரகு தம்பதிகள் சித்திரை புதுவருடத்திற்காக தங்கள் இரு மகள்களையும் அழைத்து கொண்டு மட்டக்களப்பு நகருக்கு புது உடுப்பு வாங்குவதற்கு சென்றனர். அவர்களுடன் சென்ற இளைய மகளான தக்ஷிகாவுக்கு உடுப்பு எடுப்பதை விட தாயையும் தந்தையும் கொலை செய்யும் திட்டம் பற்றியே சிந்தித்து கொண்டிருந்தார்.

தன் 6ஆவது காதலன் அஜந்திற்கு எஸ்.எம்.எஸ் அனுப்பினார். குறிப்பிட்ட யன்னலின் உள்புறத்தில் வீட்டு திறப்பு இருக்கிறது. அதை எடுத்து வீட்டை திறந்து சமைத்து வைத்திருக்கும் கறியில் அரைத்து வைத்திருக்கும் தூக்கமாத்திரையை கலந்து விடுமாறும் செய்தி அனுப்பினார். அதன்படி அங்கு சென்ற அஜந் மீன்கறியில் தூக்கமாத்திரையை கலந்திருந்தார்.

பெற்றோரை கொலை செய்வதற்காக நித்திரை இன்றி விழித்திருந்த மகள்

தக்ஷிகா கைத்தொலைபேசிக்கான பல சிம்களை பாவித்து வந்தார். தன்னுடைய காதலுடன் ஒரு கைத்தொலைபேசியிலும், வேறு ஆண் நண்பர்களுடன் வேறு தொலைபேசிகளிலும் தொடர்புகளை பேணி வந்தார்.
அன்றிரவு 7 மணிக்குப் பின்னர் வீடு ரகுவின் குடும்பத்தினர் திரும்பியிருக்கிறார்கள்;. வழமை போல் மகிழ்ச்சியுடன் காணப்பட்டார்கள். ஆனால் தங்களின் இளைய மகள் காதலனுடன் சேர்ந்து தங்களுக்கு எதிராக செய்திருந்த சூழ்ச்சிணை அறிந்திருக்க வில்லை.

சம்பவ தினம் இரவு ரகுவின் மூத்த மகள் வைஷ்னவி வழக்கம் போல ஓய்வு பெற்ற அதிபர் சுந்தரமூர்த்தியின் வீட்டிற்குச் தூங்க சென்றாள். தாய் விப்ரா மூத்த மகளுக்கு இரவு சாப்பாடு எடுத்துச் சென்றிருக்கிறார்;. மூத்த மகள் அதில் ஒரு கவளத்தை வாயில் வைத்து விட்டு’கசக்கிறது அம்மா’ என்று உணவைத் துப்பியுள்;ளார். தாயார் ‘உனக்கு சாப்பிட விருப்பம் இல்லாட்டி இப்படித்தான் சொல்றநீ’என்று கடிந்து கொண்டார். பின்னர் தந்தை ரகுவும் உணவை உண்ட போது ஏதோ ஒரு கசப்பு தன்மை காணப்படுவதை உணர்ந்தார்.

537003_316333638493820_194126511_n1-300xஅன்றிரவு ரகுவும் மனைவியும் வழமை போல்; ஓர் அறையிலும் இளைய மகள் மற்றைய அறையிலும் உறக்கத்திற்குச் சென்று விட்டார்கள்.  இளைய மகள் தலக்ஷனா தன் காதலனுக்கு தகவல் அனுப்பினார். தூக்கமாத்திரை கலந்த கறியை அவர்கள் சாப்பிடவில்லை, எனவே அவர்கள் நன்றாக தூங்கிய பின் எஸ்.எம்.எஸ் அனுப்புகிறேன் வாருங்கள் என தகவல் அனுப்பியிருந்தார்.

நள்ளிரவுக்கு சற்று முன்னதாக தலக்ஷனா தொலைபேசி மூலம் தனது காதலனுடன் தொடர்பு கொண்டு அவர்கள் உறங்கி விட்டார்கள் உடனே வாருங்கள் என தகவல் அனுப்பினார்.  ஏற்கனவே தயார் நிலையில் இருந்த அஜந் மற்றும் அவரின் நண்பர்கள் இருவருமாக கத்திகள், பொல்லு, கையுறை சகிதம் அங்கு சென்றனர்.

மதிலால் ஏறிக்குதித்து வளவிற்குள் சென்ற இந்த மூன்றுபேரையும் கண்ட வீட்டு நாய் குரைத்துள்ளது. அதனை கட்டுப்படுத்தி விட்டு கதவை திறந்து வீட்டிற்குள் கொலையாளிகளை தலக்ஷனா அழைத்து வந்தார்.

கழுத்தை அறுத்து கண்ணை தோண்டிய கொலையாளிகள்

தாயும் தந்தையும் உறங்கி கொண்டிருந்த அறையின் கதவுகளையும் திறந்து விட்டதுடன் தலக்ஷனாவே தன்பெற்றோரை கொலை செய்வதற்கு டோச் அடித்து பிடித்து கொண்டிருந்தார். கொலையாளிகள் முதலில் விப்ராவை இனங்கண்டு தாக்கி கழுத்தை அறுத்துள்ளனர். இச்சமயம் அருகில் படுத்திருந்த ரகு எழுந்து கொலையாளிகளுடன் போராடியுள்ளார். கொலையாளியிலொருவர் ரகுவின் வாயை பொத்தியுள்ளார் அந்தநேரம் ரகு கொலையாளியின் கையைக்கடித்து காயப்படுத்தியுள்ளார். கொலையாளிகள் ரகுவை பொல்லால் கடுமையாகத் தாக்கி கழுத்தையும் அறுத்துள்ளார்கள்.

டோச் வெளிச்சம் பிடித்த மகள்chenkalady-murder2.jpg
ரகுவின் கண்களை தோண்டுமாறு டோச் லைற் பிடித்து கொண்டிருந்த மகள் தலக்ஷனா தன் காதலிடம் கூறியிருக்கிறார். உடனே ரகுவின் இரு கண்களையும் அஜந் தோண்டி எடுத்து காதலியிடம் காட்டினார்.  அச்சமயம்; தாக்கும் சத்தம்கேட்டு விப்ராவின் தந்தை சுந்தரமூர்த்தி மகளின் வீட்டிற்கு வந்தபோது படுக்கையறையில் தலக்ஷனா டோச் அடித்து கொண்டிருக்க மூன்றுபேர் ரகுவை பொல்லால் அடிப்பதை அவதானித்தார்.

அதனைக் கண்டதும் அவருக்கு இரத்த அழுத்தம் அதிகரித்துவிட்டது மூச்சுத் திணறல் ஏற்பட்டது. செய்வதறியாது தடுமாறினார் உடனடியாக திரும்பி தனது வீட்டிற்குச் சென்று மருந்து உட்கொண்டுவிட்டு மீணடும் வந்தபோது கொலையாளிகளை பாதுகாப்பாக வீட்டை விட்டு அனுப்பி விட்டு தனது படுக்கை அறைக்கு சென்று விட்டார். அதன் பின்னர் தனது பாட்டன் சுந்தரமூர்த்தி வந்து அழைத்த போது எதுவும் தெரியாதவர் போல கதவை திறந்திருக்கிறார்.

இந்த கொலையை தனது பேத்தி தலக்ஷனாவும் சேர்ந்து தான் செய்தார் என்பதை சுந்தரமூர்த்தி அறிந்திருந்த போதிலும் தனது குடும்ப கௌரவம் போய்விடுமே என அஞ்சி தனக்கு தெரியந்த விடயத்தை வெளியில் சொல்லாது மௌனமாக இருந்துள்ளார். கொலையாளிகளை அடையாளம் கண்டீர்களா என கேட்ட போதும் தனக்கு தெரியாது என தெரிவித்துள்ளார்.  கதவை திறந்து உள்ளே சென்ற போது மகளும் மருமகனும் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை பார்த்தார்.
அயல் வீட்டாரை அழைத்தார் எவருமே வரவில்லை வீட்டின் முன்னால் இருந்த செங்கலடி பிரதேச வைத்திய சாலைக்குச் சென்று நிலைமையைக் கூறினார். அங்கு செங்கலடி சந்தியில் பொலிஸாரிடம் கூறுமாறு ஆலோசனை கூறினர். அதன்பின்னர் பொலிஸார் வந்து பார்வையிடடனர்.;

பல கோணங்களில் இந்த மரணம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டனர். வர்த்தக போட்டி, ஆயுதக்குழுக்கள் என பல சந்தேகங்கள் நிலவின.  எனினும் குடும்ப உறவினர்களில் ஒத்துழைப்பின்றி இக்கொலைகள் செய்திருக்க முடியாது என்ற ஒரேயோரு துரும்பு மாத்திரமே புலனாய்வுத் துறையினருக்கு எஞ்சியிருந்தது. அந்த அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. இராணுவம் மற்றும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரும் மோப்ப நாய்கள் சகிதம் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

கொலையாளிகளின் தடயங்களைத் தேடினார்கள் தடயங்கள் கிடைக்கவில்லை நாய்களை மோப்பம் பிடிக்க விட்டார்கள் அந்த நாய்கள் கொலையாளிகளைத் தேடி ஓடின ஆனாலும் சம்பவ இடத்திலிருந்து 250 மீற்றரைக் கூட தாண்டவில்லை மோப்ப நாய்களால் கூட கொலையாளிகள் சென்ற பாதை மற்றும் மறைந்துள்ள இடத்தை கூட துல்லியமாக அறிய முடியவில்லை. மோப்பநாய்கள் வீட்டை சுற்றி சுற்றிய நின்றன.

எவ்வாறிருப்பினும் பொலிஸார் முதலில் குடும்ப உறுப்பினரர்களது வாக்குமூலங்களைப் பதிவு செய்தனர். இந்நிலையில் ஓரிரு நாட்கள் கடந்த பின்னர் இளய மகளின் காதல் விவகாரம் கசியத் தொடங்கியது. இதையடுத்து சந்தேகப்பட்ட காதலனின் தொலைபேசி அழைப்புகள் கண்கணிக்கப்பட்டன. காதலனை கைது செய்யப்பட்ட போது தலக்ஷனா அதிர்ச்சியடைந்தவராக காணப்பட்டார். விசாரணை செய்த பொலிஸார் அவரை விடுதலை செய்தனர். அப்போது தலக்ஷனா மகிழ்ச்சியாக காணப்பட்டார். அதன் பின்னர் தலக்ஷனா அவரது காதலன் மற்றும் அவர்களின் நண்பர்களின் நடவடிக்கைகளை பொலிஸார் மறைமுகமாக பின் தொடர்ந்தனர்.

அதன் பின்னர் அதன் மூலமாக கித்துள் பிரதேசத்தைச் சேர்ந்த மாணவனொருவன் கைது செய்யப்படார். அதனைத் தொடர்ந்து காதலன் மற்றும் அவரது நண்பரும் கைதுசெய்யப்பட்டனர். பின்னர் தலக்ஷனாவும் கைது செய்யப்பட்டார்.
பொதுமக்களுக்கு ஏற்பட்ட சந்தேகம்chenkalady_c12.jpg

பொலிஸார் இக்கொலையாளிகளை கைது செய்வதற்கு முதல் ரகு தம்பதிகளின் மரண சடங்கிற்கு சென்ற பலரும் இளைய மகள் தலக்ஷனாவின் நடவடிக்கைகள் முகபாவங்களைக் கண்டு அவளின் மீது சந்தேகப்பட்டு கண்புருவங்களைச் சுருக்கிப் பார்த்தனர். ஏதேதோ பேசிக்கொண்டனர்.

மரண விசாரணை நடைபெற்ற போது இக்கொலை பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றே தலக்ஷனா கூறியிருந்தார்.
அவர் சாட்சியமளிக்கும் போது பின்வருமாறு கூறியிருந்தார்.
அக்கா அம்மம்மாவின் வீட்டில் உறங்கச் சென்றார். எங்கள் அம்மா அக்காவுக்கு இரவுச் சாப்பாடு எடுத்துச் சென்றார். அக்கா கொஞ்சம் சாப்பிட்டுப் பார்த்துவிட்டு கறி கசக்கிறது என்றார். அதற்கு அம்மா ‘உனக்கு இதுதான் கத’ என்று சொன்னார். அப்பாவும் கறியைச் சாப்பிட்டுவிட்டு ‘ஓம் கசக்கிறதுதான்’ என்றதும் அக்கறியை வீசிவிட்டோம். அதன் பிறகு அம்மம்மாவின் வீட்டில் சமைத்த ஆட்டிறைச்சி கறியை சாப்பிட்டோம்.

மரண விசாரணையில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் தந்தை பொன்னுத்துரை சுந்தரமூர்த்தி சாட்சியமளிக்கையில்
‘சம்பவ தினம் நள்ளிரவு வேளையில் அடிக்கும் சத்தம் கேட்டது எழுந்து முன்னால் இருந்த மகளின் வீட்டைப் பார்த்தேன். ஆள் அலறும் சத்தமும் வந்தது உடனே குசினி பக்கம் சென்றேன் கதவுகள் மூடிய நிலையிலேயே இருந்தன. யன்னல் ஊடாக படுக்கையறையைப் பார்த்தேன். மருமகனுக்கு ஒருவன் அடித்துக் கொண்டிருந்தான். யன்னலின் சிறிய துவாரத்தினால் அங்கு அடித்துக்கொண்டிருந்த நபரை அடையாளங்காண முடியவில்லை நான் அதிர்த்தியடைந்து செய்வதறியாது அங்குமிங்கும் ஓடினேன். அப்படியிருக்க கதவு மூடும் பொல் தடியொன்று விழும் சத்தம் கேட்டது அதையடுத்து ஒரு நபர் ஓடிச் செல்வதை காண முடிந்தது.

நான் மகளின் வீட்டிற்குச் சென்று தம்பி தம்பி என்று மருமகனைக் கூப்பிட்டேன் எந்த பதிலம் கிடைக்கவில்லை பின்னர் மகள் மகள் என்று கூப்பிடடேன் பதில் எதுவும் இல்லை அப்படியிருக்க அவ்வீட்டில் உறங்கிய பேத்தி எழுந்து வந்து கூப்பிட்டாள். நான் சத்தமிட்டு குசினிப் பக்கக் கதவைத் திறக்கச் சொன்னேன். திறந்து ‘ என்ன அம்மப்பா’ என்று கேட்டாள் ஒன்றுமில்லை ஒன்றுமில்லை என்று கூறிவிட்டு மகளின் படுக்கையறைக்குச் சென்றேன் அங்கு மகளும் மருமகனும் இரத்த வெள்ளத்தில் கிடந்தனர்.

உடனே அக்கம் பக்கத்தவர்களை அழைத்தேன். எவரும் எழுந்துவரவில்லை முன்னால் உள்ள ஆஸ்பித்திரிக்குச் சென்று நிலைமையைக் கூறினேன். அங்கு பொலிஸாருக்கு அறிவிக்கும்படி தெரிவித்தார்கள் ஓடோடிச் சென்று செங்கலடி சந்தியில் கடமையிலிருந்த பொலிஸாரிடம் சம்பவத்தைக் கூறினேன் விரைந்து வந்து பார்த்தார்கள் இவ்வளவுதான் என்னால் கூற முடியும் என்றார்.

அலறல் சத்தம் பக்கத்து வீட்டில் இருந்த சுந்தரமூர்த்திக்கு கேட்ட போதிலும் அதேவீட்டில் படுத்திருந்த தலக்ஷனாவுக்கு கேட்கவில்லையா என்ற சந்தேகம் பொலிஸாருக்கு எழுந்தது. அது மட்டுமல்ல அவர் படுத்திருந்ததாக கூறும் நுழம்பு வலை குழம்பாமல் அப்படியே நாலு பக்கமும் கல் வைத்தவாறு காணப்பட்டது. ஒருவர் கூப்பிட்டு அவசரமாக எழுந்து அதனுள் இருந்து எழுந்து வந்திருந்தால் நுழம்பு வலை விலகி இருக்கும். எனவே தலக்ஷனா அதனுள் படுக்கவில்லை என்பதும் இச்சம்பவம் நடக்கும் வரை அவள் தூங்கவில்லை என்பதையும் விசாரணை நடத்திய பொலிஸார் உணர்ந்து கொண்டனர்.

கொலையாளிகள் அஜந்தின் வீட்டிலிருந்த கத்திகள் மற்றும் கோடரிப்பிடி முகமூடி கையுறை காலுறை தூக்கமாத்திரை மற்றும் மிளகாய்த்தூள் போன்றவற்றை பாடசாலை பையில் எடுத்துக் கொண்டு செங்கலடி பிள்ளையார் கோவில் பகுதியில் மறைத்து வைத்துள்ளனர். அதன் பின்னர் சந்தை வீதியிலுள்ள சுமனின் வீட்டிற்குச் சென்று பிறந்தநாள் வைபவ வீடொன்றில் சோடனை செய்வதற்காக செல்வதாக கூறி அவரையும் அழைத்துக் கொண்டு பிள்ளையார் கோவில் மதில் பகுதியில் பதுங்கியிருந்து தக்ஷனாவுடன் எஸ்எம்எஸ் மூலம் தொடர்பு கொண்டுள்ளனர்.chenkalady_a.jpg

பெற்றோர் உறங்கிவிட்டனர் வரலாம்’ என எஸ்எம்எஸ் வந்தவுடன் இவர்கள் மூவரும் ஆயுதங்களுடன் வீட்டில் முன் மதிலால் பாய்ந்து வளவிற்குள் சென்றதும் தலக்ஷனா முன் வாசல் கதவை திறந்து உள்ளே வரவழைத்து பெற்றோரின படுக்கையறையை திறந்து விட்டுள்ளார்.

கொலையாளிகள் வெளியேறிய பின்னர் கையுறைகள் முகமூடிகள் கொலை சம்பவத்தின் போது இவர்கள் அணிந்திருந்த ஆடைகள் அம்மன்புரம் ஆற்றோரம் பிரம்பு புதருக்குள் புதைக்;கப்பட்டிருந்தன.

இக்கொலை வெறும் காதல் உந்துதலால் மட்டும் காரணம் என்று கூறிவிட முடியாது. ஒழுக்க சீர்கேடுகள் இப்போது வடக்கு கிழக்கில் தமிழ் பிரதேசங்களில் அதிகரித்துள்ளது. தமிழர்களின் இளைய தலைமுறையினரின் வாழ்க்கையை சீரழிக்கும் வகையிலான திட்டமிட்ட நடவடிக்கைகள் சிலரால் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகிறது.

போதைப்பொருள் பாவனை, ஆபாச பட வீடியோக்கள் ஆகியன இப்போது மாணவர்களின் கைகளுக்கு மிக இலகுவாக கிடைக்கின்றன.
இக்குற்றசெயல்களுக்கு பின்னணியில் இருந்தவர்கள்

இந்த கொலைக்கு வெறுமனே இக்கொலையாளிகள் மட்டும் காரணம் அல்ல. அரசசார்பற்ற நிறுவனங்கள், பாடசாலை நிர்வாகங்கள், படைத்துறை புலனாய்வாளர்கள் என பலரின் மறைகரங்கள் காணப்படுகின்றன.
யுத்தம் முடிந்த பின்னர் புற்றீசல் போல பல அரசசார்பற்ற நிறுவனங்கள் தமிழர் பிரதேசங்களில் ஓடித்திரிக்கின்றனர்.

இவர்களில் சிலர் மனித உரிமை என்றும் பேசி வருகின்றனர். தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய மனித உரிமை மீறல்கள் மற்றும் இனப்படுகொலை பற்றி பேச மறுக்கும் இந்த மனித உரிமை அமைப்புக்கள் பாடசாலைகளில் கெட்ட நடத்தைகளிலும் ஒழுக்க சீர்கேடுகளிலும் ஈடுபடும் மாணவர்களை தண்டிக்க கூடாது, அடிக்க கூடாது என பிரசாரம் செய்து வருகின்றனர்.

பெற்றோரோ அல்லது ஆசிரியரோ தண்டித்தால் உடனடியாக தங்களிடம் அல்லது பொலிஸில் முறைப்பாடு செய்யுங்கள் என பிரசாரம் செய்கின்றனர். இதனால் ஏன் இந்த சிக்கல் என பாடசாலை ஆசிரியர்களும் பாடசாலை நிர்வாகமும் குற்றம் செய்யும் மாணவர்களை தண்டிப்பதிலிருந்து ஒதுங்கி இருக்கின்றனர்.

குற்றச்செயல்களை தூண்டிவரும் அரசசார்பற்ற நிறுவனங்கள்
பெற்றோரும் இப்போது பிள்ளைகளை கண்டிக்க அஞ்சுகின்றனர். பொலிஸ் நீதிமன்றம் என அலைய வேண்டி வரும் என அஞ்சும் பெற்றோர் பிள்ளைகள் செய்யும் குற்றங்களை கண்டும் காணாதவர்கள் போல இருக்கின்றனர்.
தங்கள் செய்யும் குற்றங்கள் ஒழுக்க சீர்கேடுகளுக்கு ஆசிரியர்களும் பெற்றோரும் தண்டனை தருவார்கள் என அச்சம் இருந்தால் இத்தகைய குற்றங்கள் ஏற்பட வழியிருக்காது. இந்த கொலையை செய்த மாணவர்கள் ஏற்கனவே சிறு சிறு குற்றங்களை செய்து அதில் வெற்றி பெற்றதன் விளைவே இப்பாரிய குற்றத்தை புரிவதற்கு வழிவகுத்திருக்கிறது என்பதே உளவியலாளர்களின் கருத்தாகும்.

எனவே இது போன்ற பாரிய குற்றங்கள் ஏற்படுவதற்கு மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களும் ஒருவகையில் காரணமாகும்.

அதேபோன்று பாடசாலை நிர்வாகம் மற்றும் கல்விச்சமூகம் இப்போது ஒழுக்க விழுமியங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. வெறுமனே பரீட்சை பெறுபேறுகளுக்கும் தங்களது பதவி உயர்வுகளுக்குமே முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.
அண்மையில் கூட மாணவர்களுக்கு ஒழுக்கத்தை கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்திய ஆசிரியருக்கு மாணவர்களினால் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. திருகோணமலை நகரில் உள்ள பிரபல்யமான ஆண்கள் பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரின் வீட்டின் முன்பாக மண்டை ஒடு வைக்கப்பட்டு எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.  மண்டையோட்டுடன் எச்சரிக்கை செய்யும் வாசகம் அடங்கிய பதாகையொன்றும் வைக்கப்பட்டுள்ளது.

அதில் ‘பாடசாலை மாணவர்களது சிகை அலங்கார விடயங்களில் அடிமைப்படுத்த வேண்டாம்;’ என எழுதப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட மாணவர்கள் என்றும் உரிமை கோரப்பட்டுள்ளது. அதிகாலை கதவைத் திறந்த ஆசிரியர் இதனைக் கண்டு அச்சமடைந்ததுடன் இது தொடர்பில் திருகோணமலை பொலிஸிற்கு தெரியப்படுத்தியுள்ளார்.

மட்டக்களப்பு திருகோணமலை பிரதேசங்களில் மட்டுமல்ல யாழ்ப்பாணம் உட்பட வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழர் பிரதேசங்களில் இன்று போதைப்பொருள் பாவனை, விபச்சார விடுதிகள், மதுபானசாலைகள், ஆபாச வீடியோ படக்காட்சிகள், என ஒழுக்க சீர்கேடுகள் மலிந்துள்ளன.

விடுதலைப்புலிகளிடமிருந்து தமிழ் மக்களை மீட்டு விட்டதாக கூறுவோர் தமிழ் மக்களுக்கு வழங்கிய வெகுமதிகள் இவை.

ஆயிரம் குற்றச்சாட்டுகளை விடுதலைப்புலிகள் மீது வைத்தாலும் அவர்களின் காலத்தில் தமிழர் பிரதேசங்களில் பண்பாடு ஒழுக்கம் சட்டம் ஒழுங்கு என்பன உயர்ந்த நிலையிலேயே இருந்தன. இத்தகைய கொலைகளோ, விபச்சார விடுதிகளோ, போதைப்பொருள் பாவனைகளோ விடுதலைப்புலிகளின் காலத்தில் இருந்ததில்லை.

விடுதலைப்புலிகளுக்கு பின்னர் தமிழரின் வாழ்வியல் இந்த திசையில் தான் செல்கிறது என்பதற்கு  இச்சம்பங்கள் குறிகாட்டிகளாக உள்ளன.

 

 

http://www.thinakkathir.com/?p=49732

 

Edited by nunavilan

  • Replies 51
  • Views 5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
வெளி நாட்டுக் கலாச்சாரத்தை புகுத்தி கொஞ்சம்,கொஞ்சம் தமிழர் என்ட இனத்தையே அழிக்க முடிவு பண்ணிட்டார்கள் போல :(
  • கருத்துக்கள உறவுகள்

 

வெளி நாட்டுக் கலாச்சாரத்தை புகுத்தி கொஞ்சம்,கொஞ்சம் தமிழர் என்ட இனத்தையே அழிக்க முடிவு பண்ணிட்டார்கள் போல :(

 

 

வெளிநாட்டுக் கலாச்சாரம் கண்களைத் தோண்டுமளவிற்கு கொடூரமானதல்ல. இது சிங்களத்தின் வெலிக்கடை கலாச்சாரம். அது வளர்ந்து கிளைவிட்டு செங்கலடிவரையில் நீண்டுவருவதற்கு கருணா என்னும் கயவனின் பங்கையும் கவனத்தில் கொள்ளவேண்டும். இரா. துரைரத்தினம் அவர்கள் தெரிவித்துள்ளதுபோல் புலிகளை அழித்ததற்கு கிடைத்துள்ள மிகுந்த வெகுமதி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

துரை ரத்தினம் சொல்லவது போல புலிகள் இல்லாததால் கலாச்சாரம்  சீர்கெட்டு இருக்கலாம். இன்று இந்த கொலையை செய்தவர்கள்  ஒட்டுக் குழுவோ  இலங்கை படைகளோ அல்ல  குடும்ப உறவினர் ஒருவர். இது குடும்பத்தினர்களின் தவறா . அரசின் தவறா?? புலிகள் கட்டுப் பாட்டு பகுதிகளிலும் குற்றங்கள் கொலைகள் நடந்துதான் இருக்கிறது யாரும் மறுக்க முடியாது இன்று இந்த கொலையாளிகளை கண்டு பிடித்து சட்டத்தின் முன்னால் நிறுத்தியருப்பது இலங்கை காவல்த்துறைதான்.  இங்கு கேள்வி நாங்கள் இன்னமும் புலிகள் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்காது  இலங்கையரசு   ஆட்சியில்தான் இப்படி நடக்கும் என்கிற கடந்து போன காலங்களை வைத்து வியாக்கியானம் மட்டும் பேசிக்கொண்டிருக்காமல். பெற்ற தாய் தந்தையையே  கொன்று தந்தையின் கண்ணை தோண்ட சொல்லும் அளவிற்கு  ஒரு மகள்நடந்திருந்தாள்  அவளும் கடுமையாக  தாய் தந்தையரால் பாதிக்கப் பட்டிருக்கலாம். அந்த வெறுப்பு கொலை செய்யும் அளவிற்கு தூண்டியிருக்கலாம். அல்லது அவரிற்கு  சிறு வயது பாதிப்புக்கள் மன நோயாக வளர்ந்திருக்கலாம். இப்படி யாராவது யோசிப்பார்கள்  அதற்கு  என்ன நடவடிக்கைகள் எடுக்கலாம் அதற்கு இங்கிருந்து  தாயகத்தில் உதவும் அமைப்புக்கள் என்ன செய்யலாமென  ஒரு கருத்தாடலை யாராவது தொடங்குவார்கள் என்று நினைத்து இணைத்திருந்தேன்.ஆனால் படித்த தொகையை விட  கருத்து  வெகு குறைவு  முதல் கருத்தை வைத்த ரதியில் குறை பிடிக்கத்தான் மற்றைய இரண்டு கருத்துக்கள் வந்திருக்கின்றது  எனவே இது போன்ற அவலங்கள் எமக்கு ஒரு செய்திதான் என்பது புரிகிறது. நன்றி வணக்கம்.

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் எது எப்பிடி இருப்பினும் இந்த கொலையில் சிறப்பாக புலனாய்வு செய்த அனைவரும் பாராட்டப்பட வேண்டியவர்களே.... இலங்கை அரசு உரிய பதவி உயர்வுகளை இவர்களுக்கு வழங்க வேண்டும்...,

  • கருத்துக்கள உறவுகள்

ஒருதடவை சாதாரண தப்பு செஞ்சாலே அதை குத்தி குத்தி காட்டி மனதை நோகடிக்கிற எமது பெற்றோர்களும் சகோதர்களும் சுற்றத்தாரும் சமூகமும் இரண்டு தடவைகள் கருகலைப்பிற்கு உள்ளான இந்த பெண்ணை வார்த்தைகளாலும் செயல்களாலும் நோகடித்திருக்க கூடிய வாய்ப்புகள் அதிகம் அதனால் வந்த பழி உணர்ச்சி கொலை வரை போய் இருக்கலாம்.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வடக்கில் பிரபலமான கோகிலாம்பாள் கொலைவழக்கும்......கமலம்கொலைவழக்கும் நினைவிலை வந்து போகுது.

 

  • கருத்துக்கள உறவுகள்

பந்தி எழுத்தாளர்களுக்கு எழுத விசயம் கிடைக்கல்ல என்றால்.. இப்படியான இன்னும் தொடரும்.. துயரங்களை எழுதிறது..!

 

943705_562813277097012_1620581831_n.jpg

 

168881_562813413763665_1298402694_n.jpg

 

942349_562813557096984_1258200675_n.jpg

 

944675_562813887096951_1763308907_n.jpg

 

577613_562814293763577_1467639673_n.jpg

 

944676_562814497096890_857749796_n.jpg

 

முகநூல்..!

பந்தி எழுத்தாளர்களுக்கு எழுத விசயம் கிடைக்கல்ல என்றால்.. இப்படியான இன்னும் தொடரும்.. துயரங்களை எழுதிறது..!

943705_562813277097012_1620581831_n.jpg

168881_562813413763665_1298402694_n.jpg

942349_562813557096984_1258200675_n.jpg

944675_562813887096951_1763308907_n.jpg

577613_562814293763577_1467639673_n.jpg

944676_562814497096890_857749796_n.jpg

முகநூல்..!

நெடுக்கு அண்ணை தமிழ் இன் விடுதலையில் அக்கறை கொண்டவன் மட்டும் தான் உங்களைப் போல் படம் போடுவான், ஆனால் இந்த பத்தி எழுத்தாளர் அதை கிண்டல் அடிப்பவர் ஆச்சே,இதெல்லாம் தமிழ் ஈழ வேட்கையை திசை திருப்பும் யுக்தி.

நாலாந்தரமான எழுத்துக்களை கொண்ட ஒரு கட்டுரை. செக்ஸியான மர்மக் கதை போன்று எழுதப்பட்டிருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

நடந்தத தானே எழுதி இருக்காங்க இதில என்ன நாலாம் தரம் இருக்கு இதில என்ன sexy ஆ இருக்கு? இது ஒரு புலனாய்வு கட்டுரை that's all ...

  • கருத்துக்கள உறவுகள்

பெற்றோர் கூடிய கவனம் செலுத்த வேண்டும்....சுந்தரமூர்த்தி அதிபர் மிகவும் பிரபலமான ஒரு குடும்பத்தை சேர்ந்தவர் அவரது தந்தை பொன்னுத்துரை மிகவும் நல்லவர் சிறுவயதில் அவரை சந்தித்துள்ளேன்,,,,சுந்தரமூர்த்தியர் பாடசாலையில் மிகவும் கடினமான பேர்வழி மாணவர்களுக்கு நல்லாய் அடிபோடுவார்,,

உழைப்பு உழைப்பு என பறந்து திரிந்த இவர்களுக்கு மகள் வேறு திசையில் பறந்து கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்து கொள்ள தவறியதன் விளைவு தன் மகளாலேயே கொல்லப்பட்ட பரிதாப சம்பவம் இடம்பெற்றிருக்கிறது.
இது தான் காரணம்

அந்தப் பெண்ணுக்கு 6 காதலர்கள் இருந்தார்கள் என்றும், அனைவருடனும் அவர் உறவு வைத்திருந்தார் எனவும், இந்த இந்த வயதில் கர்ப்பம் தரித்தார் எனவும் எழுதுவது எந்த வகையான எழுத்து?

கொலை வழக்கு இன்னமும் நீதிமன்றத்திற்கு வரவில்லை. விசாரணை முடியவில்லை. வழக்கு நடக்கவில்லை. ஆனால் குற்றவாளிகள் என்று படத்தோடு எல்லாம் போட்டாகி விட்டது.

அத்தோடு கொலை செய்யப்பட்டவரின் தந்தையின் பெருமை எல்லாம் எழுதி, அவருடைய பேத்தி இப்படி போய்விட்டார் என்கின்ற பத்தம் பசலித்தனமான ஒரு கட்டுரை.

அந்தப் பெண்ணுக்கு 6 காதலர்கள் இருந்தார்கள் என்றும், அனைவருடனும் அவர் உறவு வைத்திருந்தார் எனவும், இந்த இந்த வயதில் கர்ப்பம் தரித்தார் எனவும் எழுதுவது எந்த வகையான எழுத்து?

 

 

மிகவும் தரமற்ற,  நான்காம் தர பத்திரிகைகளில் வரும் பப்பராசி ( paparazzi) எழுத்து வகையைக் கொண்ட கட்டுரை.

 

குற்றம் நிரூபிக்கப்பட முன்னரே முழுக் குற்றத்தினையும் குற்றம் சாட்டப்பட்டவர் மீது சுமத்தி,  வாசகர் மத்தியில் குற்றம் சாட்டப்பட்டவர் மீது முற்றிலும் எதிரான பொது புத்தியினை வளர்க்க செய்கின்ற இது போன்ற கட்டுரைகள் ஒரு போதும் ஒரு சிறந்த கருத்தாடலுக்கு வழி வகைக்காது.

 

 

வடக்கில் பிரபலமான கோகிலாம்பாள் கொலைவழக்கும்......கமலம்கொலைவழக்கும் நினைவிலை வந்து போகுது.

 

 தனி மனித வாழ்க்கை ஒன்றில் ஏற்பட்ட வேதனைகள். :( 

 

அமிர்தலிங்கம் G.G.யிடம் தோற்ற பின்னர் காங்கிரஸ் காரர் அமிர்த்தலிங்கத்துக்கு கோகிலாம்பாள் புகழ் என்று பட்டம் கொடுத்துவிட்டார்கள்.

 

கோகிலாம்பாள் அந்த கதையில் வில்லியாக இருந்தததால் அது அமிர்தலிங்கத்துக்கு பாரிய பின்னடைவு. அதன் பின்னர்தான் அமிர்தலிங்கம் காரை நகர் தேர்தலில் தோற்றார் என்பது நினைவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழில் இப்பிடியான புலானாய்வு கட்டுரைகள் வருவது பாராட்டப்பட வேண்டும் ..... மிக சிறப்பாக எழுதி இருக்கும் மூத்த பத்திரிகையாளரான இவருக்கு எமது மனம் நிறைந்த பாராட்டுகள்.... ஆங்கில பத்திரிகைகளில் இப்பிடியான செய்திகள் கட்டுரைகள் வந்தால் விழுந்தடித்து வாசிப்பவர்கள் இந்த கட்டுரையை தூற்றுவது வேடிக்கை......

போலீஸ் விசாரணைகளில் அந்த பெண் தெரிவித்தவற்றையும் மற்றும் தகவல்களை திரட்டியும் புலனாய்வு செய்து இருப்பது இந்த பத்திரிகையாளனின்.... அனுபவத்தை காட்டி நிற்கின்றது....

தாங்கள் மட்டும் எந்த வித ஆதாரங்களும் தரவுகளும் இன்றி இராணுவ ஆய்வு கட்டுரைகள் என்ற பெயரில் எழுதி தள்ளலாம்.....

அண்மையில் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற ஒரு பாடசாலை விழாவில் தான் சமந்தப்பட்ட போலீஸ் அதிகாரி அந்த பெண்ணிற்கு 5 காதலர்கள் இருந்ததை கூறி இருந்தார்....

Edited by SUNDHAL

  • கருத்துக்கள உறவுகள்

தரமான....investigative report இது..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
இங்கே தேவையில்லாமல் விடுதலைப்புலிகளின் பெயரை இழுத்து இந்த செய்தியை விளம்பரப்படுத்தினார்களே தவிர வேறொன்றுமில்லை.இந்த நான்காம்தர செய்தியை கண்டு அதிர்ந்தவர்கள்  இதுவரைக்கும் யாழ்களத்தில் ஐந்தாம்தர செய்திகளையும்,கருத்தாடல்களையும் சந்திக்கவில்லை போலிருக்கின்றது.
 
உலகில் எதற்கும் காரணம் வைத்திருப்பவர்கள்,எதற்கும் குறை பிடிப்பவர்கள், எதற்கும் பதில் வைத்திருப்பவர்கள்.....இவர்களாத்தான் பிரச்சனையே உருவாகின்றது.

கை கொட்டி சிரிப்பார்கள் ஊரார்........

 

  • கருத்துக்கள உறவுகள்
அந்த சிறுமிக்கு 2 தடவை கருக்கலைப்பு நடந்திருக்கு.இப்பத் தான் 16 வயது அதற்கிடையில் 6 பேருடன் உறவு வைத்திருந்தாக விசாரனையில் பொலீசாருக்குத் தெரிய வந்திருக்குது.அதனை ஒரு பாடசாலை விழாவில் ஒரு பொலீஸ் அதிகாரி மாணவ,மாணவிகளுக்கு சொல்லி இருக்கிறார்.இதை எல்லாம் ஆதாரமாக வைத்துத் தான் இந்த கட்டுரை ஆசிரியர் இந்த கட்டுரைரை எழுதியுள்ளார்.
 
இந்த மாணவி இந்த வயதில் இப்படி சீரழிந்து போனதிற்கு என்ன காரணம்?
பெற்றோர் வீட்டில் இருக்காமல் வேலை,வேலை என்று அலைந்ததா?
அளவுக்கதிகமான வசதி,வாய்ப்பு அந்த சிறுமிக்கு கிடைத்ததா?
பெற்றோரின் கண்டிப்பா?
அவரது நண்பர்கள் சரியில்லையா?
இதை விட வேறு பல காரணங்களும் இருக்கலாம்.
 
என்ன தான் பெற்றோரை கொலை செய்ய வேண்டும் என்று முடிவு செய்தாலும்[அவச‌ர‌ப்பட்டோ/ஆறுதலாய் யோசித்தோ] தகப்பனின் கண்ணை நோண்ட‌ வேண்டும் என்ட‌ கொடூர‌ எண்ணம் ஏன் அந்த சிறுமிக்கு வந்தது?
மூத்த சகோதரி ஏன் எப்பவும் இவர்களோடு படுக்காமல் தாத்தா வீட்டை போய்ப் படுக்கிறவ போன்ற பல கேள்விகள் இருக்குது.
 
இதைப் போல சம்பவங்கள் இனி மேல் எங்கள் இனத்தில் நட‌க்கவே கூடாது.அதை தடுப்பதற்கு நாம் என்ன செய்யலாம் என்பது பற்றி யோசிக்க வேண்டும்.போதைப் பொருள்,ஆபாச‌த் திரைப்பட‌ங்கள் போன்றவற்றை கட்டுப்படுத்த வேண்டும்.இதுவும் ஒரு வித இன அழிப்பு தான்.இது போன்ற சம்பவங்கள் இனி மேல் நட‌க்க்காமல் தடுக்க ஆரோக்கியமான ஆலோச‌னைகளை பங்கிடுங்கள்
  • கருத்துக்கள உறவுகள்

.

போதைப் பொருள்,ஆபாச‌த் திரைப்பட‌ங்கள் போன்றவற்றை கட்டுப்படுத்த வேண்டும்
ஒவ்வொரு குடும்பங்களும் அக்கறை எடுக்கவேண்டும்.....ஒரு இனமோ,ஒரு சமுகமோ இப்படியான பிரச்சனைகளை கையாள்வது என்பது மிகவும் கடினம்...புலத்தில் இல்லாத ஆபாச படங்களா,போதைப்பொருள்களா அங்கு கிடைக்கப்போகுது..... சிறிலங்கா இராணுவத்தில் பணியாற்றிய பிரிகேடியர் தேவநாயகத்தையும் அவரது மனைவியையும் அவர்களது மகன் சுட்டுக்கொலை செய்தவர் . இந்த சம்பவம் கொழும்பில் 15 வருடத்திற்க்கு முதல் நடந்தது...

.

Edited by putthan

 

அந்த சிறுமிக்கு 2 தடவை கருக்கலைப்பு நடந்திருக்கு.இப்பத் தான் 16 வயது அதற்கிடையில் 6 பேருடன் உறவு வைத்திருந்தாக விசாரனையில் பொலீசாருக்குத் தெரிய வந்திருக்குது.அதனை ஒரு பாடசாலை விழாவில் ஒரு பொலீஸ் அதிகாரி மாணவ,மாணவிகளுக்கு சொல்லி இருக்கிறார்.இதை எல்லாம் ஆதாரமாக வைத்துத் தான் இந்த கட்டுரை ஆசிரியர் இந்த கட்டுரைரை எழுதியுள்ளார்.
 
இந்த மாணவி இந்த வயதில் இப்படி சீரழிந்து போனதிற்கு என்ன காரணம்?
பெற்றோர் வீட்டில் இருக்காமல் வேலை,வேலை என்று அலைந்ததா?
அளவுக்கதிகமான வசதி,வாய்ப்பு அந்த சிறுமிக்கு கிடைத்ததா?
பெற்றோரின் கண்டிப்பா?
அவரது நண்பர்கள் சரியில்லையா?
இதை விட வேறு பல காரணங்களும் இருக்கலாம்.
 
என்ன தான் பெற்றோரை கொலை செய்ய வேண்டும் என்று முடிவு செய்தாலும்[அவச‌ர‌ப்பட்டோ/ஆறுதலாய் யோசித்தோ] தகப்பனின் கண்ணை நோண்ட‌ வேண்டும் என்ட‌ கொடூர‌ எண்ணம் ஏன் அந்த சிறுமிக்கு வந்தது?
மூத்த சகோதரி ஏன் எப்பவும் இவர்களோடு படுக்காமல் தாத்தா வீட்டை போய்ப் படுக்கிறவ போன்ற பல கேள்விகள் இருக்குது.
 
இதைப் போல சம்பவங்கள் இனி மேல் எங்கள் இனத்தில் நட‌க்கவே கூடாது.அதை தடுப்பதற்கு நாம் என்ன செய்யலாம் என்பது பற்றி யோசிக்க வேண்டும்.போதைப் பொருள்,ஆபாச‌த் திரைப்பட‌ங்கள் போன்றவற்றை கட்டுப்படுத்த வேண்டும்.இதுவும் ஒரு வித இன அழிப்பு தான்.இது போன்ற சம்பவங்கள் இனி மேல் நட‌க்க்காமல் தடுக்க ஆரோக்கியமான ஆலோச‌னைகளை பங்கிடுங்கள்

 

 

 

முழுக் காரணமும் பெற்றோர்தான். 

 

அந்த பிள்ளை வளர்ந்த சூழ்நிலைதான் பிள்ளையை இந்த நிலைக்கு இட்டு சென்றுள்ளது.

 

பெற்றோர் தங்கள் பிள்ளைகளை கவனமாக வளர்க்க வேண்டும்.

 

சுதந்திரமாக முடிவெடுக்க தக்க வகையில். 

 

அளவுக்கு மீறிய கட்டுப்பாடும் சுதந்திரமும் கையை மீறிப்போகலாம்.

 

இதை கையாள்வது பெற்றோரில் தங்கியிருக்கு.

 

இந்த சம்பவம் பல பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கு இனிமேலாவது ஒரு படிப்பினையாக இருக்கட்டும். 

 

அந்த பிள்ளையை நினைக்க இரக்கமாக இருக்கு, தவறுதலாக வழி நடத்தப்பட்டுவிட்டார்.

 

அவரின் குடும்பத்தின் ஏதிர்காலமே கேள்விக்குறியாகிவிட்டது?

 

என் வாழ்கையில் முழு சுதந்திரத்தையும் என் பெற்றோர் எனக்கு தந்தார்கள், அதனால் பல வாழ்க்கை அனுபவங்களை கற்கக் கூடியதாக இருந்திச்சு.

 

இதைதான் என் மனைவி பிள்ளைகளுக்கு கொடுத்துள்ளேன். 

 

அவர்களின் சுதந்திரத்தில் தலையிடமாட்டேன் நல்ல ஒரு வழிகாட்டியாக கடைசிவரை நண்பனாக பயணிப்பேன்,  அவர்களிடமும் கற்க பல உள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

மேற்குலகில் சிறுவர்களை ஊரில் இருப்பதுபோல் கட்டுப்படுத்த முடியாது.. அதனால் 16 வயதில் கருத்தரிப்பது என்ல்லாம் இங்கே ஒரு பெரிய செய்தி அல்ல.. ஆனால் இங்கேயும் அது வருத்தத்திற்குரிய செய்திதான்.. அரச நிறுவனங்கள், பாடசாலைகள் பாதுகாப்பாக "அன்னியோன்னியமாக" இருங்கள் என்றே வலியுறுத்துகிறார்கள்.. :D அதையும் மீறி கருத்தரிப்பு நிகழ்ந்துவிட்டால் பலவிதமான அரச உதவிகள் கிடைக்க வழியுள்ளது. வீட்டில் இருக்க விருப்பப்படாத சிறார் தனியாக வேறு நியமிக்கப்பட்ட பெற்றோருடன் அரச உதவியுடன் வாழலாம்.

 

ஆனால் தாயகத்தில் அப்படியா? அரச உதவி என்று பார்த்தால் கருக்கலைப்பு மட்டுமே இலவசமாகக் கிடைக்கும். பெற்றோர் துரத்தி விட்டால் வேறு நாதியில்லை. பாலியல் தொழிலில் ஈடுபடவேண்டியதுதான்..

 

ஆக, மேற்கில் அவர்கள் செய்கிறார்களே என்று தாயகத்திலும் செய்ய நினைப்பது அறிவீனம். இந்த விவரங்களைப் பெற்றோர் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுத்து வளர்க்க வேண்டும்.. ஒவ்வொரு சமூகக் கட்டமைப்பும் அந்த நிலத்தில் உள்ள சுற்றமைவுகளுக்கு ஏற்பவே மேற்கொள்ளப்பட்டிருக்கும். அதில் ஒரு பாகத்தைக் கழ்ற்றி எடுத்தாலும் உதிரிபோல் கொட்டிவிடும் அல்லவா..

  • கருத்துக்கள உறவுகள்

 

அந்த சிறுமிக்கு 2 தடவை கருக்கலைப்பு நடந்திருக்கு.இப்பத் தான் 16 வயது அதற்கிடையில் 6 பேருடன் உறவு வைத்திருந்தாக விசாரனையில் பொலீசாருக்குத் தெரிய வந்திருக்குது.அதனை ஒரு பாடசாலை விழாவில் ஒரு பொலீஸ் அதிகாரி மாணவ,மாணவிகளுக்கு சொல்லி இருக்கிறார்.இதை எல்லாம் ஆதாரமாக வைத்துத் தான் இந்த கட்டுரை ஆசிரியர் இந்த கட்டுரைரை எழுதியுள்ளார்.
 
இந்த மாணவி இந்த வயதில் இப்படி சீரழிந்து போனதிற்கு என்ன காரணம்?
பெற்றோர் வீட்டில் இருக்காமல் வேலை,வேலை என்று அலைந்ததா?
அளவுக்கதிகமான வசதி,வாய்ப்பு அந்த சிறுமிக்கு கிடைத்ததா?
பெற்றோரின் கண்டிப்பா?
அவரது நண்பர்கள் சரியில்லையா?
இதை விட வேறு பல காரணங்களும் இருக்கலாம்.
 
என்ன தான் பெற்றோரை கொலை செய்ய வேண்டும் என்று முடிவு செய்தாலும்[அவச‌ர‌ப்பட்டோ/ஆறுதலாய் யோசித்தோ] தகப்பனின் கண்ணை நோண்ட‌ வேண்டும் என்ட‌ கொடூர‌ எண்ணம் ஏன் அந்த சிறுமிக்கு வந்தது?
மூத்த சகோதரி ஏன் எப்பவும் இவர்களோடு படுக்காமல் தாத்தா வீட்டை போய்ப் படுக்கிறவ போன்ற பல கேள்விகள் இருக்குது.
 
இதைப் போல சம்பவங்கள் இனி மேல் எங்கள் இனத்தில் நட‌க்கவே கூடாது.அதை தடுப்பதற்கு நாம் என்ன செய்யலாம் என்பது பற்றி யோசிக்க வேண்டும்.போதைப் பொருள்,ஆபாச‌த் திரைப்பட‌ங்கள் போன்றவற்றை கட்டுப்படுத்த வேண்டும்.இதுவும் ஒரு வித இன அழிப்பு தான்.இது போன்ற சம்பவங்கள் இனி மேல் நட‌க்க்காமல் தடுக்க ஆரோக்கியமான ஆலோச‌னைகளை பங்கிடுங்கள்

 

 

என்ன  ரதி  இது?

இதை யாரிடம் நீங்கள் கேட்கவேண்டும்?

அந்த இடத்தில் ஆட்சியில்  உள்ளவர்களிடம்

அந்த மாகாணத்தை ஆள்பவர்களிடம்

மாநிலத்திலிருந்து மத்திக்கு வேலை செய்பவர்களிடம்.

 

****************

****************

 

நியானி: இரு வரிகள் தணிக்கை

Edited by நியானி

ஏதோ காதல் கொலையாக்கும் என நினைத்தேன்.வாசிக்க அதிர்ச்சியாக இருக்கிறது. :o  :o
 
இங்கு பிழைவிட்டவர் தாய் தான். தன் கடமையைச் சரிவர செய்யவில்லை.
தாய் வேலைக்குப் போனால் பிள்ளை தன் பாட்டில் வளரும். தானே எல்லாவற்றையும் முடிவெடுக்கும். பாலியல் தொடர்புகளை அதுவே முடிவு எடுக்கும். 
 
இங்கே வெள்ளைக்கார வீடுகளில் இதுதானே நடக்கிறது. ஆனால் வெள்ளைக்கார பெற்றோர் பிள்ளைகளின் பாலியல் நடவடிக்கைகளைக் கண்டு கொள்வதில்லை. இதனால் கொலைவரைக்கும் போகாது. 21 வயசு தாண்டியவுடனேயே அவர்கள் பிள்ளைகளுக்கு தனியாய் போய் சீவி என்று நெருக்குவாரங் கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள்.
 
பிள்ளைகள் எப்படி வரவேண்டும் என்று பெற்றோருக்கு ஒரு இலக்கு இருக்க வேண்டும்.அதற்கு அவர்களும் முயற்சி செய்யவேண்டும். இந்தப் பெற்றொருக்கு இலக்கும் இல்லை. முயற்சியும் இல்லை போலிருக்கிறது. அதன் பயனை அனுபவித்து விட்டார்கள். :(
 
இந்தச் சம்பவமே பல பெற்றோருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.