Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழினி ஐக்கிய மக்கள் மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளராக வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட உள்ளார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினி ஐக்கிய மக்கள் மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளராக வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட உள்ளார்
12 மே 2013
 

அரசசார்பு ஊடகம்


thamilini%202013_CI.jpg
 
 
 
விடுதலைப்புலிகளின் அரசியல் துறையின் மகளீர் அணி தலைவியாக இருந்த தமிழினி எதிர்வரும் வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் அவர் ஐக்கிய மக்கள் மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளராக தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் தெரியவருகிறது.

தற்போது வவுனியாவில் உள்ள புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழினி விரைவில் விடுவிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழினி நீதிமன்றத்தினால் சகல குற்றச்சாட்டுகளில் இருந்து விடுதலை செய்யப்பட உள்ளார்.
 
இதற்கு தேவையான நடவடிக்கைகளை விடுதலைப்புலிகளின் முன்னாள் சர்வதேச தலைவரான கே.பி. என்ற குமரன் பத்மநாதன் மேற்கொண்டுள்ளார்.  அதேவேளை வட மாகாண சபைத் தேர்தலில் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் பலர் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/91685/language/ta-IN/article.aspx
 
 

  • Replies 64
  • Views 4.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
அரசின், டக்ளசின் இயலாமையை இது காட்டவில்லையா??
 
மகிந்தவின் சின்னத்தில் பிரபாகரன் போட்டியிட்டாலும் தோல்வி அடைவார் என்பதை மகிந்த விரைவில் உணர்வார்.
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு முன்னாள் போராளி சகல குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவிக்கப்பட்டு அரசியலில் ஈடுபட வைக்கப்பட்டாவது வாழ வைக்கப்பட்டதில் மகிழ்ச்சி தான். அவர் தனது வாழ்க்கையை தக்க வைக்க.. இன்று தேர்தலில் நிற்கிறார். அவ்வளவே. மக்கள் இன்று இவர்களை ஆதரிக்க வேண்டும் என்ற நிலையில் இல்லை.

 

சிறந்த உதாரணம்.. 1989 இல் இந்தியப் படைகளின் பூரண ஒத்துழைப்போடு நடத்தப்பட்ட தேர்தலில்.. மக்களைக் குழப்ப பல பிரமுகர்கள் இந்தியப் படைகளால்.. களமிறக்கப்பட்டனர். இறுதியில்.. சுயேட்சை வென்றது. இந்தியப் படைகள் வெளியேறியது. அந்த வகையில் தமிழ் மக்களுக்கு இது விடயத்தில் சிறப்பு அறிவூட்டல் அவசியமில்லை. அவர்களுக்கு போராளிகள்.. முன்னாள் போராளிகள்.. துரோகிகள்.. ஒட்டுக்குழுக்கள்.. இவற்றிற்கிடையே உள்ள வேறுபாடுகள் நன்கு தெரியும்.

 

மகிந்த முன்னாள் ஜே வி பி உறுப்பினர்களைப் பயன்படுத்தி சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற்றது போல.. இங்கும் செய்யலாம் என்று கனவு காண்கிறார். ஆனால் தமிழ் மக்களுக்கு யார் யாரோடு நின்றால் நம்பிக்கைக்குரியவராக இருப்பார்கள் என்ற தெளிவு உள்ளது..! எதுஎப்படியோ.. இந்தச் சூழ்நிலைகளைப் பயன்படுத்தியாவது முன்னாள் போராளிகள்.. சிங்களத்தின் கொலைக்கரத்தில் இருந்தும் தப்பி.. சகஜ வாழ்வுக்குள் வாறதாவது ஒரு வகையில் நிம்மதி..! :icon_idea::)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

 

அரசின், டக்ளசின் இயலாமையை இது காட்டவில்லையா??
 
மகிந்தவின் சின்னத்தில் பிரபாகரன் போட்டியிட்டாலும் தோல்வி அடைவார் என்பதை மகிந்த விரைவில் உணர்வார்.

 

 

சிங்களவன் இன்னும் உண்மையைத்தரிசிக்க விரும்பவில்லை என்பது தெரிகிறது.

ஆனால் பிரபாகரன் அதை உணர்ந்திருந்தார்.

இது ,இலங்கை எமது நாடு .அங்கு எதுவும் எங்களால் எதுவும் செய்யமுடியும்   என்ற சிங்கள மேலாதிக்கத்தின் வெளிப்பாடு .

 



சிங்களவன் இன்னும் உண்மையைத்தரிசிக்க விரும்பவில்லை என்பது தெரிகிறது.

ஆனால் பிரபாகரன் அதை உணர்ந்திருந்தார்.

போற போக்கில வடமாகாணசபை தேர்தலில தமிழினி ஐக்கிய மக்கள் சுதந்திர சார்பில போட்டியிடுவார் என்றும் தலைவர் அறிந்திருந்தார் என்றும் எழுதுவீங்கள் .

டக்ளஸ் போன்றவர்கள் வெற்றி பெறுவதை விட, முன்னாள் போராளிகள் மாகாணசபைக்கு தெரிவாவது நல்லது. ஆளும் கட்சி வரிசையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, எதிர்க்கட்சி வரிசையில் முன்னாள் போராளிகள்... நன்றாகத்தானே இருக்கிறது!!

ஆனந்த சங்கரி, சித்தார்த்தன், டக்கிளஸ், ஸ்ரீரங்கன், தாமாஸ்டர், K.P. , தமிழினி, சுயேட்சைகள், ..................

  • கருத்துக்கள உறவுகள்

டக்ளஸ் போன்றவர்கள் வெற்றி பெறுவதை விட, முன்னாள் போராளிகள் மாகாணசபைக்கு தெரிவாவது நல்லது. ஆளும் கட்சி வரிசையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, எதிர்க்கட்சி வரிசையில் முன்னாள் போராளிகள்... நன்றாகத்தானே இருக்கிறது!!

 

 

கூத்து பார்ப்பதில் உங்களை விட ரசிகன் இருக்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

டக்ளஸ் போன்றவர்கள் வெற்றி பெறுவதை விட, முன்னாள் போராளிகள் மாகாணசபைக்கு தெரிவாவது நல்லது. ஆளும் கட்சி வரிசையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, எதிர்க்கட்சி வரிசையில் முன்னாள் போராளிகள்... நன்றாகத்தானே இருக்கிறது!!

 

 

நீங்கள் வடிவைப்பார்க்கின்றீர்கள்

அது சரி

எப்போ  இலக்கைப்பார்த்தீர்கள்????? :(

நீங்கள் வடிவைப்பார்க்கின்றீர்கள்

அது சரி

எப்போ  இலக்கைப்பார்த்தீர்கள்????? :(

இலக்கா என்ன கேள்வி அண்ணா 

 

யாரிடம் ....................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்போது இருப்பு ஒன்றுதான் முக்கியம். எனினும் மகிந்தருக்கும் முன்னாள் புலிகளை விட்டால் ஒருவரும் இல்லை என்பதுதான் நிலைமை!

டக்ளஸ் போன்றவர்கள் வெற்றி பெறுவதை விட, முன்னாள் போராளிகள் மாகாணசபைக்கு தெரிவாவது நல்லது. ஆளும் கட்சி வரிசையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, எதிர்க்கட்சி வரிசையில் முன்னாள் போராளிகள்... நன்றாகத்தானே இருக்கிறது!!

சபேசன் இப்படியேதான் அரசியல் விளங்காதால் தொடர்ந்து குழம்புவார். 

 

கூட்டமைப்பு என்பது 60% முன்னனாள் போராளிகள் கட்சியே. அப்படி இருக்க ஏன் சில முன்னனாள் போராளிகள் கூட்டமைப்பை எதிர்த்துக் கேட்டால் ஆதங்கப்பட வேணும்? 

 

எதிர்க்கட்சியில் முன்னனாள் போராளிகள் அல்ல இருக்கப்போவது. தமிழ் சிறைக்கைதிகள்.  சிறை கைதிகளுடன் தேர்தலில் போட்டி போடுவது கூட்டமைப்புக்கு அவமானம். சிறைக கைதிகள் எதிர்க்கட்சியாக வந்தால் அவர்களுடன் சம நிலையில் மாகாண சபையில் இருந்து அரசியல் விவாதிப்பது போராளிகள் கட்சி கூட்டமைப்பையும் சிறைக்கைதிகளாக்குமே தவிர மாற்றமாக போராளிகள் கட்சிக் கூட்டமைப்பு, போராளிகள் கட்சி எதிர்கட்சியுடன் அரசியல் விவாதிப்பதாகாது.

 

சிறைக்கைதிகள் ஜனநாயக நீரோட்டத்தில் இறங்கி கூட்டமைப்புக்கு எதிராகப் போட்டியிட்டால் அதை அவர்கள் வரவேற்ப்பார்கள். தமிழினி விடுவிக்கப்படாத அல்ல, விடுவிக்கப்படப்போவதல்லாத சிறை கைதி.

 

மேலும் இதில் மகிந்தா தமிழினியை தேர்தலில் இறக்க போகிறார் என்பது வேண்டுமென்றே அரசால் அவிழ்த்துவிடப்படும் பொய்யே அல்லாமல். அரசு மிக சிறிதுதன்னும் தமிழினியை போட முயலாது. இது வரையில் பலரின் பெயர்களை செய்திகளில் போடவைத்து அவர்களை அவமானபடுத்தியிருக்கு அரசு. அதில் சிறிரங்கன் மட்டும்தான் அவமானப்படுமுதல் தனக்கு வடக்கு தேர்தலில் ஆர்வம் இல்லை என்று நேரே சொன்னவர்.

 

மகிந்த புலிகளை வென்றாதால் சிங்கள பகுதிகளில் வெல்கிறார். எனவே அவர் மேர்வின் சில்வா, விமல் வீரவன்சா, துமிந்தா அல்ல வேறு எந்த அடாவடியை போட்டாலும் தேர்தலில் வெல்கிறார். ஆனால் அதை தங்கள் சேவையால் செல்வதாக காட்டிக்கொள்கிறார்கள். அப்படியாயின் ஏன் இதுவரையில் ஒரு போராளியையும் விடுவித்து சிங்கள தொகுதி ஒன்றில் போட்டி போட வைக்க முயலவில்லை.

 

உண்மை என்ன என்றால் இலங்கையில் தேர்தல் எல்லாமே இனவாதம். இதில் சபேசானால் வடக்கு கிழக்கில் 20% நிரந்தர வாக்குகளை வைத்திருப்பவராக கூறப்படும் குத்தி கூட மகிந்தரின் பக்கம் கேட்டால் கருணாநிதியிற்க்கு நடந்தது மாதிரி, எதிர்க்கட்சிக்கு கூட வரச்சந்தர்ப்பம் கிடைக்காதென்பதால் டக்கிளசே மகிந்தாவை விட்டு விலத்தி தனியே கேட்க விரும்புகிறார். இதே திருட்டுத்தனத்தைத்தான் கக்கீம் கிழக்கில் விட்டார். அரசுடன் கேட்டால் தனக்கு ஒரு தொகுதி கூட வராது என்பதை தெரிந்திருந்ததால் அரசை எதிரித்து கேட்டு 7 தொகுதிகள் பெற்று அரசில் சேர்ந்தார். இப்படி செய்வதால் திரும்ப அரசில் சேரும் போது தனக்கு அரசில் ஒரு பிடி இருக்கும் என்றுதான் தேர்தலுக்கு முன்னர் கக்கீம் கூரியிருந்தார். இதையேதான் குத்தியர்கள் நாயகமும் வடக்கில் செய்கிறார். இதனால் மகிந்தா தன் கட்டிசியின் பெயரில் இறக்க வடக்கின்  நயீப் மயீத்துக்கு ஓருவருக்கு அலைகிறார். 

Edited by மல்லையூரான்

 நாலு பக்கமும் பிரளும் நக்கால் எதையும் கூறலாம்  , உயிரில்லாத  கீ போர்ட்டால் எதையும் எழுதலாம்  ஆனால்  கீழ் பக்கம்  ஆப்பை இறுக்கினால் வழி ஆப்பு ஏற்றப்படுவருக்கு தான்  தெரியும்.

நீங்கள் வடிவைப்பார்க்கின்றீர்கள்

அது சரி

எப்போ  இலக்கைப்பார்த்தீர்கள்????? :(

 

உங்களுக்கு இது இப்போது தான் விளங்குது ஆனால் இவர் 2008ம் ஆண்டு தொடக்கத்தில் திராவிடம் ஆரியம் என்று கதை அளக்கேக்க உங்கள் போன்றவர்களுக்கு விளங்கி இருக்க வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் தமிழ் ஊடகச்செம்மல்கள் ஏன் இத்தகைய பொய்யான செய்திகளை எழுதி தங்கள் வியாபாரத்தை நடாத்துகிறார்களோ தெரியாது. இவர்களுக்கு புலிகள் பலத்தோடு இருந்த போதும் பொன்வாத்துக்கள் இப்போதும் பொன்வாத்துக்கள் தான்.

தன்னை மாபெரும் ஊடகவியலாளனாக அடையாளப்படுத்தி தான் மட்டுமே உண்மையான செய்திகளைக் கொடுப்பதாக கருதும் குருபரன் இந்தச் செய்தியை தனது காதுவளித்தகவல் மூலமே வெளியிட்டுள்ளார்.

ஒருகாலம் ஜீன்ஸ் போட்ட தமிழின சேலையுடுத்தாலும் செய்தி அன்று இன்று எப்படி என்ற வியாக்கியானம் வேறு.ஒவ்வொரு போராளியின் வாழ்வையும் உயிரையும் மீட்க அவர்களது குடும்பங்களும் நட்புகளும் எவ்வளவோ சவால்களையும் சமாளித்துப் போராடுகிறார்கள். ஆனால் இந்த வெட்கம் கெட்ட வியாபாரிகளோ ஏலுமெண்டா வெளியில வந்து பார் என்று அவர்களையும் அவர்களது படங்களையும் போட்டு உயிரோடு கொல்கிறார்கள்.

இப்படி இன்னொரு போராளியின் வாழ்வையும் படத்தையும் போட்டுத்தான் ஊடகம் நடத்த வேணுமாயின் வேறு தொழில்களை இந்த ஊடகவியாபாரிகள் செய்யலாம். இன்னும் எங்களில் பலர் இந்த ஊடகங்களையே அரிச்சந்திரர்களாய் நம்புவது ஏனென்றது புரியவில்லை.

 

வியாபாரிகளுக்கே என்றும் சந்தையில் மதிப்பு என்பதனை மீண்டும் இந்தச் செய்தி வெளிப்படுத்துகிறது.

இனிமேல் ஒரு போதும் இந்த இனத்துக்காக ஒரு சந்ததி சிலுவையே சுமக்க வேண்டாம். போதும் இந்தப் பாரம்.

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் டன் (ஈபிடிபி) தொலைக்காட்சியில் நடந்த ஒரு விவாதத்தைப் பார்த்தேன். என்ன உருப்படியா ஏதாவது கதைக்கிறாங்களா என்று. அங்க பார்த்தால்.. அந்தத் தளபதியின் மனைவி அரச பணத்தில் சுகபோகம். இந்தத் தளபதியின் மனைவி இப்படி ஒரு வாழ்க்கையில்... இதுதான் அந்த மக்கள் அரங்கத்தில் ஈபிடிபியின் கதை... இதுதான் அவர்களின் ஊடகச் செய்தி. கலந்துரையாடல்..!

 

புலிகளில் இருந்தவர்களே மாறிப்போய் நிலை தடுமாறி உள்ள நிலையில் ஊடகவியலாளர்களைச் சொல்லவும் வேண்டுமா..!! புலிகள் இருந்த போதே இடக்குமுடக்கா எழுதியவர்கள் இன்று.. எதையும் செய்வார்கள் ஜனநாயகம்.. ஊடக சுதந்திரம் என்பதன் பெயரால்..! ஆனால் தங்கள் சுத்துமாத்துக்களை மட்டும் எழுதமாட்டார்கள். அங்கு ஜனநாயகமும்.. ஊடக சுதந்திரமும் தற்கொலை செய்து கொண்டுவிடும்..!

 

தேர்தல்கள் மூலமாவது இந்தப் போராளிகளுக்கு பொதுமன்னிப்புக் கிடைப்பது உண்மையில்.. மகிழ்ச்சி தருகிறது. இப்படி எல்லாப் போராளிகளுக்கும் ஒரு வாய்ப்புக் கிடைத்தால் அதுவே நல்லது. தேர்தலில் யாரை வெல்ல வைக்க வேண்டும் என்பது மக்களுக்குத் தெரியும். மகிந்த அதனை தீர்மானிக்க முடியாது தமிழ் மக்களைப் பொறுத்த வரை..!

 

போராட்டம் வெறுமனவே போராளிகளை களப்பலி இடுவதில் மட்டுமல்ல தங்கியுள்ளது.. போராட்டம் பின்னடைவுகளை சந்திக்கும் போது போராடியவர்களை ஏதோ வகையில் மீட்பதும் கூட.. போராட்டத்தின் வெற்றியை நம்பிக்கையை தீர்மானிக்கும்..!

 

இந்தியப் படைகள் காலத்தில் பிடிபட்ட சில போராளிகள்.. ஒரு சில ஆயுதங்களைக் காட்டிக்கொடுத்துவிட்டு மீண்டு வந்து இயக்கத்தில் சேர்ந்து அதே படைகளுக்கு எதிராகப் போராடிய வரலாறும் உண்டு. இது இங்கு மட்டுமல்ல.. உலகப் போராட்டங்கள் அனைத்திலும் நிகழ்ந்து தான் உள்ளது.  :icon_idea:

Edited by nedukkalapoovan

தயா மாஸ்ரர், தமிழினி போன்றவர்கள் மாகாணசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதை நான் விரும்புகிறேன். இது உலகிற்கு சொல்கின்ற செய்திகள் கனதி மிக்கவை.

இவர்கள் போட்டியிடாது விட்டாலும் மகிந்தவின் கட்சி இரண்டாவது இடத்தை கட்டாயம் பெறும். 20இல் இருந்து 30வீதமான வாக்குகளை கைப்பற்றத்தான் போகிறது.

இந்த நிலையில்

தமிழர்கள் மகிந்தவின் கட்சிக்கு வாக்களித்தார்கள் என்கின்ற செய்தி வரும். அப்படி இல்லாமல் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்தவர்கள் ஜனநாயக அரசியலில் ஈடுபடுகிறார்கள் என்றும் மக்கள் அவர்களுக்கு வாக்களித்தார்கள் என்றும் செய்தி வருவது நல்லது.

இதை விட, புலம்பெயர் மக்களால் கைவிடப்பட்ட அவர்கள் தமக்கு தெரிந்த வழியில் முன்னேறட்டும். அன்றைக்கு தளபதிகளாகவும், பொறுப்பாளர்களாகவும் இருந்தவர்கள் மாகாணசபை உறுப்பினர்களாகவும், தலைவர்களாகவும் வரட்டுமே! அதில் என்ன தவறு?

தயா மாஸ்ரர், தமிழினி போன்றவர்கள் மாகாணசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதை நான் விரும்புகிறேன். இது உலகிற்கு சொல்கின்ற செய்திகள் கனதி மிக்கவை.

இவர்கள் போட்டியிடாது விட்டாலும் மகிந்தவின் கட்சி இரண்டாவது இடத்தை கட்டாயம் பெறும். 20இல் இருந்து 30வீதமான வாக்குகளை கைப்பற்றத்தான் போகிறது.

இந்த நிலையில்

தமிழர்கள் மகிந்தவின் கட்சிக்கு வாக்களித்தார்கள் என்கின்ற செய்தி வரும். அப்படி இல்லாமல் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்தவர்கள் ஜனநாயக அரசியலில் ஈடுபடுகிறார்கள் என்றும் மக்கள் அவர்களுக்கு வாக்களித்தார்கள் என்றும் செய்தி வருவது நல்லது.

இதை விட, புலம்பெயர் மக்களால் கைவிடப்பட்ட அவர்கள் தமக்கு தெரிந்த வழியில் முன்னேறட்டும். அன்றைக்கு தளபதிகளாகவும், பொறுப்பாளர்களாகவும் இருந்தவர்கள் மாகாணசபை உறுப்பினர்களாகவும், தலைவர்களாகவும் வரட்டுமே! அதில் என்ன தவறு?

அரசியல் விளங்காதவர்களுக்கு சிலவற்றை விளங்கப்படுதுவது கஸ்டம். யரோ மேலே எழுதியிருக்கிறார்கள், அரசு தமிழினியை அல்ல வேறு யாரை கொண்டு வந்தாலும்  வெல்லப்போவதில்லை என்பதை. மேலும் உலகம் தலை கீழானாலும்  அரசு வேல்வத்திலை 30% வாக்குகளை பெறப்போவதில்லை. இப்படியான எதிர்வுகூறல்களை வைத்து  அனுமானிக்கத்தக்கதென்னவென்றால் அரசு தனது பிழையான பிரச்சாரத்தை வேண்டுமென்றே ஒரு சிலருக்கு கொடுத்து அவர்கள் வாயால் பிழையை மட்டும்தான் வெளிக்கொண்டு வருகிறது. அரசு எத்தனை வன்முறைகளுக்குள் இறங்கினாலும் வேறு என்ன செய்தும் தேர்தலில் 30% எடுப்பதை நினைக்கவும் முடியாது. இது வழக்கமான பிழையான எதிர்வு கூறல். இதில் ஆயிரம் அல்ல வேண்டுமானால் $10,000 பந்தயம் கட்டவும் நான் தாயார்.

 

அரசு எல்லாவழிகலிலு டக்கிளசுடன் இந்த தேர்தலில் சேரப் போவதில்லை என்றதையும் காட்டிவிட்டது. 

 

இது ஒரு பிரயோசனமில்லாத தேர்தல். அரசு தேர்தலை நடத்தவே மாட்டேன் என்று வருசக்கணக்காக மறுக்கிறது. அரசு தான் எத்தனை வன்முறைகளும் பாவித்தாலும் வெல்ல முடியாதென்ற தேர்தலை அவசரம் அவசரமாக்க குடியேற்றி, இல்லாதவர்களை அதிகார பூர்வமாக கொண்டுவந்து கள்ள வாக்கு போட சட்டம் இயற்றி வெல்ல வேண்டிய தேவைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.  இதனால் அரசு வடக்கில் பாரிய நிரந்தர சேதாரங்களை தமிழருக்கு செய்கிறது. இதில் படாத பட்டு வென்றால் அதிகாரமில்லாத சபைதான் கூட்டமைப்புக்கு. இந்த நிலையில் தேர்தலை இருபக்கம் மீதும் திணிப்பது வெளிநாடுகள்.  எனவே கூட்டமைப்பு இங்கே பெயருக்கு அலையவில்லை. சிலர் சொல்வது போல வெளிநாட்டி நிகழ்சி நிரலில் இருந்து வெளியேற முடியாமல் தவிக்கிறது.  இதையே அரசும் விளங்கி வைத்திருக்கிறது. அதுவும் பெயருக்கு அலையவில்லை. அரசு பெயர் எடுக்கபோவதாக கூறுவதே  தேர்தலின் பின்னணியை கணக்கு போடத்தெரியாமையே. அரசு படும் பாடெல்லாம் தான் பெயர் கெடாமல் தப்பிக்கொள்ளவே. சென்ற தடவை மகிந்த பலகோடிகளை செலவளித்து, பல சிங்கள சிறுக்கிகளை இரவுபகலாக யாழ்ப்பாணத் தெருக்களில் ஆடவிட்டு முடிய தேர்தலில் கவ்வாத மண்ணை கவ்வியது. பசில் உடனேயே இதில் வென்றுஎன்ன கூட்டமைப்பு லைட் பல்ப் மாற்றப்போகிறதா என்று கேட்டவர். அரசு அந்த அவமானத்தை இன்னொரு தடவை தவிர்க்க முயல்வது பலருக்கு பிடிபடவில்லை. 

 

கிழக்கிலேயே 4 நான்கு பிரத்திநிதிதுவத்திற்கே  கள்ள வோட்டு போட்டு வென்ற அரசு வடக்கில் கள்ள வோட்டு போட்டாலும் ஒரு பிரதிநிதித்துவமும் எடுக்க மாட்டாது. சிந்தனையில் எப்போதுமே தடுமாற்றமும் குழப்பமும் உள்ளவர்கள் முன்னர் டக்கிளசுக்கு  20% வீதம் இருக்கு என்றவர்கள். இப்போது அரசுக்கும் 30% வீதம் இருக்கு என்கிறார்கள். இந்த 50% ஆதரவால் என்ன எல்லாம் செய்யலாம்   அறியாதவர்கள் இவர்கள். அதன் பின்னர் எதற்கு அரசும் டக்கிளசும் பிரிந்து போய் இருக்கிறார்கள். ஆண்டாண்டாக குத்தி தான் தான் வடக்கின் முதல் அமைச்சர் என்று முடிய எப்படி தமிழினி குத்தியை தள்ளிவிட்டு வருவதை குத்தி ஏற்றுக்கொள்ளப்போகிறார். குத்தி தனது 20% த்தையும், அரசின் 30% த்தையும்சேர்த்து இருவரும் கூட்டாக தேர்தல் கேட்டால் அவர்களுக்கு தான் வெற்றி வரவேண்டும்.

 

அரசு 30% வீதம் எடுக்குமென்றால் எத்தனை கள்ளவோட்டு போட சட்டம் தேவை என்றதை கணக்கு பார்த்துவிட்டது. எனவே குத்தி பிரிந்து போனால் இவர்கள் முன்னர் எழுதியது மாத்திரி குத்திக்கு 20% வீதமல்ல, அரசு அவரை தன் வாக்கை கூட அவருக்கு போடவிடாது என்பதுதான் உண்மை.  இவர்கள் முன்னர் எழுதிய (வி)யுகம் பிழை என்பதால் "அதை அல்ல நான் சொன்னது" என்று கதையை பிரட்ட இப்போது அரசுக்கு 30% வீதமாக எழுதுகிறார்கள். இதை பிரட்ட இன்னும் ஒரு கிழமை கூட எடுக்காது. குத்தி என்பவர் தேர்தல் அநாதை. அவருக்கு யாழ்பாணத்தில் ஒரு வாக்கும் இல்லை. அரசுக்கு 30 % அல்ல குத்திக்கு 20% இல்லை.  இருந்தால் அவர் கக்கீம் செய்தது மாதிரி கட்டாம் பிரிந்து நின்றுதான் கேட்பார். எந்த முட்டாளும் வேட்பாளர் கிடைக்காத அவமானகரமான அரசுடன் சேர்ந்து தனது செல்வாக்கையும் பழுதாக்க மாட்டார். இப்படி பிழையை  CBIயை கண்டு நடுங்கிக்கொண்டுதிரியும் கருணாநிதி மாதிரி ஒரு சந்தர்பவாத அரசியல் வாதியே அரசைவிட்டு விலகி திருத்திவிட்டார். டக்கிஸ் அரசை விட்டு விலகாமல் இருந்தார் என்றால் அதைப் போல தவறு இருக்காது.  

 

மேலும் அரசும் குத்தியும் ஒன்றல்ல. ஏன் எனில் குத்தி UNP இருந்து வந்துதான் SLFP அரசுடன் சேர்ந்தவர். இனி UNP அரசு வந்தால் குத்தி அங்கே போவதை மகிந்தாவல் என்ன பாடு பட்டும் நிறுத்த முடியாது. எனவே குத்தியும் அரசும் ஒன்றல்ல. 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரசு இப்படியான முன்னாள் போராளிகளை இணைத்து, தேர்தலில் போட்டியிட வைத்தால். தமிழ் கட்சிகளும்  முறையாக மற்றைய போராளிகளையும் தங்கள் கட்சிகளில் இணைத்து கொள்ள வேண்டும். அவர்களுக்குறிய பாதுகாப்பை இதை விட வேறு வழிகளில் செய்ய முடியாது. அப்படி ஒரு நிலைவரும் போது, கூட்டாமைப்பில் நம்பர் கணக்குக்காக இணைந்துள்ள, தலைவர்கள் தங்கள் பொறுப்புக்களை, உரியவர்களிடம் கொடுக்க வேண்டும். கூட்டமைப்பில் உள்ளவர்கள் சமூகத்தில் அதிகளவு, பாதிக்கப்பட்ட பகுதியினருக்காக செயற்பட வேண்டிய காலம் இது.

அரசாங்கம் கருணாவை, தயா மாஸ்டரை, இப்போது ???? தமிழினியை, பிரதிநிதிப்படுத்த முடியுமாயின், ஏன் தமிழ் தேசிய கூட்டமைப்பு,சாந்தி அக்கா இணைக்கிற இணைப்புகளில் வருகிற அல்லது அதைபோன்ற  ஆணை/பெண்ணை இணைக்க முடியாது. 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் தமிழ் ஊடகச்செம்மல்கள் ஏன் இத்தகைய பொய்யான செய்திகளை எழுதி தங்கள் வியாபாரத்தை நடாத்துகிறார்களோ தெரியாது. இவர்களுக்கு புலிகள் பலத்தோடு இருந்த போதும் பொன்வாத்துக்கள் இப்போதும் பொன்வாத்துக்கள் தான்.

தன்னை மாபெரும் ஊடகவியலாளனாக அடையாளப்படுத்தி தான் மட்டுமே உண்மையான செய்திகளைக் கொடுப்பதாக கருதும் குருபரன் இந்தச் செய்தியை தனது காதுவளித்தகவல் மூலமே வெளியிட்டுள்ளார்.

ஒருகாலம் ஜீன்ஸ் போட்ட தமிழின சேலையுடுத்தாலும் செய்தி அன்று இன்று எப்படி என்ற வியாக்கியானம் வேறு.ஒவ்வொரு போராளியின் வாழ்வையும் உயிரையும் மீட்க அவர்களது குடும்பங்களும் நட்புகளும் எவ்வளவோ சவால்களையும் சமாளித்துப் போராடுகிறார்கள். ஆனால் இந்த வெட்கம் கெட்ட வியாபாரிகளோ ஏலுமெண்டா வெளியில வந்து பார் என்று அவர்களையும் அவர்களது படங்களையும் போட்டு உயிரோடு கொல்கிறார்கள்.

இப்படி இன்னொரு போராளியின் வாழ்வையும் படத்தையும் போட்டுத்தான் ஊடகம் நடத்த வேணுமாயின் வேறு தொழில்களை இந்த ஊடகவியாபாரிகள் செய்யலாம். இன்னும் எங்களில் பலர் இந்த ஊடகங்களையே அரிச்சந்திரர்களாய் நம்புவது ஏனென்றது புரியவில்லை.

 

வியாபாரிகளுக்கே என்றும் சந்தையில் மதிப்பு என்பதனை மீண்டும் இந்தச் செய்தி வெளிப்படுத்துகிறது.

இனிமேல் ஒரு போதும் இந்த இனத்துக்காக ஒரு சந்ததி சிலுவையே சுமக்க வேண்டாம். போதும் இந்தப் பாரம்.

 

இப்ப தானே ஆளுக்கு ஒரு ஊடகம் வைத்து இருக்கினம்.....!

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் தேர்தலில் வெல்கிறாரோ இல்லையோ, அவர் இதுவரை உயிருடன் இருப்பதே பெரிய விடயம். அதுமட்டுமல்லாமல் அரசாங்கத்தின் பிடிக்குள்ளிருந்து கொண்டு அவர் புலிகளுக்காகக் கதைக்கவோ அல்லது அரசுக்கெதிராகக் கதைக்கவோ முடியாது, அப்படி அவர் செய்ய நினைத்த மறுகணமே அவர் ஒன்றில் கொல்லப்படுவார் அல்லது காணாமல்ப் போவார். ஆகவே தனிப்பட்ட ரீதியில் அவரைப்பொறுத்தவரை இது நல்ல விடயமே. 

 

தமிழ் மக்களுக்கு இதனால் ஏதாவது மாறுதல் கிடைக்கப்போகிறதென்றால், ஒன்றுமில்லை என்றுதான் சொல்லவேண்டும். ஆகவே இதைப்பற்றிக் கவலைப்பட தேவையில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினி இப்படி கேவலப்பட்டு நாளுக்கு நாள் இறப்பதற்கு அன்றே குப்பி கடித்து இறந்திருக்கலாம். 

அப்படி இறந்திருந்தால் எப்படி போராடி இறந்தவர்களை  பலர் மறந்தார்களோ அப்படியே மறந்திருப்பார்கள்.

தன் இனம்வாழ தங்களை அர்ப்பணித்தவர்களின் துயர நிலை ..  :(   

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினி இப்படி கேவலப்பட்டு நாளுக்கு நாள் இறப்பதற்கு அன்றே குப்பி கடித்து இறந்திருக்கலாம்.

உங்கள் போன்ற தியாகிகளுக்கு முன்னால் தமிழினியென்ற போராளி இப்படித்தான் கேட்க வேண்டுமென்ற விதியையும் இதே தமிழர்கள் எழுதி வைத்தோம். உங்கள் கூற்றுப்படி இறுதியில் சரணடைந்த எல்லாரும் குப்பியடித்திருக்க வேணும். அப்பதான் உங்களுக்கு உணர்வு பொங்கும்.

இப்படி எழுதுவதற்கு மன்னிக்கவும் ஆனால் உங்களது எழுத்துக்கு என் மனதில் பட்ட பதில் இது.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தியின் கருத்தினை ஆதரிக்கிறேன்.

இரகுநாதனின் கருத்தினையும் ஆதரிக்கிறேன்.

தமிழரசு தமிழினியை சாக சொல்லவில்லை,  உயிரோடு இருக்கும் போராளியை நாங்கள் கேவலப்படுத்துகின்றோம் என்ற பச்சாதாபத்தில் சொல்லி இருக்கிறார் என்று நினைக்கின்றேன்.

தமிழினி அரசியலில் ஈடுபட்டு தன்னால் இயன்றதை ஆத்ரவில்லாதவர்களுக்கு செய்தால் அதுவும் நல்லதே

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.