Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பருதி கொலையின் பின்னணியில் சிறீ ரெலோ : இருவர் கைது

Featured Replies

தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் (TCC) முக்கிய உறுப்பினரும், செயற்பாட்டாளருமான பரிதி -ரேகன் – (நடராஜா மதீந்தரன்) அவர்கள் பரீஸ் நகரின் மையப்பகுதியில் வைத்து 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9 ஆம் திகதி சுட்டுக்கொலை செய்ய்ப்பட்டார். இக் கொலை குறித்த பல வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன. இறுதியாகக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இலங்கை இராணுவத்தின் துணைக்குழுவான சிறீ ரெலோ என்ற மக்கள் விரோத இயக்கத்துடன் தொடர்புடைய நபர்கள் கொலையாளிகள் என்ற ஆதாரபூர்வமான சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புலிகள் இயக்கத்தின் பெரும் தொகைப் பணம் குறித்த மோதல்கள் அதன் ஆதரவாளர்கள் இடையே நடைபெற்று வந்த காரணத்தால் அந்த இயக்கத்தின் புலம் பெயர் பிரிவுகளே கொலையின் பொறுப்பாளிகள் என்ற சந்தேகம் நிலவியது. இறுதியாகக் கிடைத்த நமபகமான தகவல்களின் அடிப்படையில் இக்கொலையின் சூத்திரதாரிகள் இலங்கை அரசாங்கமும் அதன் இராணுவத் துணைக்குழுவான சிறீ ரெலொவுமே என்று தெரியவருகிறது. ஆதாரபூர்வமான தகவல்களின் அடிப்படையில் பிரஞ்சு போலிஸ் அவ்வியக்கத்தின் முக்கிய உறுப்பினர்கள் இருவரைக் கைது செய்துள்ளது.

சயந்தன் வடிவேலு என்ற சிறீ ரெலோ இயக்கத்தின் 48 வயது நபரும், அதே இயக்கத்தைச் சேர்ந்த உதயகுமார் குலேந்திரன் என்ற 32 வயதான நபரும் கொலையுடன் நேரடியான தொடர்புள்ளவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பிரஞ்சு போலீசாரால் நேற்றய தினம் 05.06.2013 அன்று பாரீசின் புற நகர்ப் பகுதியான வில்ஜூவிவ் அமைந்துள்ள வீடொன்றில் வைத்து அதிகாலை 5 மணிக்குக் கைதாகியுள்ளனர்.

கைதாகியுள்ள அச்சுவேலியைச் சேர்ந்த  சயந்தன் வடிவேலுவின் பெயரிலேயே இலங்கையில் சிறீ ரெலோ பதிவுசெய்யப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் மீதான போலிக் குற்றச்சாட்டு, பல்வேறு சமூக விரோதத் தாக்குதல்கள், கொள்ளை, வழிப்பறி, கடத்தல் போன்ற சம்பவங்களுடன் தொடர்புடைய துணை இராணுவக் குழுவான சிறீ ரெலோ இலங்கை அரச பாசிஸ்டுக்களின் மிகவும் நம்பிக்கையான அமைப்பாகும்.

keeran-300x168.jpgஇந்த அமைப்பின் முக்கிய உறுப்பினரான கீரன் என்ற மாணிகம் நகுலேந்திரன் பிரித்தானிய தமிழ்த் தொலைகாட்சியில் இராணுவத்துடன் இணைந்து செயற்படுவது குறித்தும் யாழ்.பல்கலைக்கழக மாணவர்களைத் தாமே காட்டிக்கொடுத்ததாகவும் ஒப்புதல் வாக்குமூலம் வழன்க்கியிருந்தார்.

பருதி கொலை செய்யப்பட்ட மறு நாளே பிரேம், ரமேஷ், தவம் ஆகிய மூவரை பிரஞ்சு காவல்துறை கைது செய்தது. இவர்களில் ஒருவருக்கும் சிறீ ரெலோவுடன் நெருங்கிய தொடர்பு காணப்பட்டிருந்தது.
இலங்கை அரசின் பாசிசக் கரங்கள் புலம் பெயர் நாடுகள் வரை நீண்டுள்ளது. துணை இராணுவக் குழுக்கள் புலம் பெயர் நாடுகளில் சுதந்திரமாக நடமாடுகின்றன. உலகின் அனைத்து உளவுத்துறைகளதும் ஆடுகளமாக மாறிப்போன சுய நிர்ணய உரிமைக்கான போராட்டம் இலங்கை அரசை அகதிகளான நாடுகளுக்குக் கூட அழைத்து வந்துளது.

http://inioru.com/?p=35960

  • கருத்துக்கள உறவுகள்

பங்கு பிரிப்புக் கதை எழுதிய சாத்திரியார் இந்தச் செய்திக்கு என்ன வியாக்கியானம் தருவார் என்று அறிய ஆசை <_<

இவர்கள் எப்படி "பாகப் பிரிவினை" செய்தார்கள்  என்று ஒரு புலனாய்வு  அறிக்கை  விடுமமில்லே! :o  

  • கருத்துக்கள உறவுகள்

சிறீ டெலோவும் ஒருங்கிணைப்புக்குழுவும் ஒன்றுதான் என்று சொல்லிச் சமாளிக்கலாம்.. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

பாம்பன் குழுவில் கொலை பழியை போட்ட ஞாபகம்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னமோ கனவிசயம் நடந்தமாதிரி பத்தி பத்தியாக யாழில் வாசித்த நினைவு....இப்ப இப்படி யாகிட்டதே....இதற்கும் பத்தி விளக்கம் வருமா.....அல்லது பரிஸ் பொலிசு பிழை விட்டு விட்டதோ..

  • கருத்துக்கள உறவுகள்

பங்கு பிரிப்புக் கதை எழுதிய சாத்திரியார் இந்தச் செய்திக்கு என்ன வியாக்கியானம் தருவார் என்று அறிய ஆசை <_<

சாத்திரியாரின் கருத்துக்களை, சிலவேளை உணமையாகவும் இருக்குமோ... என்று நினைத்து அவ்வப்போது வாசிப்பேன்.

இதன் பின், அவரிர்ன் எழுத்துக்களை வாசிக்காமல் விடுவதே.. நல்லது என்று யோசித்துள்ளேன்.

சாத்திரியார் இனி... தயவு செய்து அரசியல் புலனாய்வுக் கட்டுரைகள் எழுதாமல்... நகைச்சுவை கதைகளை எழுதுங்கள். :)

  • கருத்துக்கள உறவுகள்

சரியாகச் சொன்னீர்கள் தமிழ் சிறி...

  • கருத்துக்கள உறவுகள்

இவன்களுக்கு ஒண்டும் தெரியாது, இவங்கள்தான் பிழைவிட்டுட்டாங்கள். சாத்திரியார் சொன்னால் பிழைக்காது!

  • தொடங்கியவர்

உண்மையான கொலையாளிகள் அடையாளம் காணப்படாமல், தமிழர்கள் மத்தியில் குழுச் சண்டைகள் உருவாகவும், வளரவும் ,மக்களைக் குழப்புவதற்கும், போராட்டம் மீதான நம்பிக்கையீனம் வளரவும் இவ்வாறான எழுத்துக்கள் உறுதுணையாக இருந்திருக்கின்றன.

உண்மைகள் உறங்குவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைகள் உறங்குவதில்லை.

தலைவருடன் ஒன்றாயிருந்த போராளிகள் அடிக்கடி சொல்வார்கள். தலைவர் எப்போதும் சொல்வாராம். பொய் ஆரவாரமாக உண்மைபோல தனது முகத்தைக்காட்டுமாம் இறுதியில் உண்மையும் தர்மமும் வெல்லுமென்று. பொய்யான விமர்சனங்களை பார்த்து சோருகிற நேரங்களில் தலைவரின் வார்த்தைகளை ஒரு போராளி அடிக்கடி ஞாபகப்படுத்துவார்.

உண்மைகள் உறங்குவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுரையில் இறுதியாக  நான் எழுதியிருந்தது

http://sathirir.blogspot.fr/2013/01/blog-post_26.html

அதுவும்  Le Parisienபத்திரிகையில் வெளி வந்தது போல் இலங்கையரசின் தூதரகம் நேரடியாக சம்பத்தப் பட்டிருக்காது. இலங்கைத் தூதரகத்திற்கே தெரியாமல் இலங்கை புலனாய்வுத்துறை  வேறு தரகர்கள் ஊடாக கூலிக் கொலையாளர்களை வைத்து நடத்தியிருக்கும். அப்படியே  தரகர்கள் ஊடாக கூலிக்கு ஆளை வைத்து  பிரிதியை கொலை செய்திருந்திருந்து பிரெஞ்சு புலனாய்வுத் துறை அதை கண்டுபிடித்திருந்தாலும்  பிரெஞ்சு அரசு  தமிழர்களிற்கு அநீதி நடந்து விட்டது என்று இலங்கை யரசை குற்றம் சாட்டவோ ஜ.நா சபையில் இலங்கைக்கெதிராக தீர்மானமோ. அல்லது தமிழீழத்தை வாங்கித் தரப் போவது கிடையாது. பிரான்ஸ் தன்னுடைய நலனிற்கு தேவையான ஏதோ ஒன்று இலங்கையிடமிருந்து  பெறமுடியுமானால்  இலங்கையரசுடன் பேரம் பேசி இலங்கையை அடிபணியவைத்து தன்னுடைய தேவையை  தீர்துக்கொள்ளும். அதே நேரம் பரிதி கொலைக்காக  நீதி கேட்டு கூட்டம் போட்டாலென்ன  பாரிசில் இருந்து  ஜ.நா சபைவரை பிரதட்டை  தூக்கு  காவடி  என்று எடுத்தால் கூட ஒன்றும் நடக்கப்போவதில்லை.காரணம் பரிதி பரிதி பிரான்சில் தடைசெய்யப் பட்டதொரு அமைப்பின் பிரதிநிதி என்பதோடு  பிரெஞ்சு காவல்த்துறையின் கண்காணிப்பில் இருக்கின்ற ஒரு முன்னை நாள் கைதி.

<_< <_<

Edited by sathiri

  • தொடங்கியவர்

சாந்திரியின், சாத்திரம் பலிச்சு இருக்கு. இன்னும் பல இவ்வாறான சாத்திரக்காரக் கட்டுரைகள் எழுத வாழ்த்துக்கள். :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுரையில் இறுதியாக  நான் எழுதியிருந்தது

http://sathirir.blogspot.fr/2013/01/blog-post_26.html

வணக்கம் சாத்திரி,

அண்மையில் இன்னொரு திரியில் உங்களின் கருத்தொன்றை வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்திருந்தது. அதில் யாரோ ஒருவரையோ அல்லது ஒரு இயக்கத்தையோ முற்றாக அழித்தோம் என்று எழுதியிருந்தீர்கள். எனக்கு சரியாக இன்னும் புரியவில்லை. அது காஸ்ட்ரோ எனும் மனிதரையா அல்லது புலிகளியக்கத்தையா, அல்லது பிரபாகரனையா என்று நீங்கள் சொல்லவில்லை.

அப்படி நீங்கள் சொல்லியிருந்ததும் கூட ஒரு விளையாட்டுக்குத்தான் என்று நான் இன்னும் எண்ணுகிறேன். அது சரிதானே??? ஏனென்றால் தலவைரையும் இயக்கத்தையும் அழித்ததில் உங்களுக்குப் பங்கில்லை என்று நான் இன்னும் நம்புகிறேன். கே.பீ உடனான உங்கள் நட்பு இயக்கத்தை அழிக்கும் வரைக்கும் போயிருக்க முடியாதென்றும் நம்புகிறேன்.

அதுவும் சரிதானே??

  • தொடங்கியவர்

இண்டைக்கு நல்ல மழை பெய்யும் என்று கட்டுரை முழுக்க எழுதி விட்டு, கடைசியில் மழை பெய்யாவிட்டாலும் என்பதற்காக ,சில வேளை வெய்யிலும் அடிக்கலாம் என்று எழுதுவதை விட ,தெரிவில் இருந்து கிளி யோசியம் பாக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னமோ கனவிசயம் நடந்தமாதிரி பத்தி பத்தியாக யாழில் வாசித்த நினைவு....இப்ப இப்படி யாகிட்டதே....இதற்கும் பத்தி விளக்கம் வருமா.....அல்லது பரிஸ் பொலிசு பிழை விட்டு விட்டதோ..

சொல்கின்றவர் சொன்னால் கேட்பவருக்கு மதியென்ன???

தூர நின்று பார்வையாளர்களாக இருந்தவர்கள் தான் அதிகம்

அவர்களிடம் எல்லாமே வேகும்.

எத்தனை எழுத்தாளருக்கு

எத்தனை படைப்பாளிகளுக்கு

எத்தனை கதாசிரியர்களுக்கு ............

சோறு போட்டு பழக்கப்பட்ட அமைப்பு(இருந்தும் இல்லாமலும்).................

உண்மை  இன்னும் வரும்

முகங்கள் தெரியும் காலமிது

ஆனால் எதிர்பார்க்காதவகையில்

அவர்களாகவே  

அவசரமாக

அம்மணமாக்கி................. :(  :(  :(

இண்டைக்கு நல்ல மழை பெய்யும் என்று கட்டுரை முழுக்க எழுதி விட்டு, கடைசியில் மழை பெய்யாவிட்டாலும் என்பதற்காக ,சில வேளை வெய்யிலும் அடிக்கலாம் என்று எழுதுவதை விட ,தெரிவில் இருந்து கிளி யோசியம் பாக்கலாம்.

ஒரு போராளி

அதுவும் கடைசி ஒவ்வொரு  நிமிடமும்  கூட   எம்க்காகவே உழைத்தவன்

வீழ்ந்து கிடக்க

சிந்திய  குருதி காயாது கிடக்க

அதன் அருகில் நின்று நாம் அமைதியாக அஞ்சலி  செலுத்த.......

கிடப்பவனை போராளியாக வேண்டாம்

ஒரு மனிதனாகக்கூட கருதாது

கதை படித்தவர்களையும் நாம் அறிவோம்............. :(  :(  :(

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியாரின் கருத்துக்களை, சிலவேளை உணமையாகவும் இருக்குமோ... என்று நினைத்து அவ்வப்போது வாசிப்பேன்.

இதன் பின், அவரிர்ன் எழுத்துக்களை வாசிக்காமல் விடுவதே.. நல்லது என்று யோசித்துள்ளேன்.

சாத்திரியார் இனி... தயவு செய்து அரசியல் புலனாய்வுக் கட்டுரைகள் எழுதாமல்... நகைச்சுவை கதைகளை எழுதுங்கள். :)

வெலிக்கடைச்சிறைச்சாலையில் சிங்களவரின் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டும் கீரன் திருந்தவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சாத்திரி,

அண்மையில் இன்னொரு திரியில் உங்களின் கருத்தொன்றை வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்திருந்தது. அதில் யாரோ ஒருவரையோ அல்லது ஒரு இயக்கத்தையோ முற்றாக அழித்தோம் என்று எழுதியிருந்தீர்கள். எனக்கு சரியாக இன்னும் புரியவில்லை. அது காஸ்ட்ரோ எனும் மனிதரையா அல்லது புலிகளியக்கத்தையா, அல்லது பிரபாகரனையா என்று நீங்கள் சொல்லவில்லை.

அப்படி நீங்கள் சொல்லியிருந்ததும் கூட ஒரு விளையாட்டுக்குத்தான் என்று நான் இன்னும் எண்ணுகிறேன். அது சரிதானே??? ஏனென்றால் தலவைரையும் இயக்கத்தையும் அழித்ததில் உங்களுக்குப் பங்கில்லை என்று நான் இன்னும் நம்புகிறேன். கே.பீ உடனான உங்கள் நட்பு இயக்கத்தை அழிக்கும் வரைக்கும் போயிருக்க முடியாதென்றும் நம்புகிறேன்.

அதுவும் சரிதானே??

இன்னும் ஒரு இடத்தில்

15 வருடங்களுக்கு முன்பே லா சப்பலில் ஒருங்கிணைப்புக்குழுவுடன் அடி பாட்டில் ஈடு பட்டதாகவும்  அலுவலகத்துக்கே நேரடியாக சென்று சண்டித்தனம் செய்ததாகவும்  சொல்லியிருந்தார்.

அப்போ காஸ்ட்ரோ என்ற மனிதர் எங்கு எப்படி இருந்தார்???

பிரச்சினை யாருடன்???

அழிக்க நினைத்தது யாரை??? :(  :(  :(

சாத்திரியாரின் கருத்துக்களை, சிலவேளை உணமையாகவும் இருக்குமோ... என்று நினைத்து அவ்வப்போது வாசிப்பேன்.

இதன் பின், அவரிர்ன் எழுத்துக்களை வாசிக்காமல் விடுவதே.. நல்லது என்று யோசித்துள்ளேன்.

சாத்திரியார் இனி... தயவு செய்து அரசியல் புலனாய்வுக் கட்டுரைகள் எழுதாமல்... நகைச்சுவை கதைகளை எழுதுங்கள். :)

தலைவருடன் ஒன்றாயிருந்த போராளிகள் அடிக்கடி சொல்வார்கள். தலைவர் எப்போதும் சொல்வாராம். பொய் ஆரவாரமாக உண்மைபோல தனது முகத்தைக்காட்டுமாம் இறுதியில் உண்மையும் தர்மமும் வெல்லுமென்று. பொய்யான விமர்சனங்களை பார்த்து சோருகிற நேரங்களில் தலைவரின் வார்த்தைகளை ஒரு போராளி அடிக்கடி ஞாபகப்படுத்துவார்.

உண்மைகள் உறங்குவதில்லை.

தலைவரின் இந்த வாக்கு முள்ளிவாய்காலில் நிரூபணம் ஆகியிருக்கு என்கிறீர்கள் .

சிறீ டெலோவும் ஒருங்கிணைப்புக்குழுவும் ஒன்றுதான் என்று சொல்லிச் சமாளிக்கலாம்.. :icon_idea:

அதற்கான புலனாய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு ஆதாரங்களை யோசித்துக்கொண்டிருக்கிறோம். :D 

  • கருத்துக்கள உறவுகள்

தலைவரின் இந்த வாக்கு முள்ளிவாய்காலில் நிரூபணம் ஆகியிருக்கு என்கிறீர்கள் .

தலைவரின் வாக்கை நீங்கள் பார்த்ததும் நாங்கள் பார்ப்பதும் வித்தியாசம் அண்ணா.

இப்பதானே நாலுவருடம் முடிஞ்சிருக்கு கொஞ்சம் இன்னும் பொறுத்திருங்கோ இன்னும்  பல உண்மைகள் வெளிவரும்.

  • கருத்துக்கள உறவுகள்

சிறி லங்காவின்   அரச பயங்கரவாதம் உலகெங்கும் தலைவிரித்தாடுகின்றது.

இந்த விடயம் உண்மையானதாக இருந்தால் சிறிலங்காவிற்கும் பிரான்சிற்குமான 

உறவு நிச்சயம் பாதிக்கப்படும் 

  • கருத்துக்கள உறவுகள்

தலைவரின் வாக்கை நீங்கள் பார்த்ததும் நாங்கள் பார்ப்பதும் வித்தியாசம் அண்ணா.

இப்பதானே நாலுவருடம் முடிஞ்சிருக்கு கொஞ்சம் இன்னும் பொறுத்திருங்கோ இன்னும்  பல உண்மைகள் வெளிவரும்.

 நீங்கள் எழுதியது ஆளுக்கு விளங்கிச்சோ தெரியாது அக்கா. :huh:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.