பாபரின் பவர்பிளே ஓட்டவிகிதம் 90 க்கும் குறைவாக உள்ள நிலையில், பாகிஸ்தான் பயிற்சியாளர் பாபர் பவர் பிளேயில் ஆடமாட்டார் என மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார், இந்த நிலையில் பாபர் 12 ஓவருக்கு மேல் அவரது தாக்கம் அதிகமாக அணிக்கு தேவைப்படாது எனும் கருத்துபடவும் கூறியுள்ள நிலையில் 7 - 11 ஓவர் என மட்டுப்படுத்தப்பட்ட ஓவரில் அவரது தாக்கம் எவ்வளவு இருக்கும்?
இவ்வாறான நிலையில் பாபரின் பங்குதான் என்ன? பாபரிற்கு மாற்றீடாக ஏன் வேறு ஒருவரை பாகிஸ்தான் களமிறக்கவில்லை? இவ்வாறான நிலை ஒரு துடுப்பாட்டக்காரரின் மனோநிலையினை வெகுவாக பாதிக்கும், அது ஆட்டத்திலும் பிரதிபலிக்கும்.
நியுசிலாந்து ஆட்டக்காரர் மைக்கல் பிரஸ்வெல் காயம் காரணமாக இந்த உலக தொடரில் விளையாடவில்லை.
நியுசிலாந்து அணி 3 போட்டிகளையும் கொழும்பு பிரேமதாச விளையாட்டரங்கிலேயே விளையாடவுள்ளது, பெரிய மைதானத்தில் விரைவான 2 ஓட்டங்கள் ஒரு முக்கிய அம்சமாக இருக்கும் என சப்மன் கூறுகிறார், தகுதி போட்டிகளில் அனைத்து போட்டிகளிலும் 170 ஓட்டங்களுக்கு மேலாக எதிரணிகபெற்றிருந்தன சிறிய அணிகள் கூட அதனை எட்டுவதற்கு காரணமாக தம்து அணியின் பந்து வீச்சு பலவீனமாகவுள்ளது என குறிப்பிடுகிறார், பேர்குசன் இன்றைய போட்டியில் விளையாடுவது உறுதிசெய்யப்படவில்லை.
நியுசிலாந்து அணியில் ரச்சின் ரவீந்திர கனடாவுடனான போட்டிகள் தவிர்ந்த மற்ற போட்டிகளில் சிரமத்தினை சந்தித்துள்ளார், பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் பாகிஸ்தான் சுழல் பந்து வீச்சாளர்களில் உஸ்மான் தாரிக் மற்றும் சகல துறை ஆட்டக்காரரான சல்மான் தவிர்த்து மற்ற சுழல் பந்து வீச்சாளர்களுக்கெதிராக இடது கை ரவீந்திர ஒரு சாதகதன்மை உள்ளது.
இந்த பாகிஸ்தான் நியுசிலாந்து போட்டியில் சிரமத்தினை சந்திக்கும் பாபர் மற்றும் ரச்சின் இருவரும் சிறப்பாக செயல்படுவார்கள் என எதிர்பார்க்கிறேன்.
இந்த மெதுவான ஆடுகளத்தில் மணிக்கட்டினால் சுழல் வீசும் ஆதிக்கம் உள்ள நிலையில் சோதியின் வருகை நியுசிலாந்திற்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும், ஆனால் லைன் லெந்தில் கட்டுப்பாடில்லாவிட்டால் கேமந்தவின் நல்ல பந்து கொஞ்சம் அளவு கூடிய போதே தூக்கி மேலே அடித்தும், பின்னர் அதனை ஈடு செய்ய அளவினை குறைத்த போது அதனை பின் காலில் சென்று சிம்பாவே வீரர் ராசா ஆறுகள் அடித்தார் அது போல நிகழும்.
பாகிஸ்தான் வீரர் தாரிக்கினை நியுசிலாந்து இதுவரை எதிர்கொள்ளவில்லை என நினைக்கிறேன், மிக சவாலாக இருக்கும்.
வழமையாக மெதுவாக வீசும் சான்ட்னர் உலக தொடரில் கொஞ்சம் வேகமாக வீசுகிறார், இந்த போட்டியில் அதில் கவனம் செலுத்தி மீண்டும் மெதுவாக வீச கூடும்.
By
vasee ·