Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இப்படித்தான் எனக்கு வேலை போச்சுது - நிழலி

Featured Replies

போன புதன்கிழமை மாலை சுமார் 4 மணி இருக்கும்.

 

நான் வேலை செய்து கொண்டு இருக்கும் building இல் இன்னமும் வேலை போகாமல் மிச்சமாக இருக்கும் 4 பேரும் மெல்ல மெல்ல வேலையை இடை நடுவில் விட்டு விட்டு வெளியேறுகின்றனர்.

 

அலுவலக நேரம் 8:30 இல் இருந்து 04:30 வரைக்கும். ஆனால் இவர்கள் ஏன் இப்படி 4 மணிக்கே போகினம் என்று எனக்கு சிறு குழப்பம் வருகின்றது.

 

எனக்கு முன்னால் இருந்து வேலை செய்து கொண்டிருந்த IT Administrator மெல்ல எனக்கு Bye see you later என்று வழக்கமாக சொல்லும் சம்பிரதாய விடைபெறுதல் வார்த்தகளைக் கூட சொல்லாமல் வெளியேறுகின்றார்.

 

எனக்கு பின்னால் இருக்கும் AS400 இனை நாளொன்றுக்கு காலையில் 2 தரம் (சாப்பாட்டுக்கு முன்), மாலையில் 3 தரம் (சாப்பாட்டுக்கு பின்) என்று கரைச்சுக் குடிக்கும் சீன பெண்மணி 'ஷேர்லி' யும் சொல்லாமல் கொள்ளாமல் நடையைக் கட்டுகின்றார். நான் பார்த்த சக ஊழியரில் எனக்கு மிகவும் பிடித்த பெண்மணி இந்த சீனப் பெண். 45 வயதினை கடந்த மற்றவர்கள் மேல் மிகவும் அக்கறை எடுத்து பழகும் இனிமையான தோழி. எனக்கு சொல்லாமல் வெளியேறுகின்றாரே .. ஏன் என்று ஒரு யோசனை வந்து போகின்றது.

 

கம்பெனியின் உரிமையாளராக இருந்தவரின் மகனும் வெளியேறுகின்றார், தங்க கரண்டியில் சாப்பிடக் கூடிய வசதி இருந்தும் ஒரு கடை நிலை ஊழியராக சேர்ந்து படிப்படியாக முன்னேறும் - அவரின் தந்தையைப் போன்ற- பழகுவதற்கு இனிமையான உழைப்பாளி.

 

கொக்க மக்கா...ஏன் எல்லாரும் அவசரமாக போகினம் என்று எனக்கு ஒரே யோசனை

 

04:10 இருக்கும்.

 

நானும் Director of IT யும் தான் அந்த கட்டிடத்தில். நான் இவருக்குத்தான் report பண்ணுவது. என் நேரடி மேலாளர்.

 

ஆஹா...இந்த மனுசன் இல்லாட்டி நானும் நைசாக மாறலாம் என்று பார்த்தால் இந்தாள் இப்படி தன் அறைக்குள் இருக்கே என்று யோசிக்கின்றேன்,

 

சில வினாடிகளில் என் கம்பெனி Human Resource manager எம் பகுதிக்குள் கையில் ஒரு file உடன் நுழைகின்றார்.

 

எனக்குள் ஒரு சின்ன விளக்கு படபடத்து எரிகின்றது.

 

கடந்த 3 வாரங்களுக்கு: எம் team இல் இருந்த ஏனைய 3 பேருக்கும் lay off கொடுத்து அனுப்பி விட்டனர். எம் கம்பெனியை ஒரு அமெரிக்க பெரும் கம்பெனி விலைக்கு வாங்கிய பின் நாம் வேலை செய்து கொண்டு இருந்த ERP Project இனை உத்தியோக பூர்வமாக கடந்த மாதம் தான் cancelled பண்ணி இருந்தனர். 5 மில்லியன் புரொஜட் அது. ஏற்கனவே 2 மில்லியன் செலவழித்து இருந்தனர்.

 

மிச்சப் பேரை அனுப்பினாலும் சிவனே என்று என்னையும் ஒரு திட்ட முகாமையாளரையும் (Project manager) மட்டும் வைத்து இருந்தனர். எனக்கு மென்பொருள் வடிவமைப்பு மற்றும் உருவாக்கும் துறையிம் 10 வருடங்களுக்கும் மேலாக அனுபவம் இருந்தாலும், database மற்றும் server போன்ற பிரிவுகளிலும் அனுபவம் இருப்பதால் தான் வைத்து இருக்கினம் என்று நினைத்து இருந்தேன். (..சார் நெனப்பு தான் பிழைப்பை கெடுப்பது சார்..)

 

என் மேலாளரும், HR manager உம் சில நிமிடங்கள் கதைத்து கொண்டு இருக்கின்றனர்.

 

என் படபடப்பு விளக்கு "ஆஹா ஒரு பிரச்சனையும் இல்லை போல" என்று நினைத்து மெதுவாக எரியத் தொடங்கிய அடுத்த வினாடி,

 

"Raj can you come for a minute' என்று மேலாளார் கூப்புடுகின்றார்.

 

என்ன நடக்கப் போகின்றது என்பது புரிந்து விட்டது..

 

 

 

 

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பே வேலை போனது என்று இருக்கு.. அப்புறம் என்ன சஸ்பென்ஸ் சார்? EI க்கு விண்ணப்பம் குடுத்துட்டு இன்னொரு காட்டுப்பக்கமா போக வேண்டியதுதானே..! :o:D

ஒரு கோவிலில் பாதிரியார் புதிதாக பொறுப்பெடுத்து இருந்தார்...  ஆள் நல்ல மனுசன் ஆனால் என்ன தன்னை சுற்றி இருக்கும் எல்லாரும் கொஞ்சமாவது படித்து இருக்க வேணும் எண்டு நினைப்பார்...  

 

அதே கோயிலில் மணி அடிக்கும்  வேலையில் குறைந்த சம்பளத்துக்கு இருந்தவர் அறவே பள்ளிக்கூடம் பக்கம் போகாதவர் ( கிட்டத்தட்ட என்னை மாதிரி எண்டு வைச்சு கொள்ளுங்கோவன்... )     பொறுப்பெடுக்க வந்த பாதிரியார் முன்னால் போய் நிக்கிறார்...  பாதிரியாரும் எல்லாரும் எதிர்பாக்கிற மாதிரி   " தம்பி நீ என்னடா படிச்சிருக்கிறாய்..??"  எண்று கேக்கிறார்...     அவனும் தான் பள்ளிக்கூட பக்கமே போகாத சோகத்தை சொல்ல    பாதிரியார்  " எனக்கு ஒரு 2 ம் வகுப்பாவது படிச்சவனாக இருந்தால் தான் எனக்கு இங்கை உதவியாக இருக்கும் எண்டும்...  உனக்கு தகுந்த மாதிரி  இருக்கும்  வேலையை பார் எண்று அனுப்பியும் விடுகிறார்... 

 

எங்கட வேலை இல்லாத பெடியும் வேலைக்காக ஊர் எல்லாம் திரிஞ்சு பாக்கிறான் வேலை கிடைக்கேல்லை...   சரி நானாக ஒருவேலையை உண்டாக்குவம் எண்டு  ஊரிலை எல்லாம் கடன் வாங்கி ஒரு பெட்டிக்கடை வைச்சு பிழைக்கிறான் ( கடுப்பாகாங்கோ இந்தா முடிச்சிடுறன்....  )  ஒரு பத்து வருசம் களிச்சு பெட்டிக்கடையை இன்னும் பெரிசாக்கி  நல்ல ஒரு வருமானம் வரும் கடையாக வைத்து இருந்தான்...   நல்ல வருமானம்... 

 

இப்ப பழைய வேலை செய்த கோயிலை அவனாலை மறக்க முடியவில்லை...  ஒரு பத்தாயிரம் ரூபாவை எடுத்துக்கொண்டு ஒருநாள் கோயிலுக்கு போகிறான்...  அங்கை பாதிரியாரிட்டை அந்த பத்தாயிரம் ரூபாவை கோயிலுக்காக  குடுக்கிறான்... 

 

அப்போவும் பாதிரியார் நீ என்ன வேலை செய்கிறாய் என்கிறார்...??   அவன் கடை வைத்து இருக்கிறேன் என்கிறான்... !  

 

நீ என்ன படித்து இருக்கிறாய் என்கிறார் பாதிரியார் ...??    நான் பள்ளிக்கூடம் போனதில்லை என்கிறான் அவன் ... !

 

நீ படிக்காமலே இப்படி இருக்கிறாயே நீ கொஞ்சமாவது படித்திருந்தால்...???   அவன் அவசரமாக சொல்கிறான்...   " உங்கட கோயிலில் மணி அடித்து கொண்டு இருந்து இருப்பேன் "... 

 

 இப்போ இருப்பதை விட புதிய நல்ல வேலைக்கு அடிப்போடும் நிழலிக்கு வாழ்த்துக்கள்... 

Edited by தயா

  • தொடங்கியவர்

மிச்சம்..

 

"ஆஹா ..ஆப்புடி" என்று மனம் பதைக்க உள்ளே போகின்றேன்.

 

மேலாளர் பலமுறை பலருக்கு சொல்லிய, நல்லா பாடமாக்கிய சொற்களை தெரிந்தெடுத்து "மவனே உனக்கு வேலை காலி" என்பதை நாகரீகமாகச் சொல்கின்றார்.

 

மற்றவர்களை சடுதியாக வீட்டுக்கு அனுப்பிய காலத்தில் எனக்கும் இது நடக்கப் போகின்றது என்று நினைத்துக் கொண்டு இருந்தாலும், இடை வாரங்களில் எனக்கு புதிதாக Training எல்லாம் தருவதாக கூறி என் விருப்புகளை அறிந்த வண்ணம் கம்பெனி இருந்ததால் உடனடியாக அனுப்ப மாட்டார்கள் என நினைத்து இருந்தேன்.

 

மீண்டும் நினைப்புத்தான் பிழைப்பை கெடுப்பது என்ற வரி இங்கும் தேவையாக இருக்கு...

 

இன்றே விலகினால் 2 மாதங்களுக்குரிய சம்பளம் +இன்னபிற கொடுப்பனவுகள் தருவதாகவும், job agreement இல் சொல்லப்பட்டு உள்ளது போல 2 வார கெடு தந்து விலக்குவது என்றால் அந்த 2 வார சம்பளம் மட்டும்தான் என்றும் கூறுகின்றனர். அத்துடன் நான் சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்க மாட்டேன் என்று உறுதிப்படுத்தி என் கையெழுத்தினை போடச் சொல்லி கேட்கின்றனர்.

 

2 மாசச் சம்பளத்தினை தரும் அவர்களின் முடிவு எனக்கு சரியானதாகச் சொல்ல, கையெழுத்து போட்டு கொடுத்து விட்டு அறையை விட்டு வெளியே வருகின்றேன்.

 

HR manager போன பின் என் மேலாளார் வந்து தன் சக்திக்கு மேலாக இவை நடப்பதாகவும், தான் ஓரளவுக்கேனும் சண்டை பிடித்தமையால் தான் 2 மாசச் சம்பளத்தின தருவதற்கு கூட சம்மதித்தார்கள் என்றும் கூறுகின்றார். எம் கம்பெனியை வாங்கிய அமெரிக்க கம்பெனியின் முடிவுகள இவை என்கின்றார்.

 

சரி, என்று விட்டு என் அனைத்து பொருட்களையும் எடுத்துக் கொண்டு வெளியேறுகின்றேன்.

 

------------------------------------------------------------------------------

 

இதனை ஏன் இங்கு எழுத தொடங்கினேன் என்றால், இதன் அடுத்த கட்டமாக புதிய வேலை தேடுதல் நிகழ இருப்பதால் அதில் வரும் அனுபவங்களில் எழுதக் கூடியவற்றை எழுதுவதற்கும், திடீர் வேலை இழப்பினால் உருவாகக் கூடிய தற்காலிக பிரச்சனைகள் பற்றி எழுத நினைப்பதாலும் ஆகும்.

 

இனி வேலை தேடுதல் தொடர்பாக......

  • தொடங்கியவர்

---

 

சரி நான் வேலை இழந்தது பற்றி வீட்டை வந்து மனுசிக்கு சொன்னவுடன் அவர் சொன்ன விடயங்களில் சிலது

 

1. நீங்கள் அந்தாள் அர்ஜுனை தடை செய்த பாவம் தான் இப்படி நடக்க வைத்து இருக்கு

2. ஹைய்யா... நான் படிக்க போகும் காலத்தில் உங்களுக்கு வேலை இல்லாமல் போயிருக்கு.. தார EI யுடன் அம்பலம் இணையத்துக்கு விளம்பரம் எடுக்க முயன்று அதில் வரும் வருமானத்துடன் பிள்ளைகளையும் வீட்டில் இருந்து பார்த்துக் கொண்டு குடும்பத்தினை ஒரு வருடத்துக்கு கொண்டு போக முடியாதா

3. இன்றிரவு என்ன சமைக்க?

தலைப்பே வேலை போனது என்று இருக்கு.. அப்புறம் என்ன சஸ்பென்ஸ் சார்? EI க்கு விண்ணப்பம் குடுத்துட்டு இன்னொரு காட்டுப்பக்கமா போக வேண்டியதுதானே..! :o:D

 

எல்லாம் வீட்டிலை பாக்கிற சீரியல்களின் தாக்கம்...   !   

 

பெரிசா  நிறையவா எழுதினா  திட்டுவாங்கள் எண்ட பயம் ...  இப்ப கிருபண்ணையை கலாய்கிறது இல்லையா...  அது மாதிரி....! 

  • தொடங்கியவர்

எல்லாம் வீட்டிலை பாக்கிற சீரியல்களின் தாக்கம்...   !   

 

பெரிசா  நிறையவா எழுதினா  திட்டுவாங்கள் எண்ட பயம் ...  இப்ப கிருபண்ணையை கலாய்கிறது இல்லையா...  அது மாதிரி....! 

 

ஹி ஹி....

 

உண்மை என்னவென்றால் நான் இன்னொரு இடத்தில் எழுதிவிட்டு இங்கு ஒட்டுவது இல்லை. அந்தளவுக்கு ஒரு சோம்பேறி. யாழிலேயே எழுதி உடனே post பண்ணுவதுதான் நான் ஒரே செய்வது. ஆனால் இப்படி செய்ய வெளிக்கிட்டு கனக்க தரம் பந்தி பந்தியாக எழுதிய பின் தவறுதலாக இன்னொரு பட்டனை அழுத்தி ஒரே நொடியில் எழுதிய அனைத்தையும் post பண்ண முதல் இழந்து இருக்கின்றேன். அதால கொஞ்சம் கொஞ்சமாக எழுதி post பண்ணுவது.

 

அத்துடன், எங்கள் வீட்டில் எந்தவொரு சீரியலும் பார்ப்பதில்லை. அதோட, ஒரு தமிழ் ரிவி சனலும் வீட்டில் இல்லை.

 

 

 இப்போ இருப்பதை விட புதிய நல்ல வேலைக்கு அடிப்போடும் நிழலிக்கு வாழ்த்துக்கள்... 

 

வாழ்த்துகளுக்கு நன்றி தயா..

 

கண்டிப்பாக முன்பு செய்த வேலையை விட நல்லதொரு வேலையை தேடிக்கொள்வேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்குத்தான் பிரான்சிலை  இருக்கவேணும். வேலை போனாலும் காலாட்டிக்கொண்டு வீட்டிலை இருக்கலாம் சம்பளத்திலை 80 வீதம் வந்துகொண்டிருக்கும் ஒரு வருசத்துக்கு  அதை வைச்சே ஓடலாம்.பிறகு ஆறுதலாய் வேலையை தேடலாம்.

அத்துடன், எங்கள் வீட்டில் எந்தவொரு சீரியலும் பார்ப்பதில்லை. அதோட, ஒரு தமிழ் ரிவி சனலும் வீட்டில் இல்லை.

 

சாறி பாஸ்...  உங்கட நிலமை மிகவும் கஸ்ரம்... 

 

இந்த சீரியல் போற நேரம் மட்டும் தான் நான் வீட்டிலை நிம்மதியாக இருக்கிற மாதிரி ஒரு பீலிங்...   நீங்க குடுத்து வைச்சது அவ்வளவுதான்.... : :lol:  :lol:  :lol:

  • தொடங்கியவர்

இதுக்குத்தான் பிரான்சிலை  இருக்கவேணும். வேலை போனாலும் காலாட்டிக்கொண்டு வீட்டிலை இருக்கலாம் சம்பளத்திலை 80 வீதம் வந்துகொண்டிருக்கும் ஒரு வருசத்துக்கு  அதை வைச்சே ஓடலாம்.பிறகு ஆறுதலாய் வேலையை தேடலாம்.

 

இங்கு 60 வீதம் மட்டும்தான். :(

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு 60 வீதம் மட்டும்தான். :(

கிழமைக்கு நானூறுதான் அதிகபட்சம் என்று கேள்விபபட்டனே..

  • தொடங்கியவர்

கிழமைக்கு நானூறுதான் அதிகபட்சம் என்று கேள்விபபட்டனே..

 

5 வருடங்களுக்கு முன் 1750 கிடைத்தது எனக்கு

  • கருத்துக்கள உறவுகள்

"பேசாமல் மாடு மேய்க்க பழகியிருக்கலாம்.. பாலைக் குடித்து தயிர் சாப்பிட்டு சந்தோசமாக இருந்திருக்கலாம்"

 

தற்செயலாக இதை இன்று பார்த்ததும்.. என்னாச்சு இந்தாளுக்கு.. நல்லாத் தானே இருந்திச்சு என்று நினைச்சுக் கொண்டே.. பேசாமல் போயிட்டன். இப்ப தானே விளங்கிச்சுது...!

 

இழந்ததை விட முயற்சி இருந்தால் பெறுவது பெரிதாக அமையலாம். விடாமல் முயற்சி செய்யுங்கள். முன்னேற்றம் வரும் என்று பெரியவங்க சொல்லி இருக்காங்க..! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

5 வருடங்களுக்கு முன் 1750 கிடைத்தது எனக்கு

1750*26/.6 = 76000 ஹிஹி.. கண்டுபிடித்துவிட்டேன்.. :D

இடைக்கிடை வேலை இல்லாமல் இருக்கிறதும் பரவாயில்லை போலை இருக்கு.. :huh: ஆனால் வேலைக்குறிப்பில் பிற்பாடு இடக்கு பண்ணலாம்..

கெட்டது நடக்கிறது நடக்குறது நன்மைக்கு. சிறிய நிறுவனத்தில் வேலை செய்த நல்ல அனுபவம் இருக்கும். இதனை வைத்து  பெரிதாகச் சாதிக்கலாம். கொஞ்சம் முயற்சி அவசியம்.  புதிய வேலை எடுத்த பின் இவ்வளவு காலமும் வீணாக்கி விட்டேன் எனத் தோன்றும்.

வெகு விரைவில் நல்ல வேலை அமைய வாழ்த்துக்கள்  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நிழலிக்கு வேலை போயிட்டுதா மிக்க சந்தோசம் :D உங்கள் மனைவி தான் பாவம் :lol: சீக்கிரம் புது வேலை எடுக்க வாழ்த்துக்கள் :)

  • கருத்துக்கள உறவுகள்

ஏதாவது படிக்க அரசு பணம் தந்தால் தேவையான courseஐ எடுக்கவும். தனிப்பட்ட புறஜெக்டுகள் செய்ய ஆட்கள் தேவை வரலாம். பணமாக தருவார்கள். தொடர்ந்து ஒரே துறையில்  வேலை செய்து சலிப்பு ஏற்படுவதால் சுவாரசியாமான ஒரு துறையை தெரிவு செய்வது மட்டுமில்லாமல் அத்துறையில் வேலைவாய்ப்பு, சம்பளம் போன்றவற்றை ஆராய்வது நல்லது. கிடைக்கும் ஓய்வு நேரத்தை மனைவி, பிள்ளைகளுடன் இன்பமாக களிக்கலாம். இருக்கும் அனுபவங்களை வைத்துக் கொண்டு தனியாக ஒரு தொழிலை தொடங்கலாம். தேடும் வேலைக்கு ஏற்ப Résuméஐ  தயார்படுத்தி வைத்திருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நிழலிக்கு வேலை போயிட்டுதா மிக்க சந்தோசம் :D உங்கள் மனைவி தான் பாவம் :lol: சீக்கிரம் புது வேலை எடுக்க வாழ்த்துக்கள் :)

 

அவர் கனடாவில்  இருப்பதை  மறந்து விட்டீர்களா?
எதோ லண்டனில் இருப்பது போல் சந்தோஷ படுகிறீர்கள் ?? 
 
அவரே வேலை போன கவலையில் இருக்கிறார்.
  • கருத்துக்கள உறவுகள்

சரண்டர் ஆயிட்டியளோ... நான் ஒரு வேண்டுவோம் திரி திறப்பம் எண்டு யோசிச்சன்...பிறகு நீங்கள் காதைப்பொத்தி அடிச்சாலும் எண்டு விட்டிட்டன்...உங்களுக்கு வேலை கிடைச்சிடும்.. அதைப்பத்தி எனக்கு சந்தேகம் இல்லை..ஆனால் அதுக்கிடையில் வீடு அல்லோலகல்லோலப்படபோகுது..  :(

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் இப்பிடி இடைக்கிடை நடந்தது தான், நிழலி!

 

ஆனால், நான் தேடிப்பிடிக்கும் புதிய இடம், பழையதை விடவும் எப்பவுமே நல்லதாகத் தான் இருக்கும்! :D

 

விரைவில், தகுந்த வேலை கிடைக்க வாழ்த்துக்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
பத்து வருடங்கள் முன்னர் ஒரு பெரும் IT நிறுவனத்தில் நிரந்தர வேலைக்கு சேர்ந்திருந்தேன்.
 
வேலை தந்த முகாமையாளரை இரண்டரை மாதத்தில் தூக்கி விட்டார்கள்.
 
தற்காலிகமாக ஒரு முகாமையாளரை அமெரிக்காவில் இருந்து தலைமையகம் அனுப்பி இருந்தது. 
 
அவர் இருந்த ஐந்து வாரத்தில், எனது மூன்று மாத 'probation period' முடிவுக்கு வர, உன் குறித்த மதிப்பீடுகளை பதிவு செய்யும் முன்னர், உன்னை எடுத்த முகாமையாளரை தூக்கி விட்டதால், எனக்கு விபரங்கள் போதாமையால் முடிவு  எடுக்க கஷ்டமாக உள்ளது.
 
எனினும், உனது 'குழுத்தலைவர்' உடன் பேசி அவர் தந்த விபரத்தினை வைத்து உன்னை நிரந்தரமாக்க சிபார்சு செய்கிறேன் என்றார். சில பத்திரங்களில் கை எழுத்து இட்டு, எனது கை எழுத்தினையினையும் வாங்கி எனக்கும் ஒரு copy தந்து HR மேல் விபரங்களை அனுப்பி வைக்கும் என்று சொல்லி வைத்தார். 
 
அடுத்த வாரமே புது முகாமையாளர் அமெரிக்காவின் இன்னுமொரு பகுதியில் இருந்து வந்து சேர்ந்தார். இவர் ஒரு பிரிட்டிஷ் காரர் ஆகையால் ஊருக்கு திரும்பி வந்து வேலை பொறுப்பெடுத்துக் கொண்டிருந்தார்.
 
முதல் நாள் அறிமுகத்திலேயே ஆள் சரியில்லையே என மனம் சொல்லியது. அடுத்த வாரம் அளவில் அங்கிருந்த 'ஆசிய' ஊழியர்கள் மத்தியில் புதியவர் 'bit funny' என்ற அபிப்பிராயம் பரவி இருந்தது.
 
இரண்டாவது வாரம் என்னை அழைத்து,நீ புதியவர் எனபது எனக்குத் தெரியும். இங்கே ஒரு கடிதம் வைத்திருக்கிறேன். இதன்படி உனது 'probation period' மூன்று மாதத்தினால் நீடிக்கப் படுகிறது. பின்னர் உனது மதிப்பீட்டினை வைத்து நான் எனது முடிவினை செய்வேன் என்று கூறி தான் சொன்ன கடிதத்தினை எடுத்து, எனக்கு முன் கையெழுத்து வைத்து கையிலேயே தந்து விட்டார்.
 
விடயத்தினை பெரிதாக எடுக்காமல், எனது வேலையில் எனக்கு நம்பிக்கை இருந்ததாலும், பேசாமல் வாங்கி கொண்டு வந்து விட்டேன்.
 
இடையே ஒரு சீக்கியரும், ஒரு சீனரும் வேறு வேலை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டனர். போகும் போது, புது முகாமை குறித்து எனக்கு எச்சரிக்கை  செய்து தான் போனார்கள். 
 
சரியாக மூன்று மாதம் முடிய 2 நாட்கள் இருக்கையில், ஒரு வியாழன் மாலை எல்லோரும் போய் விட்டார்கள். தனியே ஒரு அறிக்கை தயார் செய்து முடிக்கையில், பின்னே இருவர்.
 
திரும்பிப் பார்த்தால், HR முகாமையாளரும், நம்ம முகாமையும். அதே 'Have you got a sec'?
 
என்ன விடயம் என்றால், நீ 'probation fail' ஆகி விட்டாய். எனவே உன்னை போக விடுகின்றோம். 
 
எனக்கு இருந்த அதிர்ச்சியில் எழுந்து கோபத்துடன் வந்து விட்டேன்.  அன்று இரவு நித்திரை வரவில்லை. தீடீரென எழுந்து என்னைப் பார்த்த  மனைவி ஒரே ,  ஒரு வசனம் சொன்னார்: இந்த வேலையை நினைத்தா இங்கே வந்தீர்கள்?  பேசாமல் படுங்கள். எல்லாம் நன்மைக்கே.
 
அசந்து தூங்கிப் போனேன். காலையில் உறுதியுடன் எழுந்தேன். செய்ய வேண்டிய வேலைகள் இரண்டு. வேலை தேடுவது. இரண்டாவது அந்த முகாமைக்கு 'சட்ட ரீதியாக குடைச்சல்' கொடுப்பது. காரணம் அங்கே சட்ட ரீதியான தவறுகள் நடை பெற்று இருக்கக் கூடிய சந்தர்ப்பங்கள் இருந்ததை உணர்ந்திருந்தேன்.
 
இரண்டாவது வாரமே, அதை விட மிகப் பெரிய நிறுவனத்தில் 'contacator' ஆக வேலை எடுத்தேன். (இனிமேல் நிரந்தர வேலை வேண்டாம் என முடிவு எடுத்து இன்று வரை கடைப் பிடிக்கின்றேன்)   
 
ஒரு அரச இலவச சட்ட ஆலோசனை நிறுவனத்தில் ஆலோசனை கேட்கப் போனேன். அங்கு இருந்தவரோ, ஒரு கறுப்பு இனத்தவர். சகலத்தினையும் கேட்டு விட்டு, ஆகா, நல்லா மாட்டுப் பட்டு இருக்கிறார்கள். நான் சொல்வது போல செய். ஒரு சட்ட நிறுவனத்துக்கும் போகாதே. நீயே கடிதம் போடு என சில 'அரிய' ஆலோசனைகள் தந்தார்.
 
அவரது ஆலோசனைப் படி, HR பிரிவு தனியே இருக்கும் நிறுவனத்தில்  அந்த முகாமை, எந்த அதிகாரத்தில் எனது நீடிப்பில் கை எழுத்து போட்டார்? HR அதை ஏன் செய்ய வில்லை.
 
இடையே வந்த முகாமை நிரந்தரமாக்கியது எவ்வாறு? அது குறித்து HR நிலைப்பாடு என்ன?  
 
புதிய முகாமைக்கு 'அனைவருக்கும் சமஉரிமை' குறித்த பயிற்சி வழங்கப் பட்டதா? 
 
ஆம் ஆயின் எப்போது? பயிற்சி அளித்தவர் இவர் குறித்து தனது கருத்தாக எதுவித பதிவும் செய்தாரா? 
 
இல்லையாயின், ஏன் இல்லை.
 
இவர் பதவிக்கு வரும் போது இருந்த ஆசிய ஊழியர்கள் எத்தனை பேர்?
 
இப்போது இருப்பவர்கள் எத்தனை பேர்?
 
காரணம் என்ன?
 
என மொத்தம் 62 கேள்விகள் அனுப்பி இருந்தேன். 
 
மேலும் வழக்கினை பலப் படுத்துவதற்காக 'தொழில் நீதிமன்றில்' ஒரு வழக்கினையும் பதிவு செய்தேன். ஆறு மாதத்துக்கு இடையில் பதவி நீக்கப் படின் unfair dismissal, வழக்கு தள்ளு படி செய்யப் படும் என்பதால்  கறுப்பர் ஆலோசனைப் படி, unfair dismissal basing on race discrimination எனும் பிரிவின் கீழ் இதனை பதிவு செய்து இருந்தேன்.
 
கடிதம் கிடைத்த மூன்றாம் நாள், என்னை தொலை பேசியில் அழைத்த HR, தவறு நிகழ்ந்து விட்டதாயும், மறுபடியும் வேலைக்கு எப்ப வருகின்றாய் என்பதாக கேட்டார்கள்.
 
அட எங்..   கொக்கா மக்கா....
 
கறுப்பரிடம் சொன்னேன். வயிறு குலுங்கச் சிரித்தார். தூண்டில்ல நல்ல மீன் சிக்கி இருக்கிறது. ஏதோ எனக்கு இரண்டு pint வார் என்றார்.
 
போங்கடா, நீங்களும் உங்கட வேலையும் என்று, நியாயமான நஷ்ட ஈடு வாங்கிக் கொண்டு வழக்கினை வாபஸ் பெற்றேன்.  
 
இதனை எதற்கு சொல்கிறேன் எனில், ஒரு வழி அடிபட்டால், நிழலி பல வழி திறக்கும். 

 

Edited by Nathamuni

கடைசியாகச் செய்த வேலைய நான் தான் விட்டு விட்டு வந்தேன்.
 
வேலை செய்யும் போது மறைமுகமா என் CEO க்கு மூளை குறைவு என்று மறைமுகமாச் சொல்லி இருந்தேன்.
 
இது எப்படி என்றால்.. இப்புடி..
 
அவர் சொன்னார்: You need to explain us in detail.  We are not like you.. imagine that we are ordinary ppl.  
 
 
அதற்கு நான்: I figured that out long time ago.
 
 
அப்புடி நடந்திருந்தது.
 
இது நடந்து கனகாலம்.
 
ஆனால் கடைசி நாள் வீடு போகும் போது Reference கடிதம் தந்தார்கள்.
 
தரும்போது சொன்னார். எனக்கே மூளை இல்லை என்று சொன்னாய். வேறு எங்கும் இப்படிச் சொல்லாதே.!!
 
(அவர் பெயரின் பின்னால் ஒரு PhD. இருக்கிறது. அத்தோடு உலகின் முதல் தர‌ நிறுவனமொன்றின் முதலாவது செயற்கை அறிவு (AI) புறொஜெக்ட்டுக்கு அவர் தான் முகாமையாளராக இருந்தவர்.
 
 
 
***************
 
 
வேலை இல்லாமல் இருக்கும் போது அடுத்த பிள்ளைக்கு தயார் படுத்தல் "முன்னெடுப்புகளை " மேற்கொள்ளலாமே நிழலி. :icon_idea:
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=116367&page=3

 

அப்பவும் நான் யோசிச்சனான்.....

 

http://www.youtube.com/watch?v=JJEyj_QAN3k

வருத்தமான செய்தி. IT துறையில் இதெல்லாம் சகஜம் இப்ப. விரைவில் வேலை கிடைக்க வாழ்த்துக்கள். உங்க பக்கத்து நாட்டிலே நல்ல வாய்ப்பு இருக்கக்கூடும். அங்கு போனால் தெலுங்கர்களோடு போட்டி போடலாம். அப்படியே கொல்கொத்தா, பூனே அல்லது ஹைத்ரபாத்திலுள்ள developers ஓட நல்ல கடலை போடலாம் :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.