Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது (edited)
இன்று குயிலினம் பாடமறந்தது....எங்களின் வீதிகள் சோபை இழந்தது..  

 

 

15083_241317606019130_545762382_n.jpg

 

உன் நினைவு சுமந்து...எல்லாம் தொலைந்து... நடைப்பிணமாய் நாம்....
 
எல்லா இழப்போடும்
இதுவுமொரு பேரிழப்பே
யார் இட்ட சாபம் இது..? 
 
வீரவணக்கம் அண்ணா..

 

 

http://www.youtube.com/watch?v=hwq83qE93_w

Edited by சுபேஸ்
  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்தியாவுக்கு... உண்ணாவிரதம் என்றால் என்ன என்று, இருந்து காட்டிய தியாக தீபம் திலீபனுக்கு வீர வணக்கங்கள்.

  • Like 1
Posted

644055_595763843802722_876296134_n.jpg

 

ஈழ விடுதலைப் போராட்டமானது தியாகங்களின் சிகரங்களைத் தொட்ட சந்தர்ப்பங்களில், தியாகச் செம்மல் லெப்.கேணல் திலீபனின் தியாகம் மிக முக்கியமானதாகும். தமிழர்களின் விடுதலைப் போராட்டம் பல சந்தர்ப்பங்களில் ஆயுத ரீதியிலான வன்முறை வழியைத் தவிர்த்து அகிம்சை வழியை கடைப்பிடிக்க முனைந்த போதெல்லாம், எதிர்மறையான விளைவுகளையும் ஏமாற்றங்களையுமே பரிசாகப் பெற முடிந்தது.

திலீபனின் மரணம் உணர்த்துவது ஒன்றே ஒன்றுதான் அம்ஹிசை வழி போராட்டத்தை என்றுமே சிங்கள பேரினவாதம் கண்டுகொள்ளாது மாறாக காலில் போட்டு மிதிக்கவே செய்யும். 

"I am confident that our people will, one day, achieve their freedom. It gives me great satisfaction and contentment that I am fulfilling a national responsibility to the nation." - Lt. Col. Thileepan...

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்தியாவுக்கு... உண்ணாவிரதம் என்றால் என்ன என்று, இருந்து காட்டிய தியாக தீபம் திலீபனுக்கு வீர வணக்கங்கள்.

 

 

26-ஆம் ஆண்டில் தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் மீள் நினைவுகள் ஒரு பார்வை
Posted

வீர வணக்கங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உலக  வரலாற்றில் ஆயுதப்போராட்டம் என்றாலும்

சாத்வீகம்  என்றால்  என்ன  என்றாலும்

தமிழனுக்கு  அவை அப்பழுக்கற்று தெரியும் என

தன்னை  வருத்தி  கூறிச்சென்றவன்

இவனது  வயிறு சுருங்கியபோது

சுருங்கியது உலகமும்

காந்தி  தேசம் என்று  கர்ச்சித்தவர்களும் தான்

அத்தனை முகங்களையும் காட்டிச்சென்றவன்

 

உன்  பெயர் உலக  வரலாற்றில்  நிச்சயம் பொறிக்கப்படும்

அதற்காக நாம் உழைப்போம்

 

இவன்  காலத்தில்  வாழ்ந்த பெருமை எனக்கு.

திலீபனுக்கு வீர வணக்கங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எமக்காக உடல் உருக்கி உயிர் நீத்த வீரனுக்கு வணக்கங்கள்

Posted

எமது இனத்துக்காக உடலை உருக்கி உயிர் நீத்த திலீபன் அண்ணாவுக்கு வீரனுக்கு வணக்கங்கள் !

Posted

1173738_531463916931702_486585196_n.jpg

 

இடிந்தகரையில் தோழர் . திலீபனுக்கு வீரவணக்கம்... 

 

Posted

திலீபன் அண்ணாவின் நினைவு தினம் வரும் ஒவ்வொரு முறையும், அவர் உண்ணாவிரதம் இருந்ததில் இருந்து இந்திய துரோக தேசத்தின் அலட்சியத்தினால் கொல்லப்பட்ட நாட்கள் வரைக்குமான தினங்களின் நினைவுகளும் வந்து போகும்.

 

மக்களே புலிகளாகவும் போராளிகளாகவும், புலிகளே மக்களாகவும் ஒன்றுடன் ஒன்றாக கலந்து இருந்த நாட்கள். ஒவ்வொரு தினமும் திலீபன் அண்ணாவுக்காக மெய்யுருகிப் போய் போராட்ட பணி செய்யும் மாணவர்களாக இருந்த நாட்கள் அவை. துண்டுப் பிரசுரம் அடிக்க வசதி இல்லாத மாணவர் பருவம் என்பதால், கையால் எழுதி எங்கள் ஊர் முழுதும் சின்ன சின்ன சுவரொட்டிகள் செய்த காலம் அது.

 

அண்ணாவின் இறுதி மூச்சும் நின்று விட்ட அறிந்து கோபம் கொண்டு இந்திய அமைதிப் படையினைக் காணும் போதெல்லாம் காறி துப்பித் திரிந்தோம். வாழை மரங்களை ஒவ்வொரு வீதி சந்திகளிலும் தோரணங்களுடன் கட்டி சாத்தி இருந்தோம். ஊரெங்கும் மலர்களாள் அஞ்சலி செலுத்தி கண்ணீர் மல்கிக் கிடந்த காலம் அது.

 

இன்று நினைக்கும் போதும் அன்று அந்த நாட்களில் எம் நாசிக்குள் போயிருந்த சோகம் கலந்த ஒரு வாசனை/ நெடி இன்னும் மறக்காமல் மனசுக்குள் எழுகின்றது. அண்ணாவின் இறுதி மூச்சினை கலந்து வந்த நெடி அது. சாவின் பின்னும் கூட மறக்காது.

 

 

 

 

Posted
இந்த மகாத்மா ,மாவீரர் தனது யாகத்தை முடிக்கும் போது விடுதிச்சாலையில் தங்கியிருந்து கல்வி கற்ற காலம் ....அடிக்கடி நல்லூருக்கு சென்று அவர் முன் தவம் இருந்த நாட்கள் இன்னும் இன்னும் என் கண் முன் நின்று ஊசலாடுகிறது .......அவர் வீரச்சாவை அடந்த தருணம் என்னிடம் என் நண்பன் கேட்டான் ஏண்டா தீலீபன் அண்ணா சாகனும் ...அவன் கேட்ட கேள்விக்கு அன்று விடை எனக்கு தெரியவில்லை . .
 
 
வீரவணக்கம் அண்ணா .
 
[ கள உறவுகள் யாராவது தீலிபன் அண்ணாவிற்காக வரிகளை தாருங்கள் இந்த இனிமையான களத்தினால் பாமாலையாக சமர்ப்பிப்போம் நன்றிகள் ]

 

Posted

லெ.கேணல் தியாகி  திலீபனுக்கு வீர வணக்கங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
திலீபன் அண்ணாவின் ஆத்மா எப்பவோ சாந்தியடைந்திருக்கும்.வீர வணக்கங்கள்
 
தீலிபன் அண்ணாவின் மரணத்திற்கு இந்தியா,இலங்கை அரசுகளோடு புலிகளும்,மக்களாகிய நாங்களும் பதில் சொல்ல கடமைப்பட்டு உள்ளோம்.கடைசி நேரத்தில் தீக்சிட்டோடு,தலைவர் நடத்திய பேச்சு வார்த்தையின் பிறகு அவர்களது[இந்தியாவினது] வாய் மொழி உறுதியை ஏத்து தீலிபன் அண்ணாவை காப்பாற்றி இருக்கலாம்.இந்தியா எப்படியும் ஏமாத்தித் தான் இருக்கும் ஆனால் திலீபன் அண்ணாவைக் காப்பாற்றி இருக்கலாம் என்பது என் கருத்து  
 


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அர்ச்சனா உண்மையில் கோமாளியா அல்லது யாழ்பாண/புலன்பெயர் தலைமுறையின்  மனோநிலையை நன்கு Stady பண்ணிய மனோதத்துவவியலாளரா?   பிரச்சனைகளை  தீர்ப்பதை விட  பிரச்சனைக்கு காரணமானவராக தம்மால்  கற்பிதம் செய்தவர்களை நடுசந்தியில் நாக்கை புடுங்கிற மாதிரி கேள்வி கேட்டாலே  ஆர்கஸம் அடையும் மனோநிலை கொண்ட  ஒரு கூட்டத்தை திறமையாக புரிந்து கொண்டு செயற்படுகிறார்.   இவரது செயற்பாடுகள் வெறும் பேஸ்புக், யுருயூப் விசிலடிப்புகளுக்காக மட்டுமே. தொண்டர் உதவியாளர்கள் என்ற பிரச்சனை 2002 ம் ஆண்டில் இருந்து உள்ள பிரச்சனை.  அதை பற்றி அர்சனாவுக்கும் நீண்ட காலமாக தெரியும்.  இதனை  சுகாதார அமைச்சுன் கவனத்துக்கு வருவதற்கான போராட்டங்கள் ஏற்கனவே நடைபெற்று அந்த விடயம்  ஒரளவு அது முன்னேற்ற மான நிலையிலும் உள்ள நிலையில் அதனை மென்மேலும் வலுப்படுத்தக்கூட வகையில் சுகாதார அமைச்சுடன்  நேரடியாக பேசக்கூடிய  இயலுமை பாராளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் அர்ச்சனாவுக்கு உண்டு.  இருப்பினும் அதை விடுத்து சத்தியமூர்த்தி அவர்களின்  அலுவலக்கதுக்குள் அத்து மீறி  நுளைந்தது அவரோடு இவருக்கு இருக்கும்  தனிபட்ட ஈகோவுக்காகவும் இவரது சமூகவலைதள விசுலடிச்சான் குஞ்சுகளுக்காகவுமே.  மேலும் தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்ததில் இருந்து நாடு  முழுவதும்  ஊழல் ஒழிப்பை முக்கிய பிரச்சனையாக கையிலெடுத்தி ருக்கக்கூடிய நிலையை புரிந்து கொண்டு   இவ்வாறு தடாலடியாக இவர் நடந்து கொள்வதும் ஒரு தந்திரம் தான். தானாக கனியும் கனிகளை தான் புகைபோட்டு தான் கனிந்தது என்ற பிம்பத்தை உருவாக்கி அரசியல் ஆதாயம் தேடுவதும் நோக்கம்.    ஏற்கனவே மருத்துவர்களைக்கெதிராக இவரது குற்றச்சாட்டுகள் இவரால் ஊதிப் பெருப்பிக்கப்பட்டு மக்களுக்கு காட்டப்பட்டது. எதற்கும் இவரிடம் ஆதாரம் இல்லை. ஆதாரம் இல்லாத,  அவதூறுகளை கண்ணை மூடிக் கொண்டு  நம்பும் ஒரு   மக்கட் கூட்டதை நன்கு புரிந்து செயற்படுகிறார்.  பொதுத் துறை ஊழலை ஒழிக்க உண்மையாக மனப்பூர்வமாக இவர் விரும்பினால் ஆதாரங்களை திரட்டி அதை  அரசிடம் கையளிக்கலாம். பாராளுமன்றத்தில் ஆதாரங்களை முறைப்படி வெளியிடலாம்.
    • உண்மைகளை மூடி மறைத்தால் அது  மேற்குலகுக்கு ஆதரவானது என்றும் உண்மைகளை சொன்னால் அது மேற்குலகுக்கு எதிரானது என்று ஒரு புதிய கொள்கை வகுக்கப்படுகிறது யாழ் களத்தில்.  உண்மையைச் சொல்வது ❤️ லைக் வேண்டுவதற்காக அல்ல. 
    • இது என்கருத்தல்ல சாமியர் அவர்களே! உண்மையைப் பதிந்தேன்.  முன்னாளில் கருணா அம்மான் தலைவராலும் பாராட்டப்பட்ட சிறந்த போராளி, ஆனால் இன்று???????? வைத்தியர் சத்தியமூர்த்தி அவர்களும் முள்ளிவாய்க்கால் அவலத்தின்போது மக்களுக்கு ஆற்றிய தொண்டு மிகப்பெரிது, ஆனால் இன்று??????
    • விசுகர் என்று அழைத்தேன்,  பதிலில்லை. Mr. Minus என்றவுடன் ஓடி வந்துவிட்டீர்கள்.  🤣   ஏன் விசுகர், விபு க்களை மொத்தமாகக் குத்தகைக்கு எடுத்ததுபோல சொந்தம் கொண்டாடுகிறீர்கள்? வி பு க்கள் தொடர்பாக எதனை எழுதினாலும் -1 போடுகிறீர்கள் ? ஏன்?? 1977 கலவரத்துடன் நாட்டை விட்டு வெளியேறிய உங்களைவிட 2000 களின் பின்னர் வெளியேறிய ஆட்களுக்கு அதிகம் உண்மையான நாட்டு நடப்புக்கள் தெரியும். புரிந்துகொள்ளுங்கள்  😏  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.