Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேனிலவுக்கு வந்த இலங்கைத் தமிழர்.. ஊட்டி நீர்வீழ்ச்சியில் சிக்கி பலி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தேனிலவுக்கு வந்த இலங்கைத் தமிழர்.. ஊட்டி நீர்வீழ்ச்சியில் சிக்கி பலி.

ஊட்டி: யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ரீகன் என்ற இளைஞர் தனது மனைவியுடன் தேனிலவுக்காக ஊட்டிக்கு வந்திருந்தபோது அங்கு நீர்வீழ்ச்சியின் சுழலில் சிக்கி பரிதாபமாக மரணமடைந்தார்.

ஜெர்மனியில் பொறியாளராக பணியாற்றி வந்தவர் ரீகன். 29 வயதான இவருக்கும் ஜான்சி என்பவருக்கும் கடந்த புதன்கிழமையன்று சென்னையில் வைத்துத் திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பின்னர் மனைவி மற்றும் உறவினர்கள் சிலருடன் ஊட்டிக்கு தேனிலவுக்காகப் போயிருந்தார் ரீகன்.

சனிக்கிழமை இரவு முதுமலை புலிகள் காப்பகம் சென்று பார்த்து விட்டு இரவு அங்கேயே தங்கினர். பின்னர் நேற்று ஊட்டிக்கு வந்தனர். வழியில் கல்லட்டி நீர்வீழ்ச்சியில் அனைவரும் குளிக்கப் போனார்கள்.

தொடர் மழை காரணமாக அங்கு பாறைகள் பாசி படர்ந்து இருந்தன. இதனால் ஒரு பாறையில் ரீகன் ஏறியபோது அது வழுக்கி கால் தடுமாறி கீழே இருந்த தண்ணீரில் விழுந்தார் ரீகன்.

தண்ணீர் வேகமாக போய்க் கொண்டிருந்ததாலும், சுழல் இருந்ததாலும் அதில் சிக்கிக் கொண்ட ரீகன் உதவி கோரி அலறினார். அவரது மனைவி உள்ளிட்டோரும் உதவி கேட்டு கதறினர். தீயணைப்புத் துறைக்கும் தகவல் போனது.

ஆனால் ரீகன் தண்ணீருக்குள் போய் விட்டார். தீயணைப்புப் படையினர் வந்து நீண்ட நேரம் தேடியும் ரீகனை கண்டுபிடிக்க முடியவில்லை. நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் ரீகனின் உயிரற்ற உடல் கிடைத்தது.

ஈழத் தமிழர் ஒருவர் தேனிலவுக்காக வந்த இடத்தில் நீரில் விழுந்து பலியான தகவல் அறிந்ததும் மாவட்ட கலெக்டர் சங்கரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். பின்னர் ரீகனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக கோவைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

-தற்ஸ்தமிழ்-

  • கருத்துக்கள உறவுகள்

புதுமனைவிக்கு சொல்லொணாத்துயரம்.. ஆழ்ந்த இரங்கல்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

விதிப் பயன் வேறென்ன????

  • கருத்துக்கள உறவுகள்

மனைவி பெண்.. என்பதால்.. தண்ணியில் தத்தளிக்க விட்டிட்டு.. தான் சும்மா கத்திக்கொண்டு கரையில நின்றிருக்குது. அப்பாவிப் பயல்.. ஏமாந்திட்டான். உதவி கோரியவுடன் களத்தில் இறங்கி இருந்தால் காப்பாற்றி இருக்கலாம். :(:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ஆகவே, இப்படியான சம்பவங்களில் இருந்து தப்புவதற்காக நெடுக்ஸ் திருமணம் செய்ய விரும்பினால் ஆணையே திருமணம் செய்து கொள்ளுங்கள்.... என்ன சொல்ல.. எந்த இடங்களில் என்னென்ன விடயங்கள் கதைக்க வேண்டும் என்றே தெரியவில்லை...

  • கருத்துக்கள உறவுகள்

துயரமான சம்பவம்  ..ஆழ்ந்த இரங்கல்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ஆகவே, இப்படியான சம்பவங்களில் இருந்து தப்புவதற்காக நெடுக்ஸ் திருமணம் செய்ய விரும்பினால் ஆணையே திருமணம் செய்து கொள்ளுங்கள்.... என்ன சொல்ல.. எந்த இடங்களில் என்னென்ன விடயங்கள் கதைக்க வேண்டும் என்றே தெரியவில்லை...

கத்திக் குளறும் பெண்ணை விட காப்பாற்றக் கூடிய திறனும்.. முன்னெச்சரிக்கை கொடுக்கக் கூடிய.. விவேகமும் உள்ள பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம். ஆண்கள் எல்லோரும் துணிச்சல் மிக்கவர்கள்.. ரிஸ்க் எடுப்பார்கள் என்று நினைக்கக் கூடாது. அப்படி நினைப்பது உங்கள் தவறு.

மேலும்.. இதில ஒப்பாரி வைச்சாப் போல.. எதிர்காலத்தில் இறந்தவர் பிழைத்து வந்திடுவாரா..??! அதிலும் இப்படி ஒரு சம்பவம் மீள நடக்காமல் இருக்க தேவையான வழிமுறைகளைப் பேசுவது கூடிய நன்மை ஆகும். :(:rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
ஆழ்ந்த இரங்கல்கள்.
 
நெடுக்ஸ் ஆபத்தான தருணத்தில் உதவி செய்ய விரும்பினாலும் நீச்சல் தெரியாவிட்டால் ஆணோ அல்லது பெண்ணோ உதவி செய்ய முடியாது. அபயக்குரல் எழுப்பி யாரையாவது உதவிக்கு அழைக்க முடியும்.
  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள். பாவம் புது மனைவி :(

மனைவி பெண்.. என்பதால்.. தண்ணியில் தத்தளிக்க விட்டிட்டு.. தான் சும்மா கத்திக்கொண்டு கரையில நின்றிருக்குது. அப்பாவிப் பயல்.. ஏமாந்திட்டான். உதவி கோரியவுடன் களத்தில் இறங்கி இருந்தால் காப்பாற்றி இருக்கலாம். :(:rolleyes:

நெடுக்கரின் இந்தக் கூற்று வன்மையான கண்டனத்துக்குரியது. காப்பாற்றக்கூடிய ஏது இருந்திருந்தால் நிச்சயமாக அந்த இளம் மனைவி காப்பாற்றியிருப்பாள். இங்கு முக்கியமான ஒன்றைச் சொல்ல விரும்புகின்றேன் இவ்வாறான அநேக விபத்துக்களுக்கு பொதுவாக அந்த ஆண்களே கரணமாக இருக்கின்றனர். தங்களின் வீரதீர சாகசங்களைக் காட்டமுற்பட்டு அகப்பட்டுக்கொண்டவர்கள் பலர்.

நாங்கள் திருமணமான புதிதில் அம்பேவலயில் இருக்கும் மீபிலிமன்ன நீர்த்தேக்கத்துக்குச் சென்றிருந்தோம்.  போகிற வழியில் நீர்த்தேக்கத்திலிருந்து வரும் கால்வாய் வற்றியிருந்ததால் அதில் இறங்கி படம் எடுக்கவிரும்பினேன். ஆனால் எனது மனைவி விடவில்லை. அன்று ஞாயிறு தினமாதலால் நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் பின்னேரத்தில் எப்பவும் திறக்கப்படும் எனக்கூறினாள். பின்னர் நியூஸிலான்ட் பாமுக்கு போய்விட்டு வரும்வழியில் அக்கால்வாயைப் பார்த்தபோது தண்ணீரால் முழுவதும் நிரம்பி வேகமாக ஓடிக்கொண்டு இருந்தது. மனைவி ஓரு அதிகாரத்துடன் கூடிய காதல் பார்வை பார்த்துக் கொண்டாள்.

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு என்னா ஒரு வில்லத்தனம்!

இறந்தவர்கும் இந்த கொடிய சமூகத்தின் வார்த்தைகளால் தினமும் சாகடிக்கப்படப் போகும் அந்த அப்பாவி பொண்ணுக்கும் என் ஆழந்த இரங்கல்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு என்னா ஒரு வில்லத்தனம்!

இறந்தவர்கும் இந்த கொடிய சமூகத்தின் வார்த்தைகளால் தினமும் சாகடிக்கப்படப் போகும் அந்த அப்பாவி பொண்ணுக்கும் என் ஆழந்த இரங்கல்கள்.

நீங்க இன்னும் 18ம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இனி எங்கட ஆட்கள் சொல்லப்போகினம் பெட்டைக்கு செவ்வாய் தோஷம் என்று  

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள். பாவம் புது மனைவி :(

நெடுக்கரின் இந்தக் கூற்று வன்மையான கண்டனத்துக்குரியது. காப்பாற்றக்கூடிய ஏது இருந்திருந்தால் நிச்சயமாக அந்த இளம் மனைவி காப்பாற்றியிருப்பாள். இங்கு முக்கியமான ஒன்றைச் சொல்ல விரும்புகின்றேன் இவ்வாறான அநேக விபத்துக்களுக்கு பொதுவாக அந்த ஆண்களே கரணமாக இருக்கின்றனர். தங்களின் வீரதீர சாகசங்களைக் காட்டமுற்பட்டு அகப்பட்டுக்கொண்டவர்கள் பலர்.

இதைத் தான் நாங்களும் சொல்கிறோம். உந்த வீர தீரம் வேண்டாம்.. என்னோடு நின்று கொள்ளுங்கள் என்று தடுத்திருக்கலாம்.அல்லது கூடப் போயிருக்கலாம். பிடிக்க ஒரு ஆதாரமாவது கிடைச்சிருக்கும். மழை காலத்தில் அருவிகளில் திடீர் நீர்ப் பெருக்கு ஏற்படுவது வழமை. அதற்குரிய எச்சரிக்கைகளும் வழங்கப்படுகின்றன. இவற்றைத் தெரிந்து கொண்டும்.. செயற்பட முடியாத பெண்ணும் தான் இப்பரிதாபச் சாவிற்குக் காரணம். விவேகமான பெண்ணாக இருந்தால்.. இந்தச் சூழ்நிலையே ஏற்படாமல் பார்த்துக் கொண்டிருக்கலாம்.

இனி எங்கட ஆட்கள் சொல்லப்போகினம் பெட்டைக்கு செவ்வாய் தோஷம் என்று  

அது அந்தக் காலம். இந்தக் காலத்தில்.. பெட்டை இன்சூரன்ஸ் காசை எடுத்துக் கொண்டு இன்னொண்டோட மாட்டிடும்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் துயரமான சம்பவம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்
 
ஓகே நெடுக்ஸ், நீங்களாவது திருமணம் செய்யும்போது எதிர்பாராத ஆபத்துநேரும் சமயத்தில் உங்களைக் காப்பாற்றக்கூடிய அல்லது உங்களுடன் சேர்ந்து ஒன்றாக மடியக்கூடிய பெண்ணாகப்பார்த்து திருமணம் செய்யுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
இந்த அகாலமரணத்தையிட்டு மிகவும் வருந்துகின்றேன். 
 
கலோ நெடுக்கு தலையிடியும் தனக்கு வந்தால்த்தான் தெரியும். 
இளவேனிற்கால இறுமாப்பு முதுவேனிற்க்காலத்தில் அடங்கும்.
  • கருத்துக்கள உறவுகள்
நான் ஏற்கனவே இங்கு பலமுறை எழுதியிருக்கிறேன்.
இங்கு வாழும் தமிழர்களுக்கு ஆபத்து இருப்பது .... நீரிலும் வாகனத்திலும் தான்.
 
இரண்டிலும் கூடிய கவனம் தேவை. காரணம் பக்குவமாக இங்கிருக்கும் தமிழர்கள் வளர்க்க படவில்லை.
அந்தார்டிக்கா கடலை நீந்தி கடக்க கூடியவனும் ...... சிறிய படகில் போகும்போது நீரில் மூழ்காத ஜர்கட் போட்டுக்கொண்டே போவான். அவர்களுடை வளர்ப்பு முறை அப்படி.
 
நீந்தவே தெரியாத தமிழன் படகின் கயிறில் ஏறி தொங்கி கொண்டுபோவான்.
  • கருத்துக்கள உறவுகள்

29 வயசில ஒரு பெடியன் அநியாயமா செத்துப்போச்சுது, கட்டி ஒரு கிழமையில அந்தப் பிள்ளை விதவை. இதுக்குள்ள நெடுக்கரிண்ட விசர்க்கதை. சுழிக்குள்ள ஒருத்தன் அம்பிட்டா நல்லா நீந்தக் கூடிய சுழி ஓடுறவங்கள் கூட  தண்ணியுக்க இறங்கமாட்டாங்கள். இதுக்குள்ள அந்தப் பிள்ளை இறங்கவில்ல எண்டுறத என்ன சொல்ல. உவ்வளவு கதைக்கிற நீங்கள் எங்கட வடமராட்சி மூக்கத்து கடற் கரைப்பக்கம் வாங்கோ, ஆண்கடலும் பெண்கடலும் அங்கதான் கலக்குது. என்னத்தப் பண்ணுவியள் எண்டு பார்க்க ஒரு விருப்பம்.

எங்கட ஹாட்லிப் பெடியள் நாலுபேரையும் 1999 இல ஒரு கார்த்திகை மாதத்து சுழி தான் இழுத்துக்கொண்டு போனது. நீந்தக்கூடிய கடல்தொழில் செய்கிற எத்தனையோபேர் பார்த்துக்கொண்டு நின்றபோது தான் இன்பருட்டிக் கடலில கடல் அவர்களின் உயிரைக் குடித்தது. அந்த மீனவர்களாலோ ஆசிரியர்களாலோ எதுவுமே செய்ய முடியவில்லை.

எந்த புத்திசாலி/விவேகமான/நீந்தக்கூடிய பெண் எண்டாலும் அப்பிடியான ஒரு நேரம் வரும்போது கையும் காலும் ஓடாது. ஒப்பாரி வச்சு அழுதா செத்தவர் திருப்பி வருவாரா எண்டு செத்த வீட்டில போய்க் கேட்டுப் பாருங்கோ, செப்பட்டயப் பொத்தி நாலு தருவாங்கள்.

நல்ல காலத்துக்கு பெண்களை மதிக்கத் தெரியாத, மனிதாபிமானமற்ற நீங்கள் வைத்தியத் தொழிலில் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல காலத்துக்கு பெண்களை மதிக்கத் தெரியாத, மனிதாபிமானமற்ற நீங்கள் வைத்தியத் தொழிலில் இல்லை.

ஒரு ஆபத்தான சூழலுக்குள் எச்சரிக்கை இன்றி.. ஒருவரை கொண்டு வருவதை எந்தத் துறையும் வலியுறுத்துவது கிடையாது.  இங்கு அந்தப் பெண்ணின் மீது ஒரு வகையான குற்றச்சாட்டுத்தான் அமைகிறது. சூழலுக்கு ஏற்ப அந்த இளைஞனை வழிநடத்தி இருக்கலாம். அவன் புரிஞ்சுகொல்லேல்லைன்னா.. ஆபத்தை குறைக்கிற வழியை தானும் சேர்ந்து.. தேடி இருக்கனும்.

வைத்தியம் சார்ந்த துறையில் தான் நாங்க இருக்கிறோம். அதற்காக.. கடலுக்க குதி நீந்திறியோன்னு  பார்க்கனும்.. என்று.. கேட்கிற அளவிற்கு முட்டாள் தனமாக இல்லை அது. :rolleyes:

நீங்கள் சொல்வது போன்று தெரிந்தே ரிஸ்க் எடுக்கிறது போன்றதுதான்.. அருவிகளில் நீராடல் என்பதும். அந்த வகையில்.. இவ்வாறான எச்சரிக்கை அற்ற நடத்தைகளால் தான் இவ்வாறான அநியாய மரணங்கள் ஏற்படுகின்றன. இதனை வழியுறுத்துவதும் மக்களை வழிப்புணர்வூட்டுவதும் தான் உண்மையான மனிதாபிமானம்..! மாறாக சுழியை.. அருவியை குற்றம் சொல்லி கண்ணீர அஞ்சலி செய்வதில் அல்ல மனிதாபிமானம் தங்கியுள்ளது. :(

  • கருத்துக்கள உறவுகள்

ஓ... அப்புறம்...

ஆழ்ந்த அஞ்சலிகளும் அந்த இளம்பெண்ணுக்கு ஆறுதல்களும் தெரிவிக்கின்றேன்.

2 வருசத்துக்கு முன்னம் ஹமில்டன் என்ற ஊரில் இருக்கும் Webster நீர் வீழ்ச்சியின் குன்றுகள் ஒன்றில் நானும் இப்படி விசர் வீரம் காட்டப் போய் கால் லேசாக சறுக்க பார்க்கும் போது நெஞ்சு அடிச்ச அடி எனக்குத்தான் தெரியும். மனுசிக்கு தெரியாமல் சுற்றி நின்ற இளம் பெட்டைகளுக்கு கலர்ஸ் காட்டப்போய்தான் அருந்தப்பில் தப்பினேன்.

-----------

எவ்வளவு உயர் கல்வி படித்தாலும் அக் கல்வி ஒருவரிற்கு  மனித நேயத்தினை கற்றுத் தராது என்பதுக்கு நெடுக்கு நீங்களே மிகச் சிறந்த உதாரணம்.

Edited by நிழலி
திருத்த...

உண்மைதான்  நிழலி! மனிதநேயம் என்பது புத்தகபடிப்பின் மூலம் வருவதில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அஞ்சலிகளும் அந்த இளம்பெண்ணுக்கு ஆறுதல்களும் தெரிவிக்கின்றேன்.

2 வருசத்துக்கு முன்னம் ஹமில்டன் என்ற ஊரில் இருக்கும் Webster நீர் வீழ்ச்சியின் குன்றுகள் ஒன்றில் நானும் இப்படி விசர் வீரம் காட்டப் போய் கால் லேசாக சறுக்க பார்க்கும் போது நெஞ்சு அடிச்ச அடி எனக்குத்தான் தெரியும். மனுசிக்கு தெரியாமல் சுற்றி நின்ற இளம் பெட்டைகளுக்கு கலர்ஸ் காட்டப்போய்தான் அருந்தப்பில் தப்பினேன்.

-----------

எவ்வளவு உயர் கல்வி படித்தாலும் அக் கல்வி ஒருவரிற்கு மனித நேயத்தினை கற்றுத் தராது என்பதுக்கு நெடுக்கு நீங்களே மிகச் சிறந்த உதாரணம்.

போனதடவை ஊருக்கு போய் கடலில் ரொம்ப தூரம் " கலர்" காட்ட நீந்தி போய்விட்டு, தூரத்தில் நிற்கும் போது காலில் முறுக்கு (cramp) ஏற்பட்டதும் எனக்கும் இப்படி ஒரு திகில் ஏற்ப்பட்டது.

அடுத்த முறை விசர் வீரம் காட்டும் எண்ணம் மனதில் ஏற்படும் போது, இத்திரியை நாம் ஒவ்வொருவரும் நினைத்துப் பார்க்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவு உயர் கல்வி படித்தாலும் அக் கல்வி ஒருவரிற்கு  மனித நேயத்தினை கற்றுத் தராது என்பதுக்கு நெடுக்கு நீங்களே மிகச் சிறந்த உதாரணம்.

எதை நீங்கள் மனித நேயம் என்பதாக வரையறுத்து வைச்சு உள்ளீர்களோ.. அதே வடிவில் தான் பார்க்க முடியும். அது மற்றவர்களில் பல இடங்களில் பொதுமைப்பட்டலாம் சில இடங்களில்.. மாறுபடலாம். அனுதாபம் தேடுவது அல்லது காட்டுவது அஞ்சலி செய்வது மட்டும் மனித நேயம் கிடையாது.

போலிக்கு அழுவது கூட மனிதாபிமானமாகக் காட்டப்படலாம். மனித நேயம் என்பது அடுத்த மனிதனுக்கு அனுதாபம் காட்டுவதாக மட்டும் இருக்க முடியாது.. அவனைக் காப்பாற்றுவதாகவும் இருக்க வேண்டும். இன்னொரு சாவு இப்படி இன்னொரு மனிதனுக்கு நேராமல் இருப்பதே இந்த இறந்து போன மனிதனுக்கு காட்டும் உண்மையான அஞ்சலியாக இருக்க முடியும். இங்கு உங்களின் எங்களின் மனிதாபிமான அளவுகோல் என்பது வேறுபடுகிறது. அவ்வளவே. அதற்கும் துறைசார் கல்விக்கும் முடிச்சுப் போடுவது கூட மிகவும் பிற்போக்கான கருத்தியல் நிலைப்பாடு என்பது எங்கள் நிலை..!

நீங்களும் கூட முன்னே அஞ்சலி செய்து.. பின்னே அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள.. நிச்சயம் நாங்கள் முன்னர் எழுதிய கருத்துக்கள் தூண்டுதலாக இருந்திருக்கும். அது தான் இங்கு எங்களின் தேவை. அவை தான் இதே சம்பவம் இன்னொரு மனிதனில் நேராமல் இருக்க வழி செய்யும். தவிர எங்களின் மனிதாபிமானத்தை இப்படியான அவலத் தலைப்புக்களில் தான் காட்டனுன்னு அவசியமில்லை. இது அவலம்.. ஒரு மனிதனை காப்பாற்ற வக்கற்று சாகடித்த அவலம். அவனை அறிவூட்டத் தவறிய அவலம்..அப்படின்னு தான் நாங்க பார்க்கிறம். அதில் ஒரு பெண்ணும் குற்றச்சாட்டுக்கு இலக்காவது.. உங்களுக்கு பொறுக்குதில்லை. ஆனால் மனிதாபிமானம்.. ஆண் பெண் என்று பார்க்காது. இதனை ஒரு தவிர்க்கக் கூடிய அவலம்.. அதில் தவறுகளுக்கான சந்தர்ப்பங்களையே தேடிக் களைய முனையும்.. போது கண்டனங்களும் குற்றச்சாட்டுக்களும் வருவது சகஜமே. அதுதான் இங்குள்ள வேறுபாட்டுக்கான நிலை.

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.