Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும்

Featured Replies

வணக்கம் கள உறவுகளே ! வாசகர்களே !

ஓர் போட்டிக் குறுந்தொடர் ஊடாக உங்களைத் தொடுகின்றேன் . நான் ஒரு மரத்தின்  படத்தைப் போடுவேன் . நீங்கள் அந்த மரத்துக்கான  தூய தமிழ்ச் சொல்லைத் தரவேண்டும் . சரியான தூய தமிழ்ப் பெயரைத் தருபவருக்கு என்னால் ஓர் சிறப்புப் பரிசு தரப்படும் . அதாவது சரியான தூயதமிழ் பெயரைச் சொல்லும் முதலாவது கள உறவிற்கு ஒரு பச்சைப் புள்ளி பரிசாகத் தரப்படும் . ஒருவர் ஒரு முறை மட்டுமே பெயர் தர முடியும் பெயரை அழித்து எழுத முடியாது . யாரும் அதற்கான பெயரைச் சொல்லாதுவிட்டால் 48 மணித்தியாலாங்களின் பின்பு நான் போட்ட மரத்தின் படத்திற்கான சரியான தூயதமிழ் பெயரை அறிவிக்கின்றேன் . எங்கே சிக்கிய மரம் என் கையில் , சில்லெடுத்த பெயர்கள் உங்கள் கையில் ..............

நேசமுடன் கோமகன்

 

*********************************************************************************

01 செங்காந்தாள் அல்லது கார்திகைப்பூ ( ( glory lily ,  Gloriosa superba )

 

qhch.jpg

 

செங்காந்தள் அல்லது காந்தள் ஐந்து அல்லது ஆறு சிற்றினங்களை கொண்டுள்ளது. இது கோல்ச்சிசாசியியே (Colchicaceae) எனும் தாவர குடும்பத்தைச் சார்ந்தது. ஒற்றை விதையிலைத் தாவரங்களில் வகையினைத் சேர்ந்ததாகும். இது வெப்ப மண்டல ஆப்ரிக்கா மற்றும் ஆசியாவில் காணப்படுகிறது. இவை இயற்கையாக ஆப்ரிக்கா, தென்கிழக்கு ஆசியா மற்றும் மலேசியாவின் சில பகுதிகளில் காணப்படுகிறது. கார்த்திகைத் திங்களில் முகிழ்விடும் இம்மலர்க் கொடி இலங்கை, இந்தியா, சீனா, மலாக்கா தீபகற்பம், அயனமண்டல ஆபிரிக்கா முதலான பகுதிகளிலும் காணப்படும். இது வேலிகளிலும், பாதையோரங்களிலும், காட்டோரங்களிலும் படர்ந்து நிமிர்ந்து அழகிய விரல்கள் போலவும், சுடர்கள் போலவும் காட்சியளிக்கும். அனைத்துப் பகுதிகளும் கோல்சிசினே (colchicine) எனும் அல்கலோயட்கள் நிறைந்தது. அதனால் இவற்றை உட்கொண்டால் மரணம் சம்பவிக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக இதன் வேர் மிகுந்த நச்சுத் தன்மை கொண்டது. இதன் இலை மற்றும் தண்டு நம்மேல் பட்டால் தோலில் அரிப்பு உண்டாகும். இது கார்த்திகைபூ என்றும் அறியப்படுகிறது. கண்வலிக்கிழங்கு எனும் கிழங்கு வகை மூலிகையானது காந்தள் மலர்ச் செடியிலிருந்துப் பெறப்படுகிறது. அச்செடியின் வேர்ப்பகுதியே கண்வலிக்கிழங்கு ஆகும். இக்கிழங்கு ஆனது கலைப்பைக் கிழங்கு, வெண்தோன்றிக் கிழங்கு, கார்த்திகைக் கிழங்கு என்று பல பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. இக்கிழங்கில் உள்ள கோல்ச்சிசினும் சூப்பர்பைனும் மருத்துவக் கூறுகளாகும். இதன் பல்வேறு மருத்துவ பயன்பாடுகள் இந்தியாவில் இந்திய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.

கார்த்திகைச் செடியின் கிழங்கு ஆயுர்வேதம், யுனானி முறைகளில் பலவிதமாகப் பயன்படுகின்றது. இக்கிழங்கில் காணப்படும் நச்சுப் பொருளான கொல்சிசைனே வைத்திய முறைகளில் பயன்படுகின்றது. மேற்கு வைத்தியத்திலும் கொல்சிசைன் பயன்படுத்தப்படுகின்றது. ஆனால் இரு வைத்திய முறைகளிலும் கொல்சிசைசின் பயன்பாடு வித்தியாசப்படுகின்றது. * தோலைப்பற்றிய ஒட்டுண்ணி நோய்களுக்கு இதனைப் பற்றுப் போடுவார்கள். தேள் கடிக்கும் இதனைப் இழைத்துப் போடுவதுண்டு.

வாதம், மூட்டுவலி, தொழுநோய் குணமாக்கப் பயன்படுவதுடன் பேதி, பால்வினை நோய் வெண்குட்டம் ஆகியவற்றிக்கும் மருந்தாகப் பயன்படுகிறது. பிரசவ வலியைத் தூண்டும் மருந்தாகவும், ஆற்றலூட்டும் குடிப்பானாகவும் இருப்பதுடன், தலையில் வரும் பேன்களை ஒழிக்கவும் பயன்படுகிறது.

சுபர்பின் மற்றும் கோல்சிசின் ஆகிய மருந்துப் பொருட்கள் இதில்கிடைக்கின்றன. குடற்புழுக்கள், வயிற்று உபாதைகள் மற்றும் தேள், பாம்புக்கடிகளுக்கு நல்லதொரு மருந்து. இக்கொடியினைக் காட்டிலும் விதைகளில் தான் அதிக அளவு கோல்சிசின் மருந்து காணப்படுவதால் விதைகள் மிகுதியான ஏற்றுமதி மதிப்பைப் பெற்றுள்ளன. அண்மை காலத்தில் 'கோல்சிசின்' மூலப் பொருளைக்காட்டிலும் இரண்டு மடங்கு வீரியமான 'கோல்ச்சிகோஸைடு' கண்டு பிடிக்கப்பட்டு மூட்டு வலி மருத்துவத்தில் மிகவும் பயன் படுத்தப்படுகிறது. இது ஐரோப்பிய நாடுகளில் கௌட் எனும் மூட்டுவலி நிவாரணத்திற்குப் பெரிதும் பயன்படுகிறது. மிக நுண்ணிய படிகங்களாக யூரிக் அமிலம் மூட்டுகளில் தங்குவதால் இந்த மூட்டுவலி வருவதாகவும், இம்மருந்து அவ்வாறு யூரிக் அமிலம் மிக நுண்ணிய படிகங்களாகத் தங்காவண்ணம் பாதுகாக்கிறது. இதனால் தொடர்ந்து மூட்டுவலி உண்டாகும் நிலைமையினை இது முறித்து விடுவதாகக் கூறப்படுகிறது. இக்கிழங்கால் பாம்பின் நஞ்சு, தலைவலி, கழுத்துவலி, குட்டம், வயிற்று வலி, சன்னி, கரப்பான் முதலியன நீங்கும் எனப்படுகிறது.

இந்த செங்கந்தள் பல பெயர்களில் அழைக்கப் படுகின்றது அவையாவன
அக்கினிசலம் 

கலப்பை

இலாங்கிலி

தலைச்சுருளி

பற்றி

கோடல் அல்லது கோடை

கார்த்திகைப் பூ

தோன்றி

வெண்தோண்டி

வெண்காந்தள் அல்லது செங்காந்தள்

 

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D

Edited by கோமகன்

  • Replies 594
  • Views 102.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

காந்தள்  மலர்

  • கருத்துக்கள உறவுகள்

கார்த்திகைப் பூ (பின்னால மரமோ.செடியோ ஏதோ ஒன்றைப் போட்டுக்கொள்ளுங்கள்)

  • கருத்துக்கள உறவுகள்

காந்தள்

மரம் எண்டுபோட்டு தாவரத்தை தந்தால்…???

 

செங்காந்தள் செடி.  :)

  • கருத்துக்கள உறவுகள்

அது செடி அல்ல கொடியாக வளருவது.

கார்த்திகை காந்தள்  :D 


காந்தள்  மலர்

 

 

மலரல்ல மரமப்பா ( கேள்விகளை ஒழுங்காய் வாசியுங்கோ)


:D  :D

கார்த்திகைப் பூ மரம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கார்த்திகை பூ. இது மரமல்ல செடி.

கார்த்திகை செடி .

  • கருத்துக்கள உறவுகள்

கண்வலிப்பூ செடி

  • கருத்துக்கள உறவுகள்

செங்காந்தள் அல்லது காந்தள்  :) 

ஒவ்வொரு மரங்களுக்குமான ஆங்கிலப் பெயரையும் எழுதினால் நல்லது!

வணக்கம் கள உறவுகளே ! வாசகர்களே !

ஓர் போட்டிக் குறுந்தொடர் ஊடாக உங்களைத் தொடுகின்றேன் . நான் ஒரு மரத்தின்  படத்தைப் போடுவேன் . நீங்கள் அந்த மரத்துக்கான  தூய தமிழ்ச் சொல்லைத் தரவேண்டும் . சரியான தூய தமிழ்ப் பெயரைத் தருபவருக்கு என்னால் ஓர் சிறப்புப் பரிசு தரப்படும் . அதாவது சரியான தூயதமிழ் பெயரைச் சொல்லும் முதலாவது கள உறவிற்கு ஒரு பச்சைப் புள்ளி பரிசாகத் தரப்படும் . ஒருவர் ஒரு முறை மட்டுமே பெயர் தர முடியும் பெயரை அழித்து எழுத முடியாது . யாரும் அதற்கான பெயரைச் சொல்லாதுவிட்டால் 48 மணித்தியாலாங்களின் பின்பு நான் போட்ட மரத்தின் படத்திற்கான சரியான தூயதமிழ் பெயரை அறிவிக்கின்றேன் . எங்கே சிக்கிய மரம் என் கையில் , சில்லெடுத்த பெயர்கள் உங்கள் கையில் ..............

நேசமுடன் கோமகன்

 

*********************************************************************************

 

qhch.jpg

காந்தாள் மரம்

 

வாழ்க வளமுடன்

  • கருத்துக்கள உறவுகள்

கார்த்திகை பூ. இது மரமல்ல செடி.

 

அண்ணா இது என்னிடம் உள்ளது. கொடியாக வளரும்.

 

கோமகனிலும் தவறு உண்டு. கொடியின் படத்தை முழுமையாகப் போடவில்லை. அத்துடன் பூத்தான் வடிவாத் தெரியுது.  :D 

  • கருத்துக்கள உறவுகள்

செங்காந்தள் செடி.

செங்காந்தள் மலர் கொடி

Edited by தமிழினி

  • கருத்துக்கள உறவுகள்

செங்காந்தாள் கொடிச் செடி மரம்!      உஷ் ....அப்பாடா ஒரு மாதிரிக் கண்டு பிடிச்சாச்சுது! :D  :icon_idea:  

  • தொடங்கியவர்

ஆஹா........... ஆஹா........... கொழுத்தி எறிஞ்ச வெடி இப்பிடி வெடிக்குதே.........  :lol:  :lol:  :D  :D .  ஒரு வெறியோடை மறுமொழி போட்ட எல்லாக் கள உறவுகளுக்கும் நன்றியுங்கோ :) . ஆரோ ஒராள் நான் பிழை விட்டுப் போட்டன் எண்டு சொன்ன மாதிரிக் கிடக்கு :unsure: . நான் வேணுமெண்டு அப்பிடி ஒரு தலைப்பை போடலை  . ஒரு    எதுகை மோனைக்குதான் அப்பிடி ஒரு தலைப்பை போட்டன் . இந்த போட்டியை ஆரம்பிச்சதுக்கு காரணம் என்னவெண்டால் எங்களைச் சுற்றி இருக்கிற பயிர் பச்சையளிலை ( சுற்றுப்புறச் சூழல் ) பிள்ளையள் எவ்வளவுக்கு   ஆர்வமாய் இருக்குறியள் எண்டு   பாக்கத்தான் கண்டியளோ :wub:  . இதிலை மரஞ் செடி கொடி எல்லாம் வரும் , நீங்கள் தான் தங்கித் தரிச்சு இந்தப் போட்டியில்லை ஏனோடை இழுபடவேனும்   . அப்ப நாளைக்கு சந்திப்பமோ :icon_idea: ??

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா........... ஆஹா........... கொழுத்தி எறிஞ்ச வெடி இப்பிடி வெடிக்குதே.........  :lol:  :lol:  :D  :D  இழுபடவேனும்   . அப்ப நாளைக்கு சந்திப்பமோ :icon_idea: ??

எந்த மரத்திற்குப் பின்னால் கொழுத்திய வெடியை எறிந்தீர்கள் கோமகன்?? :D விரைவாகப் பதிலைத் தரவும். ஓடி ஒளிய நேரம் இல்லை :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஒருநாளில சட்டெண்டு விடையைச் சொல்லி அடுத்ததைப் போடுறதுக்கு. உங்களுக்கு என்ன மரங்கள், செடியளோ பஞ்சம்?????

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • தொடங்கியவர்

கார்த்திகைப் பூ (பின்னால மரமோ.செடியோ ஏதோ ஒன்றைப் போட்டுக்கொள்ளுங்கள்)

 

சரியான பதில்களைத் தந்த அனைத்துக் கள உறவுகளுக்கும் மிக்க நன்றி . காந்தள் செடி என்று அழைக்கப்பட்ட இந்தச் செடியானது பல பெயர்களில் எங்களால் அறியப்படுகின்றது அதில் ஒன்றுதான் கார்த்திகைப் பூ . சுமேரியர் முதலில் சொன்னாலும் அதன் வகையைக் குறிக்கவில்லை . நந்தன் அதற்கான வேறு பெயரைத் தந்ததால் அவரே இந்த முறை பரிசுக்குத் தெரிவாகின்றார் .

 

 

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

02  அகில் மரம் ( Agarwood ,  Aquilaria )

 

f05j.jpg

 

அகில் மரத்துக்கு இலக்கியத்தில் ஓர் தனிச் சிறப்பு உண்டு சிறுபாணாற்றுப்படை, ஆசிரியர் – நல்லூர் நத்தத்தனார்  நல்லியக்கோடனின் புகழையும் மாட்சியையும் பின்வருமாறு சொல்கின்றார்

……………………..மென்தோள்
 துகில்அணி அல்குல் துளங்குஇயல் மகளிர்

அகில் உண விரித்த அம்மென் கூந்தலின்
 மணிமயில் கலாபம் மஞ்சுஇடைப் பரப்பி
 துணிமழை தவழும் துயல்கழை நெடுங்கோட்டு
 எறிந்து உரும்இறந்து ஏற்றுஅருஞ் சென்னிக்
 குறிஞ்சிக் கோமான், கொய்தளிர்க் கண்ணி
 செல்இசை நிலைஇய பண்பின்,
நல்லியக்கோடனை நயந்தனிர் செலினே.   [262-269]


கருத்துரை : 

மென்மையான தோளும், ஆடையணிந்த இடையும் அசைந்தாடும் நடையுமுடைய மகளிர், அகில் புகை ஊட்டுவதற்காக விரித்துப் போட்டிருக்கும் கூந்தலைப் போன்று, நீலமணி போன்ற நிறமுடைய மயில் தனது தோகையை விரித்து ஆடுவதற்குக் காரணமான, மழை மேகங்கள், வெண்மேகங்களுக்கிடையே பரவித் தவழ்ந்து செல்லும். இம்மழை மேகங்கள் மூங்கில்கள் விளையும் உயர்ந்த சிகரங்களை முட்டி இடி இடித்து வீழ்ந்து ஏறிச் செல்லுகின்ற பெருமை பொருந்திய மலையுச்சியினையுடைய மலை நாட்டுக்குத் தலைவன். நல்லியக்கோடன் அப்போது பறித்த இளந்தளிரினால் கட்டப்பட்ட மாலையினை அணிந்தவன். புகழ் நிலைத்து நிற்றற்குரிய பண்புகளால் சிறந்தவன். இத்தகைய நல்லியக்கோடனை விரும்பி நீவீர் சென்றால், (அன்றெ பரிசில் கொடுத்து அனுப்பி வைப்பான்) (அடி 261ஐ இயைத்துப் பொருள் கொள்க)

அகில் பட்டைகள் வாசனைத் திரவியங்கள் செய்வதற்கும் பாவிக்கப் படுகின்றது . இந்த மரம் தென்கிழக்காசிய நாடுகளில் அதிகமாகக் காணப் படுகின்றது . மேலதிக விபரங்களுக்கு இங்கே செல்லுங்கள் :

 

http://en.wikipedia.org/wiki/Agarwood

Edited by கோமகன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.