Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரி படையினரால் முற்றாக இடித்தழிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வலி வடக்கில் அதி உயர் பாதுகாப்பு வலயமென படைத்தரப்பால் பிரகடனப் படுத்தப்பட்ட பகுதியில் காங்கேசன்துறை நடேஸடவராக் கல்லூரியும் மூன்று இந்துக் கோவில்களும் கடந்த இரு நாட்களில் படையினரால் முற்றாக இடித்து அழிக்கப்பட்டுள்ளன. காங்கேசன்துறையில் இதுவரை மக்கள் மீள்குடியேற அனுமதிக்கப்படாத நிலையில் நேற்று புதன்கிழமை நடேஸ்வராக் கல்லூரி கட்டிடங்கள் முற்றாக இடித்து தரைமட்டமாக்கப் பட்டுள்ளதாக வலி வடக்கு மீள்குடியேற்றக் குழுவின் தலைவர் எஸ்.சஜீவன் தெரிவித்தார்.

வலி வடக்கில் அதி உயர் பாதுகாப்பு வலய பகதியை மக்களின் மீள் குடியேற்றத்திகாக விடுவிக்கக் கோரி உயர் நீதிமன்றில் 2000 க்கும் மேற்பட்டோர் அடிப்படை உரிமை மீறல் மனுத்தாக்கல் செய்து விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில் உயர் நீதி மன்ற நடைமுறகளை மீறும் வகையில் படைத்தரப்பு வலி வடக்கில் வீடுகள், கடைகள், கோயில்கள், பாடசாலைகளென நூற்றுக்கணக்கில் தொடர்ந்தும் கட்டிடங்களை இடித்தழித்து வருகிறது. இது தொடர்பாக அண்மையில் ஜனாதிபதியுடன் தான் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு மக்கள் குடியிருப்புகள் மற்றம் கட்டிடங்களை இடித்தழிக்க வேண்டாமென வலியுறுத்தியதாகவும் இதையடுத்து உடனடியாக இந்த இடித்தழிப்புகளை நிறுத்துமாறும் தனது செயலாளர் ஊடாக குடாநாட்டில் படைத்தரப்புக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தன்னிடம் உறுதியளித்ததாக த.தே. கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கூறியிருந்தார்.

பொதுநலவாய மாநாட்டுக்கு இலங்கைக்கு பல நாட்டு தலைவர்களும் வந்திருந்த நிலையிலும் இதன் போது பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரூன் வலி வடக்கிற்கு வந்திருந்த நிலையிலும் வீடுடைப்புகளை நிறுத்தியிருந்த அரசு அவர்கள் நாட்டிலிருந்து வெளியேறிய பின்னர் மீண்டும் வலி வடக்கில் தமிழர் வீடுகள், பாடசாலைகள், கோயில்களை இடித்தழித்து வருகிறது. நேற்று புதன்கிழமை காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரி கட்டிடங்கள் முற்றா இடித்து தரைமட்டமாக்கப் பட்டுள்ளன. இதற்கு முன்னர் கடந்த வார பிற்பகதியில் காங்கேசன்துறையில் மூன்று கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப் பட்டன. குறிப்பாக காங்கேசன்துறை அம்மன் கோயில், நாகதம்பிரான் கோயில், பிள்ளையார் கோயில் என்பன இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. இது வரை காலமும் உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ள காங்கேசன்துறை எரிபொருள் நிரப்பு நிலையத்தின் முன்புறமாக இருந்த சந்திரா அச்சகத்திலேயே காங்கேசன்துறை பொலிஸ் நிலையம் இயங்கி வந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்த பொலிஸ் நிலையம் அங்கிருந்து அகற்றப் பட்டு மாவிட்டபுரம் கந்தசாமி கோயிலுக்கு அருகில் புதிதாக அமைக்கப்பட்டது. இதனையடுத்து இது வரை பொலிஸ் நிலையம் இயங்கிவந்த சந்திரா அச்சகத்தின் கட்டிடத்தொகுதியும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நாளுக்கு நாள் அதிகரிக்கும் மக்களுடைய சொத்துக்கள் இடித்து அழிக்கப்பட்டு வருகின்றன. மக்கள் தங்களுடைய காணிகளை இனங்காண முடியாத வகையில் இவை அனைத்தும் தரைமட்டமாக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு இடிக்கப்படும் வீடுகளுடைய இடிபாடுகளைக் கொண்டு பாதை அமைப்பு, வேறு கட்டிடங்கள் அமைத்தல் போன்ற நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

http://www.e-jaffna.com/archives/20584

  • Replies 63
  • Views 4.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சம்மந்தரின் அறிக்கைகளை எல்லாம் நம்பினால் கட்டுறதுக்கு " அதுவும்" இல்லாமல் போகும்

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணப்பாடசாலைகளில் கலைகளை குறிப்பாக நாடகத்துறையில் சாதனை படைத்த பாடசாலைகளில் நடேஸ்வராக் கல்லூரியும் உண்டு. யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கிடையிலான இயல் இசை நாடகப் போட்டிகளில் குறிப்பாக வலிகாமம் வடக்குப் பாடசாலைகள்தான் பெரும்பாலும் சாதனை படைத்துவருகிறது. நடேஸ்வராக் கல்லூரி, வீமன்காமம் அருநோதயாக் கல்லூரி, தெல்லிப்பளை யூனியன் கல்லூரி, மகாஜானாக் கல்லூரி.. . ஈழத்தில் சிறந்த நாடகக் கலைஞர் கலைப்பேராரசு ஏரிப் பொன்னுத்துறை அவர்கள் நடேஸ்வராக் கல்லூரியில் ஆசிரியராக இருந்த போது 70, 80களில் தாளக்காவடி என்ற நாடகம் யாழ்ப்பாணத்தில் மிகவும் பிரபல்யமானது. இதில் நடித்தவர்கள் நடேஸ்வராக் கல்லூரி ஆசிரியர்கள் என்பது முக்கியமான விடயம்.

  • கருத்துக்கள உறவுகள்

அன்று பேச்சு மேடைகளில் விடுதலைப்புலிகள் முன்வைத்த முக்கிய விடயம்.. ஏன் ஜப்பான் ரோக்கியோ பேச்சுக்களை விட்டு விலகக் காரணமான முக்கிய விடயம்.. இந்த உயர் பாதுகாப்பு வலயங்கள். அன்று புலிகளை அதிபுத்திசாலிகள் திட்டினார்கள். உயர் பாதுகாப்பு வலயத்தை தூக்கிப் பிடிச்சு உவங்கள் குழப்பி அடிக்கிறாங்கள்.. பேசி ஒரு முடிவுக்கு வந்தால்.. அது தானா தீரும் என்று.

ஆனால் புலிகள் அன்றாட நிகழ்ச்சி நிரலில்.. அத்தியாவசிய நிகழ்ச்சி நிரலில்.. உயர் பாதுகாப்பு வலயங்களை முதன்மைப்படுத்தினார்கள். அதற்கு காரணம்.. இதுதான். அவை ஆக்கிரமிப்பின் முதலாக எமது தேசத்தில் நிலைத்துவிடக் கூடிய அபாயத்தைக் கொண்டுள்ளன. அது எதிரியை நிரந்தரமாக எம் மண்ணில் இருத்திவிடும் என்றே.  அன்று புலிகள் நினைத்தார்கள்.. இன்று அதுவே நடக்கிறது..!

மேலும் புலிகள்.. இரண்டு முகாம்களை அடிக்கடி இலக்கு வைத்தார்கள். ஒன்று பலாலி. இரண்டு காங்கேசந்துறை. காரணம்.. இவை இரண்டும் நீண்ட காலம் எதிரியின் கைகளில் இருந்துவிட்டன. அவன் அவற்றை அவ்வளவு இலகுவில் மீண்டும் விட்டுக் கொடுக்கமாட்டான். ஏனெனில் அவற்றின் இருப்பில் தான் எதிரியின் இருப்பே குடாநாட்டைப் பொறுத்தவரை தங்கி இருக்கிறது. அன்று புலிகள் என்ன நினைத்தார்களோ அதுவே இன்று நடக்கிறது.

மீண்டும் ஒரு சர்வதேசப் பொறிமுறைக்குள் தமிழ் மக்களின் பிரச்சனையை எடுத்துச் செல்லாமல் இவற்றிற்கு.. மகிந்தவுக்கு போன் போட்டோ.. கோத்தாவிற்கு கடிதம் எழுதியோ.. ரணிலுக்கு வால்பிடிச்சோ.. தீர்க்க முடியாது. உயர் பாதுகாப்பு வலயங்கள் என்பது இஸ்ரேல் ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஒரு பிரதேசத்தினை விழுங்க.. ஆள கற்றுக் கொடுத்த பாடம். அதனையே சிங்களம் இன்று கையாள்கிறது.

Edited by nedukkalapoovan

சம்மந்தரின் அறிக்கைகளை எல்லாம் நம்பினால் கட்டுறதுக்கு " அதுவும்" இல்லாமல் போகும்

எல்லாவற்றிற்கும் சும்மா சம்பந்தரை திட்டி தீர்க்க வேண்டாம் ,சண்டைக்கு போக கூடாது போனால் தோற்க கூடாது ,தோற்றால் வென்றவன் விரும்பிய பக்கமெல்லாம் போட்டு உருட்டி பிரட்டி அடிப்பான் .

எல்லாவற்றிற்கும் சும்மா சம்பந்தரை திட்டி தீர்க்க வேண்டாம் ,சண்டைக்கு போக கூடாது போனால் தோற்க கூடாது ,தோற்றால் வென்றவன் விரும்பிய பக்கமெல்லாம் போட்டு உருட்டி பிரட்டி அடிப்பான் .

சரியான கருத்து அர்ஜுன். புலிகள் செய்த மாபெரும் தவறு தோற்றது தான் என்பதே எனது கருத்தும்.

ஆமாம் கணணிக்கு முன்னால இருந்துகொண்டு சொல்லலாம் அங்க நின்று சண்டை போட்டவர்களிற்குதானே தெரியும் நூறு பேரில் 2 பேர் சண்டை போட 98 பேரும் வெளிநாட்டில் கணணி முன் இருந்து அடி அடி எண்டு அடிச்சு விட்டனாங்கள் என்று

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாவற்றிற்கும் சும்மா சம்பந்தரை திட்டி தீர்க்க வேண்டாம் ,சண்டைக்கு போக கூடாது போனால் தோற்க கூடாது ,தோற்றால் வென்றவன் விரும்பிய பக்கமெல்லாம் போட்டு உருட்டி பிரட்டி அடிப்பான் .

தாய்ப்பாலும் புரையேறி உயிராபத்தை விளைவிக்கலாம் என்பதால், எந்தப்பாலையும் அருந்தக்கூடாது என்பதற்கிணையான புத்திமதி. :icon_idea: 

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு கப்பலில் அகதியாகபோய் இறங்கியபோது நடேஸ்வரா கல்லூரியில்தான் சாப்பாடு போட்டார்கள்..

எல்லாவற்றிற்கும் சும்மா சம்பந்தரை திட்டி தீர்க்க வேண்டாம் ,சண்டைக்கு போக கூடாது போனால் தோற்க கூடாது ,தோற்றால் வென்றவன் விரும்பிய பக்கமெல்லாம் போட்டு உருட்டி பிரட்டி அடிப்பான் .

வாகனம் ஓட்ட வீதியிலை இறங்கப்படாது இறங்கினால் அடிபடாமல் வர வேணும் அடி பட்டால் வாகனத்தை பாவிக்கேலாது... !!!

வெற்றி எண்டதை பெற வேணும் எண்டால் போராடதான் வேணும்... களத்திலை இறங்காதவன் தனது தோல்வியை அப்போதே பதிவு செய்து விட்டான்... !! புலிகள் போராடியதால் தான் உங்கட தோல்வி இவ்வளவு நாள் பிற்போட பட்டதே அண்றி ... போராடியதால் மிதிபடவில்லை... போராட்டம் ஆரம்பிக்க முன்னம் மக்கள் மிதிபட்டதை கேள்விப்படாத உங்களுக்கு என்னத்த விளங்கப்படுத்த...??

அதோட களத்திலை இறங்காமல் வெற்றி வரும் எண்டு 1983 லை சொன்ன அதே கூட்டம்... சோத்துப்பாசலை வாங்கி கொண்டு காணாமல் போன அதே கூட்டம்... எங்கட அண்ணன் தம்பி மாரை போராட எண்டு கூட்டி போய் கிடங்கு கிண்டி தாட்ட அந்த கூட்டம் பற்றி ஏதாவது கேள்வி பட்டனீர்களா...??

  • கருத்துக்கள உறவுகள்

மிக, மிக... கவலையான செய்தி.
சம்பந்தரும், சுமந்திரனும், அரசியலை.. விட்டு வெளியேறினால்....
நல்லது நடக்கும்

ஒருவர் புரை என்கின்றார் ஒருவர் கார் ஓடினதென்கின்றார் ,

தம்பிமாரே இது அனேகம் ஒவ்வொரு மனிதனாக பிறந்தவனும் செய்கின்ற வேலை ,ஆயுத போராட்டம் ,யுத்தம் என்பது அப்படியல்ல .

எடுக்கும் ஒவ்வொரு முடிவும் அவதானமாகவும் புத்திசாலிதனத்துடனும் இருக்க வேண்டும் .பிழையான முடிவுகள் ஒரு தனி மனிதனை மட்டும் பாதிக்காமல் ஒரு இனத்தையே அழிவிற்கு கொண்டுபோய்விடும்  (இதெல்லாம் விளங்கினால் ஏன் புலிகளில் இணைகின்றிர்கள் )

ஏறக்குறைய அதுதான் இப்போ எங்களுக்கு நடந்தது .புலிகளின் கொலைகளும் தற்கொலை தாக்குதல்களும் மற்றவர்களுக்கு செய்ய தெரியாமல் இல்லை செய்தால் என்ன நடக்கும் என்று அவர்களுக்கு தெரியும் .

அதைத்தான் இன்று சம்பந்தர் மிக தெளிவாக சொல்கின்றார் .

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு கப்பலில் அகதியாகபோய் இறங்கியபோது நடேஸ்வரா கல்லூரியில்தான் சாப்பாடு போட்டார்கள்..

அப்பிடி அடி வாங்கி போய் அங்கை சாப்பிட்டும்  செமிச்சா பிறகு  கொழும்பிற்கு திரும்ப வந்து  பாஸ்போட் எடுத்த  சிங்கப்பூர் போய் இப்ப கனடா வந்தா பிறகாவது  தமிழன் என்கிற ரோசம் வந்துதே மகிழ்ச்சி..இதை ஏன் சொல்கிறேன் என்றால் அதே நடேஸ்வரா படசலையில் கொழும்பு அகதிகளிற்கு ( இது இந்கு தவிர்க்கப்படவேண்டும்  தமிழர்களிற்கு )சாப்பாடு என்று சேர்த்து கொடுக்கப்போய்த்தான்  நாங்கள்  அவர்களது துயரத்தை பார்த்து எங்கள் படிப்பை விட்டு  துவக்கை தூக்கியவர்கள். இப்ப உங்களிற்கு எங்களை பாத்தால் நக்கல் :)

Edited by sathiri

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருவர் புரை என்கின்றார் ஒருவர் கார் ஓடினதென்கின்றார் ,

தம்பிமாரே இது அனேகம் ஒவ்வொரு மனிதனாக பிறந்தவனும் செய்கின்ற வேலை ,ஆயுத போராட்டம் ,யுத்தம் என்பது அப்படியல்ல .

எடுக்கும் ஒவ்வொரு முடிவும் அவதானமாகவும் புத்திசாலிதனத்துடனும் இருக்க வேண்டும் .பிழையான முடிவுகள் ஒரு தனி மனிதனை மட்டும் பாதிக்காமல் ஒரு இனத்தையே அழிவிற்கு கொண்டுபோய்விடும்  (இதெல்லாம் விளங்கினால் ஏன் புலிகளில் இணைகின்றிர்கள் )

ஏறக்குறைய அதுதான் இப்போ எங்களுக்கு நடந்தது .புலிகளின் கொலைகளும் தற்கொலை தாக்குதல்களும் மற்றவர்களுக்கு செய்ய தெரியாமல் இல்லை செய்தால் என்ன நடக்கும் என்று அவர்களுக்கு தெரியும் .

அதைத்தான் இன்று சம்பந்தர் மிக தெளிவாக சொல்கின்றார் .

இரண்டு உலக மகாயுத்தங்களை சந்தித்து அழிந்த ஜேர்மனி இன்றும் உலக முன்னணியில் நிற்கின்றது.இதைவிட ஒன்றுமே இல்லாத ஜப்பான் பொருளாதாரத்தில் உலகையே பிரட்டிப்போடுகின்றது....இதெற்கெல்லாம் காரணம் அவர்களின் ஒற்றுமை. இஸ்ரேலும் இதற்கு பொருந்தும்........நல்லதோ கெட்டதோ நாடு என்று வரும்போது ஒற்றுமையாக இருப்பார்கள்.....ஆனால் இங்கு????????

  • கருத்துக்கள உறவுகள்

அப்பிடி அடி வாங்கி போய் அங்கை சாப்பிட்டும் செமிச்சா பிறகு கொழும்பிற்கு திரும்ப வந்து பாஸ்போட் எடுத்த சிங்கப்பூர் போய் இப்ப கனடா வந்தா பிறகாவது தமிழன் என்கிற ரோசம் வந்துதே மகிழ்ச்சி..இதை ஏன் சொல்கிறேன் என்றால் அதே நடேஸ்வரா படசலையில் கொழும்பு அகதிகளிற்கு ( இது இந்கு தவிர்க்கப்படவேண்டும் தமிழர்களிற்கு )சாப்பாடு என்று சேர்த்து கொடுக்கப்போய்த்தான் நாங்கள் அவர்களது துயரத்தை பார்த்து எங்கள் படிப்பை விட்டு துவக்கை தூக்கியவர்கள். இப்ப உங்களிற்கு எங்களை பாத்தால் நக்கல் :)

இதெல்லாம் சும்மா புசத்தல்.. :D நாங்கள் அப்ப சிறுவர்.. பெற்றோர்தான் அப்போது முடிவுகளை எடுப்பார்கள் என்பதை சொலலித்தர வேண்டுமா? :wub:

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் சும்மா புசத்தல்.. :D நாங்கள் அப்ப சிறுவர்.. பெற்றோர்தான் அப்போது முடிவுகளை எடுப்பார்கள் என்பதை சொலலித்தர வேண்டுமா? :wub:

அப்ப நாங்கள் மட்டும் யாழிலை பெற்றோர் இல்லாமல் அப்பா அம்மா யாரெண்டு தெரியதமல்  யாருக்கோ பிறந்திட்டு   அனாதைகளா  பிச்சை எடுத்து கொண்டு திரிந்தம்..எடுத்த பிச்சையிலை  உங்களிற்கு கொண்டு வந்து தந்து உதவினம்   ஆனால் உங்களிற்கு  அப்பா அம்மா  இருந்ததால் முடிவெடுத்தார்கள் அப்படித்தானே??

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப நாங்கள் மட்டும் யாழிலை பெற்றோர் இல்லாமல் அனாதைகளா பிச்சை எடுத்து கொண்டு திரிந்தம்..எடுத்த பிச்சையிலை உங்களிற்கு கொண்டு வந்து தந்து உதவினம் அப்படித்தானே??

உங்களுக்கு நான் சொன்னது விளங்கவில்லை.. இதற்கு மேல் விளங்கப்படுத்துவதானால் எனது வாழ்க்கைக் குறிப்பை எழுதவேணும்.. :D அது இப்போதைக்கு தேவையில்லாதது. :huh:

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு நான் சொன்னது விளங்கவில்லை.. இதற்கு மேல் விளங்கப்படுத்துவதானால் எனது வாழ்க்கைக் குறிப்பை எழுதவேணும்.. :D அது இப்போதைக்கு தேவையில்லாதது. :huh:

சரி எனக்கு விளங்கவில்லை   உங்கள் அளவிற்கு நான்  படிக்கவில்லை ஆனால் சிங்களவனிடம் அடி வாங்கி கொண்டு வந்த உங்களால் ஏன் ஒரு இயக்கத்தியலாவது (புலியை விட்டு விடுங்கள்)சேரமுடியாமல்  போய் மீண்டும் வெளிநாடு போக தூண்டியது எது ?அதை சொல்லி விடுங்கள்

Edited by sathiri

இந்த செய்தி ஆங்கிலத்தில் உள்ளதா? இருந்தால் யாராவது இணையுங்கள்.

சண்டைக்குப் போகலாம் தோற்கலாம்.

ஆனால் தோற்ற பின்னும் வென்றுவிட்டோம் என்று நினைத்து இலக்கை தவறவிடுவதுதான் முழுமையான தோல்வி. 

நாம் முழுமையான தொலிவி நோக்கி நகர எங்களின் ஊடங்கள் அளப்பரிய பங்ககளிப்பினை நிச்சயம் பாராட்டவே வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் புரை என்கின்றார் ஒருவர் கார் ஓடினதென்கின்றார் ,

தம்பிமாரே இது அனேகம் ஒவ்வொரு மனிதனாக பிறந்தவனும் செய்கின்ற வேலை ,ஆயுத போராட்டம் ,யுத்தம் என்பது அப்படியல்ல .

எடுக்கும் ஒவ்வொரு முடிவும் அவதானமாகவும் புத்திசாலிதனத்துடனும் இருக்க வேண்டும் .பிழையான முடிவுகள் ஒரு தனி மனிதனை மட்டும் பாதிக்காமல் ஒரு இனத்தையே அழிவிற்கு கொண்டுபோய்விடும்  (இதெல்லாம் விளங்கினால் ஏன் புலிகளில் இணைகின்றிர்கள் )

ஏறக்குறைய அதுதான் இப்போ எங்களுக்கு நடந்தது .புலிகளின் கொலைகளும் தற்கொலை தாக்குதல்களும் மற்றவர்களுக்கு செய்ய தெரியாமல் இல்லை செய்தால் என்ன நடக்கும் என்று அவர்களுக்கு தெரியும் .

அதைத்தான் இன்று சம்பந்தர் மிக தெளிவாக சொல்கின்றார் .

உண்மைகளை நீங்கள் பொத்தி பொத்தி வைத்திருப்பதால்தான் .......... எதோ புலிகள்தான் போராளிகள் என்று மக்கள் நம்பி கொண்டு இருக்கிறார்கள்.
 
உமாமகேஸ்வரனை நம்பி ...
1000பேர் தற்கொலை தாக்குதல் நடத்த இருந்த உண்மைகளை அவிட்டு விடுங்கள அப்போதான் இவர்களுக்கு உண்மை புரியும்.
புளட்டை பயங்கரவாதிகள் பட்டியலில் போட்டுவிடுவார்கள் என்று அஞ்சி ....
அவர்களை உமாவே போட்டுவிட்டார்.
 
என்ன அரசியல் பார்வை....?
சும்மா அதிருதில்லே ???

ஒருவர் புரை என்கின்றார் ஒருவர் கார் ஓடினதென்கின்றார் ,

தம்பிமாரே இது அனேகம் ஒவ்வொரு மனிதனாக பிறந்தவனும் செய்கின்ற வேலை ,ஆயுத போராட்டம் ,யுத்தம் என்பது அப்படியல்ல .

எடுக்கும் ஒவ்வொரு முடிவும் அவதானமாகவும் புத்திசாலிதனத்துடனும் இருக்க வேண்டும் .பிழையான முடிவுகள் ஒரு தனி மனிதனை மட்டும் பாதிக்காமல் ஒரு இனத்தையே அழிவிற்கு கொண்டுபோய்விடும்  (இதெல்லாம் விளங்கினால் ஏன் புலிகளில் இணைகின்றிர்கள் )

ஏறக்குறைய அதுதான் இப்போ எங்களுக்கு நடந்தது .புலிகளின் கொலைகளும் தற்கொலை தாக்குதல்களும் மற்றவர்களுக்கு செய்ய தெரியாமல் இல்லை செய்தால் என்ன நடக்கும் என்று அவர்களுக்கு தெரியும் .

அதைத்தான் இன்று சம்பந்தர் மிக தெளிவாக சொல்கின்றார் .

இலங்கையின் வரலாறு தெரியாத உங்களுக்கெல்லாம் என்னத்தை விளங்க வைக்க முடியும்...??

உங்கள மாதிரி அடிப்படை அறிவு இல்லாதவைகளுக்காக தாரகி அவர்கள் எழுதின கட்டுரை... முடிஞ்சால் படியுங்கள் இல்லை வளமை போல கூழ்ப்பானையே கதி எண்டிருங்கள்... எனக்கென்ன போச்சு.... ??

அண்மையில் தென்னிலங்கையைச் சேர்ந்த சில பேராசிரியர்கள்ää எழுத்தாளர்கள்ää கருத்தியலாளர்கள் போன்றோர் கலந்துகொண்ட இரு நாள் கருத்தரங்கொன்றிற்குச் சென்றிருந்தேன். அங்கு என்னை தமிழ் மக்களின் அரசியல் அவாவுதல்களைப்பற்றி விளக்குமாறு அதை ஒழுங்கு செய்தவர்கள் கேட்டனர். தமிழ் மக்களும் அவர்களுடைய ஆங்கிலம் மற்றும் சிங்களம் பேசத் தெரிந்த தலைவர்களும்ää செய்தியாளர்களும்ää அறிஞர்களும் 56 வருடங்களுக்கு மேலாக இடையறாது எமது அரசியல் கோரிக்கைகள் என்ன என்பதைப்பற்றி எல்லாவகையிலும் பேசியும் எழுதியும் வந்துள்ளார்கள்.

அதுமட்டுமன்றி இந்த அரசியல் கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் சிங்கள அரசுகளுக்கெதிராக 28 ஆண்டுகளாக (1948-1976) அமைதி வழியிலும் அதன் பின் 28 ஆண்டுகளாக (1976-2004) பெரும் ஆயுதக் கிளர்ச்சி மூலமாகவும் போராடி வந்துள்ளனர். அவர்களது கோரிக்கைகள் நிறை வேறாமையாலேயே சிங்கள மக்கள் மத்தியில் குண்டுகள் வெடித்தன என்பது அப்பட்டமான விடயம். எந்த மந்த புத்தியுள்ள பேர்வழியும் தன்னைச்சுற்றி ஏன் குண்டுகள் வெடிக்கின்றனää தனது நாட்டின் பன்னாட்டு வான்தளத்தை ஏன் சிலர் தகர்த்துச் செல்கிறார்கள் என கேள்வியெழுப்புவது நிச்சயம்.

ஆனால்ää இவ்வளவுக்குப் பின்னரும் தமிழரின் அரசியல் அவாவுதல்கள்ää கோரிக்கைகள் என்ன என்று கேட்கும் போக்குத்தான் சிங்கள தேசத்தில் இன்னும் காணப்படுகின்றது. 'அரை நூற்றாண்டுக்கு மேலாக தமிழ் மக்கள் தமது அரசியல் கோரிக்கைகளைப் பற்றி வடக்கு கிழக்கிலும் சிறிலங்கா நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் பன்னாட்டு அரங்கு களிலும் வாய்கிழிய விளக்கிய பின்னரும் நீங்கள் அவை என்ன என்று கேட்பது மகா அபத்தம். ஆகவே நான் இந்த விடயம் பற்றிப் பேசமுடியாது" என அவர்களிடம் கூறிவிட்டேன்.

இதில் சுவையான விடயம் என்னவென்றால் தமிழருடைய அரசியல் கோரிக்கைகள் என்ன வென்பதுபற்றி அங்கு வந்திருந்த பெரும்பான்மையானவர்களுக்கு உண்மையிலேயே தெரிந்திருக்கவில்லை என்பதாகும். 56 வருடங்களாக இவ்வளவு நடந்தும் எமது கோரிக்கைகளை புரிந்து கொள்ளாதவர்கள் இனி எப்படிப் புரிந்து கொள்ளப் போகின்றார்கள் என எனக்குத் தெரியவில்லை.

எம்முடைய கோரிக்கைகளைப் பொறுத்த வரையில் விடிய விடிய இராமர் கதைää விடிந்த பின்னர் இராமர் சீதைக்கு என்னமுறை என்ற பாணியில்தான் சிங்கள தேசம் கேட்டுக் கொண்டே இருக்கிறது.

http://tamilnation.co/forum/sivaram/041010t.htm

முழுவதையும் படிக்க முடிந்தால் இன்னும் நல்லது...

  • கருத்துக்கள உறவுகள்

ஆக்குவதும்

அழிப்பதுமான  சிலரது விளையாட்டுக்குள்  நாங்கள் ஏன் போகணும்....................???? :(  :(  :(

குண்டு சட்டிக்குள்ளால் வெளிவரமாட்டம் என்று அடம் பிடித்தால் எதுவும் செய்யமுடியாது .

நடந்து முடிந்த எமது விடுதலை போராட்டம் பற்றி கடைசி நீங்கள் உங்கள் சார்பு என்று நினைக்கும் சனல் நான்கு என்ன சொல்கின்றதேன்றாவது கேளுங்கள், இலங்கையில் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனின் பேச்சை கேட்டிருந்தால் விளங்கியிருக்கும் (அவர் ஒரு படு பாதக சொல் ஒன்று புலிகளை பற்றி சொல்லியிருந்தார் )

ராஜீவை எல்லாம் கொலை செய்ய ஒருவன் நினைத்தாலே அவர்களை பற்றி கதைத்து நேரம் விரயம் செய்வது வீண் .அவர்களுக்கும் விடுதலை போராட்டத்திற்கும் சம்பந்தமே இல்லை .அது வெறும் அதுதான் .

  • கருத்துக்கள உறவுகள்

மிக, மிக... கவலையான செய்தி.

சுதந்திர ''தமிழ் ஈழம்'' ஒன்று மட்டுமே இப்படியான பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாகும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.