Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தம்பி நீர் என்ன படிச்சிருக்கிறீர்..?!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

2101.jpg

 

வழமை போல.. பார்க்கில் ஓடிக்கொண்டிருந்தேன். எதிரே ஒரு நடுத்தர வயதுக்காரர் வந்து கொண்டிருந்தார். அவர் என்னைக் கண்டதும் இல்லாமல்..ஏதோ தெரிந்தவர் போல.... தம்பி கொஞ்சம் நில்லும்... என்றார் தமிழில்.

 

நானோ காதில் விழாதது போல என் கருமத்தில் கண்ணாய் இருந்தேன். எனக்கு முன்னால் ஒரு அழகான பிகரு வேற ஓடிக் கொண்டிருந்தது. அதை எப்படியாவது கடந்து போயி.. ஒருக்கா.. அந்தப் பிகரின்.. மூஞ்சியை பார்த்திடனும் என்ற கொள்கை வெறியோட வேற.. நான்.. ஓடிக் கொண்டிருந்தேன்.

 

நான் என் கொள்கையில் நீண்ட நேரம் செலவழிக்கல்லை. சிறிது நேரத்துக்குள்ளாகவே.. இலகுவாகவே அந்த பிகரை விரட்டி பிடிச்சு.. கடந்து போய்.. திரும்பிப் பார்த்தும் விட்டேன். சும்மா சுமாரான பிகர் தான். பார்க்க தமிழ் பிகர் போல இருந்திச்சு. நாட்டில குளிர் என்பதால்.. பிகர் மூடிக்கட்டிக் கொண்டு வேற ஓடிக் கொண்டிருந்தால.. முகத்தை மட்டும் தான் பார்க்க முடிஞ்சுது.

 

இந்தக் கலகலப்புக்கு மத்தியிலும்... நான் ஒரு வட்டம் முடிச்சு.. இரண்டாம் வட்டம் ஓட ஆரம்பித்திருந்தேன். இப்போ.. அந்த நடுத்தர வயசுக்காரர்.. பார்க் பெஞ்சில் அமர்ந்திருந்து கொண்டு.... அந்த பிகரை கூப்பிட்டு என்னவோ கதைச்சுக் கொண்டிருந்தார். பிகரும் அவருக்கு அருகில் பெஞ்சில் அமர்ந்து கொண்டு என்னவோ கதைச்சுக் கொண்டிருந்திச்சு.

 

நான் நடப்பவற்றை எல்லாம் கடைக்கண்ணால் கவனிச்சுக் கொண்டு ஓடிக் கொண்டே இருந்தேன். சிறிது நேரத்தில்.. அந்த நடுத்தர வயதுக்காரர் இருந்த பெஞ்சுக்கு நேர் எதிரே பார்க்கின் எதிர் புறத்தில்.. இருந்த பெஞ்சில் போய் அமர்ந்து கொண்டேன். ஓடிக் களைச்சது போல.. வேற பாசாங்கும் செய்து கொண்டேன். அங்கிருந்து கொண்டு...எதிர் பெஞ்சில் என்ன நடக்குது என்று ஆராயத் தொடங்கினேன். அந்த நடுத்தர வயதுக்காரர்.. தான் கொண்டு வந்திருந்த துவாயை எடுத்து அந்த பிகரின் முகத்தில் வழிந்திருந்த.. வியர்வையை துடைக்கக் கொடுத்தார். அப்ப தான் தெரிஞ்சுச்சு அவர் அந்த பிகரின் அப்பான்னு.

 

ஆகா.. அந்த பிகருடைய அப்பாவா இவரு.. என்றிட்டு.. நிலைமை கைமீறிப் போவதற்குள்.. இளைப்பாறி எழுவது போல எழுந்து மீண்டும் ஓட ஆரம்பித்தேன். இப்போ நான் மீண்டும் பார்க்கை சுற்றி அவர்கள் இருந்த இடத்திற்கு அருகில் வர.. மீண்டும் அவர் கூப்பிட்டார்.

 

இம்முறை.. தம்பி என்றல்ல. ஹலோ என்றார். உடன பக்கத்தில இருந்த பிகரு.. ஏன் டாட் கூப்பிடுறீங்க என்றிச்சுது. தமிழ் பொடியன் போல இருக்குது... அப்போதையும் கூப்பிட்டனான் தமிழ் விளங்காத மாதிரி போயிட்டான். பொறு.. கூப்பிட்டு கதைப்பமே என்றார்...என் காதுபட.

 

நானும்.. பிகருட அப்பா என்றது உறுதியாக.. ஓடுவதை நிறுத்தி நடந்து வந்து.. காய் அங்கிள் என்றேன். அவர் கான் யு ஸ்பீக் ரமிள் என்றார்..! ஐ கான் ராட்க் எ பிட் என்றேன்... என் இமேச்சை பிகருக்கு முன்னால்..உயர்த்திக் காட்ட. உடனே அவரோ.. அப்ப இஞ்ச வாரும் இதில இரும் என்றார் தனக்கு அருகில். எனக்கோ எதிர்பார்த்தது போல எல்லாம் நடப்பதால்.. மனசெல்லாம் பட்டாம்பூச்சி பறக்கிற மாதிரி இருந்திச்சு. அவர் நடுவில் இருக்க.. நான் ஒரு கரையிலும்.. பிகர் மறுகரையிலுமாக பெஞ்சில் அமர்ந்திருந்தோம்.

 

தம்பி... நாங்கள் இப்ப தான்.. ஜேர்மனில இருந்து மூவ் பண்ணி லண்டனுக்கு வந்திருக்கிறம். இவா பிள்ளை.. இங்க ஏ எல் செய்யுறா. உமக்கு தெரியுமே நல்ல ரியூசன் இங்க.. என்றார்.

 

நான் சொன்னேன்.. அங்கிள்.. எனக்கு தெரியும் ஒன்றிரண்டு ரியூசன். பட் அவையள் எப்படி படிப்பிப்பினம் என்று எனக்குத் தெரியாது. சோ.. என்னால.. உங்களுக்கு கறண்டி பண்ணிச் சொல்லேலாது என்றேன்.

 

ஓகே.. நீர் சொல்லுறதும் நியாயம் தான்.. என்றிட்டு.. என் பதிலைக் கேட்டிட்டு.. யோசிச்சுக் கொண்டிருந்தவர்.. திடீர் என்று தம்பி நீர் என்ன படிச்சிருக்கிறீர் என்றார். நான் பிகரு முன்னால.. உள்ளதைச் சொல்லி.. இமேச்சைக் கூட்டுவமா.. இல்ல கொள்கையை.. அதாவது என்ன படிச்சன் என்பதை யாரோடும் அநாவசியமாக பகிர்ந்து கொள்வதில்லை என்ற அந்தக் கொள்கையை காக்கிறதா..என்ற தவிப்பில்... அது வந்து அங்கிள்... இஞ்ச வந்து கொஞ்சம் படிச்சிருக்கிறன் என்றேன்.

 

அதுக்கு அவர் அப்ப இதுக்கு முதலில் எங்க படிச்சனீர் என்றார். நான் அதுக்கு சிறீலங்கா.. என்றேன். அவ்வளவும் தான் அவரின்.. மூஞ்சியில் ஈயாடவில்லை. முகம் மலர்ச்சி இழந்து கறுத்துப் போனது. அதுவரை என்னை அடிக்கடி.. கடைக்கண்ணால் பார்த்திட்டு இருந்த பிகரும்.. வெறிச்சு.. இலைகள் உதிர்த்திருந்த.. பார்க் மரங்களை பார்க்க ஆரம்பிச்சுது.

 

எனக்கோ.. அட ஏண்டா சிறீலங்கா என்று சொன்னன்.. என்று ஆகிச்சு. அப்புறம் அவரே.. அட நீர் சிறீலங்காவில படிச்சிட்டு இங்க வந்தனீரே... என்றார் ஒரு இழக்காரத் தொனியில். அதோட நிற்காமல்.. அப்ப ஏன்.. உமக்கு தமிழ் கொஞ்சம் கொஞ்சம் தான் தெரியும் என்றீர் என்றார். நான் நிலைமையை சுதாகரிச்சுக் கொண்டு.. சொன்னன்.. நான் கொழும்பில இருந்திட்டு தான்.. இஞ்ச வந்தனான் என்று. உடன அவரின் முகத்தில் இப்போ மீண்டும் கொஞ்சம் பழைய புத்துணர்ச்சி.. திரும்ப ஆரம்பிச்சுது.

 

அப்படியே.. கொழும்பில எங்க என்றார். நான்.. கொல்பிட்டி என்றேன். அவ்வளவும் தான்.. கொஞ்சம் எனக்குக் கிட்டவா நகர்ந்து இருந்து கொண்டு.. அப்ப அங்க எந்த யுனில படிச்சனீர் என்றார். நான்.. கொழும்பு என்ற. கொழும்பே. அங்க என்ரர் பண்ணுறது கஸ்டம் என்ன... என்றார். நான்.. விடுவனா இந்தச் சந்தர்ப்பத்தை.. ஆம் என்றேன்.. பிகருக்கும் கேட்க.

 

இதற்கிடையில்.. பிகரு.. ஒருக்கா என்னை திரும்பிப் பார்த்து புன்னகைச்சும் விட்டிச்சுது. நானும் பதிலுக்கு புன்னகைச்சு விட்டன். எனக்கோ.. மனசெல்லாம்.. ஒரு வித புத்துணர்ச்சி.. பெருகி.. வழிஞ்சு ஓடிக்கொண்டிருந்திச்சு.

 

அவரோ விடுவதாக இல்லை. மீண்டும்.. கேட்கத் தொடங்கினார். அங்க படிச்சிட்டு.. அப்ப இங்க என்ன படிக்க வந்தனீர் என்றார். நான்.. பிடிபடாமல்.. மேற்படிப்பு என்றேன். அவருக்கு அது விளங்கிச்சோ இல்லையோ.. ஓகே என்றார். அப்புறமா...இங்க.. என்ன பாடம் படிச்சனீர் என்றார். நான் விஞ்ஞானம் (சயன்ஸ்) என்றேன். விஞ்ஞானமோ... அப்ப நல்லது... இவாவுக்கு.. கெமிஸ்ரி தான் பிரச்சனை. நீர் கெமிஸ்ரி சொல்லிக் கொடுப்பீரே என்றார். எனக்கோ மீண்டும்.. கூட்டுப்புழுவுக்குள் இருந்து கிளர்ந்தெழுந்து.. பட்டாம்பூச்சிகள் பறந்து திரிவது போல.. மனசெல்லாம் மகிழ்ச்சி. தோல் எல்லாம் அந்தக் குளிரிலும்.. ஒரே புல்லரிப்பு.

 

நான் மெளனமாக என் புல்லரிப்பில் பூரித்துப் போய் இருக்க.... சிறிது மெளனத்தின் பின் மீண்டும் அவரே தொடர்ந்தார். தம்பி.. குறை நினைக்காதையும் கண்ட இடத்திலும் வைச்சுக் கேட்கிறன் என்று.. இவாக்கு கெமிஸ்ரி தான் முக்கிய பிரச்சனை. மற்சும்.. ஜியோக்கிரபியும் ஓரளவுக்குச் செய்வா. மாட்டன் என்று சொல்லாமல் படிப்பிப்பீரே தம்பி என்றார்.

 

எனக்கோ.. என்ன சொல்வது என்று தெரியவில்லை. ஒரு பக்கம்.. பக்கத்தில.. பிகரு. இன்னொரு பக்கம்.. படிச்ச கெமிஸ்ரில கொஞ்சம் தான்.. மனசில நிற்குது. மிச்சம் மறந்து போயிட்டுது என்ற பிரச்சனை. மனசோ.. சமாளிச்சிடடா மச்சி.. எப்படியாவது சமாளிச்சு வெளிய வந்திடு.. பிகரு மட்டும் பத்திரம்.. என்றிச்சுது. அங்கிள்.. அது வந்து.. நான்.. தொடர்ந்து படிக்கிறதால.. ரியூசன் எடுக்க நேரம் வருமோ தெரியல்ல... என்றேன்.

 

ஐயோ தம்பி எங்களைக் கைவிட்டிடாதையும்.. என்று கையைப் பிடிச்சு.. காலில விழாத குறையாக கெஞ்ச ஆரம்பித்தார். பார்க்கப் பாவமாக இருந்தது. இப்போ.. மனதில் பறந்து கொண்டிருந்த பட்டாம் பூச்சிகள் எல்லாம் இறக்கை களைத்து.. முருக்கை மரத்தில் இளைப்பாறப் போனது போல.. என் மனதில்.. முன்னர் இருந்த.. பூரிப்பின் அளவும் குறைந்து அவர்கள் மீது.. பரிவாக அது மாறி இருந்தது.

 

அங்கிள்.. டோண்ட் வொறி...என்னால முடியாட்டிலும்.. உங்களுக்கு உதவி செய்யுறன். எனக்கு தெரிஞ்ச ஆக்களிட்ட கேட்டு.. ஒரு நல்ல ரீச்சர் பிடிச்சுத்தாறன் என்றேன். சரி தம்பி பறுவாயில்லை. அப்ப உம்மட போன் நம்பரைத் தாரும்.. பிறகு அடிச்சுக் கதைக்கிறனே என்றார். நானும்.. என் போன் நம்பரை அவரிடம் கொடுத்துவிட்டு.. பாவம்.. உதவத் தான் வேண்டும்.. பிகருக்காக எண்டு இல்லாட்டிலும்.. கல்வி மேல.. இவ்வளவு அக்கறையா இருக்கிற ஒரு தமிழனுக்கு உதனும் என்ற முடிவோடு விடைபெற ஆயத்தமானேன்.

 

அதுவரை மெளனமாக இருந்து நடக்கிறதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பிகரு.. நான் புறப்படக் கிளம்பியதும்.. சிறிது புன்னகைத்தபடி.... பாய் அண்ணா என்றிச்சுது.

 

எனக்கோ.. அண்ணா என்றதைக் கேட்டதும்.. மனசில பறந்த பட்டாம்பூச்சிகள் எல்லாம் ஒரே நொடியில் செத்து விழுந்தது போல இருந்திச்சு. நாடி நரம்பெல்லாம் ஓய்ஞ்சு இரத்தம் அந்தக் குளிரோடு சேர்ந்து விறைச்சது போல ஆச்சுது.  இருந்தாலும்.. உதவி செய்யனும் என்ற அந்த எண்ணம் மட்டும் குறையாமல் விடைபெற்றுச் சென்றேன்.

 

சிறிது நாட்களின் பின்னர் அவராகவே போன் பண்ணி கேட்ட இடத்தில்.. ஒரு ஆசிரியரை ஒழுங்கும் பண்ணிக் கொடுத்தேன். அதுக்கு நன்றிக்கடனாக.. இப்போ.. பார்க்கில் என்னைக் கண்டால் தானும் கூட ஓடி வருவார். ஆனால்.. பிகரு.. மட்டும் தங்கச்சியானது.. மனதின் ஒரு மூலையில்... வலியாக... இருந்து கொண்டே இருந்தது. :lol::icon_idea:

 

(நிஜம் + கற்பனை)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஃபிகர் எடுத்த உடனேயே அண்ணா சொன்னதால் ஏற்கனவே புக் ஆகிவிட்டது என்று அர்த்தம்.. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

உப்பிடித்தான் அண்ணா என்று கூப்பிட்டவர்கள் பிற்காலத்தில் சிலருக்கு மனைவியாகவும் காதலியாகவும் வந்திருக்கினம். அதன் பிறகு சிலருக்கு கொடூர பத்திரகாளியாகவும் வந்திருக்கினம். எதுக்கும் மனதினைத்தளர விடாதே நெடுக்கு.

முதலில் அண்ணா என்றுதான் தொடங்குவினம் . :icon_mrgreen: .மீண்டும் வடை போச்சா .

அப்பாவே கூப்பிட்டு டியுசன் சொல்லி கொடுக்க கேட்குமளவில் அப்பாவி லுக்கா :lol:

எழுதுதியவிதம் நன்றாக இருந்தது .

எல்லாம் கற்பனை என்று நம்பி துலைக்க வேண்டி இருக்கு இறைவா ..

அருமை கதை நெடுக்கு அண்ணே ..

சி... இந்த நெடுக்கும், சுண்டலுக்கும்  தான் ஒண்ணும் வாய்கிதில்லையே  :(  :D

 

கதை நகர்த்திய விதம் அருமை!!

இது வஞ்சனை அலை அக்கா நாங்களும் இருக்கிறம் .....இசை முணுமுணுப்பு :D :D :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஊக்கமும்.. கருத்தும் நல்கிய உறவுகள் அனைவருக்கும் மிக்க நன்றி. :)

  • கருத்துக்கள உறவுகள்

கதை நகர்த்திய விதம் அருமை!! நன்றி நெடுக்கு.

பார்க்கில இருந்த பிகர் மேல படத்தில இருக்கிற பிகர் அளவுக்கு வருமா  ??  :huh:
 
கலயாணத்திற்கு முன் பிகர் எல்லாம் சுகர் மாதிரி. (sugar)
பிற்பாடு அது சுகர் அல்ல பகர். (bugger)
  • கருத்துக்கள உறவுகள்

என்ன நெடுக்கர், அப்பாவோட நிக்கிற பெண்ணு, உங்களைப்பாத்து 'அத்தான்' என்றா கூப்பிடும்? :icon_idea:

 

எதுக்கும் நேரம் கிடைக்கிறபோது, அப்பாவும் ஓடிக்களைச்ச பிறகு, 'தங்கச்சியையும்' கூட்டிக்கொண்டு ரெண்டு ரவுண்டு ஓடிப்பாக்கிறது! :D

 

அதுக்குப் பிறகு, உங்களை முதல்ல கண்டதிலேயிருந்து, என்னவோ எனக்கு 'நித்திரை' வாறது நல்லாக் குறைஞ்சு போட்டுது எண்டு துவங்க வேண்டியது தானே! :o

 

தூண்டில் காரன், தூண்டிலைப்போட்டிட்டு எவ்வளவு நேரம் குந்திக்கொண்டிருக்கிறான்? :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தூண்டில் காரன், தூண்டிலைப்போட்டிட்டு எவ்வளவு நேரம் குந்திக்கொண்டிருக்கிறான்? :icon_idea:

 

பார்த்தமா.. சிரிச்சமா.. பாய் சொன்னமா என்றிருக்கிற விசயத்தில எல்லாம் சலனப்படக் கூடாது.. புங்கையண்ணா. அப்புறம் சிக்கலில் சிக்க வைச்சிடும். :):lol:

 

கருத்துச் சொன்ன உறவுகள் அனைவருக்கும் நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

அது தானே  பார்த்தன்

நம்ம தம்பியாச்சே

ஒரே ரத்தம்.......... :wub:

 

இந்த கதையை  வாசித்தபோது.....

தமிழரின் ஒரே சொத்து  படிப்பு

அதற்காக

எவரிடமும் கையேந்த தயாராக  இருக்கும் தமிழர்......

அந்த அப்பாவும்

பெண்ணும் பெரும் அப்பாவியாக எம்முன்

ஆனால் அவர்களது குறிக்கோள்........ :icon_idea:

 

நன்றி  தம்பி

கதைக்கும் நேரத்திற்கும்........

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

அதுக்கு அவர் அப்ப இதுக்கு முதலில் எங்க படிச்சனீர் என்றார். நான் அதுக்கு சிறீலங்கா.. என்றேன். அவ்வளவும் தான் அவரின்.. மூஞ்சியில் ஈயாடவில்லை. முகம் மலர்ச்சி இழந்து கறுத்துப் போனது. அதுவரை என்னை அடிக்கடி.. கடைக்கண்ணால் பார்த்திட்டு இருந்த பிகரும்.. வெறிச்சு.. இலைகள் உதிர்த்திருந்த.. பார்க் மரங்களை பார்க்க ஆரம்பிச்சுது.

கற்பனையோ! உண்மையோ! கதை பளிச்சென்று ஒரு உண்மையை உணர்த்தி நிற்கிறது. :icon_idea:

சிறீலங்கா .. என்றால் கொழும்பைத் தவிர்ந்த ஏனைய பகுதிகளின் கலாச்சாரம் வேறு. கொழும்பு, லண்டன் என்றால்! இங்கு நாலு பிகருடன் கூடிப்பழகும் வாய்ப்புகள் நிறைந்த இடமாகும். பிகருகளை ரசிக்கலாம். ரசித்ததை அவர்கள் அனுமதி இல்லாமலே ருசிக்கலாம். இந்த வாய்ப்புகளை பெறமுடியாத பெடியள் என்றால் காஞ்ச மாடு கம்பிலை விழுந்ததுபோல் விழுந்துவிடுவார்களோ என்கிற பயம்தான், அப்பனுக்கும் மகளுக்கும் ஏற்பட்டதோ??. :blink:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கற்பனையோ! உண்மையோ! கதை பளிச்சென்று ஒரு உண்மையை உணர்த்தி நிற்கிறது. :icon_idea:

சிறீலங்கா .. என்றால் கொழும்பைத் தவிர்ந்த ஏனைய பகுதிகளின் கலாச்சாரம் வேறு. கொழும்பு, லண்டன் என்றால்! இங்கு நாலு பிகருடன் கூடிப்பழகும் வாய்ப்புகள் நிறைந்த இடமாகும். பிகருகளை ரசிக்கலாம். ரசித்ததை அவர்கள் அனுமதி இல்லாமலே ருசிக்கலாம். இந்த வாய்ப்புகளை பெறமுடியாத பெடியள் என்றால் காஞ்ச மாடு கம்பிலை விழுந்ததுபோல் விழுந்துவிடுவார்களோ என்கிற பயம்தான், அப்பனுக்கும் மகளுக்கும் ஏற்பட்டதோ??. :blink:

 

அண்மையில்.. உறவுக்காரர் ஒருவரின் புலம்பெயர் வாரிசுப் பெண். அவருக்கு ஊரில் அவர்களின் தூரத்து உறவில் ஒரு பையனை பார்த்தார்கள். இவாவும் சிறீலங்கா போய் வந்த போது அந்தப் பையனோடு சாதாரணமாகப் பழகி இருக்கிறா. அவர் இப்போது.. மருத்துவத்துறை முடிச்சுவிட்டார் (யாழில்). பெற்றோர் பெண்ணிடம்.. அவனை கட்டிறியா என்று கேட்க.. மாட்டன் பதிலாம். பெற்றோர் அதோட அந்தப் பேச்சை கைவிட்டு விட்டார்கள்.

 

திருமணம் என்பது அவரவர் சுய விருப்பம். ஆனால்.. அந்தச் சுய விருப்பில் என்னென்ன விடயங்கள் செல்வாக்குச் செய்கின்றன என்பதில்.. பல காரணிகள் தங்கி உள்ளன.

 

நன்றி பாஞ்ச். இந்தக் கதைக்குள் எங்களின் சமூக நடத்தைகள் பலவற்றை ஒளிச்சு வைச்சிருக்கிறன். அதில் ஒன்றை அடையாளம் கண்டிட்டீங்க. :):D

 

நன்றி விசுகு அண்ணா. நீங்களும் இன்னொன்றை அடையாளம் கண்டிருக்கிறீங்க. பிற உறவுகளும் கண்டிருக்கிறார்கள். ஆனால் அநேகர்.. நேரிடையாக.. பிகரை பற்றித்தான்.. சிந்தித்திருக்கிறார்கள். பிகர் தானே அங்கு முக்கியப்பட்டுள்ளது. அது அவர்களின் குற்றமும் அல்ல. எங்களின் தவறும் அல்ல. :):D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
உப்பவும் 18 வயசுக்கு குறைவான ஏ எல் படிக்கிற பெட்டை கேட்குதோ :o ....பெட்டை சுமார் ஆனால் அண்ணா என்டு கூப்பிட்டுட்டுது என்டு கவலை :rolleyes: ஜயோ,ஜயோ எங்க போய் முட்டிறது :lol: என்டு தெரியேலையே :D
 
கதை எழுதின விதம் சுப்பராய் இருக்குது
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இப்ப ஒரு டவுட் வருது, :unsure:  அந்தப் பெட்டை இவரை அண்ணா எண்டு கூப்பிட்டதா இல்லாட்டி அங்கிள் எண்டு கூப்பிட்டதா? :rolleyes:  கூடுதலாக அங்கிள் எண்டுதான் கூப்பிட்டிருக்கும்! :D

 

ஸ்டோரி கலக்கல் ரகம்!!! :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உப்பவும் 18 வயசுக்கு குறைவான ஏ எல் படிக்கிற பெட்டை கேட்குதோ :o ....பெட்டை சுமார் ஆனால் அண்ணா என்டு கூப்பிட்டுட்டுது என்டு கவலை :rolleyes: ஜயோ,ஜயோ எங்க போய் முட்டிறது :lol: என்டு தெரியேலையே :D

கதை எழுதின விதம் சுப்பராய் இருக்குது

நாங்க எப்பவும் உடலாலும் மனசாலும் 18 தான்.சிலருக்கு பொறமை.ஆனாலும் பிகர் பார்ப்பமே தவிர பிடிக்கிறதில்ல. சுமார் பிகர் என்றாலும் அண்ணான்னு கூப்பிட்டால் தப்புத்தான்.அம்மாக்கு வயசானா பாட்டின்னு கூப்பிட முடியாதில்ல. :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இப்ப ஒரு டவுட் வருது, :unsure: அந்தப் பெட்டை இவரை அண்ணா எண்டு கூப்பிட்டதா இல்லாட்டி அங்கிள் எண்டு கூப்பிட்டதா? :rolleyes: கூடுதலாக அங்கிள் எண்டுதான் கூப்பிட்டிருக்கும்! :D

ஸ்டோரி கலக்கல் ரகம்!!! :)

இன்னும் அங்கிள் ஆகல்ல.உங்க மகள் பிறந்து வளர்ந்து யாழ் வந்தால் அப்படி கூப்பிடலாம்...ஒரு வேளை.:)

×××××××××××××××××××××××××××××××

நன்றி இருவர் கருத்துக்கும்.:)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

கதை நன்றாக உள்ளது. படிக்க உதவி கேட்பவர்களுக்கு மனம் சஞ்சலப்படாமல் உதவி செய்யவேண்டும். அதுதான் நல்லது...! :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கதை நன்றாக உள்ளது. படிக்க உதவி கேட்பவர்களுக்கு மனம் சஞ்சலப்படாமல் உதவி செய்யவேண்டும். அதுதான் நல்லது...! :D

 

நன்றி சுவி அண்ணா. :)

 

உதவி செய்ய... மனசு இடம் கொடுத்தாலும்.. சூழ்நிலை.. காலம் இடம்கொடுக்கனுமே..! :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அம்மா. ;)

 

(நிஜமாவே அம்மா இதைப் பார்த்தா.. அருமை என்று சொல்லி இருக்கமாட்டா. எருமை... உன்னை படிக்க அனுப்பினனா.. கதை கவிதை எழுத அனுப்பினனா என்று தான் விழும்.) :D:lol:

கதைக்கு எனது மனங்கனிந்த பாராட்டுக்கள் , நெடுக்கர் தொடர்ந்து எழுதுங்கள் :) :) .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கோம்ஸ் அண்ணா உங்கள் கருத்திற்கு. :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.