Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முறிகண்டி விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த அறுவர் பலி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

m1.jpg

பழைய முறிகண்டி கோயில் அருகில் இடம்பெற்ற விபத்தில் பலியானவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

 

விபத்துக்குள்ளான வானில் இருந்து சிதைந்த நிலையில் காணப்பட்ட உடற்பாகங்கள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டு தற்போது கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

 

பழைய முறிகண்டி கோயில் அருகில் விபத்து ; 6 பேர் பலி

 

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த வான் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பருடன் மோதியதில் சம்பவ இடத்தில் ஐவர் பலியாகியுள்ளனர். 

இன்று அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் ஏழு வயது சிறுவனும், ஏழு வயது சிறுமியும் அடங்குவதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

விபத்தில் படுகாயமடைந்த மேலும் நால்வர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.உயிரிழந்தவர்களின் சடலங்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

விபத்து தொடர்பில் வான் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

மேலும் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் தற்போது மரணமடைந்துள்ளதாக தகவல்கள்  வெளியாகியுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

 

A9-Accident.jpg

 

A9-Accident1.jpg

 

A9-Accident3.jpg

 

1619627_674101362651076_1168300326_n.jpg

 

1897815_674101339317745_21861681_n.jpg

 

 


http://www.onlineuthayan.com/News_More.php?id=708292637911540116

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு வருடங்களுக்குமுன்பு வல்வெட்டித்துறையில் சிற்றூர்தி ஒன்றை வாகனமோட்டுபவர் தரிப்பிடத்துக்கு ஓட்டிச் செல்கையில் பாதசாரியொருவரை அவ்விடத்திலேயே அடித்துச் சாவடித்த செய்தி அறிவீர்கள். கோண்டாவிலில் மோட்டார் சைக்கிளில் தெருவோரம் நின்ற ஒருவரை சிற்ரூர்தி அடித்தக் கொன்றதை அறிவீர்கள், நல்லா தண்ணியைப்போட்டுட்டு அனுமதிப்பத்திரமுமின்றி, நித்திரைத்தூக்கத்தில் வாகந்த்துக்கு பிறேக்கோ அன்றேல் சக்கரங்களொஒ நல்ல நிலையில் இல்லாது, இப்போதைய ஏ ஒன்பது தெருவில் கண்டமேனிக்கு ஓடுபவர்கள் பலர். அரசாங்க அதிகாரிகளாக இருக்கும் பலரே இதுவரை வாகன அனுமதிப்பத்திரமில்லாது வாகனம் ஓட்டியதை நான் அறிவேன். இலங்கைத்தீவுக்குத் தேவை புதிய போக்குவரத்து விதிமுறைகளும். அனைத்து வாகன அனுமதிப்பத்திரங்களையும் மீள்பரிசீலனை செய்ய ஒரு சட்டமுறைமையும்.

 

வடக்கு மாகாண எல்லைக்குள் உள்நுழையும் வாகனங்களுக்கான விசேட அனுமதிப்பத்திரத்தை, வடமாகாணசபையால் அதற்கென அனுமதிக்கப்பட்ட போக்குவரத்து மற்றும் வாகனங்களுக்கான தரத்தினைச் சோதனை செய்து அனுமதி வழங்கக்கூடிய அதிகாரம்மிக்க அரசநிறுவனம்மூலம் வழங்கிட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

2ஆம் இணைப்பு ஏ9 வீதியின், மாங்குளம் 233வது மைல்கல் விபத்தில் உயிரிழந்தவர்கள் காயமடைந்தவர்கள் விபரம்-

 

 

Accident1_CI.jpg

 

ஏ 9 வீதியின் கிளிநொச்சி, மாங்குளம் 233வது மைல்கல் பகுதியில் இன்று (11.02.2014) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஐந்து பேர் பலியானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று அதிகாலை 3 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ள பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோகண, பயணிகள் வான் ஒன்றும் டிப்பர் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டபோதே இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக தெரிவித்தார்.

சம்பவத்தின் போது 5 பேர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களில் இருவர் சிறுவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. 

வான் சாரதியின் கவனக் குறைவே இவ்விபத்துக்கான காரணமென பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கூறினார்.

அத்துடன், வான் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

விபத்தில் உயிரிழந்தவர்கள் யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியைச் சேர்ந்தவர்களென தெரியவந்துள்ளது.

இந்த விபத்தில் 5வயதுடைய சசிதரன் பதுமன், 7 வயதுடைய  சசிதரன் யர்மிதா , 35 வயதுடைய சோதிலிங்கம் மிதீபன், 75 வயதுடைய  சின்னத்துரை பரமேஸ்வரி, 49 வயதுடைய சின்னத்துரை சிவனேஸ்வரன் ஆகியோரே உயிரிழந்துள்ளனர் எனவும்,  இவர்களின் சடலம் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாகவும் பொலிசார் குறிப்பிட்டனர்.

அத்துடன், 30 வயதுடைய சசிதரன் சர்மிளா, 12 வயதுடைய சிவனேசன் செந்தூரி, 8 வயதுடைய சிவனேசன் கபினா , 31 வயதுடைய சிவனேசன் தர்மினா, 53 வயதுடைய ஜெயக்குமார் தயாநிதி , 38 வயதுடைய சோதிலிங்கம் சஜீவன், ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சோதிலிங்கம் சஜீவனை தவிர ஏனைய ஐவரும் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக மாங்குளம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மாங்குளத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஐந்து பேர் பலி:-

11-02-2014 - 01:45am

மாங்குளம் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். திருமண வைபவமொன்றுக்கு கொழும்புக்கு சென்று திரும்பிக்கொண்டிருந்த பயணிகள் வான் ஒன்று வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கல்லு டிப்பர் ஒன்றுடன் மோதிக்கொண்டபோதே இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக தெரிவிக்கபடுகிறது.

கிளிநொச்சிக்கும் மாங்குளத்திற்கும் இடையிலான ஏ9 வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெளிநாடொன்றிலிருந்து விடுமுறையில் வந்த கோண்டாவில் பழனி ஆண்டவர் கோவிலடியை சேர்ந்த குடுப்பத்தவர்களே மரணமடைந்ததாக தெரிவிக்க படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் இரண்டு சிறுவர்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது, வான் சாரதியின் கவனயீனமான செயற்பாடே இந்த விபத்திற்கான காரணம் எனவும், சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleID/102907/Default.aspx

 

நெடுஞ்சாலையில் அதுவும் இரவில் வானக ஓடுபாதையில் வாகனங்கள நிறுத்தி வைக்கப்படும் போது பயன்படுத்தப்படும் ஒளிரும் சிமிட்டி விளக்குகளை அந்த டிப்பர் வாகனம் பயன்படுத்தி இருக்காது என்று நினைக்கிறேன். அதைவிட 150 மீற்றருக்கு முன்பாக அபாயத்தை குறிக்கும் முக்கோணம் வைக்கப்பட்டருக்கவேண்டும். அதுவும் செய்யப்பட்இருக்காது என நினைக்கின்றேன். அப்படியாயின் நிறுத்தி வைக்கப்பட டிப்பர் வாகனமே வாகன போக்குவரத்து சட்டத்தின்படி குற்றவாளி. ஆனால் ஶ்ரீலங்காவில் அந்த வாகனம் யாருக்கு சொந்தமானது என்பதைப் பொறுத்து காவல்துறை நடவடிக்கை அல்லது தீர்ப்பு அமையலாம்.

Edited by tulpen

காலையில் நண்பர் ஒருவர் இந்த செய்தியை சொன்னார் .அனைவரும் கோண்டாவிலை சேர்ந்தவர்கள் .கோண்டாவில் சோகத்தில் மிதப்பதாக சொன்னார் .சிலர் எனக்கும் தெரிந்தவர்கள் தான் .

ஆழ்ந்த அனுதாபங்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்! :(

மிகவும் துயரமான செய்தி. ஆழ்ந்த அனுதாபங்களும் கண்ணீர் அஞ்சலியும்.

 

ஒரு வாகனத்தில் 13 பேர் பிரயாணம் செய்துள்ளனர். ஆனால் வாகனத்தினைப் பார்க்கும் போது ஆகக் கூடியது 7 பேர் மட்டுமே பிரயாணிக்கலாம் போலுள்ளது. அதிகம் பேர் ஒன்றாக சாமத்தில் பயணிப்பது கண்டிப்பாக தவிர்க்கபட வேண்டியடு. நித்திரை வரும் காரணத்தினால் வீதிப் பயணங்களில் அதிகாலை பயணங்கள் எப்பவும் தவிர்க்கப்பட வேண்டியவை.

ஆழ்ந்த இரங்கல்கள்! :(

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் துயரமான செய்தி. ஆழ்ந்த அனுதாபங்களும் கண்ணீர் அஞ்சலியும்.

 

வீதிகளையும்

ஆடம்பர  வாகனங்களையும் காட்டிவிட்டால் போதாது

அதற்கான அறிவித்தல்கள்

பதாதைகள்

எச்சரிக்கைகள்

படிப்புக்கள்

தண்டனைகள் இருக்கணும்........ :(  :(  :( 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்! 

இவ்விபத்தில் சிக்கி பலியான சோதிலிங்கம் மிதீபன் மற்றும் விபத்தில் காயமைந்த அவரது சகோதரன் சோதிலிங்கம் சஜீவன் இருவரும் ஜெர்மனி சோஸ்ற் நகரை வதிவிடமாக கொண்டவர்கள். கடந்த இரு மாதங்களுக்கு முன் அவர்களை சந்தித்திருந்தேன்.

அந்த மினி வான் எவ்வளவு வேகமாக வந்திருக்க வேண்டும் இந்த மாதிரி நசுங்கி இருக்கின்றது...நிறுத்தி வைத்திருந்த வாகனத்தில் குற்றம் இல்லை....அந்த இடத்தில ஒரு மரம் இருந்திருந்தால் மரத்தையா குற்றம் சொல்ல முடியும்?

சாரதி தான் முட்டாள் தனமாக வேகமாக ஓடினாலும்...வாகனத்தில் இருந்தவர்கள் நிலைமையை அவதானித்து அவனை மெதுவாக செல்ல சொல்லியிருக்கலாம்...

அநியாய மரணங்கள்....

நான்தான் நீங்கள் கூறயதை நான் மறுக்கவில்லை. வான். சாரதி மிகவேகமாக செலுத்தியது தவறுதான். ஆனால் படத்தில். நிறுத்திவைக்கப்பட்ட வாகனத்தை பாருங்கள். வாகனத்தின் அரைப்பகுதி நெடுஞ்சாலையின் ஓடுபாதையில் இருக்கிறது் அவ்வாறு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனம் நிச்சயமாக அபாயத்தை அறிவிக்கும் சிமிட்டி விளக்குகளை எரிய விட கடப்பாடு உள்ளது. அத்துடன் வாகனம் நிறுத்தப்பட்ட இடத்திற்கு 150 மீற்றருக்கு முன்னால் அபாய அறிவிப்பு முக்கோணம் வைக்கவும் வேண்டும். சம்பவம் நடந்தது நெடுஞ்சாலையில். கிராம பக்க வீதி அல்ல. விபத்து நடந்த நேரம் அதிகாலை 3 மணி.

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

தவிர்த்திருக்கக் கூடிய மரணங்கள்!

 

ஆழ்ந்த இரங்கல்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

https://www.youtube.com/watch?v=_8MuivxbzWc&feature=youtu.be

  • கருத்துக்கள உறவுகள்

இருட்டில் வாகனத்தை நிறுத்தி வைத்திருந்தால் சரியான வேகத்தில் போனாலும் அடிபடவே வாய்ப்பு அதிகம். தெருவிளக்குகள் எரிந்தால் கவனித்திருக்க வழியுண்டு.

ஆழ்ந்த இரங்கல்கள்..!

 

 
நேற்று அதிகாலை 3 மணியளவில் ஏ 9 வீதியின் கிளிநொச்சி, மாங்குளம் 233வது மைல்கல் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்

சின்னத்துரை பரமேஸ்வரி (வயது 79),

அவரது மகனான சின்னத்துரை சிவனேஸ்வரன் (வயது 43), சின்னத்துரை பரமேஸ்வரியின் பேரனுமான

சோதிலிங்கம் மதீபன்(ஜெர்மனி) (வயது 35)

சசிதரன் பதுமன் (05),

சசிதரன் யர்மிதா (07)

ஆகியோரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

அவர்களின் ஆத்மா சாந்திடைய அற்புதநற்தன விநாயகரை பிரா்த்திக்கின்றோம்.

அத்துடன், சசிதரன் சர்மிளா (30) சிவனேசன் செந்தூரி (12), சிவனேசன் கபினா (08), சிவனேசன் தர்மினா (31), ஜெயக்குமார் தயாநிதி (53), சோதிலிங்கம் சஜீவன் (38) ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சோதிலிங்கம் சஜீவனை தவிர ஏனைய ஐவரும் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில்

அனுமதிக்ப்பட்டுள்ளனர்.

அவர்களின் உடல்நிலை குணமடைய வேண்டும் என அற்புதநற்தன விநாயகரை பிரா்த்திக்கின்றோம்.

அண்ணனின் பிரிவால் வாடும்

_ கோண்டாவில் மக்கள் _

1010998_1407831966134348_1104638319_n.jp

 

கோண்டாவில் அரசடி விநாயகர் மடத்தில் இருந்து  ஆறு பேர்கள் விளையாடும்  304 காட்ஸ் விளையாட்டு  விளையாட  ஒரு கை குறைந்தால் என்னை சேர்ப்பார்கள் .அப்போது சின்னதுரை (கண்டாக்கர் ) தான் எனது குரு .அவரது மகன் கதிர்காமநாதன் கனடாவில் இருக்கின்றார் .

மீண்டும் அனைவருக்கும் எனது அஞ்சலிகள் .

மற்றவர்கள் குணமடைய வேண்டுகின்றேன் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.