Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மானிடத்தின் பேராசை !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

nb_rangerwithtusks-11_lr.jpg

Ranger with Tusks of Killed Elephant, Amboseli 2011

© Nick Brandt
 

கென்யா நாட்டின்,

கொடும் கோடையிலும்,

பனிக் கவசம் சுமக்கின்ற,

கிளிமாஞ்சரோ மலைக்குன்றின்,

அடிவாரத்தில்………!

 

பிளெமிங்கோ பறவைகள்,

உழுது கோடு வரைந்த நிலம்,

பாளம் பாளமாய்,

பிளந்து கிடக்கிறது!

 

பிளந்த நிலத்தின் வடுக்களுக்குள்,

புதைந்து மறைகின்ற,

சிறு தவளைக் குஞ்சுகள் கூட,

கதிரவனின் கொடுங்கரங்களின்,

வெம்மையை உணர்கின்றன!

 

நாளைய மேகங்களின்,

வருகைக்காக,

நம்பிக்கை சுமந்து,

அவை வாழ்ந்திருக்கின்றன!

 

இரக்கமில்லாத தரவைகளில்,

கருக்கட்டி வளர்ந்த,

பெரிய யானையின் தந்தங்கள்,

சிறிய மனிதனொருவனின்,

துப்பாக்கியின் வெற்றிக்குச்,

சாட்சியாகிக் கிடக்கின்றன!

 

தனது தோள்களில் கூடத்,

தூக்கிவைக்க முடியாத,

தந்தங்களின் பிரமாண்டம்,

அந்த யானையின்,

வரலாறு சொல்லி நிற்கின்றது!

 

வியாபாரிகளின் சந்தைகளும்,

வறுமையில் காய்ந்த வயிறுகளும்,,

நிரம்பாத வரைக்கும்......!

 

விலங்குகளின் மரணங்களுக்கு,

விலை குறைந்து போகாது!

 

நாளைய மழைத்துளிகள்,

நனைக்கப் போகின்ற,

ஏரியின் கரைகளில்,

மரங்கள் மட்டுமே வளரும்!

 

அவற்றை உண்பதற்கு,

அந்த யானைகள் இருக்காது!

 

அந்த மரங்கள் கூட,

ஒரு நாளில்……..!

 

மனித மிருகங்களின்,

மாளிகைகளின் சுள்ளிகளாகும்!

 

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

அந்த மரங்கள் கூட,

ஒரு நாளில்……..!

 

மனித மிருகங்களின்,

மாளிகைகளின் சுள்ளிகளாகும்!

 

 

உலகை  நேசிக்க

பெரிய  மனம்வேண்டும்

அது உங்களிடமுள்ளது

 

வாழ்த்துக்கள்

தொடருங்கள் அண்ணா

  • கருத்துக்கள உறவுகள்
கிளிமாஞ்சரோ மலைக்குன்றின், அடிவாரத்தில்………!
அட எனக்கு ரஜனிதான் ஞாபகத்திற்கு வருகுகின்றது :D
  • கருத்துக்கள உறவுகள்
மனதைக் கனக்க வைக்கிறது கவிதை. ஆனாலும் ஒரு நூறு வயசுவரையாவது வாழ ஆசைப்படும் நான் ஓடர் கொடுத்தது கருங்காலி மரத்தில் செய்த கட்டில். அந்த மரம் கருங்காலியாக உரம்பெற எத்தனை நூற்றாண்டு காலம் எடுத்ததோ!! 
 
  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கவிதை...! பாதுகாக்கப் பட வேண்டிய வன விலங்குகள் அநியாயமாய் அழிக்கப் படுகின்றன . இந்தத் தந்தம் இன்னொரு மிருகத்தால் பசிக்கு வேட்டையாடப் பட்ட  யாணையின் தந்தமாகக் கூட இருக்கலாம். மனிதன் கொன்றிருந்தால் தந்தம் போய் யாணையின் உடல்தான் கிடந்திருக்கும்...! :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கவிதை...! பாதுகாக்கப் பட வேண்டிய வன விலங்குகள் அநியாயமாய் அழிக்கப் படுகின்றன . இந்தத் தந்தம் இன்னொரு மிருகத்தால் பசிக்கு வேட்டையாடப் பட்ட  யாணையின் தந்தமாகக் கூட இருக்கலாம். மனிதன் கொன்றிருந்தால் தந்தம் போய் யாணையின் உடல்தான் கிடந்திருக்கும்...! :)

சுவியர், அந்தப்படம் எடுத்தவர் பற்றிய விபரமும், படம் பற்றிய விபரமும் பின்வருமாறு....!

 

Ranger with Tusks of Killed Elephant, Amboseli 2011
 
 
© Nick Brandt
 
 
"On this Earth, A Shadow Falls"
 
Elephant Drinking, Amboseli 2007. Killed By Poachers, 2009
Copyright © Nick Brandt
Elephant+Drinking+L.jpg
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

அந்த மரங்கள் கூட,

ஒரு நாளில்……..!

 

மனித மிருகங்களின்,

மாளிகைகளின் சுள்ளிகளாகும்!

 

 

உலகை  நேசிக்க

பெரிய  மனம்வேண்டும்

அது உங்களிடமுள்ளது

 

வாழ்த்துக்கள்

தொடருங்கள் அண்ணா

 

இந்தப்படத்தைக் கண்ட நாளிலிருந்து, மனத்துக்குள் ஒரு விதமான 'உறுத்தல்' இருந்துகொண்டிருந்தது!

 

எத்தனையோ உயிரினங்கள், எமக்கு முன்னர் இந்தப்பூவுலகில் வாழ்ந்து மறைந்து விட்டன! 

 

ஆயினும், வலியன வாழ்வதும், மெலியன வீழ்வதும் என்ற விதியே அனைத்தையும் வழி நடத்திச் சென்றது!

 

இன்றோ, மனிதன் உண்மையில் வலியவனல்லன்! 

 

தனது 'சிந்திக்கும் ஆற்றலால்' வடிவமைத்த கருவிகளின் மூலம், வலியவனாகி உள்ளான்!

 

தனது 'சிந்திக்கும் ஆற்றலாலேயே' தனது அழிவையும் நிச்சயம் தேடிக் கொள்வான், என நம்புகிறேன்!

 

வருகைக்கு நன்றிகள், விசுகர்!

"தக்கன பிழைக்கும்" என்பதுதான் உண்மை.

அது மனித குலத்துக்கும் பொருந்தும்!

 

கவிதை அருமை.... மிக்க நன்றி புங்கை! :)

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

-----

வியாபாரிகளின் சந்தைகளும்,

வறுமையில் காய்ந்த வயிறுகளும்,,

நிரம்பாத வரைக்கும்......!

 

விலங்குகளின் மரணங்களுக்கு,

விலை குறைந்து போகாது!

 

நாளைய மழைத்துளிகள்,

நனைக்கப் போகின்ற,

ஏரியின் கரைகளில்,

மரங்கள் மட்டுமே வளரும்!

 

அவற்றை உண்பதற்கு,

அந்த யானைகள் இருக்காது!

------

 

மேலேயுள்ள படத்தைப் பார்த்த போது... ஆத்திரமும், ஏக்கமும் தான் ஏற்பட்டது.

அதனை.. அழகிய கவிதையாய் வடித்த, புங்கையூரானுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வசந்த காலங்களை

காணத்துடிக்கும்

இலையுதிர் காலங்கள்.....

வாழ்த்துக்கள் உங்களைப்போன்றோரின் கவிதைகள்,எம்மையும் ஊக்கப்படுத்தும்...

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கவிதை புங்கை

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்அ. ருமையான கவிதை புங்கை

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் எழுத்துக்களைக் கூட சுள்ளி பொறுக்குவது போலத் தான் பொறுக்கி எடுக்கிறேன்...ஏதோ ஒன்றில் ஆசை கொண்டதனால் தானே அன்றாட வாழ்வையே நகர்த்திக்கொண்டு இருக்கிறோம்..எந்த விடையத்தை எழுதினாலும் அதற்குள் மக்கள் அறிந்து கொள்ள கூடியமாதிரி விடையங்களை அடக்கி எழுதப்படுவது எல்லாராலும் முடியாத ஒன்று...ஒவ்வொரு எழுத்தைப் படிக்கும் போதும் அடுத்து என்ன,என்ன எழுதி இருக்கிறார் என்ற தேடல் தானாகவே  மனதில் எழுகிறது..நன்றி பகிர்வுக்கு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அட எனக்கு ரஜனிதான் ஞாபகத்திற்கு வருகுகின்றது :D

வரவுக்கு நன்றிகள், புத்தன்! :D

 

மனதைக் கனக்க வைக்கிறது கவிதை. ஆனாலும் ஒரு நூறு வயசுவரையாவது வாழ ஆசைப்படும் நான் ஓடர் கொடுத்தது கருங்காலி மரத்தில் செய்த கட்டில். அந்த மரம் கருங்காலியாக உரம்பெற எத்தனை நூற்றாண்டு காலம் எடுத்ததோ!! 

 

அப்பிடி, இப்படி எண்டு நல்ல நித்திரையில கையைக், கால நீங்க ஆட்டிறது இல்லையோ, பாஞ்ச்! :D

 

கருங்காலி மரத்தில பட்டால், அடுத்த நாள் கருங்காலிக்கு ஒண்டும் நடந்திருக்காது! 

 

ஆனால் உங்கட கை, காலை ஒருக்கா ஒட்டகப்புலத்துக்கு, அனுப்பித்தான் திரும்ப எடுக்கவேணும்!

 

இருந்தாலும் உங்கள் 'உட்கருத்தை' விளங்கிக் கொண்டுள்ளேன்! நன்றிகள்!

"தக்கன பிழைக்கும்" என்பதுதான் உண்மை.

அது மனித குலத்துக்கும் பொருந்தும்!

 

கவிதை அருமை.... மிக்க நன்றி புங்கை! :)

மிகவும் கசப்பான உண்மையைச் சொல்லியிருக்கிறீர்கள், கவிதை!

 

புத்தன் கூட, புதிய விகாரைக்குள் குடியேறும்போது, அந்த நிலம், ஆக்கிரமிக்கப்பட்டதா இல்லையா என்று விசாரிப்பதில்லை! :o

 

வரவுக்கு நன்றிகள்!

  • கருத்துக்கள உறவுகள்

கென்யாவின் அழகை அப்படியே வரிகளுக்குள் அடக்கி அழிவுறும் மனிதரால் அழிக்கப்பட்டும் வனவிலங்குகளில் யானையும் ஒன்றாய் கவிதை தொட்டுச் செல்லும் வரிகளில் நூறாண்டுச் சாபம் நிறைந்து கிடக்கிறது. கென்யாவின் கொடுங்கோடை வரட்சியையும் பனிக்கவசத்தால் மூடிய கவிதை அழகு. 

இயற்கை பற்றிய விலங்குகளின் பிரஜ்ஞை பற்றிய நல்லதொரு கவிதை. கன காலத்துக்குப் பிறகு இப்படியான அக்கறை மிக்க ஒரு கவிதையை தமிழில் காண்கின்றேன்.

 

நன்றி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மேலேயுள்ள படத்தைப் பார்த்த போது... ஆத்திரமும், ஏக்கமும் தான் ஏற்பட்டது.

அதனை.. அழகிய கவிதையாய் வடித்த, புங்கையூரானுக்கு நன்றி.

எல்லை கடந்து செல்லும் மனிதனின் சுயநலம், ஒரு நாளில் அவனையே தின்னும் நாளொன்று நிச்சயம் வரும்!

 

நன்றிகள், தமிழ் சிறி!

வசந்த காலங்களை

காணத்துடிக்கும்

இலையுதிர் காலங்கள்.....

வாழ்த்துக்கள் உங்களைப்போன்றோரின் கவிதைகள்,எம்மையும் ஊக்கப்படுத்தும்...

வருகைக்கு நன்றிகள், ஈழப்பார்வை!

 

உங்கள் கவிதைகளிலிருந்து, நானும் பொறுக்குகின்றேன்!  :lol:

அருமையான கவிதை புங்கை

நன்றிகள், சுமே!  :D

வாழ்த்துக்கள்அ. ருமையான கவிதை புங்கை

நன்றிகள், நிலாக்கா! 

 

குளிரை எங்கடை பக்கம், அனுப்பிப்போட்டுச் சந்தோசமா இருக்கிறீங்கள் போல கிடக்கு! :o

உங்கள் எழுத்துக்களைக் கூட சுள்ளி பொறுக்குவது போலத் தான் பொறுக்கி எடுக்கிறேன்...ஏதோ ஒன்றில் ஆசை கொண்டதனால் தானே அன்றாட வாழ்வையே நகர்த்திக்கொண்டு இருக்கிறோம்..எந்த விடையத்தை எழுதினாலும் அதற்குள் மக்கள் அறிந்து கொள்ள கூடியமாதிரி விடையங்களை அடக்கி எழுதப்படுவது எல்லாராலும் முடியாத ஒன்று...ஒவ்வொரு எழுத்தைப் படிக்கும் போதும் அடுத்து என்ன,என்ன எழுதி இருக்கிறார் என்ற தேடல் தானாகவே  மனதில் எழுகிறது..நன்றி பகிர்வுக்கு.

நன்றிகள், யாயினி!

 

இன்று தான் உங்கள் கருத்தை வாசித்தேன்!

 

என்னால் முடிந்த அளவுக்கு, உங்கள் எதிர்பார்ப்புக்குளைத் தக்கவைத்துக்கொள்ள நிச்சயம் முயற்சிப்பேன்! :D

  • கருத்துக்கள உறவுகள்

ரோமியோ ஒரு நிலத்தை கவிதையில் கோர்த்து இழுத்து வந்து கண்முன்னே நிறுத்தி முழுமையான வெற்றியைப்பெற்றிருக்கிறீர்கள் உங்கள் கவிதைவரிகளை வாசிக்கும்போது அவை வரிகளாக மனக்கண்ணில் புலப்படவில்லை ஒரு தளத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும், நிகழ்த்தப்பட்டுக்கொண்டிருக்கும் சம்பவமாக மனதிற்குள் துயரோடு காட்சியாக விரிகிறது கவிஞன் விட்டுச்செல்லும் ஏக்கம் ஒரு நீண்ட எதிர்காலத்தில் சந்தர்ப்பம் வாய்க்கும்போதெல்லாம் உலுக்கிக் கொண்டே இருக்கும் அவ்வகையில் இந்த எழுத்துக்கள் மனதோடு ஆத்மார்த்தமாக ஐக்கியப்பட்டுவிட்டன. உங்கள் படைப்பில் ஒரு தனித்துவமான வசீகரிப்பு இருக்கிறது ரோமியோ அது துயரமாகட்டும் மகிழ்சியாகட்டும் ஏக்கமாகட்டும் எந்தத்தளத்திலிருந்தாலும் மிளர்வாகத்தான் இருக்கின்றன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.