Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குமுதினி படகு படுகொலை - 29 ஆவது நினைவு தினம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1985ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் திகதி நெடுந்தீவு
துறைமுகத்திலிருந்து குறிக்கட்டுவான் நோக்கி குமுதினி படகில் பயணம் செய்த
பயணிகளை நயினாதீவில் முகாமிட்டிருந்த கடற்படையினர் வழிமறித்து வெட்டி
படுகொலை செய்தனர். இதில் பெண்கள், குழந்தைகள், உட்பட 36பேர் படுகொலை
செய்யப்பட்டதுடன் பெரும்பாலானவர்கள் கை,கால்களை இழந்து அங்கவீனமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது



குமுதினியில் பயணம் செய்து... கொண்டிருந்த மக்கள் ஸ்ரீலங்கா படையினரால்
அழிக்கப்பட்டது நடந்தேறி 28 ஆண்டுகளாகி விட்டன.‘குமுதினி” நெடுந்தீவுக்கு
பயணிகளை ஏற்றிச் செல்லுகின்ற படகு.1960களிலிருந்து இன்று வரை நெடுந்;தீவு
மக்களை வெளியுலகத்தொடர்பில் வைத்திருக்க உதவிய படகு.குமுதினி அந்த மக்களின்
உயிராகிவிட்டது. அது ஒரு நினைவுச்சின்னம். ஒரு போர் நினைவுச்சின்னம். அந்த
மக்களின் வாழ்வின் நினைவுச்சின்னம். அந்த சடப்பொருள் இன்று வரலாறாகி
விட்டது.

இப்போது நயினாதீவுக்கு செல்வதற்காக, குறிகாட்டுவான்
இறங்குதுறைக்குள் ஸ்ரீலங்கா கடற்படையினர் மக்களை மூடியிருந்த கதவைத்திறந்து
அனுமதிக்கின்றனர். அப்பொழுதுதான் என் வரலாற்றில் முதல் தடவையாக ‘குமுதினி”

என் கண்களில்படுகின்றது. உண்மையில் குமுதினியில் மக்கள் உயிர்கள்
ஸ்ரீலங்கா கடற்படையினரால் காவு கொள்ளப்பட்ட வேளையில் குமுதினியின் தோற்றம்
எனக்குத் தெரியாவிட்டாலும், அந்த முதல் கடற் படுகொலையால் குமுதினி எல்லா மக்களின் மனங்களிலும் நிலைத்துவிட்டதைப் போலவே. தோன்றாப்பொருளாக நிலைத்துவிட்ட குமுதினியின் நேர்த்தோற்றம் எனக்குள்ளும் நிலைத்துவிட்டது என்பதை என்னால் உணரமுடிந்தது.

அவ்வேளை அதன் தோற்றம் ஒரு சடப்பொருளாய் வெறும் படகாய் இருக்கவில்லை. கொல்லப்பட்ட எமது மக்களின் உயிராகவும் தெரிந்தது. குறிகாட்டுவான் இறங்குதுறையின் முழு நீளத்ததையும் தாண்டி அறுபது அடி நீளத்தில் இறங்குதுறையில் குமுதினி கிடந்தது.
 
குமுதினியின் அரசியல் வரலாற்றின் முதற்பகுதி.
 
குமுதினி 1960களில்
இலங்கை பொது வேலைத்திணக்களத்தினால்நெடுந்தீவுக்கு
போக்குவரத்துச் சேவையில் ஈடுபடுத்தப்பட்டது. இது திருகோணமலை
‘டொக்யாட்டில்” கட்டப்பட்டு ஜேர்மனியின் புக் எந்திரம் பொருத்தப்பட்ட ஒரு
குட்டிக்கப்பலின் பரிமாணத்தில் மரக்கலமாக குமுதினி உருவாகியிருந்தது.
தீவகத்தின் ஆழக்கடலில் தனித்துநின்ற நெடுந்தீவு மக்களின்
வெளியுலகத்ததரிசிப்புக்கான பாதையை திறந்துவைத்தது.


குமுதினியுடன் காலத்துக்கு காலம் பல படகுகள் நெடுந்தீவுக்கான
போக்குவரத்துச் சேவையில் ஈடுபட்டாலும் குமுதினிதான் தன் வாழ்வை உழைப்பை 40 ஆண்டுகளாக தொடர்ந்துவந்தது.1980களில் போர்முனைப்புற்ற காலத்தில் போராட்டப்பணிகளையும் ஒரு வகையில் அது ஆற்றியது.அ தனால் குமுதினிமீது நயினாதீவு ஸ்ரீலங்கா கடற்படையினர்  கண்வைக்கத்தொடங்கினர்.நடுக்கடலில் வைத்து குமுதினி அடிக்கடி கடற்படையினரால் சோதனைக்குள்ளாக்கப்படத்தொடங்கியது.
 
கடலில் குமுதினிக்கே இந்த விசேடகவனிப்பு. இதற்கு அடிப்படை காரணம்
நெடுந்தீவு இந்திய கடல் எல்லைக்கு மிக அருகில் இருப்பதாகும். அத்தடன்
நெடுந்தீவின் ஒரு கிராமசேவையாளர் பிரிவின் கீழ் உள்ள இந்திய கடற்கரைக்கு
அண்மையாக உள்ள கச்சதீவும் ஒரு காரணமாகும். நடுக்கடல் சோதனையைத் தவிர  நயினாதீவில் உள்ள ஸ்ரீலங்கா கடற்படைத்தளத்திலும் அதிக சோதனைக்கு குமுதினி உள்ளாக்கப்பட்டு வந்தது. அதில் செல்லும் மக்கள் விசாரிக்கப்படுவது,
தாக்கப்படுவது வழமையானதாகியும் விட்டது. அன்றும் அப்படித்தான்பொழுது
விடிந்தது. நெடுந்தீவின் மாவலித்துறை இறங்குதுறையில் குமுதினி காலை 7
மணிக்கு பயணத்துக்கு தயாராகியிருந்தது.


1985 மே 15 நெடுந்தீவு மாவலித் துறைமுகத்தில் இருந்து 64 பயணிகளுடன் காலை
7.00 மணிக்கு புறப்பட்டது. முதலில் பொது வேலைகள் திணைக்களத்தின் படகாக
இருந்து, தற்போது வீதி அபிவருத்தி அதிகார சபையின் கீழ் இயங்கி
வருகிறது.குமுதினிப்படகு அரைமணி நேரத்தின் பின் கடலில் ஸ்ரீலங்கா
கடற்படையினரால் வழிமறிக்கப்பட்டது. இயந்திர அறை முன்பகுதி பின்பகுதி என
மூன்று பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

கடற்படையினர் குமுதினியை  நிறுத்தினர். எட்டு கடற்படையினர் முக்கோண கூர்க்கத்தியும் கண்டங்கோடலிகள் இரும்புக்கம்பிகள் சகிதம் குமுதினியில் ஏறினர். பின் புறமிருந்த பயணிகளை இயந்திர அறையின்; முன்பக்கம் செல்லுமாறு மிரட்டினர். அவர்கள் அனைவரும் சென்றுவிட்டனர். பின்புறம் இருபுற இருக்கைகளுக்கு நடுவே பலகைகளினால் இயந்திரத்தில் இருந்து பின்புறம் ‘புறொப்பிலருக்கு” செல்லும் ஆடு தண்டுப்பகுதி மூடப்பட்டிருந்தது மூடப்பட்டிருந்த அப்பலகைகளை கடற்படையினர் அகற்றினர். இருக்கை மட்டத்தில் இருந்து சுமார் 4அடி ஆழமானதாக அது இருந்தது.
இதன்பின் முதலில்படகுப்பணியாளர்கள் ஒவ்வொருவராக உள்ளே அழைக்கப்பட்டனர்.

குமுதினியின் இருபக்க வாசல்களிலும் உள்ளும் வெளியும் கடற்படையினர்
இருந்தனர். ஒவ்வொருவராக கடற்படையினர் அழைத்து கத்தியால் குத்தியும்
கண்டங்கோடலியால் வெட்டியும் இரும்புக்கம்பியால் தாக்கியும் கொன்று அந்த
நடுப்பள்ளத்தில் போட்டனர். இப்படி கொல்லப்படுபவர்கள் எழுப்பும் அவல ஒலி
முன்புறம் இருப்பவர்களுக்கு கேட்கக்கூடாது என்பதற்காக அவர்கள் பெயரையும்
ஊரையும் உரக்கச் சொல்லுமாறு பணிக்கப்பட்டனர்.

அவர்கள் அனைவரும் உரத்துச் சொல்ல அதில் பின்புறம் கொல்லப்படுபவர்கள் எழுப்பும் அவல ஒலி மறைந்தது.பின்புறம் செல்பவர்களுக்கு என்ன நடக்கிறது என்பது முன்புறம் இருப்பவர்களுக்கு தெரியவே தெரியாது. பின்புறம் செல்பவர்கள் உள்ளே சென்று கிடங்காக உள்ள பகுதியில் குத்திக்கிடப்பவர்களை காணும் வரை அவர்களுக்கு முன் சென்றவர்களுக்கு என்ன நடந்தது என்பது தெரியாது. அவலக் குரல் எழுப்ப முடியாது செத்தவர் போல் இருந்தவர்களும் உண்டு. கடுமையாகத் கடற்படை தாக்க குரல் எழுப்பியவர்கள் அதிகளவில் தாக்கப்பட்டு இறந்து விட்டார்கள் என கடற்படையினரால் கருதப்பட்டும் போடப்பட்டனர். உள்ளே பள்ளமாக இருந்த பகுதியில் உடல்கள் போடப்பட்டதால் முன்புறம் இருந்து செல்லுபவர்களுக்கு முதல் சென்றவர்களும் கொல்லப்படுவது தெரியாது மறைக்கப்பட்டது. கார்த்திகேசு நுழைவாயிலிலேயே கொலையுண்டோரைக் கண்டு கடலில் குதித்தார். வேட்டி
அணிந்திருந்த படியால் அவர் கடலில் மிதக்கத் தொடங்கினார். துப்பாக்கியால்
சுடப்பட்டு அவர் கொல்லப்பட்டார். ஏழு மாத குழந்தை; முதல் வயோதிபர் வரை
ஈவிரக்கமின்றி கொலை செய்யப்பட்டனர். அதில் செத்தவர் போல் கிடந்து மூன்று
அல்லது நான்கு படகுப்பணிகள் மட்டுமே உயிர் தப்பினார்.

நடுக்கடலில் இப்படியாக சகலரும் கொல்லபட்டும் காயப்பட்டும்போக அனைவரையும் கொன்று விட்டதாக கடற்படையினர் கருதிக் கொண்டு திருப்திப்பட்டனர்.அந்த திருப்தியால் மகிழ்வடைந்த கடற்படையினர் தமது படகில் நயினாதீவு தளத்துக்கு சென்று தமக்கும் இச் சம்பவத்திற்கும் தொடர்பில்லாதது போன்று இருந்து விட்டனர்.குமுதினி எந்திரம் நிறுத்தப்பட்டதால் அது நடுக்கடலில்
தத்தளித்தது. குமுதினியில் சென்றோர் அனைவரும் இறந்தும் குற்றுயிரும்
குலைஉயிருமாக பின்புற புறப்பலரை சுழற்றும் ஆடுதண்டு கிடங்குக்குள்
கிடக்கின்றனர். படகின் ஓட்டிகள் அனைவரும் கொல்லப்பட்டுவிட்டனர். சம்பவ
வேளையில் ஏழு படகுப்பணியாளர்களில் ஆறு பேர் மட்டும் இருந்துள்ளனர்.
அவர்களுடன் இருவர் ஒட்டிகளான ஹொக்ஸன்கள் அவர்கள் இருவரும்
கொல்லப்பட்டுவிட்டனர். இவர்களை விட படகை ஒட்டக்கூடிய நிலையில் காயமடைந்து ஒருவரும் இல்லை.படகின் இயந்திர இயக்குனர் மட்டும் மண்டையில் கத்திக்குத்துடன் மயங்கிக் கிடந்தார். முப்பது நிமிடங்களாக குமுதினி
ஆழக்கடலில் தத்தளித்துக்கொண்டலைந்தது.
 
பின்புறக்கிடங்கில் மயங்கிக் கிடந்தவர்களில் தெளிந்த திடகாத்திரமான மயிலிட்டி வாசி தம்மை சுதாகரித்து எழுந்து மயங்கிக் கிடந்த இயந்திர இயக்குனரை எழுப்ப முயன்றார். ஆனால் அவர் அரை மயக்கத்திலிருந்து எழ வில்லை. இருந்தும் அந்த நிலையில் அவரை இழுத்துக்கொண்டு இயந்திர அறைக்குள் அவரை அவர்கள் இழுத்துச்செல்கின்றனர். இயந்திர இயக்குனரை இயந்திர அறைக்குள் அவர்கள் கொண்டு செல்கின்றனர். அவரை இயந்திரத்தை இயக்குமாறு செய்யச்சொல்கின்றனர். ஆனால் அவர் மயக்கமடையவே
இயந்திரம் இயக்கப்பட முடியாது போனது. அவர் சுதாகரித்து இயந்திரத்தை
இயக்கியிருந்தால் மிகுந்த ஆபத்து உருவாகியிருக்கும். ஏனென்றால் குமுதினியை
ஸ்ரீலங்கா கடற்படையினர் மறித்தபோது அது இயக்கநிலையில் கியரிலேயே
நிறுத்தப்பட்டது. இதனால் அந்தவேளை எந்திரம் இயக்கப்பட்டிருந்தால்
இயந்திரம் சுழல் ஆடுதண்டு புறப்பலரை சுற்றியிருக்கும். அந்த ஆடுதண்டுக்கு
மேலேயே கொல்லப்பட்ட மக்களும் காயப்பட்ட மக்களும் போடப்பட்டிருந்தனர்.
ஆடுதண்டு சுழன்றிருந்தால் அவர்கள் சக்கையாக்கப்பட்டிருப்பர். எந்திரம்
இயங்காத நிலையில் குமுதினி நடுக்கடலில் அலைந்து கொண்டிருந்தது.கடல்
நீரோட்டத்தில் அது அடித்துச் செல்லப்பட்டது. புங்குடுதீவு கண்ணகை அம்மன்
கோயில் கரையை நோக்கி தானாகவே நகரத் தொடங்கியது. கடலில் அலைந்து திரிந்த குமுதினி புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோயிலுக்கு நேராக சென்றது. அதன் பின் நீரோட்டத்தால் நயினாதீவு நோக்கி அலையத் தொடங்கியது. குறிகாட்டுவானில் எட்டு மணிக்கு வரவேண்டிய குமுதினி வந்து சேராததால் பதட்டம் ஏற்பட்டது. எந்திரக் கோளாறா, எரிபொருள் தீர்ந்ததா என்ற கேள்வியே அங்கு எழுந்தது. ஆனால் படுகொலை ஒன்று நடந்திருக்கும் என எவரும் எதிர்பார்க்கவில்லை. குமுதினியை தேட ஆயத்தம்நடந்தது.

குமுதினி நயினாதீவு நோக்கி அலைந்தது நயினாதீவு அருகே ஆழ்கடல் ஆரம்பிக்கும் பகுதியை அடைந்து களப்பு கடலின் ஒரு மேடருகே
பொறுத்துப் போனது.குறிகாட்டுவான் துறையின் நுழைவாயிலில் ஒரு சில கடைகள் இருந்தன. உணவுக்கடைகள் அவை. திடீரென கடையொன்றின் உரிமையாளரான திருமதி. திருநாவுக்கரசு அவர்கள் இச் சம்பவத்தைக் கண்டு பரபரப்படைந்தார்.

தொலைவில் குமுதினி அலைவதைக்கண்டார். குமுதினிக்குள் இருந்து ஒரு
வெள்ளைத்துணி ஒன்று அசைவதைக் கண்டார். குமுதினிக்குள் தப்பியவர் ஒருவர் காட்டிய அழைப்பு அது. அப்போது குமுதினி பழுதடைந்ததாகவே கருதி உடனடியாக அதனைநோக்கி படகில் மீட்புப்பணிக்காக குறிகாட்டுவான் இறங்குதுறையிலிருந்து குழு ஒன்று சென்றது. அவர்கள் குமுதினியை நெருங்கி அதனுள் ஏறிப்பார்த்தபோது இரத்தத்தை உறைய வைக்கும் பிணக்குவியலை கண்டனர். உடனடியாக குமுதினி குறிகாட்டுவான் நோக்கி இழுத்து வரப்பட்டது.

விடுதலைப்புலிகள் அங்கு விரைந்து மீட்பு நடவடிக்கையைத் தொடங்கினர்.
காயமடைந்தோர் உடனடியாக புங்குடுதீவு மருத்துவமனைக்குகொண்டு செல்லப்பட்டனர். இறந்தோர் உடல்கள் யாழ் போதனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. புங்குடுதீவு மருத்துவமனையிலிருந்து கடுமையாக காயமடைந்தோர் பின்னர் யாழ் போதனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.இப்படுகொலையின் பின் காயமடைந்தவர்கள் புங்குடுதீவு மருத்துவமனையிலும் யாழ் போதனா வைத்திய மனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் தாக்கப்பட்ட விடயம் மருத்துவமனை ஸ்ரீலங்கா பொலிசாரிடம் முறையிடப்பட்டும் எதுவித நடவடிக்கைகளும்
எடுக்கப்படவில்லை. பதிலாக சில நாட்களில் தப்பியவர்களை மருத்துவமனைக்கு
வந்த ஸ்ரீலங்கா கடற்படையினர் தேடத் தொடங்கினர்.

உடனடியாக மருத்துவமனையில் இவர்கள் விடுதிகளுள் இடம் மாற்றி மறைக்கப்பட்டனர். உயிர் தப்பிய படகுப்பணியாளர் மருத்துவமனையில் கடற்படையினர் தேடப்படுகின்றபோது அவர் மறைக்கப்பட்டு கடைசிவரை தலைமறைவிலேயே சிகிச்சை பெற்றார். இரு பெண்களைத்தவிர ஏனையோர் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றனர். படுகொலை சாட்சியங்கள் தப்பிவிடக்கூடாது என்பதற்காக கடற்படையினர் அவர்களை
தேடித்திரிந்தனர். இன்றும் தேடிக்கொண்டிருக்கின்றனர். எதுவித விசாரணைகளும்
நீதி வழங்கலும் இல்லாது அந்த கடற்படுகொலை மறைக்கப்பட்டுவிட்டது.ஆனால்
ஆட்களை தேடுவதில் இன்றும் ஸ்ரீலங்காப்படையின் அக்கறை தீவிரமாக இருப்பது
தெரிகின்றது.குமுதினி குறிகாட்டுவான் இறங்கு துறைக்கு கொண்டு வரப்பட்டு
அதற்குள் இருந்த இறந்தோரையும் காயமடைந்தோரையும் வெளியேற்றும் பணி
விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்டது.அப்போதைய
தீவகப் பொறுப்பாளர் உடனடியாக களத்தில் இறங்கி செயற்பட்டார்.காயமடைந்தோர்
 
முதலுதவிக்காக புங்குடுதீவு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு
முதலுதவியின் பின் யாழ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இறந்த
முப்பத்தி மூன்று பேரின் உடல்கள் புங்குடுதீவு மருத்துவ மனையில்
வைக்கப்பட்டன. புங்குடுதீவுமக்கள் அங்கு திரண்டனர். சிங்களப்படைகளின்
கொடுமை கண்டு கொதிப்புற்றனர். அம் மக்கள் உடனடியாகவே பணம் திரட்டிக்
கொடுத்தனர்.அந்த பணத்தைக் கொண்டு உடனடியாக தீவகப் பொறுப்பாளர் பாய்களை
கொள்வனவு செய்து இறந்தோர் உடல்களை அவற்றைக் கொண்டு கட்டி யாழ் போதனா
 
மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அடுத்த கட்டமாக இறந்தோரின்
இறுதிக்கிரியைக்காக புங்குடுதீவு மக்களின் பணத்தைக்கொண்டு சவப்பெட்டிகள்
கொள்வனவு செய்யப்பட்டன. மரண விசாரணையின் பின்னர் மருத்துவ மனையிலும்
 
இறந்தவர்களுடன் முப்பத்தியாறுபேரின் உடல்கள் அவரவர் இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

நெடுந்தீவுக்கு கொண்டு செல்லப்பட வேண்டிய
உடல்களை கொண்ட சவப் பெட்டிகள் புங்குடுதீவு மருத்துவமனைக்கு கொண்டு
செல்லப்பட்டன. அங்கு இனவாதத்தில் பலியான மக்களின் நினைவு கூரல் நிகழ்வு
இடம்பெற்றது.குமுதினியில் கொலையுண்ட மக்களின் குடும்பங்களிற்காக அம் மக்கள்

திரட்டிக் கொடுத்த பணத்தில் மிகுதியான பணத்தில் தமிழர் வரலாறில்முக்கியமான
ஒர் பதிவு நடந்தது. எஞ்சிய பணத்தில் படுகொலைக்கான நினைவுப் பிரசுரம் ஒன்று
அச்சிடப்பட்டது.
 
அதில் முக்கிய கவிஞர்களான
சு.வில்வரத்தினம்,மு.பொன்னம்பலம்
ஆகியோரின் கவிதைகளும் நிலாந்தனின் முதல் கவிதையும் பிரசுரமானது.

சு.வில்வரத்தினத்தின் கவிதை ‘காலன் கடைவிரிக்கிறான்” என்ற தலைப்பில்
அமைந்தது என்ற தகவல் மட்டும் இருக்கிறது. ஆனால் கவிதையை
காணக்கிடைக்கவில்லை. மு.பொவின் கவிதையும் அப்படியே. ஆனால் நிலாந்தனின் ‘கடலம்மா” கவிதைதான் அழியாப் பதிவாக இலக்கிய சாட்சியமாக இன்றும் இருக்கிறது.காலத்தால் அழியாத பதிவாக அது இருக்கிறது. கடல் என்ற சடப்பொருளை ‘கடலம்மா” என விழித்து கடலுக்கு உயிர்ப்பைக் கொடுத்த கவிதை. கடலை தமிழருடன் உயிர்ப்பாக பிணைத்த கவிதை. கடலை கடலம்மாவாக கருத்துருவாக்கிய முதல்கவிதையாகவும் அதுதான் அமையும் என கருதலாம்.அந்த கடலம்மா என்று கடலுக்கு உயிர்கொடுத்தது அந்த கவிதை. கடலுடன் குமுதனி என்ற சடப் பொருளான படகுக்கும் உயிர் கொடுத்த கவிதை.இன்றும் குமுதினி தமிழ்மக்களின் உயிர்களின்
இருப்பிடமாக இல்லாமல் குமுதினியாகவே மாறி இருக்கிறாள். இதனையும்
நிலாந்தனின்கவிதை சாதித்துக் கொடுத்திருக்கிறது.

.


இதை மையமாக கொண்டு 1990களின் பிற்பகுதியில்குமுதினியின் படுகொலை அவலத்தை சுவிசில் ஏ.ஜி.யோகராஜாவின் எழுத்தில் அன்ரன் பொன்ராஜாவின் நெறியாள்கையில் கடலம்மாஎன்ற நாடகத்தை அரங்கேற்றினர்.அது அங்குள்ள மற்றைய மொழிக்காரரின்கவனத்தை ஈர்த்தது. குமுதினி ஒரு மிதக்கும்
ஒஸ்ட்விசஎன்ன இது புதிதான சொல் என திகைக்கவேண்டாம்.ஒஸ்ட்விச் என்பது
ஜேர்மனியை ஆண்ட ஹிட்லர் யூதர்களை படுகொலை செய்த வதை முகாம்.அந்த
வதைமுகாமில் நடந்த மாதிரிதான் குமுதினியில் எமது மக்கள் சிங்களப்படைகளால் படுகொலை செய்யப்பட்டனர். தாம் கொல்லப்படும் வரை என்ன நடக்கப்போகின்றது எனத்தெரியாமலே குமுதினியில் மக்களின் படுகொலை நடந்தது. குமுதனி படுகொலை நடந்த விதம் எப்படி என்பதை நாம் அறிந்திருக்கிறோம் .
 
இப்போது ஒஸ்ட்விச் கொலை
பற்றி யூதர்களின் ஆவணம் ஒன்றிலிருந்து பார்ப்போம்.அறுபது ஆண்டுகள்
கடந்தோடிவிட்டன. ஆயினும் மனித குலவரலாற்றில் ஆறாத காயாமாகவே இந்நிகழ்வு
பதிந்துவிட்டது. உலகமே வெட்கித் தலை குனியும் அந்;த நாளை பத்திரிகைகள்
,வானொலிகள், தொலைக்காட்சிகள் யாவும் முக்கியத்துவம் அளித்துப் பேசின.
வளர்ந்து வரும் இளம் சந்ததியிடம் – மனிதகுல வரலாற்றில் நிகழ்ந்த அந்த
அநீதியை மறக்கக்கூடாத ஒரு பாடமாகக் கையளிப்பதற்காகவும்,அவர்களை மனிதநேயம்மிக்கவர்களாக வளர்ப்பதற்காகவும் இந்த நாள் நினைவுகூரப்படுகிறது.இரண்டாம் உலக மகாயுத்தக் காலத்தில்,நாசிப்படையானது பல வதைமுகாங்களை உருவாக்கியுள்ளது. பல லட்சக்கணக்கான மக்களை, குறிப்பாக யூதர்களை உலகத்தின்
பார்;வையிலிருந்து மறைத்து இரகசியமாக சிறையில் அடைக்கவும்,சித்திரவதை
செய்யவும்,கொல்லவுமாக அமைக்கப்பட்டதே இந்த வதை முகாம்கள்.இவற்றுள் போலந்து
நாட்டில், Nஐர்மனியின் எல்லைக்கு அருகிலுள்ள ஒஸ்விச் என்ற நகரத்தில் 1940
ஆம் ஆண்டளவில் அமைக்கப்பட்ட வதைமுகாம் மிகவும் ுக்கியமானது. இங்கு 1942
க்கும் 1945 இடையில், பத்துலட்சத்திற்கும் மேற்பட்ட யூத மக்கள்
கொல்லப்பட்டிருக்கிறார்கள். 6 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏனையோர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இதனால் ஒஸ்விச்சினுடைய பெயர் என்றென்றும் மறக்க முடியாததாக
இருக்கிறது.அங்கே துன்பங்களும் அதைத் தொடர்ந்த மரணங்களும் பின்னிப்
பிணைந்திருக்கின்றன.அம் முகாமில் யூத மக்களை அழிப்பதற்காகவென்றே நச்சுவாயு அறைகளும்,இறந்தவர்களது உடல்களை எந்த அடையாளமுமின்றி எரிக்கக்கூடிய மின்சார அடுப்புக்களும் நன்கு திட்டமிட்டு அமைக்கப்பட்டிருந்தன அந்நேரம் ஒரு ரயில் கூவலின் சத்தம் அந்த அமைதியை கிழித்துக்கொண்டு கேட்கும். அங்கு நாய்களின் சத்தத்தைக் கேட்கமுடியாது. அல்லது அந்த அவலத்துக்குட்பட்ட பெற்றோர்களிடமிருந்து பிள்ளைகளை பிரிப்பதன் கதறல் ஒலிகளைக் கேட்கமுடியாது. அமைதி மட்டும்தான்; அங்கு குடியிருக்கும்.அப்போது பொதுவாக யாருடைய மனக்கண்களிலும்,பல லட்சக்கணக்கான பெண்களை விரியும்.அப்படி அனுப்பப்பட்ட அம் மக்களுக்கு தாம் எங்கே கொண்டு செல்லப்படுகின்றோம் என்பது தெரியாது.அவர்கள் தங்களது குடும்பத்திலிருந்து பிரிக்கப்பட்டவர்களாக, நிர்வாணமாக்கப்பட்டவர்களாக, தலை மொட்டையடிக்கப்பட்டவர்களாக, அழுதுகொண்டேயிருப்பவர்களாக,
தொடர்ச்சியான உடல் வதைக்குட்பட்டவர்களாக, தாங்கள் வாழ்ந்த இடங்களை விட்டு பிரிக்கப்பட்டவர்களாக, பல கொடுமைகளை சுமந்து அந்த வதை முகாம்களுக்குள் அடைக்கப்பட்டார்கள். பின்பு அவர்கள் வி~சவாயு மூலம் கொல்லப்பட்டார்கள். கடைசிவரை தாம் கொல்லப்படப்போகிறோம் என்பது தெரியாது ஒஸ்டவிச்சில் யூதர்கள் படுகொலையானதைப்போல சில அடி தூரத்துக்குள் தம் சக மக்கள் கொல்லப்படுவது தெரியாது கொல்லப்பட்ட அவலம், ஏழு மாத குழந்தை பறித்தெடுக்கப்பட்டு குத்திக் கொல்லப்பட்ட கொடுமை குமுதினியில் நிகழ்ந்தது. யூதமக்களின் படுகொலையை நினைவில் வைத்திருக்க அந்த வதை முகாம் இன்றும் பராமரிக்கப்படுகின்றது.நமது தாயகத்திலும் இன்றும் வாழும் படுகொலை வரலாற்றுச்சின்னம் குமுதினி. யாழ்பொது நூலக அழிப்பு மறைக்கப்பட்டது போல விடக்கூடாது எம் உயிர்களை பலிகொண்ட அந்த கொடுமை மறக்கப்படக்கூடாது. எம் மக்கள் படுகொலை செய்யப்பட்ட
நினைவுச்சின்னங்கள் வேறு எமக்கு இல்லை. குமுதினியில் கொல்லப்பட்ட மக்களின் சடலங்களை நெடுந்தீவுக்கு கொண்டு செல்லப்பட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

குமுதினி குறிகாட்டுவான் இறங்குதுறையில் கட்டப்பட்டுக்கிடந்தது.அதனுள்
மக்களின் இரத்தமும் கடல்நீரும் டீசலும் கலந்து இருந்தன. அந்தப்பக்கமே
மக்கள் செல்லமுடியாத படி நிண நாற்றம் எடுத்தது. இந்தக் குமுதினியில்தான்
உடல்கள் நெடுந்தீவுக்கு கொண்டு செல்லப்படவேண்டும் .அதற்கு குமுதினி
சுத்தப்படுத்தப்பட வேண்டும். ஆனால் எல்லோருமே அதற்குக் கிட்ட செல்ல
பயப்பட்டார்கள். ஒன்று நிணநாற்றம், அடுத்தது அதற்குள் மக்கள் படுகொலை
செய்யப்பட்டதால் ஏற்பட்ட பயம். இறுதியாக சாராயம் வாங்கிக் கொடுக்கப்பட்டு
சிலரைக்கொண்டு குமுதினி கழுவப்பட்டது. மூன்றாம் நாள் தனது மக்களை சடலங்களாக காவிக்கொண்டு குமுதினி நெடுந்தீவு நோக்கி புறப்பட்டது. இந்தக் கல்வெட்டு நெடுந்தீவின் மாவலித்துறையில் அமைக்கப்பட்டுள்ள குமுதினிப்படுகொலை நினைவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
 

 

http://porkutram.forumta.net/t1081-28

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களக் காடைப் படையால் கொல்லப்பட்ட பொதுமக்களுக்கு நினைவு அகவணக்கங்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்
29 வருடங்கள் ஓடிவிட்டது ...................
வலிகள் நேற்றுபோல் இருக்கிறது .
  • கருத்துக்கள உறவுகள்
29 வருடங்கள் ஓடிவிட்டது ...................

வலிகள் நேற்றுபோல் இருக்கிறது .

 

சிங்களக் காடைப் படையால் கொல்லப்பட்ட பொதுமக்களுக்கு நினைவு அகவணக்கங்கள்..!

 
  • கருத்துக்கள உறவுகள்

மனதை மிகவும் பாதித்த கொடிய அவலம்.

ஆழ்ந்த அஞ்சலிகள்.

குமுதினிப்படகில் அநியாயமாக கொல்லப்பட்ட அனைத்து பொதுமக்களுக்கும் நினைவு வணக்கங்கள்!!!!

  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சை உறைய வைத்த குமுதினிப் படுகொலை

fc623f99cf0f18bded43f164e4ab7111.jpg

 

அலைகளைக் கிழித்தபடி குறிகாட்டுவான் துறையை நோக்கி விரைந்து கொண்டிருந்தது குமுதினி.நெடுந்தீவுக்கும் குறிகாட்டுவானுக்குமிடையில் சேவையிலுள்ள அரச படகு அது. நெடுந்தீவு மக்கள் தமக்குத் தேவையான அத்தியாவசிய பொருள்களைக் கொள்வனவு செய்ய, அரச செயலகத்தில் தமது அலுவல்களை நிறைவேற்ற, தமது அன்றாட கடமைக்குச் செல்ல, குழந்தைகளின் தேவைகளைக் கவனிக்க, நோயாளர்கள் யாழ்.போதனா வைத்தியசாலைக்குச் செல்ல என்று தமது அன்றாட கடமைகளைச் செய்து மாலையில் வீடு திரும்பும் கனவுடன் இந்தப் படகுப் பயணத்தை மேற்கொள்வர். அன்றைய பயணமும் கூட  இவ்வாறே இடம்பெற்றது. இன்னும் 30 நிமிடத்தில் குறிகாட்டுவானில் இறங்கி விடலாம் என்ற கனவுடன் கலகலப்பாகச் சென்று கொண்டிருந்த மக்களுடன் அசைந்து ஆடி விரைந்து கொண்டிருந்த குமுதினிக்கோ தனக்கு ஒரு பெரிய ஆபத்து வரப் போகின்றது என்ற உண்மை தெரிந்திருக்கவில்லை. 

 
அப்போது திடீரென சிறிய படகு ஒன்று ஏழு பேருடன் வந்து அதனை இடைமறித்த போது படகோட்டிகளும் பயணிகளும் என்ன இது கடற்படையின் வழமையான சோதனை நடவடிக்கைதானே என எண்ணிக் கொண்டனர். ஆனால் வந்தவர்கள் கொலைக் கருவிகளுடன் குமுதினியில் ஏறி படகின் பின் அறையில் இருந்த மக்களை முன்பகுதிக்குச் செல்லுமாறு பணித்து ஒவ்வொருவராக மீண்டும் பின் அறைக்கு அனுப்பிய போது தான் அந்த மக்கள் தமக்கு ஏற்படப்போகும் விபரீதத்தைப் புரிந்து கொண்டனர்.
 
பின் அறையில் முதியவர்கள், இளசுகள், சிறுசுகள், குழந்தைகள் என்ற அனைத்து மக்களுமே கண்டகோடரி, கத்தி, கம்பிகள் பொல்லுகளால் மிலேச்சத்தனமாகத் தாக்கப்பட்டனர். பெளத்த தர்மம் இரத்தத்தின் உருவில் ஓடிக்கொண்டிருந்தது. இறந்தவர்களுடன் குற்றுயிராகக் கிடந்தவர்களும் இறந்தவர்கள் போன்று வலியிலும் மெளனமாகக் கிடந்தனர். எல்லோரையுமே அனுப்பி விட்டோம் என்ற திருப்தியில் கொலையாளிகள் தமது படகில் ஏறிச் சென்றுவிட எல்லாவற்றையுமே கவனித்துக் கொண்டிருந்த குற்றுயிராகக் கிடந்த சிலர் படகில் மேல்தளத்துக்குச் சென்று கையில் கிடைத்த துணிகளை எடுத்து உயர்த்திப் பிடித்து அசைத்தனர்.
 
படகு  நீரோட்டத்துடன் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது. புங்குடுதீவுக் கரையில் நின்ற சிலர் இதை அவதானித்து படகு ஏதோஆபத்தில் சிக்கிக்கொண்டுள்ளது என்பதைப் புரிந்து கொண்டு விரைந்து செயற்பட்டதில் குமுதினி குறிகாட்டுவானுக்கு எடுத்து வரப்பட்டது. 
 
தகவல் அறிந்த நெடுத்தீவு மக்கள் மட்டுமன்றி குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள பெருமளவு மக்கள் குறிகாட்டுவானுக்கும் பின்னர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கும் சென்று வேண்டிய உதவிகளை வழங்கினார்கள். 
 
குற்றுயிராய்க் கிடந்த மக்களைப் பாதுகாப்பதில் யாழ்.போதனா வைத்தியசாலையின் மருத்துவ அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் அனைவருமே சுறுசுறுப்புடன் செயற்பட்டு அவர்களைச் சாவின் பிடியில் இருந்து மீட்டெடுத்ததை நெடுந்தீவு மக்கள் இன்றும் நன்றியுடன் நினைவில் வைத்துள்ளனர்.
 
அப்போதெல்லாம் புலிகளின் தாக்குதலுக்குப் பதிலடியாக அப்பாவிப் பொது மக்கள் கொல்லப்படுவது வழமையாக இடம்பெற்று வந்துள்ளது. அநுராதபுரத்தில் இடம்பெற்ற ஒரு சம்பவத்தின் எதிரொலியாகவே குமுதினிப் படுகொலை இடம்பெற்றதாகவும் தகவல்கள் கசிந்திருந்தன. 
 
இந்தக் கொடூர நிகழ்வு குறித்து உயிர்தப்பியவர்கள் விசாரணையின் போது வாக்கு மூலம் அளித்துள்ளனர். இந்தப் படுகொலையைச் செய்தவர்கள் கடற்படையினர் எனவும் நயினாதீவில் கடமையில் இருந்த சிலர் இதில் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளின் போது தெளிவாக எடுத்துக் கூறப்பட்டது.
 
இது ஒரு திட்டமிடப்பட்ட கொலை என மரண விசாரணைகளின் போது தெரிவிக்கப்பட்டது. விசாரணைகள் இடம்பெற்ற போதும் நீதியான தீர்வு இன்று வரை கிட்டவில்லை. எல்லாமே மறைக்கப்பட்டுவிட்டன. சம்பந்தப்பட்டவர்களுக்கு உயர் பதவிகள் வழங்கப்பட்டதாகவும் தெரியவருகின்றது.
 
தமது உயிர்களை அர்ப்பணித்த இந்த மக்களை ஒவ்வொரு ஆண்டிலும் இன்றைய நாளில் நினைவு கூருகிறார்கள். தமது உறவுகளின் நினைவாக நெடுந்தீவு துறைமுகத்தில் நினைவுத் தூபி ஒன்றை அமைத்து இந்தத் தினத்தில் அங்கு சென்று மலர் தூவி அஞ்சலி செய்கிறார்கள்.
 
இன்று 29 வருடங்கள் உருண்டோடி விட்ட போதிலும் நடந்து முடிந்த மோசமான இந்த நிகழ்வு படுகொலைக்குள்ளானவர்களின் சொந்தங்களை மட்டுமன்றி புலம்பெயர்ந்து வாழும் அனைத்து நெடுந்தீவு மக்களனிதும் இங்குள்ளவர்களினதும் மனங்களில் நிலைத்து நிற்கின்றது. புலம்பெயர்ந்து வாழும் மக்கள் கூட இன்றைய தினம் உயிரிழந்த உறவுகளுக்காக பிரார்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 
வெளியிடங்களில் இருந்து வரும் மக்கள் தூபியுடன் கூடிய மண்டபத்தில் தங்கி அதன் புனிதத் தன்மையை மதிக்கத் தவறுவதால் மண்டபம் இடிக்கப்பட்டு தற்போது நினைவுத் தூபி மட்டுமே துறைமுகத்தில் உள்ளது. இதைப் புனித இடமாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக பிரதேசசபை கூறி வருகின்றது. இந்த நாள் வெறும் நினைவு நாளாக மட்டும் அமையாது தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும்  ஓர்மத்தைத் தரும் நாளாகவும் அமைய வேண்டும் என்பதே அனைத்து மக்களதும் உள்ளக்கிடக்கையாகும்.
 
 
நன்றி -உதயனிணையம்

 

Edited by nochchi

  • கருத்துக்கள உறவுகள்

நினைவு நாள் வணக்கங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

படுகொலைசெய்யப்பட்ட அனைத்து மக்களுக்கும் நினைவு வணக்கங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

நினைவு வணக்கம்.

 

நல்ல காலம்.. இவர்கள் ஏன் படகில் போனார்கள்.. அதனால் தான் கொல்லப்பட்டார்கள் என்று சொல்லாமல் விட்டாரே நம்ம வாலி. :(

  • கருத்துக்கள உறவுகள்

என்றும் நினைவை விட்டகலாது 

 

நினைவு வணக்கங்கள் 

ஆழ்ந்த அஞ்சலிகள் .

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த  அஞ்சலிகள்...!

  • கருத்துக்கள உறவுகள்

நினைவு நாள் வணக்கங்கள்! 

நினைவஞ்சலிகள்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.