Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாங்காய்மண்டை + வேதாளம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பனிக்காலத்தில் வீட்டு வளவுக்குள் அதிகமாக போவதில்லை,அன்று நல்ல வெய்யில் அடிச்சுது ஒரு கோப்பியை போட்டுகொண்டு வெளியால வந்து தோட்டத்து கதிரையில் குந்தினேன்.வீட்டினுள் இருந்த வெப்பநிலையை விட வெளியில் மிகவும் இதமாக இருந்தது.

எம்.ஜி. ஆர் காலத்து வாழை தண்டு போலஉடம்பு ஆளே,மடவாழை பாடல்களை முனுமுனுத்தபடி சீனியில்லா கோப்பியை ரசித்து குடிக்கதொடங்கினேன்.

'வேதாளம்,வேதாளம்' என சத்தம் கேட்டுது.அக்கம் பக்கம் திரும்பி பார்த்தேன் ஒருத்தரையும் காணவில்லை.

'மரமண்டை,மரமண்டை' கிழக்கு பக்கத்தில இருந்து வந்திச்சு திரும்பி அந்த பக்கத்தையும் பார்த்தேன் ஒன்றையும் காணவில்லை.

முதல்நாள் அடிச்ச தண்ணியின் வேளை போல கிடக்கு பெரும் குடிமக்கள் இதைதான் கங்கோவர் என்று சொல்லுறவங்களாக்கும் என நினைத்தபடி கோப்பியை குடித்தேன்.... 'வேதாளம்,மரமண்டை' என்ன மரம்மாதிரி நிக்கிறாய் என கோரோசா சத்தம் கேட்டுது. கோப்பி கப்பை கதிரையில வைச்சுப்போட்டு பக்கத்து சீனாகாரன்வீட்டு ,முன் வீட்டு, பின் வெள்ளைக்காரன் வீட்டு வளவுகளை எட்டிபார்த்தேன், ஒருத்தருமில்லை.

மனிசி மனசுக்குள் திட்டினாலும் நிச்சயம் இப்படி வெளிப்படையாக திட்டாமாட்டாள் என்ற நம்பிக்கை இருந்தாலும் அவளையும் ஒருக்கா போய் பார்ப்போம் என உள்ளே சென்றேன் அவள் சமையல் செய்துகொண்டிருந்தாள்.

மீண்டும் சீனியில்லா கோப்பியை குடிக்க தொடங்கினேன் "அடே வேதாளம் ,நீ ஊரில இருந்துதானே வந்தனீ.....உனக்கு என்ட உசரம் ,சுற்றளவு ஒன்றும்தெரியாதோ.....உனக்கு குளிர் என்றால் கம்பளி ஆடையை போடுவாய் ,வெய்யிலென்றால் அம்மனமாய் திரிவாய் அதுதான் ஸ்டைலென்று வேறு புலம்புவாய்.....ஆனால் நாங்கள் அப்படியில்லை "

"மாங்காய்மண்டை ,சீனியில்லா கோப்பி குடிக்கிற உன்னைதான்டா,கடத்தல் மன்னன்....உவங்கள் அவுஸ்ரேலியா காரங்கள் நீங்கள் களவாய் வந்து குடியேறுவியள் என்று பல சட்டங்களை இயற்றி தடுக்கிறாங்கள் ,அதேபோல எங்களை உள்ளவிடுவதற்கும் பல சட்டங்களை உருவாக்கி கட்டுப்படுத்துகின்றார்கள் ஆனால் நீ .உள்ளாடைக்குள் சுற்றி அவங்களை உச்சிப்போட்டு எங்களை கடத்தி கொண்டுவந்து படுத்துற தொல்லை தாங்க முடியல்ல.... .என்னை கடத்தி உன்ட கூட்டாளிமாருக்கு பிலிம் காட்டுறதைவிட கஞ்சாவை கடத்தியிருந்தால் நீ இன்று கோடிஸ்வரன்....

'கஞ்சாவையா.....என்ட சிவனே'

டேய்,டேய் ஏன்டா சும்மா இருக்கிற அந்த மனுசனை இதுக்குள்ள இழுக்கிறாய்.என்னை பொறுத்தவரை சட்டவிரோதமாய் எதை செய்தாலும் குற்றம்தான் "

உன்ட ஊரில என்ட பரம்பரை எப்படி வாழ்ந்தது என்று உனக்கு தெரியும்தானே.எங்கன்ட இஸ்டத்திற்கு வளர்ந்து ,பருத்து பூத்து குலுங்கி காய்த்து கனியாகி பழமாகி எல்லோர் வாயிலும் இனித்து பேசு பொருளாக இருந்த எங்களை ஏன்டா கடத்தி கொண்டுவந்து தொல்லை தருகின்றாய். ஐந்து வருடத்திற்கு முதல் பூச்சாடி ஒன்றில என்னை புதைத்துவிட்டாய் கோடை காலம் என்றபடியால் நானும் விபரம் தெரியாமல் முளைத்துவிட்டேன்.பூச்சாடியில் பூமரங்கள்தானே வைப்பார்கள் நீ ஒருத்தன் தான் பூச்சாடியில் மாமரம் வைத்த புலம்பெயர்ந்த புண்ணாக்கு.

ஆறு மாதக் கோடையில் பூச்சாடியை வெளியே எடுத்து வைத்து மீண்டும் குளிர்காலம் என்றவுடன் உள்ளே எடுத்து வைத்து முதல் இரண்டு வருடமும் தொல்லை கொடுத்தாய் இதைப்பார்த்து பக்கத்து வீட்டு மேரி காரணம் கேட்டதற்கு ,இந்த நாட்டு காலநிலைக்கு ஏற்றவகையில் இயயைபாக்கமடைவதற்காக அப்படி செய்வதாக சொல்லி அடுத்த வருடம் வீட்டு வளவு மூலையில் நட்டுவிட்டாய்.நான் வளரக்ககூடிய வளவாடா உன்ட வீட்டு வளவு.

என்னை கடத்திகொண்டு வந்து கிட்டத்தட்ட ஆறு வருடமாச்சு ஒரு மீற்றருக்கு மேல வளரவில்லை.பனி,குளிர்,வெய்யில் இதெல்லாம் தாங்கி வாழ்ந்து கொண்டுருக்கிறேன் .இந்த கொடுமைகளை தாங்கி கொள்ளலாம் ஆனால் நீ நண்பர்களுடன் என்னை பற்றி பேசும் பேச்சுக்களை கேட்டு தாங்கமுடியாமல் இரத்தக்கண்ணீர் வடிக்கிறேன்டா... கடந்த ஆண்டு இரண்டு காய்கள் என்னால் உனக்கு தர முடிந்தது ,அதில் ஒன்று அழுகிவிட்டது மற்றது கனியானது.அதை நீ படம் எடுத்து முகப்புத்ததில் போட்டவுடன் உன் நண்பர்கள் உன்னிடம் என்னை பற்றி விசாரிக்க நீ அவர்களுக்கு விட்ட புளுகை நினைத்து நான் வெந்து வெதும்பி போனேன்டா.

உன்ட ஊர் கறுத்தகொழும்பான் நான் என்றும் அதே சுவையுடன் இருக்கிறேன் என்று சொன்னீயே அதுதான்டா என்னால் தாங்கமுடியவில்லை.அடே இந்த பனிக்கும்,வெய்யிலிலும் எப்படி உனக்கு நான் உன்ட ஊர் கறுத்த கொழும்பானின் சுவையை தரமுடியும். நீயே உன்ட கலாச்சாரத்தை பண்பாட்டை,மொழியை இழந்து நிற்கிறாய்,காரணம் கேட்டால் சொல்கின்றாய் நாட்டுக்கு ஏற்ற மாதிரி வாழ வேண்டும் எண்டு....ஆனால் நாங்கள் மட்டும் அதே சுவையுடன் இருக்க வேண்டும் என நினைக்கின்றாய் ,தப்பட தம்பி தப்பு.......

டேய் வேதாளம் ,சின்ன வயசில வேதாளம் முருங்கை மரத்திலெறிவிட்டது என அம்புலிமாமா கதைகள் உனக்கு சொல்லிதந்தவர்கள்தானே. உன்ட ஊர் வரன்ட பிரதேசம் அங்கு முருங்கையாகிய நான் நல்லாய்வளர்வேன் என்பது உனக்கு தெரிந்த உண்மை பிறகு ஏன் என்னை இந்த ஈரப்பதாமான நாட்டில் பரப்ப முயற்சிக்கிறாய்....

டேய் கறி! ஊரில நீ என்னை திரும்பியும் பார்க்கிறதில்லை,சாப்பாட்டுக்கோப்பையில் ஒரு கரையில தூக்கி வைத்துவிட்டு குப்பையில் எறிந்துவிடுவாய் ஆனால் இங்கு என்னை ஒரு மூலிகை மாதிரிபாவிக்கின்றாய்.நீரழிவுக்கு வியாதிக்கு கறுவேற்பிள்ளை நல்லம் என்று விளம்பரப்படுத்துகின்றாய்,ஆராச்சி செய்தா இந்த முடிவுக்கு வந்தாய் ?யாரொ சொன்னதை கேட்டு நீ ஒரு மருத்துவன் மாதிரி கதை விடுகின்றாய்.யாராவது பெண்கள் வந்தால் கொத்துக்கொத்தாக என்னை உடைத்து அவர்களிடம் கொடுப்பதுமட்டுமல்லாமல் எனது கன்றுகளையும் பிரித்துதெடுத்து அந்த பெண்களிடம் கொடுத்து நீ இன்பம் காண்கின்றாய். நீ சைட் அடிக்க நான் தான் கிடைத்தேனா?

.ஊரில வீடு சின்னது வளவு பெரியது.ஆனால் இங்கு வளவு பூராவும் வீட்டை கட்டி வைச்சுப்போட்டு ஒரு சின்ன காணித்துண்டில,மா,பிலா முருங்கை,பப்பாசி ,கறி வேற்பிள்ளை எல்லாம் வைக்கவேண்டும் என நீ ஆசைப்படுகிறாய் ,ஆனால் எங்களுக்கு ஏற்ற கால நிலையா என்று சிந்தித்து பார்த்தாயா?உன்னால் உன்னுடைய கலை,கலாச்சரம்,பண்பாடு ,வழிபாட்டு முறைகள் எல்லாம் மாற்ற முடியும் ஆனால் எங்களால் மாறவும் முடியாது மாறவும் மாட்டோம் .உங்கள் பரம்பரை பணத்திற்காகவும்,புகழுக்காகவும் உலகில் எதையும் செய்யும் ஆனால் நாங்கள் அப்படியில்லை.....எங்களை சுதந்திரமாக வாழவிடுங்கோடா....உங்கன்ட இஸ்டத்திற்கு எங்களை மாத்தாதைங்கோட.......பிளிஸ் please leave us alone...சா...எவ்வளவு அழகாக தமிழில்பேசின என்னை இங்கிலிசில பேச வைச்சீட்டிங்களடா.....

கறுப்பு வெள்ளை காகம் ஒன்று எனது தலையில் ஒரு கொத்து கொத்திவிட்டு பக்கத்திலிருந்த கோப்பியை தட்டிவிட்டு பறந்து போனது.திடுக்கிட்டு முழித்தேன் ஒரு 10 நிமிடம் பகல்கனவு கண்டிருக்கிறேன் என்று புரிந்து கொண்டேன்...

  • கருத்துக்கள உறவுகள்

மனிசியும் மா மரமும் சேர்ந்து வையுதுபோல...! :lol::)

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு கதை, சுயத்தை இழந்து இங்கு வாழும்நிலையை நான்றாக எழுதியுள்ளீர்கள்.

என்ன செய்ய எங்களால்தான் அங்கு வாழமுடியவில்லை, ஆனால் சிங்களவனும் அல்லவா எங்களைவிட அதிகமாக இடம்பெயருகின்றான்

  • கருத்துக்கள உறவுகள்

மா, பிலா, முருங்கை, பப்பாசி, கருவேப்பிலை....... கூட,
தமிழனின் இடப் பெயர்வுடன், நொந்து போய் விட்டது.
சிந்திக்கக் கூடிய, நகைச்சுவைக் கதை புத்தன். :)

  • கருத்துக்கள உறவுகள்

டேய் வேதாளம் ,சின்ன வயசில வேதாளம் முருங்கை மரத்திலெறிவிட்டது என அம்புலிமாமா கதைகள் உனக்கு சொல்லிதந்தவர்கள்தானே. உன்ட ஊர் வரன்ட பிரதேசம் அங்கு முருங்கையாகிய நான் நல்லாய்வளர்வேன் என்பது உனக்கு தெரிந்த உண்மை பிறகு ஏன் என்னை இந்த ஈரப்பதாமான நாட்டில் பரப்ப முயற்சிக்கிறாய்....

டேய் கறி! ஊரில நீ என்னை திரும்பியும் பார்க்கிறதில்லை,சாப்பாட்டுக்கோப்பையில் ஒரு கரையில தூக்கி வைத்துவிட்டு குப்பையில் எறிந்துவிடுவாய் ஆனால் இங்கு என்னை ஒரு மூலிகை மாதிரிபாவிக்கின்றாய்.நீரழிவுக்கு வியாதிக்கு கறுவேற்பிள்ளை நல்லம் என்று விளம்பரப்படுத்துகின்றாய்,ஆராச்சி செய்தா இந்த முடிவுக்கு வந்தாய் ?யாரொ சொன்னதை கேட்டு நீ ஒரு மருத்துவன் மாதிரி கதை விடுகின்றாய்.யாராவது பெண்கள் வந்தால் கொத்துக்கொத்தாக என்னை உடைத்து அவர்களிடம் கொடுப்பதுமட்டுமல்லாமல் எனது கன்றுகளையும் பிரித்துதெடுத்து அந்த பெண்களிடம் கொடுத்து நீ இன்பம் காண்கின்றாய். நீ சைட் அடிக்க நான் தான் கிடைத்தேனா?

புத்தன்... இந்த முறை எங்கேயோ போயிட்டீங்கள்! :lol:

டேய் கறி... எண்டு நீங்கள் அழைக்கிறது.. எனக்கு டேய் மச்சான்... எண்டு அழைக்கிற மாதிரி இருக்கு!

அவ்வளவு அன்னியோன்னியம்..! :rolleyes:

பிந்திய செய்தி.... ஹோம் புஸ் பக்கத்தில இருக்கிற பொம்பிளையள்... டிரெஸ்ஸிங் கவுனோடையும்.. பாட்டா செருப்போடையும் படையெடுத்து வாறதாக் கேள்வி...!

கையிலயும் என்னவோ 'சத்தகம்' மாதிரி ஒரு வளைஞ்ச ஆயுதமும் இருக்குப் போல கிடக்குது..! :blink:

நாங்கள் 'பொட்டில' வளத்தாலென்ன , போத்திலில வளத்தாலென்ன இவருக்கு என்ன பிரச்சனை வந்தது.. எண்டு கதைச்சுக்கொண்டு வாறது போல கிடக்குது..!

அந்தச் சிட்னி முருகனை வேண்டிக்கொண்டு... வழக்கத்தை விட நாலு தோப்புக்கரணத்தையும் அதிகமாய்ப் போட்டு வையுங்கோ..!

பி.கு.  கதை சுப்பர்..! :D  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனிசியும் மா மரமும் சேர்ந்து வையுதுபோல...! :lol::)

மனிசி மனசுக்குள் வையுதோ தெரியவில்லை :D நன்றிகள் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு கதை, சுயத்தை இழந்து இங்கு வாழும்நிலையை நான்றாக எழுதியுள்ளீர்கள்.

என்ன செய்ய எங்களால்தான் அங்கு வாழமுடியவில்லை, ஆனால் சிங்களவனும் அல்லவா எங்களைவிட அதிகமாக இடம்பெயருகின்றான்

நன்றிகள் உடையார் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்.......சிங்களவர்கள் எங்களை பின் தொடர்ந்து கொண்டேயிருக்கிறார்கள் போல...:D

  • கருத்துக்கள உறவுகள்

மிக அருமை உங்கள் கலைப்பு. முதலில் விளங்கவே இல்லை எதைக் கூறுகிறீர்கள் என்று. நட்டது என்றபோது கூட ஏதும் சாராயம் தாட்டு வச்சியலோ என்றுதான் நினைத்தேன். தொடருங்கள் புத்தன் :D

  • கருத்துக்கள உறவுகள்

வெளியிலையும் வீட்டுக்குள்ளயும் மாத்தி மாத்தி வைத்தும்
ஊரிலை இருந்து வந்த கரணைக்கிழங்கு மரம் பட்டுப்போச்சுது.
அது என்னை எத்தனை திட்டுத் திட்டியிருக்கும்

நல்ல கனவுக் கிறுக்கல் புத்தன் :D

  • கருத்துக்கள உறவுகள்

மாங்காய் மரமண்டை வேதாளத்திற்கு இலண்டன்காரரின் வேதனை புரியாது. இப்போது மாம்பழமும், பாவற்காயும், கறிவேப்பிலையும் அந்நியப் பூச்சிகள் இங்கு படையெடுத்துப் பெருகலாம் என்று தடைபண்ணிப்போட்டார்கள். ஆனால் அகதியாகவும், தொழில்தேடியும், படிக்கவென்றும் வந்து செற்றில் ஆன தமிழர்களைப் பல்கிப் பெருகவிட்டுள்ளார்கள். இவர்கள் கறிவேப்பிலை இல்லாமல் எப்படிக் கறி சமைப்பார்கள்?

புத்தன் மாமரத்தாலேயும் முருக்க மரத்தாலேயும் எங்களுக்கு சாட்டையடி தந்திருக்கிறார்.  :D

  • கருத்துக்கள உறவுகள்

யே உன்ட கலாச்சாரத்தை பண்பாட்டை,மொழியை இழந்து நிற்கிறாய்,காரணம் கேட்டால் சொல்கின்றாய் நாட்டுக்கு ஏற்ற மாதிரி வாழ வேண்டும் எண்டு..இப்போ நிறையப் பேர் இப்படித் தான் கதை விட்டுக் கொண்டு இருக்கீனம்.புத்தண்ணா மரஞ்,செடி,கொடியிடமும் திட்டு வாங்க வேண்டி வந்துட்டு,மற்றவர்களுக்கும் ஒரு பாடம்

Edited by யாயினி

புத்தனுக்கும் வயசு போகுது, அதான் பகலிலும் நித்தா கொள்கின்றார். :)

கனடாவில் வேப்பம் மரத்தினையே நட்டு பார்க்கும் அளவுக்கு வளர்ந்துட்டம்... இனி ஒரு கொள்ளிவால் பிசாசையும் கொண்டு வந்து அதில் ஏற்றிவிடத்தான் இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
புத்தரின் கனவுக் கதையைப் படித்தபின்பு, என் வீட்டில், தோட்டத்தில் வளரும் எங்கள் மண்ணின் மைந்தர்களான  மரம், செடி, கொடிகள் அனுபவிக்கும் வேதனைகளை உணர்ந்து என் மனம் புண்ணாகி விட்டது. அவற்றின் புலம்பல்கள் கேட்டு என் கண்கள் இரத்தக்கண்ணீர் வடிக்கிறது. வரும் புரட்டாதிச் சனி விரதத்திற்கு இந்நாட்டில் வளரும் உருளைக்கிழங்கு, கோவா, கரட் போன்றவையே மரக்கறிப் படையல்.  :(
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மா, பிலா, முருங்கை, பப்பாசி, கருவேப்பிலை....... கூட,

தமிழனின் இடப் பெயர்வுடன், நொந்து போய் விட்டது.

சிந்திக்கக் கூடிய, நகைச்சுவைக் கதை புத்தன். :)

நன்றிகள் தமிழ்சிறி வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிந்திய செய்தி.... ஹோம் புஸ் பக்கத்தில இருக்கிற பொம்பிளையள்... டிரெஸ்ஸிங் கவுனோடையும்.. பாட்டா செருப்போடையும் படையெடுத்து வாறதாக் கேள்வி...!

கையிலயும் என்னவோ 'சத்தகம்' மாதிரி ஒரு வளைஞ்ச ஆயுதமும் இருக்குப் போல கிடக்குது..! :blink:

நாங்கள் 'பொட்டில' வளத்தாலென்ன , போத்திலில வளத்தாலென்ன இவருக்கு என்ன பிரச்சனை வந்தது.. எண்டு கதைச்சுக்கொண்டு வாறது போல கிடக்குது..!

அந்தச் சிட்னி முருகனை வேண்டிக்கொண்டு... வழக்கத்தை விட நாலு தோப்புக்கரணத்தையும் அதிகமாய்ப் போட்டு வையுங்கோ..!

பி.கு.  கதை சுப்பர்..! :D  

நன்றிகள் புங்கையூரான்.....அதுதான் நான் இப்ப கில் ஏரியாவுக்கு வந்திட்டன் .....அந்த பெண்கள் கொஞ்சம் டிசன்ட்..... அத்துடன் சில சமயம் சிட்னிமுருகனுக்கு கறுவேற்பிள்ளை சப்பிளை நான் தான்....:D

மிக அருமை உங்கள் கலைப்பு. முதலில் விளங்கவே இல்லை எதைக் கூறுகிறீர்கள் என்று. நட்டது என்றபோது கூட ஏதும் சாராயம் தாட்டு வச்சியலோ என்றுதான் நினைத்தேன். தொடருங்கள் புத்தன் :D

நன்றிகள் சுமே ...சாராயமா அப்படி என்றால் என்ன? :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெளியிலையும் வீட்டுக்குள்ளயும் மாத்தி மாத்தி வைத்தும்

ஊரிலை இருந்து வந்த கரணைக்கிழங்கு மரம் பட்டுப்போச்சுது.

அது என்னை எத்தனை திட்டுத் திட்டியிருக்கும்

நல்ல கனவுக் கிறுக்கல் புத்தன் :D

நன்றிகள் வாத்தியார் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்......ஐயோ கருணைகிழங்கு பாவம்....

மாங்காய் மரமண்டை வேதாளத்திற்கு இலண்டன்காரரின் வேதனை புரியாது. இப்போது மாம்பழமும், பாவற்காயும், கறிவேப்பிலையும் அந்நியப் பூச்சிகள் இங்கு படையெடுத்துப் பெருகலாம் என்று தடைபண்ணிப்போட்டார்கள். ஆனால் அகதியாகவும், தொழில்தேடியும், படிக்கவென்றும் வந்து செற்றில் ஆன தமிழர்களைப் பல்கிப் பெருகவிட்டுள்ளார்கள். இவர்கள் கறிவேப்பிலை இல்லாமல் எப்படிக் கறி சமைப்பார்கள்?

நன்றிகள் கிருபன் என்னதான் தடை போட்டாலும் நாங்கள் கடத்திடுவோமல்ல:D

புத்தன் மாமரத்தாலேயும் முருக்க மரத்தாலேயும் எங்களுக்கு சாட்டையடி தந்திருக்கிறார்.  :D

நன்றிகள் இணையவன் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்

யே உன்ட கலாச்சாரத்தை பண்பாட்டை,மொழியை இழந்து நிற்கிறாய்,காரணம் கேட்டால் சொல்கின்றாய் நாட்டுக்கு ஏற்ற மாதிரி வாழ வேண்டும் எண்டு..இப்போ நிறையப் பேர் இப்படித் தான் கதை விட்டுக் கொண்டு இருக்கீனம்.புத்தண்ணா மரஞ்,செடி,கொடியிடமும் திட்டு வாங்க வேண்டி வந்துட்டு,மற்றவர்களுக்கும் ஒரு பாடம்

நன்றிகள் யாயினி வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்........

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில வீடு சின்னது வளவு பெரியது.ஆனால் இங்கு வளவு பூராவும் வீட்டை கட்டி வைச்சுப்போட்டு ஒரு சின்ன காணித்துண்டில,மா,பிலா முருங்கை,பப்பாசி ,கறி வேற்பிள்ளை எல்லாம் வைக்கவேண்டும் என நீ ஆசைப்படுகிறாய் ,ஆனால் எங்களுக்கு ஏற்ற கால நிலையா என்று சிந்தித்து பார்த்தாயா?உன்னால் உன்னுடைய கலை,கலாச்சரம்,பண்பாடு ,வழிபாட்டு முறைகள் எல்லாம் மாற்ற முடியும் ஆனால் எங்களால் மாறவும் முடியாது மாறவும் மாட்டோம் .உங்கள் பரம்பரை பணத்திற்காகவும்,புகழுக்காகவும் உலகில் எதையும் செய்யும் ஆனால் நாங்கள் அப்படியில்லை.....எங்களை சுதந்திரமாக வாழவிடுங்கோடா....உங்கன்ட இஸ்டத்திற்கு எங்களை மாத்தாதைங்கோட.......பிளிஸ் please leave us alone...சா...எவ்வளவு அழகாக தமிழில்பேசின என்னை இங்கிலிசில பேச வைச்சீட்டிங்களடா.....
கறுப்பு வெள்ளை காகம் ஒன்று எனது தலையில் ஒரு கொத்து கொத்திவிட்டு பக்கத்திலிருந்த கோப்பியை தட்டிவிட்டு பறந்து போனது.திடுக்கிட்டு முழித்தேன் ஒரு 10 நிமிடம் பகல்கனவு கண்டிருக்கிறேன் என்று புரிந்து கொண்டேன்... 

கனவு  கண்டது போல் நடிப்பது தெரிகிறது

காரம் அதிகம்

பலர் தலை உருளுது...

சரி

சரி

வாயில்லாதபடியால் தப்பி  இருக்கிறம்....

தொடருங்கள் குட்டல்களை  புத்தர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புத்தனுக்கும் வயசு போகுது, அதான் பகலிலும் நித்தா கொள்கின்றார். :)

கனடாவில் வேப்பம் மரத்தினையே நட்டு பார்க்கும் அளவுக்கு வளர்ந்துட்டம்... இனி ஒரு கொள்ளிவால் பிசாசையும் கொண்டு வந்து அதில் ஏற்றிவிடத்தான் இருக்கு.

நன்றிகள் நிழலி வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்.....அப்படி பெரிய வயசு என்று சொல்லஏலாது..இப்பதான் 35.....:D

புத்தரின் கனவுக் கதையைப் படித்தபின்பு, என் வீட்டில், தோட்டத்தில் வளரும் எங்கள் மண்ணின் மைந்தர்களான  மரம், செடி, கொடிகள் அனுபவிக்கும் வேதனைகளை உணர்ந்து என் மனம் புண்ணாகி விட்டது. அவற்றின் புலம்பல்கள் கேட்டு என் கண்கள் இரத்தக்கண்ணீர் வடிக்கிறது. வரும் புரட்டாதிச் சனி விரதத்திற்கு இந்நாட்டில் வளரும் உருளைக்கிழங்கு, கோவா, கரட் போன்றவையே மரக்கறிப் படையல்.  :(

நன்றிகள் பாஞ்....மறக்காமல் அந்த கறிக்கு கறுவேப்பிலை போட்டுவிடுங்கோ அப்பதான் பத்தியமா இருக்கும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஊரில வீடு சின்னது வளவு பெரியது.ஆனால் இங்கு வளவு பூராவும் வீட்டை கட்டி வைச்சுப்போட்டு ஒரு சின்ன காணித்துண்டில,மா,பிலா முருங்கை,பப்பாசி ,கறி வேற்பிள்ளை எல்லாம் வைக்கவேண்டும் என நீ ஆசைப்படுகிறாய் ,ஆனால் எங்களுக்கு ஏற்ற கால நிலையா என்று சிந்தித்து பார்த்தாயா?உன்னால் உன்னுடைய கலை,கலாச்சரம்,பண்பாடு ,வழிபாட்டு முறைகள் எல்லாம் மாற்ற முடியும் ஆனால் எங்களால் மாறவும் முடியாது மாறவும் மாட்டோம் .உங்கள் பரம்பரை பணத்திற்காகவும்,புகழுக்காகவும் உலகில் எதையும் செய்யும் ஆனால் நாங்கள் அப்படியில்லை.....எங்களை சுதந்திரமாக வாழவிடுங்கோடா....உங்கன்ட இஸ்டத்திற்கு எங்களை மாத்தாதைங்கோட.......பிளிஸ் please leave us alone...சா...எவ்வளவு அழகாக தமிழில்பேசின என்னை இங்கிலிசில பேச வைச்சீட்டிங்களடா.....

கறுப்பு வெள்ளை காகம் ஒன்று எனது தலையில் ஒரு கொத்து கொத்திவிட்டு பக்கத்திலிருந்த கோப்பியை தட்டிவிட்டு பறந்து போனது.திடுக்கிட்டு முழித்தேன் ஒரு 10 நிமிடம் பகல்கனவு கண்டிருக்கிறேன் என்று புரிந்து கொண்டேன்... 

கனவு  கண்டது போல் நடிப்பது தெரிகிறது

காரம் அதிகம்

பலர் தலை உருளுது...

சரி

சரி

வாயில்லாதபடியால் தப்பி  இருக்கிறம்....

தொடருங்கள் குட்டல்களை  புத்தர்

நன்றிகள் விசுகு வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்........என்னடா என்னுடைய ஒரு வாசகரை காணவில்லை என்று பார்த்து கொண்டிருந்தேன் .....மீண்டும் நன்றிகள் விசுகர்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நகைச்சுவையுடன் கூடிய நெத்தியடிகதை எழுத புத்தனால் மட்டுமே முடியும்.

தொடருங்கள் வாசிக்க காத்திருக்கின்றோம். :)

  • கருத்துக்கள உறவுகள்

கிட்ட தட்ட எல்லாத்தையும் காவிக்கொன்டு வரப்பாக்கினம்.அது சரி எங்கையாவது பனை மரம் கொன்டு வந்த சிலமன் :rolleyes::D .சூப்பர் புத்து.

  • கருத்துக்கள உறவுகள்

கிட்ட தட்ட எல்லாத்தையும் காவிக்கொன்டு வரப்பாக்கினம்.அது சரி எங்கையாவது பனை மரம் கொன்டு வந்த சிலமன் :rolleyes::D .சூப்பர் புத்து.

ஆமாம் சுவைப்பிரியன் இங்கே வடலிகளும் இருந்தால் எத்தனை சூப்பராக இருக்கும். நினைக்கவே ஆகா!...... வடலிகளுக்குப் பின்னால்.......!! :wub:  :lol:  

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் விசுகு வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்........என்னடா என்னுடைய ஒரு வாசகரை காணவில்லை என்று பார்த்து கொண்டிருந்தேன் .....மீண்டும் நன்றிகள் விசுகர்

உங்கள்  அன்புக்கும் வெளிப்படையான எழுத்துக்களுக்கும் நன்றி...

யாழில் நான் செலவளிக்கும்  நேரத்தை கணிப்பிடுவதுண்டு

அந்தவகையில் நேரம் குறிப்பிடத்தக்களவு செலவளிகிறது..

ஆனால்

நான் அடிக்கடி சொல்வதுண்டு

நான் யாழுக்கு வருவதற்கும்  ஒரு நோக்கம் இருக்கிறது என்று..

அந்த நோக்கத்தை

எதை எழுதினாலும் பிரதிபலிப்பவர்கள் சிலரில்  நீங்களும் ஒருவர்..

உங்களது எழுத்துக்களை  வாசிக்காது

உற்சாகம் கொடுக்காது போனால்..

வலது கரத்தை இழந்தவனாவேன் ஐயா...

  • கருத்துக்கள உறவுகள்
மாங்காய் மண்டைக்கு பச்சைபோட பச்சை முடிஞ்சு போய்ச்சுது. நாளைக்கு வாறன் புத்தா. எப்பவும் போல இன்னுமொரு வித்தியாசமாக கதை. வீட்டுக்குள் வாழைமரம் நட்ட விரதம் பிடிக்கும் நிலமையும் வந்திட்டுது. அடுத்து சுரேசின் கற்பனையில் வாழை வரட்டும்:
 
கறிவேப்பிலையின் சுயசரிதம் பாவம் அவுஸ்காரருக்கு ஏனிந்த கொலைவெறி புத்தா ? :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.