Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இப்பத்தான் கப்பலில் வந்து இறங்கினீர்களா?

Featured Replies

பெருமாள்..நான் சொல்லுவது ஒன்று தான் இஇல்லாத ஒன்றை இருப்பதாக நினைத்து பெரிதாக கவலைப்பட தேவையில்லை...மற்ற நாடுகளை ஒப்பிடும்போது கனடாவில் 99% வீதமானவர்கள் உங்களை கீழாக நடத்தமாட்டார்கள்/நடத்தமுடியாது...... 1% வீதமானவார்களுக்காக உங்களை வருதாத்தாதீர்கள்...அவர்களுக்காக திரும்பி போக போகுறீர்களா?

 

மற்றது

கனடாவில் பிறந்து வளர்ந்திருந்தாலும் ஒவ்வொருவரையும்

"indian origin"

"european origin"

"Caribean"

என்றே சரளமாக அடையாளப்படுத்துகிறார்கள்....செய்திப்பத்திரிகைகளில் கூட....

இப்போ தான் வந்தியா என்று கேட்டதில் என்ன பிழை கண்டீர்கள்...

நானும் நிறைய வெள்ளைகளை அவர்களின் பூர்வீகநாடுகளை விசாரிப்பதுண்டு (என்னை விசாரித்தால்-நானும் விசாரிப்பேன்-அதிக நேரம் பிழையாக- :) பிழையாக எடுத்தால் அவரின் பிரச்சனை)

i-love-heart-canada-tshirt.jpg

Edited by naanthaan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான்தான்..

நான் பிழையாக எடுத்ததாக எங்கும் எழுதியுள்ளேனா?? :D நீயெல்லாம் சரியில்லாததால்தான் நான் இங்கே வந்து குப்பைகொட்டிக் கொண்டிருக்கிறேன் என்றே நினைப்பு வந்தது. ஆனால் ஒரு தொழில்சார் வல்லுனர் அவையில் இப்படி அவர் கேட்டது (மனநிலை குன்றியவர் போல் இருந்தாலும்) சங்கடமாகவே இருந்தது. மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க முடியாமலும் போனது. காரணம் அவர் வெள்ளையர்களையும் சேர்த்தமாதிரி கேட்டுவிட்டார்.. ஆனால் இதை நான் பெரிதாக எடுக்கவில்லை. இதனைத் தொடர்ந்து நாட்டுப்பிரச்சினையைப் பற்றிப் பேச ஒரு சந்தர்ப்பமாக எடுத்துக் கொண்டேன்.. :D

நான் சொல்லவந்த கருத்து இதுதான்.. நீங்கள் சொன்ன 1% வெளியில் சொல்லி பிரச்சினைப்படலாம்.. அதைத்தாண்டி பல வீதம் மனதுக்குள் நினைத்துவிட்டுப் போய்விடும்..

மேலும் முன்னரே சொன்னதுபோல GTA க்குள் வாழும்வரையில், அல்லது அர்ஜூன் அண்ணா சொன்ன காட்டேஜ்களில் தங்கும்வரையில், அல்லது பிற மாநில நகரப்பகுதிகளில் தங்கும்வரையில் இந்தப்பிரச்சினை இல்லை. வெளியே போனால் ஒவ்வொரு சமயமும் நடக்கும் என்பதும் அல்ல.. ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் நடக்கலாம்.

மற்றது FOB என்ற குறிப்பிடுவதை பெரிய பிரச்சினையாக எடுக்க வேண்டியதில்லை என்பதுபோல் எழுதியுள்ளீர்கள். இதற்கு ஒரு வரலாற்றுப் பின்னணி உள்ளது. அது இனவெறிக் கருத்து என்பதால்தான் அந்த சியர்ஸ் ஊழியர்கூட பணிநீக்கம் செய்யப்பட்டார்..

அண்மையில் சிபிசியில் ஆபிரிக்க கனேடியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றிய கலந்துரையாடல் ஒனறைக் கேட்டேன். அக்குழந்தைகளின் பெற்றோர் என்ன சொல்லி அவர்களை வளர்க்கிறார்கள் என்று அந்தப் பெற்றோர்களே வந்து சொன்னார்கள்.

1) ஏதாவது அடிதடி நடந்தால் அதைப் பார்க்காமலே நகர்ந்துவிடு.

2) உன்னிடம் யாராவது தகராறு செய்தால் அந்த இடத்தைவிட்டு வேகமாக நகர்ந்து சென்றுவிடு.

3) காவல்துறை வந்தால் நிலத்தில் படுத்துவிடு. (கேட்டுகேள்வி இல்லாமல் சுடப்படலாம்.)

இது 2014 ஆம் ஆண்டில் கறுப்பு இனத்தவர்களின் நிலை/சிந்தனை. :D அதற்காக அவர்கள் இங்கு கௌரவமாக தொழில்புரிந்து மாலையில் பியரடித்து மகிழ்ச்சியாக இல்லை என்கிற பொருள் இல்லை. :huh: ஆனால் யதார்த்தம் என்று ஒன்று உள்ளது. ஆபிரிக்க கனேடியர்கள் எவ்வளவு தசாப்தங்களாக கனடாவில் வாழ்ந்து வருகிறார்கள் என்பதை இங்கு குறிப்பிட வேண்டியதில்லை. ஆனால் ஆபிரிக்காவில் அவர்கள் தமது நிறத்திற்காகவே பிற ஆபிரிக்க காவல்துறையால் சிரமத்திற்கு உள்ளாக மாட்டார்கள் என்பதே பொருள்.

இந்தச் சிரமங்களையும் தாங்கிக்கொண்டு அவர்கள் "நியாயமான ஒரு சுதந்திரத்தோடு" இங்கு வாழ்ந்து வருகிறார்கள். அது அவர்களது தெரிவு. அதில் பிழையும் இல்லை. ஆனால் அவர்களுக்குப் பிரச்சினைகள் இல்லை என்று வாதிட முடியாது. :huh::D

Edited by இசைக்கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

இசை உங்கள் சொந்த ஊரில் நீங்கள் எந்த நேரத்திலும் எந்த இடத்திற்கும் சென்று வரலாம்.

ஆனால் புதிதாக ஒரு ஊருக்குள்ளே நேரங்கெட்ட நேரத்தில் மக்கள் குடியிருக்கும் 

பகுதிக்குள்ளே சென்று வரமுடியுமா?
அப்போதும் அங்கேயும் இந்த மாதிரியான கேள்விகள் எழத்தான் செய்யும்.
பழக்கப்படும்வரை  எங்கேயும் யாருமே அந்நியர்கள்தான்.

காரண காரியங்கள் மற்றவர்களுக்குத் தெரிந்தால் பிரச்சனைகள் வருவது இல்லை.

சில ஊர்களில் தர்ம அடி விழுவதும் உண்டு. கேள்வியுடன்  அந்த வயோதிபர் விட்டார் எனச் சந்தோசப்படுங்கள் :D:lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார்.. அப்பிடி அடி விழுந்திருந்தால் நான் பதிவு போடுவனா.. :D புக்கையை கட்டிப்போட்டு வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம் என்றிட்டு போயிருக்கமாட்டமா?!! :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அண்ணா.. :D

மனநலம் நன்றாக உள்ளவர்கள் சட்டத்திற்கு / நாகரிகத்திற்குப் பணிந்து வார்த்தையை விடமாட்டார்கள்..! :blink:

 

இது சிறிலங்காவிலும் உண்டு ..அதாவது வவுனியாக்கு அப்பால் தமிழில் கதைப்பதை குறைப்பது,திறுநீறு ,கும்குமம் போன்றவற்றை தவிர்ப்பது.......மற்றும் ஊரில் "அந்த ஏரியாவில் மற்ற ஆட்கள்" இருக்கினம் என்று சொல்வது ..........ஆகவே இவ்ற்றை தவிர்ப்பத்கு சிறந்த வழி சட்டத்திற்கு பணிய வைப்பதுதான்.....மற்றும்படி எந்த மனிதனும் சுத்தமில்லை இந்த விடயத்தில்

  • கருத்துக்கள உறவுகள்

இசை நான் அனுபவ படிப்பென்பது  இருவரில் தனிதனியாய் Goderich ல் அலையவிட பட்டுத்தெளியட்டும் நீங்கள் வேலைக்கு போகும் பொழுதோ அல்லது விடுமுறையை கழிக்க செல்லும்பொழுதோ உங்கள் இயல்பாண வாழ்க்கையில் அந்த மிருகம் தென்படாது அளவுக்கு மீடியாக்கள் பூசி மெழுகிவிடும் வழமையாண பாதையை விட்டு விலகும் பொழுது  அதன் கோரமுகம் தெரியும்.சொல்லி விளங்காது ஆதாரம் ceo க்கள் ஏன் எல்லோருமே சொல்லி வைச்ச மாதிரி ஒரு சில விதி விலக்குகளை தவிர அங்கு நான்தான் நீங்கள் சொல்வது மாதிரி 99வீத ceo க்கள் யாரென்பது தங்களுக்கு தெரியும்  :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது சிறிலங்காவிலும் உண்டு ..அதாவது வவுனியாக்கு அப்பால் தமிழில் கதைப்பதை குறைப்பது,திறுநீறு ,கும்குமம் போன்றவற்றை தவிர்ப்பது.......மற்றும் ஊரில் "அந்த ஏரியாவில் மற்ற ஆட்கள்" இருக்கினம் என்று சொல்வது ..........ஆகவே இவ்ற்றை தவிர்ப்பத்கு சிறந்த வழி சட்டத்திற்கு பணிய வைப்பதுதான்.....மற்றும்படி எந்த மனிதனும் சுத்தமில்லை இந்த விடயத்தில்

உண்மை புத்தன் அண்ணன்.. இலங்கையில் படு மோசம்.. 1983 க்கு முன்னரே தேவையில்லாமல் தெருவில் கதைக்க மாட்டோம்.. அந்த வகையில் கனடா பல நூறு மடங்கு மேல்.. :D

மற்றைய நாடுகளுடன் ஒப்பிடும் பொழுது கனடாவில் நிறவெறி குறைவு ஆனால் prairies போன்ற முழு வெள்ளை பிரதேசங்களுக்கு போனால் இவ்வாறான அனுபவங்கள் நிச்சயம் கிடைக்கும். ஒரு முறை ஒரு வெள்ளை கிழவி நீ எத்தியோப்பியாவிலிருந்து வந்தியா என்டு நன்பர்கள் முன்னால் கேட்டு எனது மானத்தை வாங்கிய சம்பவமும் எனது வாழ்வில் நடந்தது.  :wub:
 
but east or west..Canada is the best
 
37665_340.jpg

இங்கிலாந்தில் இப்படி பல அனுபவங்கள் நேரிடையாக அனுபவித்திருக்கின்றேன் ,ஒருமுறை என்னுடன் படிக்கும் வெள்ளையுடன் நடந்துவரும் போது சயிக்கிளில் சென்ற வெள்ளை சிறுவன் "பாக்கி " என்று கத்திவிட்டு செல்ல கோபப்பட்ட நண்பர் அவரை துரத்தி செல்ல அதை பார்த்து சிரிப்பதை தவிர வழியில்லை .

 

இம்ரான்கான் தான் முதன் முதல் லண்டனில் கிரிக்கெட் விளையாடும் போது அவுட்பீல்டில் நிற்க போது பாக்கி பாக்கி என்று கத்துவார்களாம் மனமுடைந்து மாமன் மஜீத்கானிடம் முறையிட மஜித் சொன்னாராம்

 

"உனது கோபத்தை போலிங்க்கில்காட்டு என்று "

 

இம்ரான்கான் சில வருடங்களின் பின் இங்கிலாந்து டைம்ஸ் பத்திரிகை வைத்த மிக அழகான ஆண் என்ற போட்டியில் முதலாவதாக வந்ததும் பின்னர் இங்கிலாந்து பிரபு ஒருவரின் மகளை மணந்ததும் உலகு அறிந்தது .

நாங்களும் இம்ரானின் வாரிசுகள் தான் . :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

இது சிறிலங்காவிலும் உண்டு ..அதாவது வவுனியாக்கு அப்பால் தமிழில் கதைப்பதை குறைப்பது,திறுநீறு ,கும்குமம் போன்றவற்றை தவிர்ப்பது.......மற்றும் ஊரில் "அந்த ஏரியாவில் மற்ற ஆட்கள்" இருக்கினம் என்று சொல்வது ..........ஆகவே இவ்ற்றை தவிர்ப்பத்கு சிறந்த வழி சட்டத்திற்கு பணிய வைப்பதுதான்.....மற்றும்படி எந்த மனிதனும் சுத்தமில்லை இந்த விடயத்தில்

 

 

சிங்கள நண்பர் சொன்னது, தாங்கள் தலையில் (சளிக்க) வைத்திருக்கும் நல்லெண்ணையை வைத்து தான் கண்டு பிடிப்பார்களாம். :lol:  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

Shirt-T-Shirt-fussball-WM-herz-deutschla

 

உலகில், துவேசம் இல்லாத நாடு என்றால்..... ஜேர்மனிதான். :D

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

உலகில், துவேசம் இல்லாத நாடு என்றால்..... ஜேர்மனிதான். :D

 

அதான் பார்த்தோமே & பார்த்துகொண்டிருக்கிறோமே..!!!!!! :(:o:)

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Shirt-T-Shirt-fussball-WM-herz-deutschla

 

உலகில், துவேசம் இல்லாத நாடு என்றால்..... ஜேர்மனிதான். :D

 

நூற்றுக்கு நூறு வீதம் உண்மை சிறித்தம்பி  :D

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களம்/தமிழ்/ஆங்கிலம் என துவேசம் எல்லா இனத்திலும்/பிரிவிலும் உண்டு 

  • கருத்துக்கள உறவுகள்

Shirt-T-Shirt-fussball-WM-herz-deutschla

 

உலகில், துவேசம் இல்லாத நாடு என்றால்..... ஜேர்மனிதான். :D

 

 

இந்த கருத்தைக்கேட்டால்

நிச்சயம் யேர்மனியருக்கு கோபம் வரும்... :lol:

 

எனக்கு அவர்களிடம் பிடித்ததே அந்த தடிப்புத்தான்

அது விளையாட்டு என்றாலும் சரி

கார் உற்பத்தி என்றாலும் சரி... :icon_idea:

 

இப்படி  கிட்லரின் வாரிசுகளை  அவமானப்படுத்தாதீர்கள் சிறி.. :lol:  :D

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் ஆரம்பத்தில்.. இங்கிலாந்தில் வாழ்ந்த பகுதியில்.. 98% வெள்ளைகள் தான்.

 

ஒரு தடவை தொடரூந்து நிலையம் நோக்கி.. முதுகில் ஒன்று.. கையில் இழுத்தபடி.. இரண்டு பொதிகளோடு வீதியால் நடந்து போய்க் கொண்டிருந்த போது.. ஒரு வெள்ளையின மூதாட்டி.. மகனே.. இவ்வளவு சிரமப்படுகிறாய்.. ஒரு பொதியை தா.. நான் இழுத்து வருகிறேன் என்று சொல்ல.. நான் அவரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு மறுக்க.. பின்னர் அவரே வற்புறுத்தி வாங்கி தொடரூந்து நிலையம் வரை இழுத்து வந்து தந்தார். இறுதியில் பயணம் சிறக்க வாழ்த்தியும் சென்றார்.

 

இப்படியும் வெள்ளையள் இருக்கினம்...!!

 

ஆனால்.. இங்குள்ள தமிழர்கள்.. ஏன் தமிழ் கடைக்கு போனால்.. ஒரு வரவேற்பு.. நன்றி.. ஒன்றும் கிடைக்காது. :icon_idea::)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

 

மற்றைய நாடுகளுடன் ஒப்பிடும் பொழுது கனடாவில் நிறவெறி குறைவு ஆனால் prairies போன்ற முழு வெள்ளை பிரதேசங்களுக்கு போனால் இவ்வாறான அனுபவங்கள் நிச்சயம் கிடைக்கும். ஒரு முறை ஒரு வெள்ளை கிழவி நீ எத்தியோப்பியாவிலிருந்து வந்தியா என்டு நன்பர்கள் முன்னால் கேட்டு எனது மானத்தை வாங்கிய சம்பவமும் எனது வாழ்வில் நடந்தது.  :wub:
 
but east or west..Canada is the best
 
37665_340.jpg

 

எத்தியோப்பியாவில் வாழ்பவர்கள் மனிதர்கள் இல்லையா, தென்னாலி? :D

 

உங்கள் மானத்தை வாங்கியதாக நீங்கள் குறிப்பிடுகிறீர்களே... எதற்காக உங்கள் மானம் போனதாக நீங்கள் நினைக்கிறீர்கள்? :wub:

 

உங்களது மனநிலைக்கும், அந்த வெள்ளைப் பெண்மணியின் மனநிலைக்கும் என்ன வேறுபாடு இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

.. ஏன் தமிழ் கடைக்கு போனால்.. ஒரு வரவேற்பு.. நன்றி.. ஒன்றும் கிடைக்காது. :icon_idea::)

 

ஏன் தமிழ் கடைக்கு, தமிழர் வேலை செய்யும் எந்த கடைக்கு போனாலும் அப்படித்தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.