Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய அமைதிப்படையால் சுட்டுக்கொல்லப்பட்ட வைத்தியசாலை பணியாளர்களின் நினைவுதினம்

Featured Replies

a(11).JPG

 

 
இந்திய அமைதிப்படையால் 1987ஆம் ஆண்டு ஒக்ரோபர் 21 மற்றும் 22ஆம் திகதிகளில் கடமையிலிருக்கும் போது சுட்டுக்கொலை செய்யப்பட்ட வைத்தியசாலை பணியாளர்களின் 27ஆவது ஆண்டு நினைவுதினம் இன்று செவ்வாய்க்கிழமை (21) அனுஷ்டிக்கப்பட்டது. 
 
யாழ்.போதனா வைத்தியசாலை வளாகத்திற்குள் நுழைந்த இந்திய அமைதி காக்கும் படையினர் வைத்தியர்கள், தாதியர்கள், உத்தியோகஸ்தர்கள் மற்றும் நோயாளிகள் அடங்கலாக 68பேரை சுட்டுக்கொலை செய்திருந்தனர். 
 
இன்றை அனுஷ்டிப்பு நிகழ்வில் வைத்தியசாலை வைத்தியர்கள், தாதியர்கள், ஓய்வுபெற்ற வைத்தியசாலை பணியாளர்கள், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். 
 

 

 

c(2).JPG

 

d(5).JPG

 

f.JPG

 

g.JPG

 

s(1).JPG

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/130558-2014-10-21-06-22-36.html

  • கருத்துக்கள உறவுகள்

பலாலியில் இந்திய அமைதிப்படைக்கு ஸ்தூபி கட்டி ஆராதனை செய்யும் யாழ்ப்பாணத்து இந்திய துணைத்தூதுவர்.. குறைந்தது இந்த நிகழ்வு குறித்தாவது பகிரங்க மன்னிப்புக் கோருவதோடு.. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்ட ஈட்டையும்... இறந்த மக்களுக்கு ஒரு நினைவாலயத்தையும் அமைத்துக் கொடுக்கலாமே. ஏன் அதைச் செய்ய முன்வருகிறார்கள்.. இல்லை காந்தி தேசத்து கயவர்கள்..???! இங்கு இறந்தது ஒன்றும் புலிகள் இல்லையே!!!!

 

இந்தியப் படைகளின் கொடுமையான போர்க்குற்றச் செயன்முறைக்கு ஆளாகி தம்முயிர் ஈந்த எம் மக்களுக்கு நினைவு நாள் அஞ்சலி.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

தம்முயிர் ஈந்த எம் மக்களுக்கு நினைவு நாள் அஞ்சலி.

தம்முயிர் ஈந்த எம் மக்களுக்கு நினைவு நாள் அஞ்சலி.

அஞ்சலிகள்!!

  • கருத்துக்கள உறவுகள்

நினைவு அகவணக்கங்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

நினைவு நாள் அஞ்சலி

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ராஜீவ் காந்தியின் இறப்புக்கு ஒட்டுமொத்த ஈழத் தமிழர்களையும் தண்டிக்கும் கிந்திய ஆதிக்க சக்தி ஈழத்தில் அநியாயமாக கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர்களுக்கு என்ன செய்யப்போகிறது :( 

 

நினைவு நாள் அஞ்சலி 

  • கருத்துக்கள உறவுகள்
இந்திய இராணுவத்தின் கோர தாண்டவம்; 27 ஆண்டுகள் நிறைவு - See more at: 
 
 

இந்திய இராணுவத்தினால் யாழ்.போதனா வைத்தியசாலையில் 1987 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்ட 21 பேரின் 27 ஆண்டு நினைவு நாள் வைத்தியசாலையில் இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது.

 

20141021_101726.jpg

 

20141021_101735.jpg

 

 1987 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 21, 22 ஆம் திகதிகள் வைத்தியசாலைக்குள் நுழைந்த இந்திய இராணுவம் அங்கிருந்த வைத்தியநிபுணர், வைத்தியர்கள்  இருவர், தாதியர்கள் 2 பேர், தலைமை தாதிய பரிபாலகர், சிற்றூழியர் மேற்பார்வையாளர் மற்றும் சிற்றூழிகள் என 21 பேர் கொன்று குவிக்கப்பட்டனர்.

இவ்வாறு கொல்லப்பட்டவர்களை சமய சம்பிரதாயங்கள் எதுவும் இன்றி அங்கேயே குவியல்களாக போட்டு எரியூட்டியும் இருந்தனர். இது மட்டும் அல்ல வைத்தியசாலை பாதுகாப்பானது என எண்ணி உள்ளே வந்து ஒழிந்து கொண்ட பொதுமக்கள் என 89 பேர் கொல்லப்பட்டதுடன் 100ற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருந்தனர்.

 

இதனைவிட வைத்தியசாலைக்கு வெளியிலும் வைத்தியர்கள் பலர் இந்திய இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டு வீதியில் போட்டு எரியூட்டப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
 

 

20141021_102339.jpg

 

20141021_102412.jpg

- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=143283564921132723#sthash.kFGrrc2L.dpuf

 

Edited by பிழம்பு

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியப் படைகளின் கொடுமையான போர்க்குற்றச் செயன்முறைக்கு ஆளாகி தம்முயிர் ஈந்த எம் மக்களுக்கு நினைவு நாள் அஞ்சலி.

 

அவை எமது உறவுகள்......

எதையும் எம்மினம் மறக்கவில்லை

மறக்கமுடியாது

மறக்காது.

 

மறக்க முடியாத கொடூர நாட்கள் இவை.

 

'பையன்களை' 24 மணி நேரத்துக்குள் அடக்கி விடுகின்றோம் என்று சவால் விட்ட பின் அது முடியாமல் போகவே அப்பாவிகளை இந்திய ஏவல் படையினர் வகை தொகையின்றி கொன்றழித்த நாட்கள் இவை. இவ் நிகழ்வு நிகழும் போது எமக்கு 13 வயதுதான். யாழ் நகரப் பகுதியில் இருந்து விலகி வண்ணார் பண்ணையில் இருந்த மாமாவின் புதிய மாடி வீட்டின் கீழ் பகுதியில் தஞ்சம் புகுந்து இருந்த நாட்கள் இவை. இவ் படுகொலை நிகழ்ந்த நாளில் அல்லது அடுத்த நாளில் தான் சுண்டிக்குளி மகளிர் கல்லூரிக்குள் இந்திய ஏவல் படையின் ஷெல் விழுந்ததால் எங்களின் நெருங்கிய உறவான லீலா அன்ரி என்பவரும் கொல்லப்பட்டார்.

 

பாடசாலைகள், தேவாலயங்கள், கோவில்கள் என்று அனைத்து பொதுமக்களின் இடங்களிலும் காந்தியின் படைகள் நர வேட்டையாடின. பழைய பூங்கா வீதியில் மட்டும் பல வாகனங்கள் அதில் பயணம் செய்தவர்களுடன் சேர்த்து எரியுண்டு கிடந்த காட்சி இன்னும் நினைவில் உள்ளது.

 

இந்த நர வேட்டை முடிந்த காலத்தின் பின் தான் ரொலோ, ஈ பீ ஆர் எல் எஃப், புளொட், ஈ என் டி எல் எஃப் ஆகியன எரிந்து முடிந்தவர் போக  மிஞ்சியவர்களை  தம் இந்திய எசமானர்களின் எலும்புத் துண்டுகளுக்காக  தம் பங்குக்கு வேட்டையாடும் இன்னொரு கொடூர காலம் உருவானது

 

காலங்கள் போனாலும் இன்று போல் நினைவில் ஆடும் இவ் நிகழ்வுகளை எம் அடுத்தடுத்த சந்ததிகளுக்கும் எடுத்துச் சொல்வோம். கிடைக்கும் சான்றுகளை ஆவணப்படுத்துவோம்.

 

யாழ்ப்பாணத்தில் பல 'அபிவிருத்திகளை' செய்ய உதவுகின்றோம் என்று பெளத்த பேரினவாதத்துக்கு காவடி தூக்கும் இந்திய அரசு இன்று அதே யாழ்ப்பாணத்தில் தான் இவ் நினைவு தினமும் குறிப்பிடத்தக்கவாறு அனுட்டிக்கப்படுகின்றது என்பதை கசப்புடன் பார்த்துக் கொண்டிருக்கும்.

 

 

அநியாயமாக இந்திய காடையர்களால் கொலை செய்யப்படட்டவ்ர்களுக்கு எனது அஞ்சலிகள் .

 

(நிழலிக்கு அப்ப பதின்மூன்று வயதுதான் என்று அவர் பதிவே சொல்லுது )

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அஞ்சலிகள்.

நினைவு நாள்  அகவணக்கங்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள்.

பாரத மாதாவின் துகில் அவர் சிப்பாய்களாலே உரியப்பட்ட நாள்.

இந்த சம்பவத்தை அதன் பிண்ணணியை, முறிந்த பனையில் ரஜனி ஆராய்திருந்தார். இதற்கு மேல் சொன்னால் இங்கே வசவுகள் வந்து விழும்.

நினைவுநாள் வணக்கம்

  • கருத்துக்கள உறவுகள்

நினைவஞ்சலிகள்

நினைவு நாள் அஞ்சலிகள்.
சிங்களம் 10 வருடங்களில் செய்த அட்டூளியங்களை இந்திய கொலைகார படை 3 வருடங்களில் செய்து முடித்தது. 
 
கொல்லப்பட்ட அப்பாவிகளுக்கு நினைவு நாள் அஞ்சலிகள்.
 
ராஜீவ் மரணம் மற்றும் தமிழ்ப் பொதுமக்கள் மரணம் போன்ற துன்பியல்  சம்பவங்களை நாம் கடந்து சென்று இந்தியாவுடனான நட்பைப் பலப்படுத்த வேண்டும்.
 
இச்சம்பவங்கள் தூரதிஸ்டகரமானவை. இச்சம்பவங்களில் எம்முடைய பங்களிப்பும் இருக்கிறது என்ற நேர்மையும் அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவமும் அவசியம்.
 
இந்திய ராணுவம் வெளியேறியதும் கிழக்கு மாகாணத்தில் சிங்களப்படையால் நிகழ்த்தப்பட்ட மிகக் கொடூரமான இனப்படுகொலையை நாம் மறக்கக்கூடாது.
 
எம்முடைய பிழையான தெரிவுகளால் எம்மக்களுக்கு ஏற்படும் கொடுந்துன்பங்களுக்கு நாமே பொறுப்பு.
 
இழந்த உறவுகளின் நினைவில் வருந்துவோருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
  • கருத்துக்கள உறவுகள்

நினைவு நாள்,  அகவணக்கங்கள்..!

 

  • கருத்துக்கள உறவுகள்

நினைவு வணக்கங்கள்.

நினைவு நாள் அஞ்சலி 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.