Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் உதைபந்தாட்ட பயிற்சி மைதானம் திறந்து வைப்பு

Featured Replies

யாழில் உதைபந்தாட்ட பயிற்சி மைதானம் திறந்து வைப்பு
929_zps91ad2620.jpg
சர்வதேச உதைபந்தாட்ட சம்மேளனம் மற்றும் ஜேர்மன் அரசின் உதவியுடன் சர்வதேச தரத்திலான உதைபந்தாட்ட பயிற்சி மைதானம் ஒன்று இன்று  யாழ். அரியாலைப் பகுதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
1043_zpsf6ed23eb.jpg

இந்த மைதானத்தை சர்வதேச உதைபந்தாட்ட சம்மேளனத் தலைவர் ஜோசப் ஷெப் பிளாட்டர் பிற்பகல் 1.50 மணியளவில் திறந்து வைத்தார்.
2142_zpsc6d58577.jpg
இந்த நிகழ்வில் இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர், வடக்கு மாகாண முதலமைச்சர்,வடக்கு மாகாண கல்வி அமைச்சர், வடக்கு மாகாண சபை அவைத் தலைவர்,வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் விளையாட்டுத்துறை அதிகாரிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

496_zpse6d96f55.jpg

 

578_zpsd59e1cab.jpg

 

656_zpsa87a16ac.jpg

- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=289643694102503283#sthash.Vw3Gxz61.dpuf

Super.மிக்க மகிழ்ச்சி. இணைப்பிற்கு நன்றி. நவீனன். FIFA தலைவர் Joseph „Sepp“ Blatter திறந்ந்து வைத்ததும் தமிழர் பிரதிநிதியாக முதலமைச்சர் கலந்து கொண்டதும் சிறப்பான அம்சம். ஜேர்மனி அரசிற்கு நன்றி.

  • தொடங்கியவர்

யாழ். அரியாலை மைதானம் ஃபீஃபா தலைவரினால் திறந்து வைப்பு

7968ariyalai-fifa-5_zps3af8886a.jpg

இலங்கை கால்­பந்­தாட்ட சம்­மே­ள­னத்­தினால் யாழ்ப்­பாணம் கண்டி வீதி அரி­யா­லையில் நிர்­மா­ணிக்­கப்­பட்ட கால்­பந்­தாட்ட மைதா­னமும் பயிற்சி நிலை­யமும்  சர்­வ­தேச கால்­பந்­தாட்டச் சங்­கங்­களின் சம்­மே­ள­னத்தின் (ஃபீஃபா) தலைவர் செப் பிளட்­ட­ரினால் இன்று  திறந்து வைக்­கப்­பட் டன.

7968ariyalai-fifa4_zps9757edf8.jpg
ஃபீஃபா தலைவர் செப் பிளட்டர், ஜேர்மன் நாட்டின் இலங்­கைக்­கான தூதுவர் ஜர்கன் மோஹார்ட், விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் மஹிந்­த­ா­னந்த அளுத்­கமகே, வட மாகாண சபை முத­ல­மைச்சர் சீ.வி. விக்­னேஸ்­வரன் மாகாண கல்வி, விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் குரு­குலராசா, வட மாகாண எதிர்க்­கட்சித் தலைவர் சி.தவ­ராசா, உறுப்­பி­னர்கள், இலங்கை கால்­பந்­தாட்ட சம்­மே­ள­னத்தின் தலைவர் ரஞ் சித் றொட்­றிகோ, இலங்கை கால்­பந்­தாட்ட சம்­மே­ள­னத்தின் உறுப்­பி­னர்கள் மற்றும் யாழ். கடற்­படைத் தள­பதி, யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் உட்பட பலர் இந்நிகழ் வில் கலந்துகொண்டனர்.

7968ariyalai-fifa2_zpsbc27d841.jpg

 

7968ariyalai-fifa1_zps3c2fb450.jpg
- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=7968#sthash.sZrDHasl.dpuf

கல்வி, பொருளாதாரம், உடல்வளம், விவசாயம் என்று எல்லா விடயங்களிலும் பின் தங்கி நிற்கின்றோம். இப்படியான விடயங்கள் கொஞ்சம் கொஞ்சமாகவாவது இவற்றில் முன்னேற்றத்தினை கொண்டு வரும் என்று நம்புகின்றேன்.

 

இதில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

வரவேற்கத்தக்க விடயம். ஆனால்.. இத்தோடு.. விளையாட்டு சார்.. வன்முறைகளையும் சமூகத்தில் பரப்பி விடும் அசிங்கத்தை செய்வதை கட்டுப்படுத்துவதோடு.. விசிறிகள்.. போட்டி அணிகள்.. விளையாட்டில் வெற்றி.. தோல்வியை முன்னேற்றத்திற்கான படிகளாக பாவிக்கும் பக்குவப்பட்ட நிலைக்கு வர வேண்டும். விளையாட்டுக்குள் அரசியல்.. இராணுவ மயமாக்கம்.. நுழைவது ஆபத்தான பெறுதிகளையே கொண்டு வரும். :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் சந்தோசமான  செய்தி

நன்றி  பதிவுக்கு நவீனன்.....

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மைதானம் தமிழர்களுக்குப் பயன்பட்டால் நன்று.
இராணுவ அணியும் கடற்படை அணியும் விளையாடுவதற்கு
செப் பிளட்டர் மைதானத்தைத் திறந்து வைப்பதில் என்ன பிரயோசனம்??
செப் பிளட்டருடைய  ஊழல்கள் ருசியா முதல் கட்டார் வரை பாய்ந்துள்ள நிலையில் இலங்கையில் என்ன கூத்துக்களோ .....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இணைப்பிற்கு நன்றி நவீனன்.

  • கருத்துக்கள உறவுகள்

578_zpsd59e1cab.jpg

 

நல்ல செய்தி. மைதானமும்..... அந்த மாதிரி,
புல்லு வளர்ந்து, பச்சைப் பசேல் என்று இருக்கின்றது.
நம்ம சனம்.... ஆடு, மாடுகளை.... அங்கு மேய்ச்சலுக்கு, விடாமல் இருக்க வேணும்.kuh-smilies-0004.gif :)

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் நினைக்கிறேன் இது இருக்கிற இடம் நெடுகஙகுளம் சந்தி என்று. மழைக்கு தண்ணி நீர்க்காவிட்தாள் சரி. - முந்தி இந்த இடத்த்ில் டர்ஃப் கிரிக்கெட் திடல் போடுவது என்றார்கள் ..4 வருடத்த்ால் பீச் வோழிபோல் திடல் போடா ட்திடி சரி.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் கால்பந்து விளையாட்டுக்கு ஒரு பெரிய ஏற்றத்தைக் கொடுக்கும் வகையில், சர்வதேசக் கால்பந்து சம்மேளனமான ஃபிஃபாவின் ஆதரவில் வடக்கே யாழ்ப்பாணத்தின் அரியாயலையில் சிறப்பு மையம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

141203171648_jaffna_football_sepp_blatteயாழில் ஃபிஃபா தலைவர் செப் பிளெட்டர்

மிகவும் அபூர்வமான ஒரு நிகழ்வில், ஃபிஃபாவின் தலைவர் செப் பிளாட்டர் செவ்வாய்க்கிழமை இந்த மையத்தை தொடங்கி வைத்துள்ளார்.

போரினால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஒன்றான யாழ்ப்பாணத்தில் இப்படியான பயிற்சி மையம் தொடங்கப்படுவது நாட்டின் மீள்கட்டுமானத்துக்கு ஃபிஃபாவின் பங்களிப்பு என்று அவர் கூறியுள்ளார்.

“கால்பந்து விளையாட்டு மக்களுக்கு நம்பிக்கையை கொண்டுவரும்” என்று அந்த நிகழ்வின்போது செப் பிளெட்டார் கூறினார் என ஃபிஃபா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு கூறுகிறது.

இம்மையம் யாழ்ப்பாணப் பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு அருமையான ஒரு அடிப்படை கட்டமைப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறது என்றும் அவர் கூறியதாக ஃபிஃபாவின் செய்திக் குறிப்பு மேலும் தெரிவிக்கிறது.

இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் 75 ஆவது ஆண்டு விழாக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளவே செஃப் பிளாட்டர் இலங்கை சென்றிருந்தார்.

“ஃபிஃபாவின் இந்த முன்னெடுப்பு காரணமாக யாழ்ப்பாண கால்பந்து மரபு மீண்டும் துளிர்க்கும், இனி வரும் காலங்களில் இலங்கை அணியில் யாழ் பகுதி வீரர்கள் இடம்பிடிப்பது தவிர்க்க முடியாத சூழல் ஏற்படும்” என்று பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார் இந்த முன்னெடுப்பில் செஃப் பிளெட்டருடன் உடன் இருந்தவரும், இலங்கை அணியின் முன்னாள் வீரருமான க்ளிஃபோர்ட் அந்தோனிப் பிள்ளை.

ஃபிஃபாவின் ‘ கோல் ப்ராஜெக்ட்’ திட்ட த்தின் கீழ் தொடங்கப்பட்டுள்ள இந்த வசதியின் மூலம் கால்பந்தாட்டத்தை முன்னெடுப்பது மட்டுமல்லாமல் அதன் மூலம் பரஸ்பர புரிந்துணர்வை உண்டாக்கி, கல்வி உட்பட அனைத்துத் துறைகளிலும் சிறந்த பிரஜைகளை உருவாக்குவதே நோக்கம் எனவும் கூறுகிறார் யாழ்ப்பாணக் கால்பந்து கழகத்தின் தலைவருமான அந்தோனிப் பிள்ளை.

 

  • கருத்துக்கள உறவுகள்

ஐ ஜாலி

பி பி சி யில் அந்தனிபிள்ளை கதைத்தார் (பழைய சென் ஜோன்ஸ் அந்த மாதிரி பிளேயரோ தெரியாது ) மிக சந்தோசமாக இருந்தது .

வாழ்க்கை என்பது அனுபவித்து வாழத்தான் சாகவல்ல.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவர் ஒரு சிறந்த பயிற்று வீப்பாளர். முந்தி St. John தவிர கம்பஸுக்கும் , பாசைுூர் அன்றனீஸ் க்கும் பழக்குகிறவர். யப்பாணத்தில் உள்ள (?)ஒரே ஒரு சர்வதேச மததியஸ்தர் என்று நினைக்கிறேன் .

இதை பார்க்க தேசிய :lol: வாதிகளுக்கு வயத்தால் போகுமே.......

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கும் தேசியத்திற்கும் என்ன தொடர்பு?தேசியமும் விளையாட்டும் நம் இரு கண்கள்........:D

  • தொடங்கியவர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.