Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ்களத்தில், 10 வருடங்களை நிறைவு செய்த உறவுகள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இருந்த யாழ் என்னை பொறுத்தவரை இறந்து விட்டது.

  • Replies 99
  • Views 8.7k
  • Created
  • Last Reply

ஈசனரே...

உங்களது, முதல் மூன்று உலகங்களும் யாவை?

அம்மை,  அப்பா, குடும்பம் என்று  சொல்ல வருகிறீர்களா?

 

 

(பரவாயில்லையே.. தூண்டிலப் போட்டால் உடன மீன் சிக்குது)   :D
 
மூன்று இன்டர்நெட் உலகங்கள் (செய்திகள், பாடல், சினிமா etc.) 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜமுனா,கலைஞன்,சுண்டல்,தூயவன் எல்லாம் இதற்கு பிறகு வந்த ஆட்களா

 

"ஆதியும் நீயே..... அந்தமும் நீயே....."

என்ற, மாதிரி, "சிற்று வேஷன்"  சாங் ஒன்றை இணையுங்கப்பா....... :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இருந்த யாழ் என்னை பொறுத்தவரை இறந்து விட்டது.

 

ok.gifஏன்...மீரா,

அப்படிச் சொல்கிறீர்கள்..

என்ன, காரணம், உங்களை, வெறுக்க வைத்தது?

அதனை..... நீங்கள், எங்களைப் போன்ற இளையவருக்கு,  சொன்னால்...

திருத்துக் கொள்ள, பல வாய்ய்பு உள்ளது.Laie_22.gif

 

மீரா... உங்களது, மௌனத்தை கலைத்து.... எங்களுடன் உரையாடுங்களேன்.

நல்ல, அருமருந்தாக.....உங்கள் மனதுக்கு, ஒத்தடம் தர பலர் உள்ளார்கள். :)

  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.....

வாழ்த்துக்கள் அனைவருக்கும்.

அப்ப இருந்த யாழ் என்னை பொறுத்தவரை இறந்து விட்டது.

 

இடையில் 2009 இல் எம் விடுதலைப் போராட்டம்  கடும் தோல்வியை சந்தித்தது என்பதையும் அதன் பின்னான சூழ்நிலையில் தாக்குப் பிடிக்க முடியாமல் எண்ணற்ற தமிழ் இணையத்தளங்கள் மூடப்பட்டது என்பதையும் மீரா கவனத்தில் எடுத்தால் நல்லது.

 

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

பத்து வருடங்களாக யாழில் நிலைத்திருக்கும் அனைத்து உறவுகளுக்கும் இனிய வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

பத்து வருடங்களாக யாழில் நிலைத்திருக்கும் அனைத்து உறவுகளுக்கும் இனிய வாழ்த்துக்கள்.
அவர்களை கௌரவப்படுத்துவதற்காக இத்திரியை ஆரம்பித்த தமிழ்சிறிக்கு  நன்றிகள்!

  • கருத்துக்கள உறவுகள்

பத்து வருட பலவான்கள் அனைவருக்குமு; வாழ்த்துகள் உரித்தாகட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இத்திரியை ஆரம்பித்த தமிழ்சிறி உங்களுக்கு முதலில் நன்றிகள். நான் 2000ம் ஆண்டில் யாழில் இணைந்தேன். முதலில் பாமினி எழுத்துருவில் யாழ் இயங்கிய காலம் அது. யேர்மனியில் வெளியாகிய இளைஞன் மாதாந்த இதழின் ஆசிரியர் குழுவில் இருந்த எனது கணவர் ரமேஷ் வவுனியன் மற்றும் இளைஞன் ஆசிரியர் சேகர் இருவரும் இணைந்து ஒரு இணைய வானொலியை ஆரம்பித்திருந்தார்கள்1999 இறுதிபகுதி.

 

இளைஞன் இணைய வானொலியின் அறிவிப்பாளராக நானே அப்போது இருந்தேன். அப்போது இணைய வானொலி பெரிதாக அறிமுகமில்லாத காலம். ஆனால் குறிப்பிட்டளவு நேயர்களை கொண்டது.இளைஞன் இணைய வானொலி முற்றிலும் பொழுது போக்கான விடயங்களையே கொண்டிருந்தது.

 

உலகத்தமிழர்களின் இதயத்துடிப்பு என்ற சுலோகத்துடன் இளைஞன் வானொலி ஆரம்பித்தது. பிறகு லங்காசிறி அப்படியே எங்களது சுலோகத்தை கொப்பியடித்து இன்று தனதாக்கிக் கொண்டது வேறுகதை. 

 

அப்போது ஐரோப்பிய வானொலிகளிலும் நான் பணியாற்றிக் கொண்டிருந்தமையால் எனது நிகழ்ச்சிகளுக்கான கவிதைகள் ஆக்கங்களை இணையத்தில் தேடுவேன். அக்காலத்தில் யேர்மனி தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவில் அங்கம் வகித்த காந்தன் என்ற தம்பியொருவரே எனக்கு யாழ் இணையம் மோகன் பற்றியும் சொல்லி யாழ் இணையத்தை அறிமுகப்படுத்தினார். 

 

முதலில் கருத்தெழுதத் தொடங்கிய போது குறித்தவர்கள் சிலர்தான் கருத்தாளர்களாக இருந்தோம். அதுவொரு புதிய அனுபவமாகவும் இருந்தது. வானொலி மூலம் அறிமுகமான தோழி நளாயினி தாமரைச்செல்வனையும் யாழில் இணைய வைத்தேன். அதுபோல வேறும் சிலர் என்னோடு யாழில் இணைந்தார்கள். அப்போது பதிவு செய்து அங்கத்தவராக வேண்டியதில்லை. புதிய அனுபவம் ஒரு பெயரின் பாஸ்வேட் அல்லது ஏதும் மறந்தால் கூட மாற்றவோ திருத்தவோ பெரிதாக விளக்கம் தெரியாத நேரம். மெல்ல மெல்ல கருத்துக்களத்தில் தான் தட்டச்சே அதிகம் பழகினேன் எனக்கூறலாம். 

 

யுனிகோட்டிற்கு முதல் மாற்றம் பெற்றபோதும் நளாயினி எழுதிக்கொண்டேயிருந்தார். குருவிகள் என்றொருவர் களத்தில் உறுப்பினராக இருந்தார். அவருக்கு பெண்கள் மீது காறித்துப்புவதே வேலை. இதனை நான் நளாயினி அதிகம் எதிர்த்து எழுதுவோம். ஆனால் குருவிகளின் மோசமான எழுத்துக்கள் ஒரு கட்டத்தில் நளாயினி மீது தனிப்பட்ட தாக்குதலாக அமைந்து நளாயினியும் இன்னும் சிலரும் விலகினார்கள்.

 

தற்போதைய  களம் யுனிகோட் 2வது வடிவம்.

 

(சூடு சொரணையில்லாம 14வருசமா இழுபடுறியே என ஒருவரும் திட்டப்படாது சொல்லீட்டன்)

 

2000ம் ஆண்டு காலம் தாயகம் மாவீரர் சார்ந்து அப்போது எந்த இணையமும் உருவாகவில்லை. வன்னிக்களத்தில் நின்ற போராளி நண்பர்கள் சிலரின் தொடர்புகள் கடிதங்களால் அவ்வப்போது வந்து கொண்டிருந்தது. ஒரு போராளி மாவீரர்கள் பற்றியெல்லாம் கடிதங்களில் எழுதுவார்.  மாவீரர்களின் விடயங்களை வெளியில் கொண்டுவர நானும் எனது கணவரும் இணைந்து தமிழ்வெப்றேடியோ என்றொரு இணைய வானொலியை 2000ம் ஆண்டு ஆரம்பித்தோம். 

 

அப்போது சற்லைட் தொலைபேசி வசதி வந்திருந்தது. வன்னியிலிருந்து காலை மாலை புலிகளின்குரல் செய்திகள் நிகழ்ச்சிகள் போன்றவற்றை அங்கிருந்து ஒரு போராளி தொலைபேசியால் தருவார். அவற்றை ஒலிப்பதிவு செய்து தமிழ்வெப்றேடியோவில் போடுவேன். அத்தோடு ஈழநாதம் பத்திரிகையின் ஆசிரியர் தலையங்களும் பக்சில் அனுப்புவார் போராளி நண்பர் அதனையும் தட்டச்சு செய்து போடுவேன். 
 
யாழில் தமிழ்வெப்றேடியோவில் போடும் விடயங்களையும் இணைப்பேன். 
 
பிறகு தமிழ்நாதம் இணையத்தின் பொறுப்பாளர் தொடர்பெடுத்து தமிழ்வெப்றேடியோவின் செய்திகள் நிகழ்ச்சிகளை போடக்கேட்டார். தாயகம் சார்ந்த விடயங்கள் எங்கேயும் வரட்டும் என்ற நோக்கில் அனைத்தையும் அப்போது கிடைத்த மின்னஞ்சல் முதல் அனைத்து இணையங்களுக்கும் அனுப்பி வைப்பேன். இப்படித்தான் யாழின் அறிமுகம் வந்தது எனக்கு.
 
தமிழ்நாதத்துக்கும் யாழை அறிமுகப்படுத்தி விடயங்களை பகிரச்சொன்னேன். பிறகு நடந்த கதைகள் ஆயிரக்கணக்கில் இருக்கிறது. நானும் யாழும் ஊடகங்களும் என்றதொரு பெரிய தொடரை எழுதலாம். சுவாரசியம் , முதுகில்குற்று , துரோகம் வஞ்சம் என நிறைய அனுபவங்கள் இருக்கிறது. ஆறுதலாக எழுதவுள்ளேன்.
 
அழகன் நிழலி அடிக்கவரப்படாது போனவருடம் இப்படியொரு தொடரை எழுதப்போவதாக யாழில் போட அனுமதியும் கேட்டேன். ஆனால் இன்னும் எழுதாமல் என்ன கதையென நிழலி கடுப்பாகி நிற்பது கண்முன் தெரிகிறது.  
 
கவிதன், அருவி , நிதர்சன் , சயந்தன் இப்படியொரு நீண்ட வரிசை 2000 - 2004 இற்குள் யாழை ஆண்ட ராசாக்கள். நல்ல நண்பர்கள் இவர்கள் பற்றியெல்லாம் ஒரு தொடரை அடுத்த வருடமெண்டாலும் எழுதுவேன். 
 
யாழ் இணையமும் மோகனும் தங்கள் சொல்லில் இயங்குவதாக சிலர் 2005இல் யாழில் வந்து பரப்பாகிய பிறகு விட்ட பூவிசிறிகள் வாணவேடிக்கைகள் என நிறைய அனுபவங்கள் இருக்கிறது. 
 
2003 இல் அஸ்வினி 2003 என்றொரு பெயரை ஒரு போராளிக்காக பதிவு செய்து கொடுத்து அவன் அனுப்புவதை அஸ்வினியால் போடுவேன். அஸ்வினியை அந்தப்போராளியும் லொக்கின் பண்ணி தனிமடல்கள் பார்ப்பான். அஸ்வினி யார் என்பது அப்போது யாருக்கும் தெரியாது. சில பூவிசிறிகளின் வாணவேடிக்கையை அஸ்வினி ஐடியால் பிடித்தோம். இறுதியில் அஸ்வினியை சந்திக்க ஆட்கள் கேட்ட போது நானே வெளிப்பட்டேன். நிறைய சுவாரசியங்கள் இருக்கிறது. இன்னொருமுறை எழுதுகிறேன்.
 
 
2004 யேர்மன் காவல்துறையால் வந்த சட்டசிக்கலின் போது துணைநின்றவர்களும் யாழ்கள உறவுகளான கவிதன், நிதர்சன் , அருவி போன்ற நண்பர்கள் பெரும் ஆறுதலாக இருந்தார்கள்.
 
சுரதா அண்ணாவும் யாழின் மூலமே அறிமுகமானார்.2000ம் அறிமுகமானவர்களில் இவரும் ஒருவர்.
 
இன்னும் புதினங்கள் தொடரும்.....

 

Edited by shanthy

  • கருத்துக்கள உறவுகள்

பத்து வருடங்களாக யாழில் நிலைத்திருக்கும் அனைத்து உறவுகளுக்கும் இனிய வாழ்த்துக்கள்!!!

  • கருத்துக்கள உறவுகள்

அடப் பாவி தமிழ்சிறி

இன்னும் ஒரு மாதம் பொறுத்திருந்தால் எனக்கும் வாழ்த்துக்களும் பண முடிச்சும் கிடைத்திருக்குமே?பறவாயில்லை போகட்டும்.

 

பத்து வருத்துக்கு மேலாக கடலை போட்டுக் கொண்டிருக்கும் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.

 

இங்கே சகோதரம் குருவிகளை எவரும் கண்டு கொள்ளாதது கவலையளிக்கிறது.

 

குருவிகளாக வலம் வந்து கொண்டிருக்கும் போது யாழில் ஏற்பட்ட சுனாமியால் நெடுக்காலபோவான் என்னும் பெயரில் எழுதத் தொடங்கியவர் பிரச்சனை முடிந்த பின்னரும் ஏனோ குருவிகளாகாமல் நெடுக்காலபோவானாகவே இருக்கிறார்.

 

முகம் தெரியாவிட்டாலும் என்னை மிகவும் கவர்ந்தவர்.சகலகலாவல்லவன்.

 

யுனிகோட்டிற்கு முதல் மாற்றம் பெற்றபோதும் நளாயினி எழுதிக்கொண்டேயிருந்தார். குருவிகள் என்றொருவர் களத்தில் உறுப்பினராக இருந்தார். அவருக்கு பெண்கள் மீது காறித்துப்புவதே வேலை. இதனை நான் நளாயினி அதிகம் எதிர்த்து எழுதுவோம். ஆனால் குருவிகளின் மோசமான எழுத்துக்கள் ஒரு கட்டத்தில் நளாயினி மீது தனிப்பட்ட தாக்குதலாக அமைந்து நளாயினியும் இன்னும் சிலரும் விலகினார்கள்.

அக்கா தங்களின் மேற்படி குறிப்பு கடந்த கால சம்பவத்தை திரித்துச் சொல்வதால், தவிர்க்கப்பட வேண்டியதாயின் உண்மைகள் திரிக்கப்படாது என்ற வகையில் குருவிகளாகிய நாங்கள் இதனை நேரடியாக குறிப்பிட விரும்புகிறோம்.

 

யாழ் இணையக்களத்தில் பெண்ணியம் என்ற ஒரு தலைப்பு முன்னர் இடம்பெற்றிருந்தது. தமிழ் அகராதியிலேயே இல்லாத அந்த தலைப்பை யாழ் கொண்டிருப்பது அநாவசியமானது ஆண்களைப் போலவே பெண்களுக்கும் சமூகப் பிரச்சனைகள் உள்ளன அவற்றை பொதுவில் ஆராய்வதே நல்லது என்று கருத்துப் பகிரப்பட்ட நேரத்தில் தான் நளாயினி அக்கா சேது என்பவரோடு நிகழ்ந்த அநாகரிகக் கருத்துப் பரிமாற்றம் மற்றும் தனிமடலில் எங்களோடு மேற்கொண்ட அநாகரிகக் கருத்துப் பரிமாற்றத்தின் கீழ் யாழ் நிர்வாகத்தின் நடவடிக்கையின் பிரகாரம் மோகன் அண்ணாவோடு தொலைபேசியில் புடுங்குப்பட்டு இறுதியில் களத்தில் இருந்து ஒதுங்கிக் கொண்டார். அவரை யாழ் நிர்வாகமோ நாங்களோ ஒதுக்கி வைக்கவில்லை. அவர் அநாகரிமாக திட்டி தனிமடல்கள் இட்ட போதும் மிகவும் நாகரிகமாக அவருக்கு புத்திமதிகள் சொன்னோம். நீ சின்னப்பொடியன் எனக்கென்ன புத்திமதி சொல்லுறது என்ற ஒரு வீராப்பில் தான் அவா நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தா. அது அவவின் அவசர அறிவுப் பிரச்சனை.

 

இதனை நீங்கள் குருவிகள் களத்தை விட்டு விரட்டினார் என்று திரித்துக் கூறுவது தவறாகும்.

 

மேலும் இதே நீங்கள் நளாயினி அக்காவோடு பல விடயங்களில் தகராறு பட்டதையும் யாழில் பகிரங்கமாக சண்டை பிடித்ததையும் யாழ் அறியும். நாங்களும் அறிவோம். அவற்றை மீள நினைவுபடுத்தப்படக் கூடாது என்றே விரும்புகிறோம்.

 

மேலும் அன்றைய பொழுதுகளில் எம் எஸ் என் வழியாக நீங்கள் இணைய தள உதவிகள் கேட்டு நச்சரித்த பொதுகளையும் எண்ணிப் பார்க்க முடிகிறது. அப்போது எல்லாம் நச்சரிப்பாக அன்றி அன்பு அக்காவின் வேண்டுகோளாக ஏற்று உங்களுக்கு எம்மால் ஆன உதவிகளை செய்திருக்கிறோம். நீங்கள் இன்று அவற்றை மறந்திருக்கலாம். அல்லது மறைத்திருக்கலாம்.

 

ஆனால் உண்மையை பேச தயங்குவது உங்களின் இதய சுத்தி மீது சந்தேகத்தை ஏற்படுத்துவதோடு தவறான விடயங்கள் தவறாக யாழில் உதாரணப்படுத்தப்படுவதை தடுக்கும் வகையில் இந்த பதிவை இட்டு ஓய்கிறோம்.

 

நன்றி.

அன்புடன் நட்பின் குருவிகள். :)

 

---------------

 

யாழில் 10 ஆண்டுகள் கழித்த உறவுகள் அனைவருக்கும் வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொள்கிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

ரெண்டு கையாலயும் எழுதுறது ரொம்ப கஸ்டம்தான்

  • கருத்துக்கள உறவுகள்

அக்கா தங்களின் மேற்படி குறிப்பு கடந்த கால சம்பவத்தை திரித்துச் சொல்வதால், தவிர்க்கப்பட வேண்டியதாயின் உண்மைகள் திரிக்கப்படாது என்ற வகையில் குருவிகளாகிய நாங்கள் இதனை நேரடியாக குறிப்பிட விரும்புகிறோம்.

 

யாழ் இணையக்களத்தில் பெண்ணியம் என்ற ஒரு தலைப்பு முன்னர் இடம்பெற்றிருந்தது. தமிழ் அகராதியிலேயே இல்லாத அந்த தலைப்பை யாழ் கொண்டிருப்பது அநாவசியமானது ஆண்களைப் போலவே பெண்களுக்கும் சமூகப் பிரச்சனைகள் உள்ளன அவற்றை பொதுவில் ஆராய்வதே நல்லது என்று கருத்துப் பகிரப்பட்ட நேரத்தில் தான் நளாயினி அக்கா சேது என்பவரோடு நிகழ்ந்த அநாகரிகக் கருத்துப் பரிமாற்றம் மற்றும் தனிமடலில் எங்களோடு மேற்கொண்ட அநாகரிகக் கருத்துப் பரிமாற்றத்தின் கீழ் யாழ் நிர்வாகத்தின் நடவடிக்கையின் பிரகாரம் மோகன் அண்ணாவோடு தொலைபேசியில் புடுங்குப்பட்டு இறுதியில் களத்தில் இருந்து ஒதுங்கிக் கொண்டார். அவரை யாழ் நிர்வாகமோ நாங்களோ ஒதுக்கி வைக்கவில்லை. அவர் அநாகரிமாக திட்டி தனிமடல்கள் இட்ட போதும் மிகவும் நாகரிகமாக அவருக்கு புத்திமதிகள் சொன்னோம். நீ சின்னப்பொடியன் எனக்கென்ன புத்திமதி சொல்லுறது என்ற ஒரு வீராப்பில் தான் அவா நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தா. அது அவவின் அவசர அறிவுப் பிரச்சனை.

 

இதனை நீங்கள் குருவிகள் களத்தை விட்டு விரட்டினார் என்று திரித்துக் கூறுவது தவறாகும்.

 

மேலும் இதே நீங்கள் நளாயினி அக்காவோடு பல விடயங்களில் தகராறு பட்டதையும் யாழில் பகிரங்கமாக சண்டை பிடித்ததையும் யாழ் அறியும். நாங்களும் அறிவோம். அவற்றை மீள நினைவுபடுத்தப்படக் கூடாது என்றே விரும்புகிறோம்.

 

மேலும் அன்றைய பொழுதுகளில் எம் எஸ் என் வழியாக நீங்கள் இணைய தள உதவிகள் கேட்டு நச்சரித்த பொதுகளையும் எண்ணிப் பார்க்க முடிகிறது. அப்போது எல்லாம் நச்சரிப்பாக அன்றி அன்பு அக்காவின் வேண்டுகோளாக ஏற்று உங்களுக்கு எம்மால் ஆன உதவிகளை செய்திருக்கிறோம். நீங்கள் இன்று அவற்றை மறந்திருக்கலாம். அல்லது மறைத்திருக்கலாம்.

 

ஆனால் உண்மையை பேச தயங்குவது உங்களின் இதய சுத்தி மீது சந்தேகத்தை ஏற்படுத்துவதோடு தவறான விடயங்கள் தவறாக யாழில் உதாரணப்படுத்தப்படுவதை தடுக்கும் வகையில் இந்த பதிவை இட்டு ஓய்கிறோம்.

 

நன்றி.

அன்புடன் நட்பின் குருவிகள். :)

 

---------------

 

யாழில் 10 ஆண்டுகள் கழித்த உறவுகள் அனைவருக்கும் வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொள்கிறோம்.

 

மிகவும் சுவாரசியமாக இருக்கிறது குருவிகலாரே. இன்னும் பல விடயங்களைப் பகிரலாமே எங்களுடன். கொட்டாவி விடும் எமக்கு கொஞ்சம் உற்சாகமாய் இருக்குமே.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 photo-4.jpg?_r=0 பரணி. 14.04.2003.

 

வசி_சுதா.  21.04. 2003.

 

ஆளவந்தான். 20.06.2003.

 

தேவகுரு. 14.09.2003.

 

av-138.png?_r=0  பிரபா. 29.09.2003.

 

சனியன். 04.10.2003.

 

av-164.jpg?_r=0 ஆதிபன்.18.10.2003.

 

மதன். 29.01,2004.

 

சயந்தன். 21.07.2004.

 

நிர்மலன். 22.09.2004.

 

ஜூட். 24.09.2004.

 

av-831.jpg?_r=0சிறி. 25.09.2004.

photo-615.jpg?_r=1405268876 ஹரி.26.09.2004.

 

photo-636.jpg?_r=1416732807 நிதர்சன். 07.10.2004.

 

photo-786.jpg?_r=1389681032 டபிள். 17.11.2004
 

photo-845.jpg?_r=0 குளக்காட்டான்.30.11.2004.
 

ஈழப்பிரியன். 30.01.2005.

 

அனைவருக்கும், வாழ்த்துக்கள். :)  :wub:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

நன்றி தமிழ்சிறி மற்றும் உறவுகளுக்கு,

நான் யாழ்களம் ஒவ்வொரு நாளும் வந்து ஊர்புதினம் பார்த்து விட்டு சென்றுவிடுவேன், முன்புபோல் இப்பொழுது நேரம் இன்மையால் கருத்து எழுதுவது இல்லை இந்த்வருடம் கனடா சென்றபோது உறவுகளை சந்திப்பதற்கு முயற்சித்தேன் ஆனால் அது கைகூடவில்லை. நானும் குசா அண்ணரும் ஒரே நாளில் யாழில் இணைந்திருந்தாலும் நான் கருத்து எழுதுவது மிகமிக குறைவு.

  • கருத்துக்கள உறவுகள்

தனிமடல் அனுப்பிய தமிழ்சிறிக்கு நன்றிகள்.

 

நேரமின்மையால் யாழ்களத்தில் எழுதுவதில்லை, ஆனால் ஒரு நாளைக்கு 10 தடைவைக்கு மேல் யாழ்களத்துக்கு வந்துபோவேன்.

Edited by பிரபா

10 வருடங்கள் தாண்டிய ஏனைய கள உறவுகளுக்கும் வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்
குருவிகள், யாழுக்கும் உங்களுக்கும் மோகனுக்கும் நளாயினிக்கும் இடையில் நடந்த புடுங்குப்பாடு எனக்கு தெரியாது. ஆனால் நளாயினி மீது நீங்கள் தொடர்ந்து செய்த தனிமனித தாக்குதலே நளாயினியை தொடர்ந்து எழுதாமல் ஒதுங்க வைத்தது உண்மை. இந்த விடயத்தை நளாயினியை திரும்ப அழைத்த போது நளாயினியே சொன்னார். இனி உங்களது ஆலோசனையை நளாயினி கேட்கேல்லயென்று நீங்கள் குறைபட்டால் இது பற்றி நான் எழுத ஒன்றுமில்லை.
 
நளாயினி எனக்கு பிடிக்க பல விடயங்கள் உண்டு :-
காதல் கவிதைகள் ஆண்களால் மட்டுமே அதிகம் வெளிப்படுத்த முடியுமென்ற வரையறையை மறுத்து துணிந்து காதல் கவிதைகளை வெளிப்படையாக தன்னுணர்வு சார்ந்து எழுதுவது.
பெண்கள் பெண்விடுதலை அடக்குமுறைகள் பற்றி துணிச்சலோடு அது குருவியென்றாலென்ன தோழியான நானென்றாலென்ன துணிச்சலோடு எழுதுவது.
யாழ் களத்தில் எல்லா பெண்களையும் விட துணிவோடு உங்களது எல்லா பெண்கள் மீதான அநாகரீக கருத்துக்களுக்கு பதில் எழுதிய ஒருத்தி நளாயினி.
நளாயினி பற்றி இன்னும் நிறைய இருக்கு ஆறுதலாக எழுதுகிறேன்.
 
நளாயினியும் நானும் வானொலிகளில் ஒன்றாக நிகழ்ச்சிகள் செய்துள்ளோம். ஆனால் இருவருக்கும் தனித்த தனித்த கருத்துக்கள் பல விடயங்களில் இருந்தது இப்போதும் இருக்கிறது ஆனால் ஒருநாளும் எங்களது நட்புக்குள் அவற்றை புகுத்தி கோபித்து கொண்டு போனதில்லை. இப்போதும் அப்போதும் நளாயினி எனக்கு நல்ல நட்பு. யாழைவிட்டு நளாயினி ஒதுங்கிய பிறகும் பலதடவைகள் திரும்பி வாவென்று அழைத்தும் நளாயினி வராமல் போனது இன்னும் கவலைதான். நல்லதொரு கருத்தாளரை யாழ் கருத்தாளர்களாகிய நாங்கள் இழந்து போனோம்.
 
முரண்பாடான புதினங்களை கருத்துக்களை நீங்கள் இங்கு மீள இணைத்தாலும் நல்லது. இங்கு சுமேரியர் கொட்டாவி விட்டுக்கொண்டிருப்பதாகவும் பொழுது போகாமல் தவிப்பதாகவும் எழுதியுள்ளார். அவருக்கு பொழுது போக நீங்கள் உதவிய புண்ணியமும் வந்து சேரும்.
 
நிதர்சன், அருவி, கவிதன் , குளைக்காடான் இப்படி ஒரு குழு நாங்கள் தினமும் மெசென்சரில் பேசிக்கொள்வோம். நிதர்சன் எனது நிகழ்ச்சிகளை போடவதற்கு தனது இணையத்தளத்தின் சேவரையும் தந்த நல்லிதயம். ஆனால் இந்த நல்லிதயங்களுடன் கூட கருத்துக்களால் மோதியிருக்கிறேன். ஆனால் இன்றளவும் நட்பில் நாங்கள் எதிரிகளாகியதில்லை. 
 
தம்பி கவிதன், அருவியை இப்போதும் நினைப்பதுண்டு. இன்று இதனை அவர்களால் வாசிக்க நேர்ந்தால் மீண்டும் அவர்கள் இங்கு வந்து எழுத வேண்டுமென வேண்டுகிறேன்.
 
குருவிகளாரே உங்களுடனும் நளாயினிக்கு அடுத்த ஆளாக முரண்பாடு நிறைய இருந்து வருகிறது கருத்தால். ஆனால் கருத்துகளம் தவிர்ந்து உங்கள் மீது அன்பும் மதிப்பும் இருக்கிறது. கருத்தை கருத்தால் வெல்ல உங்களுக்கும் தெரியும் எனக்கும் தெரியும். கொட்டாவிகளுக்கு இதெல்லாம் தெரியாது. உங்களிடம் மட்டுமல்ல எனக்க தெரியாத தொழில்நுட்ப விடயங்களை நிதர்சன், குருவிகள், இளைஞன், சுரதா அண்ணா இப்படி பல நண்பர்களிடம் கேட்டு அறிந்து எனது இணைய கணணி அறிவை வளர்த்துக் கொண்டுள்ளேன். உங்களுக்க பலமுறை தனித்து நன்றி சொல்லிப்பழகியதால் இங்கு உங்களது ஆதரவை சொல்ல மறந்துவிட்டேன் மன்னித்தருள்க தம்பியன்.
 
சேது இணைந்தது 2003 காலம்.
 
கனோன் - 2003(இவர் தான் எங்களது நெல்லையன். பிறகு சோழன் என பெயரை மாற்றிக்கொண்டார் பிறகு நெல்லையானார். நெல்லையன் கூட நல்லதொரு கருத்தாளர். 2000ம் களில் நாம் செய்த சில பரப்புரைகளுக்கு ஆங்கிலத்தில் எழுதத்தேவையான விடயங்களை எழுதித்தந்தவர்)
 
இன்னொரு உறவு - மதன். நல்ல கருத்தாளர் மட்டுமன்றி தேடல் வாசிப்பு மிகுந்தவர். கடந்தவருடம் அவரது நண்பர் ஒருவர் பற்றி நான் எழுதிய மாவீரர் நினைவொன்றை பார்த்துவிட்டு தொடர்ப கொண்டார். அவரும் யாழை விட்டு ஒதுங்கி போனார். மதன் இதனை படித்தால் நிச்சயம் திரும்பி வாருங்கள். பழையகளத்தில் இருந்தது போல மீண்டும் எழுதுவோம்.
 
வினித் இவர் நெதர்லாந்திலிருந்து எழுதிக்கொண்டிருந்தார். இவரும் 2003 காலங்களில் இணைந்ததாக ஞாபகம். எனது வானொலி நாடகம் ஒன்றுக்கு குரல் தந்தவர்.  கவிதன் ,அருவி போன்றோரும் நாடகத்திலும் உதவியவர்கள்.
 
பரணி - 2000ம் களில் அரேபிய நாடொன்றில் இருந்த நினைவு. நல்ல கவிஞன், கருத்தாளன் ஆனால் பிறகு அதிகம் எழுதாமல் ஒதுங்கிக்கொண்டார். எனது வானொலி நிகழ்ச்சிகளில் பரணியின் கவிதைகள் ஒலித்திருக்கிறது. அதிகம் அப்போது காதல் கவிதைகளை எழுதியவர் பரணி.
 
விதுரன்- இவர் ஸ்கண்டிநேவிய நாடுகளில் ஒன்றிலிருந்து எழுதியவர். சிறந்த அரசியல் கருத்தாளர். இவரும் 2000ம்களில் இருந்தவர். பிறகு இங்கு வருவதில்லை.
 
தமிழினி என்றொரு தங்கை கணணிதொடர்பாக எனக்கு பல விடயங்கள் சொல்லித்தந்தவர். பிறகு இவரும் காணாமற்போனார். தமிழினி இதனை வாசித்தால் மின்மடலாயினும் போடுங்கள்.
 
2003 பிற்பட்ட காலங்களில் வலைப்பூவில் எழுதிக்கொண்டிருந்த தங்கை தூயா, மற்றும் சினேகிதி ,ரசிகை இவர்களெல்லாம் இணைந்து ஒரு பெண்கள் இணைய சஞ்சிகையையும் ஆரம்பித்தார்கள். பிறக தொடர்புகள் எதுவுமற்று ஒதுங்கிவிட்டார்கள். இவர்களும் இணைய வேண்டும் மீள.
 
சோழியன் நல்ல எழுத்தாளர். கருத்தாளர். நட்பு என்ற பெரிதாக சொல்லிக்கொள்ளும் அளவு நேரடி பழக்கம் குறைவு. 1997 தொடக்கம் வானொலிகள் பத்திரிகைகள் மூலம் நிறைய அறிந்த உறவு. 2000ம் ஆண்டு டோட்மூண்ட் நகரில் புத்தகத்திருவிழாவில் முதலில் சந்தித்தேன். இன்றுவரை கருத்துக்களால் பல இடங்களில் கருத்து மோதல் இருந்தது ஆனால் எதிரிகளாக கருத்துக்களுக்காக குத்துபட்டு முறித்துக்கொண்டு போகாமல் தொடரும் நல்ல நட்பு.
 
கிருபன் :- கிருபன் போடும் அனைத்து கருத்துக்களையும் இணைப்புகளையும் வாசிப்பேன்.பக்கசார்பற்று எல்லா விடயங்களையும் அறியும் ஆர்வம் மிக்க கருத்தாளர். நான் தவாறாமல் வாசிக்கும் கருத்தாளர் கிருபன்.  நான் மதிக்கும் கருத்தாளர்களின் கிருபனுக்கு தனியிடம்.
 
குருவித்தம்பியா, கனக்க விடயங்கள் எழுதப்போகிறேன் தொடரும் என்று முதலே போட்டுள்ளன். ஆக பழைய பல உறவுகள் பற்றி விரைவில் எழுதுவேன். சிலருக்கு நேற்று மின்னஞ்சல் போட்டுள்ளேன் அவர்களது பெயர்களை எழுதுவதில் ஏதும் சங்கடம் இருப்பின் அறியத்தருமாறு.
 
விரைவில் தொடராக எழுதுவேன் அதுவரை பொறுத்தருள்ள குருவிகளே.

வினித் இவர் நெதர்லாந்திலிருந்து எழுதிக்கொண்டிருந்தார். இவரும் 2003 காலங்களில் இணைந்ததாக ஞாபகம். எனது வானொலி நாடகம் ஒன்றுக்கு குரல் தந்தவர்.

வினித் அண்ணா ஏன் இப்பொழுது வருவதில்லை? இவருடன் போன வருடம் திண்ணையில் பல தடவை உரையாடியிருக்கிறேன். எனக்கு பிடித்த அண்ணாக்களில் ஒருவர். :)

  • கருத்துக்கள உறவுகள்

தனிமடல் அனுப்பிய தமிழ்சிறிக்கு நன்றிகள்.

 

நேரமின்மையால் யாழ்களத்தில் எழுதுவதில்லை, ஆனால் ஒரு நாளைக்கு 10 தடைவைக்கு மேல் யாழ்களத்துக்கு வந்துபோவேன்.

மீண்டும் வாருங்கள் எழுதுங்கள் பிரபா.

 நானும் குசா அண்ணரும் ஒரே நாளில் யாழில் இணைந்திருந்தாலும் நான் கருத்து எழுதுவது மிகமிக குறைவு.

பழைய கருத்தாளர்கள் மீள இணைய வேண்டும். வாருங்கள் சிறி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.