Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புளட் தலைவர் உமா மகேஸ்வரனின் மாறுபட்ட படங்கள்

Featured Replies

10850245_887574137927706_312498209524831

1488033_887574277927692_6418364719956178

1526848_887574341261019_1914666776410171

10849977_887574417927678_202588074874971

  • Replies 105
  • Views 14.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

இந்தியனாக ஒன்று ,இந்திராகாந்தியை சந்திக்கும் போது ஒன்று ,மொரிசியசுக்கு போகும் போது ஒன்று ,வெளிநாடு போகும்போது ஒன்று .

பாவம் அந்த ஆளும் பாடாத பாடு பட்டது .

எழுபதுகளில் லண்டன் ரத்னசாபதி பலஸ்தீன பயிற்சிக்கு வரசொல்லி பிரான்ஸ் வந்து பாரிசில் Gard-De-Nord ஸ்டேசனில் படுத்த கதை சொன்னார் .பின்னர் பதினாலாம் மாடி ஏறி படுத்து இரண்டு நாட்களின் பின் சிரியா சென்றார் .

இது நடந்தது எழுபதுகளில் இன்று இதை யாராலும் நினைத்து பார்க்க முடியுமா ?

காலம் மனிதர்களை மாற்றிவிட்டது .

  • கருத்துக்கள உறவுகள்

உமா இலங்கை விமான நிலையத்தாலும்  ஏதோ ஒரு வேடத்தில் சென்றதாக அறிந்தேன்.  உண்மையா??

10850245_887574137927706_312498209524831

1488033_887574277927692_6418364719956178

1526848_887574341261019_1914666776410171

10849977_887574417927678_202588074874971

இந்த படங்களை பார்க்கும் போது அந்த கண்களில் ஒருவித குரூரம் தெரிகிறது.
தன்னிலை பிறழ்ந்த ஒரு மனோவிகாரம் கொண்ட மனிதனை பார்க்க முடிகிறது. 
இல்லாவிடின் தன்னை நம்பி போராட வந்த எத்தனையோ போராளிகளை இந்த
மனிதனால் எப்படி அவர்களின் ஆண்குறிகளை வெட்டி கொன்றிருக்க முடியும்.
 
தலைவர் அன்றைக்கே பாண்டி பஜாரில வைச்சு கதையை முடிச்சிருந்தால் எத்தனை 
உயிர்கள் தப்பியிருக்கும்? 

Edited by seeman

உமா இலங்கை விமான நிலையத்தாலும்  ஏதோ ஒரு வேடத்தில் சென்றதாக அறிந்தேன்.  உண்மையா??

பெண் வேடம் அணிந்து சென்றதாக கேள்வி பட்டிருக்கிறேன் 

என்ன தான் இருந்தாலும் உமா மகேஸ்வரனும் ஒரு போராளியே.தமிழீழத்திற்காக  பல அர்பணிப்புகளை செய்தவரே. அவரிலும் எனக்கு தனி  மரியாதை உண்டு.  எதிர்கால தமிழரின் வரலாற்றில் ஒரு தமிழீழ போராளியாக  நினைவு கூற தக்கவரே. தமிழரின் தலையெழுத்து எமது போராளிகளிடமும் விதி விளையாடிவிட்டது. ஒரு போராளியின் படத்தை சிரிப்போம் சிறப்போம் பகுதிக்குள் இணைத்தது எனக்கு சரியாக படவில்லை.

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியனாக ஒன்று ,இந்திராகாந்தியை சந்திக்கும் போது ஒன்று ,மொரிசியசுக்கு போகும் போது ஒன்று ,வெளிநாடு போகும்போது ஒன்று .

பாவம் அந்த ஆளும் பாடாத பாடு பட்டது .

எழுபதுகளில் லண்டன் ரத்னசாபதி பலஸ்தீன பயிற்சிக்கு வரசொல்லி பிரான்ஸ் வந்து பாரிசில் Gard-De-Nord ஸ்டேசனில் படுத்த கதை சொன்னார் .பின்னர் பதினாலாம் மாடி ஏறி படுத்து இரண்டு நாட்களின் பின் சிரியா சென்றார் .

இது நடந்தது எழுபதுகளில் இன்று இதை யாராலும் நினைத்து பார்க்க முடியுமா ?

காலம் மனிதர்களை மாற்றிவிட்டது .

அர்ஜுன்,
 
மொரீசியஸ் சென்றுள்ளீர்களா? தமிழுக்கு அங்கு முதலிடம் உண்டா? பெரும்பாலானவர்களின் பெயர்தான் தமிழ்,அனால் க்ரியோல் எனும் மொழிதான் பேசுகின்றார்கள். லண்டனில் என்னுடைய பக்கத்து வீட்டில் இருந்த பெண்ணும் அப்படித்தான். 
 
தமிழ் மொழி அங்கு அழிந்துவிட்டது என நினைக்கின்றேன்.

இவரும் தேசியதலைவர் போன்று ஹான்சம் மேன்!

  • கருத்துக்கள உறவுகள்

என்ன தான் இருந்தாலும் உமா மகேஸ்வரனும் ஒரு போராளியே.தமிழீழத்திற்காக  பல அர்பணிப்புகளை செய்தவரே. அவரிலும் எனக்கு தனி  மரியாதை உண்டு.  எதிர்கால தமிழரின் வரலாற்றில் ஒரு தமிழீழ போராளியாக  நினைவு கூற தக்கவரே. தமிழரின் தலையெழுத்து எமது போராளிகளிடமும் விதி விளையாடிவிட்டது. ஒரு போராளியின் படத்தை சிரிப்போம் சிறப்போம் பகுதிக்குள் இணைத்தது எனக்கு சரியாக படவில்லை.

இனியாவது

தமிழரின் போராட்டத்தில்  அண்ணையின் பாத்திரம் என்ன என்பதை புரிந்து கொள்ளுங்கள்..

இதே உமா

காலிமுகத்திடலில்  தேடுவாரற்று இறந்து கிடந்ததை பார்த்ததும் நான் அழுதேன்....

திரி எங்கள் மண் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
பனாகொடை மகேஸ்வரன் என்று ஒருத்தர் இருந்தார். காத்தான்குடி வக்கி கொள்ளை அடித்து, நல்ல ஆயுதங்களும், தேர்ந்து எடுக்கப் பட்ட சிறந்த, குறித்த எண்ணிக்கையான உறுபினர்களுடன் இயங்கிக் கொண்டிருந்தார்.
 
புலிகள், குறிப்பிட்ட கால எல்லைக்குள் அவர்களிடம் இருந்த ஆயுதங்களை, கையளித்து,களத்தினை விட்டகல வேண்டும் என எச்சரிக்க, அவரோ நேரே கிட்டரிடம் போய், ஆயுதங்ககளை இப்பவே தர தயார். ஆனால், நாம் அமைதியாக நாட்டினை விட்டு வெளியேறும் வரை, பிரச்னை தரா உத்தரவாதம் தர வேண்டும் என கோரி, பெற்று, சகல உறுப்பினர்களையும் வெளி அனுப்பி, தானும் பத்திரமாக வெளியேறினார்.
 
எந்த இயக்கத்துக்கும் அனுதாபம் இல்லையாயினும், தன்னை நம்பி வந்தவர்களை கரிசனையாக கவனித்து, பத்திரமாக அனுப்பி வைத்த அவர் எனது பார்வையில் ஒரு சிறப்பான தலைவர்.
  • கருத்துக்கள உறவுகள்

என்ன தான் இருந்தாலும் உமா மகேஸ்வரனும் ஒரு போராளியே.தமிழீழத்திற்காக  பல அர்பணிப்புகளை செய்தவரே. அவரிலும் எனக்கு தனி  மரியாதை உண்டு.  எதிர்கால தமிழரின் வரலாற்றில் ஒரு தமிழீழ போராளியாக  நினைவு கூற தக்கவரே. தமிழரின் தலையெழுத்து எமது போராளிகளிடமும் விதி விளையாடிவிட்டது. ஒரு போராளியின் படத்தை சிரிப்போம் சிறப்போம் பகுதிக்குள் இணைத்தது எனக்கு சரியாக படவில்லை.

அர்ச்சுன் அண்ணோய்,
 
புலிகளை எதிர்ப்பதால், அடுத்தவர்கள் நக்கல் அடிப்பார்கள் என்று,கள்ள படங்கள் என்று, சிரிப்போம் சிறப்போம் பகுதியில் போட்டு விட்டீர்கள்  போல தெரிகிறது.
 
களங்கள், காலங்கள் பலரை மாத்தினாலும், சிங்களத்துக்கு எதிராக துணிந்து எழுந்து நின்ற வகையில் அவரும் ஒரு மாவீரரே.... 

Edited by Nathamuni

  • தொடங்கியவர்

இந்த படங்களை பார்க்கும் போது அந்த கண்களில் ஒருவித குரூரம் தெரிகிறது.
தன்னிலை பிறழ்ந்த ஒரு மனோவிகாரம் கொண்ட மனிதனை பார்க்க முடிகிறது. 
இல்லாவிடின் தன்னை நம்பி போராட வந்த எத்தனையோ போராளிகளை இந்த
மனிதனால் எப்படி அவர்களின் ஆண்குறிகளை வெட்டி கொன்றிருக்க முடியும்.
 
தலைவர் அன்றைக்கே பாண்டி பஜாரில வைச்சு கதையை முடிச்சிருந்தால் எத்தனை 
உயிர்கள் தப்பியிருக்கும்? 

அன்று உமா பிரபாவை போட்டிருந்தால் அதை விட ஆயிரம் மடங்கு உயிர்கள் தப்பியிருக்கும் .

தயவு செய்து தலையங்கத்தை மாற்றி "ஒரு போராளியின் படங்கள்" , என்று வையுங்கள். அல்லது வேறு பொருத்தமான தலைப்பை வைக்கலாம்.

Edited by tulpen

பிரான்ஸ் வந்து பாரிசில் Gard-De-Nord ஸ்டேசனில் படுத்த கதை சொன்னார் .

Gare du Nord என்று வர வேண்டும்.

தலைப்பு எனக்கும் பிடிக்கவில்லை. தலைப்பை மாற்றினால் நல்லது.

அன்று உமா பிரபாவை போட்டிருந்தால் அதை விட ஆயிரம் மடங்கு உயிர்கள் தப்பியிருக்கும் .

செம காமடி அர்ஜூன். :D 

உமா பிரபாவை போட்டிருந்தால் இன்று ஒரு தமிழனும் இலங்கையில் மிஞ்சியிருக்கமாட்டான். 

தமிழர்களின் நல்ல காலம் உமாவுக்கு தலைவரை போல துப்பாக்கியால் துல்லியமாக குறி பார்த்து சுடும் வல்லமை இல்லாமையால் அது சாத்தியமில்லாமல் போய் விட்டது. :lol: 

தலைப்பை மாற்றி ஒரு தமிழீழ போராளிக்கு உரிய மரியாதையை வழங்கியமைக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

கள்ள பாஸ்போட்டுக்கான போட்டோக்கள் என்பதால் அர்ஜீன் அண்ணா அந்த தலைப்பை வைத்திருக்கலாம்.ஆனால் தலைப்பை மாத்தின நிர்வாகத்திற்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

அன்று உமா பிரபாவை போட்டிருந்தால் அதை விட ஆயிரம் மடங்கு உயிர்கள் தப்பியிருக்கும் .

முழு இலங்கையையும் பிடிக்கும் போது தமிழர்கள் இறப்பது குறைவாகும்  என்றொரு கமுக்கமான கணக்கு.

சொந்த இயக்கத்தையே ஆடு வெட்டின மாதிரி வெட்டின ஆட்கள் தமிழரை விட்டிருப்பினமோ?? 

அன்று உமா பிரபாவை போட்டிருந்தால் அதை விட ஆயிரம் மடங்கு உயிர்கள் தப்பியிருக்கும் .

சிலவேளை இவரது லாஜிக் இடிக்கும்.
 
இறுதிப் போரில் தமிழரை இரக்கமின்றி கொன்றவன் எதிரி... 
 
தமது போராளிகளையே காரணமே இன்றி கொன்றதால் தான், கேள்வி கேட்டு, கோபத்தில் இயக்கத்தினை விட்டு கனடா போனதாக அவரே எழுதி உள்ளார்.....  :o

செம காமடி அர்ஜூன். :D 

உமா பிரபாவை போட்டிருந்தால் இன்று ஒரு தமிழனும் இலங்கையில் மிஞ்சியிருக்கமாட்டான். 

தமிழர்களின் நல்ல காலம் உமாவுக்கு தலைவரை போல துப்பாக்கியால் துல்லியமாக குறி பார்த்து சுடும் வல்லமை இல்லாமையால் அது சாத்தியமில்லாமல் போய் விட்டது. :lol: 

உமாவை தலைவராக்கிய சுந்தரம் என்பவர் இருந்தார்... துல்லியமாக குறி பார்த்துச் சுடும் வல்லமை உள்ளவர் என அப்போது கதைத்தார்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய காலகட்டத்தில் பக்கத்தில் நிற்கும் ஒருவரை பயமாக இருக்கு வழித்துணைக்கு வரமுடியுமோ எனக்கேட்டாலே எதோ சொத்தை எழுதித்தரக்கேட்டதாக நினைச்சு விலத்திப்போயிடுவினம்.

அனால் அப்போதையகாலம் அப்படியானதல்ல, ஆயிரம் ஆயிரம் போராளிகளை ஆளுக்கு ஒரு முகாமிலவைத்து நிர்வாகம்பண்ணி பயிற்சி கொடுத்து சாப்பாடுபோட்டு இவையெல்லாம் சாமானியமான விடையங்கள் இல்லை.

தலைவன் சொன்னத தொண்டன் கேட்கவேணும் இல்லாட்டில் போராளியும் புண்ணாக்கும் போட்டுத்தள்ளிப்போட்டு பாக்கிறவேலையை மிஞ்சிநிக்கிற ஆக்களை வைத்துப் பாக்கவெண்டியதுதான்.

இந்தவிடையத்தில் பாக்கும்போது உமா செய்த உள்வீட்டுக்கொலைகளின் நியாயம் இப்போது விளங்கும். புலிகள் சிலவேளைகளில் செய்யத்தவறியதால் வந்த பின்விளைவுகளது பரிமாணம் தெரியவரும்போது இவைகளை எல்லாம் காலப்போக்கில் ஏற்றுக்கொள்ளவேண்டியே தமிழினம் நிர்பந்தத்துக்குள் தள்ளப்பட்டுளளது.

ஆனால் என்ன தலைவனாகவும் தளபதியாகவும் இருப்பதற்கான எல்லாவித தகுதிகள் இருந்தும் கேட்பார் சொல் கேட்டதால் கொழும்பின் தெருவோரத்தில் ..........

மனம் கொஞ்சம் சலனப்படுகின்றது.

சிறி அண்ணரதும் உமாவினதும் மரணம் எப்போதும் தவிர்த்திருக்கக்கூடியது. முன்னது அவராகவே எதிரிகளிடம் மாட்டியது அன்றேல் உள்வீட்டுக்கொலை(இந்திய உளவுத்துறையை முற்றிலுமாக நம்பி அவர்களது சில வேண்டுகோள்களை உதாசீனப்படுத்தி அதன்மூலம் தனது உயிருக்கு எந்தவிதமான பிரச்சனையும் வராது என அவதானமில்லாது இருந்ததே உமாவின் மரணம் இலகுவாகச் செயற்படுத்தப்பட்டது). இரண்டாவது திருநாவுக்கரசு சந்திரசேகர் எனும் பொபியினது செயற்பாடுகளின் உச்சமாக ஒரு அற்புதமான போரளியாகிய தாசை இழந்ததால் வந்தவினை.

Edited by Elugnajiru

தலைவன் சொன்னத தொண்டன் கேட்கவேணும் இல்லாட்டில் போராளியும் புண்ணாக்கும் போட்டுத்தள்ளிப்போட்டு பாக்கிறவேலையை மிஞ்சிநிக்கிற ஆக்களை வைத்துப் பாக்கவெண்டியதுதான்.

இந்தவிடையத்தில் பாக்கும்போது உமா செய்த உள்வீட்டுக்கொலைகளின் நியாயம் இப்போது விளங்கும். புலிகள் சிலவேளைகளில் செய்யத்தவறியதால் வந்த பின்விளைவுகளது பரிமாணம் தெரியவரும்போது இவைகளை எல்லாம் காலப்போக்கில் ஏற்றுக்கொள்ளவேண்டியே தமிழினம் நிர்பந்தத்துக்குள் தள்ளப்பட்டுளளது

அர்ஜுன், தான் தலிவரிடம் கொலைகள் பத்தி கேள்விகள் கேட்டதாக எழுதி இருந்தார். கேட்டுப் போட்டு, மண்டைக்குள்ள, போடுப்படாம , பத்திரமா வெளிய வர முடிந்து இருந்த படியால்.  புளொட் ஒரு புண்ணாக்கு இயக்கமா போட்டுது என்பது உறுதிப் படுகின்றது.  :D
 
சரியோ, பிழையோ, கண்ட, கண்ட ஆக்கள், அதுவும் லண்டனில இருந்து வந்த ஆக்கள் எல்லாம் விசர் கேள்விகள் கேட்டு விட்டு பிளேன் ஏறி பத்திரம்மா வர முடியுமெண்டால், தலைவர் உமா பலவீனம் தான். (உந்தாள் உங்க எழுதிற சில விசயங்களை பார்த்தால், தலைமைக்கு கொதி வாற மாதிரி கேட்டிருக்கும்).  :o
 
வரேக்க உந்த படங்களையும் சுட்டுக் கொண்டு வேற வந்திருக்கிறார்.
 
புலித் தலைமை அப்படி வீக்காக இருந்த மாதிரி தெரிய இல்லை. அங்க இருந்து இருந்தால், இப்ப அண்ண மாவீரர் தான். :lol:  :icon_idea:
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கள்ள பாஸ்போட்டுக்கான போட்டோக்கள் என்பதால் அர்ஜீன் அண்ணா அந்த தலைப்பை வைத்திருக்கலாம்.ஆனால் தலைப்பை மாத்தின நிர்வாகத்திற்கு நன்றி

கதையை பாத்தால் உங்கை எல்லாரும் தலையங்கத்துக்கு ஏற்றமாதிரி எழுதீனம் எண்ட மாதிரியெல்லோ கிடக்கு.......
இப்பவெல்லாம் தலையங்கம் தன்ரை பாட்டிலை இருக்கும்....
 
ஆனால் கதை காங்கேசன் துறையிலை தொடங்கி தூத்துக்குடியாலை பம்பாய் போய் பிறகு பாக்கிஸ்தானுக்காலை ஈரானுக்கு போய் அங்கை பிரச்சனைப்பட்டுக்கொண்டு மலேசியாவுக்கு வந்து...மலேசியாவாலை ரஷ்யா வந்து......அங்கை நாலு பெட்டையளுட்டை அடிவாங்கி போலந்துக்கு வந்து.......அப்பிடியே ஜேர்மனிக்காலை பிரான்ஸ்போய்....அதுக்காலை லண்டன் வந்து....அங்கையிருந்து மெக்சிக்கோ போய்......பொய்...போய்....அமெரிக்காவிலை லாண்ட் பண்ணி ரெஸ்ற் எடுத்து....கன்னடா போய் அலஸ்காவிலை கதை முடியும். :lol:
 
ஆனால் தலையங்கம் அப்பிடியே இருக்கும். :D

 பொபியினது செயற்பாடுகளின் உச்சமாக ஒரு அற்புதமான போரளியாகிய தாசை இழந்ததால் வந்தவினை.

பொபியும் தாசும் டெலோ அல்லவா ? அதற்குமுன் புளொட்டிலா இருந்தார்கள் ? 
 
ஜே.வி.பி இன் 72 ஆண்டு தோல்விக்குப் பின்னும் உமா எப்படி கெரில்லா உத்திகளை விட்டு மரபு வழி தாக்குதலில் நம்பிக்கை வைத்தார் ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.