Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்றமையை அர்த்தமற்ற வகையில விமர்சிக்கக் கூடாது -

Featured Replies

sampanthan-1.jpg
 
சிரேஷ்ட அர­சி­யல்­வா­தி­யா­கவும் ராஜ­தந்­திர அர­சியல் வல்­லு­ன­ரா­கவும் விளங்கும் இரா. சம்­பந்தன் சுதந்­திர தின வைப­வத்தில் கலந்து கொண்­டதை அர்த்­த­மற்ற முறையில் விமர்­சிப்­பதை தமிழ் தலை­வர்கள் தவித்­துக்­கொள்ள வேண்டும் என்று மூதூர் சிவில் அமைப்­பினரும் திரு­மலை மாவட்ட சமூக அமைப்­பினரும் கூட்­டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
இது குறித்து மூதூர் சிவில் அமைப்பின் தலை­வரும் சமூக சேவை­யா­ள­ரு­மான கந்­தையா நடே­ச­பிள்ளை கையெ­ழுத்­திட்டு வெளி­யிட்டுள்ள அறிக்­கையிலேயே இவ்வாறு வலியுறுத்தப்பட் டுள்ளது.
 
அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது;
 
தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான எம்.ஏ. சுமந்­திரன் ஆகியோர் 67வது சுதந்­திர தின நிகழ்வில் கலந்து கொண்­டது தொடர்­பான அதி­ருப்­தியை இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் மூத்த துணைத்­த­லைவர் பேரா­சி­ரியர் சிற்­றம்­பலம் வெளி­யிட்­டுள்ளார். அவர் கட்­சியின் மத்­திய குழு உட­ன­டி­யாக கூட்­டப்­பட்டு சுதந்­திர தின நிகழ்வில் கலந்து கொண்­டமை தொடர்பில் விவா­திக்க வேண்­டு­மென ஊட­கங்­க­ளுக்கு தெரி­வித்­துள்ளார்.
 
கட்­சியின் கூட்டு பொறுப்பை மீறி சிற்­றம்­பலம் கருத்து தெரி­வித்­தி­ருப்­பது அர­சியல் நாக­ரீ­க­மற்ற செய­லாகும். புதிய அரசின் 100நாள் வேலைத்­திட்­டத்தில் தமிழ் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வு குறித்து ஏதும் தெரி­விக்­கப்­ப­டாத சூழலில் இவ்­வி­ரு­வரும் சுதந்­திர தின நிகழ்வில் கலந்து கொண்­டது தவறு என சிற்­றம்­பலம் கூறி­யி­ருக்கும் விமர்­ச­ன­மா­னது அர்த்­த­மற்­றதும் அர­சியல் பாடம் புரி­யாத செய்­தி­யு­மாகும். தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்­தனை பொறுத்­த­வரை தீர்க்­க­மான ஞானமும் சாணக்­கி­யமும் நிறைந்த ஒருவர் என்­பதை எல்­லோரும் ஏற்­றுக்­கொள்ள வேண்டும். அவ­ரது தீர்­மா­னங்­களும் முடி­வு­களும் பிரித்­தா­னிய யாப்பில் கூறப்­பட்­டது போல் மன்னன் தவறு செய்­வ­தில்­லை­யென்­ப­தற்கு ஒத்­த­தாகும்.
 
புதிய ஆட்சி மாற்­றத்தின் மூல கர்த்­தா­வாக விளங்­கி­யவர் சம்­பந்தன். அவர் மீது வடக்கு, கிழக்கு மக்கள் கொண்­டி­ருக்­கின்ற கன­தி­யான நம்­பிக்­கைகள் எப்­போதும் வீண்­போக முடி­யாது. ஆட்சி மாற்­றத்­திற்­காக தமிழ் மக்­களை வாக்­க­ளிக்க சொன்­ன­போது காட்­டாத எதிர்ப்பை சிற்­றம்­பலம் போன்ற சிலர் ஏன் இப்போது காட்ட முற்­ப­டு­கின்­றார்கள். என்­பது புரி­யாத விட­ய­மா­க­வே­யுள்­ளது. விடு­தலை போராட்ட காலத்­திலும் இத்­த­கைய அர்த்­த­மற்ற விமர்­ச­னங்­க­ளா­லேயே எல்­லா­வற்­றையும் இழந்து நடுத்­தெ­ரு­வுக்கு வந்தோம். பாரா­ளு­மன்ற நடை­மு­றை­க­ளையும் அர­சி­யல்­யாப்பு சத்­தி­யங்­க­ளையும் பின்­பற்றும் நாம் ஏன் சுதந்­திர தின நிகழ்வில் கலந்து கொள்ள கூடாது என்ற விடயம் புரி­யாத புதி­ரா­க­வே­யுள்­ளது.
 
66 வருட அர­சியல் போக்கில் எதிர்ப்பு அர­சி­யல்பால் கொண்ட நம்­பிக்­கைகள் எமக்கு எந்த பய­னையும் தேடித்­த­ர­வில்லை. அமைச்­சுப்­ப­த­வி­க­ளுக்கோ அதி­கா­ரங்­க­ளுக்கோ சம்பந்தன் ஆசைப்பட்டவர் கிடையாது. அவர் எச்சந்தர்ப்பத்திலும் தமிழினத்தை காட்டிக்கொடுத்த புல்லுருவியும் அல்ல. தமிழ் மக்களின் நீடித்த நிலையான தீர்வுக்காக தியாகங்களை புரிந்து வரும் சம்பந்தனை கொச்சைப்படுத்துவதை தவிர்த்துக்கொள்ள வேண்டுமென மேலும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
  • கருத்துக்கள உறவுகள்
அப்ப தமிழரசுக் கட்சியையும் உடைச்சிட்டாங்களோ...................!
 
யாரு? சிங்களவரு...
 
சீச்சீ கிந்தியரு....
 
புலம்ஸ்தான் இதுக்கெல்லாம்கரணியம். இந்தப்புலம்ஸ் பொத்திக்கொண்டிருந்தா வடகிழக்கிலை தேனும் பாலும் ஓடுமாமே. 

கோசன் சே எங்கே சென்று ஒழிந்து விட்டார் . 

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர், விடுதலைப்புலிகளின் தலைவரை விமர்சிக்கலாம் என்றால் ,மற்றவர்கள் சம்பந்தரை விமர்சிப்பத்தில் தப்பில்லை ....

  • கருத்துக்கள உறவுகள்

எந்த கொம்பனாக இருந்தாலும் விமர்சனங்களை சந்தித்தீரவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவின் சுதந்திர நாள் நிகழ்வில் பங்கேற்றது ஏன்? – சம்பந்தன் விளக்கம் FEB 05, 2015 | 0:08by புதினப்பணிமனைin செய்திகள்

sampanthan-300x200.jpgகொழும்பில் நேற்று நடைபெற்ற சிறிலங்காவின் 67வது சுதந்திர நாள் நிகழ்வில் தாம் பங்கேற்றதை நியாயப்படுத்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கருத்து வெளியிட்டுள்ளார்.

கடந்த 43 ஆண்டுகளுக்குப் பின்னர், சிறிலங்காவின் சுதந்திர நாள் நிகழ்வில் பங்கேற்றுள்ள முதல் தமிழ்த் தேசிய அரசியல் தலைவரான இரா.சம்பந்தன் தான் எதற்காக இந்த நிகழ்வில் பங்கெடுத்தேன் என்பதை பிபிசிக்கு விபரித்துள்ளார்.

இந்த விழாவில் பங்கேற்பது குறித்து கவனமாக சிந்தித்த பின்னரே தான் முடிவெடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

“நாட்டில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம், தமிழ் மக்களின் எதிர்காலம், புதிய ஆட்சியாளர்கள் மீதுள்ள நம்பிக்கை ஆகியவற்றின் காரணமாக, நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் எனக்கு விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று சுதந்திர நாள் விழாவில் பங்கேற்பது என்று முடிவெடுத்தேன்.

அதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளேயே இது குறித்து மாற்றுக் கருத்துக்கள் இருந்தன.

எனினும் இது தொடர்பாக, மூத்த தலைவர்கள் பலருடனும் கலந்துரையாடினேன். அவர்கள் அனைவரும் எனது முடிவை ஏற்றுக் கொண்டனர் என்று கூறமாட்டேன்.

கட்­சியின் கூட்டு பொறுப்பை மீறி சிற்­றம்­பலம் கருத்து தெரி­வித்­தி­ருப்­பது அர­சியல் நாக­ரீ­க­மற்ற செய­லாகும். என்றால்....!!
"தேசியக் கூட்டமைப்புக்குள்ளேயே இது குறித்து மாற்றுக் கருத்துக்கள் இருந்தன. அவர்கள் அனைவரும் எனது முடிவை ஏற்றுக் கொண்டனர் என்று கூறமாட்டேன்." என்று கூறிவிட்டு விழாவில் பங்கேற்றது எந்த நாகரீகத்தில் அடங்குகிறது...????  :o
 
எந்த கொம்பனாக இருந்தாலும் விமர்சனங்களை சந்தித்தீரவேண்டும்.

பொதுவாழ்க்கை மற்றும் அரசியலிலும் ஈடுபட்டோரும் என்று சொல்லுங்கள், எல்லாரும் விமர்சனங்களை ஏற்கவேண்டும் என்றோ சந்திக்கவேண்டும் என்றோ ஒரு கட்டுப்படும் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

எந்த கொம்பனாக இருந்தாலும் விமர்சனங்களை சந்தித்தீரவேண்டும்.

உண்மை தான் அது புலிகளாக இருந்தாலும் சரி,தலைவராக இருந்தாலும் சரி அந்த தலைவரைப் படைத்த கடவுளாக இருந்தாலும் சரி விமர்சனங்களை சந்தித்தே ஆக வேண்டும்

தலைவர் பிரேமதாசாட ஆயுதம் வாங்கினா..ராஜபக்சட்ட காசு வாங்கிட்டு தேர்தலை புறக்கணிச்சா அது ராச தந்திரம் சம்பந்தர் சுதந்திர தின விழாவுக்கு சென்றால் அது படு பயங்கர துரோகம். 

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் பிரேமதாசாட ஆயுதம் வாங்கினா..ராஜபக்சட்ட காசு வாங்கிட்டு தேர்தலை புறக்கணிச்சா அது ராச தந்திரம் சம்பந்தர் சுதந்திர தின விழாவுக்கு சென்றால் அது படு பயங்கர துரோகம்.

ஆயுதம் வாங்கிறதென்டால் கடையில கத்தரிக்காய் வாங்கிற மாதிரியில்லை. ஓரு முகாமை தாக்கி ஆயுதம் எடுப்பது என்பது எத்தனை இழப்புகள் வேதனைகள் செலவுகள். பிரேமதாசாவுடன் பேச்சுவார்த்தை தொடங்கிய போது இருந்த நிலமை உள்ளுக்கு இருந்தவர்களுக்கு தெரியும். பாலா அண்ணை இந்த பேச்சுவார்த்தைக்கு போக முதல் சொன்னது " நான் போய் காம் அடிசிட்டு என்ன கொண்டு வாறன்" என்டு.

இது தாங்க அரசியல். எப்ப பாரத்தாலும் புலியை திட்டி சம்பந்தர் சுமந்திரனுக்கு நீங்க வக்காலத்துவாங்குவது போல தான். இலட்சியத்திற்காக  உயிரை கொடுத்த தலைவரை காசுக்கு மாரடிக்கிற சுமந்திரனோட ஒப்பிடீங்க பாருங்க. இதுவும் அரசியல் தான்.

இந்தளவுக்கு  கருத்து வறட்சியும்

புலிகள் மீதான பார்வையும்  இருக்கும்  என எதிர்பார்க்கவில்லை...

நன்றி.

இன்று

8ந்திகதி மாசி  மாசம் 2015.....

இன்னும் எத்தனை நாளைக்கு இதையே....

தொடருங்கோ :(  :(  :( 

சம்பந்தர் சுதந்திர தின விழாவில் கட்சியில் உள்ளவர்களின் எதிர்ப்பை தாண்டி சுதந்திர தின விழாவிற்கு சென்றது எவ்விதத்தில் ஜனநாயகத்தில் அதான்.அங்கும்? கட்சி தலைவருக்கு கட்சியின் உறுப்பினர்களின் விருப்புக்க்கு மாறாக செயற்படுவதில் என்னத்தை சாதித்து விடப்போகிறார்? அல்லது முஸ்லிம் அரசியல் தலைவர்களுடன் பந்தயத்துக்கு ஓடுகிறாரா?
 
புலிகள் ஒன்றை சாதிக்க என்பது சாதாரண பொதுமகனுக்கு தெரிந்தது தான். ஆனால் சம்பந்தர் சிங்களவருக்கு வால் பிடித்து வேணுமானால் தான் நல்ல பெயர் எடுக்கலாம்? ஒருக்கால் சிங்களவரை பிடித்து வைத்துள்ள இளைஞர்களை விடச்சொல்லுங்கள் பார்க்கலாம் அல்லது உயர்பாதுகாப்பு வலயத்தில் மக்களை குடியமர்த்த சொல்லுங்கள் பார்க்கலாம். 

தேர்த்தல் வருவதால் தலைவற்ற படங்களை தூசி தட்டத் தொடங்கி இருக்கினமாம் கொஞ்சப்பேர்.. யாரென்று சொல்ல தேவை இல்லை என நினைக்கிறேன். :)

இப்ப சம்பந்தருக்கோ கூட்டமைப்புக்கோ வேற என்ன தெரிவு இருக்கு? முறுக்கி கொண்டு நின்டால் அங்கிருக்கும் மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படப்போவது இல்லை. ஒரு பக்கத்தால ஐ நா போர்க்குற்ற விசாரணையை உடனே நடத்த கோரிக்கை வைப்பதோட மற்றப்பக்கத்தால ஒரு மிதவாத அரசுடன் நாட்டில் இணைந்து செயற்படுவது தான் தற்போதய காலகட்டத்தின் தேவை. 

இது தாங்க அரசியல். எப்ப பாரத்தாலும் புலியை திட்டி சம்பந்தர் சுமந்திரனுக்கு நீங்க வக்காலத்துவாங்குவது போல தான். இலட்சியத்திற்காக  உயிரை கொடுத்த தலைவரை காசுக்கு மாரடிக்கிற சுமந்திரனோட ஒப்பிடீங்க பாருங்க. இதுவும் அரசியல் தான்.

லட்சியம் அனைவருக்கும் பொது ஐயா. புலிக்கொடி தூக்கினா மட்டும் தான் லட்சியம் இல்லாட்டி அது காசுக்கு மாறடிப்பது என்பது தான் உங்கட அரசியல் என்டா நான் ஒன்டும் செய்ய முடியாது. 

இந்தளவுக்கு  கருத்து வறட்சியும்

புலிகள் மீதான பார்வையும்  இருக்கும்  என எதிர்பார்க்கவில்லை...

நன்றி.

மன்னிக்கவும். என்னால் பஜனை மட்டும் பாடிக்கொண்டு இருக்க முடியாது. தாயகத்தில் தற்போது வசிக்கும் மக்களுக்கு எது நன்மை பயக்குமோ எவர் அதை செய்வார்களோ அவர்களுக்கே எனது ஆதரவு. 

சம்பந்தர் சுதந்திர தின விழாவில் கட்சியில் உள்ளவர்களின் எதிர்ப்பை தாண்டி சுதந்திர தின விழாவிற்கு சென்றது எவ்விதத்தில் ஜனநாயகத்தில் அதான்.அங்கும்? கட்சி தலைவருக்கு கட்சியின் உறுப்பினர்களின் விருப்புக்க்கு மாறாக செயற்படுவதில் என்னத்தை சாதித்து விடப்போகிறார்? அல்லது முஸ்லிம் அரசியல் தலைவர்களுடன் பந்தயத்துக்கு ஓடுகிறாரா?
 
புலிகள் ஒன்றை சாதிக்க என்பது சாதாரண பொதுமகனுக்கு தெரிந்தது தான். ஆனால் சம்பந்தர் சிங்களவருக்கு வால் பிடித்து வேணுமானால் தான் நல்ல பெயர் எடுக்கலாம்? ஒருக்கால் சிங்களவரை பிடித்து வைத்துள்ள இளைஞர்களை விடச்சொல்லுங்கள் பார்க்கலாம் அல்லது உயர்பாதுகாப்பு வலயத்தில் மக்களை குடியமர்த்த சொல்லுங்கள் பார்க்கலாம். 

தேர்த்தல் வருவதால் தலைவற்ற படங்களை தூசி தட்டத் தொடங்கி இருக்கினமாம் கொஞ்சப்பேர்.. யாரென்று சொல்ல தேவை இல்லை என நினைக்கிறேன். :)

சரி இப்ப சம்பந்தரும் கூட்டமைப்பும் என்ன செய்யவேணும் என்று சொல்கிறீர்கள்? 

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும். என்னால் பஜனை மட்டும் பாடிக்கொண்டு இருக்க முடியாது. தாயகத்தில் தற்போது வசிக்கும் மக்களுக்கு எது நன்மை பயக்குமோ எவர் அதை செய்வார்களோ அவர்களுக்கே எனது ஆதரவு. 

அதாவது

60 வருட தமிழரின் நிலைப்பாடுகள் தப்பு

சம்பந்தரின்

எதேச்சதிகாரமான இந்த முடிவு சரி

இதை தாயக மக்கள் ஆதரிக்கிறார்கள்..

அப்படியா??

அதாவது

60 வருட தமிழரின் நிலைப்பாடுகள் தப்பு

சம்பந்தரின்

எதேச்சதிகாரமான இந்த முடிவு சரி

இதை தாயக மக்கள் ஆதரிக்கிறார்கள்..

அப்படியா??

60 வருட நிலைப்பாடு தவறு என்று சம்பந்தரும் கூறவில்லை இங்கே நானும் கூறவில்லை. சம்பந்தர் ரணிலோட சேர்ந்து சிங்க கொடி ஆட்டின பிறகும் தாயக மக்கள் ஆதரித்தார்கள் இப்பவும் ஆதரிப்பார்கள் காரணம் அவர்களின் தேவையும் தேடலும் உந்த உப்பு சப்பில்லாத விடயங்களை விட பெரிது. தேர்தல்களில் கூட்டமைப்புக்கு கிடைக்கும் ஆதரவு சிங்கள ஆட்சியாளர்களுக்கு மட்டுமல்ல வெளிநாட்டிலிருந்து துள்ளி குதிக்கிற புலம்பெயர் தேசியவாதிகளுக்கும் சேர்த்து அங்கிருக்கும் மக்கள் தரும் செய்தி. 
புலிகளின் காலம் முடிவடைந்த்து விட்டது. பேரம் பேசும் வல்லமையும் தற்போழுது இல்லை. சில நெழிவு சுழிவுகளை கடந்தால் தான் நாம் எதிர்பார்ப்பது கிடைக்கும். 

மிகவும் பொறுப்பற்ற

எந்தவித ஆதாரமற்ற கருத்தும் சாடலும்...

இதோ ஆதாரம்

தாயகத்திலிருந்து

அதுவும் போரின் இறுதிவரை போரின் வலியை அனுபவித்த புதுக்குடியிருப்பிலிருந்து....

தமிழினத்தின் விடுதலைப்போராட்டப் பயணத்தினை இன்றுவரை சிதைத்துவரும் தமிழரசுக்கட்சி தமது ஊரில் இளைஞர் அணியை உருவாக்குவதற்கோஇ கட்சிக்கிளை அமைப்பதற்கோ அனுமதிக்கக் கூடாதென புதுக்குடியிருப்பு இளைஞர்கள் அழைப்புவிடுத்துள்ளனர்.

http://www.yarl.com/forum3/index.php?/topic/153433-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D/

Edited by விசுகு

60 வருட நிலைப்பாடு தவறு என்று சம்பந்தரும் கூறவில்லை இங்கே நானும் கூறவில்லை. சம்பந்தர் ரணிலோட சேர்ந்து சிங்க கொடி ஆட்டின பிறகும் தாயக மக்கள் ஆதரித்தார்கள் இப்பவும் ஆதரிப்பார்கள் காரணம் அவர்களின் தேவையும் தேடலும் உந்த உப்பு சப்பில்லாத விடயங்களை விட பெரிது. தேர்தல்களில் கூட்டமைப்புக்கு கிடைக்கும் ஆதரவு சிங்கள ஆட்சியாளர்களுக்கு மட்டுமல்ல வெளிநாட்டிலிருந்து துள்ளி குதிக்கிற புலம்பெயர் தேசியவாதிகளுக்கும் சேர்த்து அங்கிருக்கும் மக்கள் தரும் செய்தி.

புலிகளின் காலம் முடிவடைந்த்து விட்டது. பேரம் பேசும் வல்லமையும் தற்போழுது இல்லை. சில நெழிவு சுழிவுகளை கடந்தால் தான் நாம் எதிர்பார்ப்பது கிடைக்கும்.

அப்ப தேர்தல் காலத்தில் மட்டும் தமிழரசே தேசியமே, தன்னாட்சியே என று பாட்டு பாடியதேனோ? அடுத்த தேர்தல்ல வெளிப்படையா சம்ஸ். சும்ஸ் சொல்ல்னும் நாங்க அவங்க சொல்லுற எல்லாத்திற்கும் இணங்கி போனால். அவனால் எங்கள கற்பழிக்க முடியாது. ஆகவே நாங்க விபசாரியாக மாறி அவனிட்ட தட்டி சுத்தப்போறம். நீங்களும் அப்படியே செய்யுங்கள். இப்படி வெளிப்படையா வாக்கு கேட்க தயாரா?

  • கருத்துக்கள உறவுகள்

இந்தளவுக்கு கருத்து வறட்சியும்

புலிகள் மீதான பார்வையும் இருக்கும் என எதிர்பார்க்கவில்லை...

நன்றி.

இன்று

8ந்திகதி மாசி மாசம் 2015.....

இன்னும் எத்தனை நாளைக்கு இதையே....

தொடருங்கோ ::(:(

முதலில் நீங்களும்,உங்களைப் போன்றவர்களும் தொடர்ந்து அரைச்சதையே திரும்ப அரைக்காமல் எப்ப நிப்பாட்டுகிறீர்களோ அப்ப நானும் நிப்பாட்டுகிறேன்...நன்றி வணக்கம்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அறிக்கை தயாரித்தவர்கள்.. சம்பூரில் இருந்து அண்மையில்.. மைத்திரி அரசால் விரட்டி அடிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் ஏன் அறிக்கை விடல்ல. சம்பந்தனுக்கு சார்ப்பா எல்லாம் செய்யுற சிங்களவனைக் கொண்டு சம்பந்தன் தன் தொகுதிசார் மக்களை மீளக் குடியேற்றதை விட்டிட்டு தற்காலிகமா இருந்த மக்களையும் அடிச்சு விரட்ட..சம்பந்தன் போய் அதே அடிச்சு விரட்டும் சிங்கள அரசின் படைகளின் அணிவகுப்பை ஏற்பது எந்த வகையில் நியாயம்..?! :icon_idea::rolleyes::(

மிகவும் பொறுப்பற்ற

எந்தவித ஆதாரமற்ற கருத்தும் சாடலும்...

இதோ ஆதாரம்

தாயகத்திலிருந்து

அதுவும் போரின் இறுதிவரை போரின் வலியை அனுபவித்த புதுக்குடியிருப்பிலிருந்து....

தமிழினத்தின் விடுதலைப்போராட்டப் பயணத்தினை இன்றுவரை சிதைத்துவரும் தமிழரசுக்கட்சி தமது ஊரில் இளைஞர் அணியை உருவாக்குவதற்கோஇ கட்சிக்கிளை அமைப்பதற்கோ அனுமதிக்கக் கூடாதென புதுக்குடியிருப்பு இளைஞர்கள் அழைப்புவிடுத்துள்ளனர்.

தமிழினத்தின் விடுதலைப்போராட்டப் பயணத்தினை இன்றுவரை சிதைத்துவரும் தமிழரசுக்கட்சி தமது ஊரில் இளைஞர் அணியை உருவாக்குவதற்கோஇ கட்சிக்கிளை அமைப்பதற்கோ அனுமதிக்கக் கூடாதென புதுக்குடியிருப்பு இளைஞர்கள் அழைப்புவிடுத்துள்ளனர்.

இது தொடர்பில் அவர்களால் சமூக வலைத்தளங்களினூடாக பகிரப்பட்டுள்ள தகவலில் நாளை புதுக்குடியிருப்பில் தமிழரசுக்கட்சி இளைஞர் அணி உருவாக்குவதற்கான கூட்டம் நடைபெறப்போவதாக தெரியவருகின்றது. மாவை சேனாதிராஜா வரவுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது.

ஆயுத கலாசாரம் தவறானது என்று திரும்பத் திரும்பக் கூறிவரும் தமிழரசுக்கட்சி புதுக்குடியிருப்பில் இளைஞர்களை திரட்டி கட்சிக்கு ஆட்பிடிப்பது விடுதலைப்போராட்டத்துக்கு எதிரான நடவடிக்கை. எம்மவர்களும் எமது ஊர் இளைஞர்களும் புரிந்துகொள்ளவேண்டும். புதுக்குடியிருப்பு என்ற மண்ணின் சிறப்பு ஈழவிடுதலைப் போராட்டத்தில் உலகத்தால் திரும்பிப் பார்க்கவைத்ததை எவரும் மறந்துவிட முடியாது. தேர்தல் காலத்தில் மட்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்றும் போராட்டம்இ தியாகம்இ மாவீரர் என்றும் கூறி வாக்குச் சேர்க்கும் கூட்டம் இன்று எமது மண்ணை அசிங்கப்படுத்த முனைகிறார்கள்.

நாளை கட்சிக்கு ஆட்சேர்க்கும் நடவடிக்கையில் மஹிந்தவின் கையாளாக இருந்த ஒருவர் உள்வாங்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.

இதேவேளை தமிழ் மக்கள் வழங்கிய வாக்குகளை வைத்துக்கொண்டு தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கையினையே தமிழரசுக்கட்சி முன்னெடுத்துவருகிறது. அண்மையில் அமெரிக்காவின் பிரதிநிதி இலங்கை வந்திருந்த போது தமிழரசுக்கட்சியினர் போர்க்குற்ற விசாரணை தொடர்பிலான அறிக்கையினை பின்போடுமாறு வலியுறுத்தியதாக நம்பகரமாக தெரியவருகிறது.

சம்பந்தனும் சுமந்திரனும் சிங்கள இனவெறியர்களின் சுதந்திர நாளில் பங்கெடுத்திருந்தமையும் அதனை நியாயப்படுத்தும் வகையில் வவுனியாவில் மாவை சேனாதிராஜா உரையாற்றியிருந்தமையும் மிக கேவலமான விடயங்களாகும். இதனிடையே சுமந்திரன் எதிர்காலத்தில் தேசிய அரசில் அமைச்சரவாதற்கான முனைப்பில் ஈடுபட்டிருக்கிறார். தற்போது புறக்கணிப்பதாக அறிவித்தது மக்களை ஏமாற்றி வாக்கு சேகரிக்கவே என்பது தெரியவந்திருக்கிறது. அதன் பின்னர் நாடாளுமன்ற உறுப்புரிமையினை பெற்றுக்கொண்டால் அமைச்சராகும் அவர்கள் எமது இனத்திற்கான தீர்வினை இடைமறிப்பார்கள் என்பதை கடந்த காலச் செயற்பாடுகள் எடுத்து விளக்கி நிற்கின்றன.

இதனிடையே சுமந்திரன் சில நாட்களுக்குள் ஜெனீவா பயணமாகியுள்ளதாக தெரிகிறது. மார்ச் மாத அறிக்கையை இல்லாமல் தாமதப்படுத்துவதே அதன் நோக்கம். இந்த நிலையில் இவ்வாறான மிகக் கேவலமான தமிழரசுக்கட்சி எமது ஊரில் கட்சி அரசியல் செய்வதற்கும் கட்சி வளர்ப்பதற்கும் எம்மவர்கள் துணை போகக்கூடாது. முடிந்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற ஒன்றுக்கு நாங்கள் ஆதரவு என்பதை நாங்கள் வெளிப்படுத்தவேண்டும்.

எமது மக்களின் உணர்வுகள் அர்ப்பணிப்புக்கள் போலிகள் அல்ல. அவர்கள் உணர்வாளர்கள். ஈழவிடுதலைக்காக அளப்பரிய தியாகங்களைப் புரிந்தவர்கள். இவ்வாறான நிலையில் நாளை மாவைக்கும் அவருடைய தமிழரசுக்கட்சிக்குழுவுக்கும் சரியான பதில் புதுக்குடியிருப்பு மண்ணில் கிடைக்க வேண்டுமென அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தமிழரசுக்கட்சியின் இளைஞரணி செயலாளர் சிவகரனுடன் இது தொடர்பில் வினவிய போது அவ்வாறான இளைஞரணி உருவாக்கம் பற்றி தமக்கு தெரிவிக்கப்படவில்லையென தெரிவித்தார்.

http://www.pathivu.c...ticle_full.aspx

யாரிந்த இளைஞர்கள்? எந்த சமூக வலைத்தளத்தினூடாக தகவல் பரப்பினார்கள்? பதிவு இணையத்தளத்தை விட வேறு ஏதாவது உருப்படியான தளத்திலோ பத்திரிகையிலோ இந்த செய்தி வந்திருக்கிறதா? நாளைக்கு நான் ஒட்டுசுட்டான் இளைஞர்கள் மகிந்தவுக்கு கட்டவுட் வைச்சு பாலாபிசேகம் செய்தார்கள் என்டு சொன்னால் அதையும் நம்புவீங்களா?  எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இல்லாமல் நம்பகரமாக தெரிய வருது நம்பிக்கையில்லாமல் தெரியவருது என்று எழுதப்பட்டிருக்கிற இது போன்ற செய்தி தளங்களை வாசிச்சா உங்களுக்கு பிரசர் தான் கூடும். காரணம் இவர்கள் உங்களைப்போன்றவர்களை உணர்ச்சிப்பிழம்பாய் வைத்திருப்பதற்காக மட்டும் இணையம் நடத்துபவர்கள். 2009 வரை ஒரு பிரச்சனையுமில்லாமல் செத்த ஆமின்ட படத்தையும் ஆயுத படங்களையும் போட்டு உசுப்பேத்தியவர்கள் இப்ப செய்தி வரட்சி காரணமாக தங்கட கற்பனையில் வரும் கதைகளை செய்திகளா போடுகிறார்கள். நீங்களும் இதுகளை நம்பி டென்சன் ஆகிறீங்கள். 

சரி

அது பதிவு

அப்போ இது....??

இவருமா??

http://www.yarl.com/forum3/index.php?/topic/153494-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A/

கண்ணை  மூடிக்கொண்டு வகுப்பெடுப்பதென்றால்

எனக்கு வேற வேலை இருக்கு...

நன்றி.

முதலில் நீங்களும்,உங்களைப் போன்றவர்களும் தொடர்ந்து அரைச்சதையே திரும்ப அரைக்காமல் எப்ப நிப்பாட்டுகிறீர்களோ அப்ப நானும் நிப்பாட்டுகிறேன்...நன்றி வணக்கம்

எங்கே அரைத்துள்ளேன் சொல்லுங்கள்....

இன்று நடக்கும் அரசியல் முடிவுகள் சம்பந்தமாக கதைக்கும் இதற்குள் 

புலிகள் பற்றியும் அதன் தலைவர் பற்றியும் அரைத்தது யார்??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி... சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டதற்கு இந்த ‘எழுச்சி’ என்றால், நாளைக்கே கூட்டமைப்பு கிழக்கு மாகாணசபையில் ‘தேசிய அரசில்’ (மு.கா. பிளஸ் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி) அங்கம் வகிப்பதாக அறிவித்தால் என்ன ஆகும்? ஒரேயடியாக அவுட்டா? 

Edited by sabesan36

  • கருத்துக்கள உறவுகள்
சுதந்திர தினம் என்றால் என்ன?
இது கூட தெரியாதவன் .....
அடுத்தவனுக்கு சுதந்திரம் பற்றி கருத்து எழுதுகிறான்.
மேலே இருக்கும் சில கருத்துக்களை வசித்தால்.
கடந்த 30 வருட போர் பல தமிழர்களை மனநிலை குன்றியவர்களாக மாற்றி இருப்பதை அறிய முடிகிறது. 
  • கருத்துக்கள உறவுகள்

சரி இப்ப சம்பந்தரும் கூட்டமைப்பும் என்ன செய்யவேணும் என்று சொல்கிறீர்கள்? 

மக்களுக்கு முன் வாக்கு கேட்கும் போது மட்டும் மாவீர்கள், புலிகள் என உசுப்பேற்றுவது. பின்னர் ரனிலோடு சிங்கக்கொடி பிடிப்பது, அதே மாவீர்களை கொன்ற சிங்கள அணிவகுப்பில் பங்கு பற்றுவது இரட்டைவேடத்தை காட்டவில்லையா?
 
(ச)னவும் (சு)னவும் :D  கட்சிக்கு கட்டுப்படாமல் சுதந்திரதின விழாவுக்கு போகலாம் எனில் அனந்தி மட்டும் எப்படி கட்சி கொள்கைக்கு அடங்க வேண்டும் என இவர்கள் எதிர்பார்க்கலாம்??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.