Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொஞ்சம் பேசலாம் வாங்க - 10 - படிப்பு - பட்டம் - கறிக்குதவாதா??

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

படிப்பு - பட்டம் - கறிக்குதவாதா??

 

சில நாட்களாக யாழில் சில பதிவுகளில் இந்த விடயம் அடிபடுகிறது.

அதில் பங்கு கொண்டு கருத்து வைத்தவர்கள்

படித்து பட்டம் பெற்று 

தமது வாழ்வியலில் அனுபவத்தின் அடிப்படையில் 

அனுபவரீதியாக  எழுதப்பட்டதாகவே பார்க்கமுடிகிறது...

 

இது பற்றி  பேசலாம்....

அதற்கு முன்

கிருபன்

 

அந்தப் படத்தைப் பார்த்த பிறகு நான் படித்ததெல்லாம் வேஸ்ற் என்ற சிந்தனை வந்தது. பங்குச் சந்தையிலும், முதலீட்டு வங்கிகளிலும் வேலை செய்யாமல் innovating technology களில் வேலை செய்ய ஆசைப்பட்டது வாழ்வில் எப்போதும் பற்றாக்குறைப் பொருளாதாரத்தை உண்டாக்கிவிட்டது. மிடில் கிளாஸ் மாதவன்தான் இப்போது எனது குருவாக இருக்கின்றார்!

 

 

நிழலி

 

எனக்கும் இதே எண்ணம் தான் இப்படத்தினை பார்த்த பின் ஏற்பட்டது. சேம் பிளட்

 

 

Justin

 

எஞ்சினியருக்கும் கம்பியூட்டர் நிபுணருக்குமே இந்தக் கவலையெண்டால், சாதாரண உயிரியல் விஞ்ஞானியின்ர நிலைமையை யோசிச்சுப் பாருங்கோவன்! ஆனாலும் இரவில் நிம்மதியாக நித்திரை கொள்ளுறன்! கிரடிட் கார்ட் கொம்பனிகள் என்னை நம்புகின்றன! நம்பிக்கை தான் பற்றாக் குறையை நிரப்புகின்றது! (உங்களுக்கும் இப்படித் தான் இருக்கும் எண்டு ஒரு ஊகம் தான்!)  :D
 

 

நெடுக்கு...

 

விட்டால்.. கிருபண்ணா.. பெற்றோல் ஸ்ரேசன் நடத்திறவரை.. அப்பிள் CEO லெவலில வைச்சு கதை புனைவார் போல இருக்குது.  :lol:

 

 

இவர்கள் எழதிய கருத்து இவை..

 

 

 

இன்றல்ல

என்றுமே பணம் ஒரு குறியாகவே இருக்கிறது

அதேநேரம் ஒரு காலத்தில்

பணம் குவிக்கும் பட்டமாக இருந்த

வைத்திய மற்றும் பொறியியலாளர் பட்டங்கள் இன்று லாபகரமானதாக இல்லையா??

அல்லது வேறு பட்டங்கள்

அல்லது பட்டங்களே இல்லாத படிப்புக்கள் 

லாபகரமாக ஓடுகின்றனவா.....??

இங்கும் குறி  பணம் மட்டும்  தானா??

 

எங்கள் அனுபவங்களையும்  பேசலாம் வாங்க...

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

பணம் தான் முக்கிய குறிக்கோள் ...அந்த பணத்தை நேர்மையாக பெறுவதற்க்கு (80%) பட்டத்தை நம்புகிறார்கள்.....பலருக்கு அவர்கள் தெரிவுசெய்த பட்டப்படிப்புக்கள் கை கொடுத்துள்ளன ...சிலருக்கு வேதனையை தான் கொடுத்துள்ளது....அரசாங்கம் சகல பிரஜைகளுக்கும் ஒரே வகையான சம்பளம் கொடுக்குமென்றால் ஒருத்தரும் பாடசாலைக்கு செல்லமாட்டார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

மனிதனின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய பணம் அவசியம். பணத்தை பல வழிகளில் சம்பாதிக்கலாம் ஆனால் அதை மனேஜ் பண்ண அறிவு தேவை. எங்கடை அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் பணத்தையே தினமும் நாம் வங்கிகளில், கிரெடிட் மட்டைகளில் பார்கின்றோம். மீதமுள்ள பணம் எங்கே?, அந்தக் காலம் என்றால் பணம் பெருக்க வட்டிக்கு போயிருக்கும். இப்ப முதலீட்டு வங்கி அல்லது பங்கு சந்தையில் எழுத்து வடிவில் (1/0) பணத்தை பெருக்கும். திறமை இருந்தால் இந்தப் பணத்தை சரியான நேரத்தில் சரியான இடத்தில முதலீடு செய்தால் அதை பல மடங்கு பெருக்கலாம்.

இதில் கடை காரன், டாக்டர், பொறியியலாளர், கணக்காளர் எனப் பலர் முதலிடுகிறார்கள். ஒரு முக்கிய விடயம் எந்தத் துறையில் உழைத்தாலும், செலவுகள் போக மிஞ்சும் காசுதான் பணத்தை பெருக்கும். எல்லாத் துறைகளிலும் ஓரளவு காசு மிச்சம் பிடிக்கலாம் (அளவு மாறலாம்), அந்த மிச்சம் பிடித்த காசை பல மடங்கு ஆக்குவனே பணக் காரன் ஆகிறான். இங்கு தேவையானது எல்லாம் தகவலும் அதை சரியான நேரத்தில் பயன்படுத்துவதே.

ஒரு படத்தில் செந்தில் பிச்சைக்கார சாமி, கையில் ஒரு குறிப்பு புத்தகம். கோவில் மடத்தில் இருந்த படியே தினமும் உணவை வரவழைத்து சாப்பிடுவார். அந்தப் புத்தகத்தில் எந்தெந்த கோவில்களில் எந்த நாட்களில் உணவு கொடுப்பார்கள் என்ற தகவல் இருக்கும். எடுத்துவரும் பயனுக்கும் அவருக்கும் தினமும் அன்னம் கிடைக்கிறது. இங்கு தகவலும் அதை சரியான நேரத்தில் உபயோகப் படுத்தும் செந்தில் அறிவைப் பயன்படுத்தி பிழைக்கிறார்.

நாம் இன்னமும் சமுக அந்தஸ்து உள்ள துறைசார் தொழில்களுக்காக, விசாலமாக வளர வேண்டிய எமது அறிவை முடக்கி வைத்திருகின்றோம். ஆனால் டாக்டர் போன்ற தொழில்கள் பொருளாதார பாதுகாப்பானவை. அதாவது மாதாந்த வருமானம் நிச்சயம். அதனால்தான் பெற்றோர்கள் பலர் தம் பிள்ளைகள் டாக்டருக்கு படிக்க வேண்டும் அல்லது டாக்டர் மாப்பிள்ளைக்கு கலியாணம் கட்டி கொடுக்க வேண்டும் என்று நினைகிறார்கள் போலும்.

எங்கள் மூதாதையர் கருத்து: கற்றவனுக்கு சென்ற இடமெல்லாம் மதிப்பு. செய்யும் தொழிலே தெய்வம். தான் தேர்ந்தெடுத்த துறையில் படித்து, அதிலேயே வேலையும் செய்யும்மாப்போல் போல் திருப்தி வேறெங்கும் இல்லை. இந்த அனுபவத்தை சுவாசித்துக்கொன்றே இப்பவும் என் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது.

விசுகு உங்கள் திரியை சரியான பாதையில் எழுதுகிறேனா?

பூட்டன் ( அம்மம்மாவின் அப்பா) ஆங்கிலேயர் காலத்தில் கொழும்பு வந்து வியாபாரம் ஆரம்பித்தார். அவர் காலத்தில் பம்பலப்பிட்டி வெள்ளவத்தை எல்லாம் காடுகள். பின் பேரன் (அம்மம்மாவின் கணவர்) அவரும் சிறிது காலத்தில் கொழும்பு வந்து வியாபரம் ஆரம்பித்து கொடிகட்டி பறக்க ஆரம்பித்தார்கள். இருவரும் படித்தது மிகச் சொற்பம். 
 
கடந்த 30 வருசத்துக்கு மேல் யாழ்ப்பாணத்திற்கு உணவு மற்றும் ஏனைய பொருட்களை மொத்தமாக அனுப்பிவரும் மிகச் சிலரில் என் உறவினர் ஒருவர். முதன் முதலாக லொறி ஒன்றை வாங்கி கொழும்பில் அம்மம்மா வீட்டில் தான் நிறுத்தியிருந்தார். அம்மம்மா வீட்டில்  நான்கு வாகனத்தரிப்பிடம் உள்ளது. அதை விட வளவும் பெரிசு. இவர் கூட முன்பு ஊரில் எங்கள் உறவினர் வீடு வீடாகச் சென்று பால் விற்றவர். கல்வி அறிவு மிகச் சொற்பம்.  யாழ்ப்பாண உணவு மற்றும் ஏனைய பொருட்களின் வின‌யோகத்தில் 70% மேல் அவர் கையில் இருந்தது.
 
பிற்பாடு யாழ்ப்பாணத்திற்கான தரைவழி போக்குவரத்து தடைப் பட்டபோது கப்பல் மூலம் பொருட்களை அனுப்பும் நிலை தோன்றியது. இந்தக்காலத்தில் தான் மகேஸ்வரன் மேல் வரக் கூடிய சந்தர்ப்பமாக அமைந்தது. மகேஸ்வரனும் படித்தவர் அல்ல. சிங்களம் பழகிய படியால் வியாபரம் செய்யக் கூடியதாக இருந்தது.
 
யாழ் நகரில் இருக்கும் அனேக வியாபார நிலையங்கள் என் ஊரைச் சேர்ந்தவர்கள் ஒரு காலத்தில் நடத்தினார்கள். உடுதுணிகள் சீலை, சைக்கிள், உணவு குறோசரிகள், பார்மசிகள் போன்றவை. அதைவிட  சிங்கள நாட்டின் பல பகுதிகளில் அடைவு கடைகளும் நடத்தினார்கள். இவர்கள் யாருமே படித்தவர்கள் அல்ல.
 
நீர்கொழும்பில் கொச்சிக்கடைப் பகுதியில் எங்கள் ஊர் அயலவர் ஒருவர் வீதி நீளத்திற்கு கடைகள் வைத்திருந்தார். அந்த வீதியின் பெயரே அவர் பெயர் என்று சொல்லும் அளவிற்கு இருந்தது. 83 கலவரத்தின் பின் ஊர் வந்த போது அவர்கள் குளிக்கச் செல்வது பென்ஸ் காரில் தான். இவரும் படித்தவர் அல்ல. 
 
 
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

படித்ததனால் அறிவு பெற்றோர் ஆயிரமுண்டு

பாடம் படிக்காத மேதைகளும் பாரில் உண்டு.

 

வெளிநாடுகளில் நிறைய படித்துவிட்டு வியாபாரம் செய்து கோடீர்வரராக இருக்கிறார்கள்.

 

சிலர் கோழி மேய்த்தாலும் கொர்ணமந்தில் மேய்க்க வேண்டும் என்று குறைந்த வளத்துடனே கஸ்டப்பட்டு வாழ்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சபையில் படித்தவன் பணக்காரன் என்று முன்னுரிமை அளிப்பது அதிகமாக ஆசிய நாட்டு மக்களின் வழமை.
மேற்கு நாட்டவர்கள் அந்த நிலையில் இருந்து மீண்டு விட்டார்கள்.
நாங்கள் இன்னும் மீழ முயற்சிக்கவில்லை.

 

வாழ்க்கைக்கு படிப்பு உதவுமா ? அதாவது பட்டப்படிப்பு உதவுமா என்றால் இல்லை என்று அடித்துக் கூறலாம்.
பணம் உள்ளவர்களும் வாழ்க்கையில் வெற்றி அடைந்தவர்கள் என்றால்
அதுவும் இல்லை என்றே நினைக்கத் தோன்றுகின்றது.
அனுபவம் மட்டும் ஒன்றே வாழ்க்கையைச் சீராக்க மனிதர்களுக்கு உதவி நிற்கின்றது.

ஈசன் சொன்னது மாதிரி எத்தனையோ மனிதர்கள் பள்ளிக்கூட அறிவில்லாமலே தங்களைத்  தொழில் சார்ந்து உயரும் அளவிற்கு தொழிலுக்கு முன்னுரிமை அளித்து வாழ்க்கையில் வெற்றி (?)பெற்றிருக்கின்றார்கள். குறை இல்லாத வாழ்க்கை கிடைத்த மனிதர்கள் அரிது.அது படித்தவர்களாக இருக்கலாம். அல்லது பணம் படைத்தவர்களாக இருக்கலாம். நாங்கள் வெற்றி என நினைத்தால் அது எங்களுக்கு வெற்றியே.

  • கருத்துக்கள உறவுகள்

படிப்பு.. அந்தந்த படலைக்குள்ள இருக்கனும். அதைத் தாண்டி அதை பந்தாவா காட்ட நினைக்கிறது தான் தப்பு.

 

நாங்க படிச்சம் என்றதுக்காக... எந்த வேலையையும் தட்டிக்கழிப்பதில்லை. எது அவசிமோ.. அதை செய்வம்.

 

அடிக்கடி நினைச்சுக் கொள்வது.. படிச்சது கைமண் அளவு. படிக்காதது.. உலக அளவு.  :)

 

படிப்பு பற்றிய எங்கட சொந்த அளவுகோல்..

 

GCE O/L (GCSE) (=primary) ; GCE A/L (AS,A2)(= secondary); Degree (=real O/L).. Masters (=real A/L).. PhD (=real degree)

 

அதோட சின்னனில சொல்லித் தந்திருக்கினம்.. தம்பி கரடியா இருந்துக்கப்பு.. வெளவாலா இருந்துக்காத என்று.

 

கரடி.. தனக்கு எதிரே உள்ளவரின் பலத்துக்கு அதிகமாக பலத்தை பிரயோகிக்காதாம்.

 

வெளவால்..  திண்றதை கண்ட இடத்திலும் கக்கி அசிங்கப்படுத்திடும். படிப்பு.. பிரயோகிக்க வேண்டிய இடத்தில் பிரயோகித்தால் தான்.. அதுக்கு சிறப்பு பயன். அதை கண்ட இடத்திலும் பந்தாவுக்கு கக்க வெளிக்கிட்டா வெளவால் நிலை தான்.

 

இன்னொன்று சொல்லி தந்திருக்காங்க.. ஊருடன் கூடி வாழ்... குரங்குக்கு வாழ்கைப்பட்டா.. தாவத் தெரிஞ்சிருக்கனும் என்று. படிப்பு... படிப்புன்னு நின்றுகிட்டா.. வயிறு தாங்காது. அதுக்கு உழைக்க எது நியாயமோ.. எது சாத்தியமோ.. அதைச் செய்து பிழைச்சிடனும். வெட்கப்படக் கூடாது. கூச்சப்படக் கூடாது. செரியா. :lol::icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பணம் தான் முக்கிய குறிக்கோள் ...அந்த பணத்தை நேர்மையாக பெறுவதற்க்கு (80%) பட்டத்தை நம்புகிறார்கள்.....பலருக்கு அவர்கள் தெரிவுசெய்த பட்டப்படிப்புக்கள் கை கொடுத்துள்ளன ...சிலருக்கு வேதனையை தான் கொடுத்துள்ளது....அரசாங்கம் சகல பிரஜைகளுக்கும் ஒரே வகையான சம்பளம் கொடுக்குமென்றால் ஒருத்தரும் பாடசாலைக்கு செல்லமாட்டார்கள்

 

 

பணம் தான் குறிக்கோள் என்றால்  எதற்கு

5 வருடம்

8 வருடம் என்று யூனியில் படிக்கணும்

சாதாரண வகுப்புடன் நிறுத்திவிட்டு வேலைக்கு போகத்தொடங்கினால்

பணம் சேர்க்கலாமே..

 

அத்துடன்

நீங்கள் சொல்வது போல் அரசு ஒரே சம்பளத்தை எல்லோருக்கும் கொடுத்தால்...

 

அதற்கு நல்லதொரு உதாரணம் பிரெஞ்சு அரசு.

இவர்களது காலணி ஆட்சி நடந்த இடங்களில் இவ்வாறு செய்தார்கள்

அத்துடன் பிறக்கும் பிள்ளைகளுக்கும் பணம் கொடுத்தார்கள்

விளைவு படிக்காத ஒரு சமூகம் உருவாகிவிட்டது

அது பிரெஞ்சு அரசுக்கு தேவைப்பட்டது

படித்தால் தானே சிந்திப்பான்

கேள்வி கேட்பான்...

 

ஆனால் இதற்கு இன்னொரு பக்கமிருக்கு

எல்லோருக்கும் ஒரே சம்பளம் என்றாலும்

ஒருவரிலிருந்து தான் உயர்ந்தவன் எனக்காட்டத்தான் மனிதர்கள் முயல்வார்கள்..

அந்தவகையில் ஆபிரிக்கர்களுடன் அதிகம் பழகுவதால்

அவர்களுள் சிலருக்கு ஒன்று இரண்டு என கணக்குப்பார்க்கத்தெரிந்தாலே

அவர் ஒரு தனி...............வழியெடுப்பார்... :icon_idea:

Edited by விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனிதனின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய பணம் அவசியம். பணத்தை பல வழிகளில் சம்பாதிக்கலாம் ஆனால் அதை மனேஜ் பண்ண அறிவு தேவை. எங்கடை அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் பணத்தையே தினமும் நாம் வங்கிகளில், கிரெடிட் மட்டைகளில் பார்கின்றோம். மீதமுள்ள பணம் எங்கே?, அந்தக் காலம் என்றால் பணம் பெருக்க வட்டிக்கு போயிருக்கும். இப்ப முதலீட்டு வங்கி அல்லது பங்கு சந்தையில் எழுத்து வடிவில் (1/0) பணத்தை பெருக்கும். திறமை இருந்தால் இந்தப் பணத்தை சரியான நேரத்தில் சரியான இடத்தில முதலீடு செய்தால் அதை பல மடங்கு பெருக்கலாம்.

இதில் கடை காரன், டாக்டர், பொறியியலாளர், கணக்காளர் எனப் பலர் முதலிடுகிறார்கள். ஒரு முக்கிய விடயம் எந்தத் துறையில் உழைத்தாலும், செலவுகள் போக மிஞ்சும் காசுதான் பணத்தை பெருக்கும். எல்லாத் துறைகளிலும் ஓரளவு காசு மிச்சம் பிடிக்கலாம் (அளவு மாறலாம்), அந்த மிச்சம் பிடித்த காசை பல மடங்கு ஆக்குவனே பணக் காரன் ஆகிறான். இங்கு தேவையானது எல்லாம் தகவலும் அதை சரியான நேரத்தில் பயன்படுத்துவதே.

ஒரு படத்தில் செந்தில் பிச்சைக்கார சாமி, கையில் ஒரு குறிப்பு புத்தகம். கோவில் மடத்தில் இருந்த படியே தினமும் உணவை வரவழைத்து சாப்பிடுவார். அந்தப் புத்தகத்தில் எந்தெந்த கோவில்களில் எந்த நாட்களில் உணவு கொடுப்பார்கள் என்ற தகவல் இருக்கும். எடுத்துவரும் பயனுக்கும் அவருக்கும் தினமும் அன்னம் கிடைக்கிறது. இங்கு தகவலும் அதை சரியான நேரத்தில் உபயோகப் படுத்தும் செந்தில் அறிவைப் பயன்படுத்தி பிழைக்கிறார்.

நாம் இன்னமும் சமுக அந்தஸ்து உள்ள துறைசார் தொழில்களுக்காக, விசாலமாக வளர வேண்டிய எமது அறிவை முடக்கி வைத்திருகின்றோம். ஆனால்

டாக்டர் போன்ற தொழில்கள் பொருளாதார பாதுகாப்பானவை. அதாவது மாதாந்த வருமானம் நிச்சயம். அதனால்தான் பெற்றோர்கள் பலர் தம் பிள்ளைகள் டாக்டருக்கு படிக்க வேண்டும் அல்லது டாக்டர் மாப்பிள்ளைக்கு கலியாணம் கட்டி கொடுக்க வேண்டும் என்று நினைகிறார்கள் போலும்.

எங்கள் மூதாதையர் கருத்து: கற்றவனுக்கு சென்ற இடமெல்லாம் மதிப்பு. செய்யும் தொழிலே தெய்வம். தான் தேர்ந்தெடுத்த துறையில் படித்து, அதிலேயே வேலையும் செய்யும்மாப்போல் போல் திருப்தி வேறெங்கும் இல்லை. இந்த அனுபவத்தை சுவாசித்துக்கொன்றே இப்பவும் என் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது.

விசுகு உங்கள் திரியை சரியான பாதையில் எழுதுகிறேனா?

 

 

மிகச்சரியாக புரிந்து கொண்டிருக்கின்றீர்கள்..

 

வைத்தியர்துறை என்பது ஒருவித உத்தரவாதம் தருவதாகும்

ஒருவர் படித்து வைத்தியராகிவிட்டால்

சாகும்வரை ஏன் செத்தபின்பும் அவர் வைத்தியர்தான்...

அதேநேரம் வைத்தியருக்கு படித்த ஒருவர் வேலையில்லாது இருந்ததுமில்லை

பிரான்சிலும் வைத்தியர்களுக்கு தட்டுப்பாடுண்டு

காரணம் மாணவர்கள் அதிக காலப்படிப்பையும்

நிச்சயமாக இலக்கை அடைவோமா என்ற சந்தேகத்திலும் வைத்தியத்துறையை  தவிர்க்கின்றனர்..

 

இதே  உத்தரவாதமும் மதிப்பும் பொறியியலாளர்களுக்கும் இருந்தது

தற்பொழுது 

அதில்  ஏற்பட்ட பெருக்கம் 

அதனை சற்று மதிப்பற்றதாக

அல்லது பாதுகாப்பற்றதாக மாற்றியுள்ளது போல் தெரிகிறது..

அது பற்றி அதில் படித்து வேலை செய்யும் உறவுகள் சொன்னால் தான் சரியாக இருக்கும்...

தொடரலாம்....

அதற்கு நல்லதொரு உதாரணம் பிரெஞ்சு அரசு.

இவர்களது காலணி ஆட்சி நடந்த இடங்களில் இவ்வாறு செய்தார்கள்-விசுகு 

 

சற்று விளக்கமாக எந்தெந்த நாடுகளில் என்று உதாரணமும் தந்தால் உதவியாக இருக்கும் .

 

படிக்காமல் உழைக்கலாம் என்று எவரும் எழுதவில்லை என்றே நினைக்கின்றேன் .The Wolf of Wall Street பார்த்தபின் தமது மிடில் கிளாஸ் மாதவன் வாழ்கையை பற்றித்தான் எழுதினார்கள் .

நன்றாக படித்து ஒரு நிரந்தர வேலையில் நிரந்தர வருமானத்தில் வாழவே பெரும்பான்மையானவர்கள் விரும்புகின்றார்கள் . அதுதான் பாதுகாப்பான வாழ்க்கையும் கூட .இவர்களில் பலர் மிக வசதியாக வாழ்ந்தாலும் உச்சத்திற்கு போகின்றவர்கள் மிக குறைவு . 

மற்றப்படி ரிஸ்க் எடுத்து செய்ய நினைக்கும் தொழில்கள் உச்சத்திற்கும் கொண்டு போகும் இல்லை குப்பிற விழுத்தியும் விடும் .அது அவரவர் கெட்டிதனத்திலும் பிரையாசையிலும் அதிஸ்டத்திலும் தங்கியுள்ளது .அனேக மல்டி மில்லியனர்கள் இந்த பிரிவிற்குள் தான் வருவார்கள் .

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
படித்தவருக்கும் பாமரருக்கும் குறிக்கோள் பணம்தான்.
அதை அவரவர் சம்பந்தப்பட்ட துறைகளில் சிரமப்பட்டோ அல்லேல் சுலபமாகவோ சம்பாதிக்கின்றார்கள்.
 
எமது ஊர்களில் பரவலாக ஒரு சில நற்சிந்தனைகள் என்னவென்றால் ஒருவர் சரளமாக ஆங்கிலம் கதைத்தால் அவர் கனக்க படித்தவர்/எஞ்சினியர்/டொக்டர்/எக்கவுண்டன்/அப்புக்காத்து/பெரியவாத்தியார் என்றொரு  நிலையில் இருப்பார்கள். இதே சிந்தனையில் அந்த பெரியவர்களின் பிள்ளைகளும் தொடர்கின்றார்கள்.
 
படிக்காதவன் ஒன்றும் தெரியாதவன் எனப்படும் ஒருவன் இங்கிலாந்திற்கு வந்து கைப்பாசை கதைத்து பின்னர் காலம்போகப்போக சரளமாக ஆங்கிலம் கதைத்து......ஓரளவு உயர் நிலைக்கு வந்து விடுகின்றான்.
இது பல மேட்டுக்குடிகளுக்கு தாங்கமுடியா அவமானங்கள். இஞ்சை பார் அங்கை ஒரு பிடி சோத்துக்கும் வழியில்லாததுகள்....என அவர்களின் விளிப்புரை வேறு விடயம்.
 
மேலைநாடுகளில் என்ன படிப்பு படித்தாய் என்பதை விட வேலைசெய்கின்றாயா என்பதுதான் முக்கியம். :icon_idea:  :icon_idea:
 

 
படிக்காதவன் ஒன்றும் தெரியாதவன் எனப்படும் ஒருவன் இங்கிலாந்திற்கு வந்து கைப்பாசை கதைத்து பின்னர் காலம்போகப்போக சரளமாக ஆங்கிலம் கதைத்து......ஓரளவு உயர் நிலைக்கு வந்து விடுகின்றான்.
இது பல மேட்டுக்குடிகளுக்கு தாங்கமுடியா அவமானங்கள். இஞ்சை பார் அங்கை ஒரு பிடி சோத்துக்கும் வழியில்லாததுகள்....என அவர்களின் விளிப்புரை வேறு விடயம்.
 
மேலைநாடுகளில் என்ன படிப்பு படித்தாய் என்பதை விட வேலைசெய்கின்றாயா என்பதுதான் முக்கியம். :icon_idea:  :icon_idea:

 

 

மிக்க சரி கு. சா

 

பிறர் வாழ பொறுக்காத எம்மவருக்கு என்ன மருந்து ? அடுத்த தலைமுறை யாவது இதில் இருந்து மீளடும்

  • கருத்துக்கள உறவுகள்

எந்த படிப்பாக இருந்தாலும் கற்ற கல்வியை மூலதனமாக வைத்து செல்வம் ஈட்டுவதே குறிக்கோள். சிலருக்கு கற்க வாய்ப்பு சரியாக அமைகிறது..சிலருக்கு அமைவதில்லை..

 

கற்ற கல்வி ஏணியின் மூலம் உலக சந்தையில் பொருளீட்டும் சந்தையை & வாய்ப்புக்களை சற்று விசாலமாக பார்க்க இயலுகின்றது.  நேர்வழியில் நிச்சயம் சம்பாதிக்க முடியும் என்ற துடிப்பிலும் கற்றுக்கொண்டே இருந்ததில், ஒருநாள் அதற்கு உரிய பலனும் கிட்டியது..என்னை இங்கே  கரை சேர்த்தது..

கற்காமலும் பொருளீட்ட முடியும், அதிர்ஷ்ட தேவதை அருளும் இருந்தால்.. !

 

ஆனால் கற்றோருக்கு செல்லுமிடமெல்லாம் சிறப்பு என்பதில் உண்மையில்லாமலில்லை.. கற்ற மூளையை எப்படி சந்தையில் புத்திசாதுர்யமாக பயன்படுத்தி மேலெழுகிறோம் என்பதில் தான் ஒவ்வொருத்தரின் திறமை. என்னுடன் படித்த பொறியாளர்கள் சிலர் செக்கு மாடுகள் போல் அரசாங்கத்தில் உழல, சிலர் மேலும் படித்து சந்தையை சரியாக பயன்படுத்தி மிகச் சிறந்த தொழிலதிபர்களாகவும் உள்ளனர்.. ஒரே படிப்பு படித்தாலும், கற்றதை பயன்படுத்தியதில் நிறைய ஏற்றத் தாழ்வுகளை இன்றும் காண முடிகிறது..

  • கருத்துக்கள உறவுகள்

படிப்பு நிரந்தர வருமானத்திற்கு உதவுகிறது - உண்மை

எந்தச் சமூகத்திலும் உயர்வாகப் பார்க்கப்படுகிறது - உண்மை

ஆனால் படிப்பு இருப்பதால் மட்டும் அறிவு அல்லது ஞானம் இருப்பதாகக் கருத முடியாது. முனைவர் பட்டம் பெற்ற ஒருவர்கூட வேலையை விட்டு அகற்றப்பட்டதையும் கண்டுள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொருவருக்கும் கல்வி என்பது முக்கியமானதுதான். ஆனால் சிலரால் தொடர்ந்தும் கற்க முடியாமல் தடைகள் ஏற்பட, பலரும் கற்று  முடிக்கும் சூழல் எமது நாட்டை விட  நாம் புலம் பெயர்ந்த நாடுகளில் நூறு வீதம் உத்தரவாதம் என்று கூறலாம். ஆனாலும் படித்தவர்கள் எல்லோரும் பண்புள்ளவர்களாகவோ, மூளை உள்ளவர்களாகவோ, தந்திரசாலிகளாகவோ இருப்பதில்லை. அத்துடன் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பல படித்தவர்கள் தம் வாழ்வை உயர்த்திக் கொண்டாலும் படிக்காத பலரும் கூட அந்த நிலையை எட்டியபடி இருக்கிறார்கள். ஆனபடியால் கல்வி மட்டுமே ஒருவரின் நிலையை உயர்த்துவதர்க்கு காரணமாகாது. அவரின் முயற்சியும் நிட்சயம் வேண்டும். கற்றவர் நாம் என்னும் தலைக்கனம் ஒருவரிடம் இருக்குமானால் நிட்சயமாக ஒரு குறிப்பிட்ட எல்லை தாண்டிச் செல்ல முடியாது. கல்வி அறிவு அதிகம் அற்றவர்கள் தான் சில வேளைகளில் மிகப் பெரிய விடயத்தையும் இலகுவாகக் கையாள்வதைப் பார்த்துள்ளேன். எமது இனத்தில் உள்ள பொறாமைக் குணம் தான் ஒரு உயர்ந்த நிலையில் இருப்பவரை கல்வி என்னும் ஆயுதத்தைக் காட்டிக் கீழே தள்ள முடிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொறுத்தவரையில் எனது படிப்பு (இலங்கையில் பெற்றுக்கொண்டது) என்னை அவுஸ்த்திரேலியாவுக்கு Skilled Migration இல் வருவதற்கு மட்டுமே பயன்பட்டது. வேலை தேடியபோதெல்லாம் இலங்கைப் பட்டம் என்பதை அவர்கள் கணக்கிலேகூட எடுக்கவில்லை. எல்லாமே சிறுபுள்ளியிலிருந்து ஆரம்பிக்க வேண்டியதாயிற்று. ஆனால் வேலைத்தளத்தில் முன்னேறுவதற்கு எங்களின் கடிண உழைப்பும், படித்த படிப்பின பாவித்த முறையுமே காரணமாயிற்று என்றால் மிகையாகாது. 

 

இன்றும்கூட Promotion என்று வரும்போது தங்கள் நாட்டவர்களுக்குத்தான் (அவர்கள் எம்மை விடப் படிப்பில் குறைந்தவர்களாக இருந்தாலும் கூட) முன்னுரிமை கொடுக்கிறார்கள். இதற்கான காரணத்தை அவர்களால் வெளிப்படையாகச் சொல்ல முடிவதில்லை. ஒரு சிலர் மட்டும், "உங்களுக்கு எங்களின் ஆங்கில உச்சரிப்பு சரியாக வராது, எங்களின் சமூக வாழ்வுபற்றி உங்களுக்கு இன்னும் பரீட்சயம் வேண்டும்" என்று ஏதேதோ சொல்லி மழுப்புவார்கள். இனவாதமும் ஒரு சிறு காரணமாக இருக்கலாம். 

 

சிலவேளை இந்த சிக்கல் எங்களின் இரண்டாவது சந்ததியினர்க்கு இல்லாமலிருக்கலாம். பார்ப்போம் !

  • கருத்துக்கள உறவுகள்

:D நானும் சிலரும் எழுதிய கருத்துகள் "படிப்பு பயனற்றது" என்ற தவறான புரிதலை ஏற்படுத்தி இருப்பது போல படுகிறது. உண்மையில் அதுவல்ல நான் சொல்ல வந்தது! ஒரு துறையில் ஆழக் கற்றவர்கள் அள்ளு கொள்ளையாகப் பணம் ஈட்ட முடியாமல் இருக்கும் நிலை எல்லாத் துறைகளிலும் இருக்கும் நிலை தான். இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. இதைப் பற்றி ஒரு தனிப் பதிவே எழுதலாம், அடுத்த மாதம் நேரம் வரும் போது செய்வேன்.

 

சுருக்கமாக நாம் கேட்க வேண்டிய கேள்விகள் "ஆழக் கற்பது  மில்லியனராக மட்டும் தானா?"  பணம் பெரிதாக ஈட்ட முடியாவிட்டால் ஒரு துறையின் மீதுள்ள காதலைத் துறந்து விட மனம் வருமா?". இதற்குப் பல பதில்களை எங்கள் வாழ்க்கைத் தெரிவுகளுக்கேற்ப நாம் கண்டு பிடிக்கலாம். என்னைக் கேட்டால், என் துறைத் தெரிவு ஆய்வுத் தொழில் தொடர்பாக எதையும் நான் மாற்ற விரும்ப மாட்டேன். இதற்குப் பிரதான காரணம் இது எனக்குப் பிடித்த வேலை, தனிப் பட்ட சுதந்திரம் நிறைய உள்ள தொழில், ஒவ்வொரு நாளும் வித்தியாசமானது... எனக்கு அதிசய உலகங்களைக் காட்டி,  இவ்வளவு தூரம் கொண்டு வந்ததால் என் முறை சார் கல்வி எனக்கு மில்லியன் டொலரை விடப்பெறுமதியானது என்று நினைக்கிறேன். "இவர் ஒன்றும் சாதிக்கவில்லை, அதனால் இவரின் முறை சார் கல்வி பயனற்றது" என்று யாராவது நினைத்தால் கவலைப் படும் வயதும் எனக்கு இல்லை! :D

படிப்பும் பட்டங்களும் தொழில்ரீதியாகவும் சமுதாய அந்தஸ்திற்காகவுமே ஆசியநாடுகளில் தவமிருந்து படிக்கின்றார்கள்.

நல்ல எண்ணங்கள் இல்லாத கல்வி தனிநபர் வாழ்க்கைக்கும் பல சந்தர்ப்பங்களில் உதவிசெய்யாமல் போனதுண்டு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.