Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கு மாகாண ஆட்சியில் த.தே.கூ பங்கேற்பு; இரண்டு அமைச்சுப் பதவிகளையும் ஏற்கிறது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மாகாண ஆட்சியில் த.தே.கூ பங்கேற்பு; இரண்டு அமைச்சுப் பதவிகளையும் ஏற்கிறது!

கிழக்கு மாகாண சபையில் புதிதாக பதவியேற்றுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து கொண்டுள்ளது. இதன்பிரகாரம், இரண்டு அமைச்சுப் பதவிகளையும் பெற்றுக் கொள்ளவுள்ளது. 

இது தொடர்பில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் முன்னிலையில் ஒப்பந்தமொன்றும் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமையின் அனுமதியுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மகாண சபை உறுப்பினர்களுக்கும், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குமிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பெறுபேறாகவே இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் கி. துரைராஜசிங்கமும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹசன் அலியும் கொழும்பிலுள்ள ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமைமையகத்தில் வைத்து இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளார்கள்.

குறித்த ஒப்பந்தத்தின் பிரகாரம் மாகாண அமைச்சர்கள் வாரியத்திலுள்ள ஐந்து அமைச்சுக்களில் இரு அமைச்சுப் பதவிகளை தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு வழங்க இணக்கம் காணப்பட்டுள்ளது.

மாகாண சபையின் துணை தவிசாளர் பதவியையும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு கிடைக்கும் வகையில் இரு தரப்பினருக்குமிடையிலான அந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

அண்மையில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கான ஆதரவை விலக்கிக் கொண்டதன் காரணமாக கிழக்கு மாகாண சபையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பெரும்பான்மையை இழந்து ஆட்சியையும் இழந்தது.

இந்தநிலையில் கிழக்கு மாகாண சபையில் புதிய ஆட்சியை ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் இணைந்து அமைக்க கொள்கையளவில் இணக்கம் கண்டிருந்தனர். இருந்த போதிலும், முதலமைச்சர் பதவி தொடர்பான இழுபறி நிலை காரணமாக இரு தரப்பினருக்குமிடையிலான பேச்சுவார்தை தோல்வியில் முடிந்தது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் புதிய தலைவராக தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்றதையடுத்து, ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மீண்டும் அந்த முன்னணியுடன் உறவை புதுப்பித்து முதலமைச்சர் பதவியையும் பெற்றுக் கொண்டது. இந்த விடயத்தில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நடந்து கொண்டவிதம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமையை பெரும் சீற்றத்திற்குள்ளாக்கியது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமையினால் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமை கடுமையாக விமர்சிக்கப்பட்டது. பதிலாக அது குறித்து ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமை அதிருப்தியையும் வெளியிட்டிருந்தது.

கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் பதவியை தமது கட்சி பொறுப்பேற்ற பின்பு, மாகாண ஆட்சியில் இணைந்து கொள்ளுமாறு, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பகிரங்கமாக அழைப்பு விடுத்திருந்தார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

http://www.4tamilmedia.com/newses/srilanka/29171-2015-02-18-10-29-20

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதட்க்குதானே ஆசைபட்டாய் நொந்தகுமாரா .............................!

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் பதவியை தமது கட்சி பொறுப்பேற்ற பின்பு, மாகாண ஆட்சியில் இணைந்து கொள்ளுமாறு, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பகிரங்கமாக அழைப்பு விடுத்திருந்தார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது. "முன்பு" அல்லது "பின்பு" என்ன வித்தியாசம் என்று புரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ரிஎன்ஏ வாலைச்சுருட்டிக்கொண்டு சரண்டர் ஆயிற்றுது.

சம்பந்தரின் சாணக்கியம் மெய் சிலிர்க்க வைக்குது 

  • கருத்துக்கள உறவுகள்
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நடந்து கொண்டவிதம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமையை பெரும் சீற்றத்திற்குள்ளாக்கியது.

சீற்றம் வந்தவுடன் கூட்டமைப்பு அமைச்சு பதவிகளை தாவி பிடித்துக்கொண்டது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மாதிரி 'பொறை, பிஸ்கட்டு'களுக்கு பாயும் ஆட்களைத்தான் சில ஈழச்சனமும் தலையில் வைத்து கூத்தாடுதுகள்..

இந்த சென்மத்தில் இனி மீட்சி  இல்லை!

  • கருத்துக்கள உறவுகள்

வெட்கம், கெட்ட கூட்டமைப்பு.
போயும், போயும்... இரண்டு மாகாண சபை அமைச்சுப் பதவிக்காக, முஸ்லீம் காங்கிரசுடன் சமரசத்துக்குப் போயுள்ளது.
அங்கு... போய், என்ன வெட்டி விழுத்தப் போகிறார்களோ... :o 
வெளியில் நின்றிருந்தால்... தமிழனின் மானம் மரியாதையாவது, காப்பாற்றப் பட்டிருக்கும்.
இந்த சம்பந்தனும், சுமந்திரனும்... தமிழனை ஒரு வழி பண்ணி விட்டுத் தான்.... சாவாங்கள் போலை கிடக்கு. :huh:

கிழக்கு மாகாணமக்களிடம் விருப்பம் அறிந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது .

மகிந்த ஆட்சிக்கு வந்தாலும் ,UNP ஆட்சிக்கு வந்தாலும் அதில் அமைச்சுப்பதவிகளை எடுத்தபோது எங்கை போனதுஇதில் கருத்தெழுதியவர்களின்( யாழ் தமிழனின் )மானம் மரியாதை.

இன்றைக்கு கிழக்கு மாகாணம் இந்த நிலைமைக்கு வந்ததற்கு காரணம் வடபகுதி அரசியல் தலைமைகளும் சுயநலம் கொண்ட மக்களும் தான் .

ஆகவே சீண்டல் கருத்துக்களை எழுதி இடைவெளியை அதிகரிக்காதீர்கள்.

திருமலை தமிழர் தாயகத்தின் தலைநகர் ,தலைநகரை காக்கும் பொறுப்பு ஒவ்வொரு தமிழனுக்கும் உரியது ,எவ்வளவு பேர் இதைப்பற்றி உணர்வுபூர்வமாக சிந்திக்கிறீர்கள் .

Edited by Gari

சம்பந்தரும் சுமந்திரனும் மட்டுமே இப்படி உணர்வுபூர்வமாகச் சிந்திக்கக்கூடியவர்கள்.

தமிழர்களுக்குப் புத்தியே இல்லை.

அதைவிட அண்டிப்பிழைப்பதே அவர்களுக்கு முக்கியம்

சம்பந்தரும் சுமந்திரனும் மட்டுமே இப்படி உணர்வுபூர்வமாகச் சிந்திக்கக்கூடியவர்கள்.

தமிழர்களுக்குப் புத்தியே இல்லை.

அதைவிட அண்டிப்பிழைப்பதே அவர்களுக்கு முக்கியம்

பொதுவாக கருத்தை முன்வைத்தேன் ,சம்பந்தன் ஐயா உணர்வுபூர்வமாகச் சிந்தித்து அதிலும் உறுதியாக இருந்தபடியால் தானே வட மாகாண மக்களுக்கு தகுதியான முதலமைச்சரை தந்திருக்கின்றார் .

அந்த நேரத்தில் சம்பந்தன் ஐயா ,முன்னாள் நீதியரசர் விக்கினேஸ்வரன் ,சுமந்திரன் முவரையும் எவ்வளவு கேவலமாக பலரும் விமர்சித்தீர்கள் ,இன்று விக்கினேஸ்வரனை பாரட்டுகின்றீர்கள்.யாழ் இணையத்திலும் பலரது கருத்துகள் இன்னும் இருக்கின்றது

அண்டிப்பிழைப்பதற்கா யாழ் மாவட்டத்தில் சிங்கள இனவாத கட்சிகள் முலமாக நான்கு பாராளுமன்ற உறுப்பினார்களை அனுப்பி வைத்துள்ளீர்கள் ?

Edited by Gari

கிழக்கு மாகாணமக்களிடம் விருப்பம் அறிந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது .

மகிந்த ஆட்சிக்கு வந்தாலும் ,UNP ஆட்சிக்கு வந்தாலும் அதில் அமைச்சுப்பதவிகளை எடுத்தபோது எங்கை போனதுஇதில் கருத்தெழுதியவர்களின்( யாழ் தமிழனின் )மானம் மரியாதை.

இன்றைக்கு கிழக்கு மாகாணம் இந்த நிலைமைக்கு வந்ததற்கு காரணம் வடபகுதி அரசியல் தலைமைகளும் சுயநலம் கொண்ட மக்களும் தான் .

ஆகவே சீண்டல் கருத்துக்களை எழுதி இடைவெளியை அதிகரிக்காதீர்கள்.

திருமலை தமிழர் தாயகத்தின் தலைநகர் ,தலைநகரை காக்கும் பொறுப்பு ஒவ்வொரு தமிழனுக்கும் உரியது ,எவ்வளவு பேர் இதைப்பற்றி உணர்வுபூர்வமாக சிந்திக்கிறீர்கள் .

அது சரி . திருகோணமலையை காப்பாற்ற வேண்டும் என்று மட்டும் சொல்கிறீர்கள். மட்டகளப்பு அம்பாறையை எல்லாம் சம்பந்தர் ஹக்கீம்க்கு வித்துட்டரா. 
திருகோணமலைக்கு இதுவரை காப்பாத்த சம்பந்தர் என்ன செய்து கிளிச்சவர் என்று கூற முடியுமா ஹரி அவர்களே. நானறிய காசு வேண்டி கொஞ்ச பேருக்கு வேலைகள் எடுத்து கொடுத்தது தவிர சம்பந்தர் வேற ஏதும் கிழிச்சது எனக்கு நினைவில்லை. அந்த நன்றியிலத்தான் அவருக்கு வால் பிடிக்கிறீங்களோ. 
 
இவரை விட மறைந்த சூரிய மூர்த்தி , மறைந்த தங்கத்துரை ஆகியோர் எவ்வளவோ செய்திருக்கிறார்கள். தற்போது  துரைரட்ணசிங்கம் தண்டாயுதபாணி ஆகியோர் மக்களோடு கலந்து போராட்டங்களில் நிற்கிறார்கள். மக்களுக்கு உதவி செய்கிறார்கள். சம்பந்தன் சிங்களவன்களோடு சேர்ந்து கொடி பிடிக்கத்தான் இலாயக்கு. 

சரி சரி கிடைத்த வரைக்கும் இல்லபம் இன்று மிச்சமிருக்கும் காலத்தையும் தள்ளிவிட்டால் விரைவில் அடுத்த தேர்தல் வந்திடும். அதுவரைக்கும் உந்த இரண்டு அமைச்சு பதவி கைகொடுக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாக கருத்தை முன்வைத்தேன் ,சம்பந்தன் ஐயா உணர்வுபூர்வமாகச் சிந்தித்து அதிலும் உறுதியாக இருந்தபடியால் தானே வட மாகாண மக்களுக்கு தகுதியான முதலமைச்சரை தந்திருக்கின்றார் .

அந்த நேரத்தில் சம்பந்தன் ஐயா ,முன்னாள் நீதியரசர் விக்கினேஸ்வரன் ,சுமந்திரன் முவரையும் எவ்வளவு கேவலமாக பலரும் விமர்சித்தீர்கள் ,இன்று விக்கினேஸ்வரனை பாரட்டுகின்றீர்கள்.யாழ் இணையத்திலும் பலரது கருத்துகள் இன்னும் இருக்கின்றது

அண்டிப்பிழைப்பதற்கா யாழ் மாவட்டத்தில் சிங்கள இனவாத கட்சிகள் முலமாக நான்கு பாராளுமன்ற உறுப்பினார்களை அனுப்பி வைத்துள்ளீர்கள் ?

விதண்டாவாதம்  பேசும் அளவிற்கு நான் இல்லை.

யார் ஈழ மக்களின் விடுதலைக்கு நன்மை செய்கின்றார்களோ அப்போதெல்லாம் அவர்களைப் பாராட்டுவதில் பின் நிற்பதில்லை.

பாராட்டும்படி சம்பந்தர் பெரிதாக ஒன்றும் செய்துவிடவில்லை.

தான் உயிருடன் இருக்கும்வரை தலைமை தன் கைகளில் இருக்கவேண்டும் என நினைக்கும் ஒரு தாழ்ந்த அரசியல்வாதியாகவே எனக்குத் தெரிகின்றார்.

வடமாகாணத்தில் நான்கு பிரதிநிதிகள் இனவாதக்கட்சி மூலம் தெரிவு செய்யப்பட்டதற்கும் சம்பந்தரே காரணம்.இளம் அரசியல்வாதிகளை தனது அனுபவத்தினூடாக அரவணைத்துச் செல்லாமல் எடுப்பார் கைப்பிள்ளையாகி அவர்களின் வெளியேற்றத்திற்கும் காரணமாக இருந்தவர்.

இப்போது கிழக்கை  முஸ்லிம்களுக்குத் தாரை வார்த்துக் கொடுத்திருக்கின்றார்.

இன்னுமா இவர்களை (சம்பந்தன்,சுமந்திரன் ) உலகம் நம்புது ....

விதண்டாவாதம்  பேசும் அளவிற்கு நான் இல்லை.

யார் ஈழ மக்களின் விடுதலைக்கு நன்மை செய்கின்றார்களோ அப்போதெல்லாம் அவர்களைப் பாராட்டுவதில் பின் நிற்பதில்லை.

 நான் பொதுவாகத்தான் கருத்தெழுதினேன் ,நீங்கள் தான் சம்பந்தர் ,சுமந்திரனை இதற்குள் கொண்டு வந்தீர்கள் ,நான் பதில் தந்தவுடன் விதண்டாவாதம் என்கிறீர்கள் .

பாராட்டும்படி சம்பந்தர் பெரிதாக ஒன்றும் செய்துவிடவில்லை.

தான் உயிருடன் இருக்கும்வரை தலைமை தன் கைகளில் இருக்கவேண்டும் என நினைக்கும் ஒரு தாழ்ந்த அரசியல்வாதியாகவே எனக்குத் தெரிகின்றார்.

 ஒன்றும் செய்யாமலா திருகோணமலை மக்கள் அவரை தெரிவு செய்கின்றார்கள் .

வடமாகாணத்தில் நான்கு பிரதிநிதிகள் இனவாதக்கட்சி மூலம் தெரிவு செய்யப்பட்டதற்கும் சம்பந்தரே காரணம்.இளம் அரசியல்வாதிகளை தனது அனுபவத்தினூடாக அரவணைத்துச் செல்லாமல் எடுப்பார் கைப்பிள்ளையாகி அவர்களின் வெளியேற்றத்திற்கும் காரணமாக இருந்தவர்.

 குடாநாட்டு மக்களுக்கு வாந்தி வந்தாலும் சம்பந்தர் தான் காரணம் என்று எழுதுவீர்கள்

இப்போது கிழக்கை  முஸ்லிம்களுக்குத் தாரை வார்த்துக் கொடுத்திருக்கின்றார்.

இதற்கு ஆதாரத்தோடு விளக்கம் தரமுடியுமா ?

மூவின மக்களை வாழும் திருகோணமலையில் தமிழர் தரப்பில் சம்பந்தன் போட்டியிட்டதால் அவரை மக்கள் தெரிவு செய்தார்கள். தமிழரசுக் கட்சியில் சம்பந்தன் தவிர யார் போட்டிட்டாலும் மக்கள். நிச்சயம் ஆதரவளிப்பார்கள்..அது திருகோணமலை அம்பாறை போன்ற மூவின மக்கள் வாழும் மாவட்ட மக்களின் மனநிலை. அது சம்பந்த்தனுக்க்கான தனிப்பட ஆதரவாகநிச்சயம் கொள்ள முடியாது என்பது சம்பந்தனுக்கே தெரியும்.

Edited by trinco

  • கருத்துக்கள உறவுகள்

gari said

ஒன்றும் செய்யாமலா திருகோணமலை மக்கள் அவரை தெரிவு செய்கின்றார்கள்

குடாநாட்டு மக்களுக்கு வாந்தி வந்தாலும் சம்பந்தர் தான் காரணம் என்று எழுதுவீர்கள்

ஈழத்தமிழர்கள், கூட்டமைப்பு ,மக்களின் ஒற்றுமை இது தான் எனது குறிக்கோள் .

இந்த விளையாட்டுக்கு நான் வரவில்லை

இதற்கு ஆதாரத்தோடு விளக்கம் தரமுடியுமா ?

இல்லை :D

  • கருத்துக்கள உறவுகள்
எனக்கு என்னமோ இது ஒரு பாரிய ராஜதந்திர நகர்வு மாதிரிதான் தெரிகிறது .....
இந்த நகர்வை உரிய பெரியவர்கள் இதோடு விடக்கூடாது ..... அவர்கள் விடவும் மாட்டார்கள்.
அடுத்து அதிரடியாக ராஜதந்திர ரீதியாக எமது கொடி என்று முஸ்லீம் காங்கிரசின் கொடியை நாம் தூக்கி பிடிக்க வேண்டும்.
அதோடு கிழக்கில் உள்ள இழுபறி இல்லாது போய்விடும். 
சம்மந்தரின் சாணக்கியத்தை புரியாதவர்கள்தான் அவரை வசை பாடுவார்கள்.
 
 2 முதலமைச்சரை தராவிட்டால் தீக்குளிப்பேன் என்று அவர் பாராளுமன்றத்தில் நடத்திய போராட்டத்திற்கு 
பயந்துதான் சிங்களம் இத்தனை அதிகாரம் கொண்ட முதலமைச்சரை ...... அதுகும் ஒரு தமிழ் முதலமைச்சரை வட பகுதிக்கு சிங்களம் தந்திருக்கிறது.
 
இன்னும் ஒருவருடம் கழித்து ....
சுமந்திரன் அவர்கள் இலங்கையில் தமிழரே இல்லை என்று ராஜதந்திரமாக சொன்னார் என்றால் ....
இலங்கையில் இனபிரச்சனையே இருக்காது.
அவர்கள் ராஜ ராஜ ராஜ ராஜ ராஜ ராஜ ராஜ தந்திரத்துடந்தான் நகர்கிறார்கள். 

இவ்வளவு ஆதரவு உள்ள சம்பந்தர் ஏன் அண்ணை 2000ம் ஆண்டு மண் கவ்வினவர் எண்டு விளக்க முடியுமே ? 

திருமலையில் திருமலை நகர் தவிர்ந்த மற்றைய பகுதிகள் 1990 ம்

ஆண்டுக்கு பிறகு . தமிழர் பகுதிகள் அபிவிருத்தி அடைய வில்லை . உப்புவெளி, சாம்பல்தீவு , நிலாவெளி ,திரியாய் , கன்னியா , ஆலங்கேணி , பன்குளம் , மூதூர் , ..... அந்த மக்களுக்கு எதாவது கிடைக்கவேணும் எண்டால் எல்லா சாத்தியபாடுகளையும் யோசிக்கத்தான் வேணும் . தமிழர்

வாழ் பகுதிகள் குறையுது . திருமலையில் இருந்து 10 மைல் கண்டி வீதியில போனா 3 சிங்கள கிராமம் . அங்கால

தம்பலகாமத்துக்கு இடையில பெரும்பாலும் சிங்கள கிராமங்கள் . திருமலை வவுனியா வீதியில 3 மைல் இல சிங்கள கிராமம் தொடங்குது . சிங்கள தமிழ் கிராம எல்லை இல இருக்கிற தமிழ் இளையவர்கள் மூலம் புதிய குடும்பம் உருவாகும் போது தமிழ் தெரியாத ஒரு தலை முறை உருவாகுது . என்னும் ஒரு 10 வருசத்தில பாராளுமன்ற , மாகாண உறுப்பினர் எண்ணிகையில் பாதிப்பை ஏற்படுத்தும்

  • 2 weeks later...

இவ்வளவு ஆதரவு உள்ள சம்பந்தர் ஏன் அண்ணை 2000ம் ஆண்டு மண் கவ்வினவர் எண்டு விளக்க முடியுமே ?

2000ம் ஆண்டு சம்பந்தர் ஐயா திருமலையில் தேர்தலில் போட்டியிடவில்லை ,பல தமிழர்கள் வெவ்வேறு கட்சிகளிலும் ,சுயேட்சை குழுக்களிலும் போட்டியிட்ட படியால் எந்த தமிழரும் வெல்லவில்லை .புலிகள் நினைத்திருந்தால் எல்லோரையும் ஒரே அணியில் போட்டியிடசெய்திருக்கலாம் .

அம்பாறையிலும் எந்த தமிழரும் வெற்றிபெறவில்லை .

இந்த சம்பவங்களுக்கு பின்பு தான் கிழக்கிலங்கை பத்திரிகையாளர் சங்கத்தின் முலமாக TNA ஆரம்பிக்கப்பட்டது .இதில் சேர்க்கப்பட்ட TELO ,EPRLF கட்சிகளுக்காக புலிகளிடம் அங்கீகாரம் பெறவேண்டியிருந்தது .

Edited by Gari

  • கருத்துக்கள உறவுகள்

Sampanthan was one of the TNA's candidates in Trincomalee at the 2001 parliamentary election. He was elected and re-entered Parliament after an absence of 18 years.[3]

http://en.m.wikipedia.org/wiki/R._Sampanthan

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஆமா மக்களுக்கு இவ்வளவு நன்மை செய்த தங்கத்துரையை போட்டது யாருங்கோ? சிங்களவனா? ஒரு பொது அறிவுக்காக கேட்டேன் :)

மகிந்த கோட்டத்தின் காட்டாட்சி காலத்தில் செய்யப்பட்ட கூட்டணி அரசிலின் மூலம் தெரிவு செய்யப்பட்டு பின்னர் மக்கள் ஆணைக்கு எதிராக அமைக்கபட்ட அந்த மாகாணசபை கலைக்கப்பட வேண்டும்.

சுதந்திரமான தேர்தல் வைக்கப்பட்டால் ஐக்கிய தேசிய கட்சியுடன் சேர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆடச் இயமைக்க முடியும். யு ன் பி கட்சியிலும் இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள். 

அரசியல் கூட்டணி இல்லாமல் எந்த தரப்பும் ஆட்சியமைக்க முடியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.